Month: May 2026
-

மரியாதையுடன் பிரிவது நல்லது – திமுகவுக்கு காங்கிரஸ் எம்பி அறிவுரை
மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஏற்ற ,இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன். இப்பொழுது தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக த.வெ.கவுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுத்துள்ளது. அரசியலில் கூட்டணிகள் சேர்வதும்,பிரிவதும் இயல்பானது தான். திமுக கூட 2014…
-

கொளத்தூர் சுடுகாடாகுமா? திமுகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய எஸ்.ஜி.சூர்யா! வீடியோ!
கொளத்தூர் சுடுகாடாகும் என்று திமுக தொண்டர் பேசிய வீடியோவை பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2001 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த போது தமிழக மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என மு.கருணாநிதி வசைபாடினார். இன்று திரு. ஸ்டாலின் அவர்களை தோற்கடித்த காரணத்திற்காக, ஒரு படி மேலே சென்று கொளத்தூர் மக்களை செருப்பால் அடிப்போம் என்றும், கொளத்தூர் தொகுதி இனி சுடுகாடாக மாறும் என்றும் தி.மு.க-வினர் மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தற்குறி…
-

திமுக கூட்டணி உடைந்தது! அதிரடி மாற்றம்!
திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, பல மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி, காங்கிரஸை தங்கள் பக்கம் திமுக வளைத்துப் போட்டது. கூடுதலாக 3 தொகுதிகள், ராஜ்ய சபா உறுப்பினர் பதவி என வாரி கொடுத்து, தன்னுடைய கட்டுப்பாட்டில் திமுக வைத்துக்கொண்டது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு கொடுத்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. The President…
-

பாஜகவால் மேற்கு வங்கத்தில் சுதந்திரம் கிடைத்தது! காங்கிரசார் கொண்டாட்டம்!
மேற்கு வங்க மாநிலத்தில் 1977க்குப் பிறகு காங்கிரசால் தலைதூக்க முடியாத நிலை இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதைத் தொடர்ந்து திரினாமூல் காங்கிரசும் என மேற்குவங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்தன. இதனால், காங்கிரசால் துளிர் கூட விட முடியாத நிலை மேற்கு வங்கத்தில் நிலவியது. அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள் அனைத்தையும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியனர் அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. காங்கிரசார் எதுவுமே செய்ய முடியாத நிலையில், திரினாமூல் காங்கிரஸாரால் முடக்கி வைக்கப்பட்டதாக புகார்கள் இருந்தது. இநநிலையில்,…
-

இலங்கையில் தவெக கொடி! விஜய்யின் அலை இலங்கையில் வீசுமா?
நடிகர் விஜய் தமிழகத்தில் கட்சி ஆரம்பித்ததும் பலரும் அவரை நடிகர் என்றும், நடிகன் நாடாளமாட்டான், தகுதி இல்லை என்றெல்லாம் பேசினார்கள். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு பொதுக்கூடத்திற்கும் வருகை தந்த மக்கள் அலையை பார்த்த பின்னர், கூட்டம் வாக்காக மாறாது என்றார்கள். ரசிகர்கள், சிறுவர்கள் எல்லாம் வாக்களித்து விஜய்யால் அரசியலில் கரை சேர முடியாது என்று விமர்சித்தார்கள். ஆனால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 233 தொகுதிகளில் களம் கண்ட விஜய்யின் வேட்பாளர்களுக்கு…
-

விஜய்யிடம் கச்சத்தீவு, யாழ்ப்பாணத்தை கொடுங்க…! இலங்கையில் ஒலித்த குரல்… வீடியோ…
தவெக தலைவர் விஜய் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிலும், இந்தியாவை கடந்து இலங்கையில் நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் அர்ச்சுனா, விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், விஜய்யிடம் கச்சத்தீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் வழங்க வேண்டும் என்று பேசியுள்ளார். 🔴🔴🔴 pic.twitter.com/HxHUTLQiN4 — TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) May 5, 2026 கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல் எழுந்து வரும்…
-

ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்து! பரபரப்பு காட்சி!
மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் புறப்படும்போது திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. சினலாவோ பகுதியில் உள்ள மசட்லான் என்ற இடத்தில் இருந்து நேவி ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஒருசில நொடிகளில் அந்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு திடீரென விபத்துக்குள்ளானது. சில அடி உயரமே சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் ஹெலைகாப்டர் பெரும் சேதமடைந்தது. Mexican #Navy #helicopter crash lands just after takeoff in Mazatlan, Sinaloa.#crash #mexico pic.twitter.com/iW4tvIfBmn — Anbil ChinnaThambi (@AnbilChinna) May 5,…
-

தவெகவுடன் கம்யூனிஸ்ட் கூட்டணியா? சண்முகம் விளக்கம்! அதிரடி திருப்பம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக பெரும்பான்மை இல்லாமல் இருப்பதால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக 108 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதிமுகவும், திமுகவும், பெரும்பான்மை இல்லாததால், யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக ஆதரவு அளித்தால் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், விஜய் அழைப்பு விடுத்தால், தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட்…
-

புதுச்சேரியில் பாஜக கூட்டணி அமோகம்! காங்கிரஸ் படுதோல்வி!
புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ்-16, பாஜக -10, அதிமுக – 2, எல்ஜேகே -2 என தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்-16, திமுக-13, விசிக-1 என கூட்டணி அமைத்து நின்றன. விஜய்யின் தவெக.-28 தொகுதிகளில் தனித்தும், அதன் கூட்டணியாக நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. நாம்…
-

அசாமில் அசைக்க முடியாத பாஜக! ஹாட்ரிக் ஆட்சி!
அசாம் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அசாம் மாநிலத்தில் மாற்றம் ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று பலரும் பேசினர். ஆனால் தேர்தல் முடிவு வேறு மாறி இருந்தது. மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிகமான இடங்களில் பாஜக கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக…
-

கேரளமில் ஆட்சியை இழந்தது கம்யூனிஸ்ட்! ஆட்சியை பிடித்தது யார்?
அண்டை மாநிலமான கேரளமில் 10 ஆண்டுகால கம்யூனிச ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பினராயி விஜயன் மார்க்சிஸ்ட் ஆட்சியை நடத்தி வந்தார். இவர்களுக்கு பலத்த போட்டி கொடுக்கும் வகையில் பாஜகவும் களத்தில் இறங்கியதோடு, ஒரு எம்பி வெற்றி பெற்றுள்ளது. திருவணந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. போட்டி கடுமையாக இருக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் புதிய மாற்றங்களுடன் பழைய கதைக்கே…
-

முதல்முறையாக மேற்கு வங்கத்தை பிடித்த பாஜக! முழு வெற்றி நிலவரம்…!
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்தி முதல்முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்தியாவில் பாஜகவுக்கு முழு எதிரி மாநிலமாக கருதப்படுவது மேற்கு வங்கமும் கேரளாவும் மட்டுமே. இதில் மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக மம்தா பானர்ஜி இருந்து வந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 293 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக – 206 திரினாமூல்…
-

தேர்தலில் வரலாறு படைத்த தவெக விஜய்! முழு வெற்றி விவரம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. அவர்களே ஆட்சி அமைக்க முடியும். அப்படி இல்லாவிட்டால், அதிகப்படியாக தொகுதிகளை யார் வைத்துள்ளார்களோ, அவர்கள் மற்றவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். இது வழக்கமான நடைமுறை. இப்போது நடந்த முடிந்த வாக்கு எண்ணிக்கையில், ஆளும் திமுகவை வீழ்த்தி தவெக அசுர…
-

இலங்கை அதிபருக்கு விருது கொடுத்த அண்ணாமலை! வீடியோ..!
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விருது வழங்கி கவுரவித்தார். இலங்கை சென்றுள்ள அண்ணாமலை, அங்கு நடந்த கம்பன் விழா 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவருக்கு கம்பன் புகழ் விருது வழங்கி கவுரவித்தார். இந்த விருதை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். In Colombo today, along…
-

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரி திறக்க வாய்ப்பு – அன்புமணி அறிவுரை
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கத் தடை நீக்கப்பட்டுள்ளதால் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தவும் தடையாக இருந்த விதியை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில்…
-

வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் நடைபெறலாம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தூண்டுதலின் பேரில் சில பிற அரசியல் கட்சிகள், வாக்கு எண்ணும் மையங்களில் இடையூறுகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன என்று கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகள் வாக்குச்சாவடிகள், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்…
-

மேற்கு வங்கம்: 285 வாக்குச்சாவடிகளில் மே 21 மறுவாக்குப்பதிவு
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது பல்வேறு இடங்களில் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளில் 15 வாக்குச்சாவடிகளில் ஏற்கனவே நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வாக்குப்பதிவில் சுமார் 90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஃபால்டா தொகுதியில் புதிய உத்தரவு தொடர்ச்சியாக எழுந்த புகார்களின்…
-

‘கருப்பு’ படம் – ட்ரெய்லர் அப்டேட் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி
14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘கருப்பு’ நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு’ வருகிற 14-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு இந்தப் படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றியுள்ளார். படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நட்சத்திர…
-

பேட்ரியாட் விமர்சனம்: மம்மூட்டி – மோகன்லால் ஜோடி எப்படி உள்ளது?
மலையாள நட்சத்திரங்கள் இணைந்த பிரம்மாண்ட படம் இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கிய படம் ‘பேட்ரியாட்’ மே 1ஆம் தேதி வெளியாகியுள்ளது. மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ராஜீவ் மேனன், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டிஜிட்டல் கண்காணிப்பு பின்னணியில் கதை கதையில் மத்திய அமைச்சரின் மகன் ஃபகத் ஃபாசில், ஏழை மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்குகிறார். ஆனால் அந்த திட்டத்தின் பின்னணியில், செல்போன் முதல்…
-

விஜய் வெற்றி பெற வேண்டும் – ஐஸ்வர்யா லக்ஷ்மி விருப்பம்
ஐஸ்வர்யா லக்ஷ்மி – தமிழ் ரசிகர்களின் பரிச்சயமான முகம் ‘ஜெகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. தற்போதைய படைப்புகள் தற்போது விஷ்ணு விஷாலுடன் ‘கட்டா குஸ்தி 2’ மற்றும் அர்ஜுன் தாஸுடன் ‘லவ்’ வெப் சீரிஸ் ஆகியவற்றில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். தேர்தல் சூழல் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மக்கள்…
-

தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்: 30+ படப்பிடிப்புகள் ரத்து, கோடிகளில் இழப்பு
தமிழ்த் திரைப்படத் துறையில் முக்கியமான மாற்றங்களை வலியுறுத்தி, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்தியது. கடந்த மாதம் நடைபெற்ற சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள், நிலையான சம்பளத்திற்கு பதிலாக வருவாய் பகிர்வு (Revenue Sharing) முறையில் சம்பளம் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு கவன ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் மாலை வரை…
-

தனுஷின் கர படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தனுஷ் நடித்த கர திரைப்படம் 2026ஆம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படமாக இருந்துள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கிய இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷுக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். ஜெயராம், கருணாஸ், சுராஜ், பிரித்வி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் 30ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதனால், வசூலிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்த்ததை விட வரவேற்பு…
-

பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்கிறது… எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பொது பயன்பாட்டு பெட்ரோல்…







suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz