தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. அவர்களே ஆட்சி அமைக்க முடியும்.
அப்படி இல்லாவிட்டால், அதிகப்படியாக தொகுதிகளை யார் வைத்துள்ளார்களோ, அவர்கள் மற்றவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். இது வழக்கமான நடைமுறை.
இப்போது நடந்த முடிந்த வாக்கு எண்ணிக்கையில், ஆளும் திமுகவை வீழ்த்தி தவெக அசுர வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் 233 தொகுதிகளில் தவெக போட்டியிட்டது. எடப்பாடி தொகுதியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், சுயேட்சைக்கு விஜய் ஆதரவு தெரிவித்திருந்தார்.
வாக்கு எண்ணிக்கைகள் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன.
தவெக – 108
திமுக – 59
அதிமுக – 47
காங்கிரஸ் – 5
பாமக – 5
ஐயூஎம்எல் – 5
சிபிஐ – 2
சிபிஎம் – 2
விசிக – 2
பாஜக – 1
அமமுக – 1
தேமுதிக – 1
இதில் தவெக சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.



























