தமிழ்நாடு:

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடக் கோரி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலை குழுவிற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கல்விக்காக தானமாக கொடுத்த பூரணம் அம்மாளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் 3ஆம் பாகத்துக்கான ஆடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில், இத்துடன் இது முடியப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்பது போல இன்றும் என்றும் மக்கள் மனதில் இருப்பவர் எம்.ஜி.ஆர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதிய சிந்தனையுடன் தொடங்கப்படும் தொழில்களுக்கான உகந்த சூழலை ஏற்படுத்தி தரும் மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா:

தொடர்ந்து வாட்டிவதைக்கும் கடும் குளிர்: பாட்னாவில் வருகின்ற 20ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கின் விலை, முதல்முறையாக 900 ரூபாயை எட்டியுள்ளது.

’உங்கள் மொபைல் போன் உங்களை படித்துக் கொண்டிருக்கிறது’ – செயற்கை நுண்ணறிவு குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்

குஜராத் அருகே இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவு என உ.பி. துணை முதலமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரம் – இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம்

உலகம்:

ட்ரம்பின் துணை அதிபர் வேட்பாளராக விவேக் ராமசாமி நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

கனடாவுக்கு படிக்க செல்வதற்காக இந்திய மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை கடந்தாண்டு குறைந்துள்ளதாக கனடாவின் உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்து வருகிறது.

ஈராக், சிரியாவை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன்மூலம், ரோஹித் சர்மா இதுவரை டி20 சர்வதேச போட்டிகளில் 5 சதங்கள் விளாசியுள்ளார்.

இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் முதலாவது சூப்பர் ஓவர் டிரா ஆனதால், இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

மூத்த வீரரான விஸ்வநாத் ஆனந்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான, பிரக்ஞானந்தா தேசிய செஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Month: January 2024

7 AM Headlines: உள்ளூர் – உலகம் வரை.. தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக..!

IND vs AFG 3rd T20 LIVE Score: பரபரப்பின் உச்சகட்டம்.. இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் டி20 உலகக் கோப்பை விளையாட உள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணி தனது கடைசி டி20 போட்டியில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இருப்பினும், இதற்குப் பிறகு, இந்திய வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல்.லில் விளையாடுவார்களே தவிர, எந்தவொரு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள்.

உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பு?

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை நிர்ணயிக்க விரும்புகிறது. இந்திய அணிக்கு சரியான வீரர்கள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெவ்வேறு வீரர்கள் தொடர்ந்து உள்ளே களமிறக்குவது, உட்காரவைக்கப்படுவதுமாய் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி எந்த 11 பேரை களமிறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தக் கேள்வி இன்னும் உள்ளது. உதாரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்றைய 3வது டி20 போட்டியில் இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை வைத்து விளையாட விரும்புகிறது. இருப்பினும், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் விளையாடும் 11-ஐ எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில்…

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது டி20யில் வெற்றி பெற்று தொடரில் ஆப்கானிஸ்தானை துடைத்தெறிய வேண்டும் என்று இந்திய அணி விரும்புகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அணி கிளீன் ஸ்வீப்பை தவிர்க்க விரும்புகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது போட்டி புதன்கிழமை (இன்று) பெங்களூரில் உள்ள என். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமா..?

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடும் 11 பேரில் நிறைய மாற்றங்களை செய்யப்படலாம் என நம்பப்படுகிறது. இன்றைய போட்டியில் அவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் அணிக்கு திரும்பலாம். அதன்படி,வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் வாய்ப்பு பெறலாம். மேலும், முகேஷ் குமாருக்குப் பதிலாக அவேஷ் கானும், ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனும் களமிறங்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்.

ஆப்கானிஸ்தான் அணி:

ரெஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக் மற்றும் ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

Romancing Sonakshi Sinha In Lingaa Movie Was A Challenging One Says Rajinikanth Flashback Video Goes Viral | Flash Back : இந்த நடிகையுடன் டூயட் ஆடியது எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை
சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில இயக்குநர்கள் ஒரு சில நடிகர்களுடன் கூட்டணியில் சேரும் போது அப்படம் திரையில் ஒரு வித மேஜிக் ஏற்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைக்கும். அப்படி ஒரு சூப்பரான கூட்டணி தான் ரஜினிகாந்த் கே.எஸ். ரவிக்குமார் காம்போ. அப்படி அவர்களின் கூட்டணியில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள் தான் முத்து மற்றும் படையப்பா.
இந்த இரு படங்களையும் கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். மாபெரும் வெற்றி பெற்ற இப்ப படங்களை தொடர்ந்து இருவரும் மூன்றாவது முறையாக அவர்கள் கூட்டணி சேர்ந்த திரைப்படம் தான் ‘லிங்கா’. 2014ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அனுஷ்கா செட்டி சோனாக்ஷி சின்ஹா, ரவிக்குமார், ஜெகபதி பாபு, சந்தானம், கருணாகரன், ரத்னவேலு, ராக்லைன் வெங்கடேஷ், ரஹ்மான் மற்றும் பலர் நடித்திருந்தனர்.‘லிங்கா’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார். இவர் பாலிவுட் நட்சத்திர ஜோடிகள் மற்றும் அரசியல்வாதிகளான சத்ருகன் சின்ஹா மற்றும் பூனம் சின்ஹாவின் மகளாவார். லிங்கா படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர் ரஜினிகாந்த் சோனாக்ஷி சின்ஹா பற்றி பேசிய பிளாஷ் பேக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.
“இப்படத்தில் சோனாக்ஷியுடன் ரொமான்ஸ் செய்வது எனக்கு மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது. முதல்முறை நான் கேமரா முன்னால் நின்று நடிக்கும் போது கூட இந்த அளவுக்கு நான் பதட்டப்படவில்லை.
என்னை போல 60 வயது நடிகருக்கு கடவுள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை என்றால் அது டூயட் பாடுவதுதான். படத்தில் ஓடும் ரயிலில் ஸ்டண்ட் செய்வதை காட்டிலும் சோனாக்ஷியுடன் டூயட் பாடுவது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
என்னுடைய முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும் போது கூட நான் இவ்வளவு டென்ஷனை உணரவில்லை. சோனாக்ஷியை நான் ஒரு குழந்தையைபோல தான் பார்த்திருக்கிறேன். என்னுடைய மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா உடன் ஒன்றாக விளையாடி வளர்ந்தவர் சோனாக்ஷி” என பேசி இருந்தார் ரஜினிகாந்த்.அதே போன்ற ஒரு உணர்வை தான் படத்தின் இரண்டாவது ஹீரோயினான அனுஷ்கா ஷெட்டியுடனும் உணர்ந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.
முத்து, படையப்பா திரைப்படங்களை தொடர்ந்து ‘லிங்கா’ திரைப்படம் ஹாட்ரிக் வெற்றி பெரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பல தடைகளையும் தாண்டி ஒரு வழியாக வெளியான இப்படம் படு தோல்வியை சந்தித்தது.
IND Vs AFG 3rd T20 India Givces 213 Runs Target Afghanistan M.Chinnaswamy Stadium, Bengaluru | IND Vs AFG 3rd T20: சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து: ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சின்னச்சாமி மைதானம் சிக்ஸர்கள் விளாசுவதற்கு ஏதுவான மைதானம் என்பதால் இந்திய அணி தரப்பில் சிக்ஸர்கள் விளாசப்படும் என எதிர்பார்த்து ரசிகர்கள் பெங்களூரு மைதானத்தில் சூழ்ந்தனர். முதல் இரண்டு போட்டியில் ப்ளேயிங் லெவனில் இல்லாத சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன ரோகித் சர்மா இந்த போட்டியில் ஏமாற்றம் அளிக்கமாட்டார் என ரசிகர்கள் நம்பினர். ரோகித் சிறப்பாக விளையாடினாலும் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். ஜெய்ஸ்வால், விராட் கோலி, டூபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முதல் 4 ஓவர்களில் தங்களது விக்கெட்டினை இழந்தனர். இதில் விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆனார்கள்.
இது இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. பெங்களூரு மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அமைதியாகிவிட்டனர். கடைசி 5 ஓவர்காள் விளையாடும் ரிங்கு சிங் போட்டியின் 5வது ஓவரில் களமிறங்கவேண்டிய நிலைக்கு ஆளானார். அவருக்கு கேப்டன் ரோகித் சர்மா களத்தில் சில அறிவுரைகளை வழங்க ரிங்கு நிதானமாக ஆட ஆரம்பித்தார்.
இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா 41 பந்துகளில் தனது அரைசதத்தினை விளாசினார். இருவரும் இணைந்து 66 பந்துகளில் 100 ரன்கள் குவித்தனர். 15வது ஓவருக்குப் பின்னர் இருவரும் அடித்து ஆடவேண்டும் என்ற முயற்சியில் விளையாடியதால், ஆஃப்கான் அணி பந்து வீச்சாளர்களுக்கு பதட்டத்தை உண்டாக்கியது. 16வது ஓவரில் மட்டும் இந்திய அணி எக்ஸ்ட்ராஸ்களுடன் சேர்த்து 22 ரன்கள் சேர்த்தது.
இறுதியில் ரோகித் சர்மா தனது வேகத்தை தாறுமாறாக அதிகரிக்க அவர் தனது சதத்தினை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் ரிங்கு தனது அரைசத்தினை எட்ட மைதானமே ஆர்ப்பரித்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.
IND vs AFG 3rd T20: இறுதிவரை திக் திக்; இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சின்னச்சாமி மைதானம் சிக்ஸர்கள் விளாசுவதற்கு ஏதுவான மைதானம் என்பதால் இந்திய அணி தரப்பில் சிக்ஸர்கள் விளாசப்படும் என எதிர்பார்த்து ரசிகர்கள் பெங்களூரு மைதானத்தில் சூழ்ந்தனர். முதல் இரண்டு போட்டியில் ப்ளேயிங் லெவனில் இல்லாத சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக பேட்டிங் செய்து இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை 11வது ஓவரின் கடைசி பந்தில் இழந்தது. அப்போது ஆஃப்கானிஸ்தான் அணி 93 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் 107 ரன்னில் ஆஃப்கான் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆஃப்கான் அணியின் பேட்டிங்கைப் பார்த்தபோது இந்த போட்டியில் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19வது ஓவரில் விராட் கோலி நீண்ட தூரம் ஓடிவந்து சிறப்பாக கேட்ச் பிடித்ததால் போட்டியில் நமக்கான வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இறுதி ஓவரில் ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 20வது ஓவரை இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் வீசினார். முதல் பந்து வைய்டாகப் போனது. இதனால் இலக்கு 18ஆக குறைந்தது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தை குல்பைதின் பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தை மிஸ் செய்ய, மூன்றாவது பந்தை மீண்டும் வைய்டாக வீசினார் முகேஷ். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க, 4வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் குல்பைதின். இதனால் இலக்கு 2 பந்துகளுக்கு 5 ரன்களாக குறைந்தது. 5வது பந்தில் 2 ரன்களும் 6வது பந்தில் இரண்டு ரன்களும் சேர்த்ததால் போட்டி டிரா ஆனது.

இரண்டு சூப்பர் ஓவர்

இதனால் போட்டியின் வெற்றியாளரை தேர்வு செய்ய சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் சூப்பர் ஓவரை எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அதில் ஒரு விக்கெட்டினை இழந்தது மட்டும் இல்லாமல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி மொத்தம் 16 ரன்கள் சேர்த்தது. 17 ரன்களை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி 16 ரன்கள் எடுக்க போட்டி மீண்டும் டிரா ஆனாது. இதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் இந்திய அணி 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 12 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கான் அணி 3 பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதாவது இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

Suriya: புறநானூறு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி வாரிசு? அசத்தப்போகும் சுதா கொங்கரா

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக முனுமுனுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று நடிகர் சூர்யா. அவரது தம்பி கார்த்தியின் பருத்திவீரன் படம் குறித்த உரையாடல் தற்போது ஓய்ந்துள்ள நிலையில் சூர்யா குறித்தும் அவரது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகள் குறித்தும் தகவல்கள் வெளிவந்து கொண்டு உள்ளது. இது சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவாவின் கனவுத் திரைப்படமான கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதால் சூர்யாவின் போர்ஷன் முழுவதுமாக முடிந்துவிட்டதாம். கங்குவா படத்தின் சூட்டிங் பெரும்பாலும் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கோவா, சென்னை, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சூட்டிங் நடைபெற்றுள்ளது.

இந்த படத்திற்குப் பின்னர் நடிகர் சூர்யா இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகவுள்ள புறநானூறு படத்தில் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் சூரறைப் போற்று படத்தில் இணைந்து பணியாற்றினர். கொரோனா கால கட்டத்தில் இந்த படம் வெளியானதால், படத்தினை திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை. சூரறைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், புறநாறு படம் திரையரங்கில் வெளியாகும் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது படம் குறித்த முதல் அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் மத்தியில் எகிறிவிட்டது.

இதற்கு முன்னர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறனுடன் இணைந்து வாடிவாசல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதால் சூர்யா தனது வீட்டில் ஜல்லிக்கட்டிற்கு ஏதுவாக ஒரு மாட்டினை வளர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் வெற்றி மாறனின் விடுதலை 1, விடுதலை 2 பாகங்களை படமாக்கவும் சூர்யாவின் மற்ற படங்களை முடிக்கவும் எடுத்துக்கொள்ளும் காலத்தில் சூர்யாவின் வீட்டில் உள்ள மாடு படப்பிடிப்புக்கு ஏற்றபடி நன்கு வளர்ந்து விடும் என்பதால் இந்த படத்திற்கான ப்ரீ புரோடக்‌ஷன் வேலை என்பது மிகவும் சுவாரஸ்யத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் சூர்யா கல்லூரிப் பருவ கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பதால் சூர்யா இதற்காக கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றாராம். இதனால் அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ள புறநானூறு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்ளப்போவதில்லையாம். இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, அதிதி ஷங்கர் ஆகியோர் இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், துல்கர் உள்ளிட்டவர்களின் போர்ஷன்களை முதலில் சுதா கொங்கரா இயக்கவுள்ளார்.

இதனிடையே இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த படத்திற்குப் பின்னர் சூர்யா ஹிந்தியில் மகாபாரதத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒன்றான கர்ணனின் வாழ்க்கையை மையப்படுத்திய வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளார்.

China Population: தொடர்ந்து குறையும் மக்கள் தொகை! பலமே பலவீனமாக மாறுவதால் அச்சம்…சீனாவில் என்ன பிரச்னை?

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்நாட்டின் வளர்ச்சிக்கும், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற, சீனாவின் எண்ணத்திற்கும் முக்கிய ஆதாரமாக இருப்பதும் இந்த மக்கள் தொகை தான்.

இரண்டாவது ஆண்டாக குறைந்த சீன மக்கள் தொகை:

ஆனால், குழந்தையை பெற்றுக் கொள்வதில் தற்போது பொதுமக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, சீனாவில் குழந்தை பிறக்கும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. அதேசமயம் இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைந்துள்ளது. சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்கள் தொகை உள்ளதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டை காட்டிலும் 2 மில்லியன் அளவுக்கு மக்கள் தொகை குறைந்துள்ளதாக தெரிகிறது.

2022 ஆம் ஆண்டின் முடிவில் சீனாவின் மக்கள் தொகை 1.41178 பில்லியன் ஆக இருந்த நிலையில், 1.40967 பில்லியன் ஆக குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023ல் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து 6,90,000 ஆக அதிகரித்துள்ளது.

காரணம் என்ன?

இதன் மூலம் சீனாவில் மொத்த மக்கள் தொகை 1.4 பில்லியன் உள்ளது என்று தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அதேபோல, கடந்த 2022ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் 9.56 மில்லியனாக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் 9.02 மில்லியனாக குறைந்துள்ளது.

சீனாவில் 16 முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் 2022ஆம் ஆண்டில் இருந்து 10.75 மில்லியன் குறைந்துள்ளது. அதே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் இருந்து 16.93 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்த வந்த சீனா, 2022ஆம் ஆண்டுக்கு கொரோனாவுக்கு பிறகு 8,50,000 மக்களை இழந்தது.

1960ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக சீன மக்கள் தொகை கணிசமான அளவில் குறைந்தது. 2016 -ம் ஆண்டிலேயே "ஒரு குழந்தை கொள்கையை" சீன அரசு தளர்த்திக் கொண்டதோடு, கடந்த ஆண்டு முதல் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெறவும் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்து வருகிறது. இதனால் சீனாவின் மாநில அரசுகள் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு பரவும் போர்.. பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்த காரணம் என்ன?

Crime: குழந்தையை கொன்ற பிறகு உடலுடன் 19 மணி நேரம் காத்திருந்த பெங்களூரு சிஇஓ! கோவா கொலையில் பகீர்!

INDIA Alliance Partner AAP Hints At Going Solo In Punjab For Lok Sabha Election Congress Yet To Take A Call
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை உருவாக்கின. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கிவிட்டது.
INDIA கூட்டணியில் குழப்பம்:
அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதியில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் வெளியிடப்படும் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முடிந்தவரையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ஒரே வேட்பாளரை களமிறக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது. ஆனால், மேற்குவங்கம், கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏன் என்றால், மேற்குவங்கத்தை தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வலுவாக உள்ளது.
வலுவாக உள்ள மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் சமரசம் செய்து கொண்டு குறைவான தொகுதிகளில் போட்டியிட உள்ளூர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, பாஜக பலவீனமாக உள்ள பஞ்சாபில் தனித்து போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு அல்வா கொடுக்கும் ஆம் ஆத்மி:
இந்த நிலையில், பஞ்சாபில் உள்ள 13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய அவர், “வரும் பொதுத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 13 மக்களவை தொகுதிகளையும் தங்களுக்கு [ஆம் ஆத்மிக்கு] வழங்குவதன் மூலம் பஞ்சாப் ஒரு கலங்கரை விளக்கமாக உருவெடுக்கும்.
மாநில அரசு மக்கள் நலனுக்காக மகத்தான பணிகளை செய்துள்ளதால், மக்கள் மீண்டும் எங்களுடன் துணை நிற்பார்கள். 13-0 என்ற விகிதத்தில் மாநிலத்தில் வரலாறு படைக்கப்படும். அங்கு 13 இடங்கள் மாநில அரசின் மக்கள் சார்பு கொள்கைகளுக்கு ஆதரவாக தீர்ப்பு தரும். பஞ்சாபுக்கு எதிரான நிலைப்பாட்டிற்காக மக்களால் எதிர்க்கட்சியினர் கைவிடப்படுவார்கள். 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும்” என்றார்.
நாளை நடைபெற உள்ள சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Netflix Who Has Knocked The Movie Of The Leading Actors Actor Suresh Gopi Daughter Wedding Held Infront Modi Cinema Headlines | Cinema Headlines: முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்! மோடி முன் நடந்த நடிகர் மகள் திருமணம்
Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்!
இந்த ஆண்டு நெட்ஃப்பிளிக்ஸில் எஸ்.கே.21, விடாமுயற்சி, தங்கலான், ரிவால்வர்ரீடா, சொர்க்கவாசல், மகாராஜா ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலும் படிக்க
Suresh Gopi: பிரதமர் மோடி முதல் மம்மூட்டி வரை! களைகட்டிய “தீனா” பட நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணம்!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. மோகன்லால், மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் சுரேஷ் கோபிக்கு இருக்கிறது. இந்நிலையில் சுரேஷ் கோபியின் இல்லத் திருமணமான அவரது மகள் பாக்யா சுரேஷ் கோலாகலத் திருமணம் பேசுபொருளாக மாறியுள்ளது. மலையாள சினிமாத் துறை மட்டுமில்லாமல் பிற திரைத் துறையின் உச்ச நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க
Ayalaan Alien: ஏலியனுக்கு டூப் போட்டு பாத்திருக்கீங்களா.. அயலான் பட வாய்ப்பு பற்றி நடிகர் வெங்கடேஷ் நெகிழ்ச்சி!
ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசிக்கும் ஏலியனுக்கு பின் உள்ள முகம் தெரியாத நடிகர் வெங்கடேஷ், அயலான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இயக்குநர் ரவிக்குமாரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். செட்டில் அவர் சத்தமாக கூட பேசமாட்டார். அவரிடம் இருந்த தெளிவு தான் படம் எவ்வளவு தாமதானாலும் அதை பாதியில் விட்டுவிட்டு போகாமல் இருக்க எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது” என்று வெங்கடேஷ் கூறியுள்ளார்.மேலும் படிக்க
K.S.Chithra: அயோத்தி ராமர் கோயில் விவகாரம்! பாடகி சித்ராவுக்கு குவியும் ஆதரவும், எதிர்ப்பும் – என்ன காரணம்?
தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி கே.எஸ். சித்ரா, ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் தினத்தன்று ராம மந்திரத்தை ஜெபித்து வழிபடுமாறு வீடியோ ஒன்றை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
Ayalaan Making Video: ஏலியனாக நடித்த நபர், மொத்தம் 4,500 ஷாட்கள்: வியக்கவைக்கும் ‘அயலான்’ மேக்கிங் வீடியோ!
மேலும் சிறப்பான சிஜி (Computer Graphic) காட்சிகள், தத்ரூபமாக திரையில் ஏலியனைக் கொண்டு வந்த விதம் ஆகியவற்றால் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று இப்படம் வசூலிலும் ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. இந்நிலையில், அயலான் படத்தின் மேக்கிங் வீடியோவினை படத்தின் தயாரிப்பு நிறுவனமா கேஜெஆர் ஸ்டுடியோஸ் தற்போது பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில் 2015ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை சந்தித்து அயலான் குறித்த ஐடியாவை தான் தெரிவித்ததாகவும், இந்த ஐடியாவுக்கு சிவகார்த்திகேயன் ஓகே சொன்னால் மட்டுமே தான் படமாக இதனை எடுக்க இருந்ததாகவும் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
Rohit Sharma Century: டி 20 போட்டிக்கு செட் ஆகமாட்டேனா? – செம்மயா சதம் விளாசிய ரோகித்! எத்தனை ரெக்கார்டு பாருங்க!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் அவர் கேப்டனாக இருந்தாலும் அவர் கடந்த 14 மாதங்களாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் களமிறங்கவில்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ரோகித், அவரது தலைமையில் இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பை இழந்தது. இதனால் இந்திய அணிக்கு தனது தலைமையில் ஐசிசி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்ற ரோகித் சர்மாவின் கனவுக்கு அடுத்து உள்ள வாய்ப்புகளில் ஒன்று ஐசிசி டி20 உலகக் கோப்பை.

இதனால் ரோகித் சர்மா ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக களமிறங்கினார். முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். இதனால் விமர்சகர்கள், ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டிற்கு “நாட் ஃபிட்” என கூறிவந்தனர். அதாவது டி20 போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதி ரோகித் சர்மாவுக்கு இல்லை என கூறினர். இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். குறிப்பாக விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் தங்களது விக்கெட்டுகளை கோல்டன் டக்காக இழந்து வெளியேறினர்.

அதன் பின்னர் இளம் வீரரான ரிங்கு சிங் ரோகித்துடன் கைகோர்த்தார். வழக்கமாக அதிரடிகாட்டும் ரிங்கு இம்முறை ரோகித்தின் அட்வைஸ்களைக் கேட்டு விளையாடி களத்தில் இறுதிவரை இருந்தார். ரிங்கு சிங் 39 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்ஸர்கள் விளாசி 69 ரன்கள் குவித்திருந்தார். போட்டியின் முதல் பந்தில் இருந்து இறுதிப் பந்துவரை களத்தில் இருந்த ரோகித் சர்மா 69 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் விளாசி 121 ரன்கள் குவித்தார். அதாவது இதில் ரோகித் சர்மா சிக்ஸரில் எடுத்த ரன்கள் மட்டும் 48 பவுண்டரியில் குவித்த ரன்கள் மட்டும் 44. ரோகித் சர்மா கிரீஸ்க்குள் நின்றுகொண்டு மட்டும் 92 ரன்கள் குவித்துள்ளார்.

ரோகித் சர்மாவின் 5வது சர்வதேச டி20 இதுவாகும். டி20 போட்டிகளில் அதிக சதம் விளாசியவர் இவர் மட்டும்தான். இவருக்கு அடுத்து சூர்யகுமார் யாதவ் 4 சதங்களுடன் உள்ளார். ரோகித் சர்மாவை “அன் ஃபிட்” எனக் கூறியவர்களுக்கு தனது அதிரடி ஆட்டத்தினால் பதில் அளித்துள்ளார். குறிப்பாக ரோகித் சர்மா போட்டியின் 19வது ஓவரில் ஆஃப் சைடு ஸ்டெம்ப் திசையில் வைய்டு லைனில் சென்ற பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் லெக் சைடில் மடக்கி பவுண்டரி விளாசுவதற்கு உடற்தகுதி கட்டாயம் தேவை.

Special Train: | Special Train:
Ayodhya Special Train: தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தி கோயில்:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார்.
இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, அந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.
இதனால், அயோத்தி நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக உத்தரபிரதேச காவல்துறை, 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. ஜனவரி 22ம் தேதியன்று பாதுகாப்பை உறுதிசெய்ய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த உள்ளது.
200க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்:
முதல் நாள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது. ஜனவரி 23ஆம் தேதி முதல் மக்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். இதனால், பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் அயோத்தி கோயிலுக்கு படையெடுக்க தொடங்குவார்கள்.
இதனால், பல்வேறு நகரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, நாக்பூர், புனே, வார்தா, கோவா, கோட்டயம், டேராடூன், ஹைதராபாத், செகந்திராபாத், ஜம்மு காஷ்மீர், கத்ரா, உத்னா, இந்தூர், பலன்பூர், சலர்பூர், போபால், ஜபல்பூர், அசாம், குவஹாத்தி, நாசி, ஜால்சனா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை பொறுத்தவரை அயோத்திக்கு செல்லவும், மீண்டும் சொந்த ஊர் திரும்பவும் சேர்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 22ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
Ayodhya Ram Mandir: நாடே எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா..! ஜனவரி 22ல் நடக்கப்போவது என்ன?
Ayodhya Ram Mandir Guests: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு; யாருக்கெல்லாம் அழைப்பு? கலைநிகழ்ச்சிகள், நேரலையை எங்கு காணலாம்?
Vishal Promotes Rathnam Through Social Media By Hitting The Drunkards Who Came To Tasmac Set
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோ விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக 100 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி,கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
நடிகர் விஷால் சமீப காலமாக சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டில் இளம் பெண் ஒருவருடன் விஷால் காணப்பட்டதும் அவரை வீடியோ எடுக்கிறார்கள் என தெரிந்ததும் தலைதெறிக்க ஓடும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது. கடைசியில் அது வெறும் பிராங்க் என தகவல்கள் வெளியாகின.
அதேபோல டாஸ்மாக் கடை வெளியில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்தவர்களை விஷால் விரட்டி அடிக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதில் விஷால் ஒருவரிடம் சென்று “ஏற்கனவே போதையில் இருக்க? இதுல சரக்கா? இது என்னனு நினைச்ச நீ?” என அந்த போதை அசாமியிடம் கேட்க அவன் “டாஸ்மாக்” என சொல்ல “அட லூசு, இது ரத்னம் படத்தோட செட்.. போய்யா போ போ” என அங்கிருந்த அனைவரையும் விரட்டி அடித்து “டாஸ்மாக்குனு பேர் போட்டாலே வந்து நிக்கிறது” என விஷால் சொல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்க்கும் போதே படத்தோட ஷூட்டிங் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் இது பகிரப்பட்டதால் விஷால் நியாயம், தர்மத்திற்காக குரல் கொடுக்கிறார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கிறார் ஆஹா ஓஹோ என பாராட்டி தள்ளி விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘ரத்னம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது ரத்னம் படக்குழு. அதன் தொடர்ச்சியாக ரத்னம் படத்தின் விளம்பரத்துக்காக குடிமகன்களை, விஷால் ட்ரோல் செய்வது போல வெளியான இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அவ்வப்போது இப்படி ஏதாவது ஓன்றை செய்து மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகன டெக்னிக் இது. என்றுமே அவர்களை பற்றின செய்தி மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் மறந்து விடுவார்கள்.
America President Election Chance Of Vivek Ramaswamy Being Considered As Donald Trump Vice President Candidate Was Very Low
அமெரிக்க அதிபர் தேர்தலானது வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
சூடுபிடித்த அமெரிக்க அதிபர் தேர்தல்:
வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி, உள்ளிட்டோர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, அதிபர் தேர்தலில் இருந்து விலகியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து டிரம்ப்-க்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் விவேக் ராமசாமி.
குடியரசு கட்சியில் டிரம்ப்-க்கு எதிராக தேர்தலில் குதித்தாலும் டிரம்ப் குறித்து விமர்சிக்காமல் இருந்து வந்தார் விவேக் ராமசாமி. தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், டிரம்புக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார்.
ஸ்கெட்ச் போட்ட விவேக் ராமசாமி:
அதேபோல, சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் வரை விவேக் ராமசாமியுடன் நட்புணர்வை பேணி வந்தார் டிரம்ப். குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரை தேர்வு நோக்கில் அயோவா மாகாணத்தில் நடத்தப்படவிருந்த விவாதத்துக்கு ஒரு நாள் முன்புதான், விவேக் ராமசாமியை டிரம்ப் லேசாக விமர்சித்தார்.
அயோவா மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் டிரம்ப் முன்னிலை பெற்றதை அடுத்து, அதிபர் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார். இப்படிப்பட்ட சூழலில், டிரம்பின் துணை அதிபர் வேட்பாளராக விவேக் ராமசாமி நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
அல்வா கொடுத்த டிரம்ப்:
இந்த நிலையில், பிரச்சார கூட்டம் ஒன்றில் டிரம்புடன் மேடையை பகிர்ந்து கொண்ட விவேக் ராமசாமிக்கு டிரம்பின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதுமட்டும் இன்றி, விவேக் ராமசாமியை பார்த்து துணை அதிபர், துணை அதிபர் என முழக்கம் எழுப்பியுள்ளனர்.
பின்னர் பேசிய டிரம்ப், விவேக் ராமசாமியை தனது நண்பர் என்றும் உண்மையான தலைவர் என்றும் அறிமுகம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், “மிகவும் நல்லது, இல்லையா? அவர் ஒரு அற்புதமான நபர். அவரிடம் ஏதோன ஒன்று இருக்கிறது. அவர் நம்முடன் பணியாற்றப் போகிறார். அவர் நம்முடன் நீண்ட காலம் பணியாற்ற உள்ளார்” என்றார்.
BREAKING: Trump crowd chants “VP VP VP” after Vivek gets done speaking. Trump says “he’s going to be working with us for a long time” pic.twitter.com/NV8P6hKrET
— George (@BehizyTweets) January 17, 2024டிரம்புக்கு விவேக் ராமசாமி ஆதரவு தெரிவித்த போதிலும், அவர் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார் என டிரம்பின் ஆலோசகர் ஜேசன் மில்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டிரம்பின் துணை அதிபர் வேட்பாளராக ராமசாமி கருதப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. வாக்காளர்கள் அநேகமாக அவரை நிராகரித்துவிடலாம். விவேக் இல்லை என்பது உறுதி” என்றார்.

Ayodhya Ram Mandir Temple Ritual Schedule Full List Untill January 22 | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஹேமாமாலின் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு, ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. குடமுழுக்கு விழாவிற்கான 7 நாள் சிறப்பு பூஜைகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில், இன்று குழந்தை வடிவிலான ராமர் சிலை அயோத்திக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது. இதைதொடர்ந்து, அடுத்த 5 நாட்களுக்கு என்ன பூஜைகள் நடைபெற உள்ளன என்ன என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தினசரி பூஜைகளின் விவரம்:
ஜனவரி 18: சடங்குகளின் தொடக்கம்
குடமுழுக்கிற்கான முறையான சாஸ்திர சடங்குகள் என்பது ஜனவரி 18ம் தேதி (நாளை) தான் தொடங்குகிறது. அதன்படி கணேஷ் அம்பிகை பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன் மற்றும் வாஸ்து பூஜை ஆகியவை அடுத்தடுத்து நடைபெறும்.
ஜனவரி 19: ஹோமம் வளர்த்தல்
ஜனவரி 19ம் தேதியன்று ஹோமம் எரியூட்டப்பட்டு, நவக்கிரங்கள் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
ஜனவரி 20: கருவறையை சுத்தம் செய்தல்
கோயிலின் கருவறை சரயு நதியில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் கழுவப்பட்டு , வாஸ்து அமைதி மற்றும் அன்னாதிவாஸ் சடங்குகள் நடத்தப்படும்.
ஜனவரி 21: தெய்வீக குளியல்
125 கலசங்கள் கொண்டு ராம் லல்லா சிலை சுத்தம் செய்யப்படும்
ஜனவரி 22: சிலை பிரதிர்ஷ்டை
காலை பூஜையை தொடர்ந்து மதியம் 12:20 மணிக்கு, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், பிரதமர் மோடியால் ராமரின் சிலை பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு ஆரத்தி வழங்கப்பட உள்ளது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, ஆன்மீகம், பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் கொண்டாட்டம் ஆகியவை சங்கமிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக உள்ளது. பக்தர்கள் மற்றும் பிரமுகர்கள் கூடும் போது, ஒற்றுமை மற்றும் பயபக்தியை நோக்கி ஒரு கூட்டுப் படியைக் குறிக்கும் இந்த விழாவிற்கான எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. இந்த விழாவிற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் சிறப்பு விரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேநேரம், இந்த கோயில் குடமுழுக்கு விழாவில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உயரும் என, இந்திய வர்த்தக சம்மேளனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ritu Varma Photos : ஜெய்ப்பூர் மாளிகையில் உலாவும் தேவதை ரித்து வர்மா!
Ritu Varma Photos : ஜெய்ப்பூர் மாளிகையில் உலாவும் தேவதை ரித்து வர்மா!
Bigg Boss Maya Wrote Letter To Maya Squad And Fans For Thanks | Bigg Boss Maya: என்னோட ரசிகர்கள் என்றால் என்னை மட்டும் ரசியுங்கள்; மற்றவர்களை…
மழை நின்றாலும் தூவானம் விடாது என்பதைப் போல் பிக்பாஸ் சீசன் 7 முடிவடைந்தாலும் அது தொடர்பான விஷயங்கள் இன்னும் முடியவில்லை. பிக்பாஸ் போட்டியில் இரண்டாவது ரன்னர் அப் அதாவது மூன்றாவது இடத்தைப் பெற்றவர் மாயா. இவர் வீட்டிற்குள் இருந்தபோது அவருக்கு இங்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக அதிகரித்தது. இணையத்தை ஆக்கிரமித்திருந்த மாயாவின் ரசிகர்கள் தங்களது அணிக்கு ”மாயா ஸ்குவாட்” என பெயரிட்டுக்கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் மாயா இருக்கும்போதும் மாயா ரசிக்கும்படியாக ஏதாவது செய்தால் அதனை உடனே இணையத்தில் வைரலாக்கி மாயாவுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு திரட்டி வந்தனர்.
மாயாவின் செயல்பாடுகள் எதிர்வினைகள் பல இடங்களில் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். குறிப்பாக அவர் கேப்டனாக இருந்தபோது அவரது நடவடிக்கைகள் அவரது ரசிகர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் இதனால், பிக்பாஸ் ரசிகர்களிடம் மாயாவுக்கான ஆதரவைப் பெறுவது எப்படி என மாயா ஸ்வாடைச் சேர்ந்தவர்களே குழம்பிப் போனார்கள். மாயாவின் பிக் பாஸ் பயணம் இப்படி பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில் எல்லாம் மாயாவிற்கு அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் இயங்கியவர்கள் என்றால் அது மாயா ஸ்வாட் தான்.
இவர்களுக்கு மாயா தனது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுக்காக மாயா தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” மை டியரஸ்ட் மாயா ஸ்குவார் ஐ லவ் யூ. என்னை நீங்கள் அனைவரும் அன்பு மழையில் நனையவைத்துவிட்டீர்கள். என்னுடை தவறுகளை ஏற்றுக்கொண்டதற்கும் நான் வீட்டில் சண்டை செய்யும்போது எனக்காக நீங்களும் சண்டையிட்டுள்ளீர்கள். அதற்கெல்லாம் நன்றி. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த 105 நாட்கள் மரணப்படுக்கையிலும் மறக்காது. உங்களுக்காகத்தான் வேலை பார்க்கப்போகின்றேன். உங்களுக்குதான் இனி எல்லாமே. என்னுடன் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் என நம்புகின்றேன். என்னோட சண்டைகளில் நீங்களும் எனக்காக சண்டை செய்துள்ளீர்கள். அதற்கு கடைசிவரை நன்றியுடன் இருப்பேன். எனக்கு ஒரே ஒரு ஆசை. என் ரசிகராக நீங்கள் இருந்தால் என்னை மட்டும் ரசியுங்கள். மற்றவர்களையும் ரசியுங்கள். ஆனால் மற்றொருவரை வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவராக நீங்கள் இருந்தால் கூட அவர்களை வெறுக்க வேண்டாம். வேணும்னா காதலிங்க. போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும். போய் நம்ம வேலைய பாக்கலாம். ஐ பிராமிஸ்; சத்தியம் செய்கின்றேன். அன்புடன் பூவுடன் – மாயா எஸ் கிருஷ்ணன்” என குறிப்பிட்டுள்ளார்.
மாயாவின் இந்த மடல்தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே மாயா, ஏழாவது சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சானவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்து பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

CM MK Stalin Seeks Release Of Tamil Nadu Fisherman Arrested By Sri Lankan Navy Writes Letter To Union Minister Jaishankar
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. கைது செய்வது மட்டும் இன்றி அவர்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் படகுகளை பறிமுதல் செய்வது பெரும் பிரச்னையாக உள்ளது. இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யப்படுவது நின்றபாடில்லை.
இலங்கை கடற்படையின் அட்டூழியம்:
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப்படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்தும் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 13.01.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் 15.01.2024 அன்று சிறை சிறைபிடித்தனர் என்றும், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களையும், அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் 16.01.2024 அன்று இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:
கடந்த மூன்று நாட்களில் இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவ சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமென்றும் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுடன் இந்த விவகாரத்தை வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: IND vs AFG 3rd T20 LIVE Score: தொடரை முழுமையாக வெல்லுமா இந்தியா; டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
Passenger Who Got Stuck Inside The Lavatory For About An Hour On SpiceJet Flight From Mumbai To Bengaluru
SpiceJet: மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பெஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் சுமார் ஒரு மணி நேரமா சிக்கிக் கொண்டிருந்தார்.
விமான கழிவறையில் சிக்கிய பயணி:
மும்பையில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியனிக்கு பெங்களூருவுக்கு ஸ்பெஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு ஆண் பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றிருக்கிறார். அங்கு, கழிவறை கதவின் பூட்டு பழுதாகி இருந்ததால் அவரால் வெளியே வர முடியாமல் இருந்திருக்கிறார்.
சில நிமிடங்கள் கதவை திறக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், கழிவறை கதவை திறக்க முடியாமல் அதிகாலை 3.42 மணி வரை உள்ளேயே இருந்திருக்கிறார். பெங்களூருவில் விமானம் தரையிறங்கிய பிறகே, ஊழியர்கள் விமானத்தில் ஏறி கதவை உடைத்து அவரை மீட்டுள்ளனர்.
ஒரு மணி நேரமாக திக் திக் பயணம்:
இதற்கிடையில், அதாவது கழிவறையில் சிக்கி கொண்டிருந்த நேரத்தில் பயணிக்கு ஊழியர்கள் ஒரு குறிப்பை அனுப்பி உள்ளனர். அதில், “சார், எங்களால் முடிந்தவரை கதவை திறக்க முயற்சித்து வருகிறோம். ஆனால், எங்களால் கதவை திறக்க முடியவில்லை. நீங்க பயப்பட வேண்டாம். சில நிமிடங்களில் விமானம் தரையிறங்கிவிடும்.
The passenger who got stuck inside the lavatory for about an hour on SpiceJet flight operating from Mumbai to Bengaluru is being provided a full refund: SpiceJet Spokesperson https://t.co/nrrxaDGC4c
— ANI (@ANI) January 17, 2024எனவே, தயவு செய்து கழிவரை மூடியில் உட்கார்ந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். சில நிமிடங்களில் மெயின் கதவு திறக்கப்படும். அதன் பிறகு இன்ஜினியர் வருவார். நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, ஒரு மணி நேரமாக கழிவறையில் சிக்கிக் கொண்ட நபரை பத்திரமாக மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம்:
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் கூறுகையில், “மும்பையிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவர் ஒரு மணி நேரமாக சிக்கி தவித்தார். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். கதவின் பூட்டில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. பயணம் முழுவதும், எங்கள் குழுவினர் பயணிக்கு உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்கினர். அவர் மீட்கப்பட்டதும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. பயணிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். உங்களது விமான கட்டணத்தை முழுவதுமாக திருப்பி தருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க
பளார் பளார்! விமானியை சரமாரியாக அறைந்த பயணி – இண்டிகோ விமானத்தில் மீண்டும் சர்ச்சை!
படிப்பதற்காக கனடா செல்ல ப்ளானா? கொஞ்சம் கஷ்டம்தான்.. இத படிங்க!

கல்வி கற்கவும் வேலைவாய்ப்புக்காகவும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் கனடா செல்வது வழக்கம். இதனால், கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை சம்பவம் இந்திய, கனட நாடுகளின் உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய – கனட நாடுகளுக்கு இடையே பிரச்னை:

கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டு உலக நாடுகள் முழுவதும் பரபரப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், இது அரசியல் உள்நோக்கம் கொண்டவை என கூறியது.

இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக, கனடா நாட்டை சேர்ந்த 41 தூதரக அதிகாரிகளை அவர்களின் நாட்டுக்கே இந்தியா திருப்பி அனுப்பியது.

இந்த நிலையில், கனடாவுக்கு படிக்க செல்வதற்காக இந்திய மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை கடந்தாண்டு குறைந்துள்ளதாக கனடாவின் உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதேபோல, கனடா நாட்டுடன் பிரச்னை நிலவி வருவதால் விசாவுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே இந்திய மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கனடாவுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்:

இதுகுறித்து கனடா குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகையில், "படிப்பதற்காக இந்திய மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. பதற்றத்தின் காரணமாக மாணவர்களுக்கு தரப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறையும். இந்தியாவுடனான எங்கள் உறவு, இந்தியாவில் இருந்து நிறைய விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் திறனை பாதியாகக் குறைத்துவிட்டது" என்றார்.

இந்தியாவில் இருந்த கனட தூதரக அதிகாரிகளே இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பத்தை பரிசீலித்து அவர்களுக்கு விசாக்களை வழங்கி வந்தனர். அவர்களில் 41 பேரை இந்தியா வெளியேற்றியுள்ளதால் அதிக அளவிலான மாணவர்களுக்கு விசாக்களை வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, கனடாவுக்கு பதிலாக வேறு நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது அதிகமாகியுள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டை ஒப்பிடுகையில் நான்காவது காலாண்டில் இந்திய மாணவர்களுக்கு கனடா விசா அளிப்பது 86 சதவிகிதம் குறைந்துள்ளது. மூன்றாவது காலாண்டில் 1,08,940 பேருக்கு படிப்பதற்கான விசா அளிக்கப்பட்ட நிலையில், நான்காவது காலாண்டில் 14,910 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது.

I Am Ready To Act In A Story Based On Jallikattu – Actor Soori On Alanganallur Jallikattu 2024 | Actor Soori: ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதையில் நடிக்க நான் தயார்
தை பொங்கல் வந்து விட்டாலே தமிழ் நாட்டின் தலைப்புச் செய்தியாகவும் தமிழ் குறித்த செய்திகளில் முக்கியமானதாக இருப்பது ஜல்லிக்கட்டு. ஆக்ரோசமாக வாடி வாசலில் இருந்து வெளியே வரும் காளை மாடுகளை ஆரவாரம் பொங்க காளையர்கள் பிடிப்பது ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண அரசியல் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை முக்கிய பிரமுகர்கள் வருவது வழக்கம்.
தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றாலும், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ் பெற்றவை. இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி என்பது அதிகப்படியான மக்களால் எதிர்ப்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது.
இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி அமைச்சர் உதயநிதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளைகளை தொடர்ந்து மற்ற ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. வீரர்கள் போட்டிக் கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 6 ஆயிரத்து 99 காளைகளும், ஆயிரத்து 784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். இதில் தகுதியுள்ள 1,200 காளைகளுக்கும், 800 வீரர்கள் களமிறங்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு திரை பிரபலங்கள் வந்தனர். இதில் பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற நடிகர் சூரி, இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையும் பார்வையிட வந்திருந்தார். இவரை அனுகிய செய்தியாளர்களிடம் அவர் பேசியது தற்போது திரையுலகில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் அவர், “ இது நம்ம ஊர் மதுரை. நான் பிறந்து ஆளான ஊர். உலகத்திலேயே மிக முக்கியமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நான் பங்கேற்றுள்ளேன். காளையா? மாடுபிடி வீரனா? என போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. விடுதலை படத்தின் இராண்டாம் பாகத்திற்குப் பின் ஜல்லிக்கட்டை மைய்யப்படுத்திய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயமாக நடிப்பேன். ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை என்பதால் நமது மதுரையிலேயே நடிப்பேன்” என நடிகர் சூரி தெரிவித்தார். நடிகர் சூரியின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகின்றது. இது மட்டும் இல்லாமல் நேற்று நடிகர் அருண் விஜய், “ எனக்கு ஜல்லிக்கட்டு போட்டியை மைய்யப்படுத்திய கதையில் ஒரு மாடுபிடி வீரனாக நடிக்க ஆசைப்படுகின்றேன். டூப் வைத்து நடிக்க எனக்கும் ஆர்வம் இல்லை. மேலும் இதில் எவ்வளவு சிரமமும் ஆபத்தும் உள்ளது என எனக்குத் தெரியும்” என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா பிரபலங்கள் இப்படி தங்களது விருப்பத்தினை தெரிவித்துவரும் நிலையில், இதற்கு முன்னர், இயக்குநர் வெற்றி மாறனின் “ வாடிவாசல்” படத்தில் நடிக்க நடிகர் சூர்யா பல மாதங்களாக ஒரு மாட்டினை தனது வீட்டில் தானே நேரடியாக வளர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டினை மையப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

CM Stalin: "புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வு” – ஜல்லிக்கட்டு குறித்து வியந்து ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin: தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி:

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும், அலங்காநல்லூரில் இன்று நடைபெற்று முடிந்தது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் மற்றும் APACHE பைக் பரிசும், பரிசுகோப்பையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

11 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாவது பரிசாக APACHE பைக் பரிசும் வழங்கப்பட்டது. அதேபோல, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் கார், கறவை பசு பரிசாக வழங்கப்பட்டது.

"தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்”

மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடங்கி முதல் இடத்தை பிடித்த கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கும், காளைக்கும் கார் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல். ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.

"ஏறு தழுவுதல் அரங்கம் ஜன.24ல் திறப்பு”

தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல்#ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று,

அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை

25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.

புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை,

சுமார் 3 இலட்சம்… pic.twitter.com/Jel6NJHwRh

— M.K.Stalin (@mkstalin) January 17, 2024

புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் – வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

Jallikattu 2024 LIVE: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்

ப்ளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்; ஆஃப்கானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ஏற்கன்வே 2-0 என்ற கணக்கில் வென்று விட்ட நிலையில் மூன்றாவது போட்டியையும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ayodhya Ram Mandir Guest List: From Industrialists To Actors When And Where To Watch Live Telecast
Ayodhya Ram Mandir Guests: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க, யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ராமர் கோயில் குடமுழுக்கு விழா:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார். இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, அந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல், ஆன்மீகம், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்கள் அடங்குவர்.
அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தலைவர்கள்:
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர்
பிரதமர் மோடி
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச ஆளுநர் அனந்திபென் படேல்
ஸ்ரீராம சென்ம பூமி தித்த் ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
BAPS சுவாமி நாரயன் சன்ஸ்தா
எல்.கே.அத்வானி
முரளி மனோகர் ஜோஷி
அகிலேஷ் யாதவ்
மல்லிகார்ஜுன் கார்கே
சோனியா காந்தி
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
மன்மோகன் சிங்தொழிலதிபர்கள்:
ரத்தன் டாடா
முகேஷ் அம்பானி
குமார் மங்கலம் பிர்லா
என் சந்திரசேகரன்
அனில் அகர்வால்
என்.ஆர்.நாராயண மூர்த்திசினிமா பிரபலங்கள்:
மோகன்லால்
ரஜினிகாந்த்
அமிதாப் பச்சன்
அனுபம் கெர்
மாதுரி தீட்சித்
சிரஞ்சீவி
சஞ்சய் லீலா பன்சாலி
அக்ஷய் குமார்
தனுஷ்
ரன்தீப் ஹூடா
ரன்பீர் கபூர்
அனுஷ்கா சர்மா
கங்கனா ரனாவத்
ரிஷப் ஷெட்டி
மதுர் பண்டார்கர்
அஜய் தேவ்கன்
ஜாக்கி ஷெராஃப்
டைகர் ஷெராஃப்
யாஷ் பிரபாஸ்
ஆயுஷ்மான் குரானா
ஆலியா பட்
சன்னி தியோல்விளையாட்டு வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர்
விராட் கோலி
எம்.எஸ். தோனி
தீபிகா குமாரிகலை நிகழ்ச்சிகள்:
ராமர் கோயிலில் குடமுழுக்கினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமா மாலினி மட்டுமின்றி ராகேஷ் பேடி, வின்டு தாரா சிங் மற்றும் விஷால் நாயக் போன்ற பிரபல கலைஞர்களும், இந்துத்துவம் சார்ந்த கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். அதோடு, நாட்டின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பகாவாஜ் இசைக்கலைஞர்கள் தொடங்கி, தமிழகத்தைச் சேர்ந்த மிருதங்க வித்வான்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்க உள்ளனர்.
ராமர் கோயில் குடமுழுக்கு நேரலை:
கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்யும் நிகழ்வானது, ஜனவரி 22ம் தேதி பிற்பகல் 12.20 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த மொத்த நிகழ்வுகளும் DD News மற்றும் தூர்தர்ஷனின் DD National சேனல்களில் 4K தரத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நேரலையை மற்ற செய்தி நிறுவனங்களும் ஒளிபரப்புவதற்கு ஏதுவாக, ஒளிபரப்பாளர்களுக்கு தூர்தர்ஷனின் YouTube லிங்க் பகிரப்பட உள்ளது. ஜனவரி 23, 2024 அன்று, தூர்தர்ஷனின் ஆரத்தி மற்றும் ஸ்ரீராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Vijay Tv Siragadikka Aasai Serial January 17th Episode Update | Siragadikka Aasai:வேலை இல்லையென கூறி வெளியே அனுப்பப்படும் மனோஜ்… மீனாவின் அம்மாவை அவமதிக்கும் விஜயா
மனோஜ் ஒரு கம்பெனிக்கு இண்டர்வியூவ் சென்றிருக்கிறார். அங்கு முதலாளி, மனோஜ் இடம், “வுமென்( women) கிட்ட வேலை பார்க்க மாட்டேனு சொன்னியே அந்த வுமன் இல்லனா நீ இந்த உலகத்துக்கே வந்திருக்க முடியாது” என கூறுகிறார். மேலும் உன்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், “உன்னை மாதிரி மைண்ட் செட் இருக்குற மென்(men) கிட்ட போய் வேலை பாரு” என்றும் சொல்லி விடுகிறார். இதனால் மனோஜ் அதிர்ச்சியில் அங்கிருந்து வெளியேறுகிறார்.
மறுப்பக்கம் ஸ்ருதி ரோகினியிடம், ”யார் எப்படி போனா முத்துவுக்கு என்ன வந்துச்சி, தேவையில்லாம உங்கள கேள்வி கேட்டுகிட்டு இருக்காரு” என கூறுகிறார். “மனோஜ் வேலைக்கு போகாதது அவருக்கு தெரிஞ்சிருந்தா உங்க கிட்ட பேசி முடிச்சிருக்கனும். தேவையில்லாம எல்லோர் முன்னாடியும் கொண்டு வந்திருக்க கூடாது” என்கிறார். பின் ஸ்ருதி, மனோஜ் ஏன் இண்டர்வியூக்கெல்லாம் போகனும் நீங்க உங்க பிஸ்னஸ்ல ப்ராஞ்சஸ் ஆரம்பிங்க என்கிறார் ஸ்ருதி. அதுக்கு ”நான் பணத்துக்கு எங்க போறது” என்கிறார் ரோகினி.” உங்க அப்பாகிட்ட கேளுங்க” என்கிறார் ஸ்ருதி.
இதையெல்லாம் வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த விஜயா ரூமுக்குள் சென்று ”அப்பாக்கிட்ட கேட்டு ஒரு பிஸினஸ் ஆரம்பிமா, அதுக்காக உரிமை இல்லைனு ஆயிடாது இல்ல” என்கிறார். ”இல்ல ஆண்டி நான் காசு கேட்டா அவரு நம்ம வீட்டப்பத்தி என்ன நினைப்பாரு” என்று சொல்கிறார் ரோகினி. ஸ்ருதி ”எனக்கும் டப்பிங் ஸ்டூடியோ ஆரம்பிக்கனும்னு பிளான் இருக்குங்க ஆண்டி” என்கிறார் ஸ்ருதி. அதற்கு விஜயா, “ சரியா சொன்னமா நாம பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் பன்னாதான் நல்லது. எனக்கூறி, பூக்கடை பிஸினஸ் குறித்து ,இதுல எல்லாம் என்ன கிடைக்கப் போகுது” என்கிறார் . அதற்கு ஸ்ருதி ”இல்ல ஆண்டி ப்ளவர் ஷாப் கூட நிறைய ப்ரான்ச் ஓபன் பன்னலாம்” என்கிறார்.
விஜயா, ரோகினியிடம் “உங்க அப்பா கிட்ட சொல்லி மனோஜ்க்கு ஒரு பிஸினஸ் வச்சி கொடுக்க சொல்லு, பாவம் அவனும் எவ்ளோ நாளைக்குதான் வேலைக்கு போவான்” என்கிறார். பின் பதில் கூறி விட்டு அங்கிருந்து செல்லும் ரோகினி, மனோஜிக்கு கால் செய்து இண்டர்வியூவ் குறித்து கேட்கிறார். ஏற்கனவே வேலைப்பார்த்த கம்பெனிக்கு செல்ல சொல்கிறார் ரோகினி. அங்கேயும் சென்றுவிட்டதாகவும் வேலை கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார் மனோஜ்.
ரவி ரோகினி இடம் பீல் பண்ணாதிங்க அண்ணி, அண்ணுக்கு வேலை கிடைத்து விடும் என்கிறார். அதற்கு ரோகினி, ”வெய்ட் பன்னலாம் ரவி ஆனா இந்த வீட்டோட சூழ்நிலை அப்படி இல்லையே” என்கிறார். அதற்கு ஸ்ருதி முத்து பத்திதானே சொல்றிங்க என பேச ஆரம்பிக்கிறார். அங்கு வரும், மீனா, ஒரு ஆள் இல்லாத போது அவர்களை பற்றி பேசுவது தவறு என வாக்குவாதம் செய்கிறார். இதனையடுத்து ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு வந்து பொங்கல் வரிசை வைக்கிறார். அதில் நகை உள்ளிட்டவை உள்ளன. இதனையடுத்து மீனா வீட்டில் இருந்து வந்து வரிசை வைக்கின்றனர். அவர்களை விஜயா இன்சல்ட் செய்கிறார். அவர்களுக்கு முத்து பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
Alanganallur Jallikattu: நிறைவு பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்த 18 காளைகள்…முதலிடத்தை தட்டித் தூக்கிய இளைஞர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார். மேலும், 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் அபி சித்தரும், 12 காளைகளை அடக்கி திவாகர் என்பவர் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

“இது நெகட்டிவ் இல்லை; கவலை” – வெறுப்பு பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்ற கேள்விக்கு கபில் சிபல் பதில்!

வெறுப்பை தூண்டும் விதமான பேச்சு சமூகத்தை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பேசப்படும் வெறுப்பு பேச்சு, சமூகத்தின் அமைதியை கெடுத்து பெரும் அழிவை உண்டாக்குகிறது. இம்மாதியான வெறுப்பு பேச்சை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பை தூண்டும் விதமான பேச்சை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் செய்தி தொலைக்காட்சிகளை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், இதில் அரசு ஏன் அமைதி காக்கிறது? என்ற கேள்வி எழுப்பியிருந்தது.

வெறுப்பை தூண்டும் பேச்சுக்கள்:

இந்த நிலையில், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் வெறுப்பு பேச்சை நிறுத்திவிடவில்லை. வகுப்புவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சுகளுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பல வழக்குகளில் காவல்துறை அமைதி காத்து வருகிறது. பார்வையாளராக மட்டுமே உள்ளது. இதில், உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு, "கடந்த காலங்களில் வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவுகளால் களத்தில் வித்தியாசம் தெரிகிறது. இப்படியிருக்கும்போது, ஏன் நெகட்டிவாக பார்க்கிறீர்கள்" என கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "நாங்கள் இதை நெகட்டிவாக பார்க்கவில்லை. எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்" என்றார்.

கபில் சிபலிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி:

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலும், அவர்களைப் புறக்கணிக்க அழைப்பு விடுப்பதிலும் இந்து ஜனஜக்ருதி சமிதி என்ற அமைப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்றும் மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி அந்த அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை தாக்கும் விதமாக வெளிப்படையாக வெறுப்பு பேச்சு பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஷாஹீன் அப்துல்லா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்தான், மனுதாரர் தரப்பில் கபில் சிபல் ஆஜரானார்.

இறுதியில், வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு யவத்மால் மற்றும் ராய்ப்பூரில் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்!

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

நெட்ஃப்ளிக்ஸ்

கொரோனா நோய் தொற்றுக்குப் பின் ஓடிடி தளங்களின் நுகர்வு பலமடங்கு பெருகியுள்ளது. முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று நெட்ஃப்ளிக்ஸ். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழிகளில் படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரீஸ்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. மேலும் திரையரங்குகளில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களின் ஓடிடி உரிமத்தைப் பெற்றும் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் பற்றிய தகவலைப் பகிர்ந்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி. த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது.

தங்கலான்

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. திரையரங்கத்தைத் தொடர்ந்து இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும்.

எஸ்.கே 21

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் எஸ்.கே 21. சாய் பல்லவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கும் நிலையில், படத்தின் பெரும்பாலான காட்சிகள் காட்சிகள் காஷ்மீரில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. எஸ்.கே 21 படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது.

ரிவால்வர் ரீடா

கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படம் ரிவால்வர் ரீடா. கே.சந்திரு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரிவால்வர் ரீடா படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தபடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள கன்னிவெடி படத்தின் ஓடிடி உரிமத்தையும் நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சொர்க்கவாசல்

சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்துள்ள படம் சொர்க்கவாசல். திரையரங்கத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஜா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50 ஆவது படம் மஹாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தி இயக்குநர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். திரையரங்கத்தைத் தொடர்ந்து இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!

Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

School Timing: உறையவைக்கும் கடும் குளிர்; பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்: முழு விபரம் உள்ளே!

குளிர் காலநிலை காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நர்சரி முதல் 8 வரையிலான வகுப்புகள் ஜனவரி 18 முதல் காலை 10 மணிக்கு தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும் என கவுதம் புத்த நகரின் முதல் நிலைக் கல்வி அலுவலரான மாவட்ட ஆட்சியர் ராகுல் பன்வார் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நேர மாற்றம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்"அடர்த்தியான மூடுபனி மற்றும் கடும் குளிரைக் கருத்தில் கொண்டு, கவுதம புத்த நகர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, அனைத்து பள்ளிகளிலும் நர்சரி முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் ஜனவரி 18 முதல் மறு உத்தரவு வரும் வரை காலை 10 மணி முதல் தொடங்கும். பள்ளி நேர மாற்றம் தொடர்பான உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மிகவும் கறாராக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு முன்னதாக, நெய்டாவில் நிலவும் கடும் குளிர் காலநிலை காரணமாக நர்சரி முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் ஜனவரி 16 வரை விடுப்பு அளிக்கப்பட்டது. 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, பள்ளி நேரங்கள் கடந்த வாரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாற்றியமைக்கப்பட்டு, மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் பிறப்பித்த தனி உத்தரவின்படி பின்பற்றப்பட்டு வருகின்றது.

இந்த உத்தரவானது அதாவது, 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான இந்த நேரம் ஜனவரி 20 ஆம் தேதி வரை தொடரும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள அரசுப் பள்ளிகள் பொதுவாக குளிர்காலத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கால அட்டவணையைப் பின்பற்றுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சமீப காலமாக காலநிலை மாற்றம் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த புரிதல்களும் அதையொட்டிய நடவடிக்கைகளையும் கணிசமான அளவு பார்க்க முடிகின்றது. தற்போது இந்தியாவில் குளிர் காலம் என்றாலும், வரலாறு காணத குளிரினால் பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தியாவில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் சமீப காலமாக கடும் வெயில் மற்றும் கடும் குளிருக்கு பள்ளிகள் விடுமுறை விடுவது என்பது கால நிலை மாற்றத்தின் எதிரொலியாகப் பார்க்கப்படுகின்றது. கால நிலை மாற்றத்தினால் எவ்வளவு காலத்திற்கு பள்ளிகளை இயக்கும் நேரத்தினை மாற்றி அமைக்கப்போகின்றோம் என்ற கேள்வியை பெற்றோர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர்.

SK21 Netflix : நெட்ஃபிளிக்ஸ் பண்டிகை லிஸ்டில் சேர்ந்த SK21… இப்போவே புக்கிங் பண்ணியாச்சு!
SK21 Netflix : நெட்ஃபிளிக்ஸ் பண்டிகை லிஸ்டில் சேர்ந்த SK21… இப்போவே புக்கிங் பண்ணியாச்சு!
10 ரூபாய் நாணயம் வழங்கினால் முட்டையுடன் சிக்கன் பிரியாணி; காணும் பொங்கலில் கூடிய கூட்டம்

புதுச்சேரி மக்களால் செல்லாது என கருதப்படும் 10 ரூபாய் நாணயத்துக்கு தனியார் நிறுவனம் முட்டையுடன் பிரியாணி வழங்கிய நிலையில், அதை வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் புஸ்சி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் 10 ரூபாய் நாணயம் கடைகளில், வணிக நிறுவனங்களில் வாங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் செல்லாத நாணயமாக புதுச்சேரி மக்களால் 10 ரூபாய் நாணயம் கருதப்பட்டது. எனவே தமிழகத்திற்கு செல்லும் புதுச்சேரி மக்கள் அங்குள்ள வணிக நிறுவனங்கள் வழங்கும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. அப்படியே வாங்கினாலும் அங்கேயே அதை செலவழித்துவிட்டு புதுச்சேரிக்கு வரும் நிலையே நீடிக்கிறது. 10 ரூபாய் நாணயம் செல்லும் என ரிசர்வ் வங்கி நிர்வாகம் முறைப்படி அறிவித்து எச்சரித்தும் புதுச்சேரியில் இவை பெருமளவில் பயன்பாட்டில் இல்லை.

இதனிடையே புதுச்சேரி மக்களால் வாங்க மறுக்கப்படும் 10 ரூபாய் நாணயம் செல்லும் என்பதை வலியுறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகர பகுதியிலுள்ள ஒரு தனியார் ஓட்டல் நிர்வாகம் சலுகை அறிவிப்பை வெளியிட்டது. அதாவது காணும் பொங்கலன்று 10 ரூபாய் நாணயத்துக்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தது. இதன் காரணமாக புஸ்சி வீதி, பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகிலுள்ள அந்த ஓட்டல் முன்பு இன்று மதியம் 12 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அங்கு கூட்ட நெரிசல் அதிகமாகவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார், ஓட்டலுக்கு 10 ரூபாய் நாணயத்துடன் வந்தவர்களை வரிசையில் நிற்குமாறு கூறினர். இதனால் 1 கிமீ தூரத்துக்கு பொதுமக்கள் அணிவகுத்து நின்றனர். 12 மணிக்கு ஓட்டல் நிர்வாகம் ஒரு நபரிடம் ஒரு 10 ரூபாய் நாணயத்தை மட்டும் பெற்றுக் கொண்டு ஒரு பிரியாணி பொட்டலத்தை வழங்கியது.

இவ்வாறாக 500 பேருக்கு அரை மணி நேரத்தில் பிரியாணி பொட்டலத்தை வழங்கிய நிலையில், சலுகை திட்டத்தை நிறைவு செய்தது. இதன் காரணமாக 2 மணி நேரமாக வரிசையில் காத்திருந்த மீதமுள்ள மக்கள் ஏமாற்றமடைந்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அதன்பிறகு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Praggnanandhaa From Tamilnadu Beats World Champion Ding, Passes Anand To Become India’s No.1
Praggnanandhaa: 2024 டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம், பிரக்ஞானந்தா தேசிய தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தரவரிசையில் முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா:
இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வெறும் 18 வயதிலேயே நாட்டின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுவும் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி அவர் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளார். செஸ் போட்டிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படும் டாடா ஸ்டீல் செஸ் போட்டியில், நடப்பு உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம், இந்த வியக்கத்தக்க சாதனையை பிரக்ஞானந்தா செய்து முடித்துள்ளார்.
Rameshbabu Praggnanandhaa defeats the World Champion!! In the 4th round of Tata Steel Masters 2023, Pragg played a fantastic game with the Black pieces to take down GM Ding Liren. With this win, Praggnanandhaa is now the second Indian after Vishy Anand to defeat a reigning… pic.twitter.com/1XpDE98Pj4
— ChessBase India (@ChessbaseIndia) January 16, 2024இரண்டாவது வீரர்:
பிரக்ஞானந்தாவின் வெற்றி தனிப்பட்ட மைல்கல்லாக மட்டுமல்லாமல், இந்திய சதுரங்கத்தில் ஒரு புதிய சகாப்தத்தையும் குறிக்கிறது. தன்னை விட கிட்டத்தட்ட 200 புள்ளிகள் அதிகம் பெற்று உலக தரவரிசையில் கோலோச்சும் வலுவான டிங்கை விழ்த்தியதன் மூலம், தனது அபாரமான திறமை என்ன என்பதை பிரக்ஞானந்தா மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஆனந்த் போன்ற சதுரங்க ஜாம்பவான்களுடன் பிரக்ஞானந்தா தனது பெயரை நம்பர் ஒன் வீரராக பொறித்துள்ளார். அதன்படி, விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு நடப்பு உலக செஸ் சாம்பியனை தோற்கடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இந்திய சதுரங்கத்தின் ஒளிரும் நட்சத்திரமாகவும் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரக்ஞானந்தா சொன்னது என்ன?
போட்டியின் நான்காவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தியது தொடர்பாக பேசிய பிரக்ஞானந்தா, “நான் மிக எளிதாக சமன் செய்துவிட்டதாக உணர்ந்தேன், பின்னர் எப்படியோ அவருக்கு விஷயங்கள் தவறாகப் போகத் தொடங்கின. நான் சிப்பாய்களை வீழ்த்திய பிறகும் அது பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். எந்த நாளும், ஒரு வலிமையான வீரரை வென்றால், அது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவர்களை வெல்வது மிகவும் எளிதானது அல்ல. கிளாசிக்கல் செஸ்ஸில் உலக சாம்பியனுக்கு எதிராக முதல் முறையாக வெற்றி பெறுவது நன்றாக இருக்கிறது” என தெரிவித்தார்.

Tamil Nadu Is Fog Morning Hours Next Few Days According To The Meteorological Department | TN Weather Update: அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு! நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு
மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
ஜனவரி 19 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உறைபனி எச்சரிக்கை:
17.01.2024 மற்றும் 18.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிமூட்டம் இருக்கும். குறிப்பாக வட மாநிலங்களில் அதிகமாக இருக்கும். எதிரில் வருபவர்கள் கூட தெரியாத அளவு கடும் பனிமூட்டம் இருக்கும். இதனையடுத்து கடந்த சில வாராங்களாக வட மாநிலங்களில் கடும் பனி நிலவுகிறது. ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த 5 நட்களுக்கு வடமேற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு சில மாநிலங்களில் வெப்பநிலை குறைந்து பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் வாரியாக ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உறைபனி தொடங்கியுள்ளது. கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. நீர்நிலைகள், பச்சை புல்வெளிகளில் பனிப்படலம் படர்ந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கும். இக்காலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். மேலும் உறை பனி பொழிவும் இருக்கும்.
மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு பரவும் போர்.. பாகிஸ்கான் மீது ஈரான் தாக்குதல் நடத்த காரணம் என்ன?

மேற்காசியாவில் அமைந்துள்ள காசா பகுதியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.

மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு பரவும் போர்:

குறிப்பாக, ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரால் காசா பகுதியில் 24,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலானோர் குழந்தைகளும் பெண்களுமே ஆவர். காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கமும் சண்டையிட்டு வருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டும் இன்றி செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு போர் விரிவடைந்துள்ளது. பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் தீவிரவாத குழுவுக்கு தொடர்புடைய இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்த காரணம் என்ன?

ஒரே வாரத்தில் ஈராக், சிரியாவை தொடர்ந்து மூன்றாவது நாட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயம் அடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சட்ட விரோத நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டிருப்பதாகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடம் என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் வான்வெளியில் அத்துமீறி நுழைந்திருப்பதாக கடுமையாக கண்டித்துள்ளது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம். ஈரான் அரசிடம் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ள பாகிஸ்தான், இதை ஏற்று கொள்ளவே முடியாது என விமர்சித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்த பல வழிகள் இருந்த போதிலும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது பெரும் கவலை அளிப்பதாக கூறியுள்ளது.

தங்களின் பாதுகாப்பை மீறி செயல்பட்டவர்களை தண்டிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான், ஈரான் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் இரண்டு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது.

Udayanidhi Stalin: பூரணம் அம்மாளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் – நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி உறுதி

ஏழு கோடி ரூபாய் நிலத்தை கல்விக்காக தானமாக வழங்கிய பூரணம் அம்மாளின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

ஆயி பூரணம் அம்மாள்:

மதுரை மாவட்டம் கே புதூர் அருகே உள்ள சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் உக்கிரபாண்டியன் – பூரணம் தம்பதியினர். இவர்களது மகள் ஜனனி உயிரிழந்த நிலையில், அவரது நினைவாக நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று தாய் பூரணம் முடிவெடுத்துள்ளார்.

இதனிடையே, கொடிக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை அரசு உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக தனது சொத்தை தானமாக வழங்கியுள்ளார். பள்ளிக்கு கட்டடத்தை கட்டிக்கொள்வதற்காக அவர் கொடுத்த 1 ஏக்கர் 52 செண்டு சொத்தின் மதிப்பு ரூபாய் 7 கோடியாகும். அந்த இடத்தில் உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்டிக் கொள்வற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டியதென்றும், இந்த தானப் பத்திரம் இன்றைய தேதியிலேயே அரசுக்கு கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்விக்காக நிலம் தானம்:

அதேபோல் கட்டடம் கட்டும்போது ஒரு வாசகம் பொறித்த கல்லை வைக்குமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, பள்ளிக்கு கட்டடம் கட்டுகையில், அதற்கு “ஜனனியின் நினைவு வளாகம்” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சொத்தை மகளின் நினைவாக அரசுக்கு தான பத்திர பதிவு செய்து கொடுத்ததை, முறையாக முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில் பூரணம் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

மகளின் நினைவாக 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பள்ளி கட்டடம் கட்டிக்கொள்ளுமாறு தானம் கொடுத்த தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில் குடியரசு தினத்தன்று பூரணம் அம்மாவை நேரில் சந்தித்து கௌரவிக்க இருப்பதாக தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனிடையே அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க வந்த உதயநிதி ஸ்டாலின் வெகு நேரமாக போட்டியை கண்டு ரசித்த பின்பு புறப்பட்டு நேரடியாக பூரணம் அம்மா இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.

ஜனனி நினைவு வளாகம்:

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ ஏழு கோடி ரூபாய் நிலத்தை கல்விக்காக தானமாக வழங்கிய பூரணம் அம்மாளின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி கொடுத்துள்ளேன். பறிக்க முடியாத செல்வம் என்றால் அது கல்வி செல்வம் தான் என்ற அடிக்கடி முதல்வர் சொல்வார். அந்த கல்விக்காக நிலத்தை தானமாக கொடுத்த பூரணமால் நம் எல்லோருக்கும் முன்உதாரணம்.

கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தானமாக கொடுக்கப்பட்ட இடத்தில் உடனடியாக பள்ளி கட்டடத்தை கட்ட முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். பூர்ணம்மாளின் பணிக்கு தமிழக அரசு தலைவணங்குகிறது. பள்ளிக்கு கட்டடம் கட்டுகையில், அதற்கு “ஜனனியின் நினைவு வளாகம்” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவரது கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி கொடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Sun Tv Ethirneechal Serial Today Episode January 17 Promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal)தொடரில் கடந்த வாரத்தில் நாச்சியப்பனின் குடும்பத்தார் பார்வதியை அவர்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்து தாலியை கழட்டிக் கொடுத்து அந்த குடும்பத்திற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சத்தியம் செய்யச் சொல்லுமாறு சொல்கிறார்கள். பார்வதியும் ஜனனியுடன் கோயிலுக்கு வந்து தாலியை நாச்சியப்பனிடம் கழட்டிக் கொடுத்துவிட்டு, அவரை நாலு வார்த்தை கேட்டு அசிங்கப்படுத்துகிறார்.
ஜனனி அவர்கள் அனைவரையும் பார்த்து “ஒரு நாள் இந்தப் பொண்ணு எங்களோட சொந்த ரத்தம்னு சொல்லுவீங்க” என சவால் விட, நாச்சியப்பன் குடும்பத்தார் ஜனனியை அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார்கள். வசுவுடன் வந்த ஜனனியின் தங்கை அவள் ஒருவரை காதலிப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்க, பார்வதி அவளிடம் “இந்தக் காதல் எல்லாம் உனக்கு வேண்டாம். நல்லா படிச்சு வேலைக்கு போ. இந்த காதலால தான் என்னோட வாழ்க்கையே போயிடுச்சு” என சொல்லி வருத்தப்படுகிறார். ஆனால் ஜனனியின் தங்கையோ காதல் மீது உறுதியாக இருக்கிறாள். பார்வதி அனைத்து முடிவையும் ஜனனியிடம் கொடுக்கிறார்.
கரிகாலன் தர்ஷினி ஜூடோ பயிற்சி மேற்கொள்வதைப் பற்றி குணசேகரனிடம் போட்டு கொடுக்க, அவரோ கோச்சுக்கு போன் செய்து அவரை கண்டபடி திட்டி விடுகிறார். இனிமேல் தர்ஷினி ஜூடோ பயிற்சிக்கு வரமாட்டாள் என்பதை சொல்லிவிடுகிறார்.
இதனால் மிகுந்த மனவருத்தத்துடன் பள்ளிக்குச் சென்ற தர்ஷினி, கோச்சிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர் தர்ஷினிக்கு இனி பயிற்சி கொடுக்க முடியாது என மறுத்துவிடுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் தர்ஷினி நடந்து வந்து கொண்டு இருக்கும் போது ஏதோ ஒரு கும்பல் வந்து தர்ஷினியை காரில் கடத்தி சென்று விடுகிறது.
ஈஸ்வரி தர்ஷினிக்கு போன் செய்து பார்க்க யாரோ ஒருவர் போனை எடுத்துப் பேச, ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். கீழே கிடந்த போனை எடுத்து அவர் பேசியதாகச் சொல்ல, ஈஸ்வரிக்கு மேலும் அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த இடத்திற்கு ஈஸ்வரி, ஜனனி மற்றும் சக்தி செல்ல, அங்கே தர்ஷினியின் ஸ்கூல் பேக் கிடப்பதைப் பார்த்து கதறி அழுகிறாள் ஈஸ்வரி. அவளை ஜனனியும் சக்தியும் சேர்ந்து சமாதானம் செய்கிறார்கள். தர்ஷினி காணாமல் போன விஷயத்தை ரேணுகா குணசேகரனிடம் சொல்ல, அவரும் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் ஆளுக்கு ஒரு பக்கம் போய் தர்ஷினியை தேடுகிறார்கள்.
மறுபக்கம் மெய்யப்பன் குடும்பத்தில், ஆத்தா நாலு பேரின் திருமணத்தையும் ஒரே மேடையில் வைத்து செய்து விடுவது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த நால்வர் யார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
தர்ஷினியின் கடத்தலுக்கு காரணம் குணசேகரனாக இருக்குமோ அல்லது ஜான்சி ராணி கரிகாலனின் வேலையா என்பது ஒரே சஸ்பென்சாக இருக்கிறது. எனவே இந்த கடத்தல் ட்ராமாவுக்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் எதிர்நீச்சல் தீவிர ரசிகர்கள்!

Tamilnadu Latest Headlines News Update 17th January 2024 Tamilnadu Flash News
DMK Files 3: தி.மு.க. ஃபைல்ஸ் 3ம் பாகம் ரிலீஸ்! அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவில் இருப்பது என்ன?தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் 3ஆம் பாகத்துக்கான ஆடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில், இத்துடன் இது முடியப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். மேலும் படிக்க
DPIIT Award: தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு! விருது வென்று அசத்தல்! மற்ற மாநிலங்கள் எப்படி?மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. மேலும் படிக்க
LIC share: முதன்முறை! ரூ.900 எட்டிய எல்.ஐ.சி. பங்கின் விலை – அதிக மதிப்புடைய பொதுத்துறை நிறுவனமாக அசத்தல்லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், பங்குச் சந்தையில் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் பங்கின் விலை முதல் முறையாக 900 ரூபாயை தொட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் இருந்து பட்டியலிடப்பட்டதிலிருந்து, இதுவரை இல்லாத புதிய உச்சம் இதுவாகும். மேலும் படிக்க
Praggnanandhaa: “ஆளப்போறான் தமிழன்” இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா!இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வெறும் 18 வயதிலேயே நாட்டின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுவும் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி அவர் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளார். செஸ் போட்டிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படும் டாடா ஸ்டீல் செஸ் போட்டியில், நடப்பு உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம், இந்த வியக்கத்தக்க சாதனையை பிரக்ஞானந்தா செய்து முடித்துள்ளார். மேலும் படிக்க
Governor RN Ravi: “ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்” – ஆளுநர் ஆர்.என்.ரவிஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் கோயில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் தரிசனம் செய்வதற்காக இன்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்துள்ளார். மேலும் படிக்க

Admk Former Minister Jeyakumar Says Greatest Of All Time MGR Did Jayakumar Indirectly Attack Actor Vijay – TNN | என்றைக்கும் எம்ஜிஆர்தான் ‘GOAT’
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இதனை அடுத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
”கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (Greatest of All Time) என்பது போல இன்றும் என்றும் மக்கள் மனதில் இருப்பவர் எம்.ஜி.ஆர். 1967 இல் வெற்றி பெற்ற அண்ணாவை வாழ்த்த சென்றவர்களிடம், இதற்கு பரங்கிமலை தொகுதிக்கு சொந்தமானவரான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான் காரணம் என்று தெரிவித்தார்.
அண்ணாவின் கொள்கை லட்சியங்களை பின்பற்றி அண்ணாவிற்கு அடுத்தபடியாக திரைப்படங்களில் கழகக் கொடியை எல்லாம் காட்டி, பட்டி தொட்டி எல்லாம் பரப்பி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றியடைய செயல்பட்டவர். 1972- ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்ஜிஆர் பிரிந்து பல அடக்குமுறைகளை கடந்து திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பித்ததே திமுக என்ற தீய சக்தியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்று தான். ஐ .நா வால் போற்றப்படக்கூடிய சத்துணவு திட்டம், ஒரு விளக்கு மின்சாரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார். கோப்புகளில் தமிழில் கையெழுத்து போடுவது போன்ற பல திட்டங்களை கொண்டு வந்தார் எம் ஜி ஆர்.
திரைப்பட துரையிலும் அரசியல் துறையிலும் என பன்முகதிறமை கொண்டவர். முடி சூடா மன்னனாக இன்றும் பட்டி தொட்டி எல்லாம் வாழ்ந்து வரும் மாபெரும் இமாலய புகழ்பெற்ற தலைவர். எம் .ஜி .ஆரின் 107- வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் பட்டி தொட்டி எல்லாம் அவரின் பாடல்கள் ஒலிக்கின்றன. இன்று எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும் அவை நம் மனதில் நிற்பதில்லை.
சமுதாயத்தை சீரழிக்கும் கருத்துக்கள், பணம் மட்டும் போதும் சமூகம் சீரழிந்தால் பரவாயில்லை என்ற வகையில் நடிகர்கள் நடிக்கும் நிலையில் மக்களுக்கு சிறந்த கருத்துக்களை அளிப்பேன் என்று நூற்றுக்கும் மேற்பட்ட படத்தில் நடித்தார் எம்ஜிஆர்.இன்றும் தமிழர்கள் மட்டும் இல்லாமல் உலக அளவில் அனைவரும் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் கழகம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆயிரத்தில் ஒருவராக எம்ஜிஆர் திகழ்வார் என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு, எம் ஜி ஆர் உலக அளவில் போற்றப்படும் மாபெரும் தலைவர் அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.
மேலும், இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு விருப்பப்படுபவர்கள் போலாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜாதி மதம் கடந்தது. இராமர் கோவிலுக்கு நான் செல்லவில்லை. என்னை பொருத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் இறைவன் எங்கும் இருக்கிறான் என்று கூறினார்.
துக்ளக் நிகழ்ச்சியில் குருமூர்த்தி, ரஜினிகாந்த், அண்ணாமலை முதலமைச்சராக வேண்டும் என்று விரும்பியதாக தெரிவித்தது குறித்த கேள்விக்கு, இது ஒரு அறையில் பேசிய விஷயம் ரஜினிகாந்த் சபையில் தெரிவிக்கட்டும். நான் பதில் சொல்கிறேன். அண்ணாமலை தமிழகத்திற்கு முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான் என்றார்.
சனாதான திருவிழா என்று ஜல்லிக்கட்டு பற்றி மத்திய அமைச்சர் சொல்லியுள்ளார்? என்பது குறித்த கேள்விக்கு,
தமிழர்களின் அடையாளம் இரண்டு ஒன்று வீரம் இன்றொன்று காதல் அதை மாற்ற முடியாது, வீரம் இல்லாதவர் காதல் இல்லாதவர் தமிழர்கள் இல்லை. ஜல்லிக்கட்டு என்பது வீரம் நிறைந்தது, அரசியலில் ஓடாத காளைகள் எத்தனையோ இருக்கிறது, அதனிடம் நான் மோதுவதில்லை, உண்மையான காளை கொண்டு வாருங்கள் இப்போது கூட மோதுகிறேன் என்று பதிலளித்தார்.
K.S. Chithra Faces Backlash For Social Meida Video Post On Ayodhya Event | K.S.Chithra: அயோத்தி ராமர் கோயில் விவகாரம்! பாடகி சித்ராவுக்கு குவியும் ஆதரவும், எதிர்ப்பும்
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் ராமரை மனதார நினைத்து வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தார். பிரதமர் மோடி , ராமர் கோயிலை திறந்து வைக்க உள்ள நிலையில் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பாடகி சித்ரா வேண்டுகோள்:
இந்நிலையில் தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி கே.எஸ். சித்ராவும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் தினத்தன்று ராம மந்திரத்தை ஜெபித்து வழிபடுமாறு வீடியோ ஒன்றை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதியன்று நண்பகல் 12.20 மணிக்கு “ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம” எனும் ராமரின் மந்திரத்தை அனைவரும் உச்சரித்து வழிபடுங்கள். அன்று மாலை ஐந்து முக விளக்குகளை வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஏற்றி வைத்து ராமரின் நல்லாசியை பெறுங்கள் என கூறி ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ என உச்சரித்து வீடியோவை முடித்து இருந்தார். கே.எஸ். சித்ராவின் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தாலும், ஒரு சிலர் இதை வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
சித்ராவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்:
அரசியல் நிலைப்பாட்டுக்கு இந்த வீடியோ மூலம் ஆதரவு தெரிவித்துள்ளார் சித்ரா என ஒரு சில விமர்சனங்களை எழுப்பும் நிலையில் அதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன். “ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று ராம நாமத்தை ஜெபித்து வீட்டில் விளக்கேற்றுங்கள் என கூறியது ஒரு குற்றமா? அல்லது கேரளாவில் உள்ளவர்கள் ராம நாமத்தை ஜெபிப்பது குற்றமா? இது போன்று அவதூறு செய்திகளை பரப்புபவர்கள் மீது ஏன் கேரளா அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது?” என சித்ராவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
மேலும் பாடகர் சூரஜ் சந்தோஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் சித்ராவை சாடி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ” இன்னும் எத்தனை அடையாளங்கள் அழிக்கப்பட உள்ளன. சித்ரா போன்ற இன்னும் எத்தனை முகங்கள் வெளிவர உள்ளன. வரலாற்றை மறந்துவிட்டு அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்” என குறிப்பிட்டு இருந்தார். அதே சமயம் பாஜக தலைவர் சுரேந்திரன், பாடகர் வேணுகோபால் என பிரபலங்கள் பலரும் சித்ராவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
Prime Minister Modi Tributes Paid M.G. Ramachandran On His Birthday
எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழா
தமிழ்நாடு முழுவதும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் திரு உருவப்படத்திற்கும், சிலைக்கும் அவரது ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள் என பலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி வாழ்த்து:
தலைசிறந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார். அவரது திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு…
— Narendra Modi (@narendramodi) January 17, 2024மக்களுக்காக உழைத்தவர்:
அந்த வகையில் பிரதமர் மோடி எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது (எக்ஸ்) ட்விட்டர் பக்கத்தில், “தலைசிறந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார்.
அவரது திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது.” என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை:
தமிழக முன்னாள் முதலமைச்சர், பாரதரத்னா அமரர் எம்ஜிஆர் அவர்கள் பிறந்த தினம் இன்று. ஏழை எளிய மக்கள் துயரங்களைப் புரிந்து, நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர். பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்தியவர். மறைந்தாலும், மறையாப் புகழோடு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்… pic.twitter.com/Th9rTnhhPB
— K.Annamalai (@annamalai_k) January 17, 2024தமிழக முன்னாள் முதலமைச்சர், பாரதரத்னா அமரர் எம்ஜிஆர் பிறந்த தினம் இன்று. ஏழை எளிய மக்கள் துயரங்களைப் புரிந்து, நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர். பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்தியவர். மறைந்தாலும், மறையாப் புகழோடு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர், கடையேழு வள்ளல்கள் குறித்தும், மகாபாரத இதிகாசம் சொல்கிற வள்ளல் கர்ணன் குறித்தும் நாம் கதைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம். ஆனால், அவர்களின் வள்ளல் தன்மை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று, மக்கள் தாங்கள் வாழ்கிற காலத்தில் ஒரு… pic.twitter.com/iV5gjBCHIw
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 17, 2024அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர், கடையேழு வள்ளல்கள் குறித்தும், மகாபாரத இதிகாசம் சொல்கிற வள்ளல் கர்ணன் குறித்தும் நாம் கதைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம். ஆனால், அவர்களின் வள்ளல் தன்மை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று, மக்கள் தாங்கள் வாழ்கிற காலத்தில் ஒரு தெய்வத்தை தரிசித்தார்கள் என்றால் அது நமது பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் அவர்களைத்தான், ஏழை, எளிய மக்கள் உள்ளம் குளிர்ந்ததும் புரட்சித் தலைவரின் ஆட்சியில்தான். அவர்கள் குடில்களில் மின்சார விளக்குகள் எரிந்ததும் அவரின் பொற்கால ஆட்சியில்தான்.
புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் தீய சக்திகளை தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த, கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் சூளுரை ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். புரட்சித் தலைவரின் பெரும் புகழ் இன்னும் பல்கிப் பெருகி வளரும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர் மக்கள் உள்ளங்களில் மாமனிதராய், மனிதருள் மாணிக்கமாய் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார் என்பதில் எள் அளவும் ஐயமில்லை என வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல தலைவர்களும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Tamilnadu Governor Rn Ravi Sami Dharshan At Sri Rangam Temple In Trichy – TNN | Governor RN Ravi: ‘ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்”
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் கோயில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் தரிசனம் செய்வதற்காக இன்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்துள்ளார். அவருக்கு கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவருக்கு அங்கு இருந்த பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், தாயார் சன்னதி வந்து தாயாரை வழிபட்டார். அதனை தொடர்ந்து
கோவில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் அவரும் அவரது மனைவியும் ஈடுபட்டனர். ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தார். ஆளுநரின் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
“Along with countless devotees of Prabhu Sri Ram prayed at Sri Ranganathswami, Sri Rangam, for the well-being of all. Did sewa- cleaning at the temple premises. Further experienced the intensity of Sri Ram Bhakti at the Kambar Mani Mandapam, where the great Scholar-poet and… pic.twitter.com/d9x0Z6tZNQ
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 17, 2024ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோயில் மட்டுமல்ல பொது இடங்களிலும் தூய்மை பேண வேண்டும் என தெரிவித்தார்.
An Orange Alert Has Been Issued For The Next Two Days Due To Heavy Fog In Northern States | Orange Alert: வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்! ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை
கடும் பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Dense to very dense fog conditions likely to continue to prevail over North India during next 3 days and improve thereafter.@moesgoi @DDNewslive @ndmaindia @NHAI_Official pic.twitter.com/zkQ3TOWL1v
— India Meteorological Department (@Indiametdept) January 17, 2024ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிமூட்டம் இருக்கும். குறிப்பாக வட மாநிலங்களில் அதிகமாக இருக்கும். எதிரில் வருபவர்கள் கூட தெரியாத அளவு கடும் பனிமூட்டம் இருக்கும். இதனையடுத்து கடந்த சில வாராங்களாக வட மாநிலங்களில் கடும் பனி நிலவுகிறது. ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவால் ஆரஞ்ச் அலர்ட்:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த 5 நட்களுக்கு வடமேற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் வெப்பநிலை குறைந்து பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் வாரியாக ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், டெல்லி, சண்டிகர், பஞ்சாப், ஹரியானா ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. உத்திர பிரதேசத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்துள்ள நிலையில், வரும் நாட்களில் பனிப்பொழிவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தலைநகர் டெல்லிக்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரயில்கள் தாமதம்:
வானிலை துறையின் முன்னறிவிப்பின்படி, தில்லியில் இன்றும் நாளையும் காலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் கூடிய வானம் அடர்ந்த பனிமூட்டத்துடன் காணப்படும். அதன்பிறகு, டெல்லியில் ஜனவரி 21-ம் தேதி வரை தெளிவான வானத்துடன் மிதமான மூடுபனி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகரில் கடந்த சில நாட்களாக அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. திங்கள்கிழமை, டெல்லியில் 200 மீட்டருக்கும் குறைவான தூரம் வரை மட்டுமே பார்க்கும் அளவு கடும் பனி இருந்தது. கடந்த நான்கு நாட்களாக, குறைந்தபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸாகவும், கடந்த சனிக்கிழமை 3.6 டிகிரி செல்சியஸாகவும், வெள்ளிக்கிழமை 3.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. அடர்த்தியான மூடுபனி காரணமாக திங்கள்கிழமை டெல்லி செல்லும் ரயில்கள் 18 மணிநேரம் தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Vidaa Muyarchi Update : பொங்கல் பண்டிகைக்கு அல்வா போன்ற அப்டேட் கொடுத்த நெட்ஃபிளிக்ஸ்!
Vidaa Muyarchi Update : பொங்கல் பண்டிகைக்கு அல்வா போன்ற அப்டேட் கொடுத்த நெட்ஃபிளிக்ஸ்!
MGR 107th Birthday Celebration At Tindivanam AIADMK MP CV Shanmugam Was Showered With Flowers – TNN | MGR Birth Day: எம்ஜிஆர் 107வது பிறந்தநாள் விழா
அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக எம்பி சி.வி. சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழா
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் திரு உருவப்படத்திற்கும், சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டிவனம் காந்தி சிலை அருகே மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் தலைமையில் எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் நடைபெற்றது. இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி சண்முகம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிக்கை :
5 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள்
அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் 5 நாட்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் நடைபெற உள்ளன. எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் 17-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதிமுக சார்பில் 19, 20 ,21, 27, 28ஆகிய 5 நாட்களில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், கட்சி ரீதியில்செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலும், அதிமுக செயல்பட்டுவரும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Rishabh Pant In Practice Session At Nets In Chinnaswamy Stadium Latest Tamil Sports News
வருகின்ற ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு இப்போதே பல அணிகள் தயாராகிவருகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை எந்த 11 பேர் விளையாட போகிறார்கள் என்பது இன்னும் பெரிய கேள்விகுறியாகவே உள்ளது.
எப்போது வருவார் ரிஷப் பண்ட்?
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடமும் ஊசலாடி வருகிறது. இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் என பலரை முயற்சித்தும் ரிஷப் பண்ட் இடத்தை இன்னும் யாராலும் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதையடுத்து, ரிஷப் பண்ட் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றன.
ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்று கேள்வி உலா வரும் நிலையில், இந்திய அணியுடன் ரிஷப் பண்ட் நேற்று பயிற்சி மேற்கொண்டார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கு தயாராகும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு சென்றடைந்தது. நேற்று, சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய அணி வீரர்களுடன் காணப்பட்டார்.
இந்திய அணியுடன் ரிஷப் பண்ட் :
விராட் கோலி, ரிங்கு கிங்குடன் ரிஷப் பண்ட் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரிஷப் பண்ட் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அப்போது, சக இந்திய வீரர்களை சந்திக்க வந்திருந்தார்.
Virat Kohli and Rishabh pant at Chinnaswamy Stadium 😍🔥 pic.twitter.com/VnjwvBOnTo
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) January 16, 2024ரிஷப் பண்ட் கடைசியாக எப்போது விளையாடினார்..?
கடந்த 2022 ம் ஆண்டு டிசம்பரில் நடந்த கார் விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அதன்பிறகு, எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. 2022 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் சென்றது. இந்த தொடரிலேயே ரிஷப் பண்ட் கடைசியாக விளையாடினார். வங்கதேச சுற்றுப்பயணத்திற்கு பிறகு, டிசம்பர் 30ம் தேதி அன்று காலை, பண்ட் வேகமாக ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ரிஷப் பண்ட்டின் முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்தார்.
Rishabh Pant in practice session at nets in Chinnaswamy stadium.Can’t wait to see him on the field – Comeback soon, Champion! pic.twitter.com/RqF8Ab6cYI
— CricketMAN2 (@ImTanujSingh) January 16, 2024ஐபிஎல் 2024ல் திரும்புகிறாரா?
வருகின்ற மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் 2024 மூலம் மீண்டும் ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் களம் மிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி களமிறங்கினால் ஐபிஎல் 2024 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் அவரை பார்க்கலாம். வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக அவர் மீண்டும் உடற்தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அணிக்காக ரிஷப் பண்ட் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதன்படி, இந்தியாவுக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் 2271 ரன்களும், 30 ஒருநாள் போட்டிகளில் 865 ரன்களும், 66 டி20 போட்டிகளில் விளையாடி 987 ரன்களும் எடுத்துள்ளார்.
Tamil Nadu Tops In Start-up Category, Chief Minister Stalin On Dravidan Model
CM Stalin: ஸ்டார்ட்-அப் பிரிவில் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தேர்வானதற்கு, திமுக ஆட்சியில் செய்த சீர்திருத்தங்களே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விருது வென்ற தமிழ்நாடு
மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியான 2022ம் ஆண்டிற்கான தரவரிசைப்பட்டியலில் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், மிகச் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்தது. அதேநேரம், ஸ்டார்ட் நிறுவனங்களுக்கு உகந்த சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக, தமிழ்நாடு தேர்வாகியுள்ளது.
#StartUp தரவரிசைப் பட்டியலில்,கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது #DravidianModel ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad… https://t.co/hNapJChxvR
— M.K.Stalin (@mkstalin) January 17, 2024முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஸ்டார்ட்-அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது #DravidianModel ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது! TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் அன்பரனுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்! இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
5 பிரிவுகளில் விருது வென்ற மாநிலங்கள்:
மிகச் சிறந்த மாநிலங்கள்: குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம்
சிறந்த மாநிலங்கள்: மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, அருணாசல பிரதேசம், மேகாலயா
முதன்மை மாநிலங்கள்: ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், திரிபுரா
ஆர்வம் காட்டும் மாநிலங்கள்: பீகார், அரியானா. அந்தமான் -நிகோபார் தீவுகள்,நாகாலாந்து
முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள்: சத்தீஸ்கர், டெல்லி. ஜம்மு-காஷ்மீர், சண்டிகர்,தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக்
விசிக சட்டமன்ற உறுப்பினருக்கு வந்த சிக்கல்..! பொருட்படுத்தாதீர்கள் என எம்எல்ஏ விளக்கம்..!
ஆன்லைன் மோசடிகள்
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக நடைபெறும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நூதன வழியில் நடைபெறும் ஆன்லைன் மோசடியால் பல தரப்பட்ட மக்களும் பாதிப்படைந்து வருகிறது. ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் தொடங்கி உச்ச அதிகாரத்தில் இருக்கும் நபர்களுக்கும் இதில் விதிவிலக்கு இல்லை.
எம்.எல்.ஏ. பெயரில் மோசடி:இந்தநிலையில் தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பாலாஜி பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும், அரசியல் பிரமுகர்கள் இவரும் ஒருவர். சாதாரண தொண்டருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை கூட சமூக வலைதளத்தில், பதிவேற்றுவதால் அவருக்கு தனி ரசிகர் கூட்டம் சமூக வலைதளத்தில் உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று முதல் அவரவருடைய பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டு , பலருக்கு நட்பு அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று வாட்ஸ் அப்பிலும் அவரது புகைப்படம் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட சில எண்களில் இருந்து பணம் கேட்டு வருகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் விளக்கம்
முதலில் இதுதொடர்பாக எஸ். எஸ். பாலாஜி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் இவை அனைத்தும் போலியானது என பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ” தோழர்களுக்கு ஒரு அவசர செய்தி எனது பெயரில் வாடஸ் பல பில் “76314 48237” என்கிற எண்ணில் இருந்தோ அல்லது 8052980169 என்கிற எண்ணுக்கு பணம் அனுப்ப சொல்லி மெசேஜ்கள் வருவதாக அறிகிறேன். தயவு செய்து அதனை பொருட்படுத்தாதீர்கள் ” என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போலி கணக்கு மோசடி
இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்த மோசடி நடைபெற்று இருக்கலாம் அல்லது தங்கள் நண்பர்களுக்கு இதே விதமான மோசடிகள் நடைபெற்று இருக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை. முகநூலில் பப்ளிக்கில் ( PUBLIC ) உள்ள, கணக்குகளில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து, அதே பெயரில் மற்றொரு முகநூல் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் அனைவருக்கும் நட்பு அழைப்பு கொடுப்பார்கள். நாமும் நமக்கு தெரிந்தவர்தான் நட்பு அழைப்பு தருகிறார். அவருடைய பழைய அக்கவுண்ட் முடக்கப்பட்டதால், இப்படி நடந்திருக்கலாம் என அக்சப்ட் ( accept ) செய்வோம்.
நாம் அக்சப்ட் செய்த அடுத்த சில நிமிடங்களில், அந்த அக்கவுண்டில் இருந்து நமக்கு மெசேஜ் வரும். நான் வெளியில் சொல்ல இயலாத துன்பத்தில் இருக்கிறேன் அல்லது எனது உறவினர்களுக்கோ, அம்மா, அப்பாவிற்கு நெருங்கியவருக்கு உடல்நிலை சரியில்லை. என்னுடைய பழைய தொலைபேசி தொலைந்து விட்டது. என ஏதாவது ஒரு கதையை கூறி நம்மிடம் பணத்தைக் கேட்பார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகை இல்லை என்றாலும் இருக்கும் தொகையை அனுப்புமாறு நம்மிடம் கேட்டு பணத்தை பெற்றுக் கொள்வார்கள். அதன் பிறகு அந்த ஐடி ஒரு குறிப்பிடத் தொகையை மக்களிடம் ஏமாற்றி பெற்றுக் கொண்டு கிளம்பி விடும். இது போன்ற சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசியல்வாதி முதல் அதிகாரி வரை
இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் அரசின் மதிப்பு தக்க பதவியில் இருப்பவர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்து இருக்கின்றனர். இது தொடர்பாக பல புகார்களும் தரப்பட்டாலும், அதில் குறைந்த அளவு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Alanganallur Jallikattu 2024 Actor Arun Vijay Soori Neeya Nana Gopi Director Al Vijay Celebrities Visit
தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெறும். கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும் என இளைஞர்கள் மெரினாவில் கூடி புரட்சி செய்தனர்.
அதன் வழி தொட்டு இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும் வெகு சிறப்பாக ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. இந்தநிலையில், தற்போது உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார்.
பிரபலங்கள் பங்கேற்பு:
மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு திரை பிரபலங்கள் படையெடுத்து வருகின்றன. அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ’மிஷன்’ படத்தின் நடிகர் அருண் விஜய் வந்தார். படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரது வலது கை மற்றும் வலது காலில் கட்டு போடப்பட்டு இருந்தது.
அதையும் பொருட்படுத்தாது நடிகர் அருண் விஜய் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தார். தொடர்ந்து, மிஷன் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜயும் வருகை பிரிந்து கண்டுகளித்தார்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த நடிகர் அருண் விஜய் அளித்த பேட்டியில், ”தமிழர்களின் வீர விளையாட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல் முறையாக வந்து பார்க்கிறேன். மாடுபிடி வீரரை போல ஒரு கதைக்களம் அமைய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. தமிழரின் பாரம்பரியம் கொண்டாடப்பட வேண்டும். மிஷன் படத்தின் ப்ரமோசனுக்காக மதுரை வந்த இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.
நடிகர் சூரி, நீயா நானா கோபி பங்கேற்பு:
பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற நடிகர் சூரி, இன்று நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையும் பார்வையிட்டு வருகிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா, நானா நிகழ்ச்சியின் பிரபல தொகுப்பாளர் கோபியும் தனது மகளுடன் பார்வையிட்டு வருகிறார். மேலும், இந்த விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., , சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) ,ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), தமிழரசி (மானாமதுரை) அவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பரிசுகள்:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள், காளைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கோவை, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் வந்துள்ளனர்.
இந்த போட்டியில் சிறப்பாக களம் காணும் முதல் மாடிபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசாகவும், 2ஆவது இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு பைக் பரிசாகவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முடிவில் 3ஆவது பரிசு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று விழா கமிட்டி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISRO GSLV: அடுத்த சாதனைக்கு தயாரான இஸ்ரோ! ஜி.எஸ்.எல்.வி எப்போது விண்ணில் செலுத்தப்படுகிறது? முழு விவரம்

இந்த ஆண்டு தொடக்கம் முதலே இஸ்ரோ தரப்பில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் மற்றும் FCPS செல்ல விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

அடுத்த மாதம் ஜி.எஸ்.எல்.வி:

பூமியிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் விண்ணில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்யும் செல்லில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதால் தண்ணீர் மற்றும் வெப்பம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 6 ஆம் தேதி சூரியனை ஆராயும் நோக்கில் விண்ணிற்கு செலுத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக எல்1 எனப்படும் லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது. இப்படி இந்த ஆண்டு தொடக்கம் முதலே அடுத்தடுத்து சாதனை இஸ்ரோ படைத்து வருகிறது. அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

இன்சாட் 3டிஎஸ்:

இதில் முக்கியமாக இன்சாட் 3டிஎஸ் என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது. அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் ஜி.எஸ்.எல்.வி எப்14 ராக்கெட் திரவ உந்துசக்தியை பயன்படுத்தும் மேம்பட்ட ராக்கெட்டாகும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தற்போது ராக்கெட்டில் செயற்கைக்கோள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகல் தெரிவித்துள்ளனர். இந்திய வானிலை அமைப்புக்கு (ஐ.எம்.டி.) சொந்தமானது ‘இன்சாட் -3 டிஎஸ்’ செயற்கைகோள். காலநிலை கண்காணிப்பு செயற்கைகோள்களின் தொடரின் ஒரு பகுதியாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதுடன் மற்றும் உந்துவிசை அமைப்பு ஒத்துழைப்பு ஆகிய அர்ப்பணிக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைகோள்களை உள்ளடக்கியது.

இன்சாட் 3 டி மற்றும் இன்சாட் 3 டிஎஸ் ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இன்சாட் 3டிஎஸ் விண்னில் செலுத்தப்பட உள்ளது.

கடந்த மே மாதம் 29 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி எப்12 ராக்கெட் மூலம் 2, 232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ் 1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது 8 மாதங்களுக்கு பின் மீண்டும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதிக திறன் கொண்ட இந்த ராக்கெட் 3 நிலைகளுடன் கிரையோஜெனிக் திரவ உந்துசக்திகளைப் பயன்படுத்துகிறது. பி.எஸ்.எல்.வி ராக்கெட் போல் சுலபமாக இல்லாமல் சற்று சிக்கலாக இருந்தலும் இது அதிக எடையை சுமந்து செல்லும்.

Wherever You Can Go To Celebrate Pongal In The Outskirts Of Chennai
உலக அளவில் பல்வேறு வகையான அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கையையும் உழவையும் போற்றும் திருநாள். இதில் நான்காவது நாளான காணும் பொங்கல் கொண்டாடப்படும் முறையும் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும் காணலாம்.
காணும் பொங்கல்:
பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை காணுதல் குடும்பப் பெரியவர்களிடம் ஆசி பெறுதல் போன்றவைகள் காணும் பொங்கல் அன்றைக்கு நடைபெறும். உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இந்தநாளில் நடைபெறும்.கன்னிப் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமணம் ஆகாத பெண்கள் ஒரு தட்டில் பழங்கள், தேங்காய், பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களுடன் அருகில் இருக்கும் ஆறு அல்லது குளங்களுக்கு செல்வார்களாம். ஆற்றங்கரையில் எல்லோரும் சேர்ந்து கும்மியடித்து பாடி இறை வழிபாடு நடத்துவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. காணும் பொங்கல் அன்று சிலர் நோன்பு கடைப்பிடித்து சிறப்பு வழிபாடு செய்வதும் உண்டு. இது உடன்பிறந்தவர்களின் நலனுக்காக செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. காணும் பொங்கல் அன்று வீட்டில் பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடு நடத்துவதையும் சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர்.
நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்
சென்னை பொறுத்தவரை மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட சென்னையில் உள்ள பல்வேறு கடற்கரைக்கு சென்று தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கலாம். சுமார் சென்னை கடற்கரை பகுதியில் மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூட்டத்தை பொறுத்து போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு வர வேண்டும் என்று நினைத்தால், கோவளம் இருக்கிறது. அதேபோன்று சிற்பங்களை ரசித்துக்கொண்டே கடற்கரையின் அழகை பார்க்க மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரலாம்.
மகாபலிபுரத்தில் ஏற்பாடுகள் என்ன ?
மகாபலிபுரத்தை பொருத்தவரை செங்கல்பட்டு மாவட்டம் போலீஸ் சார்பில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரம் புறவழிச் சாலை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர் பகுதிக்கு உள்ளே செல்வதற்கு தனியாக மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா?
பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணும் பொங்கலை வண்டலூரில் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் காணும் பொங்கலை முன்னிட்டு 40,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கூட்டம் கூடுவதை தடுக்க கியூ ஆர் குறியீடு வசதியுடன் கூடிய 10 டிக்கெட் கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை உடனுக்குடன் ஸ்கேன் செய்து உள்ளே அனுப்ப ஏழு ஸ்கேனிங் எந்திரங்கள் மற்றும் திட்டங்கள் 20 இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதி, சிறுவர்கள் காணாமல் போனால் எளிதாக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டுதல், மருத்துவ குழு, தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 100 வனத்துறை அதிகாரிகள் 100 காவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுபோக தன்னார்வலர்கள் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்ற உள்ளனர்.ப்ளூ பீச்
நீல கடற்கரை என அழைக்கக்கூடிய ப்ளூ பீச் கோவளம் மற்றும் முத்துக்காடு பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. பார்ப்பதற்கே வித்தியாசமாகவும், அதே வேளையில் சுத்தமாகவும் இருக்கக்கூடிய இந்த பீச்சையும் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம். சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் கோவளம் அருகே அமைந்துள்ளது. மற்ற கடற்கரையை காட்டிலும் இங்கு குழந்தைகளுடன் செல்வது பாதுகாப்பாக கருதப்படுகிறது.
படகில் பயணிக்க ஆசையா ?
படகில் பயணிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் முத்துக்காடு அரசு படகு குழாம், முதலியார் குப்பம் படகு குழாம் ஆகிய இடத்திற்கு செல்லலாம்.
பறவைகளை பார்க்க ஆசையா ?
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சென்று வரலாம். தற்பொழுது பறவைகள் நிறைந்து காணப்படுவதால் நிச்சயம் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சென்று வந்தால் மகிழ்ச்சி தரும். அதே போன்று பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வரலாம். இதுபோக சென்னை புறநகர் பகுதியில் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று வரக்கூடிய இடங்கள் உள்ளது.
போலீசார் பாதுகாப்பு பணி
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சுமார் 18,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Palamedu Jallikattu: "சாதி பெயர்லாம் சொல்ல மாட்டோம்" பாலமேடு ஜல்லிக்கட்டில் அசத்திய விழா கமிட்டி!

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும் வெகு சிறப்பாக ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. இந்தநிலையில், தற்போது உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஜாதிப்பெயரா..?

இந்தநிலையில், நேற்று மதுரையை அடுத்த பாலமேட்டில் வெகுவிமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நேற்று, காளைகள் அவிழ்க்கும்போது ஒரு குறிப்பிட்ட நபர் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதியின் பெயரை குறிப்பிடுப்படி கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த விழா கமிட்டியாளர்கள், வெறும் பெயரை மட்டும் கூறுவோம். ஜாதி பெயரை எல்லாம் சொல்லமாட்டோம். தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுபடி இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. (வீடியோ: நன்றி சன் செய்திகள்..)

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ஜாதி பெயர் தவிர்க்கப்பட்டிருப்க்கிறது பாலமேட்டில்.

நீதி மன்றத்திற்கும் தமிழ் நாடு அரசிற்கும் பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். pic.twitter.com/ZBz9oDWrM3

— தோழர் சிவா ★ (@Sivaa_Comrade) January 16, 2024

முன்பே உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை:

மதுரை சேர்ந்த செல்வக்குமார் என்பது ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது சாதி, மத ரீதியாக நடத்தக்கூடாது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பெயரை தவிர்க்க வேண்டும். காளைகளை அவிழ்க்கும்போது அதன் உரிமையாளர்களின் பெயரோடி சாதி பெயர் குறிப்பிட கூடாது என தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜல்லிக்கட்டு போட்டியின்போது சாதி பெயரை பயன்படுத்த கூடாது என்உம், காளைகளை அவிழ்க்கும்போது காளையின் உரிமையாளர் பெயரோடு சாதிப் பெயரை கூறக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

ஜாதிப்பெயரை பயன்படுத்தக்கூடாது என கடந்த 2019ம் ஆண்டிலேயே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இதை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றாதநிலையில், இந்தாண்டு பின்பற்றியது பல பேரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

என்ன நடந்தது பாலமேடு ஜல்லிக்கட்டில்..?

மாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு போட்டியானது நேற்று காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. முதலில் கிராம காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 840 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களமாடி 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற மாடுபிடி வீரருக்கு நிசான் கார் மற்றும் APACHE பைக் பரிசும், பரிசுகோப்பையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாவது பரிசாக APACHE பைக் பரிசும் வழங்கப்பட்டது.

போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளையான புதுக்கோட்டை மாவட்டம் இராயவயல் சின்னக்கருப்பு மாட்டின் உரிமையாளருக்கு நிசான் கார் பரிசாகவும், 2 ஆம் இடத்தில் சிறப்பாக களம் கண்ட தேனி மாவட்டம் கோட்டூர் அமர்நாத் என்பவரது காளைக்கு பசுங்கன்றுடன் கூடிய நாட்டுபசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மற்றும் சிறந்த காளைகளுக்கும் ,, குக்கர், எல்.இ.டி TV, , தங்ககாசு, கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டது.

Director Thankar Bachan Requested TN Government If They Give Something Like This To Player Instead Of A Car | Thankar Bachan: ‘மாடுபிடி வீரர்களுக்கு கார் வேண்டாம், இதை கொடுங்க ‘
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. காருக்கு பதிலாக மாடுபிடி வீரர்களுக்கு இதுபோன்ற ஒன்றை கொடுத்தால் அவர்களது பொருளாதாரமாவது முன்னேறும் என தமிழ்நாடு அரசுக்கு இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார்.
மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசு:
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ எத்தனை வீரர்கள் பலியானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தனியார் வழங்கும் அண்டா,குண்டா,நாற்காலி, மிதிவண்டி ,பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற பரிசுகளை வழங்கி வருவது நடைமுறையில் இன்னும் உள்ளதை நாம் காண்கிறோம். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் பரிசாக கார் தரப்படுகின்றது. இது அதைக்காட்டிலும் பரவாயில்லை என நாம் நினைத்தாலும் இவ்வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் இத்தகையப் பரிசுகள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது என்பதை மூன்று ஆண்டுகளாக நான் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டே வருகின்றேன்.
இந்த ஆண்டு பரிசுகளை அறிவிப்பதற்கு முன் ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் அந்த காரினைக்கொண்டு எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.மற்றவர்களால் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட மட்டும் தான் முடியும். ஆனால் நம் வீரர்களால் மட்டும்தான் உயிரைப் பணயம் வைத்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும்!
பொருளாதார உயர்வு:
திரைப்பட நடிகர்களை உண்மையான கதாநாயகனாக எண்ணிக்கொண்டு மதுவுக்கும் போதைப்பொருளுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கும் நம் இளைஞர்கள் கூட்டத்தில் இந்த வீரர்கள் மட்டும்தான் தமிழர்களாகிய நமது மானம் மரியாதையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அசல் வீரர்களை வளர்த்தெடுப்பதற்கும், பாதுகாப்பதற்கும் நாம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதனையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த நிலையில் தான் தனது முயற்சியின் மூலமாகவே பயிற்சி அடைந்து போட்டியில் பங்கேற்று நம் மானத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசு மனது வைத்தால் பரிசு பெரும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு தருவதுபோல் கோடிக்கணக்கு மதிப்பிலான பரிசுகளைத் இவ்வாண்டிலிருந்தே அறிவிக்கலாம். நம் மரபு விளையாட்டுக்கள் அத்தனையும் அழிந்து கொண்டிரும் நிலையில் இவ்வீரர்கள் இருக்கும் வரைத்தான் ஜல்லிக்கட்டு மாடுகளும் இருக்கும்! ஜல்லிக்கட்டு மாடு இல்லாமல் போனால் நம் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு இல்லாமல் அடியோடு அழிந்தே போகும்! நிலத்துடன் பிணைந்த இவ்வீரர்களின் பொருளாதாரம் உயரும் பொழுதுதான் அதற்கான பயிற்சியையும் ஊக்கத்தையும் அவர்களால் பெறவும் முடியும்.
உழவு கருவிகள்:
வீரர்களுக்கு உழவுத் தொழில் தொடர்பான நடவு, களை, பூச்சிக்கொல்லிகள் தெளிப்பான்,அறுவடைக்கருவிகள், மாடுகள் தந்தால் அவைகளை பயன்படுத்தியும்,வாடகைகளுக்கு விட்டும் பயன் அடைவார்கள். பொருளாதார முன்னேற்றத்தை அவர்களே அடையும் பொழுது கார் வாங்குவது என்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும். நாம் அனைவரும் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை அடையலாம்! அவர்களின் நலன் தமிழ் பண்பாட்டின் நலன் கருத்திற்கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது அவ்வீரர்களின் வாழ்க்கை முன்னேற்றம் காணும் விதமான இது போன்ற பரிசினைத் தந்து தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Mettur Dam: மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா? மக்களே தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 451 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 151 கன அடியாக குறைந்துள்ளது.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 70.92 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.49 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.34 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.07 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,004 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,879 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.28 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.35 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 489 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.

DPIIT Award: தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு! விருது வென்று அசத்தல்! மற்ற மாநிலங்கள் எப்படி?

DPIIT Award: 2022-ம் ஆண்டின் மாநிலங்களின் ஸ்டார்ட் அப் தரவரிசையில் ‘சிறந்த செயல்திறன்’ பிரிவில் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது.

சிறந்த மாநிலங்களுக்கான விருதுகள்:

மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், சந்தைப்படுத்துதலை எளிமையாக்குதல், நிதி ஆதரவு திட்டங்கள் உள்பட 25 காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மிகச் சிறந்த மாநிலங்கள், சிறந்த மாநிலங்கள், முதன்மை மாநிலங்கள், ஆர்வம் காட்டும் மாநிலங்கள், முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் என வரிசைப்படுத்தப்பட்டு இந்த தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த மாநிலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 5 பிரிவுகளில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் போட்டியிட்டன.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோவில்! தமிழ்நாட்டில் இருந்து சென்ற மரக்கதவுகள் – சுவாரசிய தகவல்கள் இதோ

தமிழ்நாடு 3வது இடம்:

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தொழில் தொடங்க உகந்த மாநிலங்களுக்கான பட்டியலை வெளியிட்டார். அதில், மிகச்சிறந்த மாநிலங்களுக்கான விருதுபட்டியலில் தொடர்ந்து நான்காவது முறையாக, குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்கள், முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.

தமிழ்நாடு மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, நிதி ஆதரவு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய பிரிவுகளில் தமிழ்நாடு மாநிலம் முழுமையாக 100 மதிப்பெண்களை பெற்றுள்ளது. முதல்முறையாக இந்த விருதுகள் அறிமுகப்படுத்தியபோது, முதல் இரண்டு ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடம் வகிக்கிறது. அதேபிரிவில் 2021ம் ஆண்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. இந்நிலையில் தான், மிகச்சிறந்த மாநிலங்களுக்கான விருதுபட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

இதையும் படிங்க: 21ம் தேதி ஸ்ரீரங்கம் வரும் பிரதமர் மோடி! இன்றே வீடு, வீடாக போலீசார் சோதனை!

மிக சிறந்த மாநிலங்கள்: குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம்

சிறந்த மாநிலங்கள்: மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, அருணாசல பிரதேசம், மேகாலயா

முதன்மை மாநிலங்கள்: ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், திரிபுரா

ஆர்வம் காட்டும் மாநிலங்கள்: பீகார், அரியானா. அந்தமான் -நிகோபார் தீவுகள்,நாகாலாந்து

முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள்: சத்தீஸ்கர், டெல்லி. ஜம்மு-காஷ்மீர், சண்டிகர்,தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக்

Latest Gold Silver Rate Today 17 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai | Latest Gold Silver Rate: தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! சவரனுக்கு ரூ.320 குறைந்தது
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,810 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 40 காசுகள் குறைந்து ரூ.77.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,400 க்கு விற்பனையாகிறது.
கோயம்புத்தூர்
“தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,810 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது.
மதுரை
மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,810 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது.
திருச்சி
திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,810 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது.
வேலூர்
வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,810 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது.
நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
மும்பை
மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,348 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820 ஆகவும் விற்பனையாகிறது.
புது டெல்லி
புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,348 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820 ஆகவும் விற்பனையாகிறது.
கொல்கத்தா
கொல்கத்தாவில் (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,348 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820 ஆகவும் விற்பனையாகிறது.
ஐதராபாத்
ஐதராபாத் நகரில் (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,348 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820 ஆகவும் விற்பனையாகிறது.
அகமதாபாத்
அகமதபாத் (Gold Rate in Ahmedabad) நகரில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,348 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820 ஆகவும் விற்பனையாகிறது.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தில் (Gold Rate Trivandrum) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,348 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820 ஆகவும் விற்பனையாகிறது.
பெங்களூரு
பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,348 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820 ஆகவும் விற்பனையாகிறது.
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூரில் (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,348 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820 ஆகவும் விற்பனையாகிறது.
புனே
புனே நகரில் (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,348 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820 ஆகவும் விற்பனையாகிறது.
Sai Pallavi Sister Pooja Kannan Introduces Her Life Partner Fans Wishes On Instagram
பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா தன்னுடைய திருமணம் பற்றிய அறிவிப்பை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மலையாள சினிமாவில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு, தமிழ் எனக் கலக்கி இன்று தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi). தற்போது தமிழில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் எஸ்.கே.21 படத்தில் நடித்து வருகிறார்.
சாய் பல்லவியின் செல்ல தங்கை
மற்றொருபுறம் சாய் பல்லவி அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அவரது தங்கையும் நடிகையுமான பூஜா கண்ணன் (Pooja Kannan).
‘சித்திரை செவ்வானம்’ எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா, இந்த ஒரு படத்துக்குப் பிறகு பெரிதாக படங்களில் கமிட் ஆகவில்லை. எனினும் தன் அக்காவுடனான செல்ஃபிக்கள் மற்றும் சோஷியல் மீடியா பதிவுகள் மூலம் தொடர்ந்து பூஜா லைம்லைட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில், தன் காதலர் மற்றும் வருங்கால வாழ்க்கைத் துணையை அறிமுகப்படுத்தி பூஜா கண்ணன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.
உணர்ச்சிகர பதிவு
“இந்த க்யூட்டான சிறிய பட்டன் வாழ்க்கையில் தன்னலமற்று எப்படி காதலிப்பது, காதலில் எப்படி திளைத்திருப்பது என எனக்கு கற்றுத் தந்துள்ளது. இவர் தான் வினீத். என் க்ரைம் பார்ட்னர்.. இப்போது என் வாழ்க்கை பார்ட்னரும் கூட” என உணர்வுப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார். மேலும் தங்கள் காதல் தருணங்களின் அழகான வீடியோ தொகுப்பினையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சாய் பல்லவியின் கோபம்
நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் என பல்வேறு வதந்திகள் கடந்த சில மாதங்களாக இணையத்தை ஆக்கிரமித்து வந்த நிலையில், வதந்தி பரப்பியவர்களை சாடி கடுகடுத்து பதிவிட்டு, சாய் பல்லவி தன் திருமண செய்திகளுக்கு முன்னதாக முற்றுப்புள்ளி வைத்தார்.
இச்சூழலில் சாய் பல்லவியின் தங்கை சர்ப்ரைஸாக யாரும் எதிர்பாராத வகையில் திருமண செய்தி சொல்லியிருப்பது இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு இணையவாசிகள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
IND vs AFG 3rd T20: டி20 உலகக் கோப்பைக்கு முன் இன்றே கடைசி போட்டி! ஆப்கானை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் டி20 உலகக் கோப்பை விளையாட உள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணி தனது கடைசி டி20 போட்டியில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இருப்பினும், இதற்குப் பிறகு, இந்திய வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல்.லில் விளையாடுவார்களே தவிர, எந்தவொரு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள்.

உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பு?

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை நிர்ணயிக்க விரும்புகிறது. இந்திய அணிக்கு சரியான வீரர்கள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெவ்வேறு வீரர்கள் தொடர்ந்து உள்ளே களமிறக்குவது, உட்காரவைக்கப்படுவதுமாய் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி எந்த 11 பேரை களமிறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தக் கேள்வி இன்னும் உள்ளது. உதாரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்றைய 3வது டி20 போட்டியில் இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை வைத்து விளையாட விரும்புகிறது. இருப்பினும், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் விளையாடும் 11-ஐ எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில்…

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது டி20யில் வெற்றி பெற்று தொடரில் ஆப்கானிஸ்தானை துடைத்தெறிய வேண்டும் என்று இந்திய அணி விரும்புகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அணி கிளீன் ஸ்வீப்பை தவிர்க்க விரும்புகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது போட்டி புதன்கிழமை (இன்று) பெங்களூரில் உள்ள என். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமா..?

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடும் 11 பேரில் நிறைய மாற்றங்களை செய்யப்படலாம் என நம்பப்படுகிறது. இன்றைய போட்டியில் அவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் அணிக்கு திரும்பலாம். அதன்படி,வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் வாய்ப்பு பெறலாம். மேலும், முகேஷ் குமாருக்குப் பதிலாக அவேஷ் கானும், ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனும் களமிறங்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்.

ஆப்கானிஸ்தான் அணி:

ரெஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக் மற்றும் ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

Top News India Today Abp Nadu Morning Top India News January 17 2024 Know Full Details | Morning Headlines: தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! வைரம் பதிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் மாடல்
காணும் பொங்கல் கொண்டாட்டம்! வரலாறு என்ன? சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புஇன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள். மேலும் படிக்க..
ஆரவாரத்துடன் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஏற்பாடுகளும், சிறப்பம்சமும் என்ன?தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள். பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. மேலும் படிக்க..
வாவ்.. வைரம் பதிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் மாடல்.. வியந்து பார்க்கும் பக்தர்கள்உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் படிக்க..
யாத்திரையின்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறாரா ராகுல் காந்தி?உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். மதகுருமார்களை தவிர 10,000 சிறப்பு விருந்தினர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் படிக்க..
வெற்றியா? தோல்வியா? சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்புதனக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் படிக்க..

PM Modi TN Visit: 21ம் தேதி ஸ்ரீரங்கம் வரும் பிரதமர் மோடி! இன்றே வீடு, வீடாக போலீசார் சோதனை!

வரும் 22 ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி 21 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் திறப்பு:

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.

கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வருகை:

ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படும் நிலையில், 21 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்னதாக 108 வைணவத் தளங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்காநாதரை தரிசித்து விட்டு அயோத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வருகை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், விமான நிலையத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழிதடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இன்றே ஸ்ரீரங்கத்தில் உள்ள வீடுகள், கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமர் கோயில் விழா அட்டவணை:

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஜனவரி 16ஆம் தேதி முதல் வழிபாடு தொடங்கும்.

ஜனவரி 17 ஆம் தேதி ஸ்ரீவிக்ரஹத்தின் வளாகத்தைப் பார்வையிடவும், கருவறையை சுத்தப்படுத்தவும் பூஜைகள் நடைபெறும்

ஜனவரி 18 ஆம் தேதி வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெறும்.

ஜனவரி 19 அன்று காலையில் பழம் மற்றும் தானியங்கள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

ஜனவரி 20-ம் தேதி காலையில் மலர்கள் மற்றும் ரத்தினங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், மாலையில் கிரித் ஆதிவாசமும் நடைபெறும்.

ஜனவரி 21ஆம் தேதி காலை சர்க்கரை, இனிப்பு, தேன், மருந்து கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

ஜனவரி 22 அன்று, நடுப்பகல் வேளையில், ராமர் சிலயின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் துணி அகற்றப்பட்டு, கண்ணாடி முன் வைத்து காட்டப்படும். இது முக்கியமான நிகழ்ச்சியாகும்.

Ajith Kumar: இந்தப் படத்தையா அஜித் தவறவிட்டார்? சிட்டிசன் பட இயக்குநர் சரவண சுப்பையா சொன்ன தகவல்!

சிட்டிசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமான “இதிகாசம்” படத்தில் அஜித் நடிக்க இருந்ததாக இயக்குநர் சரவண சுப்பையா தெரிவித்துள்ளார்.

சிட்டிசன்

அஜித் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது. கடந்த ஆண்டு இப்படம் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிதது. அஜித் குமாரின் கேரியரில் சிட்டிசன் மாறுபட்ட, அதே நேரத்தில் அவருக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த ஒரு திரைப்படம் . ஏற்கனவே வாலி படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்திலும் இரண்டு கதாபாத்திரங்களில் அவர் செய்தது ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது.

படம் முழுவதும் பல்வேறு வேஷங்களில் தோன்றுவார் அஜித். மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, நிழல்கள் ரவி, பாண்டியன் , தேவன், அஜய் ரத்னம் ஆகியோர் சிட்டிசனில் நடித்திருந்தார்கள். அரசியல் கதைகளத்தை மையமாக வைத்து த்ரில்லர் பாணியில் இந்தப் படத்தை இயக்கியிருப்பார் சரவண சுப்பையா.

படத்தின் இயக்குநரான சரவணா சுப்பையா இயக்கிய முதல் படம் சிட்டிசன். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்துடன் சேர்ந்து இதிகாசம் என்கிற படத்தை எடுக்க முடிவு செய்தார்கள். இதிகாசம் திரைப்படம் சாதியப் பிரச்சனையை மையப்படுத்திய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்தின் முயற்சி கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ‘மீண்டும்’, ‘ABCD’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். மேலும் ராவணன், விசாரணை, காஷ்மோரா, வேலைக்காரன், கோலி சோடா ஆகிய திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றினார் சரவண சுப்பையா .

இதிகாசம்

இந்நிலையில், முன்னதாக சாய் வித் சித்ராவுடனான நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சரவண சுப்பையா சிட்டிசன் படம் குறித்தும் இதிகாசம் படம் குறித்தும் பேசினார். “ சிட்டிசன் படம் வெளியானதும் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி எனக்கு ஒரு புதிய மாருதி ஸென் கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

அதே காரின் உள்ளே இரண்டு 25 ஆயிரம் கட்டுகள் இருந்தன. சக்கரவர்த்தி என்னிடம் இந்தக் காரை எடுத்துக் கொண்டு என்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் பார்த்துவிட்டு வரச்சொன்னார். நான் திரும்பி வந்ததும் இதிகாசம் படத்தின் வேலைகளைத் தொடங்கலாம் என்றார். அதே ப்ரோடக்‌ஷன் கம்பெனியில் இதிகாசம் படத்தின் விளம்பரமும் வெளியானது. சக்கரவர்த்தி என்மேல் அந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தார்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் சக்கரவர்த்தி அந்தக் காரை எனக்கு பரிசாக தரவில்லை என்றால், அஜித் சார் எனக்கு நிச்சயமாக ஒரு கார் பரிசாகக் கொடுத்திருப்பார். தனது பட இயக்குநர்களுக்கு கார் வாங்கிக் கொடுப்பதை அஜித் குமார் வழக்கமாக வைத்திருந்தார்” என்று இயக்குநர் சரவண சுப்பையா கூறியுள்ளார். அஜித் மற்றும் சரவண சுப்பையா கூட்டணியில் இதிகாசம் படம் வெளியாகியிருந்தால் அது நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கும் என்று அஜித் ரசிகர்கள் கருதுகிறார்கள்.

விடாமுயற்சி

தற்போது அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

Mamallapuram Sculptors Made 44 Huge Teak Wooden Doors For Ram Temple In Ayodhya, Uttar Pradesh
அயோத்தி ராமர் கோயில் – Ram Temple Ayodhya
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மரக்கதவுகள்:
உத்தரபிரதேச மாநிலம் ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில், ராமருக்கு தரை தளத்தில் இருந்து 44 வாசல்களை கொண்டு, ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் 1600 சிற்பக் கலைஞர்கள் மூலம் ரூ. 1800 கோடி மதிப்பில், பிரமாண்டமாக கோயில் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவரைகள் அமைக்கப்படுகிறது. உலக அளவில் உள்ள இந்து மக்கள் உள்ளிட்ட பலரும் வியந்து பார்க்கும் வகையில், அடுத்தாண்டு ஜனவரி 22ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த உத்திரபிரதேச அரசு தயாராகி வருகிறது.
இந்த நிலையில், கோயிலின் நுழைவு பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ராமர் – சீதை கருவறைகள், ராமரின் தம்பி லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு, 44 தேக்கு மரக்கதவுகளை மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையில், மாமல்லபுரம் மரச்சிற்ப கலைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர், அயோத்தி ராமர் கோயில் வளாகம் மற்றும் மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி பகுதியில் உள்ள மானசா சிற்பக்கலைக் கூடத்தில் இரவு, பகலாக அழகுற வடிவமைத்து முடித்தனர்.அதில், இரண்டு யானைகள் வருபவர்களுக்கு துதிக்கையை தூக்கி வரவேற்பது போலவும், கழுகுகள் பறப்பது போலும் கதவுகள் பல்வேறு வடிவமைப்புகளுடன் அழுகுர வடிமைக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள பலாஷா காடுகளில் இருந்து பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்க கூடிய தேக்கு மரங்களை கொண்டே இப்பணிகள் நடந்து வருகிறது. தற்போது, செய்து முடிக்கப்பட்ட மரக்கதவுகளை அயோத்தி ராமர் கோயிலில் மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையில், சக மரச்சிற்பக்கலைஞர்கள் இணைந்து இந்த பணியை செய்து முடித்துள்ளனர்.
இது போக பிரதாண வாயிலுக்கு, எட்டடி உயரம் 12 அடி அகல அளவில் மயில்கள் சிற்பங்கள் அலங்காரத்துடன் நான்கு மடிப்பு அமைப்பில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. முகப்பு மண்டபம் மேல் தளத்திற்கு செல்லும் படிகள் துவங்கமிடம் பொருட்கள் இருப்பாரைகள் ஆகியவற்றுக்கு வெவ்வேறு அளவிலான யானை சிற்பங்கள் அலங்காரத்துடன் இரண்டு மடிப்புடன் செய்யப்பட்டுள்ளன. கதவுகளுக்கு வேறு நிறுவனம் சார்பில் செப்பு தகடுகள் பொருத்தி தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. ராமர் சிலையை கர்ப்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு செல்லக்கூடிய சிறிய பல்லாக்கை செய்து முடித்து கொடுத்ததாகவும் சிற்பக் கலைஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

MGR Birthday: எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அரவிந்த் சாமிக்கு பேனர்… திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர் செயலால் பரபரப்பு!

எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று எம்.ஜி.ஆர் புகைப்படம் இல்லாமல் எம்.ஜி.ஆர் வேடமேற்று நடித்த அரவிந்த் சாமி புகைப்படத்தைக் கொண்டு அதிமுகவினர் பேனர் வைத்துள்ளது விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரமேற்று நடித்த திரைப்படம் ‘தலைவி’. ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2021ஆம் ஆண்டு வெளியான தலைவி திரைப்படம் எதிர்பார்த்த வணிக வெற்றியைப் பெறாவிட்டாலும் நடிகர், நடிகையரின் நடிப்பு, குறிப்பாக எம்.ஜி.ஆர் மேனரிசத்தை அப்படியே திரையில் கொண்டு வந்திருந்த நடிகர் அரவிந்தசாமியின் நடிப்பு பெரும் பாராட்டுகளைக் குவித்தது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று, எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமி புகைப்படத்தைக் கொண்டு அதிமுகவினர் பேனர் வைத்துள்ளது விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இன்று எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், அதிமுகவினரும் கட்சித் தொண்டர்களும் அவரை நினைவுகூர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வைத்துள்ள பேனரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கட்சியினரின் படங்கள் இடம்பெற்றிருக்க. எம்.ஜி.ஆர் புகைப்படம் மட்டும் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக எம்.ஜி.ஆர் போல் நடித்த தலைவி பட அரவிந்த் சாமியின் புகைப்படம் இந்த பேனரில் இடம்பெற்றுள்ளது.

மேலும், சத்துணவு கண்ட சரித்திர நாயகன், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாள் விழா என்றும் எழுதப்பட்டுள்ளது. ஒரு ஓரத்தில் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர் புகைப்படம் மிக சிறிதாக இடம்பெற்றிருக்க, அரவிந்த் சாமியின் புகைப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு நடிகர் அரவிந்த்சாமிக்கு பேனர் வைத்த திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர்! 🥱😂

அந்த மனசு தான் சார் கடவுள்.. 🤣🤡#MGR #Admkfails pic.twitter.com/a20Tkut84I

— புகழ் (@pugal_h) January 17, 2024

இந்த சம்பவம் தற்போது நெட்டிசன்களின் விமர்சனங்களையும் அதிமுகவினரின் அதிருப்தியையும் சம்பாதித்து இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது

Kaanum Pongal Is Celebrated Today 17 Jan 2024 16,500 Policemen Are On Security Duty In Chennai
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள்.
காணும் பொங்கல் வரலாறு:
குறிப்பாக காணும் பொங்கலன்று மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து விதவிதமான உணவுகள் மற்றும் பலகாரங்கங்களை எடுத்து ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்கு சென்று பொழுதை உற்சாகமாக கழிப்பர். நீர் நிலைகளை சென்று காண்பது காணும் பொங்கல் என்றும், உறவுகளை சென்று காண்பதை காணும் பொங்கல் என்றும் கூறப்படுகிறது. காண் என்றால் காணுதல் என்று பொருள்படும்.
ஆனால் உண்மையில் காணும் பொங்கல் என்றால் என்ன என்பதற்கு வரலாறு உண்டு. இன்றளவும் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்று கொண்டாடுவார்கள். இந்த கன்னிப் பொங்கலன்று திருமணமாகாத கன்னி பெண்கள் அனைவரும் ஒன்று கூடி, அவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த பொருட்களை வைத்து பொங்கல் வைத்து பகிர்ந்து உண்ணுவது காணும் பொங்கல் ஆகும். மேலும், வீட்டில் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என வேண்டி வீட்டில் பொங்கல் வைத்து குலதெய்வத்திற்கு படைத்து வழிப்படுவார்கள்.
காலை 9 முதல் 12 மணிக்குள் பொங்கல் வைத்து குலதெய்வத்திற்கு படைத்து, விரைவில் திருமணம் நடைபெற வேண்டும், தடைகள் விலக வேண்டும் என வேண்டிக் கொள்ளலாம். பொங்கல் படைத்து வழிபட்ட பிறகு வீட்டில் இருக்கும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்றால் கூடுதல் சிறப்பு.
சென்னையில் காணும் பொங்கல்:
இது காணும் பொங்கலின் ஒரு பகுதி மட்டுமே, காணும் பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து சுற்றுலா தளங்களுக்கு சென்று மகிழ்வார்கள். முக்கியமாக தலைநகர் சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, மகாபலிபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா என பல்வேறு சுற்றுலா இடங்களில் வருகை தருவார்கள்.
சென்னையில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு கூட்டம் அலைமோதும் என்பதால் மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 15, 000 காவல்துறையினர் மற்றும் 1,500 ஊர்காவல் படையினர் என மொத்தம் 16,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதிகளில் மக்கள் கடலுக்குள் செல்லாமல் இருக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், டவர்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரையில் பெற்றோர்களோடு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள், காவல் உதவி மையங்கள், தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
MGR: "ஏழை பங்காளன்! கொடுத்து, கொடுத்து சிவந்த கரங்கள்" மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் பிறந்த நாள்!

“வாழும் நாட்களில் வாழ்வதைக் காட்டிலும் இறந்த பின்னும் அனைவர் நெஞ்சங்களிலும் வாழ்வது தான் வாழ்க்கை” என்ற பொன்மொழிக்கு சிறந்த ஒரு உதாரணமாக சகாப்தமாக திகழ்ந்தவர் தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் மட்டும் ஹீரோவாக இல்லாமல், அரசியல் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் ஹீரோவாகவே வாழ்ந்த இந்த ரியல் ஹீரோவின் 107ஆவது பிறந்தநாள் இன்று.

ஏழை பங்காளன் எம்.ஜி.ஆர்.:

நாடக நடிகனாக பயணத்தைத் தொடங்கி அதன் மூலம் திரைப்படத்துறையில் வாய்ப்பு பெற்ற பிறகு தன்னுடைய அயராத உழைப்பினால் முன்னேறி பிரபலமான நடிகரானார். அவரின் நடிப்பு அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாகக் கவர்ந்து மிகவும் நெருக்கமாக கொண்டு சென்றது.

பணமும் பெருமையும் சினிமா மூலம் சம்பாதித்த எம்ஜிஆர், அதில் நேர்மையையும் கொள்கையையும் கடைபிடித்து அதில் வெற்றியையும் கண்டவர். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படிப்பட்ட பண்புகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை ஏழை எளிய மக்களுக்கும், படிக்காத பாமரனுக்கும் புரியும் வகையில் தன்னுடைய வசனங்கள் மூலமும், பாடல்கள் மூலமும் பதிய வைத்த ஏழை பங்காளன். வெறும் வசனத்திற்காக சொன்னது என்று இல்லாமல் தன்னுடைய படங்களில் அவர் சொன்ன அனைத்தையும் ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றி மக்களின் மனங்களில் முழுமை கண்டவர்.

எம்.ஜி.ஆர். தன்னுடைய சொத்து அனைத்தையும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், காது மற்றும் பேச முடியாத மக்களுக்கு, பள்ளிகள் கட்ட, இலவச கல்வி திட்டம், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க, தொழில் நிலையங்கள் அமைக்க என பல நல திட்டங்களுக்காகவும் எழுதி வைத்தவர்.

நடிகர் எம்ஜிஆர் தன்னுடைய படங்களின் மூலம் கூட மக்கள் பாதை மாறிச் சென்று விட கூடாது என்பதற்காக மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் ஒருபோதும் நடித்ததே கிடையாது. தேச பக்தி, மனித நேயம் மிக்க மனிதராக வாழ்ந்த எம்ஜிஆர் பாடல்களையும் படங்களையும் பார்த்தாலே மனதில் உள்ள குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.

அனைத்து தரப்பு மக்களுக்களின் பிரதிநிதியாக விளங்கியவர் எம்ஜிஆர் என்பதை எடுத்துரைக்கும் சில படங்கள்:

தொழிலாளி:

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் 1964ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தொழிலாளி’. போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது இப்படம். முதலாளிகளுக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் செய்யும் போராட்டம், அதற்காக எம்.ஜி.ஆர் எடுத்த முயற்சிகள் மூலம் தொழிலாளர்களுக்கு வெற்றியை தேடி தருவது ஆகியவற்றின் அடிப்படையில் கதை அமைந்திருக்கும். இப்படம் எம்.ஜி.ஆருக்கு தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

படகோட்டி :

அனைத்து தரப்பு மக்களுக்காகவும் படம் எடுத்த எம்.ஜி.ஆர், மீனவ மக்களுக்காக எடுத்த படம் தான் 1964ம் ஆண்டு டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் எம்ஜிஆர் ஒரு மீனவனாக நடித்த ‘படகோட்டி’ திரைப்படம். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இரு வேறு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் மீனவ சமுதாயத்தின் போராட்டமான வாழ்க்கையை தத்ரூபமாக நடித்திருந்தார். அதன் மூலம் மீனவ மக்கள் மனதில் நிரந்தரமாக குடியேறினார் எம்.ஜி.ஆர்.

விவசாயி :

தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ஒரு விவசாயியாக நடித்த படம் ‘விவசாயி’. விவசாய மக்களின் பெருமையையும், உயர்வையும் எடுத்துரைத்த இப்படத்தில் கூலி தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை, கூட்டுப்பண்ணை விவசாயம், நவீன விவசாயம் என பல அம்சங்களையும் பற்றி பேசிய படம்.

7 Am Headlines Today 2024 17th January Headlines News Tamilnadu India World | 7 AM Headlines: இன்று காணும் பொங்கல்! ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி
Alanganallur Jallikattu 2024: ஆரவாரத்துடன் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஏற்பாடுகளும், சிறப்பம்சமும் என்ன?
Alanganallur Jallikattu 2024 Started Today 17 Jan 2024 At Madurai On The Occasion Of Kaanum Pongal Festival
தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:
பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளும், நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு போடிகளும் நடைபெற்றது. இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. இப்போட்டியில் 1200 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் QR கோடுடன் கூடிய டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டோக்கன் பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இன்று போட்டிக்கு முன்பாக இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குவிந்த காளைகளும், காளையர்களும்:
காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5 மணி வரை என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும். போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கோவை, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் பங்கேற்றுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியில் சுவாரசியமான அம்சம் என்றால் அது லைவ் கமண்டரி தான். மாடுகளுக்கு மாடுபிடி வீரர்களுக்கும் ஏற்றவாறு இருக்கும். அதிலும் எக்கசக்கமான பரிசுகள் வழங்கப்படும். இந்த போட்டியில் சிறப்பாக களம் காணும் முதல் மாடிபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசு வழங்கப்படுகிறது. 2 வது இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு பைக் பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் முடிவில் 3 வது பரிசு குறித்து முடிவு எடுக்கப்படும்.
மருத்துவ குழு:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முனியாண்டி திடலில் உள்ள நிரந்தர வாடிவாசலில் நடைபெறுகிறது. பார்வையாளர்கள் கேலரி, காளை மருத்துவ பரிசோதனை பகுதி, பிறவாடி, காளை கலெக்சன் சென்டர் ஆகிய பகுதிகளில் 2 அடுக்கு இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியில் ஒவ்வொரு சுற்றுகளுக்கும் 50 மாடுபிடி வீரர்கள் பல வண்ண சீருடைகளில் அனுமதிக்கபடுகின்றனர். போட்டியின் போது ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு தங்க காசு பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அண்டா சைக்கிள், பீரோ, கட்டில்,மெத்தை உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகிறது.
போட்டியை முன்னிட்டு சுகாதாரத்துறை சார்பில் 90 பேர் அடங்கிய மருத்துவக் குழுக்களுக்கும், கால்நடைத்துறை சார்பில் 70 பேர் அடங்கிய மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர். இதை தவிர, நடமாடும் மருத்துவக் குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டியில் காயம் ஏற்படும் மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் 15, 108 ஆம்புலன்ஸ்கள், கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிக்காக மாவட்ட எஸ்பி டோங்கரே தலைமையில் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதியில் இருந்து நேரடியாக வந்து திரும்பும் பகுதி என்பதால் காளைகள் நின்று விளையாடும் என்பதாலும் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தும் களம் என்பதாலும் போட்டியில் சுவாரஸ்யம் அதிகரித்து காணப்படுகிறது.
Puratchi Thalaivar MGR Young Age Cinema Entry To Tamilnadu Cm Full Life History Here
தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர் எப்படி மிகப்பெரிய ஆளுமையாக விளங்கினாரோ அதே அளவிற்கு தமிழ் சினிமாவிலும் வரலாற்று சுவடுகளை ஆழமாக பதித்து சென்றிருக்கிறார். துள்ளிக்குதித்து ஆடும் நடனம் , வாள் சண்டை , கைகளை உயர்த்தி பாடுவது , உதட்டை கடித்து வசனம் உச்சரிப்பது என தமிழ் சினிமாவில் மாறுபட்ட ஐகானாக திகழ்கிறார் எம். ஜி.ஆர். இன்று விருதுகளை வாங்கி குவிக்கும் பல நடிகர்களுக்கும் எம்.ஜி.ஆர்தான் எங்களின் முன்னோடி என சொல்லக்கேட்டிருக்கிறோம். அவர் திரை பயணத்தை திரும்பி பார்ப்போமா.!
நாடக கம்பெனி :
கும்பகோணத்தில் குடியிருந்த எம்.ஜி.ஆர் அங்குள்ள ஆனையடி நகராட்சி பள்ளியில் படித்தார். அப்போதிலிருந்தே விளையாட்டு , நாடகம் என்றால் எம்.ஜி.ஆருக்கு பிரியாமாம். கூடவே ஜவ்வு மிட்டாயும். அந்த மிட்டாய் வாங்க காசில்லாத சமயங்களில் வசதி படைத்த பல நண்பர்கள் , எம்.ஜி.ஆருக்கு அதனை வாங்கி கொடுப்பார்களாம். ஒரு முறை எம்.ஜி ஆர் புகழ்பெற்ற ராமாயண கதைக்களத்தில் ‘லகுசா’ கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
அவரின் நடிப்பு திறனை கண்ட நாராயணன் நாயர் என்பவர் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்னும் நாடக குழுவின் எம்.ஜி .ஆரை சேர்த்து விட்டிருக்கிறார். சிறப்பாக சென்றுக்கொண்டிருந்த நாடக நாட்களில் ,டீன் -ஏஜை எட்டிய எம்.ஜி.ஆருக்கு குரல் உடைய தொடங்கியிருக்கிறது. அந்த சமயத்தில் இனி தன்னால் பாடி நடிக்க முடியாதே என்ற தயக்கத்தில் இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அப்போதுதான் பிரபல உறையூர் நாடக கம்பெனியில் இருந்து அவரையும், அவரது அண்ணன் சக்கரபாணியையும் நாடக குழுவின் இணையும் படி அழைப்பு வந்திருக்கிறது.
இந்த நாடக குழுவில் கதாநாயகனாக இருந்துவிட்டு , மீண்டும் தனது குரலால் பின்னுக்கு தள்ளப்பவோமே ..அந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன்னதாகவே இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என எண்ணிய எம்.ஜி.ஆர் 1930 ஆம் ஆண்டு உறையூர் நாடக கம்பனியில் இணைந்தார். அந்த குழுவில் எம்.ஜி.ஆருக்கு சிறந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. சிறப்பு நாடகங்களில் நடிக்கவும் அவர் அழைத்துச்செல்லப்பட்டார். அப்படித்தான் ஒருமுறை பர்மாவிற்கு சென்று திரும்பிய அவரை , மீண்டும் ஒரிஜினல் பாய்ஸ் குழுவில் இணையும்படி அழைப்பு வந்திருக்கிறது. அப்போது மீண்டும் அழைப்பை ஏற்று குழுவில் இணைந்துள்ளார்.
அதன் பிறகு தொடர்ந்து வாள் பயிற்சி, கத்தி சண்டை, கம்பு சண்டை என அனைத்து போர் விளையாட்டையும் கற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறார்.
சினிமா எண்ட்ரி :
எம்.ஜி.ஆரின் முதல் படம் சதி லீலாவதி என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா? எம்.ஜி.ஆர் நாடகங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது, எம்.கந்தசாமி முதலியாரின் மகன் எம்.கே ராதா கதாநாயகனாக நடிக்க அந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு காவல்துறை அதிகாரியாக நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுத்திருக்கிறார் எம்.கந்தசாமி. எல்லிஸ் .ஆர்.டங்கன் இயக்கத்தில், மனோரமா ஃபிலிம்ஸ் தயாரிக்க 1936 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தின் பெயர் ரெங்கைய நாயுடு. அதன் பிறகு எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் உருவான டங்கன் படத்தில் இஸ்லாமிய இளைஞராக நடித்திருந்தார். அதன் பிறகு வீர ஜெகதீஸ், மாயா மச்சீந்திரா, பிரகலாதா உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார் எம்.ஜி.ராமச்சந்திரன் .பாகவதர் கைது!
எம்.ஜி.ஆர் சினிமாவில் நுழைந்த காலக்கட்டத்தில் , சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர்கள் பி.யு.சின்னப்பாவும் , தியாகராஜ பாகவதரும். தமிழ் சினிமா என்னதான் இன்றைக்கு பல மாற்றங்களை கண்டிருந்தாலும், போட்டி நடிகர்களின் ஆதிக்கம் மட்டும் தொன்று தொட்டு வருகிறது போலும்! சரி விஷயத்திற்கு வருவோம்.. எம்.ஜி.ஆர் 1941 ஆம் ஆண்டு வெளியான அசோக்குமார் திரைப்படத்தில் முதன் முதலாக தியாகராஜ பாகவதருடன் தனது திரையை பகிர்ந்துக்கொண்டார். அதே போல ஹரிச்சந்திரா திரைப்படத்தில் அமைச்சராக நடித்து , பி. யு. சின்னப்பாவுடன் தனது திரையை பகிர்ந்துக்கொண்டார்.
அதன் பிறகு சாலிவாகனன், மீரா, ஸ்ரீமுருகன் என அடுத்தடுத்த படங்களில் கிடைத்த வேடங்களில் எல்லாம் நடித்தார் எம்.ஜி.ஆர். அப்போதுதான் தமிழ் சினிமாவில் ஆளுமையாக இருந்த சின்னப்பா மற்றும் பாகவதரின் நிலை சரிய தொடங்கியது. 1944 ஆம் வருடம் நவம்பர் 27-ல் லட்சுமி காந்தன் கொலைவழக்கில் கைதானார் பாகவதர். அப்போது மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று உருவானது. அதனை பூர்த்தி செய்ய இயக்குநர்கள் எம்.ஜி.ஆரை பயன்படுத்திக்கொண்டனர். வசீகரிக்கும் சிரிப்பும், கச்சிதமான உடலமைப்பும் கொண்ட ராமச்சந்திரன் தனது கதைக்கு பொருத்தமாக இருப்பார் என எண்ணிய இயக்குநர் மோகன் எம்.ஜி.ஆரை நாயகனாக வைத்து ராஜகுமாரி என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தார். படத்திற்கு அமோக வரவேற்பு. இருந்தாலும் இனி நடித்தால் கதாநாயகன்தான் என அடம்பிடிக்காமல், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர்.
பி.யு.சின்னப்பா மறைவு !
1950 ஆம் காலக்கட்டம்தான் எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவில் கோலோச்சிய முக்கிய காலக்கட்டம் . தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், ராஜகுமாரி திரைப்படத்திற்கு பிறகு மருதநாட்டு இளவரசி என்னும் திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அதே ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் முதன் முறையாக மந்திர குமாரி திரைப்படமும் வெளியானது. மாஸ் காட்டும் இளவரசன் கதாபாத்திரத்தில் தோன்றிய எம்.ஜி.ஆரை ரசிகர்கள் கொண்டாடினர்.
சண்டைக்காட்சிகளை வித்தியாசமாக நடித்து அசத்தினார் எம்.ஜி.ஆர். சிறுவயதிலேயே போர் கலைகளை கற்றவருக்கு சொல்லியா தரவேண்டும்? 1951 ஆம் ஆண்டு பி.யு.சின்னப்பா திடீரென விபத்து ஒன்றில் காலமானார். தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய அவரின் வெற்றிடமும் எம்.ஜி.ஆர் பக்கம் இயக்குநர்களை படையெடுக்க வைத்தது. பி.யு சின்னப்பா இரண்டு கைகளால் வாள் வித்தையில் சிறந்து விளங்கினார், அவரை போலவே எம்.ஜி.ஆரும் இரண்டு கைகளில் வாள்களை சுழற்றுவதில் கெட்டிக்காரர். சின்னப்பா ராஜபாட்டையாக வேடமிட்ட காலங்களில், அவருக்கு யுவதியாக நடித்தவர் எம்.ஜி.ஆர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கெத்து காட்டிய எம்.ஜி.ஆர் !
இருபெரும் ஆளுமைகளின் வெற்றிடத்தை கச்சிதமாக பயன்படுத்திய எம்.ஜி.ஆர், தகுந்த கதைகளில் , சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றார். 1954-ல் வெளிவந்த “மலைக்கள்ளன்” திரைப்படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. 150 நாட்கள் வெற்றிநடை போட்ட இந்தப் படம் எம்.ஜி.ஆரின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அதன் பிறகு சிவாஜி கணேசனும் ரேஸில் கலந்துக்கொள்ள இருவரின் நடிப்பில் கூண்டுக்கிளி திரைப்படம் வெளியானது.அலிபாபாவும், 40 திருடர்களும்:
அதுமட்டும்தான் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம். அந்த படத்தை தொடர்ந்து புகழ்பெற்ற இசை ஜாம்பவான்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் குலேபகாவலி திரைப்படத்தில் நடித்தார் எம் .ஜி.ஆர். பின்னர் இந்திய சினிமாக்கள் மெல்ல மெல்ல கலர் திரைப்படங்களுக்கு மாற ,மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் , டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளியானது தமிழ் சினிமாவின் முதல் கலர் திரைப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும். தமிழ் சினிமாவின் முதல் கலர் திரைப்படத்தில் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். அந்த படத்தின் வெற்றியை நான் சொல்ல தேவையில்லை , பல மாயாஜாலங்களை கலரில் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.
எம்.ஜி.ஆருக்கு பல படங்களில் வில்லனாக நடித்த எம்.ஆர்.ராதா , நிஜ வாழ்க்கையிலும் எதிரியாகவே கருதப்பட்டார். பட விவகாரம் ஒன்றிற்காக எம்.ஜி.ஆர் வீட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற எம்.ஆர்.ராதா , எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல்கள் உள்ளது. சிலர் படப்பிடிப்பின்போது துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறுகின்றனர். அங்கு என்னதான் நடந்தது என்பது இன்றளவும் புரியாத புதிராக உள்ளது. அதன் பிறகு எம்.ஜி.ஆரின் குரல் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக மாறிப்போனது. அதையும் ஐகானாகவே உருவாக்கிச்சென்றார் எம்.ஜி.ஆர்
இயக்குநர் அவதாரம்!
மதுரை வீரன், தாய்க்குப்பின் தாரம், சக்கரவர்த்தித் திருமகள், ராஜ ராஜன், புதுமைப்பித்தன், மகாதேவி,நாடோடி மன்னன் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார் எம்.ஜி.ஆர். தாய்க்கு பின் தாரம் திரைப்படத்தில் தேவர் ஃபிலிம்ஸுடன் முதன் முறையாக கூட்டணி அமைத்தார் எம்.ஜி.ஆர். இந்த திரைப்படத்தில் காளையுடன் சண்டையிடும் காட்சியில் நடிக்க தயக்கம் காட்டினாராம் எம்.ஜி.ஆர் . இதனால் தயாரிப்பாளர் தேவருக்கும் , எம்.ஜி.ஆருக்கும் மன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் கோபத்தில் இருந்த தேவர் , தனது அடுத்த படமான நீலமலைத் திருடனில் நடிகர் ரஞ்சனை நடிக்க வைத்திருக்கிறார். அந்த படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தால் எவ்வளவு வரவேற்பு கிடைக்குமோ அதே அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. உடனே எம்.ஜி.ஆர் போட்டிக்கு எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் என்னும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தானே இயக்கி , இரட்டை வேடத்தில் நடித்து நாடோடி மன்னன் என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். பாதி கலரில் எடுக்கப்பட்ட அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க , படத்தின் வெற்றி ரஞ்சன் மீது இருந்த கிரேஸை குறைத்தே விட்டது. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த ரஞ்சனின் படத்திற்கு வரவேற்பு கிடைக்காததால் , மனைவியுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் ரஞ்சன்.
உச்ச நட்சத்திரம் :
கலைவாணர் மரணத்திற்கு பிறகு உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார் எம்.ஜி.ஆர். திருமணம், குடும்பம் என ஒரு புறம் குடும்ப பொறுப்புகளையும் கவனித்து வந்தார் எம்.ஜி.ஆர்.1966-ல் அன்பே வா, தாலி பாக்கியம் , நான் ஆனையிட்டால் என ஒரே ஆண்டில் 9 படங்கள் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகின. அந்த சமயத்தில்தான் சிறையில் இருந்த தியாகராஜ பாகவதர் விடுதலை ஆனார். பெரிதாக சினிமாவில் அக்கறை செலுத்தாத பாகவதர், ஒரு சில படங்களில் நடித்தார். அந்த படங்கள் முன்பிருந்த ஹைப்பை அவருக்கு கொடுக்கவில்லை. அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். சினிமா ஒரு பக்கம் அரசியல் ஒரு பக்கம் என படு பிஸியாக இருந்தார் எம்.ஜி.ஆர்.
அரசியலும் சினிமாவும் !
இந்திய அரசியலில் முதன் முதலாவதாக முதல்வரான நடிகர் என்ற பெருமை எப்படி எம்.ஜி.ஆருக்கு சொந்தமோ. அதே போலத்தான் சினிமாவில் முதல் தேசிய விருது பெற்ற நடிகர் என்ற பெருமையும் எம்.ஜி.ஆரையே சேரும். 1972ஆம் ஆண்டில் ரிக்ஷாகாரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கிடைத்தது. மக்களுடன் கூடுதல் பிணைப்பை ஏற்படுத்த எண்ணிய எம்.ஜி.ஆர் , சினிமாவோடு தனது அரசியல் பயணத்தையும் தொடங்கினார் . இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம்ஜிஆர், கதர் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார். தேசிய அரசியலில் இருந்த எம்.ஜி.ஆரை திராவிட அரசியலுக்கு வர தூண்டியவர் மறைந்த முதல்வர் கருணாநிதி.1953 இல் அண்ணா உருவாக்கிய தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார் எம்.ஜி .ஆர். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் , பாடல்களிலும் வசனங்களிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். ஒரு பாடல் உருவானால் அது எம்.ஜி.ஆரி நடப்பு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. அதற்கு கண்ணதாசனின் வரிகளும் , எம்.எஸ்.வியின் இசையும் பெரிதும் உதவின. புரட்சி தலைவர் என்ற அடை மொழியை சினிமாவில் உருவாக்கியது அவரது அரசியல் தீவிரம் 1962இல் தனது 50ஆவது வயதில் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1967இல் எம்எல்ஏ ஆகவும் இருந்தார் எம்ஜிஆர். 1969இல் திமுகவின் பொருளாளராக எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார். 1969இல் அண்ணாதுரை காலமானார். கட்சி இரண்டாக பிரிந்தது. அப்போதுதான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவை தொடங்கினார்.
எம்.ஜி.ஆரும்! ஜெயலலிதாவும்!
எம்.ஜி.ஆரை பற்றி எழுதப்போனால் , ஜெயலலிதாவையும் ….ஜெயலலிதாவை பற்றி எழுதப்போனால் எம்.ஜி.ஆரையும் தவிர்க்க முடியுமா என்ன ?… தீவிர அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் , சினிமாவிலும் கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர். குறிப்பாக எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காம்போவை பார்ப்பதற்காகவே திரையரங்கில் கூட்டம் கூடுதலாக அலை மோதுமாம்.தன்னை விட 30 வயது இளையவரான ஜெயலலிதாவுடன் திரைக்கு பின்னால் எம்.ஜி.ஆர் பாராட்டிய நட்பு அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் , குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் ஜெயலலிதாவின் சுறுசுறுப்பையும் , புத்திசாலித்தனத்தையும் வெகுவாக ரசித்த எம்.ஜி.ஆர் தனது கட்சியில் அமர்த்தி பல முக்கிய பொறுப்புகளை கொடுத்தார்.
அதன் பிறகு தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்ததார். ஆட்சி அமைத்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் காலம் கடந்தும் தொடந்து வருகிறது. அதில் பிரதானமானது சத்துணவு திட்டம் . தீவிர அரசியலில் இருந்த காலக்கட்டத்தில் 1984 ஆம காலக்கட்டத்தில் சிறநீரக பாதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்சனைகளால் அவதியுற்றார் எம்.ஜி.ஆர். தொடர்ந்து ஓய்வில் இருந்த எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள ராமாவரம் தோட்ட இல்லத்தில் அவர் காலமானார். அவரின் இறப்பிற்கு பிறகு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.
எம்.ஜி.ஆர் என்னும் மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரனின் பிறந்தநாள் இன்று!
Indias Tennis Star Sumit Nagal Script History In Australian Open 2024 Become1st Indian To Beat Seeded Player In 35 Years
ஆஸ்திரேலிய ஓபன் 2024ல் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார் சுமித் நாகல். ஆஸ்திரேலிய ஓபனின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் சுமித் நாகல், 31-ம் நிலை வீரரான அலெக்சாண்டரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். 35 ஆண்டுகால வரலாற்றில் இந்திய டென்னிஸ் வீரர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் தரவரிசை வீரரை தோற்கடிப்பது இதுவே முதல் முறையாகும். சுமித் நாகலின் ஏடிபி தரவரிசை 137 ஆகும்.
போட்டியில் என்ன நடந்தது?
சுமித் நாகல் போட்டி தொடங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் செட்டிலேயே ஆதிக்கம் செலுத்தினார். அலெக்சாண்டரின் சர்வீஸை மூன்று முறை முறியடித்த அவர், முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் எளிதாக வென்றார்.
தொடர்ந்தும், இரண்டாவது செட்டில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சுமித். இரண்டாவது செட்டில் அலெக்சாண்டர் பப்லிக்கும் சில தவறுகளை செய்ய, இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாகல் இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் இரு வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் டை பிரேக்கில் நாகல் வெற்றியை தனதாக்கினார். இந்த செட்டை 7-6 என கைப்பற்றி போட்டியையும் வென்றார்.
சுமித் நாகல் தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனின் முதல் சுற்றில் பப்லிக்கை நேர் செட்களில் தோற்கடித்தார். 26வயதான நாகல் தகுதிச் சுற்றுப் போட்டியின் மூலம் முதன்மை சுற்றுக்கு முன்னேறினார். இந்த முதன்மை சுற்றானது இரண்டு மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்த நிலையில், உலகின் 31ம் நிலையான அலெக்சாண்டர் பப்லிக்கை, 137வது இடத்தில் உள்ள சுமித் நாகல் வீழ்த்தினார்.
That’s a big win for @nagalsumit 🇮🇳He takes out No. 31 seed Bublik 6-4 6-2 7-6(5).#AusOpen • #AO2024 pic.twitter.com/ldM9VE4X0M
— #AusOpen (@AustralianOpen) January 16, 2024வரலாற்று சிறப்புமிக்க தருணம்:
சுமித் வெற்றிபெற்ற வீடியோவை ஆஸ்திரேலிய ஓபனின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்டது. வீடியோவில் சுமித் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். வெற்றிக்கு பின் இந்திய வீரர் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் கைகுலுக்கினார். இதைத் தொடர்ந்து அவர் சென்று அவரது நாற்காலியில் அமர்ந்தார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்கள் அவரை ஆரவாரம் செய்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
The first Indian man in 3️⃣5️⃣ years to beat a seed at a Grand Slam 🇮🇳@nagalsumit • #AusOpen • #AO2024 • @Kia_Worldwide • #Kia • #MakeYourMove pic.twitter.com/SY55Ip4JaG
— #AusOpen (@AustralianOpen) January 16, 2024புதிய சாதனை
1989ம் ஆண்டுக்கு பிறகு தரவரிசை வீரர் ஒருவரை ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுமித் நாகல் பெற்றுள்ளார். முன்னதாக, இந்த சாதனையை ரமேஷ் கிருஷ்ணன் படைத்திருந்தார். இரண்டாவது சுற்றில் ஸ்வீடனின் மேட்ஸ் விலண்டரை தோற்கடித்தார். அப்போது டென்னிஸ் தரவரிசையில் உலகின் முன்னணி வீரராக விலாண்டர் இருந்தார்.
2013-க்குப் பிறகு ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் நாகல் ஆவார். சோம்தேவ் தேவ்பர்மன் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, ஆஸ்திரேலிய ஓபனில் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ஒருவர் தரவரிசை வீரரை தோற்கடித்துள்ளார்.

Villuppuram Government Hospital 12th Student Death Wrong Treatment | விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 12ம் வகுப்பு மாணவி மரணம்
விழுப்புரம்: விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வயிற்று வலி ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட பனிரெண்டாம் வகுப்பு மாணவி தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை வளாக்கத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு:
விழுப்புரம் நகர பகுதியான பொய்யப்பாக்கம் கிராமத்தை சார்ந்த அய்யப்பன் என்னும் மீன் வியாபாரியின் மகள் அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் கடுமையான வயிற்று வலி காரணமாக முண்டியம்பாக்கதில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியின் கல்லீரல், கனையம் ஆகிய பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் அதற்கேற்றவாறு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்றை தினம் மாணவியின் கழுத்தில் மருத்துவர்கள் ஊசி செலுத்திய சில மணி நேரத்திலையே மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உறவினர்கள் முற்றுகை:
இதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள் வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏன் கழுத்தில் ஊசி செலுத்த வேண்டும்? அதனால் தான் உயிரிழந்து விட்டதாகவும் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்து விட்டதாக கூறி மருத்துவமனையின் வளாகத்தில் முற்றுகையிட்டு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சென்னை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட உறவினர்கள் புறப்படவே உடனடியாக டி எஸ் பி சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது தொடர்பாக புகார் அளியுங்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைவிட்டு சென்றனர். இச்சம்பவத்தில் மருத்துவமனை வளாகம் முன்பு மூன்று மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவி உயிரிழப்பிற்கு தவறான சிகிச்சையினால் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இறந்த மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Indian Cricket Team Dominate In Under 19 World Cup Here Know Stats And Records List Here
Under 19 : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை (அண்டர் 19 உலகக் கோப்பை) கிரிக்கெட் போட்டி வருகின்ர ஜனவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக, இலங்கையில் நடைபெறவிருந்த இந்த போட்டி பல்வேறு காரணங்களால் இம்முறை தென்னாப்பிரிக்கா 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளது. இந்த போட்டியானது 16 நாடுகள் பங்கேற்கும் நிகழ்வாகும். இந்த போட்டியானது 50 ஓவர்கள் வடிவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், யுவராஜ் சிங், முகமது கைப் மற்றும் பாபர் அசாம் போன்ற பல முக்கிய வீரர்கள் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியே சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகினர்.
இந்தநிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை எந்த அணி எத்தனை முறை வென்றது தெரியுமா?
அதிலும் குறிப்பாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகமுறை இந்திய அணியே வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த முறையும் இந்திய அணி நடப்பு சாம்பியனாக களமிறங்கும். இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையை இந்தியா அதிகபட்சமாக 5 முறை கைப்பற்றியுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம்…
இந்திய அணி 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா இதுவரை மூன்று முறை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன்படி, 1998, 2002 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி பட்டத்தை வென்றுள்ளது.
ஆண்டு வாரியாக பட்டத்தை வென்ற அணிகளின் விவரம்:
ஆண்டு
சாம்பியன்
ரன்னர்-அப்
நடத்திய நாடு
1988
ஆஸ்திரேலியா
பாகிஸ்தான்
ஆஸ்திரேலியா
1998
இங்கிலாந்து
நியூசிலாந்து
தென்னாப்பிரிக்கா
2000
இந்தியா
இலங்கை
இலங்கை
2002
ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்கா
நியூசிலாந்து
2004
பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ்
வங்கதேசம்
2006
பாகிஸ்தான்
இந்தியா
இலங்கை
2008
இந்தியா
தென்னாப்பிரிக்கா
மலேசியா
2010
ஆஸ்திரேலியா
பாகிஸ்தான்
நியூசிலாந்து
2012
இந்தியா
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா
2014
தென்னாப்பிரிக்கா
பாகிஸ்தான்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
2016
வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா
வங்கதேசம்
2018
இந்தியா
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
2020
வங்கதேசம்
இந்தியா
தென்னாப்பிரிக்கா
2022
இந்தியா
இங்கிலாந்து
வெஸ்ட் இண்டீஸ்
மற்ற அணிகள் எப்படி..?
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை பாகிஸ்தான் இரண்டு முறை வென்றுள்ளது. அதன்படி, கடந்த 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று பாகிஸ்தான் அணி அசத்தியது. பாகிஸ்தான் அணிக்கு அடுத்தபடியாக, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையை தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.
1998 ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது.
2014 ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா வென்றது.
2016 ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வென்றது,
2020 ம் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் பட்டத்தைக் கைப்பற்றியது.
இறுதியாக, இந்திய அணி கடந்த 2022 ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றதுஎனவே இந்த முறையும் இந்திய அணி நடப்பு சாம்பியனாக களம் இறங்கும்.

Indian Captain Rohit Sharma Place In T20 Side Under Danger After Not Able To Score Runs
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்த டி20 தொடரின் மூலம் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் குறுகிய கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்கியுள்ளார். மீண்டும் வரும் தொடரில் ரோஹித் அதிரடியான இன்னிங்ஸ் ஆடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் ஒரு ரன் கூட எடுக்க முடியாத நிலையில், டி20 போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மாவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, ரோஹித் சர்மா 14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு திரும்பினார். இதன் காரணமாக, 2023 ஒருநாள் உலகக் கோப்பை போன்று, டி20 உலகக் கோப்பையிலும் கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ வழங்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரத்தை பார்க்கும் போது கேப்டன் பதவி என்பது வெகு தொலைவில் உள்ள நிலையில் ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்ற விவாதமே இப்போது தொடங்கியுள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு டி20 அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால், ஒருநாள் போட்டியில் காட்டிய அதே ஃபார்மை டி20யில் ரோஹித் சர்மாவால் காட்ட முடியவில்லை. மேலும், இலக்கைத் துரத்தும்போது ரோஹித் சர்மாவின் சாதனை மிகவும் வெட்கக்கேடானது. இதுவே வேறு எந்த வீரராக இருந்திருந்தால், இந்நேரம் அந்த வீரர் நீண்ட காலத்திற்கு முன்பே அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார். கடந்த 5 டி20 போட்டிகளில் ரோஹித் சர்மாவால் 4 முறை கூட ரன் எடுக்க முடியவில்லை. ரோஹித் சர்மா ஒருமுறை மட்டுமே ரன் அடித்துள்ளார். அதிலும் அவரது இன்னிங்ஸ் 4 ரன்களுக்குள் முடிந்தது.
Comeback Strong Rohit Sharma 🥺 pic.twitter.com/Ph0GC2QoXq
— RVCJ Media (@RVCJ_FB) January 16, 2024டி20யில் கீழே போகும் ரோஹித்தின் கிராஃப்:
ரோஹித் ஷர்மாவின் டி20 வாழ்க்கை மிக நீண்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கியதன் மூலம் 150 போட்டிகளில் விளையாடிய உலகின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ரோஹித் சர்மா 142 இன்னிங்ஸ்களில் 150 ஆட்டங்களில் 30.34 சராசரி மற்றும் 139.1 ஸ்ட்ரைக் ரேட்டில் 3853 ரன்கள் எடுத்துள்ளார். டி20யில் 29 அரைசதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, நான்கு சதங்களையும் அடித்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் ஃபார்மில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கேப்டன்சியுடன், ஓப்பனிங் ஸ்லாட், மிடில் ஆர்டர் மற்றும் பந்துவீச்சு பிரிவு குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடாத பட்சத்தில் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பை அளிக்கலாம் என்று அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், ரோஹித் ஷர்மா தன்னை நிரூபிக்க இன்னும் வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைப்பது உறுதி.

Cheetah Dies : தொடரும் மர்மம்.. வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 10-வது சிவிங்கிப்புலி உயிரிழப்பு

எந்த வித கட்டுப்பாடும் இன்றி சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டது உள்பட பல காரணங்களால் இந்தியாவில் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை குறைந்து, 1950களில், சிவிங்கி புலியை அழிந்த இனமாக அறிவிக்கப்பட்டது.

தொடர்கதையாகும் மரணங்கள்:

இப்படியிருக்க, சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. சிவிங்கி புலிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. அதையடுத்து, நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு 8 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த சிவிங்கி புலிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய் பூங்காவில் விடப்பட்டன. இதையடுத்து, இந்தியாவில் உள்ள சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. ஆனால், தட்பவெப்ப நிலை, நோய்த்தொற்று உள்பட பல காரணங்களால் தென்னாப்பிரிக்கா, நமீபியா நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

இதுவரை, 9 சிவிங்கிப் புலிகள் உயிரிழந்த நிலையில், இன்று 10ஆவது சிவிங்கி புலி மரணம் அடைந்துள்ளது. நமீபிய நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு, சௌர்யா என்று பெயரிடப்பட்ட சிவிங்கி புலி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்.

10-வது சிவிங்கிப்புலி உயிரிழப்பு:

இதுவரை, மொத்தமாக ஏழு பெரிய சிவிங்கி புலியும் மூன்று குட்டிகளும் தேசிய பூங்காவில் இறந்துள்ளன. லயன் திட்டத்தின் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர், இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில், "இன்று, ஜனவரி 16ஆம் தேதி, 2024ஆம் ஆண்டு மதியம் 3:17 மணியளவில், நமீபிய நாட்டு சிவிங்கி புலி செளர்யா உயிரிழந்தது.

காலை சுமார் 11 மணியளவில், தடுமாறிய நிலையில் சிவிங்கி புலி நடமாடி கொண்டிருந்தது. இதை கவனித்த கண்காணிப்புக் குழு, அதற்கு மயக்க ஊசி செலுத்தி கைப்பற்றியது. அப்போது, அது பலவீனமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து விலங்கு புத்துயிர் பெற்றது.

ஆனால், புத்துயிர் பெற்ற பிறகும் அதன் உடல்நிலையில் சிக்கல்கள் தொடர்ந்தன. சிகிச்சைக்கு பதிலளிக்கத் தவறியது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி, குனோ தேசிய பூங்காவிவல் ஒன்பதாவது சிவிங்கி புலி உயிரிழந்தது. கடைசியாக இறந்த 2 சிவிங்கி புலியின் மரணத்துக்கு மழைக்காலத்தில் பூச்சிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுகளே காரணம் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

Kamalhassan Wishes MGR: ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர்.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்து!

தமிழ் சினிமாவின் மறைந்த உச்ச நட்சத்திரம் அதிமுக நிறுவனர், முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாள் ஜனவரி 17ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது.

ஒரு துணை நடிகராக 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி திரைப்படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதைத் தொடர்ந்து சுமார் 15 படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து வந்தவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு 1947ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ படத்தில் அமைந்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எனக் கொண்டாடப்பட்டார்.

தனது சுமார் 115 திரைப்படங்கள் வரையில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் பெரும்பாலானவை 100 நாட்களையும் கடந்து ஓடி வசூலை வாரி குவித்தது. அவருடைய எந்த படமும் தோல்வி அடைந்த படங்களின் லிஸ்டில் சேர்ந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல சோதனைகளை சந்தித்த சமயங்களில் கூட விடாமுயற்சியுடன் தன்னை ஒரு அதிரடி ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார். அதிரடி ஹீரோவாக அவர் நடித்த படங்களில் சமூகத்தின் பிரதிநிதியாக பல்வேறு சமூக பிரச்னைகளை எதிர்த்தும், அரசியல் சாயல்களை கொண்டும் இருந்தன.

படிப்படியாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் இருந்து துவங்கிய எம்.ஜி.ஆர், திமுகவில் இணைந்து செல்வாக்கு மிக்க தலைவராக ஆனார். பின்னர் சில கருத்துவேறுபாட்டால் அங்கிருந்து விலகி அதிமுக எனும் தனிக்கட்சியைத் தொடங்கி தலைவரானார். 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 130 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். சில மாதங்கள் தவிர அவர் இறக்கும் வரையில் முதலமைச்சராகவே இருந்தவர் எம்.ஜி.ஆர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாளுக்கு, இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்த்திரமும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் வாழ்த்து மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "தமிழ்த் திரையுலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, மக்கள் சகாப்தமாக திகழ்ந்த பேராளர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் இன்று.

ஏராளமான ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த ‘இளையவர்’. புரட்சித் தலைவரின் ஞாபகங்கள் இன்று போல் என்றும் வாழ்க…" எனத் தெரிவித்துள்ளார்.

Fox Jallikattu: வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? வனத்துறையினர் கடும் எச்சரிக்கை.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகையின்போது பல்வேறு வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்குவதை பார்த்திருப்போம். ஆனால் சேலத்தில் ஒரு சில கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு என்பது விசேஷமான ஒன்று.

வங்கா நரி ஜல்லிக்கட்டு என்பது ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிட்டு அடக்குவது போல வங்கா நரியை வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து ஓடவிட்டு பிடிக்கும் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "சேலத்தில் வங்கா நரி ஜல்லிக்கட்டுதான் சிறப்பு". அப்படிச் கடந்த ஆண்டு நடந்துமுடிந்த பொங்கல் விழாவின் போது சேலத்தில் ஒரு சில கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடைபெற்றிருக்கிறதாம். ‘நரி முகத்தில் முழிச்சா நல்ல யோகம் வரும்’ என்பதை நம்பி இன்னும் சில கிராமங்களில் காணும் பொங்கல் பண்டிகையின் போது வங்கா நரியை வனத்திலிருந்து பிடித்து வந்து ஊர்வலமாக அழைத்துவருகின்றனர். அவ்வாறு அழைத்து வரும் நரியை ஊருக்கு மத்தியில் ஓட விட்டு அதை இளைஞர்கள் பிடிப்பது என்பது ஒரு போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு இளைஞர்கள் வருடாவருடம் போட்டிக்கு முன்பே தங்களைத் தயார் படுத்திக்கொண்டு களத்துக்கு வருவதால், இதை ஜல்லிக்கட்டு என்றே அழைத்து வருகின்றனர். இது போன்று சிறிய விலங்கினங்களைக் கொடுமைப்படுத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒவ்வோர் ஆண்டும் அரசுத் தரப்பில் நினைவுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் இந்த வங்கா நரி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நாளை சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கிராமங்களில் வங்கா நரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முயற்சி செய்து வருகின்றனர். வங்கா நரி காட்டு விலங்கு என்பதால் வங்கா நரி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். வனத்துறையினரின் அனுமதி இல்லாததால் தடையை மீறி வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தினால் வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வனத்துறையினரின் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்தத் தகவல் அறிந்து வாழப்பாடி வனத்துறை அதிகாரி துரைமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று வங்கா நரியை மீட்டிருக்கின்றனர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், வனத்துறை எச்சரிக்கையை மீறி கடந்த ஆண்டு சின்னம்மநாயக்கன்பாளையத்தில் பொதுமக்கள் நரியைப் பிடித்துவந்திருக்கின்றனர். பின்னர் கொட்டாவாடியில் வழக்கு பதிவு செய்திருப்பதை அறிந்த கிராம மக்கள் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தாமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதேபோன்று இந்த ஆண்டும் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தினால் அவர்கள் மீது வன உயிரினம் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு வங்கா நதி ஜல்லிக்கட்டு சேலத்தில் நடத்தப்படுமோ என பரபரப்பு எழுந்துள்ளது

Ayodhya Ram Mandir National Award Winning Artisan Kunj Bihari Crafted Diamond Studded Replica Of Temple In 108 Days
Ram Temple Diamond Model : உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வைரம் பதிக்கப்பட்ட ராமர் கோயில் மாதிரி:
அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும் என்பது பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கோயிலின் புகைப்படங்களும் வீடியோக்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வைரம் பதிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் மாதிரியை கைவினை கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார். வாரணாசியை சேர்ந்த கைவினை கலைஞர் குஞ்ச் பிகாரி, ராமர் கோயில் மாதிரியை வடிவமைத்துள்ளார். இதன் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2.5 கிலோ எடையுள்ள ராமர் கோயில் மாதிரியை வடிவமைக்க அந்த கைவினை கலைஞர் 108 நாள்கள் எடுத்து கொண்டுள்ளார்.
வைரத்தை தவிர்த்து தங்கம், வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி கோயில் மாதிரி செய்யப்பட்டுள்ளது. 12 அங்குலம் உயரம், 8 அங்குலம் அகலம், 12 அங்குலம் நீளத்தில் கோயில் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குஞ்ச் பிகாரி கூறுகையில், “ராமர் மீதான அன்பின் காரணமாகவும் பக்தியின் அடையாளமாகவும் கோயில் மாதிரியை செய்தேன்.
கைவினை கலைஞரை வியந்து பார்க்கும் பக்தர்கள்:
குலாபி மீனாகரி கைவினை கலையை பயன்படுத்தி இந்த கோயில் மாதிரியை வடிவமைத்தேன். குலாபி மீனாகரி கலையை பயன்படுத்தி ராமர் கோயிலை வடிவமைத்தது இதுவே முதல்முறை. இந்த கலைப்படைப்பை உருவாக்க 108 நாட்கள் ஆனது. தங்கம் மற்றும் வெள்ளியைப் பயன்படுத்தி இதை செய்துள்ளேன். கோயிலின் மாதிரியில் ராம் லல்லாவின் தங்க சிலையும் உள்ளது.
ராமர் கோயில் மாதிரியை செய்ய நான் மேற்கொண்ட முந்தைய முயற்சிகள் சரியாகப் போகவில்லை. ஆனால், இந்த முறை ராமரின் ஆசீர்வாதத்தால் செய்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் முயற்சியால்தான் குலாபி மீனாகரி கலைப் படைப்பு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது.
வாரணாசி கைவினை கலைஞர்களின் தனித்துவமான திறன்களை உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்து சொல்லும் நோக்கில் குலாபி மீனாகரியின் நேர்த்தியான கலைப்படைப்புகளை பிரதமரும் உத்தர பிரதேச முதலமைச்சரும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அடிக்கடி பரிசுகளாக வழங்குவார்கள்” என்றார்.
Pro Kabaddi 2023 Tamil Thalaivas Defeat Patna Pirates 41-25 Ajinkya Pawar Tamil Sports News
ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று அதாவது ஜனவரி 16ம் தேதி தமிழ் தலைவாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில், தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்த சீசனில் 4வது வெற்றியை பதிவு செய்தது.
டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணியை முதலில் ரெய்டு செய்ய அழைத்தது. போட்டி தொடங்கியது முதலே தமிழ தலைவா அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. தொடங்கிய 13 நிமிடத்திற்குள் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை ஆல் அவுட் செய்து 12 – 6 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க தொடங்கியது.
தொடர்ந்து தமிழ் தலைவாஸ் வீரர் நரேந்தர் ரெய்டில் சிறப்பாக செயல்பட்டு பாட்னா வீரர்களை அவுட் செய்ய, தமிழ் தலைவாஸ் அணியின் பாயிண்ட்ஸ்கள் குவிய தொடங்கியது. மறுபுறம் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்களும் தொடந்து பாட்னா வீரர்களை எளிதாக வீழ்த்த, தமிழ் தலைவாஸ் அணியின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தது. போட்டியின் முதல் பாதி முடியும்போது தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகளும், பாட்னா பைரேட்ஸ் அணி 11 புள்ளிகளும் எடுத்து இருந்தது.
Leading at halftime. Thalaivas on top!#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #PKLSeason10 | #PATvCHE pic.twitter.com/1RImM1mPv1
— Tamil Thalaivas (@tamilthalaivas) January 16, 2024சரியாக, இரண்டாவது பாதி தொடக்கத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை இரண்டாவது முறையாக ஆல் அவுட் செய்தது தமிழ் தலைவாஸ் அணி. அடுத்ததாக ரெய்டுக்கு உள்ளே வந்த சுதாகரை ஹிமான்ஷு டிபென்ஸ் செய்து தூக்க, மீண்டும் மோஹித் சிறப்பாக டிபென்ஸ் செய்து சச்சினை வீழ்த்தினார்.
அப்போது தமிழ் தலைவாஸ் அணி 30-12 என முன்னிலை வகிக்க தொடங்கியது. அதன்பிறகு எழுச்சியுற்ற பாட்னா அடுத்தடுத்து சிறப்பாக விளையாடி 9 புள்ளிகளை தூக்கியது. கடைசி 6 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் அஜிங்கயா 1 புள்ளிகளை அள்ளிவர, உள்ளே வந்த சச்சின் 2 பேரை தூக்கினார். தொடர்ந்து, சுதாகரை மோஹித் தூக்கி சூப்பர் டேகிளில் 2 புள்ளிகளை பெற்று தந்தார். அடுத்தடுத்து தமிழ் தலைவாஸ் அணியினர் பாயிண்ட்ஸ்களை அள்ள, இறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணி 41-25 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியிடம் வீழ்ந்தது.
Well deserved#PATvCHE | #PKLSeason10 | #IdhuNammaTeam | #TamilThalaivas pic.twitter.com/EY1glOq2gG
— Tamil Thalaivas (@tamilthalaivas) January 16, 2024தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக அஜிங்க்யா பவார் 10 ரெய்டு புள்ளிகளை பெற்று அசத்தியிருந்தார்.

Rachitha Mahalakshmi Latest Post Against Dinesh Intension
Rachita Mahalakshmi : கடந்த மூன்று மாதங்களாக சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது. 22 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசன் டைட்டில் வின்னராக சின்னத்திரை நடிகை அர்ச்சனா வெற்றி பெற்றார்.
அந்த வகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் 28ம் நாள் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து பைனல்ஸ் வரை சிறப்பாக விளையாடி பலரின் அபிமானத்தையும் பெற்றார் சின்னத்திரை நடிகர் தினேஷ். இவர் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த முதல் நாளில் இருந்து சக போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்தாலும் விடாப்பிடியாக அவர்களுக்கு டஃப் கொடுத்து இறுதி வரை விளையாடி பைனல்ஸ் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார்.
நடிகர் தினேஷ் பிரிந்த தனது மனைவி ரச்சிதா மஹாலக்ஷ்மியை மகிழ்விப்பதற்காகவும், இந்த வெற்றியை சமப்பிப்பதற்காகவும் பிக்பாஸ் போட்டியில் நுழைந்ததாக அவரே பலமுறை நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார். முடிந்துபோன அவர்களின் திருமண வாழ்க்கையை புதுப்பித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே தினேஷ் ஆசையாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை தினேஷ் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதும் இதை வெளிப்படுத்துகையில் அதற்கு சரியான பதிலடி கொடுப்பதுபோல தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தினேஷை தாக்கி போஸ்ட் பகிர்ந்து வந்தார் ரச்சிதா.பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ரச்சிதாவை நேரில் சென்று பார்க்க இருப்பது குறித்து தினேஷ் கூறியதற்கு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இடம்பெற்ற வசனத்தை போஸ்ட் செய்துள்ளார் ரச்சிதா.
“தெரிஞ்ச பொண்ணா இருந்தாலும், தெரியாத பொண்ணா இருந்தாலும், கேர்ள் ஃப்ரண்டா இருந்தாலும், லவ்வரா இருந்தாலும், செக்ஸ் வர்கரா இருந்தாலும், ஏன் மனைவியா இருந்தாலும் அவங்க நோ சொன்னா நோ தான்” என்ற வசனத்தை காட்சியின் புகைப்படத்துடன் போஸ்ட் செய்து ‘புரிஞ்சா சரி’ என குறிப்பிட்டு போஸ்ட் பகிர்ந்துள்ளார்.ரச்சிதா – தினேஷ் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருவரும் 2015ம் திருமணம் செய்துகொண்டனர். மிகவும் பிரபலமான சின்னத்திரை ஜோடியாக வலம் வந்த ரச்சிதா – தினேஷ் ஜோடியின் திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்து போனது.
ரச்சிதா மீண்டும் தினேஷுடன் சேர்ந்து வாழ்வதில் சிறிதும் விருப்பப்படவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை என்பது அவர் வெளியிடும் ஒவ்வொரு போஸ்ட் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. ரச்சிதாவின் இந்த போஸ்டுக்கு பிறகு தினேஷ் பதிலளிப்பார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
Delhi Wakes Up To Thick Fog Again Over 100 Flights Affected Fog Continue 3 Days | Delhi Fog: டெல்லியை வாட்டும் குளிர்! ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்; 100 விமான சேவை பாதிப்பு
Delhi Fog: டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.
டெல்லியை வாட்டும் குளிர்:
வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதிக பனிமூட்டம் நிலவுவதால் எங்க பார்த்தாலும் புகைமூட்டம் போல் காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக பனிமூட்டதால் ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியான உளிட்ட மாநிலங்களில் அதிகாலை முதலோ கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. அதிகாலையிலேயே பனிமூட்டம் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, தேசிய தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
30 trains to Delhi from various parts of the country are running late due to dense fog conditions as on 16th January. pic.twitter.com/v9g14OlFwR
— ANI (@ANI) January 16, 2024பனிமூட்டம் நிலவியதால் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லி ரயில் நிலையத்தில் 30 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.
3 நாட்களுக்கு தொடரும்:
அடுத்த 3 நாட்களுக்கு வட மாநிலங்களில் பனிமூட்டம் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியாக பனிமூட்டம் நிலவுகிறது. கிழக்கு பகுதியில் பரவலாக பனிமூட்டம் நிலவுகிறது. குளிர்ந்த காற்றும், அடர்ந்த பனிமூட்டம் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும்.
#WATCH | Madhya Pradesh | Dense fog engulfed Gwalior this morning as cold wave conditions continue. Visuals shot at 8:15 am today. As per IMD, the city is likely to experience a minimum temperature of 6 degrees Celsius today. pic.twitter.com/huGI1c0T1C
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) January 16, 2024இதனால், டெல்லிக்கு இன்றும், நாளையும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் அடர்ந்த பனிமூட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய விவேக் ராமசாமி – அமெரிக்க அரசியலில் பரபரப்பு
Karthigai Deepam Episode January 16th Tamil Written Episode Zee Tamil Episode Story | Karthigai Deepam: தீபா கைக்கு வந்த பொறுப்பு.. அபிராமியிடம் வாங்கி கட்டிய ஐஸ்வர்யா
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்த வருட பொங்கல் வேலையை பார்ப்பதற்கான பொறுப்பு தீபா கைக்கு அந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது அபிராமி தீபாவைக் கூப்பிட்டு “எனக்கு எதிராவே நீ வரியா?” என்று கேள்வி கேட்க, அபிராமி “மருமகளாக யாரும் சலச்சவங்க கிடையாது என்பதை நிரூபிக்கத்தான் நான் இந்த பொறுப்பை ஏத்துக்கிட்டேன்” என்று சொல்கிறாள். ஆனாலும் அபிராமி இதை ஏற்க மறுத்து தீபாவிடம் வாக்குவாதம் செய்கிறாள்.
இதனை தொடர்ந்து ரூமுக்கு வரும் தீபா கார்த்திக்கிடம் நான் அத்தையை எதிர்ப்பதற்காக இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என சொல்கிறார். அதற்கு கார்த்திக் “நீங்க யார் பக்கம் என்று கேட்க உங்களுக்கு ஒரு பிரச்சனையா நான் வருவேன், அம்மாவுக்கு ஒரு பிரச்சனையா அவங்களுக்கும் நான் வருவேன். இந்த ரெண்டு பேருக்குமிடையில் இருக்க சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு நடுவே நான் வரமாட்டேன்” என சொல்லி விடுகிறான்.
அதைத்தொடர்ந்து மீனாட்சி “என்ன தீபா ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு போல?” என்று சொல்ல, “ஆமாம் அக்கா, நானும் இந்த வீட்டுக்கு தகுதியான மருமக தான் என்பதை நிரூபிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு இது” என சொல்கிறாள். அபிராமி தனியாக இருப்பதைப் பார்த்த ஐஸ்வர்யா, “தீபா உங்களை எதிர்க்கத்தான் இப்படி எல்லாம் பண்றா” என ஏற்றி விடுகிறாள்.
ஆனால் அபிராமி “போதும் நிறுத்து, பொறுப்பை நீ ஏத்துக்கிட்டு இருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா” என ஐஸ்வர்யாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் அபிராமி. இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
Rahul Gandhi Yatra : யாத்திரையின்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறாரா ராகுல் காந்தி?

உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.

மதகுருமார்களை தவிர 10,000 சிறப்பு விருந்தினர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:

ஆனால், அயோத்தி கோயில் விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க. நீண்ட காலமாக அரசியலாக்கி வருவதாக குற்றம் சுமத்திய காங்கிரஸ், ஆர்எஸ்எஸ்/பாஜக விழாவில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இதற்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சிக்கு வன்மம் இருப்பதாகவும் அக்கட்சி கடவுளை எதிர்ப்பதாகவும் சாடியுள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ராகுல் காந்தி, இதுகுறித்து முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார். இந்திய ஒற்றுமை நீதி பயணத்திற்கு மத்தியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற ராகுல் காந்தி, "பிரதமர் நரேந்திர மோடியும் ஆர்எஸ்எஸ்ஸும் இந்த நிகழ்வை அபகரித்தது மட்டும் இல்லாமல் தேர்தல் விழாவாக மாற்றியுள்ளது" என குற்றம் சுமத்தினார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ சுற்றி ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள கோயில் கும்பாபிஷேகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு தேர்தலும் அரசியலுமே காரணம். இந்து மதத்தின் மிகப்பெரிய அமைப்புகள் கூட விழாவைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தங்கள் பார்வையை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

யாத்திரையின்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறாரா ராகுல் காந்தி?

மத நம்பிக்கைகளை வெளிப்படையாக காட்டி கொள்ள வேண்டும் என அவசியமில்லை. ராமர் கோயிலுக்குச் செல்ல விரும்புவோர். செல்லலாம். அவர்கள் மிகவும் வரவேற்கத்தக்கவர்கள் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்" என்றார்.

வரும் ஜனவரி 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "உண்மையில் எனக்கு தெரியாது. பயண திட்டத்தை பார்த்துதான் சொல்ல முடியும். யாத்திரை செல்லும் வழியில் எங்காவது இருப்பேன். அஸ்ஸாமில் இருப்போம் என்று நினைக்கிறேன்" என்றார்.

கோயில் விழாவை புறக்கணித்திருப்பதன் மூலம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என விமர்சனம் வைக்கப்படுகிறதே என கேட்கப்பட்டதற்கு, "உண்மையை சொல்ல வேண்டுமானால், மதத்தை நம்புபவர்கள் மதத்துடனான தங்கள் உறவை தனிப்பட்ட முறையில் வைத்திருப்பார்கள். மதத்தைப் பயன்படுத்துவதில்லை என்பது என் எண்ணம்" என்றார்.

Anitha Sampath : பெற்றோர் இருக்கும்போதே பண்ணுங்க… அனிதா சம்பத் வைத்த வேண்டுகோள்

செய்தி வாசிப்பாளர், நடிகை, விளம்பர மாடல், பிக்பாஸ் பிரபலம் என ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர் அனிதா சம்பத். அவர் தன்னுடையா தந்தையின் பிறந்தநாளுக்கு உருக்கமான போஸ்ட் ஒன்றை கடந்த ஆண்டு போஸ்ட் செய்து இருந்தார். அந்த பதிவையே தற்போது ரீபோஸ்ட் செய்து ஒரு நீண்ட குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.

அதே பதிவை ரீபோஸ்ட் செய்கிறேன். அதே பதிவை நான் மீண்டும் பதிவிடுவதற்கு காரணம் அதைவிட என்னுடைய மன ஓட்டத்தை மிக சரியாக என்னால் வேறு ஒரு பதிவு மூலம் எழுதி விட முடியாது. புகைப்படம் போட்டு வாழ்த்து சொல்ற அளவுக்கு மனசு இன்னும் திடப்படல. ஊருக்குப்போன இன்னும் நீ வரல, வந்துடுவே… இத தவிர வேற எதையும் சிந்திக்கல. எல்லா பிறந்தநாளுக்கும் பேனா வாங்கி தருவே. இந்த முறை பேனாவுக்கு கொடுத்து வைக்கல.

ஹேப்பி பர்த்டே டாடி !

எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுந்து ஓடுவேன்! இந்த உலகம் என் பெயரை உச்சரிக்கும் வரை அனிதா சம்பத் என உன் பெயரையும் சேர்த்து தான் உச்சரிக்கும். உன் பெயரை நான் உள்ளவரை தாங்குவேன்!

"உலகத்தையே சுத்தி காட்டணும்னு நினைச்சு வந்தேன். இன்னும் அதை செய்ய முடியலை என்கிற ஃபீலிங்கோட தான் தினமும் வாழுறேன். இன்னும் போட்டோ போஸ்ட் பண்ணி விஷ் பண்ணவும், போட்டோவை எடுத்து பார்க்கவும் கூட மனசு திடப்படல. என்னைக்கும் அனிதா சம்பத் என உன் பெயரை என் பெயரோடு தாங்குவேன்.

ஹீரோவாக இருந்தாலும் அந்த ஹீரோக்களுக்கும் நாளுக்கு நாள் வயசு ஆகிக்கிட்டே போகும். முடிந்த அளவு இருக்கும்போதே நெனச்சதை எல்லாம் செஞ்சு கொண்டாடிடுங்க. இயர்லி ஹெல்த் செக்கப் எடுங்க. சின்னதா முடியலன்னு சொன்னாலும் லேட் பண்ணாம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடுங்க. செலவு பாக்காம ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டு வையுங்க.

வெளியூர் கூட்டிட்டு போங்க! முடிஞ்சா கொஞ்சம் பணம் சேர்த்து வைத்து பிளைட்ல கூட்டிட்டு போங்க!

அட்லீஸ்ட் இதெல்லாம் இருக்கும்போதே செஞ்சுட்டோம்னு மனச தேத்திக்கிற மரியாதையான விஷயங்களை பண்ணிடுங்க…

நமக்காக நிறைய கனவு காணுறது அவங்கதான். ஆனால் நிறைய பேருக்கு நம்ம அந்த நிலையை அடையும்போது அவங்க பார்க்க இருக்க மாட்டாங்க. எனக்கும் அப்படித்தான் ஆயிடுச்சு. பேரெண்ட்ஸ் கூட இருக்குற ஆசிர்வாதம் கெடச்சவங்க அவங்கள நல்லா வெச்சுக்கோங்க…" என குறிப்பு ஒன்றையும் அந்த பதிவுடன் சேர்த்து போஸ்ட் செய்துள்ளார் அனிதா சம்பத்.

Tamil Nadu Coastal Restoration Mission Sanctioned Rs 1675 Crores Plastic Trash Interceptor To Be Used
TN Coastal Restoration : காலநிலை மாற்றம் உலக நாடுகளின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் வெள்ளம் ஏற்படுவதற்கும் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சூப்பர் திட்டம்:
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், சுற்றுச்சூழல் அமைக்கதத்தின் பெயரை சுற்றச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகம் என பெயர் மாற்றியது. அதன் தொடர்ச்சியாக, காலநிலை மாற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் மதிப்பில் காலநிலை மாற்ற தணிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அது பல்வேறு கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நான்காவது காலநிலை மாற்ற தணிப்பு திட்டம் (தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையாகப் பயன்படுத்தும் திட்டம்) சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது, தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு பணி என்றும் அழைக்கப்படுகிறது. உலக வங்கியின் உதவியில் 1,675 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடல் அரிப்பை கட்டுப்படுத்தி கடல் மாசுபாட்டைக் குறைத்து கடல் பல்லுயிர்களைப் பாதுகாப்பதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டிருந்தார்.
வாவ் சொல்ல வைக்கும் தமிழ்நாடு அரசு:
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு புளூ கார்பன் ஏஜென்சி என்ற நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. சதுப்புநிலங்கள், உப்பு நீரில் வளரும் தன்மை கொண்ட சதுப்பு நில காடுகள், கடல் தாவரங்கள் உள்ளிட்ட கடலோர சுற்றுச்சூழல் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதனை மீட்டெடுத்து காக்க தமிழ்நாடு புளூ கார்பன் ஏஜென்சி உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டம், சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கார்பன் வரவுகளை வர்த்தகம் செய்வதற்கான ஒரு கட்டமைப்பையும் உருவாக்க உதவும்.
இதற்கு மத்தியில், தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு பணி திட்டத்தின் ஒரு பகுதியாக ஆறு மற்றும் கடற்கரைகளில் பிளாஸ்டிக் கலப்பதை தவிர்க்கும் நோக்கில் பிளாஸ்டிக் குப்பை இன்டர்செப்டரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், 14 கடலோர மாவட்டங்களில் தமிழ்நாடு கடற்கரை மீட்பு பணி திட்டத்தை அமல்படுத்த 1675 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், “நமது ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் பிளாஸ்டி கலப்பதை தடுக்க பிளாஸ்டிக் குப்பை இன்டர்செப்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள 14 கடலோர மாவட்டங்களுக்கு ரூ.1675 கோடி செலவில் தமிழக கடலோர மறுசீரமைப்பு பணிக்கு அனுமதி அளித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
Plastic trash interceptor could be a very effective intervention to prevent plastic getting into our rivers and oceans. CM Thiru @mkstalin has just sanctioned the TN Coastal Restoration Mission for 14 coastal districts in TN at a cost of Rs 1675 Crores. We will work on several… pic.twitter.com/cA9P6Das2a
— Supriya Sahu IAS (@supriyasahuias) January 16, 2024பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்க பிளாஸ்டிக் குப்பை போன்ற பல முயற்சிகளில் நாங்கள் பணியாற்றுவோம். பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்க பிளாஸ்டிக் குப்பை இன்டர்செப்டரை பயன்படுத்துவது போன்ற பல திட்டங்களில் பணியாற்ற உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Virat Kohli Receives Invitation For Pran Pratishtha Ceremony Of Ram Mandir In Ayodhya Latest Tamil Sports News | Ayodhya Ram Temple: கும்பாபிஷேகத்தில் பங்கேற்பார்களா? விராட் கோலி
Pran Pratishtha : அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி கும்பாபிஷேகம் விழா நடத்தப்பட உள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்தநிலையில், அயோத்தியில் நடைபெறவுள்ள இந்த கும்பாபிஷேக விழாவுக்காக இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அயோத்தியில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பு தற்போது வந்துள்ளது. இதுகுறித்தான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரலான படத்தில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான அழைப்புக் கடிதத்துடன் காணப்பட்டனர்.
Virat Kohli and his wife Anushka Sharma, received an invitation for the Pan Pratishtha of Shree Ram at Ayodhya. 😇🙏 Kohli traveled directly to Mumbai after the match to receive the invitation himself and now going to Bangalore for national duties. What a guy. ❤️ pic.twitter.com/ZuGt3prwwR
— 𝐊𝐨𝐡𝐥𝐢𝐧𝐚𝐭!𝟎𝐧_👑🚩 (@bholination) January 16, 2024முன்னதாக நேற்று முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. ஜார்க்கண்ட் பாஜக அமைப்பு அமைச்சர் கர்மவீர் சிங், ராம் மந்திர் பிரான் பிரதிஸ்தாவுக்கான அழைப்புக் கடிதத்தை மகேந்திர சிங் தோனியிடம் வழங்கினார். அதன்பிறகு, தோனி தன்னை அழைக்க வந்த விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல், கடந்த ஜனவரி 13-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு வந்தது.
இதையடுத்து, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு விராட் கோலி, முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் போன்ற கிரிக்கெட் வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
6 ஆயிரம் பேருக்கு அழைப்பு:
வருகின்ற ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பாபிஷேகத்திற்கு சுமார் 6 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர்களை தவிர இந்த விழாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பிரபல தொழிலதிபர்களும் வருகை தர இருக்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்கள்
பிரதமர் நரேந்திர மோடி , உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது .
வரலாற்று சிறப்புமிக்க பழங்குடியினர் பங்கேற்பு
இந்திய வரலாற்றில் முதல்முறையாக மலைகள், காடுகள், கடலோரப் பகுதிகள், தீவுகள் போன்ற பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் ஒரே இடத்தில் இதுபோன்ற விழாவில் பங்கேற்கின்றனர். இது தனித்துவமாக பார்க்கப்படுகிறது. இதனுடன், சைவ, வைஷ்ணவம், ஷக்தா, கணபத்யா, பாத்யா, சீக்கிய, புத்த, ஜைன, தஷ்னம் சங்கர், ராமானந்த், ராமானுஜ், நிம்பர்கா, மாதவ, விஷ்ணு நமி, ராம்சனேஹி, கிசாபந்த், கரிப்தாசி, கௌடியா, கபீர்பந்தி, வால்மீகி, சங்கர்தேவ் (அசாம்) , மாதவ் தேவ், இஸ்கான், ராமகிருஷ்ணா மிஷன், சின்மோய் மிஷன், பாரத் சேவாஷ்ரம் சங்கம், காயத்ரி பரிவார், அனுகுல் சந்திரா தாகூர் பாரம்பரியம், ஒடிசாவின் மகிமா சமாஜ், அகாலி, நிரங்காரி, நாம்தாரி (பஞ்சாப்), ராதாஸ்வாமி மற்றும் சுவாமிநாராயண், வர்காரி, வீர ஷைவம் போன்ற பிரிவினரும் பங்கேற்க இருக்கின்றனர்.
Mahesh Babu Clarifies The Usage Of Ayurvedic Beedi In The Film Guntur Kaaram
Guntur Kaaram : தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘குண்டூர் காரம்’. ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், ஜெகபதி பாபு, சுனில், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் ஜானரில் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மகேஷ் பாபு – த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் காம்போ என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் இப்படம் வெளியான முதல் நாள் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் திரண்டதால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டுமே ரூ.94 கோடி என நெருங்கிய டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் மகேஷ் பாபு நடித்த படங்களில் அதிக ஓப்பனிங் பெற்ற படம் இதுவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் அவரின் ரசிகர்கள் குண்டூர் காரம் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
‘குண்டூர் காரம்’ படத்தில் நடிகர் மகேஷ் பாபு, ரவுடித்தனம் கொண்ட ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். எந்நேரம் புகையும் பீடியுமாக லுங்கியில் அலட்டலான ஒரு பாடி லாங்குவேஜ் கொண்டு படம் முழுக்க ட்ராவல் செய்துள்ளார் மகேஷ் பாபு. இதனால் அவர் படம் முழுக்க பீடி குடித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் பீடி பயன்படுத்தியது குறித்து விளக்கம் ஒன்றை கூறி இருந்தார்.
“குண்டூர் காரம் படத்தில் நான் பயன்படுத்தியது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி. படப்பிடிப்பு துவங்கியபோது ஒரிஜினல் பீடியை முதல்முறை பயன்படுத்த கொடுத்தார்கள். பயன்படுத்திய கொஞ்ச நேரத்திலேயே தலைவலி வந்துவிட்டது.இது இயக்குநருக்கு தெரியவந்தது. அதற்கு மேல் அந்த பீடியை பயன்படுத்த முடியாது என நான் கூறியதால், இந்த ஆயுர்வேத பீடியை கொடுத்தார்கள். இதை பயன்படுத்துவதால் எந்த பிரச்சினையும் வராது என உறுதிப்படுத்திய பிறகுதான் பயன்படுத்தினேன். அது நன்றாக இருக்கவே படம் முழுக்க அதைப் பயன்படுத்தினேன். புகைபிடிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. மேலும் அதை நான் மற்றவர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கவும் மாட்டேன்” என தெளிவான விளக்கம் கொடுத்து இருந்தார் நடிகர் மகேஷ் பாபு.

Jallikattu 2024: Prabhakaran From Podumbu Village, Who Tamed 14 Bulls, Was Awarded A Nissan Car On Behalf Of Minister Udayanidhi Stalin
Palamedu Jallikattu : உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கி மொத்தம் 10 சுற்றுடன் நிறைவு பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 10 சுற்றுகள் நடந்த நிலையில் 840 காளைகள் அவிழ்க்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னக்கருப்புக்கு சிறந்த காளைக்கான கார் பரிசாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக சிறந்த மாடுபிடி வீரர் மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் அவர்களுக்கு (14 காளைகள்) கார் பரிசாக வழங்கப்பட்டது.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வெற்றிபெற்ற காளையின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கு பரிசுகளை வழங்கினார்கள். பரிசுகள் வழங்கப்பட்டபோது மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு:
மாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு போட்டி காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. முதலில் கிராம காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 840 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
போட்டி தொடங்கியவுடன் முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. போட்டியில் காளைகளுக்கு சவால் விடுத்து மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். மாடுபிடி வீரர்களையும் துவம்சம் செய்த காளைகள் வெற்றிபெற்றது.
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களமாடி 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற மாடுபிடி வீரருக்கு நிசான் கார் மற்றும் APACHE பைக் பரிசும், பரிசுகோப்பையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாவது பரிசாக APACHE பைக் பரிசும் வழங்கப்பட்டது.
போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளையான புதுக்கோட்டை மாவட்டம் இராயவயல் சின்னக்கருப்பு மாட்டின் உரிமையாளருக்கு நிசான் கார் பரிசாகவும், 2 ஆம் இடத்தில் சிறப்பாக களம் கண்ட தேனி மாவட்டம் கோட்டூர் அமர்நாத் என்பவரது காளைக்கு பசுங்கன்றுடன் கூடிய நாட்டுபசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மற்றும் சிறந்த காளைகளுக்கும் ,, குக்கர், எல்.இ.டி TV, , தங்ககாசு, கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டது.
இதேபோன்று போட்டியின்போது பணியில் இருந்து காவல்துறை டிஎஸ்பி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் இருவர் மற்றும. மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 46 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் 11 பேர் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல் பரிசு வென்றவர் யார்..?
பாலமேடு ஜல்லிக்கட்டில் பிரபாகரன் என்பவர் 14 மாடு பிடித்து முதல் இடம் பிடித்தார். அவரை தொடர்ந்து, கடந்தாண்டு பாலமேட்டில் முதல் பரிசு பெற்ற தமிழரசன் இந்தாண்டு 2-வது இடம் பிடித்தார். 14 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்த மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல், இரண்டாம் இடம் பிடித்த தமிழரசனுக்கு Apache பைக் பரிசாக வழங்கப்பட்டது.

Supreme Court Delivers Split Verdict On Former Andhra Pradesh CM Chandrababu Naidu Plea To Quash AP Skill Development Case
Chandrababu Naidu : தனக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
ஊழல் வழக்கில் சிக்கிய சந்திரபாபு நாயுடு:
ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்த வழக்கில் ஆந்திர பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சந்திரபாபு நாயுடு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வந்த சந்திரபாபு நாயுடுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:
இந்த நிலையில், திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா திரிவேதி ஆகியோர் இன்று வழங்கியுள்ளனர். இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டதும் காவலில் எடுத்து விசாரித்ததும் செல்லும் என இரண்டு நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வழங்கினர்.
ஆனால், ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17Aஇன் கீழ் ஆளுநரிடம் அனுமதி பெறுவது தொடர்பாக இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். சட்ட பிரிவு 17Aஇன் கீழ் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு ஆளுநரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என மூத்த நீதிபதியான அனிருத்தா போஸ் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஆனால், அப்படி அனுமதி பெற தேவையில்லை என பீலா திரிவேதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முன்பே சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, புதிதாக சேர்க்கப்பட்ட சட்ட பிரிவு 17A இந்த விவகாரத்தில் பொருந்தாது என நீதிபதி பீலா திரிவேதி விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து, இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் பட்டியலிடுவதற்காக இந்திய தலைமை நீதிபதியிடம் வழக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Cinema Headlines Today January 16th Captain Miller Vs Ayalaan Actor Vijay Sethupathy Birthday
ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்பட்ட தங்கலான்.. தொடர்ந்து தள்ளிப்போகும் படங்கள்.. சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்!
நடிகர் விக்ரம் – இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்கவயலில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பீரியாடிக் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் படிக்க
“இதை எதிர்பார்க்கலல” கண்களில் கனல் தெறிக்கும் கங்குவா புது போஸ்டர் ரிலீஸ்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். மேலும் படிக்க
ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர்.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்து!
தமிழ் சினிமாவின் மறைந்த உச்ச நட்சத்திரம் அதிமுக நிறுவனர், முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாள் ஜனவரி 17ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது.
ஒரு துணை நடிகராக 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி திரைப்படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதைத் தொடர்ந்து சுமார் 15 படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து வந்தவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு 1947ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ படத்தில் அமைந்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எனக் கொண்டாடப்பட்டார். மேலும் படிக்க
கேப்டன் மில்லர், அயலான் 4 நாள் வசூல் நிலவரம்: தனுஷ் Vs சிவகார்த்திகேயன், ஜெயித்தது யார்?
அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு முன்னதாக பதிவிட்டுள்ளது. மற்றொருபுறம் கேப்டன் மில்லர் படத்தின் வசூல் நிலவரம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், ஐந்தாவது நாளான இன்று இப்படத்தின் வசூல் எகிறுமா, கேப்டன் மில்லரை அயலான் தூக்கி சாப்பிடுமா அல்லது கேப்டன் மில்லர் மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்குமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். மேலும் படிக்க
துணை நடிகர் முதல் இந்தியாவின் உச்ச நட்சத்திரம்.. “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள்!
ஒரு நட்சத்திர நடிகராக உருவாவதற்கு முன் விஜய் சேதுபதியை நாம் அனைவரும் சில படங்களில் பார்த்து கடந்து சென்றிருப்போம். புதுப்பேட்டை படத்தில் சிறு வசனங்கள். வெண்ணிலா கபடிக் குழுவில் கபடி ப்ளேயராக, சுந்தரபாண்டியில் வில்லனாக, நான் மகான் அல்ல படத்தில் கடன் கேட்கும் நண்பனாக, இப்படியான சில சில கதாபாத்திரங்களை இன்று திரும்பி பார்த்தால், ஒரு நல்ல நடிகன் பெயர் அடையாளம் எதுவும் இல்லாமல் ஒரு சில காட்சிகளில் மக்களிடம் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று சொல்லலாம். விஜய் சேதுபதி அப்படியான ஒரு நடிகர்! மேலும் படிக்க

Shahi Idgah Survey :அயோத்தியை போன்று கிருஷ்ண ஜென்மபூமி வழக்கால் சர்ச்சை.. உச்சநீதிமன்றம் அதிரடி

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கி, அங்கு அயோத்தி கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, அயோத்தி வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரா மசூதி வழக்கு பூதாகாரமாக வெடித்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் ஷாஹி இத்கா மசூதி அமைந்திருக்கும் இடத்தில் பகவான் கிருஷ்ணர் பிறந்ததாக இந்துக்கள் சிலர் நம்புகின்றனர்.

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கால் சர்ச்சை:

எனவே, மசூதி அமைந்திருக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இந்து அமைப்புகள் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆய்வு மேற்கொள்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய தரப்பு ஆட்சேபனை தெரிவித்தனர். இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

அனுமதி வழங்கியது மட்டும் இன்றி, ஆணையம் ஒன்றை அமைத்து, அதற்கு தலைவராக வழக்கறிஞர் ஒருவரை நியமித்து அவரின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டது. இச்சூழலில், ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மசூதி தரப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகிய நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, "ஷாஹி இத்கா மசூதியில் ஆய்வு செய்ய ஆணையம் அமைத்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு" தடை விதித்துள்ளது. இருப்பினும், உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு:

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து பேசிய உச்ச நீதிமன்றம், "எதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்பதை மனுதாரர் தெளிவாக கூறவில்லை. எதற்காக என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும். இது தவறு. நீங்கள் எதற்காக ஆணையம் அமைக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவாகக் கூற வேண்டும். அதை நீதிமன்றத்திற்கு விட்டுவிடுகிறீர்கள்" என தெரிவித்தது.

முன்னதாக, நீதிமன்றத்தில் மசூதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தஸ்னீம் அகமதி, "வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991இன் படி, ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது. எனவே, உயர்நீதிமன்றம் இப்படி உத்தரவு பிறப்பித்திருக்க கூடாது" என்றார்.

கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் 13.37 ஏக்கர் நிலம், தனக்கு சொந்தம் எனக் கோரி லக்னோவை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் கட்டப்பட்டுள்ள ஷாஹி இத்கா மசூதியை இடிக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 1669-70களில் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் கிருஷ்ணர் பிறந்த இடத்திற்கு அருகில் உள்ள கத்ரா கேசவ் தேவ் கோயிலின் 13.37 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ சூல ரூபத்திற்கு தாமரை குளத்தில் தீர்த்தவாரி

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் என்றும், தெற்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை தட்சிணாயன புண்ணிய காலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைப்பார்கள். மகாபாரத கதையின்படி அம்பு படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் மகரதமாதம் என்று அழைக்கப்படும். தைமாதம் பிறந்து தான் உயிர்நீத்தார் என்று கூறுகிறது. மேலும் தைமாதம் முதல் நாள் மகர மாதபிறப்பின் போதுதான் தமிழ்நாட்டில் தைபொங்கல் கொண்டாடப்படுகிறது. சபரிமலையில் மகரஜோதியை பக்தர்கள் தரிசிக்கின்றனர். மேலும் இந்த காலத்தில் தான் சூரியன் உக்கிரம் ( வெயில் தாக்கம் ) தொடங்குகின்றது.

இந்தநிலையில் தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தட்சிணாயன புண்ணிய காலம், உத்தராயண புண்ணிய காலம், திருக்கார்த்திகை தீபம் ஆகிய 3 திருவிழாக்களுக்கு அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்கக்கொடி மரத்திலும், ஆடிப்பூரத்தில் உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்திலும் கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சமேத உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் அண்ணாலையார் சன்னதி அருகே உள்ள தங்க கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் சமேத உண்ணமுலை அம்மனுடன் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளி,சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயர தங்கக் கொடி மரத்தில் காலை 6.20 மணிக்கு தனூர் லக்கினத்தில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றும் விழா நடைபெற்றது. விழா நாட்களில் காலையும், மாலையும் மாட வீதியில் சந்திரசேகர் மற்றும் விநாயகர் உற்சவ உலா நடைபெற்றது.

உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ நிறைவு நாள் என்பதால் அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் சுவாமி வலம் வந்து திருவண்ணாமலை நகரில் உள்ள தாமரை குளத்தின் அருகே எழுந்தருளினார். அப்போது அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபத்திற்கு தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமங்கல மந்திரங்கள் முழுங்க வேத வாத்தியங்களுடன் சூலத்திற்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், மூலிகை அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பிறகு சூலத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமாண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Maari Serial Television Zee Tamil January 16th Episode Written Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பொங்கலைக் கொண்டாட தாராவின் குடும்பத்தினர் எல்லோரும் மாரி வீட்டிற்கு வந்திருந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது பொங்கல் கொண்டாட மாரி ஏற்கனவே எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்க, தேவி காலனி மக்களும் அந்த இடத்திற்கு வந்து விடுகின்றனர். பொங்கலுக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வைத்திருப்பதாக மாரி சொல்ல, தாரா தாங்களும் வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து வந்திருப்பதாக சொல்கிறாள்.
அதனால் ஜெகதீஷ் “இரண்டு பொங்கலாகவே வச்சிடுவோம்” என்று சொல்கிறார். மேலும் அப்பகுதி மக்கள் “யாருடைய பொங்கல் முதல்ல பொங்குதுன்னு போட்டி வச்சுக்கலாம்” என்று சொல்கின்றனர். மேலும் “வலது பக்கம் தூங்கினால் தான் நல்லது, தெற்கு பக்கம் தூங்கினால் அபசகுணம்” எனவும் சொல்ல, மாரி மற்றும் தாரா இருவரும் பொங்கல் வைக்கத் தயாராகின்றனர்.
முதலில் மாரியின் பொங்கல் பொங்க கூடாது எனத் திட்டமிடும் தாரா, சங்கர பாண்டியை வைத்து மாரியின் விறகில் தண்ணீர் ஊற்ற வைக்கிறார். பிறகு தாரா அடுப்பைப் பற்ற வைத்து பொங்கலை வைக்கத் தொடங்க , மாரி அடுப்பைப் பற்ற வைக்க கஷ்டப்படுகிறாள். இருந்தாலும் அடுப்பைப் பற்றவைத்து எரியவிடத் தொடங்க இறுதியில் மாரி வைத்த பொங்கல் வலது பக்கம் பொங்கி விழுகிறது.
அடுத்து தாராவின் பொங்கல் தெற்கு பக்கம் பொங்கி விழ, சங்கர பாண்டி தெற்கு பக்கம் பொங்கி விழக்கூடாது என்று சொன்ன பாட்டியை கூட்டிச் சென்று “அப்படி விழுந்தால் என்ன ஆகும்” எனக் கேட்க, “அந்த நபர் செத்துப் போயிடுவாங்க” என்பது ஐதீகம் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
Bigg Boss 7 Tamil Contestant Maya Krishnan Pens A Note To Title Winner Archana
பிக்பாஸ் சீசன் 7
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மொத்தம் 106 நாட்கள் நடைபெற்றது. பல்வேறு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, என்டர்டெயின்மெண்ட், சர்ச்சைகள் எனத் தொடர்ந்தது. கூடுதலாக வைல்டு கார்ட் ரவுண்டில் மேலும் சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த அர்ச்சனா இந்த சீசனின் டைட்டில் வின்னர் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
விமர்சனங்கள்
இறுதியா தினேஷ், மணி, மாயா, விஷ்ணு, அர்ச்சனா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் ஃபைனலில் வந்து சேர்ந்தார்கள். இந்த ஐந்து நபர்களில் அர்ச்சனா அதிக வாக்குகள் பெற்று வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பல்வேறு மாற்றுக் கருத்துகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. கூடுதலாக வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தார்.
கமல்ஹாசன் தோற்றுவிட்டதாகவும் அர்ச்சனாவை வெற்றியாளராக தேர்வு செய்தது ஒற்றைச் சார்புடைய முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் மாயா கிருஷ்ணன் மாதிரியான தகுந்த போட்டியாளர்கள் இருந்தும், அவர்களை விடுத்து அர்ச்சனாவை தேர்வு செய்தது குறித்து அவர் விமர்சித்திருந்தார். பணம், மற்றும் ப்ரோமோஷன்களில் மூலமாக அர்ச்சனாவுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளதாக வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.
அர்ச்சனாவுக்கு ஆதரவு கொடுத்த மாயா கிருஷ்ணன்
இப்படியான நிலையில் அர்ச்சனாவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை. பிக்பாஸ் வீட்டில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி அர்ச்சனா தைரியமாகப் பேசியதே மக்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த ஆதரவுக்கு காரணம் என்று அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில், மாயா கிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் அர்ச்சனாவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
Dear Archana, Congratulations on winning the title.Nee nenacha madhiri un vazhkai la poo pookum. Chedi vaadi pora mari irundha enna koopdu, naa vandhu thanni oothuren. Like I promised I’ll be there for you.#PooPookumNanba
— Maya S Krishnan (@maya_skrishnan) January 16, 2024தனது எக்ஸ் பக்கத்தில் மாயா கிருஷணன் ‘ டியர் அர்ச்சனா..டைட்டில் வின் பண்ணதுக்கு என்னோட வாழ்த்துகள். நீ நெனச்ச மாதிரி உன் வாழ்க்கையில பூ பூக்கும். செடி வாடிப்போற மாதிரி இருந்தா என்ன கூப்டு, நான் வந்து தண்ணி ஊத்தறேன். நான் முன்னாடியே சொன்ன மாதிரி நான் எப்போவும் உன்கூட இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
As Bigg Boss Season 7 Is Over Kamal Haasan Throws A Party For All The Contestants
பிக்பாஸ் சீசன் 7:
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி மொத்தம் 23 போட்டியாளர்களுடன் கோலாகலமாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. பவா செல்லதுரை, சரவண விக்ரம், மணி சந்திரா, மாயா, யுகேந்திரன், விசித்ரா, பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், ரவீனா, நிக்சன், அனன்யா ராவ், ஜோவிகா, விஷ்ணு விஜய், பூர்ணிமா, அக்ஷயா, ஐஷூ ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், 28-ஆம் நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அர்ச்சனா, கானா பாலா, தினேஷ், ஆர்.ஜே.பிராவோ, அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சுமார் ஒரு மாதம் கழித்து வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு சூடுபிடிக்கத் தொடங்கியது.தொடர்ந்து பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு விவகாரம், அர்ச்சனா குழுவாக அட்டாக் செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ச்சி ஜெட் வேகத்தில் சூடுபிடித்த நிலையில், அதன் பிறகு பரபரப்புகளுக்கும் கண்டெண்ட்களுக்கும் பஞ்சமில்லாமல் 105 நாள்களை அடைந்தது.
டைட்டிலை வென்ற அர்ச்சனா:
நேற்று முன் தினம் ஜன.14-ஆம் தேதி பிக்பாஸ் க்ராண்ட் ஃபினாலே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாட்டமாக நடைபெற்ற நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்றார். பிக்பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளர் படத்தை வென்றிருக்கிறார். மேலும், பிக்பாஸ் டைட்டிலை வென்ற இரண்டாவது பெண் என்று பெருமையையும் பெற்றிருக்கிறார் அர்ச்சனா.மேலும், மணி சந்திரா ரன்னர்-அப்பாக உருவெடுத்த நிலையில், அடுத்தடுத்த இடங்களை மாயா, தினேஷ், விஷ்ணு ஆகியோர் பெற்றனர். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு பல வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், ட்ரோலும் செய்யப்பட்டு வருகிறார்.
தடபுடலாக விருந்து கொடுத்த கமல்:
இந்த நிலையில், பிக்பாஸ் முடிவடைந்தவுடன் போட்டியாளர்களுக்கும், பிக்பாஸ் டீமிற்கும் நடிகர் கமல்ஹாசன் விருந்து வைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த முறை ஒட்டுமொத்த டீமிற்கும் பிரம்மாண்டமான மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார். பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த டீமும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.பிக்பாஸ் செட் அமைக்கப்பட்ட ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த மதிய உணவு விருந்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருந்தில் சுமார் 43 வகையான உணவுகள் பரிமாறப்பட்டிருக்கிறது. அதாவது, பெரி பெரி சிக்கன், மட்டன் சுக்கா, இறால் தொக்கு, கடாய் சிக்கன் குழம்பு, கீரனூர் மட்டன், வெஜ் டிக்கா, வெஜ் ஆம்லேட், தென்னங்குருத்து பொறியல், நாகர்கோவில் அவியல், மட்டன் தம் பிரியாணி, மட்டன் குழம்பு, நெத்திலி மீன் குழம்பு, ஆட்டு கோழி ரசம், ஆட்டு கால் சூப் என இப்படி பலவிதமான உணவுகள் பரிமாறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Kaanum Pongal 2024: 15,000 Policemen Will Be Deployed Across Chennai City Ahead Of Kaanum Pongal
சென்னையில் நாளை காணும் பொங்கலை முன்னிட்டு கூட்டம் அலைமோதும் என்பதால் மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இதையடுத்து, சென்னை மாநகர் முழுவதும் 15, 000 காவல்துறையினர் மற்றும் 1,500 ஊர்காவல் படையினர் 2என மொத்தம் 16,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
மேலும் சில கட்டுப்பாடுகள்…
பொங்கலுக்கு அடுத்த இரண்டாம் நாளான காணும் பொங்கலில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு மகிழ்வர். இந்த நாளில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சென்னையில் உள்ள கடற்கரை முழுவதும் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடற்கரையோரமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலமாக ரோந்துபணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடற்கரையில் பெற்றோர்களோடு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை. அதன்படி, சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள், காவல் உதவி மையங்கள், தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது?
பொங்கல் விழாவின் நான்காவது நாளும், பொங்கலுக்கு அடுத்த இரண்டாவது நாளுமான பொங்கலை காணும் பொங்கல் என்று அழைக்கிறோம். காணும் பொங்கல் கன்னிப் பொங்கல் என்றும், கணுப் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. காணும் பொங்கலின் சிறப்பே உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை காணுதல் குடும்பப் பெரியவர்களிடம் ஆசி பெறுதல் போன்றவை நடக்கும். மேலும், பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான நாளை உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இந்தநாளில் நடைபெறும்.
கன்னிப் பொங்கல் என்றால் என்ன..?
கன்னிப் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமணம் ஆகாத பெண்கள் ஒரு தட்டில் பழங்கள், தேங்காய், பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களுடன் அருகில் இருக்கும் ஆறு அல்லது குளங்களுக்கு சென்று வழிபடுவார்கள். அதாவது, ஆற்றங்கரை அல்லது குளக் கரையில் திருமணம் ஆகாத பெண்கள் எல்லாருமாக ஒன்று சேர்ந்து கும்மியடித்து பாடி இறை வழிபாடு நடத்துவார்கள். மேலும், காணும் பொங்கல் அன்று சிலர் நோன்பு கடைபிடித்து சிறப்பு வழிபாடு செய்வதும் உண்டு. இந்த வழிபாடு உடன்பிறந்தவர்களின் நலனுக்காக செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
காணும் பொங்கல் அன்று வீட்டில் பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடு நடத்துவதையும் சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர். சிலர், தங்கள் குல தெய்வ கோயில்களுக்கே சென்று பொங்கல் வைத்து வழிபாடும் செய்வார்கள்.
மாஸ்டர் ஸ்ட்ரோக்.. ஜெகன் மோகனுக்கு செக்.. ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய். எஸ். சர்மிளா நியமனம்
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம்தான்.
காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம்:
இப்படியிருக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி, தனி கட்சியை தொடங்கினார். மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஆந்திர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துவிட்டது.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு, நடத்தப்பட்ட முதல் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும், இரண்டாவது தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியை தோற்கடித்து முதலமைச்சரானார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணைந்து அவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா செயல்பட்டு வந்தார். ஆனால், அவர்களுக்கு இடையே பிரச்னை வெடிக்க, தனி கட்சியை தொடங்கி, தெலங்கானா மீது தனது கவனத்தை திருப்பினார் ஒய்.எஸ். சர்மிளா. தெலங்கானாவில் கே.சி.ஆருக்கு எதிராக காங்கிரஸ் பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்ததை தொடர்ந்து, தெலங்கானா தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தார் ஒய்.எஸ். சர்மிளா.
பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த காங்கிரஸ்:
இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் ஒய்.எஸ். சர்மிளா இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டும் இன்றி அவருக்கு பெரிய பதவி கொடுக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. வெளியான தகவல்களை உண்மையாக்கும் வகையில், ஒய்.எஸ். சர்மிளா, சமீபத்தில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் மாநில தலைவராக பதவி வகித்து வந்த கிடுகு ருத்ர ராஜூ, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய தலைவராக ஒய்.எஸ். சர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் 2 மாதங்களில் மக்களவை தேர்தலுடன் ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், ஆந்திர மாநிலத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்து மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ். சர்மிளாவுக்கு தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனது சொந்த சகோதரரும் தற்போது ஆந்திர முதலமைச்சராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராகவே அவர் அரசியல் செய்யவிருப்பது காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆக பார்க்கப்படுகிறது.
கர்நாடக, தெலங்கானா மாநிலங்களை தொடர்ந்து தெற்கில் தனது செல்வாக்கை மீட்டெடுக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆந்திரம் மாநிலம் மிகப்பெரிய சவாலாக இருக்க போகிறது. ஏன் என்றால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பல தலைவர்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டனர்.
பலவீனமான காங்கிரஸ் கட்சியை மீட்டெடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ். சர்மிளா வெற்றிபெற வைப்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.