Month: November 2024
-

ஏர்ப்போர்ட்டுக்கு ஆயிரம் ஏக்கர் தேவையில்லை… ஆந்திராவின் அதிரடி திட்டம்…
ஆந்திராவில் சோதனை முயற்சியாக ஆற்று நீரில் இயக்கப்படும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. விமான சேவை என்றாலே, அதற்கு விமான நிலையம், ஓடுதளம் என ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்காக பெரும்பாலும், விவசாய நிலங்களையே அரசுகள் கையகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிடும் என்று பொதுமக்கள் அச்சத்தில், விமான நிலைய திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக அப்படி ஒரு போராட்டம்…
-

வடகொரியாவின் புதுவித தாக்குதலால் அதிர்ந்த தென் கொரியா… அச்சத்தில் அமெரிக்கா…
வடகொரியா நடத்திய ஜிபிஎஸ் தாக்குதலால் பல கப்பல்கள், விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவையே குலைநடுங்க வைக்கும் நாடாக வடகொரியா இருந்து வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு பொருளாதாரத் தடைகளை மீறியும், ஐநா சபையில் தடையை மீறியும் அணுஆயுத சோதனையும் நடத்தி வருகிறது. இது, அண்டை நாடான, தென் கொரியாவுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும், வடகொரியா சோதனை நடத்தும் ஏவுகணைகள் அனைத்தும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய…
-

டீ மட்டும்தான் கொடுத்தாரு… ரஜினியை சந்தித்த வைரமுத்து பகீர் பதிவு…
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து, அவருடனான கலந்துரையாடலை கவியாக வடித்துள்ளார். அதில், 80 நிமிடங்கள் உரையாடியபோது, கிரீன் டீயைத் தவிர வேறு எந்த இடைஞ்சலும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இதனை, டீ மட்டும்தான் ரஜினி கொடுத்தார் என வைரமுத்து சாடையாக கூறியிருப்ப்பதாக, பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்புக்குப் பிறகு, வைரமுத்து வெளியிட்ட பதிவு இதோ… https://x.com/Vairamuthu/status/1855075536428495190?t=Yy_QG7qCJp3BUnP_SP2OBg&s=08 கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
-

பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி பரிந்துரை…
பெண்கள் பாதுகாப்புக்காக, பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் லக்னோவில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன், கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த, பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது, ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு…
-

அமரன் பட இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்… D55 அதிரடி அறிவிப்பு…
தனுஷ் நடிக்கும் D55 வது திரைப்படத்தை அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மகத்தான வரவேற்பு பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து இயக்கப் போகும் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளார். https://x.com/Rajkumar_KP/status/1854776375506342187?t=fzMHAmEuFy7qRHJcmZojvw&s=08 நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்திற்கு பிறகு இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் இட்லி கடை என்ற திரைப்படத்தை தானே இயக்கி…
-

மீண்டும் ரயில் விபத்து… அதிர்ச்சியில் மத்திய அரசு…
மேற்கு வங்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் வைத்துள்ள இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் அதிகளவில் நடந்து வருகிறது. ரயில்கள் ஒன்றன்மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹவுரா அருகே நல்பூர் என்ற இடத்தில், செகந்திராபாத் – சாலிமார் அதிவிரைவு ரயில் வந்தபோது,…
-

நடிகர் மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு… மலையாள திரைத்துறை அதிர்ச்சி…
மலையாள நடிகர்கள் சங்கமாக அம்மா அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்க நடிகர் மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுகுறித்த விசாரித்த ஹேமா கமிட்டி, அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கை வெளியானதற்குப் பின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் நேரடியாக குவிந்தன. நடிகைகள் நேரடியாகவே பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர். மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்த பிரபல நடிகர் சித்திக் மீதும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து,…
-

இஸ்ரேலியர்களை காப்பாற்ற விமானம் அனுப்பிய நெதன்யாகு…
நெதர்லாந்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்க விமானங்களை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுப்பியுள்ளார். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், கால்பந்து ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில், இஸ்ரேலிய ரசிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டு இஸ்ரேலுக்கு கொண்டுவர, அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக, 2 மீட்பு விமானங்களை ஆம்ஸ்டர்டாம் நோக்கி அனுப்பியுள்ளார். வன்முறையாளர்கள் மீது டட்சு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நெதன்யாகு, இஸ்ரேலிய குடிமக்களின் பாதுகாப்பை…
-

காஷ்மீர் சட்டப்பேரவையில் நடந்த பரபரப்பு சம்பவம்! காரணம் அதுதான்…
காஷ்மீர் சட்டப்பேரவையில் பிடிபி எம்எல்ஏ காட்டிய பேனரால், பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, பிடிபி எம்எல்ஏ திடீரென ஒரு பேனரை கையில் ஏந்திக்கொண்டு சென்றார். காஷ்மீரில் இருந்த சிறப்புச் சட்டம் 370ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட அந்த பேனரை பார்த்ததும், அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்தனர். இதனால், காஷ்மீர் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்து முழக்கங்களை…
-

தலையை எடுப்பேன் என்றவரை கைது செய்யாததுதான் திராவிட மாடலா? – அன்புமணி கேள்வி
தலையை எடுப்பேன் என்று மேடையில் பேசிவரை 3 நாட்களாகியும் கைது செய்யாததுதான் திராவிட மாடலா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கடலூர் மஞ்சக்குப்பம் பிரச்சினையை குறிப்பிட்டு பேசினார். குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் பாமகவை சேர்ந்த இளைஞரை கொடூரமாக தாக்கியதாகவும், அவருக்கு ஆறுதல் கூற சென்ற பாமக மாவட்டச் செயலாளர் வன்னியர் சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் விமர்சித்துள்ளார். 10 பேர் மீது வன்கொடுமை…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports







Great content! Keep up the good work!