மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது என பட விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற “என் சுவாசமே” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், மலையாள திரையுலகை புகழும் வகையில் கருத்துகளை தெரிவித்தார்.

அவர் தனது பேச்சின் போது, “என் சுவாசமே என்கிற பட டைட்டிலேயே அற்புதமாக காதல் இருக்கிறது. சுவாசம் இல்லை என்றால் உயிர் இல்லை, அன்பு இல்லை, உணர்வு இல்லை, காதல் இல்லை. இப்படி எதுவுமே இல்லை. உயிர் வாழ ஆக்ஸிஜன் தேவை. அதனை மையமா வச்சி தான் இப்படத்தை எடுத்துள்ளார்கள். என் சுவாசமே படத்தில் ஒரே மலையாள கரையோரத்தில் நின்ற மாதிரி வாசனை இருக்கிறது. அந்த அளவுக்கு மலையாள பிரபலங்கள் இருக்கின்றனர். தமிழர்களுக்கு எப்பவும் மலையாளிகளை பிடிக்கும். ஆனால் மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது. அதுதான் உண்மை.

அதைப்பற்றி பேசினால் சர்ச்சையாகும். அதேசமயம் மலையாளிகள் தொழிலில் 100% நியாயமாக உழைப்பார்கள். இன்னைக்கும் கூட நான் பெருமை மற்றும் பொறாமைப்படக்கூடிய விஷயம் அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை தான். அதில் ஒரு எள்ளளவு நம்ம கிட்ட (தமிழ் சினிமா) இருந்தா நல்லா இருக்கும். அம்மா என்ற சங்கத்தை வைத்துக் கொண்டு எந்த பிரச்சினையிலும் நியாயம் கிடைக்கச் செய்வார்கள். அதையெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு கதையை எடுத்தால் கதைக்குள்ளேயே இருப்பார்கள். நாம கதையை விட்டு வெளியே செல்வோம். கடைசி வரை கதைக்குள்ளே வர மாட்டோம். கதைக்கு வரமால் இடைவேளை வந்துவிட்டதே, இனிமேலாது வருமா என நினைக்க வைத்து விடுவார்கள். கடைசி ஒரு வரியில் கருத்து சொல்லியிருப்பார்கள். ஆனால் மலையாள சினிமா ஒரு விஷயத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை சரியாக கொடுத்து அதை பேசுபொருளாகவே அல்லது கருத்து பொருளாகவோ, சமுதாயத்தின் மையப் பொருளாகவோ தான் மலையாள திரையுலகினர் இருக்கிறார்கள். அந்த மாதிரி தான் மலையாளியான இந்த படத்தின் இயக்குநரும் இருப்பார் என நம்புகிறேன்’ என ஆர்.வி.உதயகுமார் பேசியுள்ளார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பற்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. சின்ன கவுண்டர், கிழக்கு வாசல், சிங்கார வேலன், எஜமான், ராஜகுமாரன், பொன்னுமணி, நந்தவன தேரு, கற்க கசடற உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Vijay TVK: ஜெயலலிதாவையே மிஞ்சும் விஜய்! பக்கா ப்ளான் ரெடி! தளபதிக்காக தயாரான த.வெ.க நிர்வாகிகள்!

Month: February 2024

RV Udhayakumar: மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்காது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை

Karthigai Deepam: பிரச்னைக்கு மேல் பிரச்னை.. தீபாவின் கச்சேரியில் கார்த்தி செய்தது என்ன? கார்த்திகை தீபம் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ரூபஸ்ரீ மயக்க மாத்திரை கலந்த தீர்த்தத்தை தீபா குடித்து மயக்கம் வருவதாக சொல்ல, கார்த்திக் உங்களால் பாட முடியும் என்று நம்பிக்கை கொடுத்து மேடையில் உட்கார வைத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது தீபா பாடுவதற்கு தயாராக, திடீரென பாம் ஸ்குவாட் என்ற பெயரில் சிலர் மண்டபத்திற்குள் வந்து இங்கே பாம் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அதனால் சோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல, கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.

இளையராஜா ஏற்கெனவே நாங்கள் இரண்டு முறை எல்லாத்தையும் சோதனை செய்து தான் இங்கே கச்சேரியை ஏற்பாடு பண்ணி இருக்கோம் என்று சொல்லியும் அவர்கள் “எங்களுக்குத் தகவல் வந்திருக்கு எங்களது வேலை செய்ய விடுங்க, எல்லாரும் வெளியே போங்க” என்று வெளியே அனுப்பி வைத்துவிட்டு மண்டபம் முழுவதும் சோதனை இடுகின்றனர்.

ஆனால் கடைசியில் பாம் எதுவும் இல்லை என்று சொல்லி வெளியே செல்கின்றனர். அடுத்ததாக உள்ளே வந்து பார்க்க, அரங்கத்தில் ஒருவர் கூட இல்லாமல் காலியாக இருக்க, “கார்த்திக் நீங்க பாடுங்க தீபா, எல்லாரும் கண்டிப்பா வருவாங்க” என்று சொல்லி பாட உட்கார வைத்து இளையராஜாவிடம் ஸ்பீக்கரை வெளியே வைக்கச் சொல்கிறான்.

அதன் பிறகு தீபா பாடத் தொடங்க, “இந்தக் குரலுக்கு தானே எல்லாரும் வந்திருந்தோம்” என்று வெளியே சென்ற அனைவரும் மீண்டும் உள்ளே வரத் தொடங்குகின்றனர். தீபா டிவியில் பாடுவதைப் பார்க்க அபிராமி அருணாச்சலம் ஆகியோரும் சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Raayan: தனுஷின் 50 ஆவது படம் ‘ராயன்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு!

Vanangaan Teaser: சர்ச்சையை கிளப்ப தயாரான பாலா.. அருண் விஜய்யின் “வணங்கான்” டீசர் இதோ!

MS Dhoni: ஐ.பி.எல் கனவு அணி தேர்வு…தல தோனிக்கு கிடைத்த அந்த அங்கீகாரம்! விவரம் உள்ளே!

ஐ.பி.எல் லீக் போட்டிகள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது.

கனவு அணி தேர்வு:

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த அணியை தேர்ந்தெடுப்பவர்கள் குழுவில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரார் மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு முன்னாள் வீரர் டாம் மூடி, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதேபோல் கிரிக்கெட் வீரர்களை தவிர விளையாட்டுச் செய்திகளை சேகரிக்கும் 70 க்கும் அதிகமான பத்திரிகையாளர்களும் இந்த குழுவில் இடம்பெற்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணியை தற்போது தேர்ந்தெடுத்து உள்ளனர்.

கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட தல தோனி:

அதன்படி, அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்ட இந்த அணிக்கு யார் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனும்,ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.தோனி தான் இந்த அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்றுக்கொடுத்த தோனியை கேப்டனாக தேர்வு செய்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அனைத்து ஐ.பி.எல். போட்டியையும் சேர்த்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த 15 பேர் கொண்ட அணி வீரர்களின் பட்டியலை பாருங்கள்:

எம்.எஸ்.தோனி (கேப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, ஏ பி டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்டயா, ரவீந்திர ஜடேஜா,பொல்லார்டு, ரஷீத்கான், சுனில் நரைன், யசுவேந்திர சாஹல், மலிங்கா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா.

மேலும் படிக்க: IND vs ENG: இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா! இளம் வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோகித் சர்மா!

மேலும் படிக்க:Tamil Thalaivas vs Bengal Warriors: பெங்கால் வாரியர்ஸ் அணியை ஓட விட்ட தமிழ் தலைவாஸ்! கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி!

anna serial today zee tamil episode february 19th | Anna Serial: சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த சூடாமணி: பதறி போன குடும்பம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கி கல்யாணம் ஆகிப்போனது மறந்து “இசைக்கு காபி கொண்டு வா” என்று கூப்பிட, பரணி காபியைக் கொண்டு வந்து கொடுக்க, “நீ கொடுக்கிற காப்பியை குடிக்க மாட்டேன்” என்று தட்டி விடுகிறான்.
இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் இசக்கி முத்துப்பாண்டிக்கு காபி எடுத்துக் கொண்டு வைக்க, “ரத்னா இருக்க வேண்டிய இடத்தில் நீ இருக்க, நீ எல்லாம் எனக்கு காபி கொண்டு வரியா” என்று திட்டி அனுப்புகிறான். பிறகு பாக்கியம் “என்ன ஆச்சு, என்ன சொன்னான்?” என்று கேட்க இசக்கி நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
“என்ன பண்றது பொம்பளைங்க வாழ்க்கையே இப்படித்தான் எனக்கும் பிடிக்காமல் தான் இந்த வாழ்க்கை அமைந்துவிட்டது. அதே மாதிரி தான் போகப் போக எல்லாம் சரியாகிவிடும்” என்று ஆறுதல் சொல்கிறாள். “என் புருஷனை விட உன் புருஷன் நல்லவன் தான். அவனை எப்படியாவது அவங்க அப்பாக்கிட்ட இருந்து பிரிச்சுடு, அப்புறம் எல்லாம் நல்லபடியா மாறும்” என்று அட்வைஸ் கொடுக்க, இதை பாண்டியம்மா பார்த்து விடுகிறாள்.
இந்த விஷயத்தை சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டியிடம் சொல்ல, “அவர் அப்படித்தான் என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு” என்று ரகசியமாக ஒரு விஷயத்தை சொல்கிறார். அப்படியே மறுபக்கம் சண்முகம் சூடாமணியை வந்து ஜெயிலில் சந்தித்து இசக்கிக்கு கல்யாணமான விஷயம், பஞ்சாயத்தில் நடந்தது என அனைத்தையும் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார்.
“உன்னை நம்பி என் பொண்ணுங்கள விட்டுட்டு வந்தேனே! என் முகத்திலேயே முழிக்காத போடா!” என்று கோபப்பட்டு கிட்டி அனுப்பி விடுகிறார். இதனால் சண்முகம் மனம் உடைந்து போகிறான். வீட்டில் சண்முகத்தை காணாததால் எல்லோரும் பதறி போய் தேடத் தொடங்குகின்றனர். பரணிக்கும் தகவல் கொடுக்க அவளும் அதிர்ச்சியாகி சண்முகத்தைத் தேடி அலைகிறாள். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Raayan: தனுஷின் 50 ஆவது படம் ‘ராயன்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு!
Vanangaan Teaser: சர்ச்சையை கிளப்ப தயாரான பாலா.. அருண் விஜய்யின் “வணங்கான்” டீசர் இதோ!மேலும் காண

Popular cinematographer Manikandan’s 16 year old daughter vijay sister role in Goat movie
G.O.A.T Movie: பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
கோட் படம்:
இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT) தன் அரசியல் எண்ட்ரியை சமீபத்தில் அறிவித்த விஜய்யின் 68ஆவது திரைப்படமாக கோட் உருவாகி வருகிறது. அரசியல் வருகையால் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி இரண்டு படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோட் படத்தில் விஜய் இரண்டு விதமாக கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிகிறது.
விஜய் மகளாக நடிக்கும் பிரபலத்தின் 16 வயது மகள்:
அவ்வப்போது, இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது இப்படத்தில் பிரபலம் ஒருவரின் மகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறு வயதிலேயே அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் அனிகா சுரேந்திரன், சாரா, யுனி பார்த்தவி வரிசையில் தற்போது மற்றொரு பிரபலத்தின் வாரிசு நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்.
அதன்படி, பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கோட் படத்தில் விஜய்யின் மகளாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர், பரதநாட்டிய நடனக் கலைஞர் மற்றும் மாடலாக இருக்கிறார்.
முன்னதாக, கோட் படத்தில் விஜய்யிக்கு மகளாக நடிக்க இவானாவை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது நடிகையாக நடித்து வருவதால், அவர் விஜய்க்கு மகளாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்க்கு மகளாக நடிக்க பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா கமிட் ஆகி இருப்பதாக சமூக வலைதளங்களில் சொல்லப்பட்டு வருகிறது. இதனால், அபியுக்தா யார் என்று ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.மேலும் படிக்க
Raayan: வட சென்னையில் வசிக்கும் சகோதரர்களின் கதை: தனுஷின் ராயன் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
Blue Star Ott Release: ஓடிடிக்கு ரெடியான அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார்! எந்தத் தேதி, எந்தத் தளம் தெரியுமா?மேலும் காண

Passports: விசா இன்றி செல்ல உதவும் பவர்ஃபுல் பாஸ்போர்ட்டு: பரிதாப நிலையில் இந்தியா! மாலத்தீவோட மோசம்!

வெளிநாடு பயணம் மட்டுமின்றி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு உங்கள் அடையாளச் சான்று ஆவணமாகவும் பாஸ்போர்ட் செயல்படும். எனவே, ஒவ்வொருவரின் அத்தியாவசிய தேவையான பாஸ்போர்ட்டை பெற்று கொள்வதும், அது காலாவதி ஆனதும் புதுப்பித்து கொள்வதும் அவசியமான ஒன்று.

பிரான்ஸ் நாடு முதலிடம்:

இந்த நிலையில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ் நாடு முதலிடம் பெற்றுள்ளது. எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்தது என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவித்திருக்கிறது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

இந்த குறியீடானது 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை மதிப்பீடு செய்து வெளியிடுகிறது. அதன்படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளைத் தொடர்ந்து பின்லாந்து, நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாட்டின் பாஸ்போர்ட்கள் சக்தி வாய்ந்ததாக குறிப்பிடப்படுகிறது. மேற்கண்ட நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 194 நாடுகளுக்கு பயணிக்கலாம் அல்லது சில நாடுகளுக்கு சென்று இறங்கியதும் விசா பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியா எந்த இடம்?

இந்தியாவை பொறுத்துவரை சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியில் 85வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 62 நாடுகளுக்கு பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம். மாலத்தீவு, சீனா ஆகிய நாடுகளை விட தரவரிசை பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்கா 55வது, மாலத்தீவுகள் 58வது, சவூதி அரேபியா 63வது, சீனா 64வது, தாய்லாந்து 66வது, இந்தோனேஷியா 69வது, உஸ்பெகிஸ்தான் 84வது இடத்தில் உள்ளன. கடந்த ஆண்டு தரவரிசை பட்டியலில் 84வது இடத்தில் இருந்த இந்தியா, இந்தாண்டு 85வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 106வது இடத்திலும், இலங்கை 101வது இடத்திலும், வங்கதேசம் 102வது இடத்திலும், நேபாளம் 103வது இடத்திலும் உள்ளன.

மற்ற நாடுகளின் நிலவரம்:

உலகில் மிகவும் புலம்பெயர்ந்தோர் நாடுகளில் ஒன்றான கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் செக் குடியரசு ஆறாவது இடத்தில் உள்ள நிலையில், 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். அதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா 55வது இடத்திலும், மாலத்தீவுகள் 58வது இடத்திலும், சவூதி அரேபியா 63வது இடத்திலும், சீனா 64வது இடத்திலும், தாய்லாந்து 66வது இடத்திலும் உள்ளன.

இதனை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நார்வே மற்றும் போர்ச்சுகல் நான்காவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளில் விசா இல்லாமல் 191 நாடுகளுக்கு பயணிக்கலாம். ஆஸ்திரேலியா, கிரீஸ், மால்டா, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து 5வது இடத்தில் உள்ள நிலையில், 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் 109வது இடத்தில் உள்ள நிலையில், 28 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வகுப்பறையில் கவன சிதறலால் பாதிக்கப்படும் மாணவர்கள்.. மொபைல் போன்களுக்கு தடை விதித்த பிரிட்டன்!

வளர்ந்து வரும் தொழில்நுட்பம், எந்த அளவுக்கு நன்மைகளை தருகிறதோ அதே அளவுக்கு தீமைகளையும் தருகிறது. குறிப்பாக, அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ள மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலனில் கடும் பாதிப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகள் மீது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதிக மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள்:

எனவே, மொபைல் போன்கள் பயன்படுத்துவதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, மொபைல் போன்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது பெற்றோர்கள் அதை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் கவன சிதறலை குறைக்கும் விதமாகவும் பிரிட்டனில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், "குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் இடமாக பள்ளிகள் இருக்கிறது. மொபைல் போன்கள், குறைந்தபட்சம், வகுப்பறையில் தேவையற்ற கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்காக கடினமாக உழைக்கும் நமது ஆசிரியர்களுக்கு ஒரு கருவியை அளிக்கிறோம். சிறப்பாக கல்வி கற்று தர இது அவர்களுக்கு உதவுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிரடி முடிவு எடுத்த பிரிட்டன் அரசு:

மொபைல் போன்களுக்கு தடை விதித்து பிரிட்டன் கல்வித்துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், "அனைத்து பள்ளிகளிலும் நாள் முழுவதும் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வகுப்பறை நடக்கும் போது மட்டுமல்ல, இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சில பள்ளிகளில், மொபைல் போன்களின் பயன்பாடு தினசரி மோதலை உருவாக்குகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள் மீதான தடை நான்கு விதமாக அமல்படுத்தப்பட உள்ளது. ஒன்று, மொபைல் போன்களை மாணவர்கள் வீட்டிலேயே விட்டு செல்வது. இரண்டாவது, பள்ளிக்கு சென்றவுடன் ஆசிரியர்களிடம் மொபைல் போன்களை கொடுத்துவிடுவது. மூன்றாவது, பள்ளிகளில் பாதுகாப்பான ஸ்டோரேஜில் மொபைல் போன்களை வைப்பது.

நான்காவது, மொபைல் போன்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்கும் பட்சத்தில், மாணவர்கள் அதை அருகில் வைத்து கொள்ளலாம். புதிய விதிகளை மீறும் மாணவர்கள், பள்ளி முடிந்தும் வீட்டுக்கு செல்ல முடியாத வகையில் தண்டிக்கப்படுவார்கள். அல்லது தொலைபேசி பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: "காசாவில் நடப்பது போர் அல்ல.. இனப்படுகொலை" – இஸ்ரேலுக்கு எதிராக கொதித்தெழுந்த பிரேசில் அதிபர் லூலா!

Divya Sathyaraj latest post about her Mahilmadhi Iyakkam fund raising event in srilanka | Divya Sathyaraj : அழகான உடை அவசியமில்லை… அழகான அன்பான இதயம் தான் முக்கியம்
பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜ் மகளுமான திவ்யா சத்யராஜ் ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற பெயரில் அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா காலகட்டத்தில் துவங்கினார். தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சத்தான உணவை இலவசமாக வழங்குவதை நோக்கமாக கொண்ட இந்த அமைப்பின் மூலம் தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.
உணவும், ஊட்டச்சத்தும் வசதி படைத்தவர்ககளுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்ற நியாயமில்லாத எண்ணத்தை முறியடிக்கும் வகையில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து தர கூடிய உணவுகளை வழங்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு பல நல திட்டங்களை வழங்க வேண்டும் என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கனவாக கொண்டவர் திவ்யா சத்யராஜ்.
கடந்த 2020ம் ஆண்டு இந்த மகிழ்மதி இயக்கம் துவங்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு நல்ல ஒரு தமிழ் பெயரை வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட திவ்யா சத்யராஜ் தனது தாயின் பெயரில் இருந்து மஹியையும் தன்னுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படமும் அவருடைய அப்பா நடித்த ‘பாகுபலி’ படத்தில் இருந்து ‘மகிழ்மதி’ என்ற பெயரை தேர்ந்து எடுத்து அந்த இயக்கத்திற்கு ‘மகிழ்மதி இயக்கம்’ என பெயர் சூட்டினார். இது குறித்து அவர் கூறுகையில் இந்த இயக்கம் மூலம் இதயத்தின் ஒரு பகுதியாக விளங்கும் என்னுடைய தந்தைக்கும் தாய்க்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன் என தெரிவித்து இருந்தார்.
தற்போது இந்த அமைப்பானது தமிழ்நாட்டையும் தாண்டி மணிப்பூர் மற்றும் இலங்கையில் உள்ள அரசு சார்பற்ற அமைப்புகளுடன் கூட்டணி சேர்ந்து அங்கு தொண்டு செய்ய துவங்கியுள்ளது. அந்த வகையில் இலங்கையில் Serendip.bethechangefoundation என்ற அமைப்புடன் கூட்டணி சேர்ந்து இலங்கையில் உள்ள தமிழ் பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு நிதி திரட்டும் விழா ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த விழாவிற்கு அவர் தயாராவதை பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார் திவ்யா சத்யராஜ்.
“இந்த விழாவிற்கு என்ன உடை அணிந்து செல்வது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் நான் உடுத்தும் உடைக்காக நான் அறியப்பட வேண்டியதில்லை, என் வேலைக்காக நான் அறியப்படவே விரும்புகிறேன்… அதானல் அதற்காக நான் சிரமப்பட தேவையில்லை என்பதை உணர்ந்தேன். ஒரு இடத்தில் நான் அழகான உடை அணிந்தவளாக தோன்றுவதை காட்டிலும் ஒரு அன்பானவளாக தோன்றவே ஆசைப்பட்டேன். அழகான முகத்தை காட்டிலும் அழகான இதயம் தான் மிகவும் முக்கியம்” என குறிப்பு ஒன்றை பகிர்ந்து இருந்தார் திவ்யா சத்யராஜ்.மேலும் காண

WPL 2024 Full Schedule Match Timings Date Venue Live Streaming Squads Complete Details Womens Premier League
பெண்கள் பிரிமியர் லீக் 2024:
இந்தியாவில் ஆடவர்களுக்கு எப்படி ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ அதைப்போலவே மகளிருக்காக நடத்தப்படும் லீக் போட்டி தான் பெண்கள் பிரிமியர் லீக்(WPL 2024). இந்த போட்டிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பெண்கள் பிரிமியர் லீக்கின் இரண்டாவது சீசன் நடைபெற உள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான போட்டிகள் எங்கு எப்போது நடைபெறும் என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்: பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்க உள்ள பெண்கள் பிரிமியர் லீக்கின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இரண்டாம் இடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன.
WPL 2024 குறிப்பு:
ஐந்து அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை மோதும்.
WPL புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும்.
எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணியுடன் மோதும்.
WPL 2024 முழு அட்டவணை:
WPL 2024 முழு அட்டவணை, போட்டிகளின் பட்டியல், நேரலை போட்டி நேரங்கள் மற்றும் இடம்
தேதி
அணிகள்
நேரம்
இடம்
பிப்ரவரி 23
மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
07:30:00
எம் சின்னசாமி ஸ்டேடியம்
பிப்ரவரி 24
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs யுபி வாரியர்ஸ்
07:30:00
எம் சின்னசாமி ஸ்டேடியம்
பிப்ரவரி 25
குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
07:30:00
எம் சின்னசாமி ஸ்டேடியம்
பிப்ரவரி 26
UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
07:30:00
எம் சின்னசாமி ஸ்டேடியம்
பிப்ரவரி 27
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
07:30:00
எம் சின்னசாமி ஸ்டேடியம்
பிப்ரவரி 28
மும்பை இந்தியன்ஸ் vs UP வாரியர்ஸ்
07:30:00
எம் சின்னசாமி ஸ்டேடியம்
பிப்ரவரி 29
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ்
07:30:00
எம் சின்னசாமி ஸ்டேடியம்
மார்ச் 1
UP வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
07:30:00
எம் சின்னசாமி ஸ்டேடியம்
மார்ச் 2
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ்
07:30:00
எம் சின்னசாமி ஸ்டேடியம்
மார்ச் 3
குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
07:30:00
எம் சின்னசாமி ஸ்டேடியம்
மார்ச் 4
UP வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
07:30:00
எம் சின்னசாமி ஸ்டேடியம்
மார்ச் 5
டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
07:30:00
அருண் ஜெட்லி மைதானம்
மார்ச் 6
குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
07:30:00
அருண் ஜெட்லி மைதானம்
மார்ச் 7
UP வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
07:30:00
அருண் ஜெட்லி மைதானம்
மார்ச் 8
டெல்லி கேபிடல்ஸ் vs UP வாரியர்ஸ்
07:30:00
அருண் ஜெட்லி மைதானம்
மார்ச் 9
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
07:30:00
அருண் ஜெட்லி மைதானம்
மார்ச் 10
டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
07:30:00
அருண் ஜெட்லி மைதானம்
மார்ச் 11
குஜராத் ஜெயண்ட்ஸ் vs UP Warriorz
07:30:00
அருண் ஜெட்லி மைதானம்
மார்ச் 12
மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
07:30:00
அருண் ஜெட்லி மைதானம்
மார்ச் 13
டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
07:30:00
அருண் ஜெட்லி மைதானம்
மார்ச் 15
எலிமினேட்டர்
07:30:00
அருண் ஜெட்லி மைதானம்
மார்ச் 17
இறுதிப்போட்டி
07:30:00
அருண் ஜெட்லி மைதானம்
WPL 2024: ஐந்து அணி வீராங்கனைகள்:
மும்பை இந்தியன்ஸ்:
அமன்ஜோத் கவுர், அமெலியா கெர், க்ளோ ட்ரையோன், ஹர்மன்ப்ரீத் கவுர், ஹேலி மேத்யூஸ், ஹுமைரா காசி, இஸ்ஸி வோங், ஜிந்திமணி கலிதா, நாட் ஸ்கிவர்-ப்ரன்ட், பூஜா வஸ்த்ரகர், பிரியங்கா பாலா, சைகா இஷாக், யாஸ்திகா பாட்டியா, ஷப்னிம் இஸ்மாயில், அமான் கஜானா, அமன் கஜானா, எஸ். பாத்திமா ஜாபர், கீர்த்தனா பாலகிருஷ்ணன்
டெல்லி கேபிடல்ஸ்:
ஆலிஸ் கேப்ஸி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், லாரா ஹாரிஸ், மரிசானே கப், மெக் லானிங், மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷஃபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தனியா பாட்டியா, அன்னாபர் சுதர்லாண்ட், அன்னாபர் சுதர்லாண்ட்* மொண்டல், அஸ்வனி குமாரி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஆஷா ஷோபனா, திஷா கசத், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட் (திரும்பப் பெறப்பட்டார்), இந்திராணி ராய், கனிகா அஹுஜா, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா, சோஃபி டிவைன், ஜார்ஜியா வேர்ஹாம், கேட் கிராஸ், ஏக்தா பிஷ்தேஷ், ஷுபா சகானா பிஷ்தேஷ் , சிம்ரன் பகதூர், சோஃபி மோலினக்ஸ்
UP வாரியர்ஸ்:
அலிசா ஹீலி, அஞ்சலி சர்வானி, தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், கிரண் நவ்கிரே, லாரன் பெல் (திரும்பப் பெற்றார், அதற்குப் பதிலாக சாமரி அதபத்து), லக்ஷ்மி யாதவ், பார்ஷவி சோப்ரா, ராஜேஸ்வரி கயக்வாட், சொப்பதண்டி யஷஸ்ரி, ஸ்வேதா செஹ்ராவத், சோப் தலியாட், சோப் தயாக்டோன், விருந்தா தினேஷ், பூனம் கெம்னார், சைமா தாகூர், கௌஹர் சுல்தானா.
குஜராத் ஜெயண்ட்ஸ்:
ஆஷ்லீக் கார்ட்னர், பெத் மூனி, தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், லாரா வோல்வார்ட், ஷப்னம் ஷகில், ஸ்னேஹ் ராணா, தனுஜா கன்வர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், மேக்னா சிங், த்ரிஷா பூஜிதா, காஷ்வீ கெளதம், பிரியா மிஸ்ரா, லாரன் சீட்டில், கேத்ரின் கிருஷ்ணா, மன்தாப் , தரணும் பாத்தான்
நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் டெலிகாஸ்ட் விவரங்கள்:
இந்தியாவில் எந்த டிவி சேனல் WPL 2024 போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும்?
ஸ்போர்ட்ஸ் 18
இந்தியாவில் WPL போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை எப்படி பார்ப்பது?
லைவ் ஸ்ட்ரீமிங்கை ரசிகர்கள் ஜியோ சினிமாஸில் பார்க்கலாம்.

Thangam Thennarasu: ”ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?" எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி!

தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், தாக்கலான பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தங்கம் தென்னரசு.

”கடன் சுமை ஏறிக்கொண்டே அதிமுகவின் சாதனை”

அதில், ”திராவிட இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட எல்லோருக்கும் எல்லாமுமான. கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு அளிக்கும் பட்ஜெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தாக்கல் செய்திருக்கிறது. இதனால், கொதிநிலைக்குப் போயிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, "கனவு பட்ஜெட்: மக்களுக்குப் பயன் தராது எனப் புலம்பியிருக்கிறார். தி.மு.க. அரசுக்கு 8,33,361 கோடி கடன் உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது” எனச் சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். மாளிகையின் பரணில் தூக்கிப் போடப்பட்டிருக்கும் அ.தி.மு.க.வின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள். அதையெல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், 8-ஆம் பக்கத்தை மட்டுமாவது கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.

அ.தி.மு.க.தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவரத்துப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை. 2011 2012-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக இருந்த கடனைப் படிப்படியாக உயர்த்தி 2020 – 2021-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள்.

’கடன்’ என்ற சொல்லுக்குக் ‘கடமை’ என்ற பொருளும் உண்டு. ஆனால், கடமையைச் செய்யத் தவறிக் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் பத்தாண்டு அதி.மு.க. அரசின் சாதனை. ‘ஒரு மாநில அரசு. மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு மேல் கடன் வாங்க முடியாது.

”ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?"

’வருஷா வருஷம் கடன் வாங்கித்தான் இந்த அரசு வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கு’ என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள். பத்தாண்டு அ.தி.மு.க. அரசும் அதைத்தானே செய்து கொண்டிருந்தது. தி.மு.க. அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?

2014-இல் டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆட்சியில் 54 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்தாண்டில் 205 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறதே அதைப் பேசப் பழனிசாமி வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்? பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி, அது உண்மையென்றால் ஒன்றிய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே?

பழனிசாமி அவர்கள் அளித்த அந்தப் பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். "அ.தி.மு.க. ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க. ஆட்சியில் வருகிறது" எனச் சொல்லியிருக்கிறார். அதாவது வருவாயைப் பெருக்கும் பணியைத் தி.மு.க. அரசு செவ்வனே செய்து வருகிறது என அவரே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்.

கடனை அடைக்க வருவாயைப் பெருக்கும் வழியையும் மு.க.ஸ்டாலின் அரசு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாகக் கடனை அடைக்கும் வழிகளை இன்னும் சிறப்பாக இந்த அரசு மேற்கொள்ளும். ‘தி.மு.க. அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது; மக்களுக்குப் பயன் தராது’ எனச் சொல்லியிருக்கிறார். அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள். கடந்த காலங்களில் அதி.மு.க.வின் பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மறந்துவிட வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Sandeshkhali Case: “மணிப்பூரோட ஒப்பிடாதீங்க” சந்தேஷ்காலி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்!
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்த நிலையில் தான், மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
சந்தேஷ்காலி வன்முறை:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் முகமது ஷேக்கிற்கு எதிராக பாலியல் புகார்கள் வந்த நிலையில், மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு தேசிய பட்டியலின ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா பொதுநல மனுவைவை தாக்கல் செய்தார். சந்தேஷ்காலி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், கடமை தவறியதற்காக மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா,அகஸ்டின் ஜார்ஜ் மசிஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் ஏன் உயர்நீதிமன்றத்திற்கு செல்லக்கூடாது? ஏற்கனவே கொல்கத்தா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
“சந்தேஷ்காலியும் மணிப்பூரும் ஒன்னா?”
இந்த விவகாரத்தில் இரட்டை விசாரணை இருக்கக் கூடாது. உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்த விஷயத்தின் தீவிரத்தை உயர்நீதிமன்றம் புரிந்துள்ளது. சிறப்பு புலானாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதை உயர் நீதிமன்றம் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா, “கடந்த ஆண்டு மணிப்பூரில் வெடித்த வன்முறை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டது” என்று மனுதாரர் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி பி.வி.நாகரத்னா, ”மணிப்பூரையும், சந்தேஷ்காலி விவகாரத்தையும் ஒப்பிட முடியாது. மணிப்பூரில் உள்ள சூழ்நிலையுடன் இதனை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம்” என்றார்.
சந்தேஷ்காலியில் நடப்பது என்ன?
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது. இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தேஷ்காலியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மைக் கண்டறியும் குழு சந்தேஷ்காலிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அதில், “சந்தேஷ்காலியில் உள்ள பெண்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியதாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளதாக உறுதியாகியது” என்று தெரிவித்தது.
அதனை தொடர்ந்து, சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தேசிய பட்டியலின ஆணையம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அதில், பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்டம் 338-ன் கீழ் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

Actor Prithviraj:”அப்பாவின் இறப்பை மறக்க முடியாது" நடிகர் ப்ரித்விராஜ் வாழ்வில் நடந்த சோகம் – மேடையிலேயே கண்கலங்கிய தாய்!

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான பிரித்வி ராஜனின் குடும்பத்தில் அனைவரும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தான். 2001 ஆம் ஆண்டில் இயக்குநர் பாசிலால் நடிகராக அறிமுகம் செய்ய டெஸ்ட் ஷூட் எல்லாம் நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சி எடுபடாமல் போக, பாசில் பரிந்துரையின் பேரில் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பிரித்விராஜ்.

மலையாள தேசத்து நாயகன்:

2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கிளாஸ்மேட்ஸ் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படியான நிலையில் இயக்குநர் கே.வி. ஆனந்த் பிரித்விராஜை தமிழுக்கு அழைத்து வந்தார். கனா கண்டேன் படத்தில் வில்லனாக தோன்றினார்.

தமிழில் சத்தம் போடாதே, மொழி, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, ராவணன், காவியத்தலைவர் என மிகவும் கனமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் அடுத்தடுத்து பல படங்களிலும், தமிழில் நல்ல கதையாக தேர்வு செய்தும் நடித்து தனக்கென ரசிகர்களை கொண்டிருந்தார் பிரித்விராஜ்.

மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான “லூசிபர்” படத்தின் மூலம் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, ப்ரோ டாடி என்ற காமெடி படம் கொடுத்தும் ரசிக்க வைத்தார்.

"நான் பார்த்ததிலேயே மிகவும் வலிமையான பெண்"

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது தாய் மல்லிகா சுகுமாரன் குறித்து உணர்ச்சிவசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை மல்லிகா சுகுமாரன் சினிமா துறையில் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரித்வி ராஜ், “நான் பார்த்ததிலேயே மிகவும் வலிமையான பெண் என் அம்மா (மல்லிகா சுகுமாரன்) தான். சினிமாவில் 50 ஆண்டுகள் பணியாற்றுவது ஒன்று அதியசம் இல்லை. ஆனால், 25 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி, இல்லத்தரசியாக இருந்தார் என் அம்மா. பின்னர், சினிமாவில் ரீ எண்டரி கொடுத்து தனக்கான இடத்தை பதிவு செய்தார். இதற்கு நான் அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

”தாயுடன் இணைந்து நடிப்பதில் பெருமையாக உள்ளது"

உலகத்தில் எத்தனை பேருக்கு இது நடக்கும் என்று தெரியவில்லை. தனது தாயுடன் இணைந்து நடிக்கவும், அவர் நடித்த திரைப்படத்தை தயாரித்து இயக்கவும் வாய்ப்பு கிடைத்த ஒரே நபர் நான் தான் என்று பெருமையாக கூறுகிறேன். எனக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என் தாயுடன் நடிக்கும்போது, மிகவும் திறமையான கலைஞர் என்ற உணர்கிறேன். எப்போதும் எனது தந்தை இறப்பு என்னுடைய மனதில் இருக்கும். என் தந்தையின் அஸ்தியுடன் எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தேன். என் அம்மா வேறொரு வாகனத்தில் தனியாக இருந்தார்.

அந்த நேரத்தில், என் மனதில் ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது. என் அம்மா இப்போது என்ன செய்வார்? என்று கேள்வி எழுந்தது. தற்போது அதற்கு பதில் கிடைத்திருக்கிறது. என் அண்ணனும் நானும் அப்பா வடிவில் உங்கள் முன் இருக்கிறோம்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார் பிரித்விராஜ். பிரித்விராஜ் உணர்ச்சிவசப்பட்டு பேசிய போது அவரது தாய் மல்லிகா சுகுமாரன் கண்கலங்கினார்.

"வயநாட்டுக்கு போகாமா போட்டி போடட்டும்" ராகுல் காந்திக்கு சவால் விட்ட ஸ்மிருதி இராணி

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுவது அமேதி தொகுதி. உத்தர பிரசேதத்தில் அமைந்துள்ள இந்த தொகுதியில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேர்தலில் (இடைத்தேர்தல் உள்பட) 13 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.

நேரு குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா ராகுல் காந்தி?

குறிப்பாக ராகுல் காந்தி கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக பதவி வகித்தார். இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2019ஆம் ஆண்டு அமேதி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.

வயநாட்டில் வெற்றி பெற்ற போதிலும் அமேதியில் பா.ஜ.க.வின் ஸ்மிருதி இராணியிடம் 55 ஆயிரத்து 120 வாக்குகள் வித்தியாசத்தில் (தற்போது மத்திய அமைச்சர்) தோல்வி அடைந்தார். ராகுல் காந்தியால் 4 லட்சத்து 13 ஆயிரத்து 394 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இந்த சூழலில், வரவிருக்கும் தேர்தலில் ராகுல் காந்தி, எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அரசியல் பரபரப்புக்கு மத்தியில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் உத்தர பிரதேசத்தை அடைந்துள்ளது. அமேதி தொகுதியில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார்.

சவால் விட்ட ஸ்மிருதி இராணி:

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்ட அதே நாளில், ஸ்மிருதி இராணியும் அமேதியில் பாஜக சார்பில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார். நம்பிக்கை இருந்தால் வயநாட்டுக்கு செல்லாமல் அமேதி தொகுதியில் மட்டும் போட்டியிடட்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்மிருதி இராணி கூறுகையில், "2019இல் அமேதியை விட்டு ராகுல் காந்தி வெளியேறிவிட்டார். இன்று அமேதி அவரை விட்டு விலகிவிட்டது. தன்னம்பிக்கை இருந்தால் வயநாடு போகாமல், அமேதி தொகுதியில் மட்டும் போட்டியிடட்டும். அமேதியின் காலியான சாலைகள், ராகுல் காந்தியைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நமக்குத் தெரிவிக்கிறது" என்றார்.

கடந்த சில மாதங்களாகவே, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்டு உள்ளதால், அவரின் பாரம்பரிய தொகுதியான ரே பரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: "குடும்பத்திற்காக அதிகாரம் பெற நினைப்பவர்கள் ஏழைகள் பற்றி யோசிப்பார்களா?" அமித்ஷா கேள்வி

Villupuram M-sand, gravel price hike Lorry owners and drivers on indefinite strike
விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள நல்லாளம் கூட்டுப் பாதையில் எம். சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்-சாண்ட், ஜல்லி விலை உயர்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குவாரிகள் அமைந்துள்ளது இந்த குவாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கட்டுமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த பகுதிகளில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை குவாரி உரிமையாளர்கள் மாதத்திற்கு ஒருமுறை விலையேற்றம் செய்து வருகின்றனர்.
இதை கண்டிக்கும் வகையில் இன்று மரக்காணம் வட்டத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து நல்லாளம் கூட்டு சாலையில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாளம் கூட்டு பாதை சந்திப்பில் எம்.சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.அப்போது செய்திகளை சந்தித்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லட்சுமிபதி கூறியதாவது:-
2023 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு யூனிட் ஜல்லி விலை 1400 ரூபாய்க்கும், ஒரு யூனிட் எம் சான்ட் விலை 2800 ரூபாயுக்கும், பி.சான்ட் 3600 ரூபாய்க்கும் விற்பனை செய்து வந்தனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு யூனிட்டுக்கு 500 ரூபாய் விலை ஏற்றம் செய்தனர். மேலும் நேற்றைய தினம் கூட கட்டுமான பொருட்களின் விலையை குவாரி உரிமையாளர்கள் ஏற்றம் செய்துள்ளனர், மாதத்திற்கு ஒரு முறை விலை ஏற்றம் செய்வதால் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
நுரையீரல் பாதிப்பு
மேலும், குவாரிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் குவாரிகளில் இருந்து வரும் தூசுக்களால் அந்த பகுதிகள் வாழும் மக்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர், இதனை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. செவிசாய்க்கவும் இல்லை. எனவே இந்த போராட்டத்தை அரசு கவனத்தில் கொண்டு விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் காண

Karthi makkal nala unavagam crosses 500 days offering 50 rs food worth for rs 10
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘கார்த்தி 26’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி 2’ மற்றும் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
நடிப்பில் முழு ஈடுபாடுடன் இருக்கும் நடிகர் கார்த்தி அதே சமயம் பல சமுதாய நல தொண்டுகளை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக செய்து வருகிறார். அந்த வகையில் ‘கார்த்தி மக்கள் நல மன்றம்’ என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் தரமான உணவை இயக்கத்தின் கீழ் மிகவும் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. 50 ரூபாய் மதிப்பிலான வெஜிடபிள் பிரிஞ்சி சாப்பாடு வெறும் 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் இந்த உணவு தினமும் வழங்கப்படுவதால் 100க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பயனடைகிறார்கள். அன்றாடம் வெளியில் வேலை செய்யும் பலருக்கும் தரமான மலிவான விலையில் கிடைக்கும் இந்த உணவானது மிகவும் உதவியாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர திங்கள் முதல் சனி வரை வாரத்தில் ஆறு நாட்களும் மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.
எந்த ஒரு லாபத்தையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்யப்படும் இந்த சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள். கடந்த பிப்ரவரி 17ம் தேதியோடு இந்த உணவகம் துவங்கி 500 நாட்களை நிறைவு செய்கிறது. சாலை பராமரிப்பு காரணமாக ஒரு சில மாதங்கள் இந்த உணவகம் செயல்படாமல் இருந்தது. ஆனால் தற்போது சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் தற்போது இந்த உணவகமானது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஊரில் உள்ள பலருக்கும் நேரத்தோடு உணவு டெலிவரி செய்யும் டெலிவரி மேன்கள், கொரியர் டெலிவரி செய்யும் ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் என பலருக்கும் தினமும் இந்த உணவு பசியாற்றுகிறது.
பலரும் அவர்கள் செய்யும் சிறு சிறு உதவியை கூட விளம்பரம் செய்து கொள்ளும் இந்த காலத்தில் எந்த ஒரு அலப்பறையோ அல்லது ஆர்பாட்டமோ இல்லாமல் அமைதியாக செய்து வருகிறார் நடிகர் கார்த்தி என அவருக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றன.
மேலும் காண

cuddalore honor killing 4 member got double life sentence | கடலூரில் 2014 ஆம் ஆண்டு நடந்த ஆணவக் 4 பேருக்கு இரட்டை ஆயுள்
கடந்த 2014 ஆம் ஆண்டு புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சீதா என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். சீதா என்ற வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை சரவணன் என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டார். அதற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு வந்தனர். எதிர்ப்பு எழுந்த நிலையில், சீதாவை அவரது தாய் வீட்டுக்குச் செல்லுமாறு கணவர் சரவணன் கட்டாய்ப்படுத்தியுள்ளார்.
தீ வைத்து கொலை:
தாய் வீட்டுக்கு சீதா செல்ல மறுத்ததால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரது கணவர் சரவணன், அவரது தாயார் செல்வி, அக்கா சகுந்தலா மற்றும் அக்காவின் கணவர் வெங்கடேசன் ஆகியோர் சேர்ந்து சீதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை தீ வைத்து எரித்துள்ளனர்.
இரட்டை ஆயுள்:
இந்த வழக்கானது கடலூர் எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியானது. இளம்பெண்ணை கொலை செய்ததுடன், கொலையை மறைக்க உடலை எரித்த 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் காண

"இது அதிகார துஷ்பிரயோகம்" சந்தா கோச்சார் வழக்கில் சிபிஐ-யை லெப்ட் ரைட் வாங்கிய மும்பை உயர் நீதிமன்றம்!

வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சாரையும் அவரது கணவர் தீபக் கோச்சாரையும் சிபிஐ கைது செய்தது அதிகார துஷ்பிரயோகத்திற்கு இணையானது என மும்பை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்டதா ஐசிஐசிஐ வங்கி?

கடந்த 2012ஆம் ஆண்டு, ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. கடன் அளிக்கப்பட்டதில் பல முறைகேடுகள் இருந்ததாக புகார் எழுந்தது. வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் அளிக்கப்பட்டதால் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பயன் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது, ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோகான் குழுமத்திற்கு அவர் கடன் வழங்கியுள்ளார். இதற்கு பிரதிபலனாக சந்தா கோச்சாரின் கணவர் நிறுவனமான வீடியோகான் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.

வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி அளித்த கடன், வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. மேலும், வங்கி மோசடியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் தேதி, மோசடி மற்றும் முறைகேடு புகாரில் சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்.

சிபிஐ மீது மும்பை உயர் நீதிமன்றம் காட்டம்:

முதற்கட்ட சிபிஐ காவலுக்குப் பிறகு, அவர்களை டிசம்பர் 29ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்களை கைது செய்தது சட்ட விரோதம் என்றும் விடுதலை செய்யக் கோரியும் வழக்கை ரத்து செய்யக் கோரியும் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி, அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், சந்தா கோச்சாருக்கும் தீபக் கோச்சாருக்கும் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மும்பை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அதுமட்டும் இன்றி, கைது நடவடிக்கை மேற்கொண்ட சிபிஐ-யை நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

சந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோரை யோசிக்காமல் கைது செய்துள்ளனர் என்றும் இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு இணையானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். "விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கூடுதல் பொருட்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

சட்டத்தை கருத்தில் கொள்ளாமல் இப்படி கைது செய்யப்பட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகத்திற்கு இணையானது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 41A-ஐ பதிவு செய்யும் தேவை எங்கிருந்து வந்தது. இந்த சட்டப்பிரிவு இல்லாத பட்சத்தில், கைது தேவையற்றதாகிவிடுகிறது. கைது செய்தது சட்டவிரோதம்" என நீதிபதிகள் அனுஜா பிரபுதேசாய் மற்றும் என். ஆர். போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

dhanush d50 movie raayan movie cast and crew details
தனுஷின் 50ஆவது படமான ராயன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் படக்குழுவில் யார் யார் இணைந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ராயன்
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரின் முடிவடைந்தது. தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி அதில் நடித்துள்ளார் தனுஷ்.
இப்படத்தில் தனுஷூடன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளும், ஒளிப்பதிவு ஓம் பிரகாஷூம் , கலை இயக்குநராக ஜாக்கியும் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள். தனுஷ் முன்னதாக இயக்கிய பவர் பாண்டி படம் ஒரு ஃபீல் குட் படமாக இருந்த நிலையில், இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கிறது. தமிழ். தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
#D50 is #Raayan 🔥🎬 Written & Directed by @dhanushkraja 🎵 Music by @arrahman Releasing in Tamil | Telugu | Hindi@omdop @editor_prasanna @kalidas700 @sundeepkishan @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss #D50FirstLook pic.twitter.com/vfemOIRKIX
— Sun Pictures (@sunpictures) February 19, 2024கதை என்னவாக இருக்கலாம்?
வடசென்னையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ராயன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் இதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் மற்றும் நடிகர் காளிதாஸ் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தனுஷ் படம் என்றால் அதற்கு அனிருத் இசையமைப்பது வழக்கம். ஆனால் தனுஷ் இயக்கும் இரண்டு படங்களுக்கு அனிருத் இசையமைக்காதது தனுஷின் முடிவாக இருக்கலாம். தனுஷ்ம்முன்னதாக நடித்த மரியான் மற்றும் இந்தியில் வெளியான ராஞ்சனா உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களில் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. தற்போது இப்படத்திற்கு ரஹ்மானின் இசை கூடுதல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் வளர்ந்து வரும் நடிகர்களான காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் இப்படத்தில் நடித்துள்ளதும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.மேலும் படிக்க : 24 Years of Mugavaree: 24 ஆண்டுகளை கடந்த முகவரி .. நெகிழ்ச்சியாக பதிவிட்ட இயக்குநர் வி.இசட்.துரை!
Lover Deleted Scene: காதலை சொன்ன நடிகர் மணிகண்டன்.. லவ்வர் படத்தின் டெலிட்டட் காட்சி வெளியீடு!மேலும் காண

Faiz Fazal Retire: ரஞ்சி கிரிக்கெட்டின் ரன்மெஷின்! ஓய்வு பெற்றார் ஃபயஸ் பசல்! யார் இவர்?

ரஞ்சி கிரிக்கெட் அணி இந்தியாவின் மிகவும் பழமையான புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஆகும். ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவதற்கு முன்பு இந்த போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கே இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும். ஐ.பி.எல். தொடருக்கு பிறகு ரஞ்சி தொடரில் இருந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஃபயஸ் பசல் ஓய்வு:

ரஞ்சி கிரிக்கெட் தொடரின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஃபயஸ் பசல். இவர் நேற்றுடன் ரஞ்சி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். விதர்பா அணிக்காக நீண்ட காலம் ஆடி வந்த பசல், நாக்பூர் மைதானத்தில் நேற்று நடந்த ஹரியானா அணிக்கு எதிரான போட்டியுடன் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பசல் விதர்பா அணியின் வீரராக மட்டுமின்றி விதர்பா அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் உலா வந்தவர்.

1985ம் ஆண்டு மகாராஷ்ட்ராவின் நாக்பூரில் பிறந்த ஃபயஸ் யாக்கூப் பசல், இடது கை பேட்ஸ்மேன் ஆவார். இவர் விதர்பா அணி, ரயில்வே அணி, இந்தியா 19 வயதுக்குட்பட்டோர் அணி, இந்தியா ரெட், இந்தியா ஏ, மத்திய மண்டல அணி, சென்ட்ரல் அணி, இந்திய அணிக்காக ஆடியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியுள்ளார்.

30 வயதில் இந்திய அணிக்கு அறிமுகம்:

இந்திய அணிக்காக இவர் இதுவரை ஒரே ஒரு நாள் போட்டியில் மட்டும் ஆடியுள்ளார். 2016ம் ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பசல் ஆடியுள்ளார். கடந்த 16 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 30 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஒரே வீரர் பசல் மட்டுமே ஆவார்.

ஜிம்பாப்வே மண்ணில் தனக்கு கிடைத்த அந்த ஒரே வாய்ப்பையும் மிக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் பசல். 124 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்காக, தொடக்க வீரராக களமிறங்கிய பசல் கே.எல்.ராகுலுடன் இணைந்து அசத்தினார். கே.எல்.ராகுல் ஒருபுறம் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாச மறுமுனையில் பசலும் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசினார். இருவரும் இணைந்து 21.5 ஓவர்களிலே இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். பசல் 61 பந்துகளில் அவுட்டாகாமல் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 55 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் வாய்ப்பு மறுப்பு:

அதன்பின்பு, அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. அவர் இந்திய அணிக்காக களமிறங்கியபோது அவருக்கு ஐ.பி.எல். தொடரில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் மிரட்டலான பேட்டிங்கை கொண்டுள்ள பசல், முதல் தர கிரிக்கெட்டில் 137 போட்டிகளில் 233 இன்னிங்சில் ஆடி 24 சதங்கள், 39 அரைசதங்களுடன் 9 ஆயிரத்து 183 ரன்களை எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 113 போட்டிகளில் ஆடி 10 சதங்கள், 22 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 641 ரன்களை எடுத்துள்ளார். 66 டி20 போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களுடன் 1273 ரன்களை எடுத்துள்ளார்.

2015-16 ரஞ்சி கிரிக்கெட் தொடரில் 714 ரன்களை குவித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். 2004ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால், அவருக்கு காயம் ஏற்பட்ட காரணமாக அவருக்கு பதில் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தவான் அந்த தொடரிலே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 38 வயதான பசல் தன்னுடைய கடைசி இரண்டு இன்னிங்சில் டக் அவுட்டும், ஒரு ரன்னும் எடுத்தார்.

அவரைப் பற்றி கூறிய விதர்பா அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட், பசல் ஒரு தனித்தவமான வீரர். அவரது கிரிக்கெட் தொழில்நுட்பம் குறைபாடே இல்லாதது. அவர் இந்திய அணிக்காக இன்னும் அதிக போட்டிகள் ஆட தகுதியானவர் என்று புகழாரம் சூடியுள்ளார். ரஞ்சி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பசலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

AMMK General Secretary TTV Dhinakaran Flays Tamil Nadu budget 2024 says DMK is daydreaming
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்:
வடசென்னை வளர்ச்சிக்கு என 1000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய குடியிருப்புகள் கட்டித் தருவது, பள்ளிகளை திறன் மிகுந்தவையாக மேம்படுத்துவது, தொழிற்பயிற்சி மையங்களை அமைப்பது, ஏரிகள் சீரமைப்பு மற்றும் மருத்துவமனைகள் போன்றவை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை, எளிய பொதுமக்கள் தொடங்கி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், அரசு ஊழியர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமளிக்கும் தேர்தல் கால திமுக அரசின் விளம்பர பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.
‘மாபெரும் தமிழ்க்கனவு ‘ எனும் தலைப்பில் தாக்கலாகியிருக்கும் நிதிநிலை அறிக்கையில் சமூகநீதியை முதல் இலக்காக நிர்ணயித்திருக்கும் திமுக அரசு, அந்த சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குகிறது. மாநிலங்களே தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கு பீகார் தொடங்கி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஜார்காண்ட் என பல மாநிலங்கள் முன்னுதாரணமாக இருக்க தமிழகம் மட்டும் மத்திய அரசையே இன்னமும் எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்?
டி.டி.வி. தினகரன்:
ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகங்கள், மாணவ, மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் விலையில்லா மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட இதய தெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட நாடுபோற்றும் நல்ல திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இடம்பெறாதது கடும் கண்டனத்திற்குரியது.
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த அரசு மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 500 நாட்களுக்கு மேலாக போராடி வரும் பொதுமக்கள், விளைநிலங்கள் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள், இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தும் மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்புக்காக தவித்து கொண்டிருக்கும் தமிழக இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக தந்திருக்கிறது திமுக அரசு” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்டை பாராட்டி பேசியுள்ள மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, “மாபெரும் தமிழ் கனவுடன் தமிழக அரசின் 2024-25 நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார்.
வைகோ:
சமூக நீதி, கடைக் கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை வழங்கி இருக்கிற நிதி அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு தேவையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் தொழிலுக்கு ஆதாரமான காவிரி வைகை, நொய்யல், தாமிரபரணி போன்ற ஆறுகளை புனரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 2.2 விழுக்காடு மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க திட்டமிடப்பட்டு இருக்கிறது” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்டை விமர்சித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே. வாசன், “தமிழக அரசின், 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வறுமையை போக்கக்கூடிய, வேலை வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய, பொருளாதார நிலையை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமையாமல் மத்திய அரசை குறை கூறும் பட்ஜெட்டாக, தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்:
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து பேசியுள்ள பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், ” ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடன், ஓராண்டிற்கான வட்டி மட்டும் ரூ.63,722 கோடி எனில், எங்கே போகிறது தமிழகத்தின் பொருளாதாரம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் காண

விழுப்புரத்தில் பரபரப்பு… மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்

விழுப்புரம்: மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்த ராம்பாக்கம் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் பழனியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு ஏன் வழங்கப்படாமல் உள்ளது?

நாங்கள் ராம்பாக்கம் கிராமத்தில் முருகன் கோவில் தெருவில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பானது கடந்த 1964-ல் அப்போதைய அரசால் வழங்கப்பட்டது. சுமார் 60 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரையிலும் அரசு எங்களுக்கு மனைப்பட்டா வழங்காமல் உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் தொடர்ந்து அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை மனு வழங்கி வருகிறபோதிலும் தற்போது மனைப்பட்டா அரசு தரப்பில் தயார் நிலையில் இருந்தும் எங்களுக்கு ஏன் வழங்கப்படாமல் உள்ளது என தெரியவில்லை.

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து தொடர் போராட்டம்

எனவே எங்களுக்கு மனைப்பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து தொடர் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற மாவட்ட ஆட்சியர் பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

D50 First Look Out Dhanush 50 Movie Titled Raayan AR Rahman Musical
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது
தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி “கேப்டன் மில்லர்” படம் வெளியானது. கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
D50
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படம் கடந்த ஆண்டு அறிவிக்கப் பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரின் முடிவடைந்தது. தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி அதில் நடித்துள்ளார் தனுஷ். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. முன்னதாக ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டவர்களை வைத்து தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படம் சிறப்பான வெற்றி பெற்றது. ஒரு படத்தை இயக்குவதற்கு தான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பதாக தனுஷ் தெரிவித்து சில டைரக்ஷனுக்கு கேப் விட்டார். தற்போது தனுஷ் அதிதீவிரமான உழைப்பை போட்டு இயக்கி முடித்திருக்கும் படம் தான் D50. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
#D50 is #Raayan 🔥🎬 Written & Directed by @dhanushkraja 🎵 Music by @arrahman Releasing in Tamil | Telugu | Hindi@omdop @editor_prasanna @kalidas700 @sundeepkishan @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss #D50FirstLook pic.twitter.com/vfemOIRKIX
— Sun Pictures (@sunpictures) February 19, 2024மேலும் காண

கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கும் திட்டம்; திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தின் முதல்நாள் திங்கள்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை , செய்யாறு , வந்தவாசி , சேத்துப்பட்டு, ஆரணி , செங்கம் , கண்ணமங்கலம் ,மோத்தகல் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய உதவிகள் மற்றும் குறைகளை கூறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து கோரிக்கை மனுக்களை அளித்து கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மாவட்ட எல்லை பகுதியில் இருந்தும் வயதான மூதாட்டிகள் தாய் மார்கள் என அனைவரும் கால் வலிக்க மணி கணக்கில் காத்திருந்து மனுக்களை அளிப்பனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மனுக்கள் அளிக்கவரும் பொதுமக்கள் பலமணிநேரம் நின்றுகொண்டே காத்திருந்து மனுக்களை அளிப்பது அறிந்த உடனே பொதுமக்களுக்கு அமர்வதுக்கு நாற்காலிகளை அளித்து பொதுமக்கள் அனைவரும் உட்கார்ந்து ஓய்வு எடுத்து செல்வத்தற்நடவடிக்கை எடுத்தார்.

அதே போன்று பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து கை குழந்தையுடன் பெண்கள் வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் பாலூட்டும் அறையையும் மற்றும் குழந்தைகளுக்கு பசியை போக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சொந்த செலவில் குழந்தைகளுக்கு பால் அளித்தார்.மேலும் அவர்களை நேரில் சந்தித்து மனுக்களையும் மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு இந்த மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.இந்நிலையில் பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் ஏழை எளிய மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனியாக அமர்ந்து மனுக்கள் எழுதுபவர்களிடம் பணம் கொடுத்து தங்களது குறைகளை மனுவாக எழுதி வருகின்றனர்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டத்தில் ஒரு பெண் மனு அளிக்க வந்தார். அப்போது மனுவை வாங்கிய மாவட்ட ஆட்சியர் இந்த மனு உங்களுக்கு தவறுதலாக எழுதி கொடுத்தது யார் என்று கேட்டார். அதற்கு மாவட்ட ஆட்சியர் வளாக வெளி நபர்கள் மூலம் மனு எழுதி வந்ததாக அந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அழைத்த மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் எத்தனை துறை உள்ளதோ அந்த துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தலா இரண்டு நபர்கள் வாராந்தோறும் திங்கட்கிழமையன்று வெளியில் அமர்ந்து மனு அளிக்க வரும் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதித் தர வேண்டும் என உத்தரவிட்டார். இந்த நிகழ்வு பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

Villupuram news Railway flyover work kandamangalam Puducherry Villupuram between Traffic change – TNN | கண்டமங்கலத்தில் ரெயில்வே மேம்பால பணி தீவிரம்; புதுச்சேரி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் புதுச்சேரி-விழுப்புரம் ரெயில்வே பாதையில் மேம்பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்தும் வகையில் போக்குவரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கண்டமங்கலம் பகுதியில் உள்ள விழுப்புரம்-புதுச்சேரி ரெயில் பாதையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரி-விழுப்புரம் இடையே வந்து செல்லும் வாகனங்கள் சிறிய சர்வீஸ் சாலை வழியாகவே இதுவரை சென்று வந்ததால் அப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வாகனங்கள் மற்றும் பயணிகள் சாலையை கடந்து செல்ல மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
அதன் அடிப்படையில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு வரும் 21-ந் தேதி (புதன்கிழமை) முதல் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கலிதீர்த்தாள்குப்பம், குச்சிப்பாளையம், பி.எஸ்.பாளையம், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, பத்துகண்ணு, வில்லியனூர் வழியாக புதுச்சேரிக்கு செல்ல வேண் டும். புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் கன ரக வாகனங்கள் சிவரந்தகம், கீழூர், மிட்டாமண்டகப்பட்டு, பள்ளி நேலியனூர், திருபுவனைபாளையம், திருபுவனை வழியாக விழுப்புரம் செல்ல வேண்டும். விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார்கள் திருவண்டார்கோயில், கொத்தமபுரி நத்தம், வனத்தாம்பாளையம், ராஜபுத்திர பாளையம், சின்னபாபு சமுத்திரம், கெண்டியாங்குப்பம், பங்கூர் வழியாக புதுச்சேரி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் காண

Brazil President Lula da Silva says israel committing genocide against palestine civilians
காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
காசாவில் ருத்ரதாண்டவம் ஆடும் இஸ்ரேல்:
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 29,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா. இஸ்ரேல் மீது குற்றம் சுமத்திய அவர், காசாவில் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபாபாவில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உச்சி மாநாட்டு நேற்று நிறைவடைந்தது.
உச்சி மாநாட்டை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேசில் அதிபர் லூலா, “காசாவில் நடப்பது போர் அல்ல. அது, இனப்படுகொலை. ராணுவ வீரர்களுக்கு எதிராக ராணுவ வீரர்கள் நடத்தும் போர் அல்ல. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தயார் நிலையில் இருக்கும் ராணுவம் நடத்தும் போர்” என்றார்.
கொதித்தெழுந்த பிரேசில் அதிபர் லூலா:
பிரேசில் அதிபர் லூலாவின் கருத்துக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவர், வெட்கக்கேடான, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் விமர்சித்துள்ளார். மேலும், பிரேசில் தூதருக்கு விளக்கம் அளிக்கக் கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பாலஸ்தீன பகுதியான வெஸ்ட் பேங்க், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு இருக்கும் அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெஸ்ட் பேங்கில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருவதாகவும் இதை விட மோசமான நிலை ஏற்படலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.
4 மாதங்களாக நடந்து வரும் போரால் காசாவின் மொத்த மக்கள் தொகையில் 85 சதவிகிதம் பேர், அதாவது 24 லட்சம் பேர், தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பாலஸ்தீன மக்களில் பெரும்பான்மையானோர் முகாம்களில் வசிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து! நுபூர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நெதர்லாந்து அரசியல் தலைவர்!மேலும் காண

Suriya 44 Update Jhanvi Kapoor on to Pair with Suriya For the Film Karna Boney Kapoor Latest Cinema News
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு ரிலீசுக்குத் தயாராக உள்ள நிலையில், அடுத்ததாக அவர் நடிக்க உள்ள திரைப்படம் சூர்யா 43. இந்தப் படத்தில் இரண்டாம் முறையாக தனது ஆஸ்தான இயக்குநர் சுதா கொங்கராவுடன் சூர்யா கைகோர்க்கிறார்.
பாலிவுட்டில் சூர்யாஇந்நிலையில், நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாள்களாக இணையத்தில் பரவி வருகின்றன. அதன்படி சூர்யாவின் 44ஆவது திரைப்படத்தினை இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்குவதாக சென்ற ஆண்டே தகவல் வெளியானது. ரத்த சரித்திரம் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் சூர்யா நேரடியாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைப்பதாகவும், நடிகை தமன்னாவின் காதலரும் பிரபல பாலிவுட் நடிகருமான விஜய் வர்மா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும் இப்படத்துக்கு கர்ணா எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தினை பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கர்ணா திரைப்படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா ஜோடியாகும் ஜான்வி!அதன்படி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷனுமான நடிகை ஜான்வி கபூர் தற்போது கர்ணா படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தன் அம்மாவைப் போல் ஜான்வியும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து சக்கைபோடு போடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இந்தி படத்தில் ஜான்வி சூர்யாவுக்கு ஜோடியாக உள்ளதாக வந்துள்ள தகவல் ரசிகர்களை சற்று அதிருப்திக்குள்ளாக்கியே உள்ளது.
எனினும் சூர்யாவின் 44ஆவது படமான கர்ணா இந்தியில் மட்டுமே உருவாகப் போகிறதா, அல்லது பான் இந்திய படமாக உருவாக உள்ளதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படப் பணிகள் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்தியாவைக் குறிவைக்கும் ஸ்ரீதேவி மகள்!
இத்தகவலை தயாரிப்பாளரும் ஜான்வியின் தந்தையுமான போனி கபூர் தன் சமீபத்திய நேர்க்காணலில் பகிர்ந்துள்ளார். மேலும் ஜான்வி, அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் பட நடிகர் ராம் சரணுடனும் நடிக்க உள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.பாலிவுட் சினிமா தாண்டி தன் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் இணையதள சென்சேஷனாக கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மனதைக் கொள்ளை அடித்து வருகிறார் ஜான்வி. தற்போது ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக தான் நடித்து வரும் தேவாரா திரைப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில், ஜான்வி தன் அம்மா ஸ்ரீதேவியைப் போலவே பல மொழிகளில் நிச்சயம் நடிப்பார் என்றும், படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளையும் ரசித்து ஜான்வி நடித்து வருகிறார் என்றும் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
போனி கபூர் பகிர்ந்துள்ள இத்தகவலால் சூர்யா மற்றும் ஜான்வி கபூர் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேலும் காண

Vijay TVK: ஜெயலலிதாவையே மிஞ்சும் விஜய்! பக்கா ப்ளான் ரெடி! தளபதிக்காக தயாரான த.வெ.க நிர்வாகிகள்!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

நிர்வாகிகளுக்கு விஜய் போட்டுக்கொடுத்த பக்கா ஸ்கெட்ச்

இந்தக் கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்களின் ஆலோசனையின்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. நம் தலைவர் அவர்களின் ஆணைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும்.

நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்.

"புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்”

தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள. புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ரீதியாகவும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள். தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின் நகலை முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்.

"2 கோடி பேர் டார்கெட்”

மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள். தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். பூத் கமிட்டி அமைத்து, பூத் வாரியாக வாக்காளர்களில் கட்சி சார்புள்ளவர்கள் யார்? யார்? எந்தக் கட்சியையும் சாராதவர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நமது கழகத் தலைவர் உத்தரவின் பேரில், மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அறிவித்து, தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நமது இலக்கு குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அதனை மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Ranji Trophy: ரஞ்சி கிரிக்கெட்டில் புதிய வரலாறு! அதிகபட்ச இலக்கை சேஸிங் செய்து ரயில்வே புது சாதனை!

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அகர்தலாவில் நடைபெற்ற போட்டியில் திரிபுரா – ரயில்வே அணிகள் நேருக்கு நேர் மோதின.

திரிபுரா – ரயில்வே:

இந்த போட்டியில் திரிபுரா முதல் இன்னிங்சில் 52.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஸ்ரீதர் பால் மட்டும் அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். 3 வீரர்கள் தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ரயில்வே அணியினர் திரிபுரா பந்துவீச்சில் தடுமாறினர். அந்த அணியின் கோஷ் மட்டும் தனி ஆளாக போராடினார். தொடக்க வீரர் பிரதம் சிங், கோஷ் மட்டுமே அந்த அணியில் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். கோஷ் தனி ஆளாக அணியை மீட்க போராடினாலும் அவருக்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால், 37.3 ஓவர்களில் 105 ரன்களுக்கு ரயில்வே அணி ஆல் அவுட்டாகியது.

378 ரன்கள் இலக்கு:

இதையடுத்து, திரிபுரா அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்கள் பிக்ரம்குமார், பபுல் தேவ், சீரிதம் பால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அந்த அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து சுதிப் – சதீஷ் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிறப்பாக ஆடிய சதீஷ் 62 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சுதீப் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 95 ரன்களுக்கு அவுட்டானார். கடைசியில் அபிஜித் 48 ரன்களும், ராணா 47 ரன்களும் எடுக்க திரிபுரா 333 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 378 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ரயில்வே அணி களமிறங்கியது.

பிரதம் சிங் – முகமது சைஃப்:

அந்த அணியின் தொடக்க வீரர் சுராஜ் 7 ரன்களுக்கும், யுவராஜ் சிங் 2 ரன்களுக்கும், சகாப் 5 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டானர். 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தத்தளித்துக் கொண்டிருந்தது. பிரதம் சிங் – முகமது சைஃப் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினர். சிறப்பாக ஆடிய பிரதம் சிங் சதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து முகமது சைஃப்பும் சதம் விளாசினார். முகமது சைஃப் 126 ரன்களுக்கு 14 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பிரதம் சிங் தொடர்ந்து சிறப்பாக ஆடினார். அவர் பவுண்டரிகளாகவும், ஓரிரு ரன்களாகவும் எடுத்து இலக்கை நோக்கி அணியை முன்னேற வைத்தார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த கோஷ் 126 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த கேப்டன் உபேந்திரா – பிரதம் சிங் தொடர்ந்து சிறப்பாக ஆடி அணியை இலக்கை நோக்கி முன்னேற வைத்தது. 103 ஓவர்களின் முடிவில் ரயில்வே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றிலே சேஸ் செய்யப்பட்ட அதிக ரன்கள் இதுவே ஆகும். இதற்கு முன்பாக கடந்த 2019ம் ஆண்டு உத்தரபிரதேசம் அணிக்கு எதிராக சவுராஷ்ட்ரா 372 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச சேஸிங்காக இருந்தது. ரயில்வே, சவுராஷ்ட்ரா அணிக்கு அடுத்தபடியாக அசாம் அணி 371 ரன்களையும், ராஜஸ்தான் அணி 360 ரன்களையும், உத்தரபிரதேசம் 350 ரன்களையும் சேஸ் செய்ததே அதிகபட்சம் ஆகும்.

Vanathi Srinivasan alleged that the increase in debt of Rs 8.33 lakh crore was the dmk government’s achievement in Tamil Nadu Budget 2024 | ‘ரூ.8.33 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு தான் திமுக அரசின் சாதனை’
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ. 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடியே 80 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்தையும் தாண்டி 26.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடனுக்கு வட்டியாக மட்டும் ரூ. 63 ஆயிரத்து 722 கோடியே 24 லட்சம் செலுத்த வேண்டும். நடப்பு 2024-25-ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 584 கோடியே 48 லட்சம் கடன் வாங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ. 49 ஆயிரத்து 278 கோடியே 73 லட்சமாக அதிகரித்துள்ளது.
நிதிநிலை அறிக்கையில் உள்ள இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஊழல், குடும்ப ஆட்சியே இதற்கு காரணம். தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் இருந்தே கிடைக்கிறது. ஆனால், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த எந்த உத்தரவாதமான அறிவிப்பும் இல்லை. ஏழை, நடுத்தர மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள். அதை தங்களின் சாதனையாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளிமாநில, வெளிநாட்டு பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழுவை திமுக அரசு அமைத்தது. ஆனாலும், தமிழ்நாடு பொருளாதாரத்தில், நிதி மேலாண்மையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, பொருளாதார நிபுணர் குழுவுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது, அவர்கள் என்ன ஆலோசனை வழங்கினார்கள், அவை செயல்படுத்தப்பட்டதா, அதன் தாக்கம் என்ன என்பது குறித்து நிதியமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். மொத்தத்தில் திமுக அரசின் இந்த நிதிநிதி அறிக்கை வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, மக்களை ஏமாற்றும் சில அறிவிப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு மக்களின் நலன். தொலைநோக்கு எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.மேலும் காண

CM Stalin: | CM Stalin: “கனவு மட்டுமல்ல நனவாகப் போகும் கனவு” தமிழ்நாடு பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், தாக்கலான பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
“சமூக நீதியை அடிப்படையாக கொண்டு பட்ஜெட்”
அதில், “தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. இதனை எடுத்துச் சொல்லும் அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். பொதுவாக நிதிநிலை அறிக்கைகள் நிதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும். இது நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
அதுவும் சமூகநீதியை மையமாகக் கொண்டு தயாரான இந்த அறிக்கை, அனைத்து மக்களுக்குமான சமநீதியையும் – சமநிதியையும் வழங்கித் தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேகப் பயணத்தை உறுதி செய்துள்ளது. ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசானது எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டின் அரசு நிர்வாக வடிவமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் செயல்பாட்டின் பயனை நாம் அனைவரும் உடனடியாகவும், நேரடியாகவும் கண்டு வருகிறோம்.
இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருவதாகத் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19 விழுக்காடாக இருக்கிறது. மாநிலத்தின் பணவீக்கமானது 5.97 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம்.புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இப்படி அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.
“கடைக்கோடி மனிதரையும் மேம்படுத்தும் பட்ஜெட்”
இது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உயர்த்தி வருகிறது. அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதே திராவிட மாடல் வளர்ச்சியின் இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த வளர்ச்சியின் அடுத்தகட்ட உயர்வை அடையாளம் காட்டுவதாக தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அமைந்திருப்பதை உணர்ந்து மகிழ்கிறேன்.
நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டின் பெருங்கனவுகளை மாபெரும் இலக்காகக் கொண்டுள்ளது. சமூகநீதி – கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு – உலகை வெல்லும் இளைய தமிழகம் – அறிவுசார் பொருளாதாரம் – சமத்துவ நோக்கில் மகளிர் நலம்- பசுமைவழிப் பயணம் – தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
கடைக்கோடி மனிதரையும் மேம்படுத்தி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உச்சிக்குக் கொண்டு போய் உட்கார வைப்பதாக இதன் ஒவ்வொரு அறிவிப்பும் அமைந்துள்ளன. நமது கையில் இருக்கும் வளத்தை, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படுத்துவதாக இந்த அறிக்கையை வடிவமைத்துள்ளோம்.
“கனவு மட்டுமல்ல நனவாகப் போகும் கனவு”
ஏழு பெரும் கனவுகளையும் முழுமையாக நிறைவேற்றும்போது தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக, தலைசிறந்த மாநிலமாகத் திகழும் காலம் விரைந்து ஏற்படும். தலைசிறந்த – தொலைநோக்குப் பார்வை கொண்ட – கனிவான – பொருளாதாரச் சமநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டுகிறேன்.
திராவிட மாடல் அரசுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும் மாபெரும் கடமையை மிகச் சரியாக ஆற்றி இருக்கிறார் அமைச்சர். நிதித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
திராவிட மாடல் ஆட்சி உருவானபோது, “இந்த ஆட்சியானது ஒரு விவசாயிக்கு மழையாகவும், ஒரு ஏழைக்கு ஒரு கவளம் சோறாகவும், ஒரு ஊழியருக்கு மாதத்தின் முதல் நாளாகவும், ஒரு தொழிலதிபருக்கு வளர்ச்சியின் குறியீடாகவும் செயல்படும்” என்று நான் குறிப்பிட்டேன். அப்படித்தான் கழக அரசு செயல்பட்டு வருகிறது.
இனியும் அப்படித்தான் செயல்படும் என்பதை நாட்டுக்குச் சொல்லும் அறிக்கைதான் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை. இவை நமது அரசின் கனவுகள் மட்டுமல்ல, நனவாகப் போகும் கனவுகள். நாளை முதல் அனைத்தும் நனவாகும். துறைசார்ந்த அமைச்சர்களும், துறையின் செயலாளர்களும் இந்தத் திட்டங்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டனவோ அதனை மனதில் வைத்துச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் காண

Minister Thangam thennarasu, who presented the budget for the financial year 2024-25 profile
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவே ஆகும். இதற்கு முன் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு நிதியமைச்சராக இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டது. மேலும், டி.ஆர்.பி ராஜாவுக்கு தொழில் துறையும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிற்கும் ஒதுக்கப்பட்டது.
மின் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு மின் துறையும் கூடுதலாக நிதி துறையும் ஒதுக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு, 2006 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தொகுதியில் வெற்றிப் பெற்று திமுக சார்பாக தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு திருச்சுழி தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு தேர்தெடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டுன் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டு தங்கம் தென்னரசு வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து தற்போது அவர் நிதியமைச்சராக இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று அவர் முதல் முறையாக நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
தனது முதல் பட்ஜெட் உரையை ’காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல், மீக்கூறும் மன்னன் நிலம்’ என்ற திருக்குறளை கூறி தொடங்கினார். இந்த திருக்குறளுக்கு குடிமக்கள் எளிதில் அணுகக் கூடியவராகவும் கடுமையான சொற்களை கூறாமல் ஆட்சி புரிந்து வரும் அரசனை உலகமே போற்றும் என்றும் அதேபோல் கடைகோடி மக்களும் எளிதில் அணுகக் கூடியவராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளது தமிழ்நாட்டுக்கு பெருமை என்றும் அவர் முதல்வருக்கு புகழாரம் சூட்டினார்.
அதனை தொடர்ந்து, நிதி ஒதுக்கீடு தொடர்பாக உரையை மேற்கொண்டார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கல் மதியம் 12.08 மணிக்கு நிறைவுபெற்றது. சுமார் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது சற்று தடுமாறிய அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, சபாநாயகர் அப்பாவு அவர் எந்த பக்கத்தில் உரையை நிறுத்தினார் என்பதை கூறி, மீண்டும் உரையை தொடங்க உதவினார். 2 மணி நேர பட்ஜெட்டில் பலரும் வரவேற்கக்கூடிய நிறைய பயனுள்ள திட்டங்களை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த பட்ஜெட்டில் மாநில பொருளாதார வளர்ச்சி, வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை மூலம் 2024-25 நிதியாண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 14.73 சதவிகித வளர்ச்சியுடன் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 173 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வணிக வரி மூலம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 381 கோடி ரூபாய், முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் மூலம் 23 ஆயிரத்து 370 கோடி ரூபாய், மாநில ஆயத்தீர்வுகள் மூலம் 12 ஆயிரத்து 247 கோடி ரூபாய், வாகனங்களின் மீதான வரிகள் மூலம் 11 ஆயிரத்து 520 கோடி ரூபாயும் கிடைக்கப் பெறும். மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயாக 30 ஆயிரத்து 728 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் முற்றிலும் நின்று விடும். ஒன்றிய அரசின் வரிகளில் மாநில அரசின் பங்கு 49 ஆயிரத்து 750 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் காண

deepika padukone fans react after a woman says she does not know her
தீபிகா படுகோன்
பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone). பேட்மிட்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளான தீபிகா, முதலில் ஒரு பேட்மிட்டன் வீராங்கனையாக இருந்தவர். மாடலிங் மீதிருந்த ஆர்வத்தால் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் செய்து வந்தார்.
அதன் மூலம் 2006ஆம் ஆண்டு அவருக்கு ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு பாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு, இன்று உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக கொண்டாடப்பட்டு வருகிறார்.
‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் தீபிகா படுகோன். முதல் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக இணைந்த தீபிகா படுகோனுக்கு அப்படம் நல்ல ஓர் வரவேற்பை பெற்றுத் தந்தது. இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை தட்டிச்சென்றார். ஷாருக்கான் – தீபிகா படுகோன் ஜோடி இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர், பதான், ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்கள் காம்போ பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் என்றே சொல்ல வேண்டும். மேலும் ரன்பீர் கபூருடன் தமாஷா, ஏ ஜவானி ஹே தீவானி, காக்டெயில், பிகு , உள்ளிட்டப் படங்களில் தனித்துவமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தீபிகாவை அடையாளம் தெரியாத பெண்
லண்டனில் உள்ள சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் நடைபெற்ற 77வது BAFTA விருது வழங்கும் விழாவில் நடிகை தீபிகா படுகோன் இன்று கலந்துகொண்டார். இந்த விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் கடந்த ஜனவரி 18ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பிரபல ஹாலிவுட் நடிகர்களுடனும் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வரைலாகின. இந்தப் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட வெளி நாட்டுப் பெண் ஒருவர் ”இந்த பெண் யார் என்று தெரியவில்லை, ஆனால் அவள் அணிந்திருக்கும் உடை சிறப்பாக இருக்கிறது “ என்று பதிவிட்டுள்ளார்.
Idk who she is but girl ate that look. istg if Dua doesn’t serve like this… pic.twitter.com/OFy58D5GYp
— stride (@strideseason) February 18, 2024இதனைப் பார்த்த தீபிகா படுகோன் ரசிகர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகி அந்தப் பெண்ணுக்கு பதில் அளித்து வருகிறார்கள். இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர் என்று ஒருவர் அந்தப் பெண்ணின் பதிவில் கமெண்ட் செய்தார். இந்தியாவின் மிகப்பெரிய பெண் சூப்பர்ஸ்டார் என்று மற்றொருவர் தீபிகாவை அடையாளப்படுத்தியுள்ளார். வெளிநாட்டுப் பெண்ணின் கேள்வியால் கடுப்பான பாலிவுட் உலகம் தற்போது தீபிகாவை ட்ரெண்ட் செய்து இணையத்தில் அவரது அருமை பெருமைகளைப் பேசி வருகிறது.
மேலும் காண

TN Weather Update: மண்டையை பிளக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..

தமிழ்நாட்டில் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதி தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் பிப்ரவரி 25 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 31.8 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 32.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Tamil Nadu latest headlines news till afternoon 19th February 2024 flash news details here | TN Headlines: நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை; சட்டப்பேரவையில் தாக்கலானது பட்ஜெட்
SV Sekar: பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு: நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை!- நீதிமன்றம் அதிரடிபெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறைத் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்க செயலாளர் அளித்த வழக்கில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
TN Budget 2024: தமிழக அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பு ரூ.3.48 லட்சம் கோடி – நிதி பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, 2023-24 நிதியாண்டில் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 92 ஆயிரத்து 75 கோடியாக மதிப்பிடப்பட்டு இருந்த நிலையில், திருத்த மதிப்பீட்டில் அது 94 ஆயிரத்து 60 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
TN Budget 2024: செம்ம.. இனி மாணவர்களுக்கும் மாதாமாதம் ரூ.1000- வெளியான அசத்தல் அறிவிப்புஅரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
Tamil Nadu Budget 2024: கலைஞர் கனவுத் திட்டத்தில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டப்படும் – பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்புஅந்த உரையை வாசித்தபோது, “ஆழி சூழ் தமிழ் நிலபரப்பிற்குள் அழையா விருந்தினர்போல் அவ்வப்போது வருகை புரிந்து இன்னல்கள் பல கொடுத்திடும் இயற்கை பேரிடர் ஒரு புறம் என்றால், கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் ஒன்றிய அரசு மறுபுறம். இவற்றுக்கிடையில் நாம் இருக்கிறோம். 2030ம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிடும் வகையில், கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் புதிய திட்டம் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மேலும் படிக்க
AIADMK Nomination: நெருங்கும் மக்களவை தேர்தல்.. 21 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்.. அதிமுக அறிவிப்பு..நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தரப்பில் 40 தொகுதிகலுக்கான விருப்ப மனு வரும் 21 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
மேலும் காண

Kilambakkam: இனி வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது.. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை..

சென்னையில் இருந்து தெற்கு நோக்கி புறப்படும் பேருந்துகள் அனைத்தும் போரூர், சூரப்பட்டு அல்லது கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “ தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவினை எதிர்த்தும் அதனடிப்படையில் போக்குவரத்து ஆணையர் கடந்த 13.02.2024 அன்று வெளியிட்ட ஒரு விரிவான பத்திரிக்கைச் செய்தியை எதிர்த்தும், கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரண்டு ஆணைகளை எதிர்த்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என அறிவிக்கப்படுகிறது.

சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி

சென்னை புறவழிச்சாலையில் சூரப்பட்டு சுங்கச்சாவடி

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்

மேற்கண்ட 3 இடங்களை தவிர தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையிலும் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் எக்காரணம் கொண்டும் மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களை தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், Red Bus, Abhi Bus உள்ளிட்ட செயலிகளிலும் பொதுமக்களை குழப்பும் வகையில் பதிவிடக்கூடாது எனவும் அவ்வாறு பதிவு செய்தால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் எச்சரிக்கப்படுகிறது.

இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

இதன்மூலம் கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரு உத்தரவுகளும், சென்னை உயர்நீதிமன்றத்தின் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவும் மற்றும் போக்குவரத்து ஆணையரால் 13.02.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதி படுத்தப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SV Sekar: பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு: நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை!- நீதிமன்றம் அதிரடி

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறைத் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்க செயலாளர் அளித்த வழக்கில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகை 15 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்திய நிலையில், மேல் முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

2018-ல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறை எஸ்.வி.சேகர் பகிர்ந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Mayilsamy: மயில்சாமி மறைந்து ஓராண்டு நிறைவு.. மறவாமல் நினைவுகளை பகிரும் ரசிகர்கள்!

நடிகர் மயில்சாமி மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவரின் நினைவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கல் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க சென்னை வந்தார். 1984 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த ‘தாவணி கனவுகள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மயில்சாமி வடிவேலு, விவேக் தொடங்கி சந்தானம் வரை அனைவருடனும் இணைந்து பிரபலமான காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.

இதேபோல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் மயில்சாமி நடித்துள்ளார். சின்னத்திரையில் “காமெடி டைம்” என மயில்சாமி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த மயில்சாமி, 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

தீவிர எம்ஜிஆர் பக்தரான அவர் கஷ்டம் என யார் வந்து கேட்டாலும் உதவி செய்வார். அதேபோல் ஆன்மீகத்திலும் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தியிருந்தார். இப்படியான நிலையில் கடந்தாண்டு சிவராத்திரி அன்று சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார். இதில் டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணியுடன் இணைந்து சிவ பாடல்கள் பாடியிருந்தார்.

#Ripmayilsamy pic.twitter.com/19Z1YdjMKR

— VaazhaVandhaan (@VaazhaV) February 22, 2023

இதன்பின்னர் அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்குச் சென்ற அவருக்கு, 3.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே 2 முறை இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் வரும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர்.

மயில்சாமி மறைவு சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில ஆழ்த்தியது. பல முன்னணி பிரபலங்கள் அனைவரும் மயில்சாமி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரின் மறைவுக்கு பின்னர் தான் மயில்சாமி பற்றிய நெகிழ்ச்சியான பல நிகழ்வுகள் வெளியுலகுக்கு தெரிய வந்தது. இன்றுடன் மயில்சாமி மறைந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இன்றும் டிவியில் அவர் நடித்த காட்சிகளை பார்த்தால் நம்மை அறியாமல் ஒரு நிமிடம் மயில்சாமி மறைவை நினைத்து வருத்தப்படாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு சொல்லாலும்,செயலாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். அவரின் நினைவுக்கு என்றுமே அழிவில்லை.

BAFTA Awards : 77வது ஃபப்டா திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த படங்களின் பட்டியல் இதோ!
BAFTA Awards : 77வது ஃபப்டா திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த படங்களின் பட்டியல் இதோ!
Tamil Thalaivas – இந்த ஆட்டம் போதுமா…தெரிக்கவிட்ட தலைவாஸ் அடங்கிபோன பெங்கால் வாரியர்ஸ்

இந்த ஆட்டம் போதுமா…தெரிக்கவிட்ட தலைவாஸ் அடங்கிபோன பெங்கால் வாரியர்ஸ்

TN Budget 2024: தமிழக அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பு ரூ.3.48 லட்சம் கோடி
Tamil Nadu Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, 2023-24 நிதியாண்டில் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 92 ஆயிரத்து 75 கோடியாக மதிப்பிடப்பட்டு இருந்த நிலையில், திருத்த மதிப்பீட்டில் அது 94 ஆயிரத்து 60 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 3.25 சதவிகிதமாக கணக்கிடப்பட்டு இருந்த நிதிப்பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில் 3.45 சதவிகிதமாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
2024-25 வரவு செலவு திட்டங்கள்:
மாநில பொருளாதார வளர்ச்சி, வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை மூலம் 2024-25 நிதியாண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 14.73 சதவிகித வளர்ச்சியுடன் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 173 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வணிக வரி மூலம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 381 கோடி ரூபாய், முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் மூலம் 23 ஆயிரத்து 370 கோடி ரூபாய், மாநில ஆயத்தீர்வுகள் மூலம் 12 ஆயிரத்து 247 கோடி ரூபாய், வாகனங்களின் மீதான வரிகள் மூலம் 11 ஆயிரத்து 520 கோடி ரூபாயும் கிடைக்கப் பெறும். மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயாக 30 ஆயிரத்து 728 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் முற்றிலும் நின்று விடும். ஒன்றிய அரசின் வரிகளில் மாநில அரசின் பங்கு 49 ஆயிரத்து 750 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த வருவாய் செலவினம் – ரூ. 3,48,289 கோடி
வருவாய் பற்றாக்குறை – ரூ.49,278.73 கோடி
ஊதியச் செலவினங்கள் – ரூ. 84,931 கோடி
சம்பளம் அல்லாத செலவினங்கள் – ரூ.15,013 கோடி
ஓய்வூதிய பலன்களுக்கான செலவுகள் – ரூ.37,663 கோடி
மானியங்கள் , உதவி மானியங்கள் வழங்குவதற்கான மதிப்பீடுகள் – ரூ.1, 46,908 கோடி
பொதுக்கடனுக்கான வட்டித்தொகை – ரூ.63,722 கோடி
இழபீட்டுத் தொகை நீங்கலாக வருவாய் பற்றாக்குறை – ரூ. 34 ஆயிரத்து 834 கோடி
மூலதனச் செலவினம் – ரூ.47, 681 கோடி
நிதிப்பற்றாக்குறை – ரூ. 1 லட்சத்து 8 ஆயிரத்து 690 கோடி
நிதிப்பற்றாக்குறை 3.44 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கடன் விவரங்கள்:
பட்ஜெட் அறிக்கையின்படி, ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2024-25 ஆம் ஆண்டில் மாநில அரசு 1,55,584.48 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 49,638.82 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக்கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2025 அன்று நிலுவையில் உள்ள கடன் 8,33,361.80 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2024-25 ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இது 26.41 சதவீதம் ஆகும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் விகிதம் 2025-26 ஆம் ஆண்டில் 25.75 சதவீதமாகவும், 2026-27 ஆம் ஆண்டில் 25 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காண

actor vijay tamizhaga vetri kazhagam meeting held at panaiyur oath taken by party cadres
இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டத்தில் தங்கள் கட்சி நிர்வாகிகளை தோழர்கள் என அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Vijay) . ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார். விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது. அதே சமயம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 ஆம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி அமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு. சமஉரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உறுதி மொழியினை அனைவரும் ஏற்றனர்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அவரது கட்சி பெயரில் பிழை இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டது. கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, விஜய் அதில் திருத்தம் செய்துள்ளார். அதாவது தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில், வெற்றி கழகத்திற்கு இடையே ஒற்றெழுத்தான “க்” சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.மேலும் காண

Farmers Protest: குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக மத்திய அரசு தந்த வாக்குறுதி
Farmers Protest: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு வாரமாக மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை முற்றுகையிடும் நோக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியான எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ளனர். போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சேர்ந்து, விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைவதை தொடர்ந்து தடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதலில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த சிலர் படுகாயமடைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் தான், விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசு இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
மத்திய அரசு சொன்ன ஆலோசனை:
சண்டிகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையில் (MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வாங்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோருடன் விவசாயிகளை சந்தித்த அவர், உத்தேச கொள்முதலுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகளுடன் அரசு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் என்றும் கொள்முதல் அளவுக்கு வரம்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாய சங்கங்கள் ஆலோசனை:
இந்நிலையில், தங்களது இதர கோரிக்கைகள் மீதான முடிவு நிலுவையில் உள்ளதால், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான, மத்திய அரசின் பரிந்துரை தொடர்பாக தாங்கள் கலந்தாலோசிக்க இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்மதம் தெரிவித்தால், என்.சி.சி.எஃப் (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) மற்றும் NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) போன்ற கூட்டுறவு சங்கங்கள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளுடன் குறைந்தபட்ச ஆதார விலையில் பயிரை வாங்க ஒப்பந்தம் செய்யும். இது, பயிர்களின் விலையில் கடுமையான வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்கும். இது ஒரு பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்புகளைத் தடுக்கிறது.
அதேநேரம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் போராட்டத்தின் போது அவர்கள் மீது போடப்பட்ட போலீஸ் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற மற்ற கோரிக்கைகளை தீர்க்காவிட்டால், 21ம் தேதி முதல் மீண்டும் டெல்லி நோக்கி செல்லும் போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும் காண

Varun Dhawan : அப்பாவாக போகிறேன்.. பாலிவுட் நடிகர் வருண் தவான் நெகிழ்ச்சி!
Varun Dhawan : அப்பாவாக போகிறேன்.. பாலிவுட் நடிகர் வருண் தவான் நெகிழ்ச்சி!
Tamil Nadu Budget 2024: கலைஞர் கனவுத் திட்டத்தில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டப்படும்
Tamil Nadu Budget 2024: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, “ஆழி சூழ் தமிழ் நிலபரப்பிற்குள் அழையா விருந்தினர்போல் அவ்வப்போது வருகை புரிந்து இன்னல்கள் பல கொடுத்திடும் இயற்கை பேரிடர் ஒரு புறம் என்றால், கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் ஒன்றிய அரசு மறுபுறம். இவற்றுக்கிடையில் நாம் இருக்கிறோம். 2030ம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிடும் வகையில், கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் புதிய திட்டம் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசின் உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் குடிசைகளில் வாழும் ஏழைகளுக்கு அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 லட்சம் கான்க்ரிட் விடுகள் கட்டித் தரப்படும். அடுத்த ஓராண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். ஒவ்வொரு வீடும் 3.5 லட்சம் ரூபாய் செலவில் கட்டித் தரப்படும் என” அமைச்சர் தங்க தென்னரசு தெரிவித்துள்ளார்.மேலும் காண

Tamil Nadu Budget 2024: விளையாட்டு வீரர்கள் குஷி – ஒலிம்பிக் , கடல்சார், பாரா தடகள விளையாட்டு மையங்கள்
Tamil Nadu Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, விளையாட்டுத் துறைக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சர்வதேச தரத்திலான வீரர்களை தமிழகத்தில் இருந்து உருவாக்கும் நோக்கில், சென்னை உள்ளிட்ட 6 பகுதிகளில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு பயிற்சி மையங்கள்:
பட்ஜெட் அறிக்கையின்படி, விளையாட்டுப் போட்டிகளின் தலைமையகமாக தமிழ்நாட்டை மாற்றிடவும் இலட்சிய வேட்கையுடன் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்கிட, சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நான்கு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இப்பயிற்சி மையங்கள் இறகுப்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உலகத்தரமிக்க பயிற்சிகளை வழங்குவதுடன் விளையாட்டு அறிவியலுக்கான மையங்களாகவும் செயல்படும்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆற்றலையும் அறிவுத்திறனையும் ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் மெருகேற்றி, தரணி போற்றிடும் சாதனையாளர்களாக உருவாக்கிட முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடெங்கும் நடத்தப்படும். இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பேச்சு, பாட்டு, இசை, நடனம் என பன்முகப் போட்டிகள் நடத்தப்படும். மேலும், கிரிக்கெட், கையுந்து பந்து, கால்பந்து, இறகுப்பந்து, சிலம்பம் என 33 விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிக்கான கருவிகள் அடங்கிய கலைஞர் விளையாட்டு தொகுப்புகள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வழங்கப்படும்.
பாரா தடகள மையங்கள்:
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமிழ்நாடு அரசின் தாரக மந்திரம். இம்முயற்சிகளின் ஓர் பகுதியாக மாற்றுத்திறன் படைத்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் (Para Athletes) திறமைகளை மேம்படுத்திட, நாட்டிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான 6 விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறனை வளர்க்கும் நோக்கோடு அவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற சிறப்பு இறகுப்பந்து, கையுந்து பந்து, வாள்வீச்சு உள்ளிட்ட அமைக்கப்பட்டு வருகின்றன.
கடல்சார் நீர் விளையாட்டு:
கடல்சார் நீர் விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வத்தை ஈர்த்திடவும் நீர் விளையாட்டுப் போட்டிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்திடவும் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாதமி (Tamil Nadu Olympic Water Sports Academy) இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரப்பன்வலசையில் அமைக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 440 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் காண

Tamil Nadu Budget 2024 Tamil Pudhalvan 1000 Rs Every Month To All Boy Students Tamilnadu Minister Thangam Thenarasu
Tamil Nadu Budget 2024: அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும் ’தமிழ் புதல்வன்’ என்ற மாபெரும் திட்டம் தொடங்கப்படும்.
தமிழ் புதல்வன்(Tamil Pudhalvan) திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பாட புத்தகம், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். ரூ. 360 கோடியில் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும்’’.
இவ்வாறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ALSO READ | Tamil Nadu Budget 2024-2025 LIVE: தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க ‘தாயுமானவர்’ திட்டம் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்புமேலும் காண

top news India today abp nadu morning top India news February 19th 2024 know full details
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மாநில நிதியமைச்சரான தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20ம் தேதி) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 21ம் தேதி சட்டப்பேரவை துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் ஆகிய இரண்டு குறித்த விவாதங்கள், வரும் 22ம் தேதியன்று காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளிலும் நடைபெறும். மேலும் படிக்க..
சண்டிகர் மேயர் ராஜினாமா – ஆம் ஆத்மியின் 3 கவுன்சிலர்களை தூக்கிய பாஜகசண்டிகர் மேயர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனால், மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..
சஸ்பென்ஸ்க்கு முடிவு கட்டிய கமல்நாத்! கடைசியில் நடந்த ட்விஸ்ட் – கட்சி தாவுகிறாரா? இல்லையா?எதிர்க்கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு தாவுவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர். சமீபத்தில் கூட, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். அந்த வரிசையில், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் படிக்க..
“அடுத்த 100 நாள் ரொம்ப முக்கியம்” பா.ஜ.க. கூட்டத்தில் ஸ்கெட்ச் போட்ட பிரதமர் மோடி!கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் படிக்க..
மேலும் காண

D50 First Look: தனுஷ் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. நேரம் குறித்த சன் பிக்சர்ஸ் – எப்போ தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Finally, it’s D day🔥 @dhanushkraja’s #D50FirstLook Today 6 PM ! #D50 pic.twitter.com/5DdNI6euAQ

— Sun Pictures (@sunpictures) February 19, 2024

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதனாலேயே காலை முதல் சமூக வலைத்தளங்களில் #D50FirstLook என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Tamil Nadu Budget 2024: வடசென்னைக்கு அடித்த லக்
Tamil Nadu Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, வடசென்னை வளர்ச்சிக்கு என 1000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார். இதன் மூலம், புதிய குடியிருப்புகள் கட்டித் தருவது, பள்ளிகளை திறன் மிகுந்தவையாக மேம்படுத்துவது, தொழிற்பயிற்சி மையங்களை அமைப்பது, ஏரிகள் சீரமைப்பு மற்றும் மருத்துவமனைகள் போன்றவை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடையாறு நதி சீரமைப்பிற்காக ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், பூந்தமல்லியில் 500 கோடி ரூபாய் செலவில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும், சென்னை தீவுத்திடல் மேம்படுத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகளும் தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்துவதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலைகளை 18 மீட்டராகவும், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை 30.5 மீட்டராகவும் வளர்ச்சி உரிமைப் பரிமாற்ற (TDR) முறையில் அகலப்படுத்தும் திட்டம். சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
சிங்காரச் சென்னையை உருவாக்கும் நோக்கோடு சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்புரப் பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் போன்ற நவீன சமூகக் கட்டமைப்பு வசதிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 104 கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சென்னை கடற்கரையோரப் பகுதிகளை அழகுற சீரமைத்து மேம்படுத்திடும் நோக்கோடு கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைப் பகுதிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வசதிகளுடன் மெருகூட்டி அழகுபடுத்தப்படும்.
மேலும் காண

Tamil Nadu Budget 2024 FM Thangam Thennarasu Budget Announcement on Tamil Language Tribals
அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே அதிக நிதியை ஒதுக்குவது தமிழகம்தான் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் பேசி வருவதாவது:
’’சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு செய்யப்படும்.
பழங்குடி மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களை பாதுகாக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்க ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.’’
இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.மேலும் காண

நெருங்கும் மக்களவை தேர்தல்.. 21 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்.. அதிமுக அறிவிப்பு..
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தரப்பில் 40 தொகுதிகலுக்கான விருப்ப மனு வரும் 21 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தனி தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ரூ. 15,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் பொது தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ரூ. 20,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், “ நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 – 1.3.2024 வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமியுடைய அறிவிப்பிற்கிணங்க, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் கீழே நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காண

Tripura: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்.. வாக்குமூலம் கொடுக்க வந்த இடத்தில் நீதிபதியால் நேர்ந்த கொடூரம்..

திரிபுராவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை நீதிபதி ஒருவரே பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட அமர்வு நீதிபதி கௌதம் சர்க்கார் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.

என்ன நடந்தது..?

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற அறையில் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஒருவரால் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். கடந்த பிப்ரவரி 13ம் தேதி 26 வயது இளைஞர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் வந்துள்ளார். அப்போது, நீதிபதியின் அறைக்குள் நுழைந்த நீதிபதி, பாதுகாவலரை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு கதவை உள்ளே இருந்து பூட்டினார்.

நீதிபதி அந்த பெண்ணிடம் சம்பவத்தை விவரமாக கூறுமாறு தெரிவிக்க, அப்போது இளம் பெண் விவரிக்க தொடங்கியுள்ளார். அப்போது, நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நீதிபதி, அந்த பெண்ணை திடீரென எழுந்து நிற்க சொல்லியுள்ளார். அந்த இளம்பெண் எழுந்து நின்றபோது, நீதிபதி அவரை பிடித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு, வீடு திரும்பிய இளம்பெண் தனது கணவரிடம் முழு விஷயத்தையும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியின் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக எழுதி அந்த புகாரை வழக்கறிஞர் சங்கத்தில் சமர்ப்பித்தார். அதேநேரம், இந்த சம்பவத்தில் நீதிபதி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விசாரணை:

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், “ நான் ஒரு கூலித் தொழிலாளி. ஒரு நீதிபதியே எங்களை இப்படி தவறாக நடத்தினால், மக்கள் எப்படி நீதியை பெற முடியும்? இது மிகவும் கொடுமை” என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி கவுதம் சர்க்கார் மற்றும் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்யஜித் தாஸ் ஆகியோர் உடனடியாக கமால்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவும் கமால்பூர் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்களை நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தது. அந்தக் குழு அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகள் மீதான நிலைப்பாட்டை கேட்டது. பார் அசோசியேஷன் செயலாளர் ஷிவேந்திர தாஸ்குப்தா கூறுகையில்,” நாங்கள் எங்கள் கருத்தை புள்ளி வாரியாக குழு முன் முன்வைத்துள்ளோம்.” என தெரிவித்தார்.

நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து திரிபுரா உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் வி பாண்டே கூறுகையில், ”இந்த விவகாரம் தொடர்பாக எங்களுக்கு அதிகாரப்பூர்வ புகார் எதுவும் இதுவரை வரவில்லை. மற்ற மாநில மக்களைப் போலவே நானும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் இருந்து இதைப் பற்றி அறிந்தேன். முறையான வடிவத்தில் புகார் கிடைத்தவுடன், நாங்கள் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்தார்.

Papua New Guinea: பழங்குடியினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல்
Papua New Guinea tribal clashes: பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 64 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எங்க மாகாணத்தின் வபெனமண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் இந்த மோதல் தொடங்கியதாக கூறப்படுகிறது. AK47 மற்றும் M4 துப்பாக்கிகள் போன்ற உயர் திறன் கொண்ட துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த மோதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வபாக் நகருக்கு அருகில் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிக்கின் மற்றும் கெய்கின் பழங்குடியினருக்கு இடையிலான நீண்டகால பகைமை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பன்னெடுங்காலமாக இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு வந்தாலும், தானியங்கி ஆயுதங்களின் வருகை மோதல்களை மிகவும் கொடியதாக்கியதோடு வன்முறையை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு எங்க மாகாணத்தில் 60 பேரைக் கொன்ற மோதல்களுக்கும், இந்த பழங்குடியினரே காரணம் என ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் தெரிவித்துள்ளது.
ராணுவம் குவிப்பு:
மோதல் தொடர்பான தகவலறிந்து சம்பவ இடத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களே அந்த இடத்தை அடைந்து இருப்பதால், அவர்களால் இன்னும் சூழல கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என கூறபடுகிறது. இதனால், அங்கு கூடுதல் படையை குவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். நிலம் மற்றும் அங்குள்ள வளங்களை பகிர்ந்துகொள்வது ஆகியவற்றில் தான், இருதரப்பினரிடையே பெரும்பாலும் மோதல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மோதலால் எங்காவில் மூன்று மாத லாக்டவுன் போடப்பட்டது. அந்த சமயம் அங்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டன.மேலும் காண

World Test Championship 2023-25: இங்கிலாந்துக்கு எதிராக அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முந்தி சென்ற இந்திய அணி..!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி 7 போட்டிகளில் 50 புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும், இந்திய அணியின் புள்ளிகள் சதவீதம் 59.52ஐ எட்டியுள்ளது. இதையடுத்து, 55 சதவீத புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி தற்போது புள்ளிப்பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து முதலிடம்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. நியூசிலாந்து அணியின் புள்ளிகள் சதவீதம் 75.00. இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. ஆஸ்திரேலியா 2023-25 சீசனில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆறில் வெற்றி பெற்று, மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. அதேபோல், இந்திய அணி 7 டெஸ்டில் விளையாடி நான்கில் வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டெஸ்ட் டிராவுடன் 2வது இடத்தில் உள்ளது இந்திய அணி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 புள்ளிகள் அட்டவணை

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டிரா

புள்ளிகள்

புள்ளிகள் சதவீதம்

1

நியூசிலாந்து

4

3

1

0

36

75.00

2

இந்தியா

7

4

2

1

50

59.52

3

ஆஸ்திரேலியா

10

6

3

1

66

55.00

4

வங்கதேசம்

2

1

1

0

12

50.00

5

பாகிஸ்தான்

5

2

3

0

22

36.66

6

வெஸ்ட் இண்டீஸ்

4

1

2

1

16

33.33

7

இங்கிலாந்து

7

3

3

1

21

25.00

8

தென்னாப்பிரிக்கா

4

1

3

0

12

25.00

9

இலங்கை

2

0

2

0

0

0.00

போட்டியில் என்ன நடந்தது..?

ராஜ்கோட்டில் நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. அதேநேரம் இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 319 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 122 ரன்களுக்குள் சுருண்டது. மார்க் வுட்டைத் தவிர, இங்கிலாந்தின் எந்த பேட்ஸ்மேனும் 20 ரன்களைத் தொட முடியவில்லை. அதிகபட்சமாக மார்க் வுட் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதே சமயம் இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தற்போது, ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரின் நான்காவது போட்டி ராஞ்சியில் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது.

Mettur dam’s water flow has reduced from 66 cubic feet to 54 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 66 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக குறைந்துள்ளது.நீர்மட்டம்:
அணையின் நீர் மட்டம் 65.25 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 28.75 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.42 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.80 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 488 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,122 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 52.58 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 102 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.மேலும் காண

Tamilga Vetri Kazhagam’s advisory meeting is going to be held today at the headquarters secretariat office in Panayur actor vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் இன்று பனையூரில் இருக்கும் தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Vijay) . ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார். விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது. அதே சமயம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 ஆம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அவரது கட்சி பெயரில் பிழை இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டது. கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, விஜய் அதில் திருத்தம் செய்துள்ளார். அதாவது தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில், வெற்றி கழகத்திற்கு இடையே ஒற்றெழுத்தான “க்” சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் சின்னம் மற்றும் கொடி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி அமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் தலைமை கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜயின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒருபக்கம் அவரை அரசியல் தலைவராக பார்க்கும் ஆசை இருந்தாலும் இனிமேல் அவரை நடிகராக திரையில் பார்க்க முடியாத வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. தங்களது சிறு வயது முதல் பார்த்து வளர்ந்த ஒரு நடிகரை இனிமேல் மீண்டும் திரையில் பார்க்க முடியாதது அவர்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில் விஜயின் 69-வது படமே அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.மேலும் காண

As the price of garlic continues to rise, farmers are monitoring their farmland with CCTV cameras to prevent theft
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி மொத்த வியாரிகள் விற்பனைக்காக காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இருந்து பல ரக காய்கறிகள் வரும். கோயம்பேடு சந்தையிலிருந்து சிறு மொத்த வியாபாரிகள் தேவையாக காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் சில்லறை வியாபாரத்தில் காய்கறிகளின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை அதிகமாக தான் விற்பனை செய்யப்படும்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டின் விலை கடந்த மாதம் முதல் உச்சத்தில் உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு ரூ.500 க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பூண்டின் விலை சற்று குறைந்து கிலோ ஒன்று ரூ.430 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விளைச்சல் மற்றும் வரத்து காரணமாக பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
#WATCH | In the wake of surging prices of garlic in Madhya Pradesh’s Chhindwara, farmers have now come up with innovative measures to protect the produce by installing CCTV cameras in their fields. pic.twitter.com/CwaJbEPsh3
— ANI (@ANI) February 18, 2024அந்த வகையில், மத்திய பிரதேசத்திலும் பூண்டு ஒரு கிலோ ரூ. 400 முதல் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் பூண்டும் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என இருந்தாலும், ஒரு புறம் வருத்ததில் உள்ளனர். கடந்த ஆண்டு யாரும் எதிர்ப்பாராத வகையில், தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பல இடங்களில் தக்காளியை திருடர்கள் நூதன முறையில் திருடிய சம்பவங்கள் நடைபெற்றது.
அதேபோல் இந்த ஆண்டு பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஒரு சில இடங்களில் திருடர்கள் விவசாய நிலத்தில் இருந்து பூண்டை திருடி செல்கின்றனர். இதனை தடுக்க, சிந்த்வாரா பகுதியில் உள்ள வயல்வெளிகளில் சி.சி.டி.வி. கேமிராக்களை நிறுவி கண்காணிப்பு பணியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
#WATCH | Chhindwara: Rahul Deshmukh, a Garlic cultivator says, “I had planted garlic on 13 acres of land in which I have spent a total of Rs 25 lakh, till now I have sold the crop worth Rs 1 crore, and the crops are yet to be harvested. I have used solar power in his field and… pic.twitter.com/1MDweDa1u8
— ANI (@ANI) February 18, 2024
இதுபற்றி பூண்டு விவசாயம் செய்து வரும் ராகுல் தேஷ்முக் கூறும்போது, “13 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பூண்டு விவசாயம் செய்துள்ளோம். இதுவரை ரூ.1 கோடிக்கு பூண்டு விற்பனை செய்துள்ளேன். இந்த ஆண்டு பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. அதே சமயம் பூண்டு திருட்டை தடுக்க சோலார் வசதி கொண்டு நகரும் சிசிடிவி கேமிராக்களை பொருத்தியுள்ளேன்” என தெரிவித்துள்ளார். இதே போல அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள், விவசாய நிலத்தில் இருந்து பூண்டு திருட்டை தடுக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்தியுள்ளனர்.மேலும் காண

today movies in tv tamil February 19th television schedule Minsara kanna Thupparivalan Kaithi Bhoomi | Today Movies in TV, February 19: தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன?
Monday Movies: பிப்ரவரி 19 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி
மதியம் 3.30 மணி: சகலகலா வல்லவன்
சன் லைஃப்
காலை 11.00 மணி: ரிக்ஷா காரன் மதியம் 3.00 மணி: பார்த்தால் பசி தீரும்
கே டிவி
காலை 7.00 மணி: தாய் மேல் ஆணை காலை 10.00 மணி: என்றும் அன்புடன் மதியம் 1.00 மணி: இணைந்த கைகள் மாலை 4.00 மணி: மகேஷ் பாபு நம்பர் 1 மாலை 7.00 மணி: மின்சார கண்ணா இரவு 10.30 மணி: இங்கிலீஷ்காரன்
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: பத்மாவத் மதியம் 12.30 மணி: தக்ஸ்மாலை 3 மணி: ஜருகண்டி இரவு 9.00 மணி: தக்ஸ் இரவு 11.30 மணி: ராஜ் பகதூர்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: நெஞ்சிருக்கும் வரை இரவு 11 மணி: பெருமாள்
ஜெயா டிவி
காலை 10 மணி: பாறை மதியம் 1.30 மணி: ஒற்றன் இரவு 10.00 மணி: ஒற்றன்
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: ரெட்டை ஜடை வயசு இரவு 9.30 மணி: பயணங்கள் முடிவதில்லை
ஜீ திரை
காலை 6 மணி: அம்மணி காலை 8.30 மணி: ரஜினி முருகன் மதியம் 12 மணி: கார்த்திகேயா 2மதியம் 3.30 மணி: சமர்மாலை 6 மணி: ஜடாஇரவு 8.30 மணி: என்றென்றும் புன்னகை
முரசு டிவி
காலை 6.00 மணி: கில்லாடிமதியம் 3.00 மணி: விடுதலை மாலை 6.00 மணி: இந்தியன்இரவு 9.30 மணி: மதுரை டூ தேனி வழி: ஆண்டிப்பட்டி
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: பூமி காலை 8.30 மணி: பொன் மாணிக்கவேல் காலை 11.00 மணி: இது தாண்டா போலீஸ் மதியம் 1.30 மணி: கைதி மாலை 4.00 மணி: ஹைப்பர்மாலை 6.30 மணி: துப்பறிவாளன் மாலை 9.30 மணி: சக்கப்போடு போடு ராஜா
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: வள்ளல்காலை 10.00 மணி: ஆவாரம் பூமதியம் 1.00 மணி: கல்யாணம் கச்சேரி மாலை 4.00 மணி: ஒரு ஓடை நதியாகிறதுஇரவு 7.00 மணி: பொன்னான நேரம் இரவு 10.30 மணி: குமரிப் பெண்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: சங்கிலிஇரவு 7.30 மணி: ஆத்மிகா
மெகா டிவி
காலை 9.30 மணி: நம் நாட்டு ராஜாக்கள் மதியம் 1.30 மணி: மாலையிட்ட மங்கை இரவு 11 மணி: வெள்ளிக்கிழமை விரதம்காலை 5.30 மணி: வெங்கி மாமாகாலை 8.00 மணி: பஞ்சு மிட்டாய் காலை 11.00 மணி: ஜென்டில்மேன் சத்யாமதியம் 2.00 மணி: ராஜ தந்திரம் மாலை 4.30 மணி: செக்இரவு 7 மணி: 100 டேஸ் ஆஃப் லவ் இரவு 9 மணி: பைண்டிங் சோல்ஸ்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: சிம்லா ஸ்பெஷல் மதியம் 1.30 மணி: நீங்கள் கேட்டவை
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: சுமை தாங்கி மாலை 7.30 மணி: ஆலய தீபம்
மெகா 24 டிவி
காலை 10 மணி: புலனாய்வு துறை மதியம் 2 மணி: அக்கா தங்கை மாலை 6 மணி: எங்கள் வாத்தியார்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: கங்கா கௌரி காலை 10 மணி: கையோடு கை மதியம் 1.30 மணி: சூர்ய தேவன் மாலை 4.30 மணி: ஜப்பானில் கல்யாண ராமன் மாலை 7.30 மணி: களரிஇரவு 10.30 மணி: பொல்லாதவன்மேலும் காண

7 am headlines today 2024 19th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு:
2024-2025ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட் இன்று தாக்கல்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்: படகுகளில் கருப்பு கொடி ஏற்றம்
கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் அரசு பணிகளில் 60, 567 பேர் நியமனம் – தமிழ்நாடு அரசு விளக்கம்
பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அங்கன்வாடி வேலைகளில் முன்னுரிமை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களுடனான நெருக்கத்தை தமிழக நலனுக்கு முதல்வர் பயன்படுத்த வேண்டும் – வானதி சீனிவாசன் பேட்டி
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்.
சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம் இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
கும்பகோணம்: பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ரயிலில் அடிபட்டு 14 ஆடுகள் உயிரிழப்புஇந்தியா:
பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல, நாட்டின் நலனுக்காக 3வது முறை ஆட்சி அமைக்க பாஜக விரும்புகிறது. அடுத்த 100 நாள்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்தல்
நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் வருவார் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம் – ராகுல் காந்தி உறுதி
நாடு முழுவதும் 370 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளது.
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்புஉலகம்:
6 மாதங்கள் சிறையில் இருந்த தாய்லாந்து முன்னாள் பிரதமர் விடுதலை செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
3 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு.
ஜெர்மன் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பாலஸ்தீன அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு 354 மில்லியன் டாலர் அபராதம் – நியூயார்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்புவிளையாட்டு:
பெங்கால் வாரியஸ் அணியை 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசியன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.Published at : 19 Feb 2024 07:06 AM (IST)
மேலும் காண

Do you know the revenue and expenditure of the Tamil Nadu government for the financial year 2023-24? So much debt?
Tamilnadu Budget 2024-25: தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டிற்கான வரவு, செலவு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்:
தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மாநில நிதியமைச்சரான தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20ம் தேதி) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் வரவு, செலவு விவரங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, தமிழக அரசு வழங்கிய தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு கையேடு அடிப்படையில் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் வரவு, செலவு விவரங்கள்:
மொத்த செலவினங்கள் – ரூ. 3,65,321 கோடிமொத்த வரவினங்கள் – ரூ.2,73,246 கோடி
வருவாய் பற்றாக்குறை – ரூ. 37,540 கோடி
**பொதுக் கடன் நீங்கலாக
மாநிலத்தின் வருவாயினங்கள்
2023-24 ஆம் ஆண்டுக்கான வருவாய் வரவினங்கள் 2,70,515 கோடி ரூபாயாக அரசு மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இது 2022-23 ஆம் ஆண்டை விட (திருத்த மதிப்பீடுகள்)10.1 சதவீதம் அதிகமாகும். அரசின் சொந்த வரிகள் வாயிலாக பெறப்படும் வருவாய் 19.3 சதவீதம் உயரும் என தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தின் செலவினங்கள்
2023-24 ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவினங்கள் 3,65,321 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டது. இது 2022-23 (திருத்த மதிப்பீடுகள், ஆம் ஆண்டை விட 13.7 சதவீதம் அதிகமாகும். வருவாய்ச் செலவினங்கள் பெருமளவில், ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களுக்காக செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மூலதனச் செலவினங்கள்:
மூலதனப் பணிகளுக்கு செலவிடுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான உத்வேகத்தை அரசு அளிக்கும். 2023-24 ஆம் ஆண்டிற்கான மூலதனச் செலவு 44,366 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டது. இது 2022-23 (திருத்த மதிப்பீடுகள்) ஆம் ஆண்டை விட 15.7 சதவீதம் அதிகமாகும்.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய்:
மாநிலத்திற்கான பெரும்பான்மையான வருவாயானது அதாவது 73.3 சதவிகிதம் வணிக வரிகள் மூலம் கிடைக்கிறது. முத்திரை தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு மூலம் 14.1 சதவிகித வருவாய் ஈட்டப்படுகிறது. மாநில ஆயத்தீர்வை மூலம் 6.5 சதவிகித வருவாயையும், வாகனங்களின் மிதான வரிகள் மூலம் 4.9 சதவிகிதமும் மற்றும் ஏனைய வரிகள் மூலம் 1.2 சதவிகித வருவாயையும் தமிழ்நாடு அரசு ஈட்டி வருகிறது.
தமிழ்நாடு அரசின் கடன் சுமை:
மாநிலங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஏற்கெனவே உள்ள கடனை அடைப்பதற்காகவும், புதிய திட்டங்கள் அறிவிப்பதற்காகவும் கடன் வாங்கும். அந்த வகையில், 2023-2024 நிதியாண்டில், 1 லட்சத்து 43 ஆயிரத்து 198 கோடி ரூபாய் கடன் பெற தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. இதன் மூலம், தமிழ்நாடு அரசின் கடன் 7 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, 51 ஆயிரத்து 332 கோடி ரூபாய் கடனை தமிழ்நாடு அரசு திருப்பி செலுத்தும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் காண

Rajinikanth: நினைச்சவனெல்லாம் முதலமைச்சர்.. நடிகர் ரஜினி பேசிய இந்த வீடியோ வைரல்!

முதலமைச்சர் பதவி பற்றி நடிகர் ரஜினிகாந்த படம் ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சர் பதவி என்பது முள் கிரீடம் போன்றது. ஆனால் அந்த இடத்துக்கு போட்டி என்பது பலமுனை சார்ந்து காலம் காலமாக நடந்து வருகிறது. என்றாவது ஒருநாள் அந்த பதவியில் உட்கார்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் விடா முயற்சியாக அரசியல் கட்சி தலைவர்கள் முயன்று வருகின்றனர். அதற்கு சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய் மட்டும் விதிவிலக்கா என்ன?

விஜய்யின் அரசியல் 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கி இருந்தாலும் அவரின் வருகைக்கு ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் அரசியல்,சினிமா என இரண்டு துறையிலும் இருக்கவே செய்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Ajay AK (@ajaykrish_rk)

இப்படியான நிலையில் ரஜினியின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், “முதலமைச்சர் என்றால் அவ்வளவு சீப்பா போயிடுச்சா. நினைச்சவனெல்லாம் முதலமைச்சர். யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகிடலாமா? – எப்பேர்ப்பட்ட பதவி, எவ்வளவு பெரிய பொறுப்பு. ஒரு வேலைக்காரனை வைத்துக் கொண்டு 4 பேர் இருக்கும் குடும்பத்தை சமாளிக்கவே திண்டாடுறீங்க. நாடுங்கிறது எவ்வளவு பெரிய வீடு. எத்தனை ஆட்கள், பிரச்சினைகள். அதையெல்லாம் தீர்க்க வேண்டும் என்றால் எவ்வளவு அறிவு வேணும், அனுபவம் வேணும், தியாகம் வேணும். நேர்மை வேணும். எளிமை வேணும். ஒரு தகப்பன் நல்லா இருந்தா தான் குடும்பம் நல்லா இருக்கும். அதே மாதிரி தான் ஒரு தலைவன், சிஎம் நல்லா இருந்தா தான் இந்த நாடு நல்லாருக்கும்” என்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட இந்த வீடியோ ரஜினி நடித்த “பாபா” படத்தில் இடம்பெற்றது. 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார், ஆஷிஷ் வித்யார்த்தி, ரியாஷ் கான், சுஜாதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாபா படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ரஜினியே சொந்தமாக இப்படத்தை தயாரித்திருந்தார். ரஜினி என்றைக்கும் தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்வதை நோக்கமாக கொண்டிருந்தார் என்பதை விளக்கும் வண்ணம் இப்பட்ம எடுக்கப்பட்டிருந்தது. ரிலீசான சமயத்தில் படுதோல்வியடைந்த பாபா படம் ரி-ரிலீஸில் இன்றைய இளம் தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

tamilnadu budget 2024 finance minister Thangam Thennarasu will present the general budget for the fiscal year | Tamil Nadu Budget 2024-25: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
Tamil Nadu Budget 2024-25: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்:
தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மாநில நிதியமைச்சரான தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20ம் தேதி) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 21ம் தேதி சட்டப்பேரவை துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் ஆகிய இரண்டு குறித்த விவாதங்கள், வரும் 22ம் தேதியன்று காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளிலும் நடைபெறும். அத்துடன், நடப்பாண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைகிறது.
தேர்தல் – முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்:
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேதிகள், இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்ற அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிகபட்ச மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் ஆளும் திமுகவுக்கு இது முக்கியமான பட்ஜெட்டாக கருதப்படுகிறது. கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோதே திமுக கூட்டணி, மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38ல் வெற்றி பெற்றது. எனவே, இந்த முறையும் அந்த மகத்தான வெற்றியை வசமாக்கும் நோக்கில், பட்ஜெட்டில் வாக்காளர்களை கவரும் விதமான கவர்ச்சிகரமான திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகள்:
தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 7 பிரிவுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி,
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களையும் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக மேம்படுத்திவிடும் வகையிலும், சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும் அறிவிப்புகள் வெளியாகலாம்
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இளைஞர்களை மேம்படுத்தி விடுவதற்காக அனைத்து விதமான உதவிகள் செய்து தரப்படும்.
ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக கொண்டு செயல்படும் தமிழ்நாடு முதலீடுகளை குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாபெரும் 7 தமிழ்க் கனவுகாத்திருங்கள் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு…#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024| #TNInclusiveBudget |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @TThenarasu pic.twitter.com/hnvqc64KCj
— TN DIPR (@TNDIPRNEWS) February 18, 2024நிதிநிலை அறிக்கை – இலட்சினை வெளியீடு:
முன்னதாக, 2024-25ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கைக்காக ‘தடைகளைத் தாண்டி’ என்ற தலைப்பில் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முழங்கிடும் முத்திரை சின்னம் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பட்ஜெட்டுக்காக தமிழ்நாடு அரசு இலச்சினை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.மேலும் காண

Chandigarh Mayor Manoj Sonkar resigns Ahead Of Supreme Court Hearing; 3 AAP councillors join BJP | Chandigarh Mayor: சண்டிகர் மேயர் ராஜினாமா
Chandigarh Mayor: சண்டிகர் மேயர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு:
கடந்த 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனால், மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரியே வாக்குச் சீட்டுகளில் பேனாவை கொண்டு எதையோ கிறுக்குவதை போன்ற வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக உச்சநிதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
சண்டிகர் மேயர் ராஜினாமா..!
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கண்டித்தது. தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு இன்று (பிப்ரவரி 19) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான், மனோஜ் குமார் சோன்கர் சண்டிகர் மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேநேரம், ஆம் ஆத்மியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தது திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பான்மையை பெற்ற பாஜக:
ஆம் ஆத்மியை சேர்ந்த பூனம் தேவி, நேஹா மற்றும் குர்சரண் கலா ஆகிய 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த முடிவு குறித்து பேசிய பூனம் தேவி, ஆம் ஆத்மி கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளித்து எங்களை ஏமாற்றிவிட்டது. அது ஒரு பொய்யான கட்சி. பிரதமர் மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டு நாங்கள் பாஜகவில் இணைந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார். 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனில் பாஜக 14 கவுன்சிலர்களை கொண்டிருந்த நிலையில், தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ஒரு சிரோமணி அகாலி தள கவுன்சிலரின் ஆதரவு உள்ளது. அதோடு, பாஜகவின் சண்டிகர் எம்பி கிர்ரோன் கெருக்கும் முன்னாள் அலுவலராக வாக்களிக்கும் உரிமை உள்ளது. இதன் மூலம் பாஜகவிற்கான ஆதரவு வாக்குகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், ஆம் ஆத்மிக்கு 10 கவுன்சிலர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு 7 கவுன்சிலர்கள் என, அந்த கூட்டணிக்கு மொத்தமாக 17 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம், மறுதேர்தல் நடைபெற்றால் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் காண

Indian Spinner Ashwin Is Back On The Field For The Fourth Day Of The Third Test Against England In Rajkot
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது. அதேபோல், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை பொறுத்த வரை 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 430 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மீண்டும் களமிறங்கிய அஸ்வின்:
முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 500-வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது வீரர் மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின். இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே, அஸ்வினைச் சுற்றி அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமை சேர்க்கும் வகையிலும் நடைபெற்றுக்கொண்டு இருந்த நிலையில், ராஜ்கோட்டில் இருந்த அஸ்வினுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்தாக கூறப்பட்டது. அந்த அழைப்பில், அஸ்வினின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தது.
இதனால் அணி நிர்வாகத்திடம் இந்த தகவலைச் சொன்ன அஸ்வின் உடனே ராஜ்கோட்டில் இருந்து வெளியேறினார். அதாவது போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் அஸ்வின் ராஜ் கோட்டில் இருந்து கிளம்பினார். இந்நிலையில் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், அஸ்வின் இன்று அதாவது போட்டியின் நான்காவது நாளில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று கூறியிருந்தது. அதன்படி, அவர் இன்று மீண்டும் களமிறங்கினார்.
ரசிகர்கள் உற்சாகம்:
இச்சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்துகொண்டார். அதன்படி, தான் வீசிய முதல் ஓவரையே மெய்டன் செய்தார். இந்த போட்டியில் 6 ஓவர்கள் வீசிய அஸ்வின் 3 ஓவர்களை மெய்டன் செய்து 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதில் தன்னுடைய பங்கிற்கு ஒரு விக்கெட்டை எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 500 Test Wickets: அதிவேக 500 விக்கெட்! முரளிதரனுக்கு அடுத்து நம்ம அஸ்வின்தான் – பட்டியலை பாருங்க!
மேலும் படிக்க: IND VS ENG 3rd Test 1st Innings: ரோஹித், ஜடேஜா சதம்; சர்ஃப்ராஸ்கான் அரைசதம்; முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த இந்தியா
Cinema Headlines Today February 18th Tamil Cinema news today thalaivar 171 leo 2 sivakarthikeyan vijay vanangaan lokesh kanagaraj
விலகும் விஜய்! ஆனாலும் லியோ 2க்கு வாய்ப்பிருக்கு: எப்படி? – லோகேஷ் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என இவரது அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார். இதற்கான கதை தயாரிப்பு வேலைகளை லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் படிக்க
எழுதிகிட்டே இருக்கேன்! தலைவர் 171 குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்…
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ஜெய்பீம் இயக்குநர் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் மிகவும் மும்மரமாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அதே சமயம் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் படிக்க
வாவ்! அழைப்பிதழ் இல்ல; பட்டாசு இல்ல! பசுமை திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கில்லி’ படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான முதல் படம் ‘தடையறத் தாக்க’. அதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் படிக்க
“இந்த அளவு கடந்த அன்பு தான் என்னை உழைக்கத் தூண்டுகிறது” – சிவகார்த்திகேயன் உணர்ச்சிகரம்!
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். பிறந்தநாள் சிறப்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசரை ராஜ்கமல் ஃபிலிஸ் வெளியிட்டது. மேலும் இதே நாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கும் படமான கொட்டுக்காளியும் சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் படிக்க
வேகமாக பிக்-அப் ஆகும் ஜெயம் ரவியின் சைரன்.. 2 நாள் வசூல் இவ்வளவா!
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன்படம் நேற்று பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். மேலும் படிக்க
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், அவர் விமானத்தில் இருந்து பத்திரமாகத் திரும்பியுள்ளார். மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். ராஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
மேலும் காண

“People will make Udhayanidhi Stalin the Chief Minister” – MP, Tamilachi Thangapandian.
சேலம் மாநகர் தாதகாபட்டி பகுதியில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளி மாணவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதியை முதலமைச்சராக வேண்டியதில்லை, உதயநிதி ஸ்டாலினை மக்களே முதல்வராக்குவார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் செயல் தலைவராக வருவதற்கு 46 ஆண்டுகாலம் காத்திருந்தவர்கள். நாடு எதிர்கொண்டிருக்கிற அபாயத்தை விளக்கிக் காட்டிய பின்னும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அதள பாதாளத்திலிருந்து ஒருவராலும் காப்பாற்ற முடியாது. அதற்காகத்தான் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தமிழகம் முழுவதும் நடத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். உதயசூரியன் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைப்பதற்கு உதாரணமாக சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.திமுக அரசியல் ரீதியான பாதையில் ஏறுவதற்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதி சினிமாவிலும், அரசியலும் மிகப்பெரிய பாய்ச்சலை உருவாக்குவதற்கு அடித்தளம் பெற்றது சேலம்தான். 1957 ஆம் ஆண்டு திமுக மாமன்ற உறுப்பினர் சேலத்தில் இரும்பு தாதுகள் அதிகம் கிடைப்பதால் இரும்பு எஃகு தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கான உத்வேகத்தை கொடுத்த தீர்மானம் திமுகதான். ஐந்தாண்டுக்கான திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் முடித்துள்ளார் தமிழக முதல்வர். தமிழகத்தில் உரிமைகளை எந்த விதத்தில் மத்திய அரசு தட்டி பறிக்கிறது, என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்துள்ளது? அதைச் சொல்வதற்காகத்தான் வந்துள்ளேன். புள்ளி விவரங்களை கேட்க மக்களுக்கு சிறிது சோர்வு தரும். பொருளாதாரத்தில் ஒன்பது சதவிகிதத்தை தமிழகம் மத்திய அரசுக்கு தருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக கண்ணாகவும் கருத்தாக இருப்பது எப்பொழுதும் திமுகதான்.
தென் மாநிலங்களில் உரிமைகளை பறிப்பதற்காக தென் மாநிலங்களில் தொகுதிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று ஏமாற்றியவர்களை அடையாளம் காட்டுவதற்காக இந்திய கூட்டணியை திமுக தலைவர் ஸ்டாலின் உருவாக்கி தந்தார். இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து இந்திய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசை ஆளும் பாஜகவின் தோல்வி என்பது தமிழகத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கை காட்டுபவர்தான் பிரதமராக வருவார் அந்த வகையில் தமிழகத்தில் 40 தொகுதிகளையும் திமுக வென்று காட்டும், சமதர்ம சமுதாயத்தை உருவாக்கி, ஜனநாயகத்தை காத்திட, மாநில சுயாட்சியை பெற்றிட, மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டும் அது இந்திய கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும் என்று கூறினார். மேலும் பாஜகவிற்கு முடிவு கட்டும் தேர்தலாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் அமையும் என்றும் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமசந்திரன், திமுக மாவட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மேலும் காண

petrol and diesel price chennai on February 19th 2024 know full details
Petrol Diesel Price Today, February 19: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 19ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 639வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்மேலும் காண

Tamil Thalaivas vs Bengal Warriors: கடைசி ஆட்டத்தில் அசத்திய தமிழ் தலைவாஸ்! 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி!

ப்ரோ கபடி லீக்:

ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 12 அணிகள் களமிறங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை இழந்த அணிகளில் ஒன்றாக உள்ள அணி தமிழ் தலைவாஸ். தமிழ் தலைவாஸ் அணி இன்று அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தனது கடைசி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இதுவே சீசனின் கடைசி ஆட்டமாகும். தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடிய 21 போட்டிகளில் 13 தோல்விகளை சந்தித்தும் எட்டு போட்டிகளில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது தமிழ் தலைவாஸ். இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்த இரு அணிகளும் ப்ரோ கபடி லீக்கில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படாமல் முடிந்தது. கடைசி மூன்று போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு போட்டியிலும் பெங்கால் வாரியர்ஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சீசனின் தொடக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது.

வெற்றியுடன் முடிக்க போவது யார்?

அந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 48 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் 38 புள்ளிகளும் எடுத்தது. இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டன் மனிந்தர் சிங் மட்டும் 16 புள்ளிகள் சேர்த்தார். ஷுபம் ஷிண்டே 11 புள்ளிகளும் நிதின் குமார் 7 புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். அதேபோல் 9-வது சீசனில் கடைசியாக மோதிய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு தமிழ் தலைவாஸ் அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக உள்ள கோர் டீம் எனப்படும், நரேந்தர், அஜிங்கியா பவார் மற்றும் சாகர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இந்த போட்டி சீசனின் கடைசி போட்டி என்பதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வெற்றியுடன் முடிக்க தீவிரமாக உள்ளன.

மேலும் படிக்க: IND VS ENG 3rd Test : 434 ரன்கள் வித்தியாசம்! இங்கிலாந்தை வாரி சுருட்டி வீசிய இந்தியா! மிரட்டல் வெற்றி!

மேலும் படிக்க: Ravichandran Ashwin: ராஜ்கோட் டெஸ்டில் கம்பேக் கொடுத்து அசத்திய அஸ்வின்!

Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?

ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், அவர் விமானத்தில் இருந்து பத்திரமாகத் திரும்பியுள்ளார்.

மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். ராஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதை கவனித்த பைலட் உடனடியாக அலர்ட் ஆகி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதனால் விமானத்தில் பயணித்த நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது உயிர் தப்பித்தது எப்படி? என்பது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா தானும் ஸ்ரத்தா தாஸூம் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோர் சிரித்தபடி உள்ள இந்தப் பதிவில், ‛‛உங்களின் தகவலுக்காக.. இப்படித்தான் நாங்கள் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பினோம்” என ராஷ்மிகா தெரிவித்துள்ளார். தான் விமான விபத்தில் சிக்க இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சி அடையும் வகையில் ராஷ்மிகா இந்த இன்ஸ்டா ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு குறித்து விஸ்தாரா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது: பிப்ரவரி 17ஆம் தேதி UK531 எனும் விஸ்தாரா விமானம் மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து மீண்டும் விமானத்தை மும்பையில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானக் கோளாறு உடனடியாகக் கண்டறியப்படாததால், மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம். விஸ்தாராவைப் பொறுத்த வரையில் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியமானது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

Aishwarya Shankar: இயக்குநர் ஷங்கர் மகளுக்கு உதவி இயக்குநருடன் இரண்டாவது திருமணம்: வாழ்த்திய தங்கை அதிதி!

Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து – சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ!

IND vs ENG: இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா! இளம் வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோகித் சர்மா!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இளம் வீரர்களை புகழ்ந்த ரோகித் சர்மா:

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது  2 – 3 நாட்களுக்கு மேல் விளையாடுவதில்லை. இப்போது நாங்கள் 5 நாட்களும் விளையாடுவதன் முக்கியத்துவத்தை புரிந்துள்ளோம். அதில் நன்றாக விளையாடிய நாங்கள், எதிரணி மீது அழுத்தம் காட்டினோம். எங்களுடைய பந்து வீச்சில் கிளாஸ் இருப்பதால் பொறுமையாக செயல்படுவோம் என்பதே என்னுடைய கருத்தாக இருந்தது. நிறைய அனுபவத்தைக் கொண்ட ஜடேஜாவுடன் இடது – வலது கை கலவையை வேண்டுமென விரும்பியதால் சர்பராஸ் கானை களம் இறக்கினோம்.

சர்பராஸ் கான் எப்படி விளையாடுவார் என்பதை பார்த்தோம். அனைத்தையும் நாங்கள் கணக்கிட்டு பின்னர் அதற்கு தகுந்தார் போல் பேட்டிங் வரிசையில் செயல்பட்டோம். நிறைய திருப்புமுனைகள் இருந்தது. இந்தியாவில் வெல்வதற்கு டாஸ் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவோம். எங்களுடைய பந்து வீச்சாளர்கள் நிறைய போராட்டத்தை காண்பித்தனர். இந்த நேரத்தில் முக்கிய பந்து வீச்சாளர்கள் இல்லாமல் நாங்கள் விளையாடினோம் என்பதை மறக்கக்கூடாது. பேட்டிங்கிலேயே பாதி வேலை முடிந்தது என்பதை நாங்கள் அறிவோம். குறிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் அசத்தினார்கள்” என்று கூறியுள்ளார். இச்சூழலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது போட்டி பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிரடி காட்டிய இந்திய அணி:

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதில் 196 பந்துகள் களத்தில் நின்ற ரோகித் சர்மா 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 131 ரன்கள் குவித்தார். அதேபோல், ரவீந்திர ஜடேஜா 225 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 112 ரன்களை குவித்தார்.

இவ்வாறாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களை குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட்151 பந்துகள் களத்தில் நின்று 23 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 153 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் டாம் ஹார்ட்லியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் தன்னுடைய 500-வது விக்கெட்டை எடுத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. இதில் 430 ரன்களை எடுத்து இந்திய அணி டிக்ளர் செய்தது. அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார்.இச்சூழலில் 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சொற்பரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க இங்கிலாந்து அணி 122 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இவ்வாறாக இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க: Ravichandran Ashwin: ”நாயகன் மீண்டும் வரார்” – மீண்டும் அணிக்கு திரும்பும் அஸ்வின்!

மேலும் படிக்க:Ashwin: அஸ்வினுக்கு ஆதரவாக பிசிசிஐ வெளியிட்ட பதிவு; அப்படி என்ன சொன்னாங்கன்னு தெரியுமா?

actor sivakarthikeyan thanks fans for celebrating his birthday | Sivakarthikeyan: “இந்த அளவு கடந்த அன்பு தான் என்னை உழைக்கத் தூண்டுகிறது”
தனது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன்
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். பிறந்தநாள் சிறப்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசரை ராஜ்கமல் ஃபிலிஸ் வெளியிட்டது.
மேலும் இதே நாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கும் படமான கொட்டுக்காளியும் சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடியுள்ளார். இப்படியான நிலையில் தனது பிறந்த நாளை மகிழ்ச்சிகரமான நிகழ்வாக மாற்றிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
Thank you and love you all ❤️ pic.twitter.com/Usnl2UYTn6
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 18, 2024
இந்த அறிக்கையில் அவர் “
அன்புடையீர்,
எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. அதற்கு, அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலைத்துறை மற்றும் ஊடகங்களில் (பத்திரிக்கை, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் இணைய ஊடகம்) இருந்து வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் நன்றி. “அமரன்” டீசர் மூலம் இந்த நாளை மேலும் மறக்க முடியாத நாளாக மாற்றிய எனது தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன் சார், சோனி பிக்சர்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மகேந்திரன் சார், டிஸ்னி மற்றும் “அமரன்” பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அதே நாளில், எங்கள் “சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்” தயாரிப்பில் உருவான “கொட்டுக்காளி” திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டு உலக அரங்கில் பெரும் பாராட்டுகளை பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் மற்றும் “SK 23” பட குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அன்பான ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவு கடந்த அன்பு தான், என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,சிவகார்த்திகேயன்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் காண

Aishwarya Shankar Engagement : அக்கா ஐஸ்வர்யா ஷங்கர் நிச்சயதார்த்தில் அதிதி ஷங்கர்..புகைப்படங்கள் இங்கே!
Aishwarya Shankar Engagement : அக்கா ஐஸ்வர்யா ஷங்கர் நிச்சயதார்த்தில் அதிதி ஷங்கர்..புகைப்படங்கள் இங்கே!
சஸ்பென்ஸ்க்கு முடிவு கட்டிய கமல்நாத்! கடைசியில் நடந்த ட்விஸ்ட் – கட்சி தாவுகிறாரா? இல்லையா?

எதிர்க்கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு தாவுவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

சஸ்பென்ஸ்க்கு முடிவு கட்டிய கமல்நாத்:

சமீபத்தில் கூட, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். அந்த வரிசையில், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் பலர், இந்த வாரம் பாஜகவில் இணைந்தனர். கடந்த 12ஆம் தேதி, முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தினேஷ் அஹிர்வார் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விதிஷா ராகேஷ் கட்டாரே பாஜகவில் இணைந்தனர். இதற்கிடையே, டெல்லிக்கு நேற்று சென்ற கமல்நாத், பாஜக தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

கடந்த நவம்பர் மாதம், கமல்நாத் தலைமையில் மத்திய பிரதேச தேர்தலை சந்தித்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் தூக்கப்பட்டார். இதையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் அவர் சீட் கேட்டதாகவும் ஆனால் கட்சி தலைமை அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

பாஜகவுக்கு செல்கிறாரா? இல்லையா?

இச்சூழலில், சமூக வலைதளங்களில் சுயவிவர குறிப்பில் இருந்து காங்கிரஸை நீக்கினார் கமல்நாத்தின் மகன் நகுல்நாத். எனவே, தனது மகனுடன் கமல்நாத் பாஜகவில் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்த நிலையில், கமல்நாத் தொடர்பாக வெளியாகி வரும் செய்திகளுக்கு காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இணையமாட்டேன் என கமல்நாத் கூறியிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் தலைலர் ஜீது பட்வாரி கூறுகையில், "இது கமல்நாத்துக்கு எதிராக செய்யப்பட்ட சதி. நான் அவரிடம் பேசினேன். இவை அனைத்தும் வெறும் வதந்திகள் என்றும், அவர் காங்கிரஸ்காரர் என்றும், காங்கிரஸ்காரராகவே இருப்பார் என்றும் கடைசி மூச்சு வரை காங்கிரஸ் சித்தாந்தத்துடன் இருப்பேன் என்றும் கூறினார். இது அவரது சொந்த எண்ணம். இதை கமல்நாத்தே சொன்னார்" என்றார்.

மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் பாஜகவே ஆட்சி நடத்தியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும், 15 மாதங்களில் அது கவிழ்ந்துவிட்டது.

Deepika Padukone Photos : ”அழகோ அழகு..” நடிகை தீபிகா படுகோனின் வசீகரமான புகைப்படங்கள்!
Deepika Padukone Photos : ”அழகோ அழகு..” நடிகை தீபிகா படுகோனின் வசீகரமான புகைப்படங்கள்!
TN Budget 2024 highlights of the Tamil Nadu budget have been special schemes and fund 7 topics | TN Budget 2024: ”மாபெரும் தமிழ்க் கனவு” 7 மெகா திட்டங்களுக்கு முக்கியத்துவம்
TN Budget 2024: மாபெரும் 7 தமிழ்க் கனவு என்ற தலைப்பில் தமிழ்நாடு பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பட்ஜட் தாக்கல்:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பிப்ரவரி 13ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. 14ஆம் தேதியும் விவாதம் தொடர்ந்த நிலையில், பிப்ரவரி 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து, 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19ம் தேதி (நாளை) தாக்கல் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 20ம் தேதி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து பிப்ரவரி 21ம் தேதி சட்டப்பேரவை துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் ஆகிய இரண்டு குறித்த விவாதங்கள் காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளிலும் நடைபெறும். இத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைகிறது.
சிறப்பம்சங்கள் என்ன?
இதற்கிடையே தமிழ்நாடு பட்ஜெட்டிற்கான முத்திரை சின்னம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘தடைகளைத் தாண்டி வளர்ச்சியை நோக்கி’ என்ற வாசகத்துடன் 2024-2025 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை என்பது இந்த முத்திரை சின்னத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறும் 7 சிறப்பம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமூக நிதி, கடைக்கோடி மனிதருக்கு நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் உள்ளிட்டவைகள் குறித்து பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 சிறப்பம்சங்கள்:
நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சமூக நீதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களையும் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக மேம்படுத்திவிடும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இளைஞர்களை மேம்படுத்தி விடுவதற்காக அனைத்து விதமான உதவிகள் செய்து தரப்படும். அந்த வகையிலான திட்டத்திற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று கூறப்படுகிறது.
ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக கொண்டு செயல்படும் தமிழ்நாடு முதலீடுகளை குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. வீட்டு வசதி, ஊட்டச்சத்து, சுகாதாரம், குடும்ப நல உள்ளிட்டவற்றைக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் காண

Dutch PM Frontrunner Geert Wilders Message Of Support To Nupur Sharma who says controversial comments on Prophet Mohammed
கடந்த 2022ஆம் ஆண்டு, பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இருந்த நுபூர் சர்மா, முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நுபூர் சர்மாவை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது.
சர்ச்சை கருத்து தெரிவித்த நுபூர் சர்மா:
பிரச்னையை தீர்க்கும் வகையில் அனைத்து மதங்களை மதிப்பதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சர்வதேச அளவில் எழுந்த அழுத்தம் காரணமாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நுபூர் சர்மாவை பா.ஜ.க. நீக்கியது. இந்த நிலையில், நுபூர் சர்மாவை துணிச்சலானவர் என நெதர்லாந்து நாட்டின் அரசியல் தலைவர் கீரிட் வில்டர்ஸ் பாராட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு வரும்போது நுபூர் சர்மாவை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் கீரிட் வில்டர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ல் பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில், “உண்மையைப் பேசியதற்காக இஸ்லாமியர்களால் பல ஆண்டுகளாக அச்சுறுத்தப்படும் துணிச்சலான நுபூர் ஷர்மாவுக்கு நான் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்தேன்.
உலகெங்கிலும் உள்ள சுதந்திரத்தை விரும்பும் மக்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்தியாவுக்குச் செல்லும் போது ஒரு நாள் அவரை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு, முகமது நபிகள் சர்ச்சை வெடித்தபோதே, நுபூர் சர்மாவுக்கு கீரிட் வில்டர்ஸ் ஆதரவு தெரிவித்திருந்தார்.
I sent a personal message of support to the brave Nupur Sharma, who is threatened by Islamists for years now only for speaking the truth. Freedom loving people all over the world should support her. I hope to meet her one day while visiting India. #NupurSharma
— Geert Wilders (@geertwilderspvv) February 17, 2024புகழ்ந்து தள்ளிய நெதர்லாந்து அரசியல் தலைவர்:
நுபூர் சர்மாவை நோபல் பரிசுக்கு தகுதியானவர் என குறிப்பிட்டிருந்த கீரிட் வில்டர்ஸ், “உண்மையைத் தவிர வேறெதையும் பேசாத ஹீரோ நுபூர் ஷர்மா. முழு உலகமும் அவரைப் பற்றி பெருமைப்பட வேண்டும். அவர் நோபல் பரிசுக்கு தகுதியானவர். இந்தியா ஒரு இந்து தேசம். இஸ்லாமிய வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக இந்துக்களை வலுவாக பாதுகாக்க இந்திய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது” என கூறியிருந்தார்.
நெதர்லாந்தில் கடந்தாண்டு நடந்த தேர்தலில் கீரிட் வில்டர்ஸின் தேசியவாத சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பான்மையை பெறவில்லை. கூட்டணி ஆட்சியை அமைக்க கீரிட் வில்டர்ஸ் முயற்சித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம், தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே பிரதமராக பதவி வகித்து வரும் மார்க் ரூட்டே கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்.
நெதர்லாந்து கீழ் சபை 150 உறுப்பினர்களை கொண்டது. ஆட்சி அமைப்பதற்கு 76 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அடுத்த பிரதமராக வருவதற்கு கீரிட் வில்டர்ஸ்-க்கு அதிக வாய்ப்புள்ளது.
மேலும் காண

Tamil Thalaivas vs Bengal Warriors: பெங்கால் வாரியர்ஸ் அணியை ஓட விட்ட தமிழ் தலைவாஸ்! கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி!

ப்ரோ கபடி லீக்:

ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 12 அணிகள் களமிறங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை இழந்த அணிகளில் ஒன்றாக உள்ள அணி தமிழ் தலைவாஸ். தமிழ் தலைவாஸ் அணி இன்று அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தனது கடைசி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் விளையாடியது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை 37 புள்ளி கணக்கில் வீழ்த்தி கடைசி வெற்றியை பதிவு செய்துள்ளது.

Janhvi Kapoor Photos : செப்பு சிலை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்!
Janhvi Kapoor Photos : செப்பு சிலை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்!
TN Goverment:”3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு பணி நியமனம்” எந்தெந்த துறையில் எத்தனை பேர்?

TN Goverment: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567 நபர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளளது.

கடந்த 3 ஆண்டுகளில் 60,567 நபர்களுக்கு அரசு வேலை

சென்னையில் 16.02.2024 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மாதம் வரை 60,567 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விபரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக உள்ள தேர்வு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்காக, ஜனவரி 2024 வரை, 27,858 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எந்தெந்த துறை?

துறைவாரியான நியமனங்களைப் பொறுத்தவரை நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக்கல்வித்துறையில் 1,847 பணியிடங்களும், வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்களும், ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும், காவல்துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் மற்றும் சத்துணவு போன்ற அரசின் பிற துறைகளின் வாயிலாக 15,442 பணியிடங்களும் அந்தந்தத் துறைகளின் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டன. இவ்வகையில் 32,709 இளைஞர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆக மொத்தம், இந்த அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்திற்குள் (27,858 + 32,709) 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, தமிழ் நாட்டில் படித்த இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்களும் நடத்தப்பட்டது.

இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக நம் மாநிலத்தின் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட தமிழ் நாடு அரசு வழிவகை செய்துள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

"ஒட்டுமொத்த குடும்பத்தோட நம்பிக்கையும் நொறுங்கிடுச்சு" வேலையில்லா திண்டாட்டம் பற்றி மனம் திறந்த ராகுல் காந்தி!

Fact Check: தமிழ்நாட்டின் முதல் பழங்குடி நீதிபதி ஸ்ரீபதி இல்லையாம்! உண்மை நிலவரம் என்ன?

"குடும்பத்திற்காக அதிகாரம் பெற நினைப்பவர்கள் ஏழைகள் பற்றி யோசிப்பார்களா?" அமித்ஷா கேள்வி

Amit Shah: இந்தியா கூட்டணித் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை முதல்வராக்கவும், பிரதமராக்கவும் நினைக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

"குடும்பக் கட்சிகளின் கூட்டே இந்திய கூட்டணி”

இந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் தங்களது வாரிசுகளை தங்கள் கட்சியின் முக்கிய பதவிகளில் வகிக்க விரும்புகிறார்கள். சோனியா காந்தியின் நோக்கம் ராகுல் காந்தியை பிரதமராக்குவது, மம்தா பானர்ஜியின் நோக்கம் அண்ணன் மகனை முதல்வராக்குவது, மு.க.ஸ்டாலினின் நோக்கம் தனது மகன் உதயநிதியை முதல்வராக்குவது, உத்தவ் தாக்கரேவின் நோக்கம் மகனை முதல்வராக்குவது தான்.

7 வாரிசு அரசியல்வாதிகளின் குடும்பக் கட்சிகளின் கூட்டே, இந்திய கூட்டணி. இந்திய கூட்டணித் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை பிரதமராக்க நினைக்கிறார்கள். சொந்தக் கட்சியில் ஜனநாயகத்தை காக்க முடியாதவர்களால், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது” என்றார்.

"பயங்கரவாதத்தில் இருந்து நாடு விடுபடும்”

தொடர்ந்து பேசிய அவர், ”பிரதமர் மோடி ஏழைகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நினைக்கும் அதே வேளையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்கள் வாரிசுகளை பிரதமராகவும், முதல்வராகவும் ஆக்க நினைக்கிறார்கள். தங்கள் குடும்பத்திற்காக அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டவர்கள், ஏழைகளின் நலனைப் பற்றி என்றாவது நினைப்பார்களா?

பாஜகவில் குடும்ப அரசியல் இருந்திருந்தால் டீ விற்றவரின் மகன் பிரதமராக வந்திருக்க முடியாது. இந்திய கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் நாட்டில் ஜனநாயகத்தை அழித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் ஊழல், சாதிவெறி ஆகியவற்றை ஒழித்து நாட்டை வளர்ச்சிக்கு உழைத்தார் பிரதமர் மோடி. மோடியின் அடுத்த ஆட்சியில் பயங்கரவாதம், நக்சலிசம் ஆகியவற்றில் இருந்து இந்தியா விடுபட்டு, அமைதியான மற்றும் வளமான நாடாக மாறும் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் வருவார் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். மோடி தான் வருவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மோடி ஆட்சியில் உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு மரியாதையும், அடையாளமும் உருவாகியுள்ளது" என்றார் அமித் ஷா.

மேலும் படிக்க

Fact Check: தமிழ்நாட்டின் முதல் பழங்குடி நீதிபதி ஸ்ரீபதி இல்லையாம்! உண்மை நிலவரம் என்ன?

Gangai Amaran: "இசையமைப்பாளர் தீனா ஒரு எச்சக்கல" லோக்கலாக இறங்கி திட்டிய கங்கை அமரன்

இசையமைப்பாளர் தீனா ஒரு எச்சக்கல என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கடுமையாக பத்திர்கையாளர் முன்னிலையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரைப்பட இசையமைப்பாளர் சங்கத் தேர்தல்

திரைப்பட இசையமைபபளர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்டதைத் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் திரைப்பட இசையமைப்பாளர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவிட்டது.

இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. இப்படியான நிலையில் இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி திரைப்பட இசையமைப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்றது.

இசைக்கலைஞர்கள் சங்கத்தின் அலுவலக கட்டிட வளாகத்திற்குள் இந்த தேர்தல் நடைபெறும் என இந்த சங்கத்தின் தலைவர் தீனா தெரிவித்தார். இசையமைப்பாளரான தீனா இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

கங்கை அமரன் குற்றச்சாட்டு

இந்த தேர்தல் குறித்து வடபழனி திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் இசையமைபபாளர் கங்கை அமரன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் “ தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் சங்கம் இது தான். இதற்கு பிறகு தான் மற்ற சங்கம் எல்லாம் உருவாகின. அப்போது எல்லாம் தினம் சம்பளம் கிடையாது, இந்த சங்கத்தில் இருந்தவர்கள் போராடி வாங்கிக் கொடுத்தார்கள், அவர்களின் கருணையால் நாங்கள் இன்று நன்றாக இருக்கிறோம் .

அவர் மட்டும் தான் ஆள வேண்டுமா?

தொடர்ந்து பேசிய அவர் இசையமைபபாளர் தீனா மிது சில குற்றச் சாட்டுக்களை வைத்துள்ளார். ”இளையராஜா வந்து உட்கார்ந்து வந்து உட்கார்ந்திருக்க வேண்டிய இடம் இது. எங்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அவருக்கு பதிலாக இந்த இடத்தில் நான் வந்து உட்கார்ந்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

இந்த சங்கத்தின் விதிமுறைப் படி ஒருவர் அதிகபட்சம் இரண்டு வருட காலம் தங்களது பதவியை நீடித்துக் கொள்ளலாம். இந்த சங்கத்தை தொடர்ந்து ஆண்டவர்கள் யாரும் இல்லை. ஆனால் தீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது பதவியை 4 ஆண்டுகள் தக்கவைத்துக் கொண்டு இந்த ஆண்டும் போட்டி போடுகிறார். இது என்ன அரசியல் கட்சியா? தலைவர் என்கிற பதவியை எல்லாரும் இருந்து அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே எங்கள் அனைவரது கருத்தாகவும் இருக்கிறது.” என்று கூறினார்

தீனா ஒரு எச்சக்கல

”கொரோனா காலத்தில் இந்த சங்கத்தில் பல்வேறு தவறான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கொரோனா காலத்தில் பணம் கேட்டு பல இசைக்கலைஞர்கள் கையெழுத்து போட்டதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. அதில் பவதாரிணியின் கையெழுத்தை போட்டுகூட பணம் வாங்கப் பட்டுள்ளது, கிட்டதட்ட 80 லட்சம் வரை மோசடி செய்யப் பட்டுள்ளது.

இந்த உண்மைகளை வெளியே தெரியாமல் இருக்கத்தான் இப்போது மீண்டும் தலைவராக தீனா முயற்சி செய்கிறார். இளையராஜா நம்மை எல்லாரையும் வளர்த்துவிட்டவர். அவர் சொல்லியும் தீனா கேட்பதாக இல்லை, இளையராஜாவை மதிக்காதவர் எங்களுக்கு தேவையில்லை. தீனா ஒரு எச்சகல என்று தான் சொல்ல வேண்டும்” என்று கங்கை அமரன் ஆவேசமாக பேசியுள்ளார்.

Rahul Gandhi slams BJP says youth of UP is suffering from the disease of unemployment
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து உத்தர பிரதேசத்தை அடைந்துள்ளது.
“வேலையில்லாத் திண்டாட்டம் என்பது நோய்”
அடுத்த மாதம், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் யாத்திரை நடந்து வருவது முக்கியத்துவம் பெறுகிறது. யாத்திரையில் நாட்டின் முக்கிய பிரச்னைகளை எழுப்பி வரும் ராகுல் காந்தி, வாரணாசியில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேசினார்.
இதுகுறித்து தனது எஸ்க் வலைதள பக்கத்தில் குறிப்பிட்ட அவர், “டபுள் எஞ்சின் அரசாங்கத்தால் இளைஞர்களுக்கு இரட்டை அடி. உத்தர பிரதேசத்தில் இன்று மூன்றில் ஒரு இளைஞன் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சத் தகுதியுள்ள பதவிகளுக்குக் கூட வரிசையில் நிற்கின்றனர்.
முன்பு எல்லாம், வேலை கிடைப்பது என்பது ஒவ்வொருவரின் கனவாக இருந்தது. இப்போது எல்லாம், ஆட்சேர்ப்பு நடந்தால் கேள்வித்தாள்கள் முன்பே கசிந்துவிடுகிறது. முடிவுகள் வெளியிடுவதில்லை. நீண்ட நேரம் காத்திருந்து முடிவுகள் வந்த பிறகும், பணி கிடைப்பதில்லை, நீதிமன்றம் சென்று வழக்கு தொடர வேண்டியிருக்கிறது.
“விரக்தியில் சிக்கிய மாணவர்கள்”
ராணுவத்தில் இருந்து ரயில்வே மற்றும் கல்வியில் இருந்து காவல்துறைக்கு ஆட்சேர்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இந்த விரக்தியின் பிரமைக்குள் சிக்கிய மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி உடைந்து போகிறான்.
डबल इंजन सरकार मतलब बेरोज़गारों पर डबल मार!आज बेरोज़गारी की बीमारी से UP का हर तीसरा युवा ग्रसित है। जहां डेढ़ लाख से अधिक सरकारी पद खाली हैं, वहां न्यूनतम योग्यता वाले पदों के लिए भी ग्रेजुएट, पोस्ट ग्रेजुएट और PhD होल्डर्स लाइन लगा कर खड़े हैं।पहले तो भर्ती निकलना एक सपना… pic.twitter.com/qqNLu6ttRM
— Rahul Gandhi (@RahulGandhi) February 18, 2024இதையெல்லாம் கண்டு வேதனையடைந்த இளைஞர்கள், தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகிறான். அங்கு, காவல்துறையினரிடம் இருந்து தடியடிகளைப் பெறுகிறான். ஒரு மாணவனுக்கு, வேலை என்பது வெறும் வருமான ஆதாரமாக இல்லாமல், அவனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் கனவாகவும் இருக்கிறது.
இந்தக் கனவு உடைந்ததன் மூலம், ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் நொறுங்கிவிடுகிறது. காங்கிரஸின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் காண

art literature jnanpith award boycott tamil vairamuthu post | ஞானபீட விருது…22 ஆண்டுகளாக தமிழ் புறக்கணிப்பு
இலக்கிய ஆளுமைகளுக்காக இந்தியாவில் வழங்கப்படும் பெரும் அங்கீகாரமான ஞானபீட விருது, கடந்த 22 ஆண்டுகளாக தமிழை தவிர்த்து வருவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஞான பீட விருது:
உருது கவிஞரும், இந்தி சினிமா பாடலாசிரியருமான குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராம்பத்ரச்சார்யா ஆகியோருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீட தேர்வுக்குழு வெளியிட்ட அறிவிப்பினை அடுத்து, இலக்கிய ஆளுமைகள் இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
கவிஞர் வைரமுத்துவும் தனது வாழ்த்தினை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விருது பெற்ற கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், என பன்முகம் கொண்ட குல்சாருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் பலவற்றில், தமிழில் வைரமுத்துவும், இந்தியில் குல்சாரும் பாடல் வரிகளை எழுதிய நிலையில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். இதை தனது வரிகளில் நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழ் மொழி புறக்கணிப்பு:
கூடவே, ஞானபீட விருது கடந்த 22 ஆண்டுகளாக தமிழை புறக்கணித்து இருப்பது குறித்தும் வைரமுத்து அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, ”சமஸ்கிருத மொழிக்காக சமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும் உருது மொழிக்காக இலக்கிய ஆளுமை குல்சாரும் இந்த ஆண்டு ஞானபீட விருதைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி தருகிறது.
இரு பேராளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீடம் தமிழ்மொழியை 22ஆண்டுகள் தவிர்த்தே வருவது தற்செயலானதன்று என்று தமிழ்ச் சமூகம் கவலையுறுகிறது முழுத் தகுதிகொண்ட முதிர்ந்த பல படைப்பாளிகள் காலத்தால் உதிர்ந்தே போயிருக்கிறார்கள் வேண்டிப் பெறுகிற இடத்தில் தமிழ் இல்லையென்ற போதிலும் தூண்டிவிடுவது கடமையாகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருத மொழிக்காகசமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும்உருது மொழிக்காகஇலக்கிய ஆளுமை குல்சாரும்இந்த ஆண்டு ஞானபீட விருதைப்பகிர்ந்துகொள்வதுமகிழ்ச்சி தருகிறதுஇரு பேராளுமைகளுக்கும்வாழ்த்துக்கள்ஜெயகாந்தனுக்குப் பிறகுஞானபீடம்தமிழ்மொழியை 22ஆண்டுகள்தவிர்த்தே வருவதுதற்செயலானதன்று… pic.twitter.com/YLlP2kqykk
— வைரமுத்து (@Vairamuthu) February 18, 2024மேலும் படிக்க
Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
Shaktimaan: அட… சக்திமானாக ரன்வீர் சிங்! கைகோர்க்கும் மின்னல் முரளி இயக்குநர்? வேற லெவல் தகவல்!
மேலும் காண

IND VS ENG 3rd Test : 434 ரன்கள் வித்தியாசம்! இங்கிலாந்தை வாரி சுருட்டி வீசிய இந்தியா! மிரட்டல் வெற்றி!

இந்திய அணி அபார வெற்றி:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி  பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதில் 196 பந்துகள் களத்தில் நின்ற ரோகித் சர்மா 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 131 ரன்கள் குவித்தார். அதேபோல், ரவீந்திர ஜடேஜா 225 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 112 ரன்களை குவித்தார். இவ்வாறாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களை குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட்151 பந்துகள் களத்தில் நின்று 23 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 153 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் டாம் ஹார்ட்லியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் தன்னுடைய 500-வது விக்கெட்டை எடுத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அசத்திய ரோகித் படை:

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. இதில் இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் ரோகித் சர்மா 19 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்படி, அதிரடியாக விளையாடிவந்த சுப்மன் கில் அரைசதம் விளாசினார். 151 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 91 ரன்களை விளாசி ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

பின்னர் வந்த ரஜத் படிதர் டக் அவுட் ஆகி வெளியேற குல்தீப் யாதவ் 17 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த யஜஸ்வி ஜெய்ஸ்வாலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் சர்பராஸ் கான். அதன்படி கடைசி வரை களத்தில் நின்றனர் இருவரும். இதில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக இரட்டை சதம் விளாசினார். 236 பந்துகள் களத்தில் நின்ற அவர் 14 பவுண்டரிகள் 12 சிக்ஸர்கள் என மொத்தம் 214 ரன்களை குவித்தார். அதேபோல், சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுக்க 430 ரன்களில் இந்திய அணி டிக்ளர் செய்தது.

இச்சூழலில் 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சொற்பரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க இங்கிலாந்து அணி 122 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக இந்திய அணி வீரர் ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவ்வாறாக இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க: India vs England 3rd Test: தவறான புரிதலால் அவுட் ஆவது சகஜம்தான் – ரன் அவுட் குறித்து பேசிய சர்ஃபராஸ் கான்!

மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: அதிரடியாக சதம் விளாசிய பென் டக்கெட்! தடுமாறிய இந்திய பவுலிங்! பேட்டிங்கில் மிரட்டும் இங்கிலாந்து!

PM Modi:"அடுத்த 100 நாள் ரொம்ப முக்கியம்" பா.ஜ.க. கூட்டத்தில் ஸ்கெட்ச் போட்ட பிரதமர் மோடி!

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

”பாஜக மட்டும் 370 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும்"

இந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "அடுத்த 100 நாட்கள் புதிய உற்சாகத்துடனும், புதிய நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். அடுத்த 100 நாட்கள் புதிய வாக்காளர்களையும், பயனாளிகளையும், அனைத்து சமூகத்தினரையும் அணுக வேண்டும். அனைவரின் நம்பிக்கையைம் நாம் பெற வேண்டும்.

வாக்காளர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவதையும், பணியாக இருக்க வேண்டும். பாஜகவினர் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வைக்க வேண்டும். பாஜக மட்டும் 370 மக்களவை தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

18 வயதை எட்டிய இளைஞர்கள் நாட்டின் 18வது மக்களவையை தேர்வு செய்ய இருக்கிறார்கள். மூன்றாவது முறையாக ஆட்சியை அனுபவிப்பதற்காக கேட்கவில்லை. நாட்டு மக்களுக்காக உழைக்க விரும்புகிறேன். நான் எனது வீட்டை பற்றி நினைத்து இருந்தால், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு நான் வீடு கட்டியிருக்க மாட்டேன்” என்றார்.

"கழிவறை பிரச்சினையை பற்றி பேசிய முதல் பிரதமர் நான்”

தொடர்ந்து பேசிய அவர், ”கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது சாதாரண சாதனைகள் அல்ல. ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாழ்கிறேன். கோடிக்கணக்கான பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவேன்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க பாஜக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனக்கு பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்துள்ளோம்.

போதிய கழிவறை இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சினை என்பதை செங்கோட்டையில் இருந்து பேசிய முதல் பிரதமர் நான் தான். 2047ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவேன். அடுத்த ஐந்து ஆண்டுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவை மாற்றுவதை எங்களின் நோக்கமாக இருக்கிறது” என்றார் பிரதமர் மோடி.

மேலும் படிக்க

CM Stalin: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்! மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும் – கொதித்தெழுந்த முதல்வர் ஸ்டாலின்!

முதல்வன் திரைப்படம் போல மக்களின் பிரச்னையை தீர்த்த எம்.பி.கதிர் ஆனந்த்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களின் நலனுக்காக வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தவிட்ட எம்.பி. கதிர் ஆனந்தின் செயலை பொதுமக்களின் பாரட்டுக்களை பெற்றுள்ளது.

பேருந்து நிறுத்தம்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரம் பகுதியில் உள்ளது மேட்டுப்பாளையம் கிராம். இங்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்றும் அதை அமைத்து தர கோரியும் உள்ளூர் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேட்டுப்பாளையம் கிராமம் வேலூர் நாடாளுமன்ற தொகுதி. அப்பகுதியின் எம்.பி. கதிர் ஆனந்திடமும் பேருந்து நிறுத்தம் வேண்டும் என்பது குறித்து கோரிக்கை வைத்தனர்.

எம்.பி. தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் பேருந்து நிலையம் கட்டுவதற்கு முடிவானது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு கதிர் ஆனந்த் இன்று (18.02.2024) நேரில் சென்றிருந்தார்.

அப்போது பொது மக்கள் எம்.பி.-யிடம் கோரிக்கை விடுத்தனர். ”இந்தப் பகுதியில் பேருந்து நிலையம் அமைய இருப்பதால் வீடுகளை காலி செய்ய சொல்கின்றனர். பேருந்து நிறுத்தம் காட்டுவதாக அதிகாரிகள் வீடுகளை காலிசெய்ய சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? எங்கு செல்வது? ரொம்ப காலமாக இங்குதான் வசித்து வருகிறோம். இதற்கு நீங்க தீர்வு காண வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்தனர்.

தீர்த்து வைத்த எம்.பி:

இது தொடர்பாக எம்.பி கதிர், "மக்களுக்கான தேவையை தான் செய்ய உங்களின் தொகுதி எம்.பி-யாக நான் பணியாற்றுகிறேன். உங்களுக்கு வேண்டாம் என்றால் விட்டுவிடலாம்" என்று கூறி அப்போதே வட்டாட்சியருக்கு எம்.பி. கதிர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

தங்களின் பகுதியின் வளர்ச்சிக்காக என்று முக்கிய முடிவை எடுத்த மக்கள், எம்.பி கதிர் ஆனந்திடம் நிலம் கொடுப்பதாக தெரிவித்தனர். "பேருந்து நிறுத்தத்திற்கு மட்டும் தேவையான இடத்தை எடுத்துக்கொள்ளலாம், பிற இடங்களில் இருந்து ஒரு செங்கல் கூட எடுக்கக்கூடாது" என எம்.பி. கதிர் ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக தாசில்தார், நில அளவையாளர் ஆகியோர் சாலையில் பிற இடங்களையும் அளந்து மக்களின் வீடுகளையும் காலி செய்ய கூறி இருக்கின்றனர். வீடுகளை காலி செய்வதற்கு தீர்வு அளிக்க வேண்டும் என்று எம்.பி. கதிர் ஆனந்திடம் கோரிக்கை வைத்ததும், அவர் அதிகாரிகளுடன் பேசி உடனடியாக தீர்வு காண நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வன் பட பாணி:

இந்நிகழ்வில் திமுக எம்.பி கதிர் ஆனந்தின் செயலுக்கு அப்பகுதி மக்கள் மனதார நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர். இதே பலரும் பாராட்டி வருகின்றனர். முதல்வன் திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் ஒரே போன் காலில் மக்களின் குறைகளை தெரிந்து அதனை தீர்த்து வைத்திருப்பார். அதே போலவே இது இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

urdu poet gulzar prestigious jnanpith award for 2023 for his contribution
60 ஆண்டுகால திரைப்பணியில் இருக்கும் உருது கவிஞர் குல்சாருக்கு 2023 ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
குல்சார்
கவிஞர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் தனமைக் கொண்ட படைப்பாளி குல்சார். உருது மொழியில் இவர் எழுதிய கவிதைகள் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களால் படிக்கப் படுகின்றன. கவிதைகள் தவிர்த்து 60 ஆண்டு காலமாக திரைப்பட பாடல்களுக்கு பாடல்கள் எழுதியும் வருகிறார். அவரது பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக விருது குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிக்கை கூறப்பட்டுள்ளதாவது
Congratulations #Gulzar ji for Jnanpith Award. He has written poems & lyrics for countless films in a career spanning over six decades. He is one of the most respected names not just in cinema but also in literary circles. He is considered one of the finest Urdu poets of his era. pic.twitter.com/N0ADG9Y2Rb
— Dayanand Kamble (@dayakamPR) February 17, 2024“ 2023 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது சமஸ்கிருத இலக்கியவாதியான ஜகத்குரு ராமபத்ராச்சார்யா மற்றும் உருது கவிஞர் குலசாருக்கு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. தனது தனித்துவமான திறமையால் இலக்கிய உலகின் புதிய மைல் கற்களை எட்டியவர் குல்சார். தன்னுடைய கவிதைகளின் வழியாக புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கான கவிதை பரப்பிலும் தொடர்ச்சியாக அவர் இயங்கி வருவதை பாராட்டும் விதமாக அவருக்கு இந்த விருது வழங்கப் பட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது” என்று இந்த அறிக்கையில் குறிப்பிபடப் பட்டுள்ளது.
குல்சார் பெற்ற விருதுகள்
2002 ஆம் ஆண்டில் உருது மொழிக்கான சாகித்ய அகாடமி விருது , 2004 ஆம் ஆண்டு பத்மபூஷன் , 2013 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதுகளை குலசார் இதுவரை பெற்றுள்ளார். மேலும் திரைப்பட பாடல்களுக்காக ஐந்து தேசிய விருதுகளை அவர் வென்றுள்ளார்.
ஜகத்குரு ராமபத்ராச்சார்யா
58th Jnanpith Award gets Honour with it being conferred upon Sanskrit Scholar Jagadguru Rambhadracharya, who is founder of Tulsi Peeth in Chitrakoot. A renowned Hindu spiritual leader, educator & writer of 240+ books and texts, incl. 4 epics.Importantly, he is not a Sickular… pic.twitter.com/W0OL6lwQ8X
— BhikuMhatre (@MumbaichaDon) February 17, 2024குல்சார் தவிர்த்து சமஸ்கிருத இலக்கியவாதியான ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவுக்கு 2023ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. துளசி பீடத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ராமபத்ராச்சார்யா ஒரு புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர், கல்வியாளர். மேலும் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். பிறப்பில் இருந்தே பார்வையற்றவரான ராமபத்ராச்சார்யா சமஸ்கிருதம் மற்றும் இந்து வேத நூல்களில் புலமை பெற்றவர்.
மேலும் காண

அரசு ஊழியரை நடுவழியில் இறக்கிவிட்ட கர்நாடகா அரசு பேருந்து! 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 42). இவர் கர்நாடகா மாநிலம் மைசூரில் மத்திய அரசு பணியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி விழுப்புரத்தில் இருந்து பெங்களூரு செல்வதற்காக கர்நாடகா மாநில அரசு போக்குவரத்துக்கழக பேருந்தில் ரூ.660 கொடுத்து முன்பதிவு செய்து பயணம் செய்தார்.

பணத்தை தர மறுத்த நடத்துனர்:

அப்போது அவர் ஒரு கேனில் 15 லிட்டர் ஆர்கானிக் எண்ணெய் (கடலை எண்ணெய்) வைத்திருந்தார். அதைப்பார்த்த பேருந்து நடத்துனரான ஜெகதீஷ், பேருந்தில் அதை கொண்டு செல்லக்கூடாது என்றார். பின்னர் இருக்கையின் அடியில் வைத்துக்கொள்ளுமாறு கூறிய நடத்துனர், அதற்கு லக்கேஜ் கட்டணமாக ரூ.200 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தெய்வசிகாமணி ரூ.50 வேண்டுமானால் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதை நடத்துனர் ஜெகதீஷ் ஏற்க மறுத்ததால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தெய்வசிகாமணியை கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையம் அருகில் பேருந்துசில் இருந்து கீழே இறக்கி விட்டனர். அப்போது அவர், ஜெகதீசிடம் தனது பயணச்சீட்டுக்கான பணத்தை திருப்பித்தருமாறும், தான் பெங்களூரு செல்ல கையில் வேறு எதுவும் பணம் இல்லை என்று கூறினார். அதற்கு ஜெகதீஷ் தர மறுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட தெய்வசிகாமணி, இதுபற்றி விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 22.9.2023 அன்று வழக்கு தொடர்ந்தார்.

1 லட்சம் அபராதம்:

இவ்வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறியுள்ளனர். அதாவது இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட தெய்வசிகாமணியை இரவுநேரம் என்று பாராமல் நடுவழியில் இறக்கி விட்டு பயணச்சீட்டுக்கான பணத்தை திருப்பி அளிக்காமல் சென்றதற்காகவும், அவருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் சம்பந்தப்பட்ட கர்நாடகா மாநில அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் மற்றும் பேருந்து கண்டக்டர் ஜெகதீஷ் ஆகியோருக்கு ரூ.1 லட்சம் அபராதமும், புகார்தாரருக்கு பயணச்சீட்டுக்கான தொகையான ரூ.660-ஐ 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும், மற்றும் அவருடைய வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமெனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Rashmika Mandanna Escaped Death Post As Flight Hit By Technical issues lal salam collection cinema headlines | Cinema Headlines:நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா; வசூலில் சொதப்பிய லால் சலாம்
Aishwarya Shankar: இயக்குநர் ஷங்கர் மகளுக்கு உதவி இயக்குநருடன் இரண்டாவது திருமணம்: வாழ்த்திய தங்கை அதிதி!
இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா ஷங்கர் மற்றும் ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்தத் தகவலை நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க
Kamala Cinemas: மீண்டும் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கும் ரீரிலீஸ்! எப்போ யாரு படங்கள்?
வரும் பிப்ரவரி 22ஆம் தேதி அண்ணாமலை திரைப்படம் கமலா திரையரங்கில் வெளியாகிறது. தொடர்ந்து ரஜினி நடித்த மன்னன் படமும் வெளியாக இருக்கிறது. மேலும் இதே தேதியில் விஜய்யின் திருமலை படமும் திரையிடப்படுகிறது.
இப்படங்கள் தவிர்த்து விஜய் நடித்த காதலுக்கு மரியாதை மற்றும் அஜித் குமார் நடித்த வாலி படமும் வரும் 23ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் படிக்க
One 2 One: வெளியானது சுந்தர் சி நடித்த ஒன் டூ ஒன் படத்தின் சிங்கம் சிறுத்தை பாடல் லிரிக்ஸ் வீடியோ!
இயக்குநர் திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி அனுராக் கஷ்யப் நடித்துள்ள படம் One 2 One. இருவேறு குணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் படமாக one to one படம் உருவாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தில் இருந்து சிங்கம் சிறுத்தை என்கிற லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ நடிகர் விஜய் சேதுபதியின் குரலில் அமைந்துள்ளது.மேலும் படிக்க
Lal Salaam Box Office: வசூலில் சொதப்பிய ரஜினியின் லால் சலாம்! 9 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்ன?
லால் சலாம் படம் முதல் நாளில் இந்தியளவில் 3.55 கோடியும் இரண்டாவது நாளாக 3.25 மற்றும் மூன்றாவது நாளாக 3.15 கோடியும் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறையத் தொடங்கியது. நான்காவது நாளாக 1.13 கோடிகளாக குறைந்த படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் சரிவை நோக்கிச் சென்றுள்ளது. மேலும் படிக்க
Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். ராஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது உயிர் தப்பித்தது எப்படி? என்பது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க
மேலும் காண

Tamil Nadu Government conducts a three day training camp on YouTube Channel Creation | Digital Marketing Training: டிஜிட்டல் மார்க்கெட்டிங் தெரியணுமா? தமிழ்நாடு அரசின் 3 நாள் பயிற்சி முகாம்
Youtube Channel Training: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.
சென்னையில் 3 நாள் பயிற்சி:
செல்போன் வைத்திருக்கும் பலரும் தங்களுக்கு என்று தனி யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதையே வேலையாக வைத்து சம்பாதிக்கும் சூழல் இன்று உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் தான் இதில் அதிகமான யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர்.
இது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் கை கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறிந்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. ஏற்கனவே பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த மாதத்தில் இரண்டாவது கட்ட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதேபோல, தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக அழகுக்கலை பயிற்சியும் (பியூட்டிஷியன்-மேக்கப்) நடைபெற உள்ளது.
எப்போது, எங்கே நடைபெறுகிறது?
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் மற்றும் அழகுக்கலை குறித்த பயிற்சி வரும் 21.02.2024 முதல் 23.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் என்ன?
இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி? வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு – ஆன்லைன் மார்க்கெட்டிங் – மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
பார்த்தசாரதி கோயில் தெரு,
இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600 032
44-22252081/22252082, 8668102600 / 86681 00181 / 7010143022 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க
AIADMK – BJP: தங்கமணி – வானதி சீனிவாசன் சந்திப்புக்கு காரணம் என்ன? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்மேலும் காண

Former Madras High court Judge k Chandru says Tamil Nadu has 10 ST judges in district judiciary
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இவர், சமூக ரீதியாகவும் பொருளதார ரீதியாகவும் பல்வேறு சவால்களை கடந்து ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்தார்.
தமிழ்நாட்டின் முதல் பழங்குடி நீதிபதி ஸ்ரீபதியா?
சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் வெற்றிபெற்று சிவில் நீதிபதியாக பயற்சி பெற உள்ளார் ஸ்ரீபதி. இதன் மூலம், தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை ஸ்ரீபதி பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால், தமிழ்நாட்டின் முதல் பழங்குடி சிவில் நீதிபதி ஸ்ரீபதி இல்லை என்றும், அவருக்கு முன்பே பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் நீதிபதியாக இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 10 பேர், சிவில் நீதிபதியாக உள்ளனர் என சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. சந்துரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்த அவர், “பழங்குடியினத்தை சேர்ந்த (ST) பலர், கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் இந்த சாதனையை படைத்துள்ளனர். மேலும் தற்போது மாநிலத்தின் மிக மூத்த முதன்மை அமர்வு நீதிபதியான எஸ். அல்லி, பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்தான். தற்போது, சென்னை முதன்மை அமர்வு நீதிபதியாக உள்ளார்.
உண்மை நிலவரம் என்ன?
பிப்ரவரி 16ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதித்துறையில் 10 பழங்குடியினர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மாவட்ட நீதிபதி. நான்கு பேர் மூத்த சிவில் நீதிபதியாக உள்ளனர். 5 சிவில் நீதிபதிகள். தமிழ்நாட்டில் பணியாற்றும் துணை நீதிபதிகளில் ஒருவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்தவர். தற்போது, தேர்வாகியுள்ள ஸ்ரீபதியும் அதே பகுதியை சேர்ந்தவர்தான். எனவே, இப்போதுதான் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் சிவில் நீதிபதியாக உள்ளார் என்று கூறுவது தவறு” என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, நீதித்துறையில் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். “தமிழ்நாட்டில் பழங்குடியின பிரிவினருக்கு வழங்கப்படும் 1 சதவிகித இடஒதுக்கீட்டை கணக்கில் கொண்டாலும், சுமார் 15 மாவட்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 10 பேர் மட்டுமே உள்ளனர்.
உயர் நீதித்துறையிலும் பழங்குடி சமூகத்திற்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். கடந்த 2023ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற கொலீஜியமும் அத்தகைய தேவையை அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் கவுகாத்தி நீதிபதியாக ஒரு வழக்கறிஞரின் பெயரை நியமிக்க பரிந்துரைத்தது” என்றார்.
மேலும் காண

jayam ravi siren movie box office collection
ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் (Siren) படத்துக்கு மக்களிடையே வரவேற்பு முதல் நாளைக் காட்டிலும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
சைரன்
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன்படம் நேற்று பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
படத்தின் கதை
ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் ஜெயம் ரவி செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக் கைதியாக 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகின்றார். வீட்டில் இருக்கும் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கு ஜெயம் ரவியின் மகள், “கொலைகார அப்பாவைப் பார்க்க மாட்டேன்” எனக் கூறி வீட்டில் இருந்து வெளியே போகிறார். தனக்கு கிடைத்த பரோலில் தனது குடும்பத்தை பார்ப்பது மட்டும் இல்லாமல், தான் 14 ஆண்டுகள் சிறையில் இருக்க காரணமானவர்களை பழிவாங்கவும் ஜெயம் ரவி முயற்சி செய்கின்றார். அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பது மீதிக்கதையாக உள்ளது.
முதல் நாள் வசூல்
ஜெயம் ரவி நடித்து முன்னதாக வெளியான இறைவன் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் சைரன் படத்தின் மீது மக்களுக்கு சற்று எதிர்பார்ப்புகள் குறைந்தே காணப்பட்டன. ஆனான் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் முதல் நாளைக் காட்டிலும் படத்திற்கு வசூல் அதிகரித்துள்ளது.
*Siren Day 3 Morning Occupancy: 14.90% (Tamil) (2D) #Siren https://t.co/fYlgs7FJsp*
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) February 18, 2024இந்நிலையில் சைரன் படத்தின் வசூல் நிலவரம் பற்றி பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது. அதன்படி, முதல் நாளில் சைரன் படம் இந்தியளவில் ரூ.1.4 கோடிகளை வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று படம் ரூ.1.73 கோடிகளை வசூல் செய்துள்ளது. மூன்றாவது நாளான இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க : Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து – சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ!
Shaktimaan: அட… சக்திமானாக ரன்வீர் சிங்! கைகோர்க்கும் மின்னல் முரளி இயக்குநர்? வேற லெவல் தகவல்!மேலும் காண

CM Stalin: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்! மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும்
போராட்டம் நடத்திய மீனவர்கள்:
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 23 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்ககை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 23 மீனவர்களை கைது செய்தனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணையை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, கைது செய்யப்பட்ட 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். மீனவர்களின் போராட்டத்தினால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகுள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. இதனால், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
“மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும்”
இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதன்படி, “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
The continuous apprehension of Tamil Nadu fishermen by Sri Lankan Navy is deeply concerning. Over the past two months, there has been a sharp rise in arrests, with a staggering 69 fishermen apprehended. What’s more alarming is the unjust branding of three fishermen as habitual… https://t.co/zgTCfVJuni
— M.K.Stalin (@mkstalin) February 18, 2024மேலும், தொடர்ந்து எல்லை தாண்டியதாக மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அநீதியானது மற்றும் விபரீதமானது. இதை நிலை தொடர்ந்தால், தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசிய மயமாக்குவதும், மீனவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பை அபகரிப்பதாகும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையீட வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக நான் வலியுறுத்துகிறேன். தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் படகுகுள் மீட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மீனவர்களின் நலனை காக்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இலங்கை சிறையில் உள்ளவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருக்குரிய இந்தியர்கள்” என்று பதிவிட்டிருந்தார்.மேலும் காண

Vanathi Srinivasan demands that the Chief Minister should stop the attempts to build a dam in Meghadatu | காங்கிரஸ் தலைவர்களுடனான நெருக்கத்தை தமிழக நலனுக்கு முதல்வர் பயன்படுத்த வேண்டும்
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அணை கட்ட முடியாது:
அதில், “கர்நாடக மாநில சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, ’காவிரியாற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளோம். முறையான அனுமதி பெற்று விரைவில் அணையின் கட்டுமானப் பணிகளை தொடங்குவோம்’ என்று அறிவித்துள்ளார். சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1924-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, காவிரியாறு பாயும் தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையையும் கட்ட முடியாது. இதை காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.
முறியடிக்க வேண்டியது அவசியம்:
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி காவிரியாற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவோம் என்று கர்நாடக சட்டப்பேரவையிலே யே அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேகதாதுவில் அணை இல்லாத போதே, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வறட்சியான காலங்களில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடகம் மறுத்து வருகிறது.
இத்தகைய சூழலில், மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு இப்போது கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும். விவசாயத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் காவிரி நீரே உள்ளது. எனவே, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால், தமிழக நலன்களை காற்றில் பறக்கவிட்டு, கண்டனம் கூட தெரிவிக்காமல், ‘மேகதாதுவில் அணை கட்ட முடியாது’ என்று வழக்கமான பல்லவியை பாடி இருக்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
தமிழக நலனுக்கும் பயன்படுத்துங்கள்:
திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் தமிழக விவசாயிகள் நலன், தமிழக மக்களின் குடிநீர் தேவையை விட அரசியல் நலனே முக்கியமானதாக இருக்கிறது. கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தால், சோனியாவும், ராகுலும், பிரியங்காவும் கோபித்துக் கொள்வார்கள் என்பதால், தமிழக நலன்களை காவு கொடுக்கவும் திமுக தயாராகிவிட்டது. இதனால்தான், மேகதாது அணை விவகாரத்தில் மென்மையான போக்கே திமுக அரசு கையாண்டு வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் பதவியேற்ற போது பெங்களூருக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்கள் உடனான தனது நெருக்கத்தை, அரசியல் நலன்களுக்காக மட்டும் பயன்படுத்தாமல், தமிழகத்தில் நலன்களுக்காகவும் பயன்படுத்தி, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும். இதற்கு சட்ட ரீதியான தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.மேலும் காண

Tamil Thalaivas Match Preview – வெற்றியுடன் விடைபெறுமாதமிழ் தலைவாஸ்? பெங்கால் வாரியர்சுடன் மோதல்

வெற்றியுடன் விடைபெறுமாதமிழ் தலைவாஸ்? பெங்கால் வாரியர்சுடன் மோதல்

rajinikanth lal salaam movie 9 days box office collection
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் 9 நாள் வசூல் நிலவரங்களைப் பார்க்கலாம்.
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படம் கடந்த பிப்ரவரி 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. ரஜினிகாந்த் கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளார்கள். உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பு அளித்தார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான லால் சலாம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகின. படத்தில் ரஜினியின் நடிப்பு சிறப்பாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தார்கள். சாதி, மத பேதங்கள் இல்லாமல் ஒற்றுமையை இப்படம் வலியுறுத்தியுள்ளது ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
இந்து – முஸ்லீம்களுக்கு இடையிலான சமத்துவத்தை வலியுறுத்தும் படமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு எற்கும் வகையில் இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள காட்சிகள் மாஸாக இருந்தாலும் விக்ராந்த் , மற்றும் கதாநாயகியாக நடித்த அனந்திகா சனில்குமார் போன்றவர்களுக்கு படத்தில் உறுதியான கதாபாத்திரங்கள் வழங்கப் படவில்லை என்பது பெரும்பாலாவர்களின் கருத்தாக வெளிப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் சாக்னிக் தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி லால் சலாம் படத்தின் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்
லால் சலாம் முதல் நாள் வசூல்லால் சலாம் படம் முதல் நாளில் இந்தியளவில் 3.55 கோடியும் இரண்டாவது நாளாக 3.25 மற்றும் மூன்றாவது நாளாக 3.15 கோடியும் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறையத் தொடங்கியது. நான்காவது நாளாக 1.13 கோடிகளாக குறைந்த படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் சரிவை நோக்கிச் சென்றுள்ளது.
முதல் வாரத்தில் மொத்தம் 15. 08 கோடிகளை வசூல் செய்தது லால் சலாம் . இந்நிலையில் 9 ஆவது நாளான நேற்று 39 லட்சம் படம் வசூல் செய்துள்ளது. இன்று 10 ஆவது நாளில் 17 லட்சம் வரை படம் வசூல் ஈட்டும் என்று இந்த தளத்தில் கூறப்பட்டுள்ளது.
லவ்வர்
லால் சலாம் படத்தின் வசூல் சரிவிற்கு மற்றுமொறு காரணம் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படம் மிகப்பெரிய வெற்றியும் தான். பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் , கெளரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள் , ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகச்சிறிய பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 6 கோடிகளுக்கும் மேலாக முதல் வாரத்தில் வசூல் செய்தது. மேலும் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்தும் படத்திற்கு வரவேற்பு இருந்து வருகிறது.மேலும் படிக்க : Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து – சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விமானப் பயணம்: குக் வித் கோமாளி மேடையில் சொன்னதை செய்த மைம் கோபிமேலும் காண

"விஜய் மக்களுக்கு நல்லது செய்வார்" ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நம்பிக்கை

திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தேர்தல் வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ கலந்து கொள்ள திருவண்ணாமலை வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து துரை வைகோ பேட்டியளிகையில், "மத்தியில் பாஜக ஆட்சியமைத்து சுமார் 10 ஆண்டு காலம் ஆகின்றது எனவும், பொது மக்களின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவேன் என்று தெரிவித்து அதனை நிறைவேற்றவில்லை என்றும், குறிப்பாக விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்று தெரிவித்து விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், கடந்த ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் விளைவிக்கக்கூடிய பொருட்களுக்கு குறைந்த பட்ச விலையை மட்டும் தான் விவசாயிகள் கேட்டனர். அதற்கு பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தனர்.

விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள்:

இதற்கு விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து ஒரு வருட காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பல விவசாயிகள் இறந்தனர். விவசாயிகளின் போராட்டத்தால் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தருவோம் என்று பாஜக அரசு தெரிவித்து அதனையும் நிறைவேற்றவில்லை, மத்திய அரசு அறிவித்த வாக்குறிகளை நிறைவேற்ற வலியுறுத்தி காந்திய வழியில் போராட்டம் நடத்த சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதும், முள் தடுப்புகளை வைத்து விவசாயிகளை தடுப்பதும் பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளனர்.

குறிப்பாக நேற்று ஒரு விவசாயி உயிரிழந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது மக்கள் பாஜக அரசிற்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்று நம்புகின்றனர். கர்நாடகா மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவில் இதற்கு முன்பாக பாஜக ஆட்சியில் இருந்தது. தற்போது காங்கிரஸ் ஆட்சி உள்ளது. எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தையும், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக காவிரி உரிமையை கர்நாடகா வழங்கும் என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளது.

அண்ணாமலையின் செயல்பாடுகள் மிகுந்த ஏமாற்றம்

பாஜகவுடன் கடந்த பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தவர்கள் அதிமுகவினர் மத்திய பாஜக அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அதிமுக உறுதுணையாக இருந்தது. தற்போது கூட்டணியில் இருந்து விலகியதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தனர் இந்த நிலைபாட்டில் இருந்து அதிமுக பின்வாங்க கூடாது, குறிப்பாக தேர்தல் நேரத்தில் இது ஒரு போட்டியாக இருக்குமோ என்று பொது மக்கள் சந்தேகிக்கின்றனர்.

வரும் காலங்களில் பாஜகவை அதிமுக எதிர்த்து வந்தால் அதனை வரவேற்பதாகவும், ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதனை நம்புவதாக இல்லையென்றும் , தமிழக மாநில தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரையில் சராசரி அரசியல்வாதியாக வரமுறையில்லையென்றும், அதிகம் படித்த அண்ணாமலையில் நடவடிக்கைகள், அறிக்கைகள், செயல்பாடுகள் அனைத்தும் ஏமாற்றத்தை கொடுப்பதாகவும், நன்கு படித்த அண்ணாமலை அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று பல நபர்கள் நினைத்தனர். ஆனால் அவரின் செயல்பாடுகள் மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும், அவரின் செயல்பாடுகளால் பாஜக கட்சியை பாதிக்கும்

விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்று தனக்கு நம்பிக்கை உள்ளது

அரசியல் இயக்கங்கள், அரசியல் தலைவர் அனைவரும் மக்களுக்கான வாழ்வாதார அரசியலை மட்டுமே பேச வேண்டும், ஆனால் தற்போது உள்ள அரசியல் தலைவர்கள் பெரும்பான்மையாக ஜாதியை வைத்தும், மதத்தை வைத்தும் அரசியல் செய்து வருவதாகவும், உதாரணமாக பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவேன் என்று வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் மத்தியில் பாஜக ஆட்சியில் வந்ததில் இருந்து விலைவாசி அதிகரித்துள்ளதாகவும், பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவிதமான ஆக்கப்பூர்வ பணிகளையும் செய்யவில்லை, குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் எந்த ஒரு தொகுதிலாவது போட்டியிட்டு வெற்றி பெறட்டும் என்று தான் சவால் விடுப்பதாகவும், திராவிட இயக்கங்கள் மக்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டும் அண்ணாமலை தனித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெருவாரா என்றும், அவர் தனியாக ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? என்று சவால் விடுத்தார்.

நடிகர் விஜய் தற்போது தான் கட்சியை ஆரம்பித்துள்ளார், தற்போது வரையில் அவரின் கட்சி கொள்கையை அறிவிக்கவில்லை, அவரின் செயல்பாடுகள் என்ன என்று தெரியவில்லை, மக்களுக்கு சேவை செய்வதில் யார் வந்தாலும் வரவேற்பதாகவும், விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

AIADMK – BJP: தங்கமணி – வானதி சீனிவாசன் சந்திப்புக்கு காரணம் என்ன? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பாஜக வுடன் கூட்டணி இல்லை, நட்பு ரீதியான அடிப்படையில் மட்டுமே பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினார்கள் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருஉருவப் படத்துக்கு அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தாக்கப்படும் மீனவர்கள்:

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ” சிந்தனை சிற்பியின் புகழை போற்றும் வகையில் அதிமுக ஆட்சியில் மணிமண்டபமும், ஒரு ஆண்டும் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் பெயரில் இரண்டு லட்ச ரூபாய் பரிசு தொகையும், எட்டு கிராம் தங்கமும் கொண்ட விருது வழங்கவும் ஆவணம் செய்யப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்து நாளில் இருந்து மீனவ மாவட்டங்கள் தொடர்ந்து சொல்வேனா துயரத்துக்கு ஆளாகி வருகிறது. இலங்கை கடற்படையிடம் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவற்றை தடுக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை.

போதை பொருள் நடமாட்டம்:

கடந்த நான்காம் தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களின் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் 23 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். 20 மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மீனவர்களை விடுவிக்க மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அவற்றை கண்டு கொள்ளாமல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உடனடியாக அழுத்தம் கொடுத்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சாரத்தை இரும்பு கரம் கொண்டு ஒழிக்காமல் கரும்பு கரம் காட்டுவதால் தான் தமிழகத்தில் போதை கஞ்சா கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கஞ்சா போதை வஸ்துகள் ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்காததால் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது, போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியும்.

சந்திப்பு ஏன்?

பாஜக உடன் கூட்டணி இல்லை. இதை பலமுறை சொல்லிவிட்டோம். பாஜக கூட்டணிக்கு அதிமுக கதவு எப்போதோ அடைக்கப்பட்டது. நீட் விவகாரத்தில் மோசடி பேர்வழி திமுக. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி உள்ளது திமுக. சட்டமன்றத்தில் நட்பு ரீதியான அடிப்படையில் மட்டுமே பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினர்” என தெரிவித்துள்ளார்.