உத்தரப்பிரதேசத்தில் 60 கர்ப்பிணிகளுக்கு HIV தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லஜபதி ராய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 16 மாதங்களில் 60 கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
லாலா லஜபதி ராய் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி பெண்களுக்கு ART பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ART மையத்தின் அறிக்கையின்படி, 2022-23ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் லாலா லஜபதி ராய் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களில் 33 பேருக்கும், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 13 பேருக்கும், எச்ஐவி நோய் தொற்று பதிவாகியுள்ளதாக கூறியுள்ளனர்.
எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் அனைவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வாறு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்காக குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளிதெதுள்ளனர்.