Month: February 2024

• Nayanthara Photos : தாதாசாகேப் பால்கே விருது விழா : சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்ற நயன்!

Nayanthara Photos : தாதாசாகேப் பால்கே விருது விழா : சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்ற நயன்!

Nayanthara Photos : தாதாசாகேப் பால்கே விருது விழா : சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்ற நயன்!

Source link

• farmers protest 5th round talks to be held police throws tear gas against farmers march

farmers protest 5th round talks to be held police throws tear gas against farmers march

Farmers Protest : வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திய போராட்டக்காரர்கள் இன்று முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Modified tractor to break barricade spotted at Shambhu border. #FarmerProtest pic.twitter.com/KGsoLOZqZG
— Megh Updates 🚨™ (@MeghUpdates) February 21, 2024

டெல்லி எல்லையில் விவசாயிகள் நுழைவதை தடுப்பதற்காக இரும்புத் தடுப்புகள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த தடுப்புகளை முறியடித்து உள்ளே செல்வதற்காக விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எல்லைக்கு வந்துள்ளது. போலீசார் வீசும் கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் குண்டுகளில் இருந்து தப்பிப்பதற்காக இரும்பிலான தகர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

VIDEO | Farmers’ ‘Delhi Chalo’ march: Security forces fire tear gas shells as agitating farmers try to proceed to Delhi from Punjab-Haryana #ShambhuBorder.#FarmersProtest (Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/hJCbowtYmi
— Press Trust of India (@PTI_News) February 21, 2024

இந்நிலையில் இன்று போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஹரியானா காவல் துறையினர் விவசாயிகளை நோக்கி மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால் அந்த இடமே கலவரமாக காட்சியளித்தது. தொடர்ந்து போராட்டம் வலுபெறும் நிலையில், மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா 5 வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

#WATCH | Jhajjar, Haryana: On security arrangements amid farmers’ call for ‘Delhi Chalo’ march, Jhajjar SP Arpit Jain says, “… All DSPs are on duty… We are prepared for every situation that may arise. All those deployed are specially trained. Strict legal action will be taken… pic.twitter.com/6XP54iepop
— ANI (@ANI) February 21, 2024

இது தொடர்பாக ஹரியானா எஸ்.பி கூறுகையில், “அனைத்து டி.எஸ்.பி.க்களும் பணியில் உள்ளனர். எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பணியில் அமர்த்தப்பட்டவர்கள் அனைவரும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்தைப் பொறுத்தவரை, ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாளில் நாங்கள் தொடர்ந்து இடுகையிடும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண

Source link

• Kanguva movie update suriya and the crew begins dubbing work siruthai siva disha patani

Kanguva movie update suriya and the crew begins dubbing work siruthai siva disha patani

சிறுத்தை சிவா இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில், நடிகர் சூர்யாவின் 42ஆவது படமாக இந்த ஆண்டு வெளியாகும் திரைப்படம் ‘கங்குவா’.
ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்க்க, பாலிவுட் நடிகை திஷா பதானி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அனிமல் படப் புகழ் நடிகர் பாபி தியோல், நடிகர் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கும் நிலையில், சமூபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
கோடை விடுமுறையைக் குறிவைத்து மெகா பட்ஜெட் பான் இந்திய படமாக இந்த ஆண்டு ஏப்ரலுக்கு கங்குவா வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கங்குவா படத்துக்காக நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்களை படக்குழு தற்போது பகிர்ந்துள்ளது.

His presence set our screens on fire, and now his voice will rule us all ❤‍🔥Dubbing begins 🎙 for our #Kanguva 🦅 at the newly commenced, world class post-production studio @AadnahArtsOffl 🔥@Suriya_offl @thedeol @DishPatani @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe… pic.twitter.com/uABYJdgdQ8
— UV Creations (@UV_Creations) February 21, 2024

மேலும் காண

Source link

• புது பொலிவுடன் கலைஞர் கருணாநிதி நினைவிடம்.. வருகின்ற 26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!

புது பொலிவுடன் கலைஞர் கருணாநிதி நினைவிடம்.. வருகின்ற 26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடக் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், வருகின்ற 26ம் தேதி சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் வரும் 26ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கலைஞர் கருணாநிதி நினைவிடம்:
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலமானார். தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்தது. இதையடுத்து திமுக முன்னாள் தலைவரும், 5 முறை தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அப்போது, விதிஎண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, ” முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை வெளிப்படுத்த வேண்டும். மேலும், அவரது சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்” என்றார்.
அதன்படியே, கடந்த 2021ம் ஆண்டு முதல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூபாய் 39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து,  அவரது சிந்தனைகள், சிந்தாந்தங்கள், சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டது. தற்போது வருகின்ற 26ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காண

Source link

• Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக யார்? கடும் போட்டியில் 4 இந்திய பந்துவீச்சாளர்கள்..!

Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக யார்? கடும் போட்டியில் 4 இந்திய பந்துவீச்சாளர்கள்..!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி ராஞ்சியில் வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. ராஞ்சியில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக விளையாடும் பதினொன்றில் யார் இடம் பெறுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால், இந்த போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து பணிசுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டார். ஐந்தாவது டெஸ்டில் விளையாடுவாரா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை.  நான்காவது டெஸ்ட் போட்டியின் முடிவுக்குப் பிறகு அதுகுறித்த முடிவு எடுக்கப்படும். நான்காவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஐந்தாவது டெஸ்டிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முடிவு எதிர்மாறானால் பும்ரா ஐந்தாவது டெஸ்டில் விளையாடுவார். தொடர்ந்து விளையாடி வருவதால் பணிச்சுமையை காரணமாக நான்காவது டெஸ்டில் பும்ராவுக்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளது.

பும்ராவுக்கு பதிலாக 4 பந்துவீச்சாளர்கள் போட்டி:

பும்ராவை விடுவித்த பிறகு, முகேஷ் குமார் மீண்டும் இந்திய அணியில் அழைக்கப்பட்டுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன், ரஞ்சி போட்டியில் விளையாடுவதற்காக முகேஷ் குமார் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ரஞ்சி போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடும் போது, ​​முகேஷ் குமார் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தற்போது மீண்டும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர இந்தியா-ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் தீப்பும் தனது அறிமுகத்திற்காக காத்திருக்கிறார். அதேசமயம், இங்கிலாந்துக்கு எதிரான ராஞ்சியில் நடைபெறும் போட்டியின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நான்காவது டெஸ்டில் அதிகமாக சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாம். இதன் காரணமாக இந்திய அணி ஆடும் லெவனில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கே இடம் கொடுக்கலாம்.  இது நடந்தால் பும்ராவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்ஷர் படேல் இடம் பெறுவார்கள்.

முகேஷ் குமார், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் படேல் என நான்கு வீரர்களில் யார் ப்ளேயிங் 11ல் விளையாடுவார். ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக கேப்டன் ரோஹித் சர்மா விளையாடும் பதினொன்றில் யாருக்கு வாய்ப்பை தருவார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நான்காவது டெஸ்ட் போட்டி

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல்,ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாக் க்ராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஒல்லி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட்சன் , மார்க் வூட்

Source link

• Tiruvannamalai  Lok Sabha Constituency 2024 திருவண்ணாமலை

Tiruvannamalai  Lok Sabha Constituency 2024 திருவண்ணாமலை

திருவண்ணாமலை  மக்களவைத் தொகுதி 2024  (Tiruvannamalai  Lok Sabha Constituency 2024)
பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை ( tiruvannamalai  Lok Sabha constituency ) மக்களவைத் தொகுதியில் அதிக அளவில் விவசாயத்தை மட்டுமே உள்ளனர். இந்த தொகுதியில் வறட்சியின் காரணமாக இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதன் காரணமாக இளைஞர்கள் வேலை தேடி சென்னை, கோயம்பத்தூர், ஓசூர், திருப்பூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு செல்கின்றனர்.  திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் வன்னியர், பட்டியலினத்தினர், முதலியார், யாதவர், பழங்குடியின மக்களும் வசித்து வருகின்றனர். திருப்பத்தூர் தொகுதியாக இருந்து வந்தது. 2008-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது திருவண்ணாமலை தொகுதி  புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதனை அடுத்து திருவண்ணாமலை  நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம் (தனி), கீழ்பென்னாத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் திருவண்ணாமலை  நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.
வாக்காளர்களின் விவரம்

வ.எண்

தொகுதியின்
பெயர்

ஆண்
வாக்காளர்கள்

பெண்
வாக்காளர்கள்

மூன்றாம்
பாலின வாக்காளர்கள்

மொத்த
வாக்காளர்கள்

1
திருவண்ணாமலை
13,39,31
14,30,12
40
276,983

2
கீழ்பென்னாத்தூர்
12,50,04
13,01,47
11
255,162

4

செங்கம்

13,74,67

13,99,89

11

277,467

5

கலசப்பாக்கம்

122113

125855

10

247,978

6

ஜோலார்பேட்டை

1,16,791

1,18,793

17

235,601

7

திருப்பத்தூர்

1,13,694

1,14,873

29

228,596

மொத்தம்

749,000

772,669

118

1,521,787

வெற்றி பெற்றவர்கள்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக  கட்சியை சேர்ந்த வேணுகோபால். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் வன ரோஜா, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை  ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
யாருடைய கோட்டை ?
திருவண்ணாமலை  மக்களவை தொகுதியில் திமுக  2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1 முறை வெற்றி பெற்றுள்ளது.
2019 தேர்தல் நிலவரம் எப்படி ?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக சார்பில் சி.என் அண்ணாதுரை போட்டியிட்டார். அவர் 6,66,272 ( 57.85 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3,62,085 (31.44 சதவீதம் ) வாக்குகள் பெற்றார். இதில் திமுக வேட்பாளரான சி.என் .அண்ணாதுரை, அதிமுக வேட்பாளரான, எஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தியை விட 3,04,187 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார்.
2021 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்
திருவண்ணாமலை  –  எ .வ.வேலு  ( திமுக )கீழ்பென்னாத்தூர்  – கு.பிச்சாண்டி  ( திமுக)செங்கம்  – மு.பே.கிரி   ( திமுக )கலசப்பாக்கம்  –  சரவணன் ( திமுக )ஜோலார்பேட்டை  – தேவராஜ் ( திமுக )திருப்பத்தூர்  –  நல்லதம்பி  (திமுக)

நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை நாடாளுமன்றத்தின் செயல்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை 52 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 442 கேள்விகள் எழுப்பியுள்ளார். ஒரு தனி நபர் தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளார். 78 சதவீத வருகை பதிவை வைத்துள்ளார். சென்னை – திருவண்ணாமலை -ஜோலார்பேட்டை இடையே ரயில்கள் இயக்க கோருதல், திருவண்ணாமலையில் சிறிய விமான நிலையம், பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேன்படுத்துதல், படியிலான பட்டியலில் குருமன்ஸ் இன மக்களை சேர்ப்புதல் போன்ற விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை மீது  மக்கள், விவசாயிகளின்  கருத்து என்ன ?
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதியில் எம்பி அண்ணாதுரை எதுவும் செய்யவில்லை, செங்கம் பகுதியில் பூக்கள் அதிகமாக விளைகிறது. அதற்கு சென்ட் தொழிற்சாலை கேட்டோம், வேளாண் விதை பண்ணை ஆராய்ச்சி மையம் கேட்டோம், காய்கறிகள் பதப்படுத்தும் மையம் கேட்டோம், திண்டிவனம் – திருவண்ணாமலை ரயில் பாதை தற்போதுவரையில் கொண்டு வரவில்லை, திருவண்ணாமலை ஜோலார் பேட்டை ரயில் பாதை திட்டம் கொண்டுவரவில்லை. நந்தன்கள்வாய் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு தொழிற்சாலைகள் கொண்டு வரவில்லை, சாத்தனுர் அணை தூர்வாரவில்லை, சாத்தனுர் அணை செய்யாறு இணைந்திருக்கலாம் ஆனால் எதுவும் செய்யவில்லை, ஜவ்வாது மலை மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் இல்லை, ஜவ்வாது மலை மக்களுக்கு எந்தவித பொருளாதார கட்டமைப்பும் ஏற்படுத்தி தரவில்லை,  எம்பி அண்ணாதுரை கொடுத்த வாக்குறுதியை எதையும் நிறைவேற்றாமல் உள்ளார். மக்களின் வளர்ச்சிக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, அமைச்சர் கூறுவதை மட்டுமே மக்களுக்கு  செய்துவருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு திட்டத்தைக்கூட முழுமையாக செயல்படுத்தவில்லை என  பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர் .பல்வேறு தொகுதியில் மின்விளக்கு, பள்ளி கட்டிடங்கள், சுற்றுச்சுவர் போன்றவற்றை மட்டும்தான் செய்துள்ளார். எம்பி அண்ணாதுரை திமுக கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் செல்வதற்கே நேரம் சரியாக உள்ளது. அமைச்சர் எ.வ.வேலு வெளியில் வந்தால் மட்டுமே எம்பி வெளியில் வருகிறார். மீதமுள்ள நேரத்தில் அவருடைய தொழிலை மட்டும் நன்றாக பார்த்து வருகிறார். அமைச்சரை மீறி எதுவும் செய்யமுடியாமல் தவித்து வருகிறார் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் செய்யப்பட்ட பணிகள் குறித்து எம்பி அண்ணாதுரையிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பு வைப்பதாக கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.

Source link

• TN Weather Update: ஒருபக்கம் சூடு கிளப்பும் சூரியன்.. மறுபக்கம் மழைக்கு வாய்ப்பு.. வானிலை சொல்லும் தகவல் என்ன?

TN Weather Update: ஒருபக்கம் சூடு கிளப்பும் சூரியன்.. மறுபக்கம் மழைக்கு வாய்ப்பு.. வானிலை சொல்லும் தகவல் என்ன?

தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாலை மறுநாள் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று,  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  வடதமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 23 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  வடதமிழக உள்மாவட்டங்களில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 24 மற்றும் 25 ஆம் தேதி,  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதி, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது.  சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.5 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 33.1  டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Source link

• director perarasu condemn to av raju’s controversial speech

director perarasu condemn to av raju’s controversial speech

சில அரசியல்வாதிகள் பேச்சில்  விஷம் இருக்கிறது என இயக்குநரும், பாஜக பிரமுகருமான பேரரசு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஏ.வி. ராஜூ என்பவர் மாவட்ட செயலாலராக இருக்கும் வெங்கடாச்சலம் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். இதனால் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக கட்சியில் இருந்து ராஜூவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நீக்கினார். இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏ,வி.ராஜூ, 2017 ஆம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் பற்றி பல பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். அப்போது நடிகை திரிஷா  பற்றி ஆதாரமற்ற தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார். மேலும் திரையுலகைச் சேர்ந்த நடிகைகள், நடிகர் கருணாஸ் உள்ளிட்டவர்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சேரன், கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் மன்சூர் அலிகான்,  விஷால், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி  நடிகை கஸ்தூரி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஏ.வி.ராஜூ செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இயக்குநர் பேரரசு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில், “அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்! அவர்களின் பேச்சில்  விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது! சமீபத்தில் ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட நடிகைகளின் பெயரைச் சொல்லி அயிட்டம் என்று சொன்னது, ஏ.வி.ராஜூ என்பவர் இப்பொழுது திரிஷா அவர்களின் பெயரை குறிப்பிட்டு கூவத்தூர் கூத்தில் சம்பந்தப்படுத்தியது இதெல்லாம் அருவருக்க செயலாகும்!
ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசி அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற  ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது.இந்த மாதிரியான  அநாகரீக செயலுக்கு பாதிக்க பட்டவர்கள் புகார் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லாமல், காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்படிப்பட்ட அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்!” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Vishal: த்ரிஷா பற்றி சர்ச்சை பேச்சு.. பணம் சம்பாதிக்கும் ட்ரெண்ட் என விஷால் கடும் கண்டனம்!

மேலும் காண

Source link

• Edappadi Palanisamy : திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. சாடிய எடப்பாடி பழனிசாமி

Edappadi Palanisamy : திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. சாடிய எடப்பாடி பழனிசாமி

மதுரை சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அதிமுகவில் இருந்த சிலர் பாஜகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், "இது ஜனநாயக நாடு யாரு வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம்" என்றார். திமுகவினர் வாரிசு அரசியல் செய்வதாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் அவர் மகனுக்கு சீட் கேட்கிறார் இது வாரிசு அரசியல் இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,  "அரசியல் வாரிசு என்றால் புரிந்துகொள்ள வேண்டும். சீட் கொடுப்பது அல்ல. தலைமைப் பொறுப்பு. திமுக தலைவராக கருணாநிதி இருந்தார், அதன்பின் ஸ்டாலின் இருக்கிறார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் வர முயற்சி செய்கிறார்கள் இதுதான் வாரிசு அரசியல். ஒரு குடும்பத்திற்கு போகக்கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த வரையில் வாரிசு அரசியல், குடும்ப கட்சி. அது ஒரு கார்ப்பரேரேட் கம்பெனி. அதிமுகவில் என்னைப்போல் சாதாரண தொண்டனும் உயர் நிலைக்கு வர முடியும். அது அதிமுகவில் மட்டும்தான் முடியும்” என்றார்

அதிமுகவில் இருந்து விலகியவர்கள், நீக்கப்பட்டவர்கள் எல்லாம் இணைந்து சின்னத்தை முடக்கப்போவதாக பரவலாக பேச்சு இருக்கு இதை எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, ”நீதிமன்றத்தில் எல்லா தீர்ப்பும் வந்தாச்சு, தேர்தல் ஆணையமும் கொடுத்தாச்சு, இனிமே எப்படி முடக்குவார்கள்? அவங்க ஆசை நிறைவேறாது நிராசையா தான் இருக்கும். இரட்டை இலை சின்னத்தை யாராலும் இனி முடக்க முடியாது” என்றார்.

கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”தேர்தலுக்கு இன்னும் நேரமிருக்கிறது. தேதி அறிவித்த பின் அதிமுக கூட்டணி இறுதி ஆகும். அதிமுகவை சேர்ந்த ஏ.வி. ராஜூ நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு, அவரு ஒரு பெரிய ஆளு இல்லை. அவரு தீபா கட்சிக்கு போய் வந்தவர். அவரை இரக்கப்பட்டு சேர்த்தோம். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது அதனால் அவரை விட்டு வைத்திருந்தோம். இப்போ அவரு கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இந்த 3 ஆண்டு காலத்தில் இந்த ஆட்சி மீது கடுமையான வெறுப்பு. மக்கள் கொதித்து போய் உள்ளார்கள். விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டுவரி உயர்வு, அதே போல் எல்லா வகையிலும் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் நான்கள் தேர்தலை சந்திக்கின்றோம் ஆகவே எங்கள் கூட்டணி மிக பிரம்மாண்டமாக வெற்றி பெரும். திமுக ஆட்சியில் எந்த ஒரு நல்ல திட்டமும் தமிழ்நாட்டுக்கு வராது. இந்த ஆட்சி தொடர்ந்தால் ஆண்டாவனால கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது” என்று கூறினார்.

Source link

• greater chennai corporation budget by mayor priya emporary workers will be deputed to control cattle roaming on roads

greater chennai corporation budget by mayor priya emporary workers will be deputed to control cattle roaming on roads

சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று மேயர் பிரியா ராஜன் காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தார். சமீபகாலமாக நாட்டில் நாய் கடி தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிறப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவம் சார்ந்த பயிற்சிகள் அளிப்பதற்காக மடி கணினியுடன் கூடிய LCD Projector வழங்குவது:
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மையங்கள் (UCHC), நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC) மற்றும் சுகாதார / நல வாழ்வு மையங்களில் பணிபுரியும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தாய் சேய் நலம், தொற்று மற்றும் தொற்றா  நோய்கள் சிகிச்சை மற்றும் ஆய்வக நடைமுறைகள் போன்ற  பணிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. பயிற்சி அளிக்க  வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், இப்பயிற்சியை மண்டல அளவிலேயே அளிக்கலாம் என கூறிப்பிடப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, சுகாதார துறையின் கீழ் வரும் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் (UCHC), மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC) மற்றும் சுகாதார & நல வாழ்வு மையங்களில் பணிபுரியும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்களுக்கு, மருத்துவம் சார்ந்த பயிற்சி அளிக்க 15 மருத்துவ மண்டலங்களுக்கும் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் மடி கணினியுடன் கூடிய LCD Projector வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கால்நடைகளை பிடிக்கும் பணிக்காக கூடுதலாக தற்காலிக தொழிலாளர்களை நியமிப்பது:
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கால்நடைகளை பிடிக்கும் பணிக்காக 1,2,3,4,7,11,12,14 மற்றும் 15 ஆகிய 9 எண்ணிக்கையிலான மண்டலங்களுக்கு, தலா 5 பேர் வீதம் 45 தற்காலிக பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் மூலம் நியமிக்கப்படுவார்கள். இதற்காக வருடத்திற்கு ரூ.1.16 கோடி என்ற வீதத்தில் தொடர் செலவினமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக 7 நாய் பிடிக்கும் வாகனங்கள் கொள்முதல் செய்தல்:
பெருநகர சென்னை மாநகர எல்லைக்குள் சுற்றித் திரியும் தெரு நாய்கள், பொது மக்களை அச்சுறுத்துவது மற்றும் கடிப்பதால் ரேபிஸ் நோய் தாக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது, எனவே தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, புதியதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதன் மூலம் நாய் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு பொது மக்களின் நலன் காக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.70.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக 2 நாய் இனக்கட்டுப்பாடு மையங்கள் நிறுவப்படுதல்:
பெருநகர சென்னை மாநகராட்சியில், தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, கூடுதலாக இரண்டு நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.50 கோடி தோராய மதிப்பீட்டில் துவக்கப்படும்.
கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிக்கு Vehicle Mounted Power Sprayer-வுடன் கூடிய துணை கருவிகள் (Accessories) கொள்முதல் செய்வது:
கால்வாய்களில் உருவாகும் கொசுப்புழுகளை அழிப்பதற்கு கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிக்கு ரூ.80,000 வீதம் 15 மண்டலங்களுக்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் Vehicle Mounted Power Sprayer- வுடன் கூடிய துணை கருவிகள் (Accessories) கொள்முதல் செய்து வழங்கப்படும்.

மேலும் காண

Source link

• premalu small budget movie box office collection overtakes lal salaam malaikottai vaaliban rajinikanth mohan lal tovino thomas

premalu small budget movie box office collection overtakes lal salaam malaikottai vaaliban rajinikanth mohan lal tovino thomas

லால் சலாம், லவ்வர் படங்களுக்கு மத்தியில் இளம் நடிகர்கள் பட்டாளத்துடன் வெளியான மலையாள திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு, பிற மொழி ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.
லால் சலாம், லவ்வர்

ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க, கடந்த பிப்.09ஆம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’ (Lal Salaam). கிரிக்கெட், மத அரசியல் என் சென்சிட்டிவான கதையை அடிப்படையாகக் கொண்டு ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் என பல நட்சத்திரங்கள் நடிக்க ரூ.90 கோடிகள் செலவில் லால் சலாம் திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியானது.
ரஜினியின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, ஐஸ்வர்யாவின் இயக்கம் என படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளினாலும், திரைக்கதை, மெதுவாக நகரும் காட்சிகள் என மற்றொருபுறம் நெகட்டிவ் விமர்ச்னங்களையும் பெற்றது.
இதேபோல் மணிகண்டன் நடிப்பில் லால் சலாம் படத்துக்குப் போட்டியாக வெளியான லவ்வர் திரைப்படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியது. அனைத்து தலைமுறையினரும் பொருத்திப் பார்க்கக்கூடிய டாக்ஸிக் காதலை மையப்படுத்தி உருவான இப்படம், லால் சலாம் படத்தினைத் தாண்டியும் வரவேற்பைப் பெற்றது.
பாக்ஸ் ஆஃபிஸில் சறுக்கிய ரஜினி!
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினி நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படம், 11 நாள்களில் ரூ.16.36 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது.
Screen Grab From sacnilk.com
இதேபோல், லவ்வர் திரைப்படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.4.38 கோடிகளை இந்தியாவில்  வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது.
மாஸ் காண்பிக்கும் ‘ப்ரேமலு’

இந்நிலையில் கடந்த பிப்.09ஆம் தேதி மலையாளத்தில் பிரபல நடிகர், ஃபஹத் ஃபாசில் தயாரிப்பில், இளம் நடிகர்கள் நேஸ்லன் கஃபூர், மேத்யூ தாமஸ், நடிகை மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில், ஜாலி ரோம் – காம் படமாக ‘ப்ரேமலு’ (Premalu) வெளியானது. முன்னதாக மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘சூப்பர் சரண்யா’, ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ ஆகிய 2 படங்களை இயக்கிய கிரீஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இளம் நடிகர், நடிகையர் பட்டாளத்துடன் ரூ.3 கோடி எனும் குறைவான பட்ஜெட்டில் தயாரான இப்படம், மலையாள சினிமா தாண்டி தமிழ், தெலுங்கு என பிற மொழி ரசிகர்களையும் ஈர்த்து தற்போது பாக்ஸ் ஆஃபிஸ் கலக்கி வருகிறது. திரையரங்கில் வெடித்து சிரிக்கும் ரசிகர்களுடன் வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், இந்தியாவில் இதுவரை ரூ.24.55 கோடிகள் வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தெரிவித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் இப்படம் இதுவரை ரூ. 44.25 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

*Premalu Day 11 Night Occupancy: 51.66% (Malayalam) (2D) #Premalu https://t.co/WdYgVDpJXd*
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) February 19, 2024

மலையாள சூப்பர்ஸ்டார்களும் சரண்டர்
மற்றொருபுறம் டொவினோ தாமஸ் நடிப்பில் க்ரைம் த்ரில்லராக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘அன்வேஷிப்பின் கண்டேதும்’ திரைப்படம், பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றபோதும், இந்தியா முழுவதும் இதுவரை ரூ.7.9 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது.

இதேபோல் சென்ற மாதம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படமும் பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் அடி வாங்கி ஒட்டுமொத்தமாக ரு.17.40 கோடிகளை மட்டுமே இதுவரை வசூலித்துள்ளது.
சூப்பர் ஸ்டார்களை ஓரம் கட்டிய இளைஞர் பட்டாளம்
மற்றொருபுறம், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மாறுபட்ட நடிப்பில் கடந்த பிப்.15ஆம் தேதி வெளியான ‘பிரம்மயுகம்’ திரைப்படம் கடந்த ஆறு நாள்களில் ரூ.15.80 கோடிகளை இந்தியா முழுவதும் வசூலித்துள்ளது.
கண்டெண்ட் ரீதியாக பொதுவாக கை ஓங்கும் மலையாள சினிமா உலகம், தற்போது வசூலிலும் தமிழ் சினிமாவை ஓவர்டேக் செய்து பயணித்து வருவது பேசுபொருளாகியுள்ளது.
மேலும், ரஜினிகாந்த், மோகன் லால், டோவினோ தாமஸ் என மாஸ் நடிகர்களுடன் போட்டி போட்டு இளம் நடிகர் பட்டாளத்துடன் களமிறங்கிய ‘ப்ரேமலு’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் கெத்து காண்பித்து வருவது இரு தரப்பு சினிமா வட்டாரத்தையும் வாயடைக்க வைத்துள்ளது.

மேலும் காண

Source link

• top news India today abp nadu morning top India news February 21 2024 know full details

top news India today abp nadu morning top India news February 21 2024 know full details

சென்னை மாநகராட்சி பட்ஜெட்.. இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா ராஜன்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பொது பட்ஜெட்டும், நேற்று விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 22) இந்த இரண்டு பட்ஜெட் குறித்த விவாதங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும். இப்படியான சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா ராஜன். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனைதொடர்ந்து, நாளை (பிப்ரவரி 22) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. மேலும், 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும் படிக்க..

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக எல்.முருகன் தேர்வு..!

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகன் உட்பட ஐந்து வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் 4 வேட்பாளர்களும், காங்கிரஸிலிருந்து ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் படிக்க..

”பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சண்டிகர் தேர்தல் அதிகாரி குற்றவாளி”- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி மாதம் 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட,  குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ்  சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனால், மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..

முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார் சோனியா காந்தி

மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ், தி.மு.க. உள்பட நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்த முறையும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் போதுமான அளவு எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அங்கிருந்து 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் காங்கிரஸ் சார்பில் தேர்வாக உள்ளனர். மேலும் படிக்க..

மேலும் காண

Source link

• Reshma Muralidharan shares her weight loss secret diet plan

Reshma Muralidharan shares her weight loss secret diet plan

ஜீ தமிழில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடர் ‘பூவே பூச்சூடவா’. இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரேஷ்மா முரளிதரன். அதற்கு முன்னரே ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 நடன நிகழ்ச்சியின் மூலம் பரிச்சயமானவர். முதல் சீரியல் வாய்ப்பே ரேஷ்மாவுக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் மூலம் மிகவும் பாப்புலர் செலிபிரிட்டியாக மாறினார்.

ரேஷ்மா – மதன் திருமணம் :
பூவே பூச்சூடவா சீரியலில் நடிகை ரேஷ்மா முரளிதரனுடன் சக நடிகராக நடித்த நடிகர் மதன் பாண்டியனுடன் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர்களின் கேரியரில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் ஜோடியாக பங்கேற்றனர்.
விஜய் டிவி என்ட்ரி :
கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான ‘அபி டெய்லர்’ சீரியலில் ரேஷ்மாவும், மதனும் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா. தற்போது அவர் கலந்து கொண்ட நேர்காணலில் தன்னுடைய வெயிட் லாஸ் டயட் பிளான் பயன்படுத்தி எப்படி அவரின் உடல் எடையை குறைத்தார் என்பது பற்றி கூறியிருந்தார்.

இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் :
75 கிலோ எடை இருந்த ரேஷ்மா இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் எனப்படும் இடைப்பட்ட உண்ணவிரதத்தை கடைபிடித்து தன்னுடைய உடல் எடையை ஒரே மாதத்தில் 7 கிலோ வரை குறைத்துள்ளார். அதாவது இரவு 8 மணிக்குள் டின்னரை சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் மதியம் 12 மணி வரை எதையுமே சாப்பிடாமல் பாஸ்டிங் இருப்பாராம். இந்த 16 மணி நேர பாஸ்டிங் இருக்கும் சமயத்தில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொள்ளலாம். இந்த முறையை ரெகுலராக பாலோ செய்து தான் தன்னுடைய உடல் எடையை ஒரே மாதத்தில் குறைத்துள்ளார். அதை அப்படி தொடர்ச்சியாக பாலோ செய்ய உடலும் கட்டுக்குள் வந்துவிடும் என்றுள்ளார் ரேஷ்மா முரளிதரன்.
மற்ற டயட் பிளான் :
இது தவிர ரேஷ்மா பெரும்பாலும் பச்சை காய்கறிகள், நல்ல கொழுப்பு சத்துள்ள புரோட்டீன் உணவுகளையும், நல்ல கொழுப்பு சத்து நிறைந்த கிரில் சிக்கன், சீஸ் உள்ளிட்டவை மட்டுமே உட்கொள்வாராம். இடையிடையே இளநீர், மோர் எடுத்துக் கொள்வாராம். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நாட்டு சர்க்கரை மட்டுமே பயன்படுத்துவாராம். இந்த உணவு முறையை மட்டுமே பயன்படுத்தி உடல் எடையை குறைத்துள்ளார்.  யோகா, ஒர்க் அவுட் போல எதையும் ரேஷ்மா மேற்கொள்ளவில்லையாம். இதுதான் அவரின் வெயிட் லாஸ் புரோக்ராம் பிளானில் உள்ள டயட் சார்ட்.

மேலும் காண

Source link

• IND Vs ENG Test Pitch Report JSCA International Stadium Ranchi | IND Vs ENG Test: இந்தியா

IND Vs ENG Test Pitch Report JSCA International Stadium Ranchi | IND Vs ENG Test: இந்தியா

இந்தியா – இங்கிலாந்து:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில்  உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
நேருக்கு நேர்:
இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 33 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கிலாந்து அணி 51 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது 50 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் இங்கிலாந்து அணி 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்தியா 24 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 15 வெற்றிகளை பெற்றுள்ளது. 28 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.
பிட்ச் அறிக்கை:
ராஞ்சியில் உள்ள ஆடுகளம் பல இந்திய ஆடுகளங்களைப் போலவே , பேட்டிங்கிற்கு ஏற்ற ஆடுகளமாக உள்ளது. இது போட்டி ஆரம்பித்த பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும்.
ராஞ்சி மைதானத்தில் டெஸ்ட் பதிவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள்:
இந்த மைதானத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில், வேகப்பந்து வீச்சாளர்கள் 2.61 சராசரியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மறுபுறம், சுழற்பந்து வீச்சாளர்கள் 2.82 என்ற எக்கனாமியுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த  அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதுடன் மற்றைய ஆட்டம் சமநிலையில் முடிந்திருக்கிறது இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளின் சராசரி ஸ்கோர் 474 ஆகும் .
IND vs ENG, 4வது ஆடும் 11 வீரர்கள்:
இந்தியா:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகத் ஷர்மா (கேப்டன்), சுப்மான் கில், ரஜத் படிதார்/கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் ( விக்கெட் கீப்பர் ), ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், முகமது சிராஜ்
இங்கிலாந்து:
ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் ( விக்கெட் கீப்பர்  ), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்/ஷோயிப் பஷீர்.
மேலும் படிக்க: MS Dhoni: ஐ.பி.எல் தொடரில் 16 ஆண்டுகள் நிறைவு…தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!
மேலும் படிக்க: Rishabh Pant: ஐபிஎல் தொடர்… டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Source link

• மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்.. தலைவர்கள் இரங்கல் ..

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்.. தலைவர்கள் இரங்கல் ..

சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் (வயது 95) காலமானார். டெல்லியில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை அவர் காலமானார்.

Eminent jurist Senior Advocate Fali S Nariman (95) passes away. pic.twitter.com/voMmFoS28k
— Live Law (@LiveLawIndia) February 21, 2024

நாரிமன் மும்பை  உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். 22 ஆண்டுகள் பயிற்சி செய்த பிறகு, அவர் 1971 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991 இல் பத்ம பூஷன் மற்றும் 2007 இல் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The passing away of eminent jurist, senior advocate, and a fierce votary of Constitutional Civil Liberties, Fali S Nariman is a huge loss to the legal system. A Padma Vibhushan recipient, his unwavering commitment to his principles remained steadfast and admirable. My deepest… pic.twitter.com/hyiZ0nDWBw
— Mallikarjun Kharge (@kharge) February 21, 2024

இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ புகழ்பெற்ற சட்ட வல்லுநர், மூத்த வழக்கறிஞர் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் சிவில் உரிமைகளின் தீவிர வாக்காளருமான ஃபாலி எஸ் நாரிமன் அவர்களின் மறைவு சட்ட அமைப்புக்கு மிகப்பெரிய இழப்பாகும். பத்ம விபூஷன் பெற்றவர், அவரது கொள்கைகளில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உறுதியானதாகவும் போற்றத்தக்கதாகவும் இருந்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.

My heartfelt condolences go out to the family and friends of Fali Nariman, whose demise leaves a profound void in the legal community. His contributions have not only shaped landmark cases, but have also inspired generations of jurists to uphold the sanctity of our Constitution… pic.twitter.com/K9Uv90csPz
— Rahul Gandhi (@RahulGandhi) February 21, 2024

அதேபோல் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தள பதிவில், “ ஃபாலி நாரிமனின் மறைவு சட்டச் சமூகத்தில் ஒரு ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பங்களிப்புகள் நமது அரசியலமைப்பு மற்றும் சிவில் உரிமைகளின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு பல தலைமுறை சட்ட வல்லுநர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. அவர் இல்லாவிட்டாலும் நீதி மற்றும் நியாயத்திற்கான அவரது அர்ப்பணிப்பு நம்மை வழிநடத்தட்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link

• Vidya Balan files FIR against fake instagram gmail acounts in her name with fake jobs

Vidya Balan files FIR against fake instagram gmail acounts in her name with fake jobs

நடிகை வித்யா பாலன் (Vidya Balan) பெயரில் போலிக்கணக்கு தொடங்கப்பட்டு பண மோசடி நடைபெற்ற சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரன் பட நடிகை
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்ட ‘த டர்ட்டி பிச்சர்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்து, தேசிய விருது வென்று நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை வித்யா பாலன். கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த வித்யா பாலன், இயக்குநர் மணிரத்னத்தின் ‘குரு’, இயக்குநர் பால்கியின் ‘பா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவராக வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர்.
நன்கு தமிழ் பேசக்கூடிய நடிகையான வித்யா பாலன்,  தமிழ் சினிமாவில் ‘ரன்’ திரைப்படத்திலேயே அறிமுகமாக இருந்து, முதற்கட்ட படப்பிடிப்புக்குப் பிறகு, பின் பல்வேறு காரணங்களால் விலக்கப்பட்டு, அதன் பின் பாலிவுட் சென்று கொடிகட்டிப் பறந்தவர்.
அஜித் ஜோடி
தமிழ் சினிமாவில் இறுதியாக நடிகர் அஜித் குமார் ஜோடியாக ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்த வித்யா பாலன்,  தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டு 2012ஆம் ஆண்டு செட்டில் ஆனார்.
திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து ஹீரோயின் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வித்யா பாலன் நடிப்பில் இந்த ஆண்டு தோ அவுர் தோ ப்யார் எனும் திரைப்படம் வெளியாக உள்ளது.
பணமோசடி
இந்நிலையில், வித்யா பாலன் பெயரில் போலி சமூக வலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டு பண மோசடி நடைபெற்ற சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வித்யா பாலன் பெயரில்  போலி மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம், சினிமா துறையைச் சேர்ந்த நபர்களை அணுகி, சினிமாவில் வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி மோசடி நபர் பணம் பறித்துள்ளார்.
வித்யா பாலனுக்கு நெருங்கிய வட்டாரத்தினரிடம் இது போன்று மோசடியில் ஈடுபட அடையாளம் தெரியாத நபர் முயன்றுள்ள நிலையில், இதுகுறித்து தெரிய வந்த வித்யா, தற்போது மும்பை, கார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவரது புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், அடையாளம் தெரியாத மோசடி நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Saranya Ponvannan: இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தும் ரொம்ப ஃபீல் பண்றேன் – சரண்யா பொன்வண்ணன் வருத்தம்!
Actress Trisha: ”திரிஷானு எங்க சொன்னேன்…” திடீர் பல்டி அடித்த முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ!

மேலும் காண

Source link

• Fisherman Arrest: தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..

Fisherman Arrest: தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..

இலங்கைக்கு பீடி இலை  கடத்தியதாக தூத்துக்குடி இனிகோ நகர் , சிலுவை பட்டிமற்றும்  லூர்தம்மாள் புரம்பகுதியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ ,காட்வே உள்ளிட்ட ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில்  விசாரணைக்காக வைத்துள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடிப்பது, கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில்,  இலங்கைக்கு பீடி இலை  கடத்தியதாக தூத்துக்குடி இனிகோ நகர் , சிலுவை பட்டிமற்றும்  லூர்தம்மாள் புரம்பகுதியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ, காட்வே உள்ளிட்ட ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில்  விசாரணைக்காக வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூந்தங்குழி கடற் பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் சுமார் 2 டன் பீடி இலைகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி இனிகோநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் தெற்கே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் பீடி இலையை கடத்திச் சென்ற பைபர் படகை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது இலங்கை கல்பட்டி கடற்படை தள முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் பிடி இலை கடத்திய மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியை சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன் ,மரிய அந்தோணி மற்றும் லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த காட்வே சிலுவைப் பட்டியை சேர்ந்த டிஜோ என்பது தெரியவந்தது.  இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் பீடி இலை கடத்தலில் ஈடுபட்டதாக மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக 5 பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Source link

• The water inflow of Mettur dam has remained at 54 cubic feet for the third day salem

The water inflow of Mettur dam has remained at 54 cubic feet for the third day salem

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக குறைந்துள்ளது.

நீர்மட்டம்:
அணையின் நீர் மட்டம் 65.01 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 28.56 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 90.87 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 422 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 758 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 51.9 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.12 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 195 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.

மேலும் காண

Source link

• Pakistan Coalition Government: கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தம்! பாகிஸ்தான் பிரதமராக ஷேபாஸ் ஷெரீப்.. அதிபராக சர்தாரி..!

Pakistan Coalition Government: கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தம்! பாகிஸ்தான் பிரதமராக ஷேபாஸ் ஷெரீப்.. அதிபராக சர்தாரி..!

பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 8ம் தேதி நடைபெற்ற பொது தேர்தலை தொடர்ந்து, உடனடியாக வாக்கு எண்ணும் பணியும் நடைபெற்றது. இருப்பினும், தேதல் முடிவுகள் அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டு, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பொதுத்தேர்தல் நடைபெற்று இரண்டு வாரங்கள் ஆகியும், அந்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சியமைக்காத நிலை காணப்படுகிறது. பாகிஸ்தானின் பொது தேர்தலுக்கு மொத்தமாக 266 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், 265 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை. தற்போது சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் – தெஹ்ரீக்-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 92 இடங்களில் வெற்றிபெற்றன. இந்த கட்சியை தொடர்ந்து, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 79 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றன.

இந்தநிலையில், பாகிஸ்தானில் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பல நாள் பேச்சு வார்த்தைக்கு பிறகு, பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ – ஜர்தாரி நேற்று பிற்பகல் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவர் ஷேபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் சர்தாரி அதிபராக பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தவிர பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் துணைத் தலைவரும், நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ் பஞ்சாப் முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும் இணைந்து பாகிஸ்தானில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றுவிட்டது. இதையடுத்து, தற்போது புதிய அரசாங்கத்தை அமைக்கும் நிலைக்கு தயாராகிவிட்டோம். தேர்தலுக்கு பிறகு, நிறைய குழப்பங்கள் நீடித்த நிலையில், , பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி இணைந்து நாட்டின் நலனுக்காக மீண்டும் ஒரு அரசாங்கத்தை அமைக்க இருக்கிறது என தெரிவித்தனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் எதுவும் இலாகாக்கள் கேட்கப்பட்டதா என பிரதமராக பதவியேற்க உள்ள ஷெபாஸ் ஷெரீபிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ இரு கட்சிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முதல் நாளில் இருந்தே பிலாவல் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி, அமைச்சர் பதவி எதையும் கேட்கவில்லை. இரு கட்சிகளும் கூட்டணி வைத்து கொண்டதால், நாங்கள் அவர்களின் கோரிக்கைகளையும், அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிறோம் என்று ஆகிவிடாது. இரு கட்சிகளும் இணைந்து நடுத்தரமாக செயல்படுவதே உண்மையான அரசியல் வெற்றி” என தெரிவித்தார்.

மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி 2008 முதல் 2013 வரை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

• AV Raju Apology Trisha Issue : ’’த்ரிஷானு சொல்லல..எனக்கே அருவருப்பா இருக்கு’’ TWIST வைத்த AV ராஜு

AV Raju Apology Trisha Issue : ’’த்ரிஷானு சொல்லல..எனக்கே அருவருப்பா இருக்கு’’ TWIST வைத்த AV ராஜு

’’த்ரிஷானு சொல்லல..எனக்கே அருவருப்பா இருக்கு’’ TWIST வைத்த AV ராஜு

Source link

• 7 Am Headlines today 2024 21st February headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 21st February headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்; விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர்க்கடன் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு
சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜக அரசு, உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு – வேளாண் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகள் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ பேசியதற்கு திரைத்துறையை சார்ந்தோர் கண்டனம்
பாடலாசிரியர் சினேகன் புகாரைத் தொடர்ந்து பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது: வீட்டில் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த காவல்துறை
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைதான இயக்குநரின் ஜாமீன் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவின் பேச்சுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா:

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தங்க நகைகள் மார்ச் 7ல் தமிழ்நாடு திரும்புகிறது – பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து சோனியா காந்தி, எல்.முருகன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு; குஜராத்தில் ஜெ.பி.நட்டா
காஷ்மீரில் ரூ.32,000 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகன் உட்பட ஐந்து வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வரும் 2025-26 கல்வியாண்டு முதல், ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
நிரந்தர பணி ஆணையத்தை பெண் அதிகாரிகளுக்கு விரிவுபடுத்தும் விவகாரத்தில் ஆணாதிக்கத்துடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலகம்:

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவாகி உள்ளது.
லிபியாவில் இருந்து ஐரோப்பா சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு.
ரஷ்யாவை சமாளிக்க நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை – உக்ரைக் பிரதமர்.
இந்தியா – ரஷ்யா இடையே எப்போதும் நிலையான நட்புறவு இருந்துள்ளது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
வடகொரியா அதிபருக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை அதிபர் புதின் பரிசளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டு:

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.
கிரிக்கெட் ஜாம்பவான் மஹேந்திர சிங் தோனி ஐ.பி.எல் தொடரில் இணைந்து நேற்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்கும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

Published at : 21 Feb 2024 07:07 AM (IST)

மேலும் காண

Source link

• Sarfaraz Khan: ஒரே போட்டியில் வெறிகொண்டு அடி! ஐபிஎல்லில் சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் காம்பீர்!

Sarfaraz Khan: ஒரே போட்டியில் வெறிகொண்டு அடி! ஐபிஎல்லில் சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் காம்பீர்!

ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியிலேயே கேப்டன் ரோஹித்தின் நம்பிக்கையை நிலைநாட்டிய சர்பராஸ் கான் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார்.

இதன் மூலம் டெஸ்ட் அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை சர்பராஸ் கான் படைத்தார். சர்பராஸ் கானின் அறிமுகத்திற்கு பிறகு, ஐபிஎல்லில் சில அணிகள் அவரை தங்கள் அணியில் சேர்க்க போட்டாப்போட்டி போட்டு வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சர்பராஸ் கான் 66 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 62 ரன்கள் எடுத்தார். அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸிலும் சர்பராஸ் கான் 72 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார்.

சர்பராஸ் கானை வாங்க கடும் பந்தயம்..?

ஊடக அறிக்கையின்படி, சர்பராஸ் கானுக்காக மூன்று ஐபிஎல் அணிகள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்க தயாராகி உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகியவை அடங்கும். இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சர்பராஸ் கான் ஏற்கனவே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2024 ஏலத்தில் சர்பராஸ் கானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த சீசனில் சர்பராஸ் கான், டெல்லி அணிக்காக களமிறங்கினார். ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படவில்லை. அதனால், அந்த அணி அவரை விடுவித்தது.

இந்திய அணிக்காக அறிமுகமான பிறகு, சர்பராஸ் கானை வாங்க பல ஐபிஎல் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.  சர்பராஸுக்காக எந்த தொகையையும் கொடுக்க அணிகள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், ஏலத்தில் விற்பனையாகாமல் இருந்த சர்பராஸ் கான் எப்படி ஐபிஎல்-க்குள் வருவார் என்பது மிகப்பெரிய கேள்வி.

சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் கௌதம் காம்பீர்:

இந்தநிலையில், 26 வயதான சர்பராஸ் கானை ஒப்பந்தம் செய்ய கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் காம்பீர் அந்த அணி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸால் விடுவிக்கப்பட்ட சர்ஃபராஸின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது, மூன்று உரிமையாளர்களும் சர்ஃபராஸை வாங்குவதற்கு போதுமான பணத்தை தங்கள் எஞ்சிய பணப்பையில் வைத்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1 கோடியும், ஆர்சிபி அணி ரூ.2.85 கோடியும்,  கேகேஆர் அணி ரூ.1.35 கோடியுடன் உள்ளன.

சர்பராஸ் கான் ஐபிஎல்லில் எப்படி நுழைய முடியும்..?

ஏலம் முடிந்ததால், இப்போது வாங்க துடிக்கும் அணிகள் சர்பராஸ் கானை நேரடியாக அணியில் எடுக்க முடியாது. சர்ஃபராஸ் ஐபிஎல்லில் ஒரே ஒரு வழியில் மட்டுமே நுழைய முடியும், அதாவது லீக் தொடங்கும் முன்னரோ அல்லது தொடக்கத்திலோ ஏதேனும் ஒரு அணியின் வீரர் காயம் அடைந்தால், அந்த அணி அந்த வீரருக்கு மாற்றாக சர்பராஸை நியமிக்கும். இது தவிர இந்த சீசனில் இணைய சர்பராஸுக்கு வேறு வழியில்லை.

Source link

• director selvaraghavan clarify that I have NOTHING to do with Dhanush 50th Movie RAAYAN

director selvaraghavan clarify that I have NOTHING to do with Dhanush 50th Movie RAAYAN

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் முக்கிய அறிவுப்பு ஒன்றை இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளார். இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியானது.
அதன்படி இந்த படத்துக்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக  தனுஷ் தெரிவித்த நிலையில் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. ராயன் படத்துக்காக தனுஷ் மொட்டையடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் வன்முறைக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதி செய்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் ராயன் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா எடிட்டிங் பணியை மேற்கொள்ளும் நிலையில் ராயன் படம் இந்தாண்டே திரைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்குப் பின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். அதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் ராயன் படத்துக்கு தனுஷின் அண்ணனும், இயக்குநருமான செல்வராகவன் கதை எழுதியதாக சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை செல்வராகவன் சமூக வலைத்தளப் பதிவு மூலம் தெளிவுப்படுத்தி உள்ளார்.

Like all of you I cannot wait to watch #Raayan in theatres. Proud of my brother @dhanushkraja and his hard work and dedication 🥰
— selvaraghavan (@selvaraghavan) February 20, 2024

அதில், நண்பர்களே, தனுஷின் 50வது படமான ராயன் படத்திற்கு நான் கதை எழுதியதாக செய்திகள் வந்துள்ளன. ‘ராயனின்’ கதைஅல்லது திரைக்கதை  அமைத்தல் போன்ற செயல்முறையில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். அது முற்றிலும் நடிகர் தனுஷின் கனவு திட்டம். இப்போது அவர் அதை தனது சொந்த படத்தில் செய்துள்ளார். இந்த திட்டத்தில் நான் ஒரு நடிகன் மட்டுமே இருக்கிறேன். உங்கள் எல்லோரையும் போல நானும் ராயன்  படத்தை திரையரங்குகளில் வெகு விரைவில் பார்க்க விரும்புகிறேன்.  என் சகோதரன் தனுஷின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன்.

மேலும் காண

Source link

• MS Dhoni: ஐ.பி.எல் தொடரில் 16 ஆண்டுகள் நிறைவு…தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!

MS Dhoni: ஐ.பி.எல் தொடரில் 16 ஆண்டுகள் நிறைவு…தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!

ஐ.பி.எல் தொடர்:

பி.சி.சி.ஐ இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை தொடங்கலாம் என்ற முடிவை எடுத்த போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான வேலையைத் தொடங்கியது. அந்த நேரத்தில் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்ற 8 அணிகளும்  தங்களுக்கென ஒரு பிரதான வீரரை ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம். இப்படி எடுக்கப்படும் வீரருக்கு ஏலத்தில் அந்த அணி அதிக விலை கொடுத்து எடுக்கும் வீரரை விட 15% தொகையை அதிகமாக வைத்து ஊதியம் கொடுக்க வேண்டும்.

மொத்தமாக ஒரு அணி 5 மில்லியன் டாலர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான் அப்போதைய விதி. அந்த நேரத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் ரசிகர்களுடன் தாங்கள் அணிக்காக எடுக்கும் வீரர்கள் நெருக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் மாநில வீரர்களை எடுக்கவே முனைப்பு காட்டின. அந்த வகையில் இந்திய அணியின் ஜாம்பவனாகவும் மும்பையைச் சேர்ந்தவருமான சச்சின் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோல் ராகுல் ட்ராவிட்டை பெங்களூரு அணியும் ஏலத்தில் எடுத்தன. ஆனால், இந்திய அணியின் கேப்டனாக இருந்த  தோனி சார்ந்த மாநிலங்களில் எந்த ஒரு ஐபிஎல் அணியும் இல்லை.

ஐ.பி.எல் தொடரில் 16 ஆண்டுகள் நிறைவு செய்த தோனி:

2008 ஆம் ஆண்டு இதேநாளில் ஏலம் தொடங்கியது. இதில் நட்சத்திர வீரரான எம்.எஸ்.தோனியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஏலத்தில் பங்கேற்ற அணிகள் அனைத்தும் தோனியை எடுப்பதற்கு முனைப்பு காட்டின. இச்சூழலில் உச்சபட்சமாக சென்னை அணி தோனிக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டது. இவ்வறாக சென்னை அணிக்காக எம்.எஸ்.தோனி ஏலத்தில் எடுக்கப்பட்டார். 16 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது.

அன்றில் இருந்து இன்று வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறார் தோனி. இடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடை காரணமாக இரண்டு ஆண்டுகள் தோனி வேறொரு அணிக்காக விளையாடினார். அதே நேரம் தான் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐ.பி.எல்.கோப்பையை வென்றும் கொடுத்திருக்கும் தோனி ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க: WPL 2024: தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம்…இந்த முறை பாருங்கள்; ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடி!

மேலும் படிக்க: Jasprit Bumrah: ராஞ்சி டெஸ்ட்டில் பும்ராவிற்கு ஓய்வா? அப்போ இந்திய பவுலிங்கின் நிலைமை? ப்ளான் என்ன?

Source link

• Maari Serial :சூர்யா, மாரியின் அதிரடி பிளான்..  நடந்தது என்ன? – மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Maari Serial :சூர்யா, மாரியின் அதிரடி பிளான்.. நடந்தது என்ன? – மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின்  நேற்றைய எபிசோடில் சூர்யா தூக்கில் தொங்குவது போல டிராமா போட்டு மரியாவை மிரள வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது எல்லாரும் மரியாவின் பேச்சை கேட்டு ஓடி வந்து பார்க்க அங்கு யாரும் இல்லாமல் இருக்க மரியா தரிசி அடைகிறாள். தாரா மரியாவை கூப்பிட்டு உனக்கு என்னாச்சு? ஏன் இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க என்று கேட்க இல்ல சூர்யா அங்க தூக்குல தொங்கிட்டு இருந்தான் என்று சொல்ல சொத்து நம்ம கைக்கு வர வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இரு என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.

மரியா திரும்பவும் ரூமுக்கு வர சூர்யா தூக்கில் தொங்க மீண்டும் மரியா எல்லாரையும் கூப்பிட எல்லாரும் வந்து பார்க்கும் போது அங்கு யாரும் இல்ல. உடனே மரியா நான் உண்மையை தான் சொல்றேன். நீங்க வேணா சூர்யாவுக்கு வீடியோ கால் பண்ணுங்க அப்போ உண்மை தெரிந்து விடும் என்று சொல்ல வீடியோகால் செய்ய அவன் வீட்டில் இருக்க மரியா ஷாக் ஆகிறாள்.

பிறகு நைட் நேரத்தில் தூங்கி கொண்டிருக்கும் போது அவளுக்கு தண்ணீர் தாகம் எடுக்க ரூமில் தண்ணீர் இல்லாததால் ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுக்க வர ஏதோ ஒரு உருவம் கிராஸானது போல் தென்பட பயந்து போய் எல்லாரையும் கூட்ட மறுபடியும் அங்கு யாரும் இல்லாமல் மரியா பல்ப் வாங்குகிறாள். தாராவுக்கும் மரியா தேவையில்லாமல் இப்படி பண்ண மாட்டாளே என்ற சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Source link

• zee tamil sandhya ragam serial february 20th episode update | Sandhya Ragam:ஜானகியை சுற்றி வளைத்த ரவுடிகள்.. ரகுராம் எடுத்த முடிவு

zee tamil sandhya ragam serial february 20th episode update | Sandhya Ragam:ஜானகியை சுற்றி வளைத்த ரவுடிகள்.. ரகுராம் எடுத்த முடிவு

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் புவனேஷ்வரி ஜானகியை கொன்று அந்த பழியை ரகுராம் மீது போட பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, புவனேஸ்வரி ஏற்பாடு செய்த ரவுடிகள் கத்தியுடன் கோவிலுக்குள் இறங்குகின்றனர். இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாயா மற்றும் ஜானகியை நெருக்கின்றனர். மறுபக்கம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ரகுராம் திடீரென ஒரு கனவு கண்டு அலறி எழுகிறார்.
அந்த கனவில் ஜானகி கழுத்தில் இருக்கும் நகைகளை எல்லாம் கழட்டி வைத்து விட்டு குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள போவது போல தெரிய ரகுராம் பதறுகிறார். இந்த நேரத்தில் இடி மின்னலுடன் காற்றும் வேகமாக வீச ஏதோ அபசகுனமாக தோன்ற அவர் கோவிலை நோக்கி கிளம்புகிறார்.
இங்கே கோவிலில் ரவுடிகள் இவர்களை நெருங்கி வர கத்தி கீழே விழுந்து சத்தம் கேட்க இருவரும் தூக்கம் களைந்து எழுந்து கொள்கின்றனர். ரவுடிகளை பார்த்து அதிர்ச்சி அடையும் ஜானகி நான் யாருடைய பொண்டாட்டின்னு தெரியாமல் வந்திருக்கீங்க. அவர் வந்தா உங்க யாரையும் சும்மா விட மாட்டாரு என்று எச்சரிக்கை ரவுடிகள் கொல்ல வர இருவரும் தப்பி ஓடி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் ரகுராம் வேகவேகமாக கோவிலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Kagney Linn: 36 வயதில் தற்கொலை.. பிரபல பார்ன் நடிகை எடுத்த விபரீத முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கிய முன்னாள் அதிமுக பிரபலம் – கடுப்பான திரையுலகினர்!
Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு – ரசிகர்கள் இரங்கல்!

மேலும் காண

Source link

• Controversy about famous actress Trisha. I didn’t talk like that AV Raju

Controversy about famous actress Trisha. I didn’t talk like that AV Raju

கூவத்தூர் விவகாரம்:
சேலம் மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் ஏ.வி.ராஜூ. இவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து நேற்று செய்தியாளர்கள் முன்பு பேசியது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும்  விவாதத்தை கிளப்பியது. அதாவது அந்த  செய்தியாளர் சந்திப்பில், கூவத்தூரில்  தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களையும், திரிஷா உள்ளிட்ட நடிகைகளையும் தொடர்புபடுத்தி பேசினார்.
இந்நிலையில் இவரது பேச்சுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் தங்களது கண்டனத்தை பதிவு செய்தது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய சமூக வளைதளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட A.V.ராஜி என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அவதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை, கீழ்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய அநாகரிகமான கீழ்தரமான செயலை,தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியது.
அதேபோல் நடிகை திரிஷா இது பற்றி கூறுகையில்,”கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இது போன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அருவருப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” என்று கூறியிருந்தார்.
திடீர் பல்டி அடித்த ஏ.வி.ராஜூ:
இந்நிலையில் ஆதரமற்ற குற்றச்சாட்டை கூறியதாக ஏ.வி.ராஜூவுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் வந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் ஏ.வி.ராஜூ விளக்கம் அளித்துள்ளார். அதில்,” நான் கூறியது மாற்றி கூறப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் சொன்னது திரிஷா மாதிரி என்று தான். திரிஷாவை சொல்லவில்லை. அதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். திரிஷா மாதிரி அழகான ஒரு சின்னப்பெண் வேண்டும் என்று தான் வெங்கடாஜலம் கேட்டார். நான் த்ரிஷா என்ற நடிகையைச் சொல்லவில்லை”என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: திரிஷா குறித்து அவதூறு பேச்சு- வன்மையாக கண்டித்த தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம்!

மேலும் படிக்க: Munnar Ramesh: என்னை இப்படித்தான் கூப்பிடுவாங்க.. காரித் துப்பிய சவுதி அரேபியா – மனம் திறந்த மூணார் ரமேஷ்

மேலும் காண

Source link

• Virat Kohli Blessed Baby Boy: இதுதான் காரணமா..! பிறந்த குட்டி ”கோலி”.. இன்ஸ்டாவில் சூப்பராக சொன்ன விராட்

Virat Kohli Blessed Baby Boy: இதுதான் காரணமா..! பிறந்த குட்டி ”கோலி”.. இன்ஸ்டாவில் சூப்பராக சொன்ன விராட்

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ மிகவும் மகிழ்ச்சியுடனும், எங்கள் இதயங்களின் அன்புடனும் கடந்த பிப்ரவரி 15ம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது என அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் ஆண் குழந்தைக்கு ஆகாய் என வாமிகாவின் குட்டி சகோதரனை இந்த உலகிற்கு வரவேற்கிறோம்!

எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசிகளையும், நல்வாழ்த்துகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நேரத்தில் எங்களது நேரத்தை எங்களுக்காக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 4வது போட்டி வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, தனிப்பட்ட காரணங்களால் தன்னை அணியில் இருந்து ஓய்வு அளிக்க வேண்டும் என விராட் கோலி பிசிசிஐ மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
விராட் கோலியின் இந்த கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ அவருக்கு விருப்ப விடுப்பு அளித்திருந்தது. இந்தநிலையில், விராட் கோலி விலகியதற்கான காரணம் என்ன என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். அதன்பிறகு, விராட் கோலி அம்மாவின் உடல்நிலை, விராட் கோலி – அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை என பல்வேறு யூகங்கள் கிளம்பியது.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, இன்று விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினர் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, தற்போது விராட் கோலி – அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Source link

• actor mansoor alikhan condemn av raju support trisha

actor mansoor alikhan condemn av raju support trisha

அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நடந்த விவகாரங்கள் என நடிகை திரிஷா, கருணாஸ் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவரது கருத்து தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
ஈனத்தனம், அருவருப்பு:
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் இதுதொடர்பாக ஆடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இதுபோன்ற ஈனத்தனமான, கேவலமான, அருவருக்கத்தக்க வகையிலே என் திரைத்துறையில் உள்ள சக நடிகைகளை, பெண் குடும்பத்தினரை, சகோதரியினரை எனது துறையில் உள்ளவர்களை யார் குறை கூறினாலும் எங்களையும் சாரும். ஆண் வர்க்கத்தினருக்கும் பங்குண்டு.
அருவருக்கத்தக்க வகையில் பேசிய அந்த நபர் மிகவும் வருத்தப்பட வேண்டும். அவர் தவறு செய்திருக்கிறார். இந்த மாநிலத்திலே திரைத்துறையும், அரசும், அரசியல்வாதிகளும் ஒருவருடன் ஒருவர் இணக்கமாக உள்ளனர். சமத்துவம் படைத்த இந்த தமிழகத்தில் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருப்பதை நான் கேள்விபட்டேன். அது வன்மையாக, கடுமையாக கண்டிக்க வேண்டிய செயலாக கருதுகிறேன்.
நடவடிக்கை எடுக்க தேவை:
அது யார் செய்திருந்தாலும் எனக்கு முகம் தெரியாது. இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் அவர் ஈடுபட்டிருக்கக்கூடாது. சுயலாபத்துடன் எதற்காக செய்கிறார் என்று தெரியவில்லை. போகிற போக்கில் சக திரை நாயகிகளை கேவலமான வகையில் பேசியிருப்பது எனக்கு மிகவும் மனதை நோகச் செய்கிறது. தன்மானம் மிக்க மானத்துடன் கௌரவத்துடன் நாங்கள் நடிகைகளை நடத்திக் கொண்டிருக்கும்போது, இதுபோன்ற பேச்சுக்கள் மிகவும் ஆபத்தானவை. அருவருக்கத்தக்கவை. சமுதாயத்தை பாதிக்கும். உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, லியோ படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் வழக்குப்பதிவு என பூதாகாரம் எடுத்ததையடுத்து, மன்சூர் அலிகான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியின் கருத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க: Trisha: அருவருப்பாக உள்ளது! அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை – நடிகை திரிஷா அறிவிப்பு
மேலும் படிக்க: நீதிமன்றத்தில் வேலை செய்யும் பெண்ணின் மகன் நீதிபதியாக தேர்வு – பழனியில் நெகிழ்ச்சி

மேலும் காண

Source link

• list of heroines who get highly paid for ott platforms

list of heroines who get highly paid for ott platforms

பெண்களை மையமாக வைத்து பல்வேறு படங்கள் , வெப்சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஐந்து நடிகைகளைப் பார்க்கலாம்.
அதிக சம்பளம் வாங்கும் டாப் ஐந்து நடிகைகள்
சினிமாவில் எப்போது நடிகைகளின் சம்பளம் நடிகர்களின் சம்பளம் பலமடங்கு குறைவாகவே இருந்திருக்கிறது. எவ்வளவு பெரிய ரோலாக இருந்தாலும் அந்த படத்தில்  கதநாயகனாக நடிக்கும் நடிகரின் சம்பதளத்தில் பாதிதான் நடிகை பெறுவார். இப்படியான நிலையில் ஓடிடி தளங்களில் வருகை நடிகைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பெண்களை மையமாக வைத்து பல்வேறு படங்களும் , வெம் சீரிஸ்களும் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. முன்னணி நடிகைகள் முதல் புதுமுக நடிகைகள் வரை இதில் நடித்து வருகிறார்கள். கதையில் நடிக்க தங்களுக்கு இருக்கும் டிமாண்டின் அடிப்படையில் தங்களது சம்பளத்தை  நடிகைகள் பெற்று வருகிறார்கள். ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் படங்களில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்கும் டாப் 5  நடிகைகளைப் பார்க்கலாம்
பிரியாமணி

நடிகை பிரியாமணி இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். அமேசான் பிரைமில் வெளியான ’தி ஃபேமிலி மேன் “ 1 மற்றும் 2 ஆவத் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பிரியாமணி. இந்த தொடருக்காக 10 இல் இருந்து 20 லட்சம் வரை அவர் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஷி கன்னா

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளியானத் தொடர் ஃபார்ஸி. இந்த தொடரில் ராஷி கன்ன கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த தொடரில் நடித்ததற்காக அவர் 1.5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தெரிகிறது.
சுஷ்மிதா சென்

மிஸ் யுனிவர்ஸ் புகழுக்கு சொந்தக்காரரான நடிகை சுஷ்மிதா சென் இந்த வரிசையில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில்  இவரது நடிப்பில் ஆர்யா வெப் சீரிஸின் மூன்றாவது சீசன் வெளியானது. முன்னதாக தாலி என்கிற படத்தில் சுஷ்மிதா சென் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு 2 கோடி வரை அவர் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராதிகா ஆப்தே

தொடர்ச்சியாக வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. பா ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஓடிடியில்  நடிப்பதற்கு 4 கோடி வரை ராதிகா அப்தே சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
சமந்தா

இந்த வரிசையில் நடிகை சமந்தா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அமேசான் பிரைமில் வெளியான தி ஃபேமிலி மேன் தொடரில் நடித்ததற்காக இவருக்கு 4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம். தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கும் சிட்டடெல் தொடரில்  நடித்து வருகிறார். அமேசான் பிரைம் தயாரித்திருக்கும் இந்த பிரம்மாண்டனமான தொடரில் நடிக்க 10 கோடி ரூபாய் சமந்தாவுக்கு சம்பளமாக கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் காண

Source link

• Tirupur Subramaniam: ஓடிடி ரிலீஸில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்.. ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி முடிவு

Tirupur Subramaniam: ஓடிடி ரிலீஸில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்.. ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி முடிவு

இனிமேல் திரையரங்கத்தில் வெளியான 8 வாரங்களுக்குப் பின்பு ஓடிடியில் படங்களை வெளியிட முடிவெடுத்துள்ளதாக திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ்  சங்கத்தினரின் பொதுக்கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. கடந்த 4 மாதங்களாக திரையரங்கத்திற்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ்  சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.

2 மாதங்களுக்கு பிறகே ஓடிடி ரிலீஸ்:

அவர் பேசியதாவது ‘இந்தியாவில் வெளியாகும் இந்திப் படங்கள் திரையரங்கத்தில் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியாகின்றன. தமிழ் படங்களைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் 4 வாரங்களில் படங்களை ஓடிடியில் வெளியிடும் உடன்படுக்கைக்கு வந்தன. இந்த கால இடைவெளி குறைவாக இருப்பதால் ரசிகர்கள் சிறிய படங்களை ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இதனால் தயார்ப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இருதரப்பினருக்கும் பாதிப்பும் இருக்கிறது.

இதனால் தயாரிப்பாளர்களுடன் கலந்து பேசி திரைப்படங்களை 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். இது தொடர்பாக விரைவில் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடப்படும். மேலும் திரையரங்கங்களுக்கு 8 சதவீதம் உள்ளாட்சி வரி விதிக்கப் படுகிறது. இந்த வரி விதிப்பை நீக்கக் கோரி தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து பேச இருக்கிறோம்.’ என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறினார்

தொடர்ந்து பேசிய அவர் “அதே நேரத்தில்  தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் 80 சதவீதம்  பங்குத் தொகையாக கேட்கிறார்கள். கேரளா போன்ற  மாநிலங்களில் விநியோகஸ்தர்களின் பங்கு 60 சதவீதத்தை தாண்டியது இல்லை. தமிழகத்திலும் 60 சதவீதம் மட்டும் தான் பங்குத் தொகையை கொடுக்க முடியும். இது தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் பேசி வரும் 1 ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும். “ என்று அவர் கூறினார்

திரையரங்கத்தில் கிரிக்கெட்

” மற்ற மாநிலங்களில் ஃபுட்பால் மற்றும் கிரிக்கெட் விளையாட்டை திரையரங்கத்தில் ஒளிபரப்புகிறார்கள். அதேபோல் விளையாட்டுப் போட்டிகளை திரையரங்கத்தில் ஒளிபரப்ப அரசிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு பார்வையாளர்கள் குறைவாக  தான் வருகிறார்கள் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவதை ஊக்கப்படுத்த சிறிய  பட்ஜெட் படங்களுக்கு குறைவான கட்டணத்தை வைக்க தயாரிப்பாளர்களுடன்  பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம். தமிழகத்தில் மொத்தம் 1168 திரையரங்குகள் இருக்கின்றன. இதில் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் தான் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் இருக்கின்றன. மற்ற திரையரங்குகள் நிர்ணயித்த கட்டனத்தை தான் வசூலிக்கிறார்கள். தமிழில் வருடத்திற்கு 250 முதல் 300 படங்கள் வெளியாகின்றன. இதில் ஒரு சில படங்கள் பல  நூறு கோடி வசூல் ஈட்டியதாக கூறுகிறார்கள். இப்படி சொல்வதை அவர்கள் விளம்பரமாக கருதுகிறார்கள்.’ என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்

Source link

• Virat Kohli and Anushka Sharma welcomed their second child akaay | Virat-Anushka Baby : ஜூனியர் விராட் வந்தாச்சு..இரண்டாம் குழந்தையை ஈன்றெடுத்த விராட்

Virat Kohli and Anushka Sharma welcomed their second child akaay | Virat-Anushka Baby : ஜூனியர் விராட் வந்தாச்சு..இரண்டாம் குழந்தையை ஈன்றெடுத்த விராட்

கிரிக்கெட்Virat Kohli Blessed Baby Boy: இதுதான் காரணமா..! பிறந்த குட்டி ”கோலி”.. இன்ஸ்டாவில் சூப்பராக சொன்ன விராட் – அனுஷ்கா..!

Source link

• நாளை மீண்டும் தொடங்கும் விவசாயிகள் பேரணி! போலீஸ் தடுப்புகளை முறியடிக்க புது வியூகம்!

நாளை மீண்டும் தொடங்கும் விவசாயிகள் பேரணி! போலீஸ் தடுப்புகளை முறியடிக்க புது வியூகம்!

விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திய போராட்டக்காரர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்க உள்ளனர்.

விவசாயிகள் வியூகம்:

நாளை முதல் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதால் டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் நுழைவதை தடுப்பதற்காக இரும்புத் தடுப்புகள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்புகளை முறியடித்து உள்ளே செல்வதற்காக விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எல்லைக்கு வந்துள்ளது. போலீசார் வீசும் கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் குண்டுகளில் இருந்து தப்பிப்பதற்காக இரும்பிலான தகர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மாபெரும் பேரணி:

இன்னும் ஏராளமான இயந்திரங்கள் விவசாயிகளால் டெல்லி எல்லைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் டிராக்டர் உள்பட விவசாயத்திற்கு பயன்படுத்தும் இயந்திரங்களை மாற்றி வித்தியாசமாக எல்லைக்கு கொண்டு வருவதால், அதைப்பார்ப்பதற்காக தனியாக மக்கள் கூட்டம் கூடி வருகின்றனர். விவசாயிகள் தங்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று காலை 11 மணி வரை போலீசாருக்கு அவகாசம் அளித்துள்ளனர். இந்த மாபெரும் பேரணியை சம்யுக்தா கிசன் மோர்ச்சா நடத்துகின்றது.

விவசாயிகள் தங்கள் பேரணியை கைவிட அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.  மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

• actor sanjeev venkat shares his clash with actor vijay

actor sanjeev venkat shares his clash with actor vijay

சரியாக புரிந்துகொள்ளாமல் தான் விஜய்யிடன் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டதாக நடிகர் சஞ்சீவ் வெங்கட் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் நெருங்கிய நண்பர்கள்
தனக்கென ஒரு சிறிய நட்பு வட்டத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய் . சென்னை லயோலா கல்லூரியில் படித்த போது அவருடைய பேட்ச் மேட்களான சஞ்சீவ், ராம்குமார், ஸ்ரீநாத், மனோஜ், சுஜய் உள்ளிட்ட ஐந்து நபர்கள் விஜய்யின் நீண்ட கால நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதில் சிலர் வேறு தொழில்கள் செய்துவரும் நிலையில் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய இருவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். விஜய்யுடன் சந்திரலேகா, புதிய கீதை, பத்ரி, நிலவே வா உள்ளிட்டப் படங்களில் இணைந்து நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தார்கள்.
சின்னத்திரையில் சஞ்சீவ்
திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்ததும் நடிகர் சஞ்சீப் சின்னத்திரையில் தொடர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் அறிமுகமாகிய சஞ்சீவ் அடுத்தடுத்து பல தொடர்களில் நடித்து சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடர் இவருக்கும் ஒரு பெரிய பிரேக் ஆக அமைந்தது. தற்போது ஒளிப்பரப்பாகி வரும் வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார்
விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதாலோ என்னவோ சஞ்சீவின் நடிப்பு விஜய்யைப் போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் ட்ரோல் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில் சஞ்சீவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி சஞ்சீவ் இது குறித்து பேசினார்.’ நான் விஜய் மாதிரி நடிப்பதாக வரும் ட்ரோல்களைப் பார்க்கிறேன். விஜய் என்னிடம் இது பற்றி பேசியிருக்கிறார்.  நீ நடிப்பது , வசனம் பேசுவது எல்லாம் என்னை மாதிரியே இருக்கிறது ,  நீ தினமும் சீரியலில் நடிக்கிறாய் நான் வருடத்திற்கு ஒரு படம் நடிக்கிறேன். இதனால் பார்ப்பவர்கள் நான் தான் உன்னைப் பார்த்து நடிப்பதாக பேசப்போகிறார்கள்’ என்று ஜாலியாக தன்னிடம் சொன்னதாக சஞ்சீவ் தெரிவித்தார். தான் வேண்டுமென்றே விஜய் மாதிரி நடிக்கவில்லை என்றும் தான் எதார்த்தமாக நடிப்பது விஜய் மாதிரி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கொஞ்சம் ஓவராக பேசிட்டேன்
மேலும்  நடிகர் விஜய்க்கும் தனக்கும் இடையில் ஒருமுறை கருத்து வேறுபாடு ஏற்ப்பட்ட நிகழ்வையும் அவர் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். ஒரு முறை ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது தான் அந்த உரையாடலை சரியாக புரிந்துகொள்ளாமல் விஜய்யிடம் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டதாக அவர் கூறினார். இதனால் கடுப்பான விஜய் உட்கார்ந்த இடத்தைவிட்டு சட்டென எழுந்து தான் கிளம்புவதாக சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் என்று அவர் கூறினார்.
விஜய் கோபமடைந்தால் அவரிடம் இருந்து பெரிய வார்த்தைகள் எல்லாம் வராது சின்னதாக ஒரு ரியாக்‌ஷன் கொடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அவர் சென்றுவிடுவார் . அந்த சம்பத்திற்கு பிறது ஒருமுறைக்கு பல முறை யோசித்தப் பின்பே தான் விஜய்யிடன் பேசுவதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link

• Deepika padukone ranveer singh expect their baby know full details

Deepika padukone ranveer singh expect their baby know full details

பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான லவ்லி ஜோடிகள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதி. இவர்கள் இருவரும் முதன் முதலில் சஞ்சய் லீலா பன்சாலியின் கோலியன் கி ராஸ்லீலா ராம்-லீலா படத்தில் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் படத்தில் ஜோடி சேர்ந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து இருவரும் ஆறு வருடங்களாக டேட்டிங் செய்து வந்தனர். பின்னர் 2018ம் ஆண்டு இத்தாலியின் லேக் கோமோவில் அசத்தலாக திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் ஐந்தாவது ஆண்டு திருமண விழாவை பெல்ஜியத்தில் கொண்டாடினர்.
குழந்தைகளுக்கு எதிர்பார்ப்பு:
சமீபத்தில் தீபிகா படுகோன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவர் பேசுகையில் ரன்வீருக்கு தனக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எங்களுக்கான ஒரு குடும்பத்தை தொடங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என கூறி  இருந்தார்.

மேலும் அவரின் குடும்பத்தினர் பற்றி அவர் பேசுகையில் “என்னை வளர்த்த என்னுடைய அத்தை, மாமா மற்றும் குடும்ப நண்பர்கள் அனைவருமே நான் அப்படியே இருக்கிறேன். சிறிதும் மாறவே இல்லை என கூறுவார்கள். தொழிலில் பணம், புகழ், பெயரை சம்பாதித்த பிறகு ஒருவர் மாறி விடுவது என்பது எளிது. ஆனால் என்னுடைய வீட்டில் என்னை யாருமே ஒரு பிரபலத்தை நடத்துவது போலவே நடத்த மாட்டார்கள்.
முதலில் நான் என் பெற்றோருக்கு மகள், உடன்பிறந்தவர்களுக்கு ஒரு சகோதரி. அது என்றுமே மாறுவதை நான் விரும்பவில்லை. எங்களின் குடும்பம் எங்களை அடித்தளமாக வைத்திருக்கிறது. ரன்வீரும் நானும் எங்களுடைய குழந்தைகளை அதே மதிப்புடன் தான் வளர்ப்போம் என நம்புகிறோம்.
தீபிகா படுகோனா கர்ப்பமா?
அந்த வகையில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் அவர்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. தீபிகா இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்ப காலத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற 77 வது பாஃப்டா சர்வதேச விருது வழங்கும் விழாவின் ரெட் கார்பெட்டில் கலந்து கொண்ட போது தீபிகா தன்னுடைய வயிற்று பகுதியை மறைப்பது போல பளபளப்பான புடவையில் தோன்றியிருந்ததால் அவர் கர்ப்பமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

சமீபத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான அதிரடி ஆக்ஷன் திரில்லர் ஜானர் படமான ‘ஃபைட்டர்’ படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக தீபிகா நடித்திருந்தார். அனில் கபூர், கரண் சிங் குரோவர் மற்றும் அக்ஷய் ஓபராய் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் வரலாற்று படமான கல்கி 2898 AD படத்தில் நடிகர் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வரும் மே 9ம் தேதி வெளியாக உள்ளது.
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் போலீஸ் கேரக்டரில் சிங்கம் அகைன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தீபிகா, அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், அர்ஜுன் கபூர் மற்றும் கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது. அதை தவிர ரன்வீர் ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் டான் 3 படத்திலும் நடிக்க உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண

Source link

• சோனியா காந்தி போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு

சோனியா காந்தி போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு

மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ், தி.மு.க. உள்பட நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது.
ராஜ்ய சபா எம்.பி. ஆனார் சோனியா காந்தி:
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்த முறையும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் போதுமான அளவு எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அங்கிருந்து 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் காங்கிரஸ் சார்பில் தேர்வாக உள்ளனர். இதனால், அங்கு ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு சோனியாகாந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினராக தேர்வாகியுள்ளதாக ராஜஸ்தான் பேரவை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ள சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
5 முறை மக்களவை உறுப்பினர்:
சோனியா காந்தி முதன்முறையாக 1999ம் ஆண்டு மக்களவை உறுப்பினராக அமேதி தொகுதியில் இருந்து தேர்வானார். அதன்பின்பு, அவர் ராபேரெலி தொகுதியில் இருந்து தொடர்ந்து மக்களவைத் தொகுதிக்கு தேர்வானார். 5 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.  சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளதால் ரேபரேலி தொகுதியில் போட்டியிடப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வயது முதிர்வு காரணமாக சமீபகாலமாகவே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள சோனியா காந்தி, இந்த முறையும் ராபேரெலி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மாநிலங்களவையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார். மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்ய சபா எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து, புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
நேரு குடும்பத்தில் இந்திரா காந்திக்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படும் நபர் சோனியா காந்தி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திரா காந்தி 1964 முதல் 1967ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று பரபரப்புரை செய்து வருகின்றனர். கருத்துக்கணிப்புகளும் பா.ஜ.க.விற்கு ஆதரவாகவே இருக்கிறது.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற விடாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் இந்தியா கூட்டணியினர் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணியில் சறுக்கல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதும் அக்கட்சியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Chandigarh Mayor Election: ”பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சண்டிகர் தேர்தல் அதிகாரி குற்றவாளி”- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மேலும் படிக்க: Constitution of India: அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?

Source link

• zee tamil seetha raman serial february 20th episode update | Seetha Raman:நகையை கண்டு ஆசை கொள்ளும் கல்பனா.. சீதா, சத்யாவுக்கு அடுத்தடுத்து வரும் சந்தேகம்

zee tamil seetha raman serial february 20th episode update | Seetha Raman:நகையை கண்டு ஆசை கொள்ளும் கல்பனா.. சீதா, சத்யாவுக்கு அடுத்தடுத்து வரும் சந்தேகம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவுக்கு எதிராக நான்சியும் சேஷாத்திரியும் கை கோர்த்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ராமும் சீதாவும் ரூமுக்குள் முதல் பங்க்ஷன் நடக்க போவதை நினைத்து சந்தோஷமாக பேசி கொண்டிருக்க இன்னொரு பக்கம் கல்பனா அர்ச்சனாவின் நகைகளை எடுத்து பார்த்து சந்தோசப்படுகிறாள். இவ்வளவு நகை இருக்கா என்று எல்லாத்தையும் எடுத்து போட்டு பார்த்து நகைகள் மீது ஆசைப்படுகிறாள்.
அடுத்து நைட் நேரத்தில் சுபாஷ் ரூமுக்குள் வந்ததும் அர்ச்சனாவை நெருங்க நினைக்க வாங்கிய அடி ஞாபகத்திற்கு வர பயந்து போகிறான். மறுநாள் காலையில் அர்ச்சனா மீண்டும் நகைகளை எடுத்து போட்டு பார்த்து கொண்டிருக்க சத்யா வந்து மடியில் படுத்து கொள்ள அவள் தூங்கிய பிறகு மீண்டும் நகைகளை எடுத்து பார்த்து கொண்டிருக்க சந்தியாவிற்கு சந்தேகம் வருகிறது.
சீதாவும் அர்ச்சனா கெட்டப்பில் இருக்கும் கல்பனா நகைகளை எடுத்து போட்டு பார்த்து கொண்டிருப்பதை பார்த்து சந்தேகத்துடன் என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க கல்பனா பதில் சொல்ல முடியாமல் தவிக்க நான்ஸி அந்த இடத்திற்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? கல்பனா சிக்கி கொள்வாளா? என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு – ரசிகர்கள் இரங்கல்!
Kagney Linn: 36 வயதில் தற்கொலை.. பிரபல பார்ன் நடிகை எடுத்த விபரீத முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மேலும் காண

Source link

• minister PTR palanivel thiyagarajan says technology good impact education | கல்வித்துறையில் தொழில் நுட்பம் பல பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது

minister PTR palanivel thiyagarajan says technology good impact education | கல்வித்துறையில் தொழில் நுட்பம் பல பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது

தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இவர் தற்போது தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.ஒய்.என். ஹூட் டெக்னாலாஜிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள KYN என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி:
பின்னர், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, “தொழில்நுட்பம் பல்வேறு நாடுகள், சமூகங்கள் மட்டுமில்லாது தனி நபர்களுக்கும் முன்னேற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக கல்வித்துறையில் தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது. ஒருகாலத்தில் படிப்பதற்கே பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலை மாறி, தற்போது பட்டயக் கல்வியைக் கூட இலவசமாக இணையத்தில் படிக்க முடிகிற நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படியான ஒரு சூழலில் KYN App அறிமுகவிழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சமூக வலைதளம் உள்ளூர் தொழில்முனைவோர், உள்ளூர் திறமையாளர்கள், சமூக குழுக்கள் என ஒருவருக்கொருவர்  தொடர்புகொள்ள வழி அமைத்துக்கொடுக்கும் என்பதை எண்ணும்போதே பெருமையாக இருக்கிறது. இதன் மூலம், ஆரோக்கியமான இணைய சமூகம், இணைய பயன்பாடு நிச்சயம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”
இவ்வாறு அவர் பேசினார்.
சித்தார்த், மாதவன் பங்கேற்பு:
இந்த செயலி அறிமுக நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டுமின்றி மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன், நடிகர்கள் சித்தார்த், மாதவன்2, கே.ஒய்.என். நிறுவன தலைமைச் செயல் அதிகாரி காயத்ரி தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2000ம் ஆண்டிற்கு பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் அதீத வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அடங்கும். தமிழ்நாடு அரசும் இணையதள வளர்ச்சியை மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகிறது. அதற்காக கோடிக்கணக்கில் முதலீடுகளை ஆண்டுதோறும் செய்து வருகிறது.
இணையதள தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை ஆண்டுதோறும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதிநிலை அறிக்கையிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: Crime: மது பழக்கத்தால் நடந்த விபரீதம்.. மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த கர்ப்பிணி.. என்ன நடந்தது?
மேலும் படிக்க:  Trisha: அருவருப்பாக உள்ளது! அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை – நடிகை திரிஷா அறிவிப்பு

மேலும் காண

Source link

• Manoj Tiwari slams MS Dhoni : ‘’CENTURY அடிச்சேன்..தோனி வாய்ப்பு தரல’’ மனோஜ் திவாரி பரபரப்பு !

Manoj Tiwari slams MS Dhoni : ‘’CENTURY அடிச்சேன்..தோனி வாய்ப்பு தரல’’ மனோஜ் திவாரி பரபரப்பு !

‘’CENTURY அடிச்சேன்..தோனி வாய்ப்பு தரல’’ மனோஜ் திவாரி பரபரப்பு !

Source link

• Chandigarh Mayor Election: ”பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சண்டிகர் தேர்தல் அதிகாரி குற்றவாளி”- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Chandigarh Mayor Election: ”பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சண்டிகர் தேர்தல் அதிகாரி குற்றவாளி”- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர் மேயர் தேர்தல்:
ஜனவரி மாதம் 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட,  குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ்  சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது.
இருப்பினும், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனால், மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
”பாஜக வெற்றி செல்லாது”:
இது பெரும் சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரியே வாக்குச் சீட்டுகளில் பேனாவை கொண்டு எதையோ கிறுக்குவதை போன்ற வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வந்த வழக்கில், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  தேர்தல் நடத்தும் அதிகாரி, தனது அதிகார வரம்பை மீறி தவறு செய்திருக்கிறார். வேண்டும் என்றே 8 வாக்குகள் செல்லாது என அறிவித்திருக்கிறார். வாக்குகள் செல்லாது என்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி வெற்றி:

SC declares AAP’s Kuldeep Kumar winner of Chandigarh Mayor poll, quashes resultRead @ANI Story | https://t.co/NG4lqKfi1E#SupremeCourt #ChandigarhMayoralPolls #AAP pic.twitter.com/nH8XNVXnSv
— ANI Digital (@ani_digital) February 20, 2024

இதையடுத்து, சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது என்றும், தேர்தலை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும்  நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து,  ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு  அளித்தது.

இந்த தீர்ப்பையடுத்து, குல்தீப் குமார் தனது வெற்றியை இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் காண

Source link

• South Indian Film Workers’ Association has strongly condemned former ADMK executive AV Raju’s speech on actress Trisha | திரிஷா குறித்து அவதூறு பேச்சு

South Indian Film Workers’ Association has strongly condemned former ADMK executive AV Raju’s speech on actress Trisha | திரிஷா குறித்து அவதூறு பேச்சு

சேலம் மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் ஏ.வி.ராஜூ. இவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் அதிமு  எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து நேற்று செய்தியாளர்கள் முன்பு பேசியது தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பேசிய அவர், கூவத்தூரில்  தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களையும், திரிஷா உள்ளிட்ட நடிகைகளையும் தொடர்புபடுத்தி பேசினார். தற்போது இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்தநிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவின் நடிகை திரிஷா குறித்த பேச்சுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதில், ”இன்றைய சமூக வளைதளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட A.V.ராஜி என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அவதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை, கீழ்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகைய அநாகரிகமான கீழ்தரமான செயலை,தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்.
பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக திருமதி.முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் “பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்” நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்பு கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்களுக்கு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” என குறிப்பிட்டு இருந்தது.

மேலும் காண

Source link

• zee tamil ninaithen vanthai serial february 20th episode update | Ninaithen Vanthai:மீண்டும் எழிலுக்கு பாட்டிலில் விழுந்த அடி.. குழந்தைகளால் சிக்கிய சுடர்

zee tamil ninaithen vanthai serial february 20th episode update | Ninaithen Vanthai:மீண்டும் எழிலுக்கு பாட்டிலில் விழுந்த அடி.. குழந்தைகளால் சிக்கிய சுடர்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராமையா சுடரை எழிலுக்கு அறிமுகம் செய்ய கூப்பிட அவளும் பயந்து நடுங்கி வெளியே வர எழிலுக்கு போன் கால் வந்து விடுவதால் அவன் எழுந்து சென்று விடுகிறான்.
இதனைத் தொடர்ந்து எழிலிடமிருந்து தப்பித்த சுடர் குழந்தைகளை ஸ்கூலுக்கு கூட்டி வந்து விடுகிறாள். அடுத்து ஒரு கடையில் கோலிசோடா குடித்துக் கொண்டிருக்கும் போது திருடன் ஒருவன் ஒரு பெண்மணியின் பேக்கை திருடி கொண்டு ஓட சுடர் கையில் இருக்கும் பாட்டிலை வீச அது மீண்டும் தலையில் போய் விழுகிறது.
இதனால் பதறிப் போகும் சுடர் அதிர்ச்சி அடைகிறாள். குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் அவர்களை படிக்க சொல்ல அவர்கள் கடைபிடிக்க இல்லனா உங்க டாடி கிட்ட சொல்லிடுவேன் என்று மிரட்டி படிக்க வைக்கிறாள். இதனால் கடுப்பான குழந்தைகள் சுடரை படித்திருக்க பிளான் போட்டு பேய் வேஷம் போட்டு பயமுறுத்துகின்றனர்.
கழுத்தை நெரித்ததும் பயந்து போய் சுடர் வெளியே ஓடி வர எழிலும் சத்தம் கேட்டு வெளியே வர சுடர் பேய்க்கு பயந்து எழிலை கட்டிப்பிடித்துக் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க
RV Udhayakumar: நிறைய காட்றாங்க .. பெண்களின் ஆடை குறித்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சர்ச்சை பேச்சு!
Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு – ரசிகர்கள் இரங்கல்!

மேலும் காண

Source link

• India Contributes 1 Million dollar To Fund Combating Poverty And Hunger

India Contributes 1 Million dollar To Fund Combating Poverty And Hunger

உலக வங்கியின் தரவுகளின்படி (2019ஆம் ஆண்டுக்கானது), உலக மக்கள் தொகையில் 8.5 சதவிகிதத்தினர் கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அதாவது, உலகம் முழுவதும் 60 கோடியே 60 லட்சம் பேர் கடும் வறுமையில் தவித்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு, அந்த எண்ணிக்கை 73 கோடியே 30 லட்சமாக உயர்ந்ததாகவும் 2022ஆம் ஆண்டு, அந்த எண்ணிக்கை 68 கோடியே 20 லட்சமாக குறைந்ததாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
1  மில்லியன் டார் வழங்கிய இந்தியா:
உலகின் வறுமையை ஒழிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து IBSA நிதியத்தை உருவாக்கியது. இந்த நிதியத்தின் மூலம் வறுமையை ஒழிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், IBSA நிதியத்திற்கு இந்தியா சார்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை தெற்கு ஒத்துழைப்புக்கான ஐநா அலுவலகத்தின் (UNOSSC) இயக்குனர் டிமா அல்-காதிப்பிடம் ஐநாவுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் வழங்கியுள்ளார்.
காசோலையை வழங்கி பேசிய ஐநாவுக்கான இந்திய தூதர், “இந்தியாவின் ஜி20 பிரசிடென்சி மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. அதன்படி, உலகளாவிய தெற்கில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இந்த நிதி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஒத்துழைப்பின் உணர்வை வலுப்படுத்தியுள்ளது என்று நாங்கள் நம்புவதால், ஐபிஎஸ்ஏ நிதியை ஆதரிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது” என்றார்.
IBSA நிதியத்திற்கு இதுவரை இந்தியா கொடுத்தது எவ்வளவு?
இதுகுறித்து ஐநாவுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் டாலரை IBSA நிதியத்திற்கு வழங்குகிறது. இதன் மூலம், வளரும் நாடுகளின் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு IBSA நிதியம் உருவாக்கப்பட்டு, 2006ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.  IBSA நிதியம்  தொடக்கப்பட்டதில் இருந்து இந்தியாவின் மொத்த பங்களிப்பு 18 மில்லயன் டாலரை  தாண்டியுள்ளது. IBSA நிதியானது இதுவரை 50.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. இது உலகளாவிய தெற்கின் 37 நாடுகளில் 45 திட்டங்களுக்கு பயன்பெறுகிறது.
இந்த ஆண்டு ஏற்கனவே மூன்று திட்டங்களுக்கு  IBSA நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது தெற்கு பெலிஸில் ‘மைக்ரோ-கிரிட்களைப் பயன்படுத்தி கிராமப்புற மின்மயமாக்கல், தெற்கு சூடானில் ‘நிலையான விவசாயம் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல்’ மற்றும் பாலஸ்தீனத்தில் ‘முபத்ரிட்டியில் வேளாண் வணிக வளர்ச்சியில் முதலீடு’ போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பிணை.. சுல்தான்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Kalki Dham Mandir: இந்தியாவில் முக்கியமாக மாறும் மற்றொரு பிரமாண்ட கல்கி கோயில் – அப்படி என்ன இருக்கு?

மேலும் காண

Source link

• zee tamil idhayam serial february 20th episode update

zee tamil idhayam serial february 20th episode update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதி வாசுவாக மாறி ரத்னத்தை அப்பா என அழைத்து அல்வாவை எடுத்து வந்து கொடுக்க வாசு வாங்கி கொடுக்கும் அதே ஆல்வா என்பதால் எமோஷனான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது நலங்கு வைப்பதற்காக பாரதிக்கு லதா அலங்காரம் செய்து அழைத்து வர பாரதி கண்ணீருடன் வந்து உட்காருகிறாள். அடுத்து நலங்கு வைக்கும் நிகழ்ச்சி தொடங்க ஒவ்வொருவராக நலங்கு வைக்க தொடங்குகின்றனர். எல்லாரும் நலங்கு வைத்ததும் ஆதி பாரதி நலங்கு வைக்கிறான். தமிழ் பாப்பாவை கூப்பிட மீண்டும் அவள் பயந்து போய் துரை அருகே சென்று நின்று விடுகிறாள்.
இதனையடுத்து எல்லாரும் சாப்பிட உட்காருகின்றனர், பாரதியும் சாப்பாடு பரிமாற ஆதி அருகே வந்ததும் அவளால் பரிமாற முடியாமல் கண்ணீருடன் ரூமுக்குள் சென்று விடுகிறாள். இதனையடுத்து மீண்டும் ஆதி வாசுவாக மாறுகிறான். வாசுவை போலவே நடந்து கொள்ள யாருக்கும் எதுவும் புரியாமல் இருக்கிறது.
சாப்பிட்டு முடித்து கை கழுவ மரகதம் இந்தாங்க தம்பி என்று கை துடைக்க டவலை கொடுக்க ஏய் தாய் கிழவி. ஒரு குடிகாரனுக்கு கட்டி கொடுத்து ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பாக்கறியா என்று கேட்க மரகதம் வாசு பேசுவது போலவே இருக்க அதிர்ந்து போய் நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Samantha: நான் நிம்மதியா இருந்து ரொம்ப நாளாச்சு… வருத்துடன் பேசிய சமந்தா!
Nitish Bharadwaj: விவாகரத்து செய்ய பணம் கேட்டார்.. மகாபாராத நடிகர் மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

மேலும் காண

Source link

• இலவச மனைப்பட்டா வழங்ககோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள்  போராட்டம்

இலவச மனைப்பட்டா வழங்ககோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

இலவச வீடுமனை பட்டா

விழுப்புரம்: விழுப்புரத்தில் இலவச மனைபட்டா வழங்ககோரி விண்ணப்பித்த 370 மாற்றுதிறனாளிகளின் மனுக்களை தவறான காரணங்களை காட்டி நிராகரித்தால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் முற்றுகை

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் 370 பேர் தங்களுக்கு அரசு சார்பில் இலவச மனை பட்டா வழங்ககோரி விண்ணப்பித்திருந்தனர். மாற்றுதிறனாளிகளின் இலவச மனைப்பட்டா தொடர்பான மனுவை அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி நிராகரித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தவறான காரணங்களை காட்டி  தங்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை

மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை அடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 100 நபர்களுக்கு முதற்கட்டமாக இலவச மனை பட்டா வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். மாற்றுதிறனாளிகள் கோரிக்கையை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Source link

• மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக எல்.முருகன் தேர்வு..!

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக எல்.முருகன் தேர்வு..!

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Source link

• actress manisha koirala shares her life at 53 on her instagram

actress manisha koirala shares her life at 53 on her instagram

நடிகை மனிஷா கொய்ராலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
மனிஷா கொய்ராலா
நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மனிஷா கொய்ராலா பாலிவுட், கோடிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். கிட்டதட்ட 30 ஆண்டுகளில் 100 படங்களுக்கும் மேலாக நடித்துள்ள இவருக்கு தற்போது 53 வயதாகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபரான சாம்ராட் தஹாலை திருமணம் செய்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் அவருடன் விவாகரத்துப் பெற்றார். புற்றுநோயினால் பாதிக்கப் பட்ட மனிஷா திரைப்படங்களில் இருந்து சில காலம் விலகி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தேர்வு செய்து கதைகளில் நடித்து வருகிறார். தற்போது தனது வாழ்க்கைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்து வருகிறது.
53 வயதில் வாழ்க்கை நன்றாக இருக்கிறது

இந்த பதிவில் அவர் “ இப்போது எல்லாம்  நான் என்ன செய்கிறேன் என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். நான் விரும்பும் நிறைய விஷயங்களை செய்து வருகிறேன்.  சில சமயங்களில் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதும் கூட செய்கிறேன். என் பூனைகள் மற்றும் நாய்களுடன் ஓய்வெடுப்பேன் அல்லது புத்தகம் வாசிக்கிறேன் ,  பாடுவது, நடனம் கற்றுக்கொள்வது, இயற்கையை ரசித்தபடி ஒரு நடைபயணம் செல்வது , ஜிம்மிங் செல்கிறேன்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு 100 படங்களுக்குப் பிறகு எனக்கான நேரம் எனக்கு  கிடைத்திருக்கிறது. கடவுளின் கிருபையால், நல்ல மனிதர்கள் என்னைச் சுற்றி இருக்கிறார்கள், அவர்களின் அன்பிலும் அக்கறையிலும் நான் திளைக்கிறேன்.. என் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரு பரபரப்பான நகரத்தில் தனியாக வாழ்ந்தேன். ஒருவர் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டும், நல்லவர்கள் , கெட்டவர்கள்,  நல்ல ஊடகங்கள் , வதந்திகள் என என்னைச் சுற்றி எல்லாமும் இருந்தன.
சில நேரங்களில் நமக்காக யாரும் ஆதவுக்கு இருக்க மாட்டார்கள் என தெரிந்து இந்த துறையில் நான் போராடி இருக்கிறேன். உண்மையாக இப்போது திரும்பி பார்க்கும் போது நான் இதை எல்லாம் எப்படி செய்தேன் என்று தெரியவில்லை நான் இளையவனாக இருந்ததால், உலகத்தையே ஒரு கை பார்க்க வேண்டும்   என்கிற வைராக்கியம் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
இந்த நினைவுகள் என் மனதில் என்றும் அழியாத பொக்கிஷங்கள். வாழ்க்கை, நல்லது கெட்டது, சந்தோஷம் மற்றும் சோகம் என எல்லாம் நிறைந்ததாக இருந்திருக்கிறது. நீங்கள் இப்போது பார்ப்பது போல், நான் மிகவும் அமைதியாக இருக்கிறேன். முன்பை வித இன்னும் பொறுமையாகவும் பெரிய அதிர்ச்சிகள் ஏதும் இல்லாமல் நிதானமாக இருக்கிறேன். எந்த விஷயம் என்றாலும் அதைப்பற்றி முழுமையாக சிந்தித்து முடிவெடுத்து ஒரு முழுமையான வாழ்க்கையை உருவாக்குகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக கொண்டாடப்பட்ட அவரின் இன்றைய நிலையில் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியையே கொடுத்து வருகிறது.

மேலும் காண

Source link

• uk prime minister Rishi Sunak video on mobile phone ban in schools draws mockery political jabs

uk prime minister Rishi Sunak video on mobile phone ban in schools draws mockery political jabs

Rishi Sunak Video: இங்கிலாந்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக்கின் விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளிகளில் செல்போன்களுக்கு தடை விதித்த பிரிட்டன் அரசு:
பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் கவன சிதறலை குறைக்கும் விதமாகவும் பிரிட்டனில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், “குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் இடமாக பள்ளிகள் இருக்கிறது. மொபைல் போன்கள், குறைந்தபட்சம், வகுப்பறையில் தேவையற்ற கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்காக கடினமாக உழைக்கும் நமது ஆசிரியர்களுக்கு ஒரு கருவியை அளிக்கிறோம். சிறப்பாக கல்வி கற்று தர இது அவர்களுக்கு உதவுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் என்ன?
மொபைல் போன்களுக்கு தடை விதித்து பிரிட்டன் கல்வித்துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், “அனைத்து பள்ளிகளிலும் நாள் முழுவதும் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
வகுப்பறை நடக்கும் போது மட்டுமல்ல, இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சில பள்ளிகளில், மொபைல் போன்களின் பயன்பாடு தினசரி மோதலை உருவாக்குகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விதிகளை மீறும் மாணவர்கள், பள்ளி முடிந்தும் வீட்டுக்கு செல்ல முடியாத வகையில் தண்டிக்கப்படுவார்கள். அல்லது தொலைபேசி பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன் தடை தொடர்பாக வீடியோ வெளியிட்ட ரிஷி சுனக்:

We know how distracting mobile phones are in the classroom.Today we help schools put an end to this. pic.twitter.com/ulV23CIbNe
— Rishi Sunak (@RishiSunak) February 19, 2024

இந்த நிலையில், பள்ளிகளில் செல்போன் பயன்பாடு மாணவர்களுக்கு எந்த  அளவுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்து என்பதை சுவாரஸ்மாக வீடியோவில் ரிஷி சுனக் தெரிவித்திருக்கிறார். அதன்படி, ”மூன்றில் ஒரு பங்கு மாணவர்களின் கல்வி செல்போன் பயன்பாட்டால் பாதிக்கப்படுகின்றது என்று ஆய்வில் கூறப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறந்த கற்றல் சூழல் ஏற்படுத்துவதற்காக பல பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாங்களும் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதித்திருக்கிறோம். அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிட்டோம். இதன் மூலம் மாணவர்கள் தகுதியான கல்வியைப் பெறுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரிஷி சுனக்கை நெட்டிசன்கள் பலரும் வெளுத்து வாங்கி வருகின்றனர். கிரீஞ் வீடியோ என்றும் பயனற்றது என்று விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பிணை.. சுல்தான்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மேலும் காண

Source link

• Ranji Trophy 2024 Quarter Final Matches Start From 23-february Bcci Released Quarter Final Schedule

Ranji Trophy 2024 Quarter Final Matches Start From 23-february Bcci Released Quarter Final Schedule

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் உயர்ந்த கிரிக்கெட் போட்டியாக பார்க்கப்படுவது ரஞ்சி டிராபி. இந்த போட்டியில் விளையாடுவதே பல வீரர்களின் கனவாக இருக்கும். ஐபிஎல் போட்டிகள் வருவதற்கு முன்பாக, ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டி இந்தாண்டும் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த ஜனவரி 5ம் தேதி தொடங்கிய இந்த ரஞ்சி கோப்பை லீக் போட்டிகளை கடந்து, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரஞ்சி கோப்பையில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்று 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. இந்த காலிறுதிக்கு தகுதிபெற்ற அணிகளில் தமிழ்நாடு அணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் பிப்ரவரி 23ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த காலிறுதி அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

Presenting the Quarter-finalists of the @IDFCFIRSTBank #RanjiTrophy 🙌Which team are you rooting for 🤔🗓️ 23rd to 27th February📺 @JioCinema💻📱 https://t.co/pQRlXkCguc pic.twitter.com/0tByOrXvFz
— BCCI Domestic (@BCCIdomestic) February 19, 2024

வெளியான அட்டவணை:
ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டிகளின் அட்டவணையை இந்திய கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இம்முறை கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சௌராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா ஆகிய அணிகள் இந்த காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன.
அதன்படி காலிறுதி முதல் ஆட்டத்தில் விதர்பா மற்றும் கர்நாடகா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா அணிகள் இடையே நடைபெறவுள்ளது. இது தவிர மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – சௌராஷ்டிரா அணிகளும், நான்காவது காலிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் – ஆந்திரா அணிகளும் மோத இருக்கின்றன.

ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள் எங்கு, எப்போது நடைபெறுகிறது..?
காலிறுதி ஆட்டங்கள் அனைத்தும் வருகின்ற 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

விதர்பா vs கர்நாடகா, சிவில் லைன்ஸ் ஸ்டேடியம் (நாக்பூர்)
மும்பை vs பரோடா, BKC மைதானம். (மும்பை)
தமிழ்நாடு vs சௌராஷ்டிரா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி (கோயம்புத்தூர்)
மத்தியப் பிரதேசம் vs ஆந்திரப் பிரதேசம், ஹோல்கர் ஸ்டேடியம் (இந்தூர்)

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி எப்போது..?
2024 ரஞ்சி டிராபியின் காலிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை நடைபெற உள்ள நிலையில், மார்ச் 2-ம் தேதி முதல் அரையிறுதிப் போட்டி தொடங்குகிறது. அரையிறுதிக்கு தகுதி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதையடுத்து, இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் இரு அணிகளும் மார்ச் 10ம் தேதி மோதுகின்றன. இப்படியான சூழ்நிலையில், இந்த ஆண்டு எந்த அணி ரஞ்சி டிராபியில்  சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று அறிய ஆவலாக உள்ளது.

Source link

• Agricultural Budget; Crop Insurance Scheme Special Budget Announcement for Farmers- Today’s Headlines | Today’s Headlines: வேளாண் பட்ஜெட்; பயிர் காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு சிறப்பு பட்ஜெட் அறிவிப்பு

Agricultural Budget; Crop Insurance Scheme Special Budget Announcement for Farmers- Today’s Headlines | Today’s Headlines: வேளாண் பட்ஜெட்; பயிர் காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு சிறப்பு பட்ஜெட் அறிவிப்பு

Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டி- விசிக அறிவிப்பு
தொல் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட பானை சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் விசிக, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கட்நாடகா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது”. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் படிக்க
TN Agriculture Budget 2024: விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள் – வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு
மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணைய்வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025-فا ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானது. மேலும் படிக்க
TN Agriculture Budget 2024: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு திட்டம் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்
2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளிட்ட அறிவிப்புகள் இன்று வெளியானது. மேலும் படிக்க
நீதிபதியாக தேர்வான கூலி தொழிலாளி மகன்; காண பெற்றோர் இல்லை..கலங்கிய கண்கள்
மயிலாடுதுறை அருகே தாய், தந்தையருடன் பள்ளி பருவம் முதல்  கூலி தொழிலாளியாக பணிபுரிந்து கடும் வறுமையில் நீதிபதியாக இளைஞர்  சாதித்துக் காட்டியுள்ளார்.மேலும் படிக்க
Sterlite Reopen : ’ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் கடும் முயற்சி’ சிறப்பு சட்டம் இயற்ற அரசுக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்..!
தூத்துக்குடி என்றால் கடல், உப்பு, முத்து, துறைமுகம் என்ற அடையாளங்களும் பாரதியார், வ.உ.சி., கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களும் திருச்செந்தூர் முருகன் கோயிலும் மக்கள் மனதில் உதிக்கும். ஆனால், இப்போதெல்லாம் தூத்துக்குடி என்றாலே ஸ்டெர்லைட் ஆலையும் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும்தான் நினைவுகளில் நிழலாடுகிறது. 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட காரணமாக இருந்தது ஸ்டெர்லைட் ஆலை. அதுமட்டுமில்லாமல், எண்ணற்றோர் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். சுற்றுச் சூழல் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.  அப்படிப்பட்ட, ஆலையை கடந்த 2018ல் பூட்டி சீல் வைத்தது தமிழ்நாடு அரசு.மேலும் படிக்க

மேலும் காண

Source link

• top news India today abp nadu morning top India news February th 2024 know full details

top news India today abp nadu morning top India news February th 2024 know full details

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பத்தி பேசுறீங்க.. இதை பண்ணுங்க.. மத்திய அரசை கேள்விகேட்ட உச்சநீதிமன்றம்

பாதுகாப்பு படைகளில் ஒருவர் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவதே நிரந்தர கமிஷன் (Permanent Commission) எனப்படும். இதன் கீழ் பாதுகாப்பு படைகளில் பணியில் சேருபவர்கள், தாங்கள் ஓய்வு பெறும் வரை நாட்டுக்கு பணியாற்றலாம். ஆனால், இந்த நிரந்தர கமிஷன் கீழ் ஆண் அதிகாரிகள் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர். அதேபோல, குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் ஒருவர் 14 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இதன் கீழ் பணியல் சேரும் ஆண் அதிகாரிகள், பணிக்காலம் முடிந்ததும் நிரந்தர கமிஷனை தேர்வு செய்யலாம். அல்லது ஓய்வு பெறலாம். ஆனால், குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் பணியில் சேரும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷனில் இணைய வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. மேலும் படிக்க..

தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் தங்க, வெள்ளி நகைகள் – ஏன்? எப்போது தெரியுமா?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல்  செய்யப்பட்ட, தங்க மற்றும் வைரக் நகைகள் 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளன. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கு, கடந்த 2014ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனுவின் விசாரணையின் முடிவில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவரை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் படிக்க..

5 வருட திட்டம் வேண்டாம் – மத்திய அரசின் பரிந்துரையை நிராகரித்த விவசாயிகள் : போராட்டம் தொடரும் என அறிவிப்பு

டெல்லியை நோக்கி செல்லும் தங்களது போராட்டம் நாளை தொடரும் என,  விவசாய சங்கங்கள் அற்வித்துள்ளன. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு வாரமாக மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை முற்றுகையிடும் நோக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியான எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ளனர். போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சேர்ந்து, விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைவதை தொடர்ந்து தடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதலில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த சிலர் படுகாயமடைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. மேலும் படிக்க..

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் – விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெடை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை,  சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில் 7 அம்சங்களில் பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில் இன்று, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். திமுக தலைமையில் 2021ம் ஆண்டு ஆட்சி அமைந்ததுமே முதலே,  தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க..

மேலும் காண

Source link

• win star vijay talks about thalapathy vijay in eppodhum raja movie success meet | WinStar Vijay: “தளபதி விஜய் இடத்தை பிடிப்பேன்”

win star vijay talks about thalapathy vijay in eppodhum raja movie success meet | WinStar Vijay: “தளபதி விஜய் இடத்தை பிடிப்பேன்”

சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்லும் நடிகர் விஜய்யின் இடத்தை பிடிக்க ஆசைப்படுவதாக நடிகர் வின் ஸ்டார் விஜய் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வின் ஸ்டார் விஜய் நடிப்பில் எப்போதும் ராஜா படத்தின் முதல் பாகம் வெளியானது. கைப்பந்து விளையாட்டை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார் எச்.முருகன். இதில் இரட்டை வேடத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் வின் ஸ்டார் விஜய். மேலும் இப்படத்தில் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா,டெப்ளினா, கும்தாஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். எப்போதும் ராஜா படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்ட நிலையில் தணிக்கை குழுவில் 27 காட்சிகளில்  கட் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எப்போதும் ராஜா படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அப்படத்தின் இயக்குநர் வின் ஸ்டார் விஜய், “சின்ன வயசுல இருந்தே எம்ஜிஆர், ரஜினி, விஜய் என எல்லாரையும் பிடிக்கும். அவங்களை பின்பற்றினாலே வெற்றி ஃபார்முலா என்பதால் அவர்களை ஃபாலோ பண்ணி வருகிறேன். எனக்கு அரசியலில் ஈடுபாடும், ஆர்வமும் கிடையாது. சினிமாவில் இருந்து விஜய் சார் அரசியலுக்கு போய் விட்டதால் அவரின் இடம் காலியாகி விட்டது. அதனை நிரப்ப நான் ஆசைப்படுகிறேன்.
எப்போதும் ராஜா படத்தை நான் இயக்கியுள்ள நிலையில் பெரிய நடிகர்கள் கேட்டால் அவர்களின் படங்களை இயக்குவேன். நானாக போய் வாய்ப்பு கேட்க மாட்டேன். இந்த படத்தின் ரிலீசுக்காக நான் போராடி விட்டேன். வேறு யாரின் படமாக இருந்தால் இந்நேரம் பிரச்சினை முடிந்திருக்கும். கடவுள் துணையோடு இந்த படத்தை வெளிக்கொண்டு வந்தேன். மக்கள் ஆதரவு இருந்ததால் தான் படம் இத்தனை நாள் தியேட்டரில் ஓடியது.
தற்போது பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது. அதனைப் பார்க்கும் போது, அதன் தயாரிப்பாளர்கள் சற்று யோசிக்க வேண்டும். பெரிய ஹீரோக்களின் படங்கள் வரும்போது இப்படி படங்களை ரீ-ரிலீஸ் செய்தால் அதனைப் பாராட்டலாம். ஆனால் சின்ன படங்கள் இருக்கும்போது அவர்களுடன் தான் மோதுவார்கள். இதே விஜய், ரஜினி படம் வரும்போது செய்வார்களா? .அவர்களின் கெத்தை யாரிடம் காட்ட வேண்டுமோ காட்டினால் நன்றாக இருக்கும். எப்போதும் ராஜாவின் நான் 10 ஆண்டுகளாக எடுத்தேன். பணம் ரெடி பண்ண கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. உழைப்பு என்றும் ஏமாற்றது. அதனை நம்பி நான் இருக்கேன். இந்த படம் 25 ஊரில் உள்ள தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. சின்ன படங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:Nitish Bharadwaj: பணம் கொடுத்தால் விவாகரத்து கொடுக்க ரெடி.. மகாபாராத நடிகர் மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

மேலும் காண

Source link

• Lok Sabha Election 2024 Villupuram Lok Sabha Constituency Past Election Result History Winners Current Sitting MP Achievements Failures TNN | Villupuram Lok Sabha Constituency: விழுப்புரம் மக்களவைத் தொகுதி நிலவரம் என்ன..?

Lok Sabha Election 2024 Villupuram Lok Sabha Constituency Past Election Result History Winners Current Sitting MP Achievements Failures TNN | Villupuram Lok Sabha Constituency: விழுப்புரம் மக்களவைத் தொகுதி நிலவரம் என்ன..?

விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதி. கடந்த 2008ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின்போது திண்டிவனம் மக்களவை தொகுதி கலைக்கப்பட்டு விழுப்புரம், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட ஆறு தொகுதிகள் அடங்கிய விழுப்புரம் மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டது. நடைபெறக்கூடிய 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 14.94.529 வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.
அனல்பறக்கப்போகும் தேர்தல்: களம் காண காத்திருக்கும் கட்சி தளபதிகள்! விழுப்புரத்தில் யாருக்கு என்ன பலம்?
கடந்த 2009ஆம் ஆண்டு முதல்முறையாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை சந்தித்தது. 2009ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளார் ஆனந்தன் 3,06,826 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட மறைந்த சாமிதுரை 3,04,029 வாக்குகள் பெற்று வெறும் 2,797 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அதனை தொடர்ந்து 2014 நாடாளுமன்ற தேதில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் 4,82,704 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், திமுக சார்பில் போட்டியிட்டு மருத்துவர் முத்தையன் 2,89,337 வாக்குகள் பெற்று 1,93,367 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்று 1,28,168 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயம்:
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 90 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்பு ஆகியவை பிரதான பயிற்களாக உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக கம்பு, தினை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த பரப்பளவான 7,22,203 ஹெக்டேரின், 3,37,305 ஹெக்டேர் (45%) பாசன பரப்பாக உள்ளது. விவசாயத்திற்கு பிரதான நீர் பாசனமாக இருப்பது தென்பெண்ணை ஆறு, வீடுர் அணை ஆகியவறை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகப்படியாக கரும்பு சாகுபடி செய்யப்படுவதால் நாடாளுமன்ற உறுப்பினர் உரிய விலையை பெற்றுத்தர வேண்டும். மேலும், கரும்பு நடவு முதல் வெட்டும் வரை இயந்திரமயமாகிவிட்ட சூழலில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி இயந்திரங்களை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையும், குஜராத், நாக்பூர், கர்நாடாக போன்ற மாநிலங்களில் இருப்பது போல பெரிய அளவிலாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு:
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் கிராமங்கள் அதிகமுள்ள தொகுதி. எனவே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் இல்லை என்பது பெறும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது, எனவே படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக புதுச்சேரி, சென்னை, திருச்சி, பெங்களூர் என அண்டை மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் நிலை உள்ளது.  படித்த இளைஞரள் வேலைக்காக வெளியூர்களுகு குடிபெயர்வதால் மாவட்டத்தின்  வளர்ச்சி என்பது தேக்க நிலையிலேயே உள்ளது.  எனவே விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்று பெறும் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிற்சாலைகளை தொடங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், என்பதும் கேந்திரிய வித்யாலயா போன்ற கல்வி நிறுவங்களை தொடங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலேயே தங்க நகை உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தி சிறப்பு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. வரக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் நகை தொழிலாளர்களுக்கான தொழிற்பேட்டை ஒன்றிய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் என கோரிகைவிடுத்துள்ளனர்.
இரயில்:
தமிழ்நாட்டில் மிக முக்கிய இரயில் நிலையங்களில் ஒன்றாக விழுப்புரம் இரயில் நிலையம் உள்ளது. சென்னையில் இருந்து திருச்சி வரை 320 கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில் இடையே உள்ள விழுப்புரத்தில் தேஜஸ் இரயில் நிறுத்த வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கான காப்பீடு திட்டத்தை போல வணிகர்களுக்கான காப்பீடு திட்டத்தை கொண்டு வர நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பணிகள் குறித்து எம்.பி. ரவிக்குமார் கூறுகையில்:
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி, தமிழ்நாடு, இந்தியா என மூன்று தளங்களில் பணியாற்றிருப்பதாக தெரிவித்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். என்னுடைய கோரிக்கையை ஏற்று டைடல் பார்க் வானூர் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. திண்டிவனத்திற்கு அருகில் சிப்காட் அமைக்கப்பட்டு வருகிறது.  உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுபாதையில் ட்ரோன் பயிற்சி மையம் அமைக்க வலியுறுத்தியுள்ளேன். மரக்காணம் பகுதியில் உப்பு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்டிவனத்தில் உள்ள வேளான் ஆராய்சி மையத்தை விரிக்கா நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவக்கரையில் ஐந்து கோடி மதிப்பீட்டில் கல்மரங்களை பாதுகாக்க புவியியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சார்ந்து நூறுநாள் வேலைக்கான நிதி, ஜிஎஸ்டி நிதியை பெற்று தர வலியுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளிவர கோரிக்கை வைத்து அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்திய அளவில் மத்திய மருத்துவ தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் இருந்தது இதனை வலியுறுத்தி நீதிமன்றம் சென்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 12 ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் படிக்க நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையினர் மாணவர்கள் மேற்படிப்புக்கான உதவி தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியது அதனை எதிர்த்து போராடி பெற்றுக்கொடுத்துள்ளேன். மீனவர்கள் அனுமதி பெற்றே மீன்பிடிக்க செல்லவேண்டும் என்ற மசோதாவை எதிர்த்தன் காரணமாக அது தடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி 212 வினாக்களுக்கு  விடைகளை பெற்றுள்ளேன். கற்பபைவாய் புற்று நோய் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது என எனது தொகுதிக்கு உட்பட்ட 12.58 ஆயிரம் ஒதுக்கி 130 சுகதர நிலையத்ட்திற்கு கற்பப்பைவாய் புற்றுநோயை கண்டறியும் கருவியை வாங்கி கொடுத்துள்ளேன்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் மேசைகள், இருக்கைகள் மற்றும் நூலகங்களுக்கு நூல்கள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி விடுகளில் அனைத்திற்கும் மாணவர்கள் கட்டில்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்புத்துப்பட்டில் உள்ள ஈழத்தமிழர் மறுவாழ்வு மைத்தில் 440 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளேன். இருளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 61 முறை உரையாற்றியுள்ளேன்.
தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பொதுமக்களின் கருத்து:
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியை அதிமுக இரண்டும் முறையும், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் ஒருமுறை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட அனைத்து தரப்பு மக்களும் எளிதில் அணுகக்கூடியவராக ரவிக்குமார் இருப்பது மக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதுவே அவருக்கான சாதகமாக பார்க்கப்படுகிறது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான மேசை, இருக்கைகள் நூலகங்களுக்கு தேவையான நூல்கள் என கல்வி சார்ந்த ரவிக்குமாரின் பணி அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்றாக உள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கான உதவி தொகையை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுக்கொடுத்துள்ளார். தொகுதி சார்ந்த செயல்பாடுகள் மட்டுமின்றி, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனைகளிலும் ரவிக்குமாரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுக்கொடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகள்:
விழுப்புரம் நாடாளுமன்றத்தில் உள்ளடக்கிய ஆறு தொகுதிகளும் அதிகப்படியான கிராமங்களை உள்ளடக்கிய பகுதி என்பதால் படித்த இளைஞ்ர்கள் வேலைவாய்புக்காக வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் நிலையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, மேலும் விவசாயம் சார்ந்த பண்ணைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார இரயில்கள் விழுப்புரத்தில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. விழுப்புரம் வேலூர் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேஜஸ் இரயில் விழுப்புரம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை போன்ற பல குறைபாடுகள் உள்ளது. இருப்பினும் கோரிக்கை குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு சென்றார் என்ற ஆறுதல் மட்டுமே மிச்சமாக உள்ளது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு:
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் ரவிக்குமார் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பில் மருத்துவர் முத்தையன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமகவும் தனித்து போட்டியிடக்கூடிய சூழலில், ரவிக்குமார் தனி சின்னத்தில் போட்டியிட்டாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Source link

• சினேகம் அறக்கட்டளை யாருக்கு சொந்தம்? கவிஞர் சினேகன் அளித்த புகார்.. நடிகை ஜெயலட்சுமி கைது!

சினேகம் அறக்கட்டளை யாருக்கு சொந்தம்? கவிஞர் சினேகன் அளித்த புகார்.. நடிகை ஜெயலட்சுமி கைது!

கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சினேகம் அறக்கட்டளை யாருக்கு சொந்தம் என்பதில் கவிஞர் சினேகன், நடிகை ஜெயலட்சுமி இடையே பிரச்சனை எழுந்த நிலையில், ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் காண

Source link

• Plastic Free Campus TN Govt Manjappai Awards 1st Prize 10 Lakh for Schools Colleges Commercial Establishments

Plastic Free Campus TN Govt Manjappai Awards 1st Prize 10 Lakh for Schools Colleges Commercial Establishments

பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகமாக மாற்றும்‌ சிறந்த பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்‌” வழங்கப்படும்‌ என சென்னை மாவட்ட ஆட்சியர்‌ ரஷ்மி சித்தார்த்‌ அறிவித்துள்ளார். இதில் விருது பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும்‌, இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும்‌, மூன்றாம்‌ பரிசாக ரூ. 3 லட்சமும்‌ வழங்கப்பட உள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாடும் அதன் கழிவுகளும் இயற்கைக்கே அச்சுறுத்தலாக மாறி வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை விலங்குகள் உட்கொண்டு கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றன. இவற்றின் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் குறைந்தபட்சம் குறைக்கவாவது வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகமாக மாற்றும்‌ சிறந்த பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்‌” வழங்கப்படும்‌ என சென்னை மாவட்ட ஆட்சியர்‌ ரஷ்மி சித்தார்த்‌ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:
“மீண்டும்‌ மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ வகையில்‌, சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ காலநிலை மாற்றத்‌ துறை அமைச்சர்‌ சட்டப்‌ பேரவையில்‌ 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில்‌, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும்‌ நெகிழியின்‌ (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகமாக மாற்றும்‌ சிறந்த பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்‌” வழங்கப்படும்‌ என அறிவித்து இருந்தார்‌.
3 சிறந்த பள்ளிகள்‌, 3 சிறந்த கல்லூரிகள்‌ மற்றும்‌ 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு விருது
இதன்படி ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்களான பிளாஸ்டிக்‌ கைப்பைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள்‌ துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின்‌ பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும்‌ 3 சிறந்த பள்ளிகள்‌, 3 சிறந்த கல்லூரிகள்‌ மற்றும்‌ 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள்‌ வழங்கப்படும்‌.
என்னென்ன பரிசுகள்?
விருது பெறுவோருக்கு, முதல்‌ பரிசாக ரூ.10 லட்சமும்‌, இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும்‌, மூன்றாம்‌ பரிசாக ரூ. 3 லட்சமும்‌ வழங்கப்படும்‌.
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால்‌, பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில்‌ முன்மாதிரியாக திகழும்‌ பள்ளிகள்‌/ கல்லூரிகள்‌/ வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள்‌ வழங்கப்படும்‌.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கான விண்ணப்பப்‌ படிவங்கள்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக இணையதளத்தில்‌ https://chennai.nic.in/ பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பிக்கலாம்‌.
குறிப்பு: 1) விண்ணப்ப படிவத்தில்‌ உள்ள இணைப்புகள்‌ தனிநபர்‌ / நிறுவனத்‌ தலைவரால்‌ முறையாக கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்‌.
2) கையொப்பமிட்ட பிரதிகள்‌ இரண்டு மற்றும்‌ குறுவட்டு (சிடி) பிரதிகள்‌ இரண்டினை மாவட்ட ஆட்சியரிடம்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.
விண்ணப்பம்‌ சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 01.05.2024.
கூடுதல் விவரங்களுக்கு: https://chennai.nic.in/
இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link

• Tamil Nadu latest headlines news till afternoon 20th February 2024 flash news details here | TN Headlines: தாக்கலானது வேளாண் பட்ஜெட்; கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

Tamil Nadu latest headlines news till afternoon 20th February 2024 flash news details here | TN Headlines: தாக்கலானது வேளாண் பட்ஜெட்; கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டி- விசிக அறிவிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசியக் கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளுமே முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் படிக்க

TN Agriculture Budget 2024: விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள் – வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு

மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணைய்வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025-فا ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் படிக்க

உலகத் தாய்மொழி நாள்: பள்ளி, கல்லூரிகளில் தமிழ் கட்டாயம், மொழிச் சட்டம், பெயர்ப் பலகைகள்- ராமதாஸ் கோரிக்கை!

உலகத் தாய்மொழி தினம் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி, பள்ளி, கல்லூரிகளில் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும், மொழிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், கடைகள், அலுவலகங்களில் பெயர்ப் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்துள்ளார். மேலும் படிக்க

TN Agriculture Budget 2024: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு திட்டம் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். 2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் படிக்க

Edappadi Palanisamy: ”விவசாயிகளுக்கு பயன் அளிக்கவில்லை” : வேளாண் பட்ஜெட் குறித்து தாக்கிப்பேசிய எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. விவசாயிகளுக்கு புதிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேளாண் பட்ஜெட்டில் அம்சங்கள் இல்லை.  பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்துள்ளனர். நெல், கரும்பு குறித்து திமுக வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மேலும் படிக்க

மேலும் காண

Source link

• 9 reasons to be at the ABP Network Ideas of India Summit know more details here

9 reasons to be at the ABP Network Ideas of India Summit know more details here

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2024 உச்சி மாநாடு, வரும் பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில், யார் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சுயெல்லா பிரேவர்மேன் மற்றும் டாக்டர் சசி தரூர்:
200 ஆண்டுகால பிரிட்டனின் எழுச்சிக்கு இந்தியாவில் கொள்ளையடித்த பணமே காரணம் என்கிறார் காங்கிரஸ் எம்பி சசி தரூர். இந்தியாவிற்கு பிரிட்டன் தார்மீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடன்பட்டுள்ளது என அவர் வாதிடுகிறார். ஆனால், அதற்கு நேர்மாறான வாதத்தை முன்வைக்கிறார் பிரிட்டன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன்.
பிரிட்டிஷ் பேரரசு காலனிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளையும் சட்டத்தின் ஆட்சியையும் கொண்டு வந்துள்ளதாக அவர் கூறுகிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பெருமைமிக்க குழந்தை என்று தன்னை அழைத்து கொள்ளும் அவர், கடந்த காலத்திற்கு மன்னிப்பு கேட்க மறுக்கிறார்.
ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில் தேசியவாதம், பன்முக கலாச்சாரம், மோசமான போர்கள், எல்லைகளை மூடுவது போன்ற பல்வேறு தலைப்புகளில் இவர்கள் இருவரும் விவாதம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்திய – அமெரிக்க எழுத்தாளர் பத்மா லக்ஷ்மி (மாடல், செயல்பாட்டாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்)
எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பாளரான பத்மா லக்ஷ்மி, டாப் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லிங் ஆத்தர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மாடலாகவும் எண்டோமெட்ரியோசிஸ் அறக்கட்டளையின் இணை நிறுவனராகவும் உள்ளார். பெண்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கான ACLU கலை தூதராகவும் உள்ளார். ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்திற்கான நல்லெண்ணத் தூதராகவும் உள்ளார். அமெரிக்க சமையல் மரபுகள் பற்றிய அமெரிக்கர்களின் புரிதலை பன்முகப்படுத்துவதை தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டுள்ளார்.
ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில் பல்வேறு உணவு வகைகள் பற்றி பேச உள்ளார்.
சிற்ப கலைஞர் சுபோத் குப்தா:
ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில் இந்தியாவின் புகழ்பெற்ற சிற்ப கலைஞரான சுபோத், தனது தொடக்க கால நினைவுகளை பகிர்ந்து கொள்ள உள்ளார்.
சப்யசாசி நிறுவனர் சப்யசாசி:
உலகளவில் மேட் இன் இந்தியா பிராண்ட் விரிவடைய காரணமாக இருந்தவர் சப்யசாசி. ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு உலகில் மனித கைகளின் கலைத்திறன் குறித்து பேச உள்ளார்.
அரசியல் திறனாய்வாளர் பேராசிரியர். சுனில் கில்னானி:
இந்தியா என்பதை ஒரு கருத்தாக்கம் என நிறுவியவர். இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றம் குறித்து ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில் பேச உள்ளார்.
நடிகை கரீனா கபூர் கான்:
இயற்கையான நடிப்பு திறன், பிரமிக்கவைக்கும் அழகுக்கு பெயர் போன கரீனா கபூர் கான், நான்காம் தலைமுறை நடிகை ஆவார். குறைபாடற்ற நடிப்பு திறன், தனது பலம் என்ன என்பது குறித்து ஏபிபி நெட்வொர்க்கின் ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ மாநாட்டில் பேச உள்ளார்.
நிதி ஆணையத்தின் தலைவர் டாக்டர். அரவிந்த் பனகாரியா:
இந்தியப் பொருளாதாரத்துடனான தனது வாழ்நாள் அனுபவம், நாம் எங்கே இருக்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவாக எடுத்துரைக்க உள்ளார்.

மேலும் காண

Source link

• திருப்பதியில் குடும்பத்துடன் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்

திருப்பதியில் குடும்பத்துடன் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்

திருப்பதியில் குடும்பத்துடன் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்

Source link

• CM MK Stalin: உழவர்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு

CM MK Stalin: உழவர்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு

வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார். உழவர் பெருமக்களது வாழ்வுக்கு மேன்மைக்குமான அனைத்து திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம். திமுக அரசு, உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதி நிலை அறிக்கை உணர்த்துகிறது. மாநிலத்து மக்களை மட்டுமல்ல, மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேலும் காண

Source link

• TN Weather Update: தமிழ்நாட்டில் சுட்டெரிக்கப்போகும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெப்பநிலை..

TN Weather Update: தமிழ்நாட்டில் சுட்டெரிக்கப்போகும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெப்பநிலை..

வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

22 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  வடதமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

23 ஆம் தேதி, வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 24 மற்றும் 25 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 26 ஆம் தேதி, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது.  சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.4 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 33.3  டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Source link

• Kalki Dham Mandir: check all the Interesting facts, Features, Location about the Sambhal temple | Kalki Dham Mandir: இந்தியாவில் முக்கியமாக மாறும் மற்றொரு பிரமாண்ட கல்கி கோயில்

Kalki Dham Mandir: check all the Interesting facts, Features, Location about the Sambhal temple | Kalki Dham Mandir: இந்தியாவில் முக்கியமாக மாறும் மற்றொரு பிரமாண்ட கல்கி கோயில்

Kalki Dham Mandir: உத்தரபிரதேசத்தில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள கல்கி கோயிலின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
கல்கி கோயில்:
கலியுகத்தின் இறுதியில் பகவான் விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி தோன்றுவார் என இந்து சமயத்தினர் கருதுகின்றனர். அதிலும்,  உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் தான் பிறப்பு நடக்கும் என்றும் நம்புகின்றனர். இந்நிலையில் தான், அந்த மாவட்டத்தில் கட்டப்பட உள்ள கல்கி கோயிலுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம், அபுதாபியில் அண்மையில் கோயில் திறப்பு விழா ஆகியவற்றைக் குறிப்பிட்டு, கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்த விஷயம் தற்போது நனவாகியுள்ளது” என கூறினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கல்கி தாம் பீடாதீஸ்வர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து, கோயிலில் இடம்பெற உள்ள சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
கல்கி தாம் கோயில் – இடம்
கல்கி தாம் கோயில் உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஐச்சோடா கம்போவில் கட்டப்பட உள்ளது.
கல்கி தாம் கோயில் – அம்சங்கள்
கல்கி மகாவிஷ்ணுவின் கடைசி அவதாரம் என்றும் கலியுகத்தின் முடிவு என்றும் நம்பப்படுகிறது. புராணங்களின் படி, கல்கி உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் பிறப்பார் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தற்போது, கல்கி பகவானுக்கான கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இங்குள்ள பழைய சிலை அப்படியே தொடர்வதோடு, கல்கி பகவானுக்கான புதிய சிலையும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 கர்ப்ப கிரகங்கள்:
விஷ்ணுவின் 10 அவதாரங்களை குறிக்கும் வகையில் இந்த கோயில் 10 கர்ப்ப கிரகங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிங்கம், வராகம், கிருஷ்ணர் மற்றும் ஆமை என 10 அவதாரங்களுக்கும் தனி கர்ப்ப கிரகங்கள் இருக்கும் அதோடு,  68 சிறிய கோயில்களும் இடம்பெற உள்ளன.
இரும்பு இல்லாத கோயில்:
கோயில் கட்டுமான பணிகளில் இரும்பு மற்றும் எஃகு பயன்படுத்தக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான பணிகளுக்காக ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்ஷி பஹர்பூரில் இருந்து இளஞ்சிவப்பு கற்கள் கொண்டு வரப்பட உள்ளது. சோம்நாத் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களும் இங்கிருந்து கொண்டுவரப்பட்ட கற்களைக் கொண்டு தான் கட்டப்பட்டுள்ளன.
கோயிலின் உயரம்:
கோவிலின் ‘சிகரம்’ 108 அடி உயரத்திலும், கல்கி கோவிலின் மேடை 11 அடி உயரத்திலும் கட்டப்படும். சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்கி தாம் கோயில் அடுத்த 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கி பகவான் எப்போது பிறப்பார்?
கல்கி பிறக்கும்போது, ​​சிவபெருமான் அவருக்கு வெள்ளைக் குதிரை மற்றும் தேவ்தத்தையும், பரசுராமர் வாளையும், பிருஹஸ்பதி கல்வியயும் வழங்குவார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காண

Source link

• Edappadi Palaniswami says Tamil Nadu government agricultural budjet 2024 is of no use to the farmers

Edappadi Palaniswami says Tamil Nadu government agricultural budjet 2024 is of no use to the farmers

தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
விவசாயிகளுக்கு பயன் அளிக்காத வேளாண் பட்ஜெட்:
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. விவசாயிகளுக்கு புதிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேளாண் பட்ஜெட்டில் அம்சங்கள் இல்லை.
பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்துள்ளனர். நெல், கரும்பு குறித்து திமுக வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.4,000 வழங்கப்படும் எனற அறிவிப்பை செயல்படுத்தவில்லை” என்றார் எடப்பாடி பழனிசாமி.
வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?

2023-2024-ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்குச் சிறந்த உயிர்ம விவசாயிக்கான ‘நம்மாழ்வார் விருது” வழங்கப்பட்டு வருகிறது. 2024-2025-ஆம் ஆண்டிலும் உயிர்ம விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 இலட்சம் ஒதுக்கீடு
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்
கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழக்கு விதைகள், சத்தியமங்கலம்  செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தாள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்
2024-2025-ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உணவுத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகளின் கீழ் 42 ஆயிரத்து 281 கோடியே 87 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
20242025ஆம் ஆண்டில், காவிரி டெல்டா பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன், 5,338 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களைத் தூர்வாருவதற்கு, 110 கோடி ரூபாய் செலவில், 919 பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link

• actor Rituraj Singh passed away for cardiac arrest. | Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு

actor Rituraj Singh passed away for cardiac arrest. | Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு

இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் மாரடைப்பால் காலமான செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக திரையுலகினர் பலர் தொடர்ச்சியாக மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் உடல்நிலையில் அக்கறையின்மையே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகளோடு உயிரிழப்பு வரை அதன் தாக்கம் நீள்வது சோகத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையில் இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
59 வயதான இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே கணைய அழற்சி பாதிப்பு காரணமாக சில நாட்கள் முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரித்துராஜ் சிங். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி பாலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அஜித் படத்தில் நடித்தவர்
ரித்துராஜ் தமிழில் அஜித்குமார் படத்தில் நடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த துணிவு படம் வெளியானது. இந்த படத்தில் மெயின் வில்லனாக ஜான் ஹொக்கைன் நடித்திருப்பார். வங்கி கொள்ளையை மையப்படுத்திய இந்த படத்தில் ஜானுடன் இணைந்து பணத்தை திருடும் 3 பேரில் இவரும் ஒருவராவார். இவரை இப்படத்தில் அடித்து துவைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

துணிவு பட நடிகர் ரிதுராஜ் சிங்(59) மாரடைப்பால் காலமானார் #RiturajSingh #RIPRituRaj pic.twitter.com/7lFTmJkDNA
— ABP Nadu (@abpnadu) February 20, 2024

அதுமட்டுமல்லாமல் ரித்துராஜ் சிங், வருண் தவான் நடிப்பில் வெளியான பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தில் அவரின் அப்பாவாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஜான் ஆபிரகாம் நடித்த சத்யமேவ ஜெயதே, யாரியான் 2 உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்திருப்பார். மேலும் ஹே பிரபு, கிரிமினல் ஜஸ்டிஸ், அபய், நெவர் கிஸ் யுவர் பெஸ்ட் ஃபிரெண்ட் மற்றும் மேட் இன் ஹெவன் உள்ளிட்ட ஏகப்பட்ட வெப்சீரிஸ்களிலும், சில சீரியல்களிலும்  ரித்துராஜ் சிங் பிரபலமானார்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பரான வெற்றி துரைசாமி கார் விபத்தில் காலமானார். அதனைத் தொடர்ந்து அஜித்தின் படங்களில் நடித்த ரித்துராஜ் சிங் உயிரிழந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கிய முன்னாள் அதிமுக பிரபலம் – கடுப்பான திரையுலகினர்!

மேலும் காண

Source link

• Kancheepuram Lok Sabha Constituency | Kancheepuram Lok Sabha Constituency : பாரம்பரிய நகரமான காஞ்சி மக்களவைத் தொகுதி நிலவரம் என்ன ? முழு தகவல் இதோ.!

Kancheepuram Lok Sabha Constituency | Kancheepuram Lok Sabha Constituency : பாரம்பரிய நகரமான காஞ்சி மக்களவைத் தொகுதி நிலவரம் என்ன ? முழு தகவல் இதோ.!

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024  (Kanchipuram Lok Sabha Constituency 2024)
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது.  அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்த பொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் – திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனை அடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) ,செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.
வாக்காளர்களின் விவரம்

வ.எண்

தொகுதியின்
பெயர்

ஆண்
வாக்காளர்கள்

பெண்
வாக்காளர்கள்

மூன்றாம்
பாலின வாக்காளர்கள்

மொத்த
வாக்காளர்கள்

18–19 வயது உள்ளோர்

1
உத்திரமேரூர்
128070
137839
41
265950
2980

2
காஞ்சிபுரம்
149806
160297
21
310124

3606

4

32.செங்கல்பட்டு
சட்டமன்ற
தொகுதி

2,03,837

2,11,209

63

4,15,109

4303

5

33.திருப்போரூர் சட்டமன்ற
தொகுதி

1,46,163

1,51,318

51

2,97,532

4650

6

34.செய்யூர்
சட்டமன்ற
தொகுதி (தனி)

1,08,555

1,12,075

26

2,20,656

3122

7

நெ.35.மதுராந்தகம்
சட்டமன்ற
தொகுதி (தனி)

1,09,585

1,13,898

92

2,23,575

3793

மொத்தம்

846016

886636

294

1732946

22454

வெற்றி பெற்றவர்கள்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்,  1951 கிருஷ்ணசாமி ( காமன்வீல் கட்சி ) காஞ்சிபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகத குமரவேல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
யாருடைய கோட்டை ?
செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2  முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2019 தேர்தல் நிலவரம் எப்படி ?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர்  வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான,  மரகதம்  என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2014 தேர்தல் நிலவரம்
அதிமுக வேட்பாளர் மரகத குமரவேல் 4,99,395 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 3,52,529 வாக்குகளை பெற்றார். மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா 2,07,080 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
2021 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்
காஞ்சிபுரம் –  எழிலரசன் ( திமுக )உத்திரமேரூர் – சுந்தர் ( திமுக=செங்கல்பட்டு – வரலட்சுமி  ( திமுக )திருப்போரூர் – எஸ். எஸ்.பாலாஜி (விசிக)செய்யூர் – பாபு (விசிக)மதுராந்தகம் –  மரகதம் (அதிமுக)
உத்திரமேரூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் செயல்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் 18 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 436 கேள்விகள் எழுப்பியுள்ளார். ஒரு தனி நபர் தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளார். 82 சதவீத வருகை பதிவை வைத்துள்ளார். காஞ்சிபுரத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த ரயில்வே பாலம், அமைக்கும் பணியை பலமுறை ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தியது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. பல ஊர்களில் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிடங்களும் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இறுதி நேரத்திலும் தொடர்ந்து, பணிகளை செய்து வருவது பாதகமாக பார்க்கப்படுகிறது.
மக்களின் கோரிக்கை என்ன ?
* கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலை உள்ளிட்ட அனைத்து கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். கைத்தறி தொழில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு சேலத்தில் உள்ளதை போன்ற, இந்திய கைத்தறி தொழில்நுட்பம் நிறுவனம் மத்திய அரசின் சார்பில் உருவாக்கப்பட வேண்டும்
* தங்கத்தின் விலை உயர்வால் ஜரிகை விலை உயர்ந்து வருவதால், விலையை கட்டுக்குள் வைக்க கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
* நெசவாளர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த, மருத்துவ காப்பீடு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அதே போன்று மருத்துவ காப்பீட்டுக்கான தொகையும் உயர்த்தப்பட வேண்டும்.
* செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் கட்டி முடிக்கப்பட்டு செயல்படாமல் இருப்பதால் அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
* மேல்மருவத்தூர் வரை சென்னை கடற்கரையில் இருந்து இயங்கும் தொடர் வண்டிகளை இயக்க வேண்டும்
* காஞ்சிபுரம் – செங்கல்பட்டு வரை கூடுதலாக ஒரு  ரயில் தண்டவாளம் அமைக்க வேண்டும்.
* செய்யூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Source link

• Sterlite Plant Reopening Administration Trying Hard to Reopen Sterlite Copper Tuticorin Social Activists Urge Govt to Enact Special Law

Sterlite Plant Reopening Administration Trying Hard to Reopen Sterlite Copper Tuticorin Social Activists Urge Govt to Enact Special Law

தூத்துக்குடி என்றால் கடல், உப்பு, முத்து, துறைமுகம் என்ற அடையாளங்களும் பாரதியார், வ.உ.சி., கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களும் திருச்செந்தூர் முருகன் கோயிலும் மக்கள் மனதில் உதிக்கும். ஆனால், இப்போதெல்லாம் தூத்துக்குடி என்றாலே ஸ்டெர்லைட் ஆலையும் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும்தான் நினைவுகளில் நிழலாடுகிறது. 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட காரணமாக இருந்தது ஸ்டெர்லைட் ஆலை. அதுமட்டுமில்லாமல், எண்ணற்றோர் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். சுற்றுச் சூழல் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.  அப்படிப்பட்ட, ஆலையை கடந்த 2018ல் பூட்டி சீல் வைத்தது தமிழ்நாடு அரசு.
ஆலையை மீண்டும் திறக்க தீவிர முயற்சி
5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பல்வேறு வழிகளில் தீவிர முயற்சி செய்துவருகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் வரை சென்று நடத்திவரும் ஸ்டெர்லைட், ஆலையை மூடியதால் இந்தியாவின் காப்பர் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற வாதத்தை முன் வைத்து வழக்காடி வருகிறது.
ஒரு தரப்பு மக்களை பயன்படுத்துகிறதா வேதாந்தா நிறுவனம் ?
அதே நேரத்தில், பல்வேறு தந்திரங்களையும் தங்களுடைய பண பலத்தையும் பயன்படுத்தி ஆலையை திறக்க அனைத்து உத்திகளையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் உபயோகித்து வருவதாக பதபதைக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். அந்த பகுதி மக்கள் சிலரை தூண்டிவிட்டு ஸ்டெர்லை ஆலை இல்லாமல் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புதிய பிரச்னையை உருவாக்கி, ஆலைக்கு ஆதரவான மனநிலையை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் தங்களது எதிர்கால வாழ்க்கை சூனியமாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் அவர்கள். ஆனால், அப்படி ஒரு நிலை வந்தால் அதனை எதிர்த்து மீண்டும் களமாடவும் தூத்துக்குடி இளைஞர்கள் தயாராக இருப்பதாக சொல்கின்றனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர்.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜனிடம் கேட்டபோது,
’ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்கவே கூடாது. அந்த நிலைபாட்டில் இருந்து துளியும் பின்வாங்கிட கூடாது. ஏற்கனவே, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமெல்லாம் ஆய்வு செய்து, ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கிறது என்ற அறிக்கையின் அடிப்படையில்தான் மூடப்பட்டிருக்கிறது. அதோடு,  தொழில் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது. தமிழ்நாட்டில் எந்த மாதிரியான தொழிற்சாலைகளை அனுமதிக்க வேண்டும், அனுமதிக்க கூடாது என்பதை முடிவெடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரமும் உரிமையும் இருக்கிறது. அதனடிப்படையிலும் சரி, தாமிர உருக்கு ஆலை சுற்றுச்சூழலுக்கு தீவிரமான மாசை ஏற்படுத்துபவை என்ற காரணத்தினாலும் சரி, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது.

சுந்தர்ராஜன், பூவுலகு நண்பர்கள் அமைப்பு

’அவசர சிறப்பு சட்டம் இயற்றுக’ – அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்
இருப்பினும், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமிக்கும் நடவடிக்கைகளில் உச்சநீதிமன்றம் இறங்கியிருப்பதால், தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுத்து நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அவசர சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
காப்பர் உற்பத்தி பின்னடைவு – ஸ்டெர்லைட் நிர்வாகம் சொல்வது உண்மையா ?
ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கிய காப்பரில் 40 %தான் இங்கு பயன்பட்டது. மீதம், 60 % ஏற்றுமதிதான் செய்யப்பட்டது. தாமிர தாதுக்களை ஆஸ்திரேலியா, தாஸ்சானியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடியில் உருக்கி பயன்படுத்துவதால், இந்த உருக்கு ஆலை மூலம் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. தாதுக்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலேயே உருக்காலை அமைத்து காப்பர் உருவாக்காமல், தூத்துக்குடியில் வந்து ஆலையை அமைத்து உருக்கி எடுப்பது எதற்காக ? தமிழக மக்களை எளிதாக ஏமாற்றிவிடலாம் என்பதாலா ? அவர்களுக்கு எந்த சீர்கேடு ஏற்பட்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என திமிரினாலா ? அல்லது எந்த சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டாலும் பணம் கொடுத்து சரிகட்டிவிடலாம் என்ற ஆணவத்தினாலா ?
இப்படிப்பட்ட அபாயகரமான, மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டில் இயங்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றார்’

மேலும் காண

Source link

• Natarajan Speech -"CSK-வில் விளையாட ஆசை.. தோனியை பார்த்தாலே புத்துணர்ச்சி” நடராஜன் OPEN TALK

Natarajan Speech -"CSK-வில் விளையாட ஆசை.. தோனியை பார்த்தாலே புத்துணர்ச்சி” நடராஜன் OPEN TALK

"CSK-வில் விளையாட ஆசை.. தோனியை பார்த்தாலே புத்துணர்ச்சி” நடராஜன் OPEN TALK

Source link

• சாலையோர காய்கறி கடைகளால் உழவர் சந்தை வியாபாரம் முற்றிலும் பாதிப்பு

சாலையோர காய்கறி கடைகளால் உழவர் சந்தை வியாபாரம் முற்றிலும் பாதிப்பு

திருவண்ணாமலை: சாலையோரம் காய்கறிகள் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், உழவர் சந்தையில் வந்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழவர் சந்தை வியாபாரிகள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு உழவர் சந்தை திறக்கப்பட்டது. இந்த உழவர் சந்தையில் திருவண்ணாமலை, வேங்கிக்கால், துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி வகைகளையும், முருங்கைக்கீரை, சிறுகீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை உள்ளிட்ட கீரை வகைகளையும் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக உழவர் சந்தையில் நல்லபடியாக வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உழவர் சந்தையில் விவசாயிகள் வியாபாரம் செய்யாமல் இருந்து வந்தனர். அப்போது விவசாயிகள் காய்கறிகளை உழவர் சந்தையில் விற்காமல் சாலையோரங்களில் விற்பனை செய்தனர்.

அரசு ஊழியர்கள் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதில்லை
தற்போது வேலூர் சாலையில் சாலையோரங்களில் 80-க்கும்  மேற்பட்ட தற்காலிக கடைகளும், காந்திநகர் புறவழிச் சாலையில் சாலையோரங்களில் 30-க்கும் மேற்பட்ட  கடைகளும், வேட்டவலம் சாலையில் சாலையோரம் 20-க்கும் மேற்பட்ட  தற்காலிக காய்கறி கடைகளும், தண்டராம்பட்டு சாலையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளும்  செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வேங்கிக்கால் பஞ்சாயத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிக அளவு வசித்து வருவதால் இவர்கள் அனைவரும் வேலூர் சாலையில் உள்ள தற்காலிக சாலையோர காய்கறி கடைகளில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் யாரும் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதில்லை. இதனால் உழவர் சந்தையில் இருக்கும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் சிரமத்திற்கு தள்ளப்பட்டனர்.

உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
அதனை தொடர்ந்து உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் சாலையோரங்களில் காய்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரையும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , அனைவருக்கும் வியாபாரம் நடக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித் தொகை வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை ,வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள்,சாலை வசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை துறை சார்ந்த பயிர்க்கடன்கள், புதிய நீர்தேக்க தொட்டி அமைத்து தருதல், தாட்கோ மூலம், கடனுதவி, கூட்டுறவு சங்ககளில் பயிர் கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 585 மனுக்கள் பெறப்பட்டது.

மேலும் காண

Source link

• Latest Gold Silver Rate Today February 20 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

Latest Gold Silver Rate Today February 20 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 46,280 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,785  விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,040 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,255 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 க்கு விற்பனையாகிறது.
கோயம்புத்தூர்
“தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,255 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,785 ஆகவும் விற்பனையாகிறது.
மதுரை
மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,255 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,785 ஆகவும் விற்பனையாகிறது.
திருச்சி
திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,255 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,785 ஆகவும் விற்பனையாகிறது.
வேலூர்
வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,255 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,785 ஆகவும் விற்பனையாகிறது.
நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
மும்பை
மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,229 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,710 ஆகவும் விற்பனையாகிறது.
புது டெல்லி
புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்ஒன்றிற்கு ரூ.6,244 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,725 ஆகவும் விற்பனையாகிறது.
கொல்கத்தா
கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,229 கவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,710 ஆகவும் விற்பனையாகிறது.
ஐதராபாத்
ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,229 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,710 ஆகவும் விற்பனையாகிறது.
அகமதாபாத்
அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,234 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,715 ஆகவும் விற்பனையாகிறது.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,229 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,710 ஆகவும் விற்பனையாகிறது.
பெங்களூரு
பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,229 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,710 ஆகவும் விற்பனையாகிறது.
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,244 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,725 ஆகவும் விற்பனையாகிறது.
புனே
புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,229 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,710 ஆகவும் விற்பனையாகிறது.

Source link

• Pushpa 3 : புஷ்பா 3 இருக்கு..உறுதிப்படுத்திய அல்லு அர்ஜுன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Pushpa 3 : புஷ்பா 3 இருக்கு..உறுதிப்படுத்திய அல்லு அர்ஜுன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Pushpa 3 : புஷ்பா 3 இருக்கு..உறுதிப்படுத்திய அல்லு அர்ஜுன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Source link

• Loksabha Election: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டி: விசிக அறிவிப்பு

Loksabha Election: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டி: விசிக அறிவிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட பானை சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் விசிக, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கட்நாடகா, ஆந்திரா ஆகிய் 5 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது’’ என்று திருமாவளவன் அறிவித்தார்.

மேலும் காண

Source link

• Sri Lankan Tamils Social and economic rights will be upheld Says President Ranil wickremesinghe

Sri Lankan Tamils Social and economic rights will be upheld Says President Ranil wickremesinghe

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்கள் அனைவரையும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைத்து ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. ஆனாலும், தமிழர்கள் இன பிரச்னை மட்டும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இலங்கை தமிழர்களின் சமூக, பொருளாதார உரிமைகள் நிலைநாட்டப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான முயற்சிகளை எடுக்க தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘பாரதம் – இலங்கை’ திட்டம்:
இலங்கை தமிழர்களுக்கு வீட்டி கட்டி தர இந்திய அரசு சார்பில் திட்டம் வகுக்கப்பட்டு, அது தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ‘பாரதம் – இலங்கை’ என்ற திட்டத்தின் கீழ் இந்திய அரசின் நிதியுதவியில் 60,000 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தோட்டத்துறையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு 10,000 வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
‘பாரதம் – இலங்கை’ திட்டத்தின் நான்காவது கட்டமாக 45 தோட்ட எஸ்டேட்டில் 1,300 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர்.
“பெரும் இழப்பை சந்தித்த இலங்கை தமிழர்கள்”
அப்போது இந்தியாவுக்கு நன்றி தெரிவத்து பேசிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, “வீடு கட்டும் திட்டத்திற்கு இந்திய அரசு பெருந்தன்மையுடன் ஆதரவளித்துள்ளது. இந்தச் செயலுக்காக இந்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் சமூகம், துரதிர்ஷ்டவசமாக பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.

High Commissioner @santjha joined H.E President @RW_UNP, and other dignitaries virtually in a ceremony to launch the construction of 1300 houses. This is the first stage of construction of 10,000 houses in plantation areas through grant assistance from #India. pic.twitter.com/Afv7iuHyaU
— India in Sri Lanka (@IndiainSL) February 19, 2024

நிலமும் வீடும் இன்றி தமிழர்கள் இருந்து வருகின்றனர். இன்று அவர்களது அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களின் பொருளாதார உரிமைகளையும் சமூக உரிமைகளையும் நிலைநிறுத்துவது இன்றியமையாதது” என்றார்.
இலங்கை தமிழர்கள் மற்றும் தோட்டப் பகுதிகளின் முன்னேற்றத்தில் இந்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது தொடர்பான திட்டங்களுக்கு மட்டும் இந்திய அரசு 30 பில்லியன் இலங்கை ரூபாயை ஒதுக்கியுள்ளது. மலையக பகுதியில் 14,000 வீடுகளோடு, டிக்கோயாவில் பல் சிறப்பு மருத்துவமனை கட்டி தரப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link

• Mettur dam’s water inflow has remained at 54 cubic feet for the second day TNN

Mettur dam’s water inflow has remained at 54 cubic feet for the second day TNN

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக குறைந்துள்ளது.

நீர்மட்டம்:
அணையின் நீர் மட்டம் 65.13 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 28.65 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.42 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.80 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 488 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,122 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 52.58 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 102 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.

மேலும் காண

Source link

• TN Agriculture Budget 2024: வட்டாரத்தில் ஒரு கிராமத்திற்கு மாதிரி பண்ணை

TN Agriculture Budget 2024: வட்டாரத்தில் ஒரு கிராமத்திற்கு மாதிரி பண்ணை

TN Agriculture Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி,
வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்:

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு
வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம்
கன்னியாகுமரியில் பரிசோதனை, பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட ரூ.3.60 கோடி ஒதுக்கீடு
ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.3 கோடி நிதி
பயிர் உற்பத்தி திறனை உயர்த்த ரூ.48 கோடி மதிப்பில் ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
12,500 ஏக்கர் பரப்பளவில் சூரிய காந்தி சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும்
எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு
துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு
தென் மாவட்டங்களில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 2 இலட்சத்து விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்
ரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைத்து மண்ணின் வளம் காக்க, 6 கோடியே 27 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்ப்படுத்த 7 கோடியே 50 இலட்சம் ரூபாயும், 37,500 ஏக்கர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும்.
2 லட்சம் விவசாயிகளுக்கு 10 இலட்சம் ஏக்கரில் இடுவதற்காக, 5 இலட்சம் லிட்டர் உயிர் உரங்கள், 7 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் வழங்கப்படும்
வேம்பினைப் பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 இலட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண்காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட, 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு
725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்
ஆடாதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு – 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்

மேலும் காண

Source link

• Crime: மது பழக்கத்தால் நடந்த விபரீதம்.. மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த கர்ப்பிணி.. என்ன நடந்தது?

Crime: மது பழக்கத்தால் நடந்த விபரீதம்.. மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த கர்ப்பிணி.. என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் அருகே தடிக்காரன்கோணம் அருகே உள்ள கீரிப்பாறை லேபர் காலனியில் வசிப்பவர் அபிஜித் (வயது 33). இவர் ரப்பர் தொழில் கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ரஞ்சிதாவிற்கு (வயது 25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ரஞ்சிதா தற்போது 9 மாதம் கருவுற்று இருக்கிறார். இவருக்கு வளைகாப்பு நடத்தி பிரசவத்திற்காக புதுநகருக்கு தாய் வீட்டார் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவி ரஞ்சிதாவை பார்ப்பதற்கு அபிஜித் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரஞ்சிதா மது பழக்கத்தை கைவிடுமாறு கணவன் அபிஜித்திடம் கூறியுள்ளார், இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சண்டை முற்றிப்போன நிலையில், ரஞ்சிதா ஆத்திரமடைந்து வீட்டிற்குள் சென்று, மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். மளமளவென தீ பிடித்த நிலையில் ரஞ்சிதா உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. ரஞ்சிதா தீ குளித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் அபிஜித், அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அலறி அடித்து ஓடி, அவர்கள் இருவரை பற்றி எரியும் தீயில் இருந்து மீட்டனர். பின் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கீரிப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 9 மாத கருவுற்ற பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

• அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பிணை.. சுல்தான்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பிணை.. சுல்தான்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடந்த 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Source link

• Indraja Shankar Marriage : மகளின் திருமணம்..அமைச்சர்களுக்கு அழைப்பிதழ் வைத்த ரோபோ ஷங்கர்!

Indraja Shankar Marriage : மகளின் திருமணம்..அமைச்சர்களுக்கு அழைப்பிதழ் வைத்த ரோபோ ஷங்கர்!

Indraja Shankar Marriage : மகளின் திருமணம்..அமைச்சர்களுக்கு அழைப்பிதழ் வைத்த ரோபோ ஷங்கர்!

Source link

• TN Agriculture Budget 2024: விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள்

TN Agriculture Budget 2024: விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள்

TN Agriculture Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி,
விவசாயிகளுக்கு பரிசு அறிவிப்பு:

மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணைய்வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025-فا ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2023-2024-ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்குச் சிறந்த உயிர்ம விவசாயிக்கான ‘நம்மாழ்வார் விருது” வழங்கப்பட்டு வருகிறது. 2024-2025-ஆம் ஆண்டிலும் உயிர்ம விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 இலட்சம் ஒதுக்கீடு
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்
கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழக்கு விதைகள், சத்தியமங்கலம்  செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தாள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்

மேலும் காண

Source link

• World Mother Language Day: Tamil Compulsory in Schools, Colleges, Language Act, Name Boards- Ramadoss | உலகத் தாய்மொழி நாள்: பள்ளி, கல்லூரிகளில் தமிழ் கட்டாயம், மொழிச் சட்டம், பெயர்ப் பலகைகள்

World Mother Language Day: Tamil Compulsory in Schools, Colleges, Language Act, Name Boards- Ramadoss | உலகத் தாய்மொழி நாள்: பள்ளி, கல்லூரிகளில் தமிழ் கட்டாயம், மொழிச் சட்டம், பெயர்ப் பலகைகள்

உலகத் தாய்மொழி தினம் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி, பள்ளி, கல்லூரிகளில் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும், மொழிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், கடைகள், அலுவலகங்களில் பெயர்ப் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தாய்க்கு இணையான மரியாதை தாய்மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்; அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் உலகத் தாய்மொழி நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் அன்னைத் தமிழைக் காக்க தீக்குளித்த தீரர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை கவலையளிக்கிறது.உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டு, நாளை கொண்டாடப்படுகிறது. உலகத் தாய்மொழி நாளுக்கு நீண்ட, உணர்ச்சி மிகுந்த வரலாறு உண்டு. இந்திய விடுதலைக்கு முதல் நாள் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது, கிழக்கு வங்கமும் பாகிஸ்தானின் அங்கமாக மாறியது. பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே வங்க மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், வங்க மொழியை அங்கீகரிக்க வலியுறுத்தியும் 1952ம் ஆண்டு இதே பிப்ரவரி 21ம் நாளில் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சலாம், பர்கட், ரபீக், ஜபார், ஷபியூர் ஆகிய 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்ப்பட்டதை நினைவு கூறும் வகையில், அந்நாளை உலக தாய்மொழி நாளாக 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.
இன்று வரை அரியணை ஏற்ற முடியவில்லைதமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சியின் முழக்கமாக உள்ளது. உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்த முழக்கம் தீவிரமடைந்தது. உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்ட அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில்தான் தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக்க வலியுறுத்தி சென்னையில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர். ஆனால், ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லாததால் அன்னைத் தமிழை இன்று வரை அரியணை ஏற்ற முடியவில்லை.தமிழ் பயிற்று மொழி மட்டும்தான் என்றில்லாமல், கடைகளின் பெயர்ப் பலகைகள், உயர் நீதிமன்றம், திருமணங்கள், ஆலய வழிபாடு என எங்குமே அண்னைத் தமிழைக் காண முடியவில்லை. இப்படியாக தமிழன்னைக்கு இழைக்கப்படும் அவமானத்தை துடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த ஆண்டு உலகத் தாய்மொழி நாளான 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் சென்னையில் தமிழன்னை சிலையுடன் தமிழைத்தேடி என்ற தலைப்பில் பயணத்தைத் தொடங்கினேன். செங்கல்பட்டு, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக பிப்ரவரி 28ஆம் நாள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் பயணத்தை நிறைவு செய்தேன்.
பள்ளி, கல்லூரிகளில் தமிழ் கட்டாயம், மொழிச் சட்டம்தமிழைத்தேடி பயணம் மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அன்னைத் தமிழ் சார்ந்த கோரிக்கைகள் அனைத்தும் இன்னும் கோரிக்கைகளாக தொடர்கின்றன. பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை கட்டாய பயிற்றுமொழியாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும், தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை பட்ட மேற்படிப்பு வரை நீட்டிக்க வேண்டும், தமிழைக் காக்க மொழிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் அமைக்கப்பட வேண்டும், செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை மேம்படுத்த வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு  தமிழ்ப் பாட மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என கடந்த ஓராண்டில் பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்திய போதிலும் எந்தக் கோரிக்கையும் இன்னும் நிறைவேறவில்லை.இந்தி ஆதிக்கத்திலிருந்து அன்னைத் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக 500&க்கும் மேற்பட்டோர் உயிர்த்தியாகம் செய்த தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை வருத்தமும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்குதான்  இருக்கிறது. இதை உணர்ந்து அன்னைத் தமிழ் தொடர்பான மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link

• Cyber Crime: அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்; ஆசை வார்த்தை காட்டி மோசடி – போலீஸ் எச்சரிக்கை

Cyber Crime: அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்; ஆசை வார்த்தை காட்டி மோசடி – போலீஸ் எச்சரிக்கை

சைபர் கிரைம்

சைபர் கிரைம்கள் ஒரு பெரிய ஆபத்தாக கருதப்படுகின்றன, ஏனெனில் அவை நிதி இழப்புகள், முக்கியமான தரவு மீறல்கள், அமைப்புகளின் தோல்வி போன்ற பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் இது ஒரு நிறுவனத்தின் நற்பெயரைப் பாதிக்கும். சைபர் கிரைம் என்பது எந்தவொரு சட்டவிரோத செயலைச் செய்வதற்கு அல்லது எளிதாக்குவதற்கு எந்தவொரு தகவல் தொடர்பு சாதனத்தையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல் என்று வரையறுக்கலாம். சைபர் கிரைம் என்பது ஒரு கணினி அல்லது கணினியின் குழுவை ஒரு நெட்வொர்க்கின் கீழ் தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக குறிவைக்கும் அல்லது பயன்படுத்தும் ஒரு வகை குற்றமாக விளக்கப்படுகிறது. கணினிகள் மற்றும் கணினி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி சைபர் குற்றங்கள் செய்யப்படுகின்றன.

டிஜிட்டல் பணபரிமாற்றம்

வாட்ஸ் அப், பேஸ்புக், டெலிகிராம்,  இன்ஸ்டாகிராம், எக்ஸ் என்று இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் வெகு சுலபமாக ஒருவரை அடையாளம் கண்டு அவர்களை வெகு சுலபமாக வீழ்த்தி யூபிஐ மூலம் அத்தியாவசிய, அவசிய தேவைகளுக்கு கூட இப்போது டிஜிட்டல் பணபரிமாற்றம் மூலம் நடைபெறும் மோசடிகள் கிராமப்புறங்களில் அதிகரித்து வருகிறது. ஒரு ரூபாய் பணத்தை கூட ஆன்லைனில் அனுப்புவது சகஜமாகிவிட்டது. இப்படி தொழில் நுட்பம் பிரமாண்ட வளர்ச்சி பெற்றாலும் இதனால் ஏற்படுவது வேதனைகள் தான் என்றால் மிகையில்லை. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு ஈடாக சைபர் க்ரைம் செயல்பாடுகளை அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

அதிக லாபம், ஆசைவார்த்தை…

பிட் காயின், கிரிப்டோ கரன்ஸி போன்றவற்றை வைத்து கிராமப்புறத்தில் சிறிய அளவில் கடை வைத்துள்ளவர்களிடம் பணம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த இளைஞரிடம்  ரூ 69 லட்சம் மோசடி நடந்துள்ளது.  இப்படி தமிழகம் முழுவதும் பண ஆசைக்காட்டி நடைபெறும் மோசடிக்கு எல்லையே இல்லை.  பெரும்பாலும் பரிசு விழுந்ததாக கூறி அதை அனுப்ப ஜி எஸ் டி தொகையை கட்டுமாறு வலைவீசி அதில் சிக்குபவர்களிடம் தவணை தவணையாக வசூலிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்,

ஆன்லைன் செயலி மூலம் வேலை உள்ளது. இதில் உங்களுக்கு இரண்டு மடங்காக பணம் கிடைக்கும். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும், கிரிப்டோ கரன்ஸி, டாஸ்க் முடித்தால் அதிக பணம், பிட் காயினில் அதிக வருமானம் என்று கூறி வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பாக மர்ம நபர்கள் அதிகளவில் மெசேஜ் அனுப்பி வருவதால், உங்களது வங்கி கணக்கு எண் ரகசிய எண் ஆகியவற்றை கேட்பவர்களிடம் அது குறித்து தெரிவிக்ககூடாது. இதன் வாயிலாக பண மோசடி செய்யப்படும்.

ஆசை வார்த்தை காட்டி மோசடி

எனவே இதில் விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும். இப்படி கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு, பிட்காயின் என்று வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொண்ட மொபைல் எண், பண பரிமாற்றம் நடந்த வங்கி கணக்குகள் போன்ற வற்றை வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. பிட் காயின், கிரிப்டோ கரன்ஸி போன்றவை இந்தியாவில் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தகம் அல்ல என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். சமூக வலைதளங்களில் தங்களைப்பற்றிய விவரங்களை வெளியிடும் போது அதனை வைத்து கிராமப்புறங்களில் சற்று வசதியாக உள்ளவர்கள் பற்றிய விபரங்கள் ஹேக்கர்ஸ்களுக்கு தெரிகிறது. அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்று மிகவும் நுணுக்க மாக அறிந்து கொண்டு ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்து வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்ட புள்ளிவிவரம்

கடந்த 2021ம் ஆண்டு ரூ1,49,30,916மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் ரூ 21,26,305 முடப்பட்டது. ரூ 5,40,813 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு ரூ 2,33,87,661 மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் 1,46,68,038 முடப்பட்டது. 20,06,013 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு 3,74,93,024 மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் 4,82,30,197 முடக்கபட்டது. ரூ 18,03,022 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்காண்டு மோசடி தொகை அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடியும். இந்த புள்ளிவிவரம் விழுப்புரம் மாவட்டம் மட்டுமே. தமிழகத்தை காட்டிலும் தற்போது புதுச்சேரியில் அதிக அளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

• Delhi: எல்லாம் ஒரு விளம்பரத்திற்குத்தான்.. விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு..

Delhi: எல்லாம் ஒரு விளம்பரத்திற்குத்தான்.. விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு..

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் அழைத்து விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் விமான நிலையம் முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. மேலும், விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. பல மணி நேரம் சோதனை செய்த பிறகு விமான நிலையத்தில் வெடிகுண்டு இல்லை என தெரிய வந்தது. தொலைபேசியில் வந்த அழைப்பு வெறும் புரளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த எண்ணுக்கு அதிகாரிகள் அழைக்க முயற்சி செய்தனர். பலமுறை டயல் செய்தும் அந்த நபர் தொலைபேசியை எடுக்கவில்லை.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் குஷாக்ரா அகர்வால் (வயது 20 ) என தெரிய வந்தது. பின் அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டில் இல்லை என்பது தெரிய வந்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல் துறையினர், ஜானக்புரி பகுதியில் அவர் இருப்பதை உறுதி செய்தனர். அந்த இடத்திற்கு சென்று அந்த நபரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் 12 ஆம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், பிரபலமடைய வேண்டும் என்பதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அவர் குருகிராம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த மாதம் இதேபோல், 38 வயதுடைய ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். பின் அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது அவர் மது போதையில் இருந்தாக தெரிவிக்கப்பட்டது. பிகார் மாநிலம், சம்பரன் பகுதியை சேர்ந்த கிருஷ்னோ மாஹ்தோ என்பவர் தான் இந்த செயலில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கூறினர். 38 வயதான கிருஷ்னோ 5 ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், அப்பகுதியில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணையின் போது வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Source link

• TN Agriculture Budget 2024: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு திட்டம்

TN Agriculture Budget 2024: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு திட்டம்

TN Agriculture Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி,

2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்
2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு
ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் – 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்

2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.#CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024 | #TNAgricultureBudget | #TNAgriBudget2024 |@CMOTamilnadu @mkstalin@MRKPanneer pic.twitter.com/F5gfN1Fkyf
— TN DIPR (@TNDIPRNEWS) February 20, 2024

மேலும் காண

Source link

• lal salaam movie heroine talks about her studies in recent interview | Ananthika Sanilkumar: ஸ்கூல் படிப்பு கூட முடியல.. அதுக்குள்ள ரஜினி பட ஹீரோயின்

lal salaam movie heroine talks about her studies in recent interview | Ananthika Sanilkumar: ஸ்கூல் படிப்பு கூட முடியல.. அதுக்குள்ள ரஜினி பட ஹீரோயின்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது ஆசீர்வாதமாக உணர்ந்தேன் என லால் சலாம் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அனந்திகா சனில் குமார் தெரிவித்துள்ளார்.
லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த  பிப்ரவரி 9 ஆம் தேதி  “லால் சலாம்” படம் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இப்படத்தை இயக்கியிருந்தார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்த நிலையில் அனந்திகா சனில்குமார், தன்யா பாலகிருஷ்ணா, செந்தில், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கபில்தேவ் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
இதனிடையே இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அனந்திகா சனில் குமார் அறிமுகமாகியுள்ளார். முதல் படமே அவருக்கு ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அனந்திகா, “லால் சலாம் படம் ரிலீசான பிறகு எல்லாருக்கும் பிடிக்குமா என்ற டென்ஷன் தான் இருந்தது. சென்னையில் முதல்முறையாக சினிமா தியேட்டரில் படம் பார்த்தேன். எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது ஆசீர்வாதமாக உணர்ந்தேன்.
நான் ரொம்ப அமைதியான பொண்ணு. நான் கேரளாவைச் சேர்ந்தவள் என்றாலும் இன்னும் மலையாளத்தில் ஒரு படமும் பண்ணவில்லை. நான் 8ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு படம் வாய்ப்பு வந்தது. ஷூட்டிங் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது நடந்தது. ஆனால் படம் ரிலீசாகும்போது என்னுடைய பகுதி முழுக்க எடிட்டிங்கில் நீக்கப்பட்டு விட்டது. அது நிவின்பாலி நடித்த படம். படம் எடிட்டிங்கில் பார்க்கும்போது 3 மணி நேரம் இருந்தது. அதனை 2 மணி நேரமாக குறைக்க என்னுடைய காட்சி நீக்கப்பட்டிருந்தது.
எல்லா படங்களின் ஷூட்டிங்கின் போதும் தேர்வு குறுக்கே வந்து பிரச்சினையாக இருக்கும். எப்பவுமே ஷூட் முடிந்த பிறகும், இரண்டும் ஒரே நேரத்தில் வரும் மாதிரி இருக்கக்கூடாது என நினைப்பேன். இப்படி நினைக்கும்போது நான் 10 ஆம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். இப்போ நான் 12 ஆம் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன். படிக்கிறதுக்கு நிறைய இருக்கு. கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நான் எப்படி சமாளித்து தேர்வு எழுதப் போகிறேன் என தெரியவில்லை. எனக்கு 3 ஆம் வகுப்பு படிக்கும்போது தற்காப்பு கலை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அதனை கற்று என்னுடைய ஃப்ரண்டை அடித்து விட்டேன். அந்த பையன் என்னை கமெண்டில் லிமிட் தாண்டி பேசியதால் அடித்து விட்டேன். அம்மா முன்னிலையில் தான் நான் அந்த பையனை அடிச்சேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link

• சலவைத் தொழிலாளி மகன் நீதிபதியாக தேர்வு…சாதித்தது எப்படி ?

சலவைத் தொழிலாளி மகன் நீதிபதியாக தேர்வு…சாதித்தது எப்படி ?

சிவில் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ள காஞ்சிபுரம் சலவை தொழிலாளி மகன் பாலாஜி, நேர்மையாக வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், செயல்பாடுகள் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கல்வியும்

தமிழ்நாடு கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக இந்திய அளவில் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக பள்ளி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், மேல் படிப்பை தொடர்வதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் சாதாரண அரசு பள்ளிகளில் படித்தும், படிப்பை மட்டுமே நம்பி முன்னேறிய பல ஆளுமைகள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இதனால் தொடர்ந்து தமிழ்நாட்டில் கல்வி மூலமாக சாதனை மேற்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் நகரத்தில் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடாப்பிடியாக படித்த பாலாஜி

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு தெருவில் வசிக்கும் சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளது காஞ்சிபுரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சலவை தொழிலாளியான கணேசன் – மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி சிறுவயதிலே படிப்பின் மீது ஆர்வம் உள்ள நபராக இருந்துள்ளார். காஞ்சிபுரத்தில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்த நிலையில், அதனை  தொடர்ந்து வழக்கறிஞராக வேண்டும் என எண்ணிய பாலாஜி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார்.

சாதித்துக் காட்டிய பாலாஜி

சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுகப்பிரியன் என்பவரிடம் பணிபுரிந்து வந்தார். குடும்ப நிலையை கருத்தில், கொண்டு அரசு சிவில் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் தன்னை தயார் செய்து கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வில் 12,500 பேர் தேர்வு எழுதிய நிலையில் இவர் தேர்ச்சி பெற்று நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி தேர்விலும் 472 நபர்களில் ஒன்றாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

சிவில் நீதிபதியாக தேர்ச்சி

அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 11ஆம் தேதி வெளியான முடிவுகளின்படி 237 நபர்களில், இவர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரது குடும்பம் மட்டும் உள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி அடைந்திருப்பது காஞ்சி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேர்மை மட்டுமே லட்சியம்

இதுகுறித்து பாலாஜி நம்மிடம் கூறுகையில், சீனியர் வழக்கறிஞர்கள் பலர் தனக்கு அறிவுரை வழங்கியதாகவும், அவர்களின் வழிகாட்டுதலுடன் படித்ததாகவும் தெரிவித்தார். தேர்வில் வெற்றி பெற நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் வரை படிப்பிற்காக செலவு செய்ததாக கூறுகிறார் பாலாஜி. நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து நம்மிடம் கூறுகையில், நாள்தோறும் 8 மணி நேரம் இத்தேர்விற்காக பயிற்சி மேற்கொண்ட நிலையில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தனது பனிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்கும் நிலையை கையாளுவேன். இளம் வழக்கறிஞர்கள் காவல் நிலையம் செல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகளை நேர்மையாக முடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என தெரிவிக்கிறார் நீதிபதி பாலாஜி.

Source link

• செம்மரக்கடத்தலில் ஆந்திர காவலரை கொன்ற கும்பல்; 2வது நபர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்

செம்மரக்கடத்தலில் ஆந்திர காவலரை கொன்ற கும்பல்; 2வது நபர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்

ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது காரை ஏற்றி கொலை செய்த  கடத்தல் கும்பலின் முக்கிய நபர் விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

செம்மரக்கடத்தல்

ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதிகளில் செம்மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க ஆந்திர அரசு, சிறப்பு அதிரடிப்படையை நியமித்துள்ளது. இந்த படை காவலர்கள் செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர எல்லையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 6ம் தேதி அதிகாலை 3 மணியளவில் அதிரடிப் படையை சேர்ந்த காவலர்கள் திருப்பதி அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டம், கேவி பல்லி மண்டலம், குன்றேவாரி பல்லி கூட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வேகமாக வந்த காரை காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

காவலர் உயிரிழப்பு

அந்த கார், காவலர் கணேஷ் (32) மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த காவலர் கணேஷை, பீலேரு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, அதிரடிப்படை காவலர்கள் விரட்டி சென்று கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் அதில் இருந்த 7 செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.

இரண்டாவது நபர் நீதிமன்றத்தில் சரண்

இதில் தலைமறைவாக உள்ள ஆறு பேரை தனிப்படை அமைத்து ஆந்திர மாநில காவல்துறையினர் தேடி வரும் நிலையில் முக்கிய குற்றவாளியான ராமன் கடந்த 14 தேதி விழுப்புரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அகிலா முன்பாக சரணடைந்தையடுத்து அவருக்கு 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளியான மகேந்திரன் விழுப்புரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அகிலா முன்பாக சரணடைந்தையடுத்து அவருக்கு 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் குற்றவாளியை போலீசார் கடலூர் மத்திய சிறையிலடைத்தனர்.

Source link

• Royal Challengers Bangalore balance has improved RCB captain Smriti Mandhana

Royal Challengers Bangalore balance has improved RCB captain Smriti Mandhana

பெண்கள் பிரிமியர் லீக்(WPL 2024):
இந்தியாவில் ஆடவர்களுக்கு எப்படி ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ அதைப்போலவே மகளிருக்காக நடத்தப்படும் லீக் போட்டி தான் பெண்கள் பிரிமியர் லீக்(WPL 2024). இந்த போட்டிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பெண்கள் பிரிமியர் லீக்கின் இரண்டாவது சீசன் நடைபெற உள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்க உள்ள பெண்கள் பிரிமியர் லீக்கின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இரண்டாம் இடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்நிலையில் கடந்த சீசனில் 8 போட்டிகள் விளையாடி 6 போட்டிகளில் தோல்வி அடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அதன்படி மொத்தம் 5 அணிகள் மட்டுமே பங்கேற்ற அந்த சீசனில் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பெங்களூரு அணி நான்காவது இடத்தை பிடித்தது. இச்சூழலில் தான் இந்த சீசனில் தங்களது அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா.
இந்த முறை சிறப்பாக விளையாடுவோம்:
இது தொடர்பாக பேசிய அவர்,”இது முதல் சீசனை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் நிச்சயமாக விரும்புகிறேன். RCB  அணியில் இருந்து சில வீரர்கள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் நாங்கள் புதிய வீரர்களை  எங்கள் அணிக்கு கொண்டு வந்தோம். எனவே, அணியில் தற்போது சமநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எங்கள் திறமையைன்பொறுத்து நாங்கள் விளையாட விரும்புகிறோம். உள்நாட்டு சீசனில் விளையாடுவது எனக்கு நன்றாக பயிற்சி செய்ய உதவியது. இதற்கு முன்னர்  விளையாடாத சில பெண்களை நாங்கள் பார்த்தோம். இந்தப் பெண்களைப் பார்த்த பிறகு எனது உரிமையாளருக்கு சில பெயர்களை பரிந்துரைக்க முடிந்தது” என்றார்.
கோப்பையை வெல்ல முயற்சிப்போம்:
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஆண்டு, போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் அணியில் சேர்ந்தபோது, 90% வீரர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. அவர்கள் என்ன செய்தார்கள், என்ன செய்யவில்லை என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த ஆண்டு, அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வது முக்கியம், அதனால் நாங்கள் சிறப்பாக விளையாட முடியும். WPL ஒரு குறுகிய போட்டியாகும் அதனால் அதில் அந்த நேரத்தில் எந்த மாற்றங்களையுக் மேற்கொள்ள முடியாது. நாங்கள் அதிகம் சிந்திக்க விரும்பவில்லை. எங்கள் அணியில் கடந்த ஆண்டை விட சிறப்பாக விளையாட விரும்புகிறோம். அதைச் செய்ய காத்திருக்கிறோம். எங்கள் அணி நிர்வாகத்தில்  உள்ளவர்கள் மிகவும் நல்லவர்கள்.  எங்களை பெரிதும் ஆதரித்துள்ளனர், எனவே எல்லாவற்றையும் விட, அவர்களுக்காக கோப்பையை வெல்ல விரும்புகிறோம்.

கடந்த சீசனில் நான்கு (தொடர்ச்சியான) தோல்விகளுக்குப் பிறகும் அவர்கள் எங்களை ஆதரித்த விதம், உரையாடல் எங்களின் எதிர்கால வாழ்வை சுற்றியே இருந்தது. எனவே, கடந்த சீசனில் எங்களை ஆதரித்த எங்கள் ரசிகர்களுக்கு கோப்பையை வெல்ல முயற்சிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. கடந்த வருடம் நான் எதிர்பார்த்தபடி என்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு செய்த தவறுகளை இந்த முறை செய்ய நான் விரும்பவில்லை. எங்களது பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது. ஒரு கேப்டனாக, இந்த முறை வீரர்களை நான் நன்கு அறிவேன்”என்று கூறினார் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா.

மேலும் படிக்க: WPL 2024: மகளிர் பிரிமியர் லீக் 2024! எங்கே,எப்போது நடக்கிறது? போட்டியை எப்படி பார்ப்பது? முழு அட்டவணை உள்ளே!

மேலும் படிக்க: MS Dhoni: ஐ.பி.எல் கனவு அணி தேர்வு…தல தோனிக்கு கிடைத்த அந்த அங்கீகாரம்! விவரம் உள்ளே!

மேலும் காண

Source link

• Union Education Minister Dharmendra Pradhan says class 10 12 exams will be held twice a year from 2025

Union Education Minister Dharmendra Pradhan says class 10 12 exams will be held twice a year from 2025

பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டத்தை (NCF) மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்டது. அதன்படி, பொதுத் தேர்வுகள் நடத்தும் முறையில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பல்வேறு மாநில பாடத்திட்டங்களின் கீழ் படித்து வரும் மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு:
அதன்படி, ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்குவதற்காக இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், எதில் நல்ல மதிப்பெண்கள் வாங்குகிறார்களோ அதை இறுதி மதிப்பெண்ணாக வைத்து கொள்ளும் ஆப்சனும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த நடைமுறை எப்போதிலிருந்து அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
மத்திய அரசின் புதிய அறிவிப்பு:
இந்த நிலையில், வரும் 2025-26 கல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை (Prime Minister Schools for Rising India) தொடங்கி வைத்து பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர், “2020 இல் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின் (NEP) நோக்கங்களில் ஒன்று மாணவர்களின் கல்வி அழுத்தத்தைக் குறைப்பதாகும். 2025-26 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிலிருந்து, மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இருமுறை எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.
இந்த முடிவு உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதா என நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களிடம் கேள்வி எழுப்பிய மத்திய கல்வித்துறை அமைச்சர், “இரண்டு பொதுத் தேர்வுகளில் கலந்து கொண்ட பிறகு, எதில் நல்ல மதிப்பெண்களை பெறுகிறீர்களோ அதை இறுதி மதிப்பெண்ணாக வைத்து கொள்ளுங்கள்.
புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களை மன அழுத்தமில்லாமல் வைத்திருப்பதே பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை தரமான கல்வியை வழங்குவது, மாணவர்களை கலாச்சாரத்துடன் இணைத்து அவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பார்முலா இதுதான்” என்றார். கல்விக்கு காங்கிரஸ் அரசு முன்னுரிமை வழங்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க: Supreme Court : பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பத்தி பேசுறீங்க.. அதை இங்க காட்டுங்க.. மத்திய அரசை கேள்விகேட்ட உச்சநீதிமன்றம்

மேலும் காண

Source link

• Hiphop Adhi celebrates his 34th birthday today his journey

Hiphop Adhi celebrates his 34th birthday today his journey

இன்றைய காலகட்டத்தில் பலரும் பன்முக திறமை கொண்டவர்களாக விளங்குகிறார்கள். அப்படி இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முக கலைஞராக விளங்குபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் திரைத்துறைக்கு இசையமைப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை துவங்கினார். அதை தொடர்ந்து மெல்ல நடிகராக களமிறங்கி தற்போது தன்னுடைய படங்களைத்தானே தயாரிக்கும் அளவுக்கு வளந்துள்ளார். தன்னுடைய அசாத்திய திறமையால் இன்று பிரபலமான பர்சனாலிட்டியாக விளங்கும் ஹிப்ஹாப் ஆதி இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஓவர் நைட்டில் வைரல் :
ஆதி மற்றும் ஜீவா Beatz என்ற இரு இசைக்கலைஞர்களால் உருவானதுதான் ஹிப்ஹாப் தமிழா. ராப் பாடலை ஆதி எழுத, ஜீவா Beatz பாட்டுக்கு மெட்டு போடுவார். இந்தியாவில் ராப் இசையை, சொல்லிசை என குறிப்பிட்டதில் முன்னோடி இவர்களே. ரேடியோ மிர்ச்சியில் முதல் முதலில் அவர்கள் இணைந்து பாடிய கிளப்புல மப்புல… என்ற பாடலின் காணொளி யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரே நாளில் லட்சக்கணக்கான லைக்ஸ்களை குவித்து ஓவர் நைட்ல வைரலாகி ஹிப்ஹாப் தமிழாவை பிரபலமாக்கியது. விமர்சனங்களும் வந்து குவிந்தன
ஆல்பம் முதல் பாடலாசிரியர் வரை :
ஹிப்ஹாப் தமிழாவின் முதல் இசை ஆல்பம் 2012ம் ஆண்டு ‘ஹிப்ஹாப்  தமிழன்’ என்ற பெயரில் வெளியானது. இந்தியாவின் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையையும் பெற்று அவர்களின் அடையாளமாகவும் மாறியது. பின்னர் பாடலாசிரியராக எதிர்நீச்சல் படத்தில் ஒரு சில வரிகளை எழுதி  பாடி இருந்தார். வணக்கம் சென்னை படத்தில் இடம்பெற்ற ‘சென்னை சிட்டி கேங்ஸ்டா’ பாடல் அதிரி புதிரி ஹிட் அடித்தது. கத்தி படத்தில் ‘பக்கம் வந்து’ பாடலை எழுதி பாடினார். அவரின் ‘வாடி புள்ள வாடி’ பாடல் இன்று வரை பிரபலமாக இருக்கும் சூப்பர்ஹிட் ராப் பாடல்.

இசையமைப்பாளராக அறிமுகம் :
இப்படி மெல்ல மெல்ல சினிமா பக்கம் நுழைந்த ஆதிக்கு சுந்தர்.சியின் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான ‘ஆம்பள’ படத்தின்  இசையமைப்பாளராக அறிமுகம் கொடுத்தது. முதல் படமே அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. அது வரையில் ஆல்பம் மூலமே அறியப்பட்ட ஆதி, இப்படத்திற்கு பிறகு அதிரடியான இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டார். அதன் வெற்றியை தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை-2,கதகளி, கவண் உள்ளிட்ட படங்களின் மூலம்  அவரின் இசை ரசிகர்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நடிகரான ஆதி :
அடுத்த பரிணாமத்திற்கு தயாரான ஆதி, சுந்தர்.சி தயாரிப்பில் அவரே திரைக்கதை எழுதி, இசைமைத்து, இயக்கியதோடு ஒரு நடிகராக ‘மீசைய  முறுக்கு’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ச்சியாக நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு, வீரன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அரண்மனை 4 படத்திற்கு இசையமைப்பதோடு, கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் பிடி சார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மிகவும் துடிப்பான ஒரு இளைஞனாக தன்னை அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி எடுத்து செல்லும் ஹிப்ஹாப் ஆதிக்கு மேலும் பல வாய்ப்புகளும், வெற்றிகளும், பாராட்டுகளும் இந்த பிறந்தநாளில் குவிய வாழ்த்துக்கள்.

மேலும் காண

Source link

• Supreme Court says You Speak Of Women Power Show It Here pays way for permanent commission of women in Coast Guard

Supreme Court says You Speak Of Women Power Show It Here pays way for permanent commission of women in Coast Guard

Supreme Court On Women Empowerment : பாதுகாப்பு படைகளில் ஒருவர் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவதே நிரந்தர கமிஷன் (Permanent Commission) எனப்படும். இதன் கீழ் பாதுகாப்பு படைகளில் பணியில் சேருபவர்கள், தாங்கள் ஓய்வு பெறும் வரை நாட்டுக்கு பணியாற்றலாம். ஆனால், இந்த நிரந்தர கமிஷன் கீழ் ஆண் அதிகாரிகள் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர்.
பாலின சமத்துவத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்:
அதேபோல, குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் ஒருவர் 14 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இதன் கீழ் பணியல் சேரும் ஆண் அதிகாரிகள், பணிக்காலம் முடிந்ததும் நிரந்தர கமிஷனை தேர்வு செய்யலாம். அல்லது ஓய்வு பெறலாம். ஆனால், குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் பணியில் சேரும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷனில் இணைய வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.
நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு, பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், நிரந்தர கமிஷன் முறை பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறை, ராணுவம் மற்றும் கடற்படையில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது. கடலோர காவல்படையில் அமல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், கடலோர காவல்படையில் குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் பணியாற்றி வரும் பெண் அதிகாரி பிரியங்கா தியாகி, நிரந்தர கமிஷன் முறையை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மத்திய அரசை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
“ஆணாதிக்கத்துடன் நடந்து கொள்ளும் மத்திய அரசு”
ஆணாதிக்கத்துடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக விமர்சித்த இந்திய தலைமை நீதிபதி, “ராணுவமும் கடற்படையும் ஏற்கனவே இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தியிருக்கும் போது கடலோர காவல்படை மட்டும் ஏன் அமல்படுத்தவில்லை? பெண்கள், எல்லைகளை பாதுகாக்க முடியும் என்றால் அவர்களால் கடற்கரையையும் பாதுகாக்க முடியும்.
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. அதை இங்கு காட்டுங்கள். ராணுவமும் கடற்படையும் அதை அமல்படுத்தும்போது தங்களால் அமல்படுத்த முடியாது என கடலோர காவல் படை மட்டும் சொல்ல முடியாது என நினைக்கிறேன். கடலோரக் காவல் படையில் பெண்களைப் பார்க்க விரும்பாத நீங்கள் ஏன் இவ்வளவு ஆணாதிக்கமாக இருக்கிறீர்கள்? கடலோர காவல்படை மீது உங்களுக்கு ஏன் இந்த அலட்சிய மனப்பான்மை.
முழு கதவுகளையும் திறந்துவிடுகிறோம். கடலோர காவல் படையில் பெண்கள் இருக்க முடியாது என்று சொல்லப்பட்ட காலம் போய்விட்டது. பெண்களால் எல்லைகளைக் காக்க முடிந்தால், பெண்களால் கடற்கரையையும் பாதுகாக்க முடியும்” என தெரிவித்தார்.

மேலும் காண

Source link

• today movies in tv tamil February 20th television schedule thimiru ullam kollai pogudhey Bogan pasanga | Today Movies in TV, February 20: தொலைக்காட்சியில் இன்றைய படங்கள் என்னென்ன?

today movies in tv tamil February 20th television schedule thimiru ullam kollai pogudhey Bogan pasanga | Today Movies in TV, February 20: தொலைக்காட்சியில் இன்றைய படங்கள் என்னென்ன?

Tuesday Movies: பிப்ரவரி 20 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி
மதியம் 3.30  மணி: திமிரு
சன் லைஃப்
காலை 11.00 மணி: துணைவன் மதியம் 3.00 மணி: பெற்றால் தான் பிள்ளையா
கே டிவி
காலை 7.00 மணி: உச்சிதனை முகர்ந்தால் காலை 10.00 மணி: மாண்புமிகு மாணவன் மதியம் 1.00 மணி: தூங்காதே தம்பி தூங்காதேமாலை 4.00 மணி: உள்ளம் கொள்ளை போகுதே மாலை 7.00 மணி: போகன் இரவு 10.30 மணி: நேரம்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: பசங்கஇரவு 11 மணி: ஒரு குப்பை கதை
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமசாரி மதியம் 12.30 மணி: ப்ரண்ட்ஷிப் மதியம் 3 மணி: சதுர் முகம்இரவு 9.00  மணி: ப்ரண்ட்ஷிப் இரவு 11.30 மணி: மாணிக்யா
ஜெயா டிவி
காலை 10 மணி: மருமகன் மதியம் 1.30 மணி: வீரம் வெளைஞ்ச மண்ணு  இரவு 10.00 மணி:வீரம் வெளைஞ்ச மண்ணு
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: கற்க கசடறஇரவு 9.30 மணி: உன்னை நான் சந்தித்தேன்
ஜீ திரை
காலை 6 மணி: காஃபி வித் காதல் காலை 9.30 மணி: சர்க்காரின் ஏலம் மதியம் 12  மணி: கனாமதியம் 3  மணி: தங்க ராஜாமாலை 6 மணி: ஆகாஷ கங்கா 2இரவு 8.30 மணி: வீரமே வாகை சூடும்
முரசு டிவி
காலை 6.00 மணி: விடுதலை மதியம் 3.00 மணி: காந்தர்வ கன்னி மாலை 6.00 மணி: தொட்டால் பூ மலரும் இரவு 9.30 மணி: பச்சைக்கிளி முத்துச்சரம்
விஜய் சூப்பர்
காலை 6.00  மணி: தேஸ்மார்கான் காலை 8.30 மணி: சீடன் காலை 11.00 மணி: சங்கிலி புங்கிலி கதவ தொறமதியம் 1.30 மணி: நீல டிக்கெட்மாலை 4.00 மணி: பிளான் பண்ணி பண்ணனும் மாலை 6.30 மணி: ஜெய் சிம்ஹாமாலை 9.30 மணி: காக்கியின் வேட்டை
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: பொன்னான நேரம் காலை 10.00 மணி: ராஜாளி மதியம் 1.00 மணி: குப்பத்து ராஜாமாலை 4.00 மணி: மெல்ல பேசுங்கள் இரவு 7.00 மணி: சேனாதிபதி இரவு 10.30 மணி: அவன் தான் மனிதன்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: உல்லாச பறவைகள் இரவு 7.30 மணி: பிரியா
மெகா டிவி
காலை 9.30 மணி: எல்லைச்சாமி மதியம் 1.30 மணி: மம்மி டாடி  இரவு 11 மணி: தெய்வத்தின் தெய்வம்

காலை 5.30 மணி: ஜில்லா கேடி காலை 8.00 மணி: மீகாமன் காலை 11.00 மணி: கொலைகாரன் மதியம் 2.00 மணி: இண்டெலிஜெண்ட் மாலை 4.30 மணி: இனிது இனிது இரவு 7 மணி: வாங்க மாப்பிள்ளை வாங்க இரவு 9.30 மணி: தி சஸ்பெக்ட்
வேந்தர் டிவி
காலை 10.30  மணி: ஆயுசு நூறு மதியம் 1.30 மணி: கல்யாண கச்சேரி
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: பாட்டும் பரதமும் மாலை 7.30 மணி: அம்பிகை நேரில் வந்தாள்
மெகா 24 டிவி
காலை 10 மணி: ஷாம்பூ மதியம் 2 மணி: மாம்பழத்து வண்டு மாலை 6 மணி: காக்கி சட்டை போட்ட மச்சான்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: துர்கை அம்மன் காலை 10 மணி: ஜென்டில்மேன்மதியம் 1.30 மணி: மறுபிறவி மாலை 4.30 மணி: காவலன் அவன் கோவலன்மாலை 7.30 மணி: மை டியர் லிசாஇரவு 10.30 மணி: தங்கமான தங்கச்சி

மேலும் படிக்க: Raayan: வட சென்னையில் வசிக்கும் சகோதரர்களின் கதை: தனுஷின் ராயன் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

மேலும் காண

Source link

• As per Bengaluru special court orders former cm Jayalalithaa’s gold and diamond jewelleries coming to Tamil Nadu | Jayalalitha Assets: தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் தங்க, வெள்ளி நகைகள்

As per Bengaluru special court orders former cm Jayalalithaa’s gold and diamond jewelleries coming to Tamil Nadu | Jayalalitha Assets: தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் தங்க, வெள்ளி நகைகள்

Jayalalitha Assets: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல்  செய்யப்பட்ட, தங்க மற்றும் வைரக் நகைகள் 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளன.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு:
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கு, கடந்த 2014ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனுவின் விசாரணையின் முடிவில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவரை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இந்த வழக்கு விசாரணைக்கான கர்நாடக அரசின் செலவினங்களுக்காக, ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
ஜெயலலிதா சொத்துகளை ஏலம் விட உத்தரவு:
மனுவை விசாரித்த கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றம், ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு வழக்கறிஞரையும் கடந்த ஆண்டு கர்நாடக அரசு நியமித்து இருந்தது. இதனிடையே, ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பான மனு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.
சிறப்பு நீதிமன்றம் உத்தரவு:
விசாரணையின் முடிவில், “நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலம் ஒப்படைத்து தமிழகத்திற்கு மாற்றுவது நல்லது. செயலாளருக்கு நிகாரன அதிகாரிகள் காவலர்களுடன் வந்து நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கர்நாடகாவில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணை செலவுக்காக ரூ.5 கோடியை கர்நாடகா அரசுக்கு வழங்க வேண்டும். சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ஜெயலலிதா தொடர்பான நிரந்தர வைப்புத் தொகை கணக்கிலிருந்து இந்த பணம் செலுத்தப்பட வேண்டும்” என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகம் வரும் ஜெயலலலிதாவின் நகைகள்:
நீதிமன்ற தீர்ப்பின்படி, மார்ச் 6 அல்லது 7ம் தேதி தமிழக அதிகாரிகள் பெங்களூருவிற்கு நேரில் சென்று,  28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகளை 6 பெட்டகங்களில் தமிழகத்திற்கு கொண்டு வர உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அந்த நகைகள் ஏலத்தில் விடப்படுமா இல்லையா என்பது விரைவில் அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து, வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், 800 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த புடவைகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சி பெட்டிகள், 8 சிவிஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தகக்து.

மேலும் காண

Source link

• Vegetables price list february 20 2024 chennai koyambedu market

Vegetables price list february 20 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.420 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (பிப்ரவரி 20) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)

காய்கறிகள் (கிலோவில்)
முதல் ரகம்
இரண்டாம் ரகம்
மூன்றாம் ரகம்

வெங்காயம்
28 ரூபாய்
24 ரூபாய்
20 ரூபாய்

தக்காளி
25 ரூபாய்
15 ரூபாய்
12 ரூபாய்

நவீன் தக்காளி
35 ரூபாய்

உருளை
30 ரூபாய்
25 ரூபாய்
17 ரூபாய்

ஊட்டி கேரட்
80 ரூபாய்
70 ரூபாய்
70 ரூபாய்

சின்ன வெங்காயம்
40 ரூபாய்
35 ரூபாய்
30 ரூபாய்

பெங்களூர் கேரட்
40 ரூபாய்
30 ரூபாய்

பீன்ஸ்
50 ரூபாய்
45 ரூபாய்

ஊட்டி பீட்ரூட்
60 ரூபாய்
55 ரூபாய்

கர்நாடகா பீட்ரூட்
35 ரூபாய்
32 ரூபாய்

சவ் சவ்
16 ரூபாய்
15 ரூபாய்

முள்ளங்கி
13 ரூபாய்
10 ரூபாய்

முட்டை கோஸ்
22 ரூபாய்
20 ரூபாய்

வெண்டைக்காய்
35 ரூபாய்
30 ரூபாய்

உஜாலா கத்திரிக்காய்
35 ரூபாய்
25 ரூபாய்

வரி கத்திரி
25 ரூபாய்
20 ரூபாய்

காராமணி
40 ரூபாய்
30 ரூபாய்

பாகற்காய்
30 ரூபாய்
25 ரூபாய்

புடலங்காய்
25 ரூபாய்
20 ரூபாய்

சுரைக்காய்
30 ரூபாய்
25 ரூபாய்

சேனைக்கிழங்கு
52 ரூபாய்
50 ரூபாய்

முருங்கைக்காய்
100 ரூபாய்
90 ரூபாய்

சேமங்கிழங்கு
45 ரூபாய்
42 ரூபாய்

காலிபிளவர்
17 ரூபாய்
15 ரூபாய்

பச்சை மிளகாய்
35 ரூபாய்
30 ரூபாய்

அவரைக்காய்
40 ரூபாய்
30 ரூபாய்

பச்சைகுடைமிளகாய்
50 ரூபாய்
45 ரூபாய்

வண்ண குடை மிளகாய்
80 ரூபாய்

மாங்காய்
80 ரூபாய்
70 ரூபாய்

வெள்ளரிக்காய்
20 ரூபாய்
15 ரூபாய்

பட்டாணி
50 ரூபாய்
40 ரூபாய்

இஞ்சி
105 ரூபாய்
90 ரூபாய்
80 ரூபாய்

பூண்டு
420 ரூபாய்
400 ரூபாய்
350 ரூபாய்

மஞ்சள் பூசணி
20 ரூபாய்
18 ரூபாய்

வெள்ளை பூசணி
18 ரூபாய்

பீர்க்கங்காய்
35 ரூபாய்
30 ரூபாய்

எலுமிச்சை
100 ரூபாய்
80 ரூபாய்

நூக்கல்
20 ரூபாய்
15 ரூபாய்

கோவைக்காய்
30 ரூபாய்
20 ரூபாய்

கொத்தவரங்காய்
40 ரூபாய்
35 ரூபாய்

வாழைக்காய்
7 ரூபாய்
5 ரூபாய்

வாழைத்தண்டு
35 ரூபாய்
30 ரூபாய்

வாழைப்பூ
25 ரூபாய்
15 ரூபாய்

அனைத்து கீரை
10 ரூபாய்

தேங்காய்
33 ரூபாய்
32 ரூபாய்

மேலும் காண

Source link

• Farmers rejected the central government’s suggestion on MSP announcement that the protest will continue towards Delhi | Farmers Protest: 5 வருட திட்டம் வேண்டாம்

Farmers rejected the central government’s suggestion on MSP announcement that the protest will continue towards Delhi | Farmers Protest: 5 வருட திட்டம் வேண்டாம்

Farmers Protest: டெல்லியை நோக்கி செல்லும் தங்களது போராட்டம் நாளை தொடரும் என,  விவசாய சங்கங்கள் அற்வித்துள்ளன.
விவசாயிகளின் போராட்டமும், கோரிக்கைகளும்:
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு வாரமாக மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை முற்றுகையிடும் நோக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியான எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ளனர். போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சேர்ந்து, விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைவதை தொடர்ந்து தடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதலில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த சிலர் படுகாயமடைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் தான், விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசு இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது.
குறைந்தபட்ச ஆதார விலைக்கான பரிந்துரை:
சண்டிகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா உள்ளிட்டோரும், எதிர்தரப்பில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் பங்கேற்றார். அதில், பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையில் (MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வாங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு தரப்பு பரிந்துரைத்தது. இதற்கு சம்மதம் தெரிவித்தால் என்.சி.சி.எஃப் (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) மற்றும் NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) போன்ற கூட்டுறவு சங்கங்கள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளுடன் குறைந்தபட்ச ஆதார விலையில் பயிரை வாங்க ஒப்பந்தம் செய்யும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
பரிந்துரையை நிராகரித்த விவசாய சங்கங்கள்:
குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான, மத்திய அரசின் பரிந்துரை தொடர்பாக கலந்தாலோசித்து இரண்டு நாட்கள் முடிவை தெரிவிப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதோடு, இந்த காலகட்டத்திலேயே தங்களது மற்ற கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், “ மத்திய அரசின் பரிந்துரைகள் தொடர்பாக கலந்தாலோசித்ததில், அந்த திட்டம் விவசாயிகளின் நலன்களுக்கானது இல்லை என்பது தெரியவந்துள்ளது.  இதனால், நாளை (புதன் கிழமை) டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் தொடரும்” என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
டெல்லிய நோக்கி போராட்டம்:
இதுதொடர்பாக பேசிய விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ஜக்ஜித் சிங், “ மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிற்கு பாமாயிலை இறக்குமதி செய்கிறது, இதனால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படுகிறது. இந்த பணத்தை எண்ணெய் வித்து பயிர்களை பயிரிட நாட்டின் விவசாயிகளுக்கு வழங்கி, குறந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்து நடவடிக்கை எடுத்தால்,  குறைந்த விலையில் எண்ணெய் வித்துகள் கிடைக்கும்” என்றார். மற்றொரு விவசாய சங்க தலைவரான சர்வான் சிங் பாந்தர் கூறும்போது, ஒன்று எங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் அல்லது தடுப்பான்களை நீக்கி விட்டு, அமைதியாக போராடுவதற்காக டெல்லி செல்ல எங்களை அனுமதியுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் காண

Source link

• director rv udhayakumar controversial speech about women dressing pattern

director rv udhayakumar controversial speech about women dressing pattern

பட விழா ஒன்றில் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பெண்களின் ஆடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
சின்ன கவுண்டர், கிழக்கு வாசல், சிங்கார வேலன், எஜமான், ராஜகுமாரன், பொன்னுமணி, நந்தவன தேரு, கற்க கசடற உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சிறந்த பாடலாசிரியராகவும் திறம்பட சினிமாவில் பயணித்துள்ளார். இதனிடையே இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற “என் சுவாசமே” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதே நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், படத்தில் இருந்த பெரும்பாலான நபர்கள் மலையாள மொழியை அடிப்படியாக கொண்டவர்கள் என்பதால் அதுதொடர்பாக பல கருத்துகளை தெரிவித்தார்.
அதன்படி, “மலையாளிகள்  தொழிலில் 100% நியாயமாக உழைப்பார்கள்.அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை தான்  நான் பெருமை மற்றும் பொறாமைப்படக்கூடிய விஷயமாக உள்ளது. தமிழர்களுக்கு எப்பவும் மலையாளிகளை பிடிக்கும். ஆனால் மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது. மலையாள சினிமா ஒரு விஷயத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை சரியாக கொடுத்து அதை பேசுபொருளாகவே அல்லது கருத்து பொருளாகவோ மாற்றி விடுவார்கள்” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் இந்த படத்தை இன்னும் பார்க்கலை. இனிமேல் உட்கார்ந்து பார்த்து விட்டு தான் செல்வேன் என நினைக்கிறேன். கவிஞர் கவிதாயினி சொல்லும்போது, ‘இந்த படத்தில் பெண்களை ஆடை வழியாக கவர்ச்சியாக காட்டுவது அதிகமாக இருக்கிறது. பெண்ணியத்தை நேசிக்கிறவர்கள் அதனை சற்று குறையுங்கள்’ என சொன்னார். நாங்கள் காட்டுவதை விட பெண்களே அதிகம் காட்டி கொண்டிருக்கிறார்கள்.
நீங்க சமூக வலைத்தளங்களை எடுத்தால் நமக்கே போனை ஆஃப் பண்ண மனசு வரமாட்டிக்குது. பெண்களே உங்கள் உடலை இப்படி ஏன் ஆபாசமாக காட்டுகிறீர்கள் என்று நீங்கள் தான் கேட்க வேண்டும். அதேசமயம் படத்துக்காக வியாபாரத்துக்கும், ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக சில காட்சிகளே எடுப்பார்கள். ஆனால் முழுவதும் தெரிய வேண்டும் என்பதற்காக தானே தனியா எடுத்து போட்டு கொண்டிருக்கிறார்கள்.
யாரை யார் காப்பாற்ற வேண்டும் என தெரியவில்லை. எப்படி உடல் தெரியும்படி ஆடை உடுத்த வேண்டும் என பெண்களே ஆராய்ச்சி பண்ணுவார்கள் போலும். பெண்கள் அப்படி நடிக்கவில்லை என்றால் ஆண் ஏன் அப்படி எடுக்கப்போகிறான். கேரளாவில் இருந்து தான் முதலில் பிட் படம் வாங்கி கொண்டு வந்து தான் இங்கு ஓட்டுவார்கள். அதிலும் மலையாள திரையுலகினர் கில்லாடிகள். அவர்கள் ஆரம்பித்து விட்டது தான்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: RV Udhayakumar: மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்காது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை

மேலும் காண

Source link

• 7 Am Headlines today 2024 20th February headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 20th February headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

2024-2025ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
நிதிப்பற்றாக்குறை ரூ.94,060 கோடியாக உயரும், மூலதன செலவினங்கள் ரூ.47,681 கோடியாக அதிகரிப்பு, மதி இறுக்கம் (Autism) உடையோருக்கு ரூ.25 கோடியில் உயர்திறன் மையம் தொடங்கப்படும் என பல முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றது.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட் கானல் நீர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்தியா:

விவசாயிகள்- மத்திய அரசு இடையிலான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது சோளம், சில பருப்பு வகைகள், காட்டன் போன்றவைகளுக்கு பழைய குறைந்தபட்ச ஆதார விலை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு பரிந்துரை வழங்கியது. ஆனால், மத்திய அரசின் பரிந்துரைகளை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.
சந்தேஷ்காலி விவகாரத்தை மணிப்பூருடன் ஒப்பிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சண்டிகர் மேயர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சாரையும் அவரது கணவர் தீபக் கோச்சாரையும் சிபிஐ கைது செய்தது அதிகார துஷ்பிரயோகத்திற்கு இணையானது என மும்பை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

உலகம்:

பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் கவன சிதறலை குறைக்கும் விதமாகவும் பிரிட்டனில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா. இஸ்ரேல் மீது குற்றம் சுமத்திய அவர், காசாவில் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 64 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டு:

அம்பயர்ஸ் கால்’ முறை நீக்கப்பட வேண்டுமென இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலியுறுத்தி உள்ளார்.
ராஞ்சி டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு தரப்பட உள்ளது. காயத்தில் இருந்து மீண்ட ராகுல், மீண்டும் களமிறங்க உள்ளார்.
ரஞ்சி கோப்பை காலிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது.
உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிக்கான பாயிண்ட்ஸ் டேபிளில் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Published at : 20 Feb 2024 07:11 AM (IST)

மேலும் காண

Source link

• Cricketer Natarajan: "சிஎஸ்கே அணியில் விளையாட எனக்கும் ஆசை": கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி.

Cricketer Natarajan: "சிஎஸ்கே அணியில் விளையாட எனக்கும் ஆசை": கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி.

சேலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். நான் சார்ந்துள்ள அணிக்காக கடுமையாக உழைக்க வேண்டும், அதே நேரத்தில் நானும் கவனத்தோடு ஆட உள்ளேன். ஐபிஎல் போட்டியில் இளைஞர்களை எதிர்கொள்ள ஒவ்வொரு அணிகளும் ஒரு திட்டம் வைத்திருப்போம். எனக்கு தனிப்பட்ட முறையில் நான் சரியாக விளையாடுவேன். நடராஜன் வாழ்க்கை வரலாறு படமாக்குவது குறித்த கேள்விக்கு, சிவகார்த்திகேயன்தான் படத்தை எடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிரிக்கெட்டிற்கு பின்னர் தான் அதைப் பற்றி யோசிக்க முடியும்” என்றார்.

மேலும், நான் வந்த பிறகு கிராமத்தில் இருந்து கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் கிராமத்திலிருந்து இருந்து இளைஞர்கள் அதிக அளவில் வருகின்றனர். வழி காட்டுவதற்கு ஆள் இருந்தால்தான் இளைஞர்கள் முன் வர முடியும். எனது சின்னப்பம்பட்டி கிராமத்தில் நான் வந்ததுபோல பலரையும் உருவாக்கி வருகிறேன். அதுபோன்று ஒவ்வொரு ஊரிலும் ஒருவர் இருப்பார். அவர்களை மறக்காமல் அவர்களை வைத்து முன்னேற வேண்டும். இங்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திறமையை வளர்த்துக் கொண்டு இளைஞர்கள் முன்வர வேண்டும். எதுவும் கஷ்டப்பட்டால் மட்டுமே கிடைக்கும். இப்போதுள்ள இளம் தலைமுறையினர் எடுத்தவுடன் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அதற்கு சாத்தியமே இல்லை. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் பிரச்சனைகள் எல்லாம் வரும். அதிலிருந்து மனதளவில் தயாராகி முன் வர வேண்டும். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் இளம்பிரர்களை அதிகம் அடையாளம் காட்டுகின்றனர் குறிப்பாக பெண்கள் கிரிக்கெட் நடத்தி வருகிறார்கள். இதில் பல மாவட்டங்களில் இருந்து பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.

சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ”எதுவும் எங்கள் கையில் இல்லை. அணிகளில் கையில் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பதால் சிஎஸ்கே அணியில் விளையாட எனக்கும் ஆசை உள்ளது. தோனியிடம் விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். தோணியிடம் பேசினாலே ஒரு கூடுதல் புத்துணர்ச்சி, அவரைப் பார்த்தாலே ஒரு பாசிட்டிவ் வைப் வரும். டிஎன்பிஎல், ஐபிஎல் இரண்டும் எனக்கு முக்கியம் தான். இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவேன். ஐபிஎல் வந்தாலும் டிஎன்பிஎல் என்பது என்னை அடையாளம் காட்டியது, எனவே அதிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். டிஎன்பிஎல் அதிக இளைஞர்கள் நன்றாக விளையாடி வருகின்றனர். அவர்கள் இதேபோன்று நன்றாக விளையாடினால் மென்மேலும் வளர முடியும். அதற்கு சிறந்த உதாரணம் சாய் கிஷோர். அவரைப் போன்று கிரிக்கெட்டை காதலித்து, உணர்ந்து விளையாட வேண்டும். மேலும், இந்திய அணியில் நான் மீண்டும் விளையாடுவது, இந்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவதில் உள்ளது. நிச்சயமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவேன்" என்று கூறினார்.

Source link

• Malaysia Vasudevan: தெம்மாங்கு பாட்டுக்காரன்.. பாடகர் மலேசியா வாசுதேவனின் நினைவு தினம் இன்று!

Malaysia Vasudevan: தெம்மாங்கு பாட்டுக்காரன்.. பாடகர் மலேசியா வாசுதேவனின் நினைவு தினம் இன்று!

மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் அவர் குறித்த நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் யாரேனும் சிலர் ஜாம்பவன்களாக வலம் வந்து கொண்டிருக்கும்போது தான் சிலர் சத்தமே இல்லாமல் சம்பவம் செய்வார்கள். அதில் மிக முக்கியமானவர் மலேசியா வாசுதேவன். மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் புகழ்பெற்று திகழ்ந்த காலக்கட்டத்தில் முளைத்த தனித்துவமான குரல்  மலேசியா வாசுதேவனுடையது தான்.

பாரதிராஜா தொடங்கி ரஜினி, ஸ்ரீதேவி என பலருக்கும் படிக்கல்லாய் அமைந்த 16 வயதினிலே படம் தான் மலேசியா வாசுதேவனுக்கும் அதிர்ஷ்ட கதவாக அமைந்தது. அப்படத்தில் இடம் பெற்ற ‘செவ்வந்திப் பூ முடிச்ச’ , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பட பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார் இந்த மலேசியா வாசுதேவன். அதன்பின்னர் ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ’ பாடலும். ‘வான் மேகங்களே… வாழ்த்துகள் பாடுங்கள்’ என்ற பாடலும் அவரை எட்டா உயரத்துக்கு அழைத்து சென்று நிதர்சனம். எந்த பாடல் கொடுத்தாலும் மனிதர் பிரித்து மேய்ந்து விடுவார்.

பிரபலமான பாடல்கள்

மாரியம்மா மாரியம்மா (கரகாட்டக்காரன்)

காதல் வைபோகமே (சுவர் இல்லாத சித்திரங்கள்)

பூங்காற்று திரும்புமா (முதல் மரியாதை)

பூவே இளைய பூவே (கோழி கூவுது)

பேர் வச்சாலும் (மைக்கேல் மதன காமராஜன்)

பொதுவாக என் மனசு தங்கம் (முரட்டுக்காளை)

தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி (தூறல் நின்னு போச்சு)

ஒரு தங்க ரத்தத்தில் (தர்ம யுத்தம்)

இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல்  (சிகப்பு ரோஜாக்கள்)

ஆயிரம் மலர்களே மலருங்கள் (நிறம் மாறாத பூக்கள்)

ஒரு கூட்டு கிளியாக (படிக்காதவன்)

ஆசை நூறுவகை (அடுத்த வாரிசு)

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் (16 வயதினிலே)

என எண்ணற்ற பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார்.

நடிகராகவும் மலேசியா வாசுதேவன்

1977 ஆம் ஆண்டு அவர் எனக்கே சொந்தம் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்த மலேசியா வாசுதேவன் அதன்பிறகு ரஜினி, கமல்,விஜய், விஜயகாந்த்,  ராமராஜன் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கலந்த மிக முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார். இவரின் மகன் தான் பிரபல நடிகரான யுகேந்திரன் வாசுதேவன். பிரபல பின்னணி பாடகரான இவர் விஜய் நடித்த யூத் மற்றும் பகவதி, அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒருவராக கலந்து கொண்டு மக்களிடையே மிகவும் பரீட்சையமானார்.

ஏற்கனவே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சினையால் நிகழ்ந்த பக்கவாத பாதிப்பால் மலேசியா வாசுதேவன் பாதிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் குடலிறக்க பிரச்சினை காரணமாக 2011  ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி இறந்தார். மலேசியா வாசுதேவன் மறைந்து ஒரு டஜன் ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அந்த காந்த குரலோன் நம்மிடையே ஒலிக்கொண்டிருப்பார்.

Source link

• Tamilnadu Agriculture Budget 2024 will present by minister mrk panneerselvam in assembly today | TN Agriculture Budget 2024: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

Tamilnadu Agriculture Budget 2024 will present by minister mrk panneerselvam in assembly today | TN Agriculture Budget 2024: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

TN Agriculture Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெடை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்:
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை,  சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில் 7 அம்சங்களில் பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில் இன்று, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். திமுக தலைமையில் 2021ம் ஆண்டு ஆட்சி அமைந்ததுமே முதலே,  தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2023-24 ஆம் நிதி ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் சற்றே உயர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: TN Budget 2024: தமிழக அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பு ரூ.3.48 லட்சம் கோடி – நிதி பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?
மக்களவை தேர்தல் தாக்கல் இருக்குமா?
வேளாண் பட்ஜெட்டில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் மட்டுமின்றி, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொது பட்ஜெட்டில் பல்வேறு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை போன்று, இன்றைய வேளாண் பட்ஜெட்டில் தங்களுக்கான நலத்திட்டங்கள் இடம்பெறும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலும் நெருங்குவதால், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த விவசாயிகளை கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தையும் படிங்க: TN Budget Highlights: அரசின் அட்டகாச பட்ஜெட்; முதல்வரின் முத்தான 15 முக்கிய திட்டங்கள் இவைதான்!
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
மூத்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவது,  மண்வள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பது, வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, காப்பீட்டு தொகையை விடுவிப்பது, கிராமங்கள் தோறும் உலர் களங்கள் அமைப்பது, நேரடி கொள்முதலை அதிகரிப்பது, அரசும் தனியாரும் இணைந்து ஒவ்வோர் ஊராட்சியிலும் உழவர் உதவி மையம், விவசாய மேலாண்மை மையங்களை செயல்படுத்துவது மற்றும் அரசு உதவிகள் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link

• petrol and diesel price chennai on February 20th 2024 know full details

petrol and diesel price chennai on February 20th 2024 know full details

Petrol Diesel Price Today, February 20: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 20ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 640வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

மேலும் காண

Source link

• Ind Vs Eng 3rd Test: Indian Captain Rohit Sharma Equals Rahul Dravid In The List Of Captain With Most Test Wins For India

Ind Vs Eng 3rd Test: Indian Captain Rohit Sharma Equals Rahul Dravid In The List Of Captain With Most Test Wins For India

ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 131 ரன்கள் எடுத்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 11வது சதம் இதுவாகும். இதுவரை மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த ஒரே இந்திய கேப்டன் ரோஹித் சர்மாதான். ஆனால் இதையும் மீறி ஹிட்மேன் சதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ராஜ்கோட் டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, ரோஹித் சர்மா சதம் பற்றி பேசினார். அப்போது பேசிய அவர், “ எனக்கு, என் நாட்டுக்காக நான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் முக்கியம். நாட்டுக்காக நான் அடிக்கும் ஒவ்வொரு சதமும் முக்கியம். நான் சதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர் அல்ல” என்று கூறினார்.
3வது டெஸ்டில் சதம் விளாசிய ரோஹித் சர்மா:
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படவில்லை. ஆனால், மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா சூப்பராக விளையாடி சதம் அடித்தார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இரு இன்னிங்ஸிலும் முறையே 24 மற்றும் 39 ரன்கள் எடுத்தார். இதன்பின், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ரோஹித் சர்மா 14 மற்றும் 13 ரன்கள் எடுத்தார். ஆனால், ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், ரோஹித் சர்மா 196 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களின் உதவியுடன் 131 ரன்கள் எடுத்தார்.

Each time Rohit has hit a 💯, India has won the Test!11 instances, 11 wins🫡#Heroes #IndvsEng #RohitSharma pic.twitter.com/zxxy3Lwy6i
— IndianCricketHeroesIN (@ICHOfficial) February 19, 2024

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. தற்போது இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி முதல் தொடங்குகிறது.
கேப்டன் ரோஹித்தின் வரலாற்று சாதனை :
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ராஜ்கோட் டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில், இந்த டெஸ்ட் போட்டி கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு 8-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். ராகுல் டிராவிட் 25 டெஸ்டில் 8 வெற்றிகளைப் பெற்றுள்ளார். அதே சமயம் இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 40 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற கேப்டன்:

விராட் கோலி – 40 வெற்றி
எம்எஸ் தோனி – 27 வெற்றி
சவுரவ் கங்குலி – 21 வெற்றி
முகமது அசாருதீன் – 14 வெற்றி
சுனில் கவாஸ்கர் – 9 வெற்றி

Source link

• ashok selvan santhanu starrer blue star movie be released by tentkotta

ashok selvan santhanu starrer blue star movie be released by tentkotta

பிற நாடுகளில் வாழும் இந்தியர்கள் பார்க்கும் வகையில் ப்ளூ ஸ்டார் படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
ப்ளூ ஸ்டார்
அறிமுக இயக்குநர் ஜெய்குமார் இயக்கத்தில் உருவான படம் ப்ளூ ஸ்டார். கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. அசோக் செல்வன், சாந்தனு , கீர்த்தி பாண்டியன், ப்ரித்வி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்து பா.ரஞ்சித் இந்தப் படத்தை வழங்கியுள்ளார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து சாதிய பாகுபாட்டை பேசிய ப்ளூ ஸ்டார் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சாந்தனு மற்றும் நடிகர் பாண்டியராஜனின் மகனான ப்ரித்வி உள்ளிட்டவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசினார்கள்.
“எனக்கு வெற்றி கிடைக்காத ஏக்கம் என்னுடைய அப்பா அம்மாவுக்கு இருந்தது. ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி அவர்களின் முகத்தில் ஒரு சிரிப்பைக் கொண்டு வந்திருக்கிறது. எனக்கு இதைவிட பெரிய பரிசு எதுவும் இல்லை” என்று சாந்தனு உருக்கமாக பேசினார். கிரிக்கெட்டில் சாதிய பாகுபாட்டை மையமாக வைத்து உருவான இப்படத்தில்  நடிப்பு, இசை, வசனம், காதல் காட்சிகள், காமெடி என எல்லா அம்சங்களும் ரசிகர்களை கவர்ந்தது.

ஓடிடி ரிலீஸ்

Yaaayyy!!! COMINGGGG SOOOON @AshokSelvan @beemji @BlueStarOffl @officialneelam @lemonleafcreat1 @SakthiFilmFctry @sakthivelan_b @chejai007 @imKBRshanthnu @AshokSelvan @prithviactor @iKeerthiPandian @dhivya_dhurai @GaneshLemonLeaf Keeep that expectations high🤩 pic.twitter.com/LzewRXtbDG
— Tentkotta (@Tentkotta) February 18, 2024

இன்றுடன் திரையரங்கில் 25ஆவது நாளை எட்டியுள்ளது ப்ளூ ஸ்டார் படம். இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ஓடிடி ரிலீஸ் இந்திய ரசிகர்களுக்கு இல்லை. பிற நாடுகளில் வசிக்கும் இந்தியவர்கள் தங்கள் மொழிப் படங்களைப் பார்க்கும் விதமாக உருவாக்கப்பட்ட ஓடிடி தளம் டென்ட் கொட்டா. இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளில் வசிக்கும் மக்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களை இந்த தளத்தில் பார்க்கலாம். அந்த வகையில் ப்ளூ ஸ்டார் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி இந்தத் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியாவில் ப்ளூ ஸ்டார் படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : Ethirneechal: ஜனனி கேட்ட கேள்விக்கு ஆடிப்போன குணசேகரன்: சொத்தைப் பிடுங்க போட்ட பிளானா? எதிர்நீச்சலில் இன்று!
D50 First Look : தனுஷின் சம்பவம் லோடிங்… இன்று மாலை D50 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்க காத்திருங்கள்!

மேலும் காண

Source link