நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்குகிறார். இதையடுத்து, 2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகை சிறப்பு பரிசு – ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
சிறந்த வில்லன் நடிகர் – அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
சிறந்த நடிகர் – மாதவன் (இறுதிச்சுற்று)
சிறந்த நடிகை – ஜோதிகா (36 வயதினிலே)
சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு – கௌதம் கார்த்திக் (வை ராஜா வை)
சிறந்த இயக்குநர் – சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
சிறந்த கதையாசிரியர் – மோகன் ராஜா (தனி ஒருவன்)
சிறந்த இசையமைப்பாளர் – ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்)
சிறந்த ஒளிப்பதிவாளர் – ராம்ஜி (தனி ஒருவன்)
மேலும் காண