ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கம் ஏற்கனவே வேலை நிறுத்தத்தினை அறிவித்திருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுடன் இன்று இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை முதல் அதாவது ஜனவரி 9ஆம் தேதிமுதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் செல்ல பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்துகளின் எண்ணிக்கை போதுமான அளவிற்கு இயக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கத்தின செய்தியாளர்களைச் சந்திக்கையில், போக்குவரத்து தொழிலாளர்களை அரசு இரண்டாம் தர மக்களாக நடத்துகின்றது. எங்களின் 6 அம்ச கோரிக்கைகள் குறித்து இப்போது முடிவு கூற முடியாது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். மேலும் கோரிக்கைகள் குறித்து இப்போது முடிவு எடுக்க முடியாது எனவும் பொங்கல் முடிந்து பேசிக்கொள்ளலாம் என அரசு தரப்பில் கூறப்படுகின்றது.
திட்டமிட்டபடி ஸ்ட்ரைக்; போக்குவரத்து தொழிற்சங்கம் கறார்; நெருக்கடியில் தமிழ்நாடு அரசு


































































































