Author: Sanjuthra
-

முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள்… அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு..
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் தவறாக வழிநடத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, திருவான்மியூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு உள்ள ஆபத்து, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எடுத்து கூறினார்.…
-

இந்திய கடற்படை போர்க்கப்பலில் தீ விபத்து… ஒருப்பகமாக கவிழ்ந்ததால் பரபரப்பு…
மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, ஒருபக்கமாக கவிழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எஸ்.பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதும், உடனடியாக, தீயை அணைக்க அந்த கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா போர்க்கப்பல் திடீரென ஒரு பக்கமாக கவிழ்ந்தது. இதனால், கப்பலில் இருந்தவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனடியாக கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். பலர் காயமடைந்த நிலையில், ஒரு மாலுமி மாயமானார். அவரை தேடும் பணியில் சக வீரர்கள்…
-

துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி… திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு…
திமுகவில் பல சீனியர் அமைச்சர்கள் உள்ளதாகவும், அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் வேண்டாம் என்பாரா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொத்தம்பட்டி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, அதிமுக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர்…
-

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகர்… உருக்கமாக தெரிவித்த மகள்…
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகரின் மகள் வீடியோ மூலம் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன், தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `ரஞ்சிதமே’ என்ற தொடரில் நடித்து வருகிறார். டான்ஸர், நடிகர் என பன்முக திறமை கொண்ட இவர், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பிரபலமானவராக இருந்து வருகிறார். இவருடைய காதல் மனைவியான தீபாவும் சின்னத்திரையில் தொடர்ந்து பல தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நேத்ரன்…
-

அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? அண்ணாமலைக்கு தோன்றிய எண்ணம்… பரபரப்புத் தகவல்
சில சமயங்களில் அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? என்ற எண்ணம் தனது மனதில் எழுந்தது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜகவுக்காக பணியாற்றிய பிப்புல்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பு, வாய்ஸ் ஆப் கோவை என மாற்றப்பட்டுள்ளது. அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் Modi 3.0 என்ற நிகழ்வு தன்னார்வலர்களுக்காக நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ…
-

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்… மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை…
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் விசிக கட்சி கொடியை அவர் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக கூறினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, டெல்லி ஜந்தர்…
-

ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு… எதற்காக தெரியுமா?
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென அவரை சந்தித்து பேசியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், 5 நாள் பயணமாக டெல்லி சென்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்தார். அவரை நேற்று மாலை திடீரென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். மாலை 6.30மணியளவில்…
-

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் கபாலீஸவரர் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பின், ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள மூத்த குடிமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். அந்த வகையில், முதலில் 200 பேர் தமிழ்நாட்டைச் சார்ந்த மக்கள் ராமேஸ்வரத்திலிருந்து காசி செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாகவும், தற்போது, 300 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுவரை…
-

மின் கட்டண உயர்வைக் கண்டித்து முதல் ஆளாய் போராடிய அன்புமணி ராமதாஸ்…
தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிர்வாகிகள், பொதுமக்கள், வணிகர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மின் கட்டண உயர்வைக் கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். உயர்த்தப்பட்ட மின் கட்டண அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும், மின்சாரத்துறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, அதன்மூலம் மின்வாரிய கடன்களை அடைக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்…
-

தண்ணீர் தரமாட்டோம் என்ற கர்நாடகா… இப்போ அறிவிப்பின்றி தண்ணீர் திறக்கிறது…
தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது கனமழை காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து 62,000 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்துவிட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கபினி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. அந்த அணையின் மொத்த கொள்ளளவான 19.52 டிஎம்சியில் தற்பொழுது 17.05 டிஎம்சியாக நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 49,334 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 61,200 கன அடியாகவும்…
-

சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 7.1 ரிக்டராக பதிவு…
தென் அமெரிக்க நாடான சிலியில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிலி, பொலிவியா, அர்ஜெண்டியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் 115 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 7.20 மணிக்கு 7.1 ரிக்டர் என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால், பாதிப்புகள் பெரிய அளவில்…
-

கடலூர் 3 கொலையில் முடிவுக்கு வந்தது குழப்பம்… கைதானவர்கள் அளித்த வாக்குமூலம்…
கடலூரில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தாய் தற்கொலைக்கு சுதன் குமார் தான் காரணம் என்பதால் குடும்பத்துடன் கொலை செய்தேன் என்று கைது செய்யப்பட்ட சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். கடலூர் காராமணி குப்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐடி ஊழியரான சுதன் குமார், அவரது தாயார் கமலேஸ்வரி, அவருடைய மகன் நிஷாந்தன் ஆகிய மூன்று பேர் கொலை…
-

சவுக்கு சங்கருக்கு கிடைத்தது இடைக்கால ஜாமின்… ஆனால் சந்தோசப்பட எதுவும் இல்லையாம்…
தடுப்பு காவல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டதற்கான காரணங்களை தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கி கூறப்பட்டது. ஆனால், சவுக்கு சங்கரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கும் நோக்கில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக, அவரது தாயார் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றமே விசாரிக்க…
-

தமிழகம் பிற மாநிலங்களை விட பின்தங்கியுள்ளது… அறிக்கையை காட்டி அண்ணாமலை தகவல்…
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள, நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார். நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது அதன்மூலம் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக, ஆண் பெண் சமத்துவக் குறியீட்டில், 10 ஆவது இடத்திலும்,…
-

இங்கிலாந்தில் நடந்தது போல் இந்தியாவில் நடக்கும்… செல்வப்பெருந்தகை நம்பிக்கை…
இங்கிலாந்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் வந்துள்ளது போன்று, இந்தியாவிலும் 2029ல் ஆட்சி மாற்றம் வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரகால சட்டங்கள் முளைத்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். யாராவது தங்களது கருத்துகளை கூறினால், அவர்கள் மீது தாக்குதல் என பாசிச ஆட்சி நடந்து வருவதாக குற்றம் சாட்டினார். முழுமையான மோடி ஆட்சி என்பது போய் என்ற செல்வபெருந்தகை,…
-

மின் கட்டண உயர்வின் அவசியம் இதுதான்… இதை பார்த்தால் நீங்களே புரிஞ்சுப்பீங்க…
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துள்ள வருகின்றனர். இந்நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், எதற்காக மின் கட்டண உயர்வு அவசியம் என்று விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பு, கடந்த 10 ஆண்டுகளில், ரூ.94.312 கோடி மேலும்…
-

எக்ஸ் தளத்தில் சாதித்த பிரதமர் மோடி… 100 மில்லியனை கடந்த ஃபாலோயர்ஸ்…
பிரதமர் மோடியின் எக்ஸ் தளத்தை ஃபாலோ செய்வோரின் எண்ணிக்கை 100 மில்லியன், அதாவது 10 கோடி பேரை கடந்துள்ளது. சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். எனினும், எக்ஸ் தளம் ஏற்கனவே இருந்தது போலவே செயல்பட்டு வருகிறது. இதில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு நிறுவனங்கள், ஊடகங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் தங்களுக்கு என்று பக்கத்தை உருவாக்கி, கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில்,…
-

சீமானை பற்றி விஜயலட்சுமி பேசியதை வெளியிடுவோம்… சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை…
கருணாநிதி பற்றி தரக்குறைவாக பேசுவது தொடர்ந்தால், சீமானை பற்றி நடிகை விஜயலட்சுமி பேசிய அனைத்தையும் வெளியிடுவோம் என்று சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறையில் திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் சுப.வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனநாயக நாட்டில் யாரைப்பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்றும், ஆனால் அது அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றார். ஆனால், எந்த ஒரு அரசியலும் இல்லாமல், கருணாநிதியைப் பற்றி சீமான் தரக்குறைவாக பேசியதும், பாட்டு…
-

சட்டம் ஒழுங்கு பிரச்சினை… தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திடீரென ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தமிழகத்தில் அடுத்தடுத்து படுகொலைகள், கூலிப்படைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதோடு, அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை, நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகி கொலை, கடலூரில் பாமக நிர்வாகியை வெட்டி கொல்ல முயற்சி என அடுத்தடுத்து சம்பவங்கள்…
-

நான் ரவுடியா? வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும்.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை எச்சரிக்கை..
தன்னை ரவுடி என்று கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதனை நிரூபிக்க முடியுமா என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சவால் விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு பதிலளித்தார். எல்லா கட்சித் தலைவர்களையும் அண்ணாமலை பிளாக்மெயில் செய்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், அருவருப்பான அரசியலில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தார். தன்னை ரவுடி என்று அண்ணாமலை கூறியிருப்பதாகவும்,…
-

அரசுகள் சரியாக வேலை செய்தால் ஈபிஎஸ் சிறைக்கு செல்வார்… புகழேந்தி ஆவேசம்…
மத்திய மாநில அரசுகள் கடமையை சரியாக செய்தால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வார் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, மிரட்டல்கள் உள்ள தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன் மூலம் இனி வரும் காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி குறித்து அன்புமணி ராமதாஸ், சீமான் பேசிய வீடியோக்களை காண்பித்த புகழேந்தி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஈபிஎஸ் சிலரோடு கூட்டு…
-

ராணுவ வாகனம் மீது தாக்குதல்… 5 வீரர்கள் பலி… தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?
காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் கட்டுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வாகனத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள், ராணுவ வாகனத்தை நோக்கி கிரானைட் எனப்படும் கையெறி குண்டுகளை வீசி தாக்கினர். தொடர்ந்து துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் சுதாரித்துக்கொண்டு, பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள்…
-

தமிழக அரசை எதிர்த்து முதல்முறையாக கேள்வி கேட்ட பா.ரஞ்சித்…
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். ஆம்ஸ்ட்ராங் இல்லாத இந்த வாழ்க்கையை, அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம்.…
-

மோசடி புகாரில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சருக்கு இப்படி ஒரு சிக்கலா? முழு விவரம்…
கரூரில் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இரண்டாவது முன்ஜாமின் மனுவையும் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, தனது ஆதரவாளர்களை வைத்து மிரட்டி, போலி ஆவணங்கள் மூலம் எழுதி பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட…
-

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது பழகுடியின சமுதாயத்தை சேர்ந்தவர்… செல்வ பெருந்தகை பகீர்…
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் காரணம் அல்ல, கொலைக்கு காரணம் பழிக்குப்பழி என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கொலை குறித்து பல்வேறு…
-

ஸ்டாலின் ஆட்சி கவிழ்ந்துவிடும்… திமுகவே இருக்காது… எச்சரித்த அன்புமணி ராமதாஸ்…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தால் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வடக்குச்சிபாளையம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறும் போது, இங்கு தேர்தல் அதிகாரியே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்று வேதனை…
-

ஜார்க்கண்ட் முதல்வர் இப்போதுதான் பதவியேற்றார்… அதற்குள் இப்படி ஒரு சிக்கலா…
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்ற நிலையில், வரும் எட்டாம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியில் இருந்தார். அவர் மீது சுரங்க முறைகேடுகளுடன் கூடிய பண மோசடி புகார் கூறப்பட்டு வந்தது. இந்த புகார் தொடர்பாக அண்மையில் அமலாக்கத்துறையால் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்பாக தனது முதலமைச்சர் பதவியை…
-

புதுச்சேரி ஒப்பந்த பேருந்து ஓட்டுநர் நடத்துநருக்கு முதலமைச்சர் ரங்கசாமி கொடுத்த அதிர்ச்சி… முழு விவரம்…
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மாத சம்பளத்தை உயர்த்தி அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகமாக பிஆர்டிசி சார்பில் உள்ளூர், தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை 100 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் என 200 ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் இவர்களுக்கும் மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், விலைவாசி…
-

300 பள்ளிகள் பங்கேற்கும் ஹாக்கி தோடர்… எப்போது எங்கு தெரியுமா?
தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பாக மாநில அளவில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர் ஜூலை 6 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ஹாக்கி தொடருக்கான இலச்சினை(லோகோ), சின்னம், வீரர்களுக்கான டி.சர்ட் ஆகியவற்றை அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்திய ஹாக்கி சங்கத்தின் நிர்வாகிகள், ஹாக்கி தொடரின் சின்னத்தை வெளியிட்டனர். சிம்பா என்கிற பெயரில் சிங்கக்குட்டியின் கையில் ஹாக்கி மட்டை பிடித்திருப்பது போன்று சின்னம்…
-

செங்கோலுக்கு எதிராக இப்படியா பேசினார் மதுரை எம்பி சு.வெங்கேடசன்? முழு விவரம்…
மக்களவையில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், செங்கோல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசினார். செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் போன்றவற்றை எல்லாம் தகர்த்துவிட்டுதான் இந்தியாவில் ஜனநாயகம் காலூன்றியதாக தெரிவித்தார். மன்னராட்சி எப்போது ஒழிந்ததோ, அப்போதே செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டதாகவும் சு.வெங்கடேசன் கூறினார். செங்கோலை கையில் வைத்திருந்த மன்னர்கள், எத்தனை பெண்களை தங்களது அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்தார்கள் என்பது உங்களுக்கு…
-

சாலையில் நடந்து சென்ற முதலை… பொதுமக்கள் அச்சம்… பரபரப்பு வீடியோ…
மகாராஷ்டிராவில் மழை பெய்து வரும் நிலையில், சாலையில் முதலை ஒன்று நடந்து சென்றது பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது. கடற்கரை மாவட்டமான ரத்னகிரியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, சிப்லன் சாலையில் மிகப்பெரிய முதலை ஒன்று திடீரென நடந்து சென்றது. இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். காரில் சென்றவர்கள் முதலை நடந்து சென்றதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. https://x.com/ShivAroor/status/1807635116610445783 அருகில் உள்ள ஷிவா ஆற்றில் ஏராளமான முதலைகள் இருக்கும் நிலையில்,…
-

கண்களை கவரும் அம்பானி மகன் திருமண அழைப்பிதழ்… இப்படியா? வீடியோ…
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை உலகமே வியந்து பார்த்து வருகிறது. திருமணத்திற்கு முன்பே பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம், உலக நாடுகளை தங்கள் பக்கம் ஈர்க்க வைத்தார் அம்பானி. அதிலும், உலக பணக்காரர்கள் மட்டுமல்லாமல், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என ஆயிரக்கணக்கானோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடிந்துவிட்டது என்றால் அதுதான் இல்லை. இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே, திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள்தான். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருமணத்திற்காக, பல்வேறு…
-

கள்ளக்குறிச்சி சம்பவத்தை விசாரிக்க குஷ்பு தலைமையில் குழு… அதிரடி உத்தரவு…
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த, குஷ்பு தலைமையில் குழு அமைத்து தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 6 பேர் பெண்கள் என்பதால், விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. ஆண்கள் மட்டுமே சாராயம் குடிக்கும் நிலையில், பெண்களும் சாராயம் குடித்ததால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், கணவன் மனைவி சேர்ந்து குடித்து உயிரிழந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 6 பெண்கள் விஷச்சாராயத்தால் உயிரிழந்திருப்பதை, செய்திகள்…
-

தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்…
வெளி மாநில ஆம்னி பேருந்துகளை இயக்குவதை தடுக்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளை தமிழ்நாடு பதிவெண்ணுக்கு மாற்ற வேண்டும் என்று அவகாசம் விதித்த தமிழ்நாடு அரசு, அவகாசம் முடிந்த பின்னர், பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது என் திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, தமிழ்நாட்டு பதிவெண்ணுக்கு…
-

டேட்டிங் ஆப் மூலம் சினிமாக்காரருக்கு நேர்ந்த கதி… சிறுவன் உட்பட 4 பேர் கைது…
ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நபர் வீட்டிற்கு சென்ற சினிமா சவுண்ட் இன்ஜினியரை மிரட்டி பணம் பறித்த புகாரில், ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கேகே நகர் ராஜ மன்னார் சாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். 56 வயதாகி திருமணமாகாத சுரேஷ், சினிமா துறையில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். Grindr என்ற டேட்டிங் ஆப் மூலமாக சுரேஷுக்கு ஆண் நபர் ஒருவர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர்…
-

உக்ரைனில் பெலுகா திமிங்கலங்களை பாதுகாக்க செய்த செயல்… நெகிழ்ச்சி வீடியோ…
ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, உக்ரைனில் இருந்து பெலுகா திமிங்கலங்கள் ஸ்பெயினுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. கட்டுமானங்களை எல்லாம் சிதைத்து வருவதால், பொதுமக்கள் கட்டடங்களில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை அங்கு கர்கிவ் நகரில் உள்ள அக்குவாரியமில் வளர்க்கப்படும் வெள்ளை நிற பெலுகா திமிங்கலங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றை பாதுகாக்க உக்ரைன் கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ஸ்பெயினில் உள்ள…
-

ஒடிசாவுக்கு பதவிகளை அள்ளித்தரும் மத்திய அரசு… வாய் பிளக்கும் தமிழர்கள்…
ஒடிசா மாநிலத்தில் உள்ளவர்களுக்கு பதவிகளை மத்தியில் ஆளும் பாஜக அள்ளித் தருவது தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு, ஒடிசா மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு, ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் சக்திவாய்ந்த முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கை வீழ்த்தி, பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதோடு மட்டுமல்லாமல், அங்கு மக்களவைத் தேர்தலிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், மத்திய பாஜக ஆட்சியில் ஒடிசா…
-

கள்ளக்குறிச்சி சம்பவம்… முதல்வர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்… எல்.முருகன் வலியுறுத்தல்…
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவையும், காவல்துறையையும் கடுமையாக அவர் குற்றம்சாட்டினார். கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கரப்பு தினம் என்று தெரிவித்துள்ள எல்.முருகன், இந்த சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம், திமுக…
-

ஆப்கனை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி … முழு விவரம்..
உலகக்கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பார்படாஸ் நாட்டில் உள்ள கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில், உலகக் கோப்பை டி20 தொடரின் 43ஆவது போட்டியும், சூப்பர் 8 சுற்று போட்டியும் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் நல்ல ஃபார்மில் இருப்பதால் போட்டி எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதன்படியே, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட்டிங்…
-

சென்னை வேளச்சேரியில் பரபரப்பு… மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை…
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் இருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் உள்ளது. இங்கு, காதல் ஜோடிகள், ஆண்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினர், மேம்பாலத்தில் நின்று பொழுதை கழிப்பது வழக்கம். இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் கீழ் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.…
-

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மறுத்த தேவகவுடா… அதிர்ச்சித் தகவல்…
பிரதமர் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமராக, மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். அதற்கான நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளதால், அண்டை நாடுகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள்…
-

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து… 13 பேர் படுகாயம்… பரபரப்பு…
இலங்கையில் கால்வாய்க்குள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயமடைந்தனர். இலங்கையின் வராகபோலாவில் 7 பெற்றோர், குழந்தைகளுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான பேருந்து மீட்கப்பட்ட நிலையில், விபத்து எப்படி எற்பட்டது? எதனால் ஏற்பட்டது என்பது…
-

T20 WC : நெதர்லாந்தை புரட்டி எடுத்த தென்ஆப்பிரிக்கா… ஸ்கோர் விவரத்தை பாருங்க…
உலகக் கோப்பை டி 20 போட்டியில் நெதர்லாந்தை புரட்டிப்போட்டு தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. அமெரி்க்காவின் நியூ யார்க் நகரில் உள்ள நசாவ் கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் 16ஆவது போட்டி நடைபெற்றது. இதில், டி பிரிவில் உள்ள நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. போட்டி தொடகியதில் இருந்தே தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிரடி பந்துவீச்சில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து…
-

கேரளாவில் பரவி வரும் மஞ்சள் காமாலை… ஆபத்தான நிலையில் 4 பேர்… எச்சரிக்கை…
கேரளாவில் மஞ்சள் காமாலை நோய் பரவி வரும் நிலையில், 4 பேர் ஆபத்தான நிலையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் தற்பொழுது கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டம் வெங்கூர் பஞ்சாயத்தில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் மஞ்சள் காமாலை உறுதி செய்யப்பட்டது. பின்னர் நோய் பலருக்கும் பரவியது. தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து, 150 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இவர்களில்…
-

பசிக்கு உதவிய மூதாட்டிக்கு நேர்ந்த கதி… வீட்டுக்குள் புகுந்து 2 பேர் செய்த அதிர்ச்சியூட்டும் செயல்… கடைசியில் நடந்தது?
சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம், பசிக்கு உணவு கேட்பது போல் நாடகமாடி, நகையை பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மேற்கு மாம்பலம் மகாதேவன் தெருவை சேர்ந்தவர் பத்மாவதி. 76 வயதான இவர், கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7ஆம்எ தேதி மதியம் மூதாட்டி பத்மாவதி வீட்டில் தனியாக இருந்த போது, 2 பேர் பேசியுள்ளனர். மூதாட்டியிடம் பசிக்கிறது,…
-

அடேங்கப்பா… நீலகிரியில் இவ்வளவு பறவை இனங்களா இருக்கிறது… இது தெரியாம போச்சே…
நீலகிரி வன பகுதியில் சுமார் 128 வகையான 5110 பறவைகள் இருப்பது, பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 120 வகைக்கும் மேற்பட்ட 1886 எண்ணிக்கையிலான பறவைகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு, பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி 2022 – 2023ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி, நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என…
-

தூத்துக்குடியில் பயங்கரம்… அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள்… விவரம் உள்ளே…
தூத்துக்கூடியில் நேற்று சனிக்கிழமை காலையில் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், இரவு மேலும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அண்ணா நகர்4-வது தெருவை சேர்ந்த ஈனமுத்து மகன் செந்தில் ஆறுமுகம் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் விசாரணை ஏற்கனவே இன்று அதிகாலை குமஸ்த்தா ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரவு ஒருவர் மீண்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில்…
-

நாகையில் சிபிசிஎல் ஆலைக்கு எதிரான உண்ணாவிரதம் நிலை இதுதான்… அதிகாரிகளின் முடிவால் எடுத்த முடிவு…
பனங்குடி சிபிசிஎல் எண்ணெய் ஆலையை கண்டித்து 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம், பேச்சுவார்த்தைக்கு திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் பனங்குடியில் அமைந்துள்ள சிபிசிஎல் எண்ணெய் ஆலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்கள், தங்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நிவாரணம் கேட்டு, கடந்த 11 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் காரணமாக பனங்குடியில் 6 மாவட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனிடையே, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை…
-

சத்தீஸ்கரில் பயங்கர துப்பாக்கிச்சண்டை… 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் பாரிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் உள்ள பிடியா கிராமத்திற்கு அருகில் வனப்பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாதுகாப்புப்படையினர் வருவதை அறிந்த நக்சல்பாரிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த மோதலில், 12 நக்சலைட்டுகள்…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports







Every day is a new beginning