இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விருது வழங்கி கவுரவித்தார்.

இலங்கை சென்றுள்ள அண்ணாமலை, அங்கு நடந்த கம்பன் விழா 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவருக்கு கம்பன் புகழ் விருது வழங்கி கவுரவித்தார். இந்த விருதை வழங்கும் வாய்ப்பு கிடைத்த‍து பெருமகிழ்ச்சி என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழா 2026 ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இராமாயணம், தலைமுறை தலைமுறையாக, தர்மத்தின் பாதையை வழிகாட்டும் உண்மையான ஞானத்தின் ஆதாரமாக உள்ளது. கம்ப இராமாயணத்தின் மூலமாக, கவிச்சக்கரவர்த்தி கம்பர், புனிதமான இந்த இதிகாசத்தை, ஒப்பற்ற இலக்கிய அழகுடைய படைப்பாக அருளியிருக்கிறார்.

பெருமதிப்பிற்குரிய தமிழறிஞர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட இந்த சிறப்பான நிகழ்வில், காலத்தைக் கடந்து நிற்கும் கம்ப இராமாயணத்தின் சிறப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன்.

நமது தமிழ் மொழியின் அழகால் நிரம்பிய ஒரு இனிய மாலை நேரத்தை வழங்கிய, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


  1. Williamzoord Avatar

    Узнайте больше на сайте: https://6may.org

  2. novye-kvartiry 341 Avatar

    Квартиры в новостройках https://novye-kvartiry78.ru Кировского района Санкт-Петербурга для комфортной жизни и выгодных инвестиций. Актуальные предложения от застройщиков, студии, одно-, двух- и трехкомнатные квартиры, современные жилые комплексы, удобный поиск по цене, площади и срокам сдачи.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

You May Have Missed

You May Have Missed