தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசமாக பேசியதைக் கேட்டு எதிர்க்கட்சத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, திமுகவை நேரடியாக குறிப்பிடாமல், வார்த்தை ஜாலங்கள் மூலமாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.
அதிலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமே திமுக ஆட்சியில் 9 மாதங்களாக டிஜிபி நியமிக்காமல் இருந்தது தான் என்று குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து, அது என்னப்பா? என்று பின்னால் இருந்த உறுப்பினரை பார்த்து கேட்ட முதல்வர் விஜய், பார்ட்டி ஃபண்ட் என்று பேச ஆரம்பித்தார்.
உடனே அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சித் தலைவர் உட்பட திமுக உறுப்பினர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எவ்வளவோ முயற்சி செய்தார் ஆனால், அதெல்லாம் கேட்காமல் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூச்சலிட்டனர்.
இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச சபாநாயகர் அனுமதி அளித்ததும், பார்ட்டி பண்ட் என்கிறீர்களே, தைரியம் இருந்தால் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்றும், ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது என்றும் பேசினார். அதன் பிறகு திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், குட்டி கதை சொல்வதாகக் கூறி, திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்தார். திமுகவினருக்கு கேக்கும் வகையில் சத்தமாக சொல்வதாக கூறி பேசினார். அதோடு மட்டுமல்லாமல், 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் தொகுதி போய்விட்டது என்று பேசிய முதல்வர் விஜய், கடைசியாக ஒரு சைகை செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டுக்கொண்டு, ஸ்டாலின் செய்த அதே சைகையை செய்து காட்டி அசத்தினார்.
அடுத்த சில நொடிகளில் சமூக வலைதளங்களில் முதல்வர் விஜய்யின் சைகை டிரெண்டிங் ஆனது. இதைப்பார்த்து, திமுகவினர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.






















