சட்டமன்ற கூட்டத்தொடர் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் ஆகியோர் சட்டமன்றத்தில் பதிலளித்தனர். இந்தநிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகிறது. ஆனால் அவற்றை தவிர்ப்பதற்காக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நேற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அவருக்கு சட்டமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. பெரிய பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறிய பிரச்சனைகள் இருந்தால் அதை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட யார் கூறினாலும், சரி செய்வோம். தொடர்ந்து வாரம் ஒருமுறை நான் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சிறு பிரச்சனைகளையும் சரி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

குறிப்பிட்ட நேரம் மட்டுமே போராட்டம்

இங்கு இயக்கப்படுகிற பேருந்துகள் எண்ணிக்கை, குறித்து பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன. மிகவும் குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட அந்த செய்தியை பெரும் செய்தியாக, மாற்றப்பட்டு வருகிறது. அன்றைய தினம் விழுப்புரம் போக்குவரத்து கழகத்திலிருந்து வரவேண்டிய பேருந்துகள் வந்து கொண்டிருந்த சூழலில், அந்தப் பேருந்துகள் குறித்த நேரத்தில் வந்து சேர முடியாத சூழல் ஏற்பட்டது. வழக்கமான பேருந்துகளைக் காட்டிலும் அன்று கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டது. எப்படி தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமோ, அதுபோல முகூர்த்த நாள் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை ஆகியவற்றை கருத்தில், கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டது. வந்து சேர வேண்டிய பேருந்துகள் தாமதமானதால் அன்று அது போன்ற சூழல் ஏற்பட்டது. காலையிலிருந்து இரவு வரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தான், இருந்தது ஆனால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அந்தப் போராட்டம் நடைபெற்று என விளக்கம் அளித்தார்.

முக்கிய தினங்களில்

இரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படும் என சிலர் வந்து விடுகிறார்கள். திடீரென 200,300 நபர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டு பேருந்துகள் கிடைக்கவில்லை என்று கூறினால் அது எப்படி சாத்தியம் என தெரியவில்லை. பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் தான் செல்லும் என்பது தமிழ்நாடு முழுவதும் உள்ள நடைமுறை. குறிப்பிட்ட அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்றால், அது இயக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முக்கிய தினங்களில் திட்டமிடபடாத பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திடீரென பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தால், ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு என்ன செய்வது. இரவு 11 மணிக்கு மேலாக வாகனங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு பெரிய அளவில் போக்குவரத்து இருக்காது. அதிகாலை நேரத்தில் பயணம் செய்வது என்பது ஆபத்தானது, விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தான் அந்த நேரங்களில் பேருந்து போக்குவரத்து தவிர்க்கப்படுகிறது. அன்றைய தினம் திருச்சிக்கு பேருந்துகள் இல்லை என்று தான் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் அன்றைய தினம், தினமும் இயக்கக்கூடிய 133 பேருந்துகள் மட்டும் இல்லாமல் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது என தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 361 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாளை காலையில் இருந்து கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 1215 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு இயக்கப்பட உள்ளன. இனி வதந்திகளை பரப்ப வேண்டிய தேவையில்லை. கூடுதல் வசதிகள் வேண்டுமென்றால் மக்களுடைய கருத்துக்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. 6 ஏடிஎம்கள் வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 50 கடைகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

வதந்தி – நடவடிக்கை

தனியார் youtube சேனல் ஒன்று தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தான் அந்த வீடியோவை பரப்பி இருக்கிறார்கள் வதந்தி பரவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாக உள்ளது. வதந்தி பரப்பியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Month: February 2024

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை பாயும்..! கடும் கோபம் அடைந்த அமைச்சர் சிவசங்கர்..!

Putin says Russia is close to creating cancer vaccines in russia speech | Cancer Vaccine: அறிவியலின் அடுத்த உச்சம்! விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி
Cancer Vaccine: புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் உள்ளனர் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
வருடங்கள் ஓடினாலும் பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத, குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது புற்றுநோய் தான். சில மருந்துகள் புற்றுநோய்க்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும், முழுமையாக புற்றுநோயை குணப்படத்தாமல் இருக்கிறது. தற்போது வரை, கீமோதெரபிதான் புற்றுநோய்க்கு எதிராக முக்கியான சிகிச்சை முறையாக இருக்கிறது.
”விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி”
இதனால், உலகம் முழுவதும் அரசு மற்றும் அரசு சாரா பல அமைப்புகள் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல கோடிகளை செலவழித்து தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் உள்ளதாகவும், விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் எதிர்கால தொழில்நுட்பம் குறித்து அதிபர் விளாடிமிர் புதின் பேசுகையில், ”புற்றுநோய்க்கான தடுப்பூசி விரையில் நோயாளிகளுக்கு கிடைக்கும். புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறுதி கட்டத்தில் உள்ளனர். விரைவில் சிகிச்சைக்காக பயன்பாட்டிற்கு வரும்” என்றார். இந்த தடுப்பூசி எந்த வகையான புற்றுநோய்க்கு என்பதையும், நோயாளிகளுக்கு எவ்வாறு வேலை செய்யும் என்பதையும் அதிபர் புதின் குறிப்பிடவில்லை.
தற்போதைய நிலவரப்படி, தடுப்பூசியால் தடுக்கக் கூடிய ஒரே புற்றுநோய் கர்பப்பை வாய் புறுநோய் மட்டுமே. செர்வாவாக் எனப்படும் நாட்டின் முதல் HPV தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. செர்வாவாக் (Cervavac) என்பது இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் HPV தடுப்பூசி ஆகும்.
WHO சொன்னது என்ன?
9 முதல் 26 வயதுடைய பெண்கள் இந்த செர்வாவாக் தடுப்பூசியை பயன்படுத்தலாம். மேலும், கார்டசில் (Gardasil) என்ற தடுப்பூசி பெரும்பாலான புற்றுநோய்க்கு பயன்படுத்தக்கூடிய ஒன்று. இந்த தடுப்பூசியை 9 முதல் 45 வயதுடைய ஆண்டுகள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம். இந்த கார்டசில் தடுப்பூசியை கர்பப்பை வாய் புற்றுநோய்க்கும் பயன்படுத்தலாம்.
2022ஆம் ஆண்டின் பாதிப்புடன் ஒப்பிடுகையில் 2050ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளில் 35 மில்லியன் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். அதாவது, ஐந்து பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. புகையிலை, மது பழக்கம், உடல் பருமன், காற்று மாசு, சூற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை புற்றுநோய் பாதிப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது.மேலும் படிக்க
Electoral Bond: அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு! .. தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்புமேலும் காண

BJP got more than 90 percent of corporate donations in 2022 to 2023 Claims ADR report
தேர்தலின்போது தனிநபர் முதல் பெரிய, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது வழக்கமான ஒன்று. குறிப்பாக, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கி வருகிறது. தேசியக் கட்சி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என கட்சி சார்பற்று நன்கொடைகள் வழங்கப்பட்டு வந்தது.
நன்கொடைகளை வாரி வழங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள்:
ஆனால், சமீப காலமாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரும்பாலான நன்கொடைகள் பாஜகவுக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதன்படி, 2022-23 நிதியாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் 90 சதவிகித நன்கொடைகளை பாஜக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் சீர்திருத்தம் கோரி வரும் லாப நோக்கமற்ற அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 2022-23 நிதியாண்டில் பாஜகவுக்கு 680.49 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது கார்ப்பரேட் நிறுவனங்கள்.
தேர்தல் ஆணையத்திடம் தேசியக் கட்சிகள் சமர்பித்துள்ள தகவல்களில் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 20,000 ரூபாய்க்கு மேல் பெறப்பட்ட நன்கொடை தொடர்பான விவரங்கள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு வெளியிட்டப்பட்டுள்ளது. அதன்படி, தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகியவைக்கு கிடைத்த நன்கொடை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
90 சதவிகித நன்கொடைகளை பெற்ற பாஜக:
கடந்த 2022-23 நிதியாண்டில் தேசியக் கட்சிகளுக்கு மொத்தமாக 850.432 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது. அதில், பாஜகவுக்கு மட்டும் 719.85 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. அதாவது பெறப்பட்ட மொத்த நன்கொடையில் 90 சதவிகித நன்கொடை பாஜகவுக்கு சென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சிக்கு 79.92 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.
காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகிய 5 கட்சிகளின் மொத்த நன்கொடையை சேர்த்து போட்டாலும் பாஜக பெற்ற நன்கொடைக்கு ஈடாகவில்லை. 5 கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையை காட்டிலும் 5 மடங்கு அதிக நன்கொடையை பாஜக பெற்றுள்ளது.
2022-23 நிதியாண்டில், தங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் யாரும் நன்கொடை வழங்கவில்லை என பகுஜன் சமாஜ் தெரிவித்துள்ளது. 2021-22 நிதியாண்டை காட்டிலும் 2022-23 நிதியாண்டில் தேசியக் கட்சிகளுக்கு அதிக அளவில் நன்கொடை கிடைத்துள்ளது. 91.70 கோடி ரூபாய் அதிக நன்கொடையை பெற்றுள்ளது.
பாஜகவுக்கு கிடைக்கும் நன்கொடைகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. அதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் கட்சிக்கும் கிடைக்கும் நன்கொடைகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, வழங்கப்பட்ட மொத்த நன்கொடையில் 680.49 கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் வழங்கியுள்ளது. அதில், 610.49 கோடி ரூபாய் பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
மேலும் காண

kavin starrer elan directed star making video glimpse released
இயக்குநர் இளன் இயக்கி கவின் நடித்து வரும் ஸ்டார் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இளன் இயக்கும் இரண்டாவது படம் ஸ்டார். கவின் கதாநாயகனாக நடிக்க அதிதி எஸ் போஹன்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாக சிவாஜி கணேசனும் சுருளி நாச்சியாரும் என்கிற படத்தில் நடித்துள்ளார். ஸ்டார் படத்தில் இவர் ஜிமிக்கி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்கள் முன்பாக படக்குழு தகவல் வெளியிட்டது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் பி.வி.எஸ்.என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள்.
நாயகனாகும் கவின்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பான ’கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். தொடர்ந்து சரவணன் மீனாட்சியில் நடித்து பரவலான கவனம் ஈர்த்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பின் அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. வினீத் வரபிரசாத் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான லிஃப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்தார் கவின். கவின் நடிப்பு பாராட்டப் பட்டாலும் இந்தப் படம் பெரியளவில் கவனிக்கப் படவில்லை, இந்நிலையில் கடந்த ஆண்டு கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா படம் கவினுக்கு பெரிய ப்ரேக் கொடுத்தது.
சமீபத்தில் சாந்தனு மற்றும் அசோக் செல்வன் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் படத்தின் இயக்குநர் ஜெய் நேர்காணல் ஒன்றில் ப்ளூ ஸ்டார் படத்தின் முதலில் கவின் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அவரது பிஸியான ஷெட்டியூல் காரணமாக இந்தப் படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது அவர் நடித்து வரும் படம் ஸ்டார். நடிகனாக விரும்பும் ஒருவனின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் ஸ்டார் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
#STAR in the making glimpse ⭐️https://t.co/NuKrWTwJ4J#STARMOVIE ⭐ #KAVIN #ELAN #YUVAN #KEY@Kavin_m_0431 @elann_t @thisisysr @aaditiofficial @PreityMukundan @LalDirector @riseeastcre @SVCCofficial @Pentelasagar @BvsnP @RajaS_official @Sunilofficial @Ezhil_DOP pic.twitter.com/5zbC3Ygeha
— Elan (@elann_t) February 15, 2024
தற்போது வெளியாகியிருக்கும் இந்த மேக்கிங் வீடியோ க்ளிம்ப்ஸ் ஸ்டார் படத்தில் இருந்து சில காட்சிகளை மட்டுமே கொண்டிருக்கிறது. முழு மேக்கிங் வீடியோ நாளை மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதுமேலும் காண

Ravindra Jadeja: பொறுப்பான ஆட்டம்; பேட்டிங்கில் க்ளாசிக் ஷோ காட்டிய ஜடேஜா; சதம் விளாசி அசத்தல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா சதம் விளாசி அட்டகாசப்படுத்தியுள்ளார். இவர் இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழ்ந்து இந்திய அணி தத்தளிக்கும்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் கைகோர்த்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டார். பொறுப்புடன் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா 198 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி சதத்தினை எட்டினார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, இன்று அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட்டில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன் படி இந்திய அணி பேட்டிங்கினைத் தொடங்கியது. இந்திய அணிக்கு தொடக்கம் மிகவும் சொதப்பலாக அமைந்தது. இந்திய அணியின் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ரஜித் படிதார் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வெளியேறினர்.

அவ்வளவுதான் இந்திய அணியால் இந்த போட்டியில் கம்பேக் கொடுக்க முடியாது என நினைத்த போது, அணியில் உள்ள சீனியர் வீரர்களான ரோஹித் சர்மாவும் ரவீந்திர ஜடேஜாவும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜடேஜா அரைசதம் விளாச, ரோஹித் சர்மா சதம் விளாசினார். ரோஹித் சர்மா 131 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அப்போது ஜடேஜா 83 ரன்கள் குவித்திருந்தார்.

அதன் பின்னர் வந்த சர்ஃப்ராஸ் கான் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சினை மிகச் சிறப்பாக கையாண்டு வேகமாக அரைசதம் விளாசினார். இதனால் ஜடேஜா மிகவும் குறைந்த பந்துகளையே எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. மேலும் தான் எதிர்க் கொண்ட பந்துகளையும் பொறுப்பாக எதிர்கொண்டு டிஃபென்ஸ் பேட்டிங் செய்துவந்தார்.

ஜடேஜா 99 ரன்களில் இருந்தபோது ஒரு ரன் அடிக்க பந்தை மிட் ஆன் சைடில் அடித்துவிட்டு ஓட நினைத்தார். ஆனால் அதற்குள் மார்க் வுட் அந்த பந்தை பிடிக்க, ஜடேஜா ரன் எடுக்க ஓடி வரவில்லை. இதனால் நான் – ஸ்ட்ரைக்கர் திசையில் நின்ற சர்ஃப்ராஸ் கான் கிரீஸ்க்குள் செல்வதற்கு முன்னர் மார்க் வுட் அவரை ரன் அவுட் செய்தார்.

இறுதியில் ஜடேஜா 198 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் விளாசியும் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டும் சதம் விளாசினார். இந்த சதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜடேஜாவின் இரண்டாவது சதம் ஆகும். மேலும் ராஜ் கோட் மைதானத்தில் ஜடேஜா விளாசிய இரண்டாவது சதம் ஆகும்.

விவசாய சின்னத்தை இழக்கிறதா நாம் தமிழர்? கர்நாடக கட்சியால் வந்த சிக்கல்.. அடுத்த பிளான் என்ன?

அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை பல்வேறு கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோல, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், கட்சி சின்னதை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்றால் என்ன?

இப்படியிருக்க, கட்சி சின்னத்தை பறிகொடுக்கும் சூழல் உருவாகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பொதுவாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக அறிவிக்க வேண்டுமானால், தேர்தல் ஆணையம் விதிக்கும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது, கடந்த தேர்தலில் குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அப்படி வெற்றிபெற்றால், அதற்கு சில தனிச்சலுகைகள் தரப்படும். கட்சி சின்னம் கிடைப்பது தொடங்கி அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்வது வரை பல சலுகைகள் கிடைக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாவது எப்படி?

மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும். அல்லது அம்மாநிலத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 மக்களவை தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும். அல்லது மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, கடைசியாக 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 6.72 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இதுவரை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு இடங்களில் கூட வெற்றிபெற்றதில்லை.

கடந்த 2016ஆம் ஆண்டு, 1.1 ஆக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் தற்போது கிட்டத்தட்ட 7 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் பெரிய பிரச்னை எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு சிக்கலாக மாறிய கர்நாடக கட்சி:

நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதுதான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கர்நாடகா கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த கட்சியாக இருந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் அந்த கட்சி போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, நாம் தமிழர் கட்சியின் சின்னம், கர்நாடக கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக முறையீட நாம் தமிழர் கட்சி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் உடன்படாத பட்சத்தில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.

What are Electoral Bonds Scheme Why Supreme Court Strikes Down Electoral Bonds Explained | Electoral Bonds: அது என்ன தேர்தல் பத்திரம்? எதற்குக் கொண்டு வரப்பட்டது? ரத்து செய்யப்பட்டது ஏன்?
அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகம் செய்யப்பட்ட முறைகளில் ஒன்று தேர்தல் பத்திரம் ஆகும்.
பொதுவாக அரசியல் கட்சிகளுக்குப் பல்வேறு வகைகளில் பணம் கிடைக்கிறது. வங்கிகளில் வழங்கப்படும் வட்டித் தொகை, கட்சி உறுப்பினர்களுக்கான கட்டணம், கட்சி வரி, சொத்துகளை விற்றல், தன்னார்வ நன்கொடை உள்ளிட்டவை மூலம் எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் கட்சிகள் நிதி திரட்டுகின்றன. அதேபோல, கூட்டங்களில் நிதி சேகரிப்பு, தேர்தல் பத்திரங்கள், நிவாரண நிதி, இதர வருமானங்கள் மூலம் யாரென்றே தெரியாத நபர்கள் மூலம் கட்சிகள் நன்கொடை பெறுகின்றன.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன? (Electoral Bonds Scheme News: )
இந்த சூழலில், தேர்தல் பத்திரத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பத்திரங்களை தனிநபர்களோ, நிறுவனங்களோ வங்கிகளில் வாங்கி, தாங்கள் விரும்பும் கட்சிக்கு நன்கொடையாக அளிக்கலாம். வங்கிகள் தங்க பத்திரங்கள்போல, தேர்தல் பத்திரங்களையும் (Electoral Bonds ) விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.
நன்கொடை வழங்கும் முறை
தேர்தல் பத்திரம் மூலம் குறிப்பிட்ட அளவு நிதி, நன்கொடையாகக் கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு நபரோ, நிறுவனமோ எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கி, கட்சிகளுக்கு அளிக்கலாம். சம்பந்தப்பட்ட கட்சி, 2 வாரத்துக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் பத்திரங்களின் மதிப்புக்கு ஈடான தொகை, பிரதமர் நிவாரண நிதிக்கு மாற்றப்படும்.
தேர்தல் பத்திரத்தை வாங்குவது எப்படி?
இந்திய ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்து வருகிறது. ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி ஆகிய மதிப்பில் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. எனினும் டெல்லி, மும்பை, லக்னோ, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட எஸ்பிஐ கிளைகளில் மட்டுமே பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் மட்டும் தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. இந்த காலத்தில், மாதத்தில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் நேரத்தில் மட்டும், மாதத்தில் 30 நாட்களுக்கும் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.எப்போது நடைமுறைக்கு வந்தது?
கடந்த 2017- 18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திர முறைத் திட்டம், நிதி மசோதாவில் அறிவிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு திட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதில் இருந்து 2022 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுள்ளன. மக்களவை / சட்டப்பேரவைத் தேர்தலில் 1 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற கட்சிகள் மட்டுமே நன்கொடை பெற முடியும்.
இதன்படி நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைத்த நன்கொடை 9,208 கோடி ரூபாய் ஆகும். இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை பாஜக மட்டுமே பெற்றிருக்கிறது. குறிப்பாக 5,270 கோடி ரூபாய் நிதியை பாஜக பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடையில் 57 சதவீதமாகும். அதேபோல 2022-23ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் பத்திர நன்கொடையாக 720 கோடியாக அதிகரித்தது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடை 95 கோடி ரூபாயில் () இருந்து 80 கோடி ரூபாயாகக் குறைந்தது.
சர்ச்சை ஏன்?
தேர்தல் பத்திர சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாக, அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு வவரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகு, தேர்தல் பத்திரங்கள் மூலம் எத்தனை கோடி ரூபாய் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றாலும் யார் அளித்தார்கள் என்ற விவரத்தைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்கூட எந்தத் தகவலையும் பெற முடியாது. இதனால் சர்ச்சை எழுந்தது.
இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் கோரப்படாது. இதனால்தான் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதேபோல தனிநபர்களோ, நிறுவனங்களோ நன்கொடை வழங்குவதன் மூலம், கைமாறை எதிர்பார்ப்பர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் 2019-ல் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.இந்த மனுக்கள் மீது 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு முதல் தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தேர்தல் பத்திர முறையையே ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் இன்று (பிப்.15, 2024) அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.தீர்ப்பு சொல்வது என்ன?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், தேர்தல் பத்திர முறையால் மக்களின் தகவல் அறியும் உரிமை மீறப்படுவதாகவும் பின்வாசல் வழியான பேரங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் கிளைகள் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களும் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரங்களை வழங்க அனுமதி அளித்தது, இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள நீதிபதிகள், இந்தப் பணம் தேர்தல் தவிர்த்து வேறு காரணங்களுக்கும் பயன்படுத்தப்படலாம் என்றும், ஊழலை ஊக்குவித்து கறுப்புப் பணத்தைக் குறைக்க உதவாது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Job fair: திருவண்ணாமலையில் நாளை மறுநாள் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. இந்த தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் ”மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்” இம்மாதம் எதிர்வரும் (17.02.2024) சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 5000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

கல்வி தகுதி

எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

சான்றிதழ்களின் நகல்

முகாம் அன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

sk 23 a r murugadoss actress rukmini vasanth introduction
கன்னடத்தில் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ள நடிகை ருக்மிணி வசந்த் சிவகார்த்திகேயனின் எஸ்ஸ்.கே 23 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
எஸ்.கே.23
தீனா, கஜினி , துப்பாக்கி , கத்தி, சர்கார் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்துள்ளார். சிவகார்த்தியேனின் 23-வது படமான இதில் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். திலிப் சுப்புராயன் ஸ்டன்ட் மற்றும் சுதீப் எலமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
துப்பாக்கி, கத்தி மாதிரியான ஒரு ப்ளாக்பஸ்டர் படமாக இப்படம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படத்தில் அதிகம் கவனம் ஈர்த்துள்ள ஒரு நடிகை ருக்மிணி வசந்த். சமீப காலத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒரு நடிகை ருக்மிணி வசந்த். அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தைப் பார்க்கலாம்.
ருக்மிணி வசந்த்பெங்களூரில் வசிக்கும் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ருக்மிணி வசந்த். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தவர். இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருந்தபோது அவர் உயிரிழந்தார். ருக்மிணி வசந்தின் அம்மா சுபாஷினி வசந்த் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர். போரில் விதவையான பெண்களுக்காக ஒரு அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார். லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்ற ருக்மிணி வசந்த் கடந்த 2019-ஆம் ஆண்டு பிர்பால் ட்ரிலாஜி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சப்த சாகரதாச்சே எல்லோ படம் அவருக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. சைட் ஏ , சைட் பி என்று இரு பாகங்களாக வெளியான இப்படத்தில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
எதார்த்தமான நடிப்பு, சின்ன சின்ன ரியாக்ஷன்களில் மிக ஆழமான உணர்ச்சியகளை இப்படத்தில் அவர் வெளிப்படுத்தி இருந்த விதம் ரசிகர்களை கவர்ந்தது.ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகும் விஜய் சேதுபதியின் 51-வது படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார் ருக்மிணி வசந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தற்போது அவர் சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். மலையாளம் , தெலுங்கு , உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். அந்த வகையில் ருக்மிணி வசந்த் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
எஸ்.கே 21
தற்போது சிவகார்த்திகேயன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாக இருக்கிறதுமேலும் காண

Pink squad has been introduced to improve the safety of women passengers traveling in metro trains.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் பிங் ஸ்குவாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ‘Pink Squad’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளதுசென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில்… pic.twitter.com/W1vysDZORW
— Chennai Metro Rail (@cmrlofficial) February 15, 2024இது தொடர்பான செய்தி வெளியீட்டு குறிப்பில், “பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ‘Pink Squad’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘Pink Squad’-ஐ இன்று (15.02.2024) நந்தனம் அண்ணாசாலையில் உள்ள மெட்ரோவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் (CISB Services) ‘Pink Squad’ பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சுனன் (திட்டங்கள்), முதன்மை பாதுகாப்பு அதிகாரி எச்.ஜெயலக்ஷ்மி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்ததாவது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ இரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் “Pink Squad’ அணியை நியமித்துள்ளது.
Pink Squad’ உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதைத் தவிர வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மெட்ரோ பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ இரயில் நிலையங்களான புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் மெட்ரோ போன்ற மெட்ரோ இரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காண

Farooq Abdullah’s National Conference to go solo in Lok Sabha polls in J&K india alliance going down
மக்களவை தேர்தலில் பாஜக உள்ளடக்கிய என்.டி.ஏ கூட்டணியை எதிர்த்து வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் நோக்கில் காங்கிரஸ், திமுக உள்ளடக்கிய இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்தே, கட்சிகளுக்கு இடையே முரண்பாடு ஏற்படுவதை காண முடிந்தது.
சில தினங்களுக்கு முன்பு, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மம்தா பானர்ஜியும், மேற்கு வங்காளத்தில் தொகுதி பங்கீடு கிடையாது என்றும் தெரிவித்தார். சமீபத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டார்.
இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃப்ரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்திக்கையில், ஜம்மு காஷ்மீர் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக இன்று (பிப்.15) தெரிவித்தார்.
#WATCH | Srinagar: On elections in J&K and seat sharing, National Conference Chief Farooq Abdullah says, “I think that elections in both states will be held with the Parliamentary elections. As far as seat sharing is concerned, NC will contest alone and there’s no doubt about… pic.twitter.com/e2pLpX3YVB
— ANI (@ANI) February 15, 2024
இது இந்தியா கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களிலும், காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் தெலுங்கானாவில் பெற்ற வெற்றது. இது இந்தியா கூட்டணிக்கு பெரும் சருக்கலாக அமைந்தது.
பாரதிய ஜனதா கட்சியின் பெற்ற வெற்றி, நாடாளுமன்ற தேர்தலில் எந்த விதத்திலும் பிரதிபலிக்காது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற இந்தியா கூட்டணி கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வந்தனர். யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதில் இந்தியா கூட்டணி மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் மிகுந்த ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் கூட்டணியுடைய ஒற்றுமை வெளிப்பாடு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியாக பிரதிபலிக்கும் என்றும் இந்திய கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வந்தனர்.
ஆனால் இந்திய கூட்டணியில் இருந்து, தொடர்ந்து விலகல் அதிகரிப்பது கூட்டணிக்கு பலவீனமாக அமைந்து வருவருகிறது. இனி வரும் காலத்தில் கூட்டணியை எப்படி பலப்படுத்த போகிறார்கள் என்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.மேலும் காண

Rashmika Mandana : பிரபல நிகழ்ச்சியில் மனம் திறக்க இருக்கும் ராஷ்மிகா மந்தனா.. ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள்

நேஹா தூபியாவின் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனமா பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்து திரையுலகில் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கன்னடம், தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான், விஜய் நடித்த வாரிசு திரைப்படங்களில் நடித்து தமிழுக்கும் வருகை தந்த ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தின் மூலம் நேஷ்னல் கிரஷ் ஆக மாறியிருக்கிறார் .

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வீடியோவை எடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து எடிட் செய்திருந்தனர். அது இணையத்தில் மிகப் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பியது. இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தனது மனவருத்தத்தை தெரிவித்திருந்தார். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இந்த வீடியோவை உருவாக்கிய நபர் சமீபத்தில் கைது செய்யப் பட்டார்.

பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்பு

View this post on Instagram

A post shared by Neha Dhupia (@nehadhupia)

தற்போது ராஷ்மிகா மந்தனா பிரபல ஊடகவியலாளரான நேஹா தூபியாவின் டாக் ஷோவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ சாவன் ஆப்பில் பாட்காஸ்டாக ஐந்து சீசன்களை நிறைவு செய்துள்ள தொடர் நோ ஃபில்டர். இந்த நிகழ்ச்சியை நேஹா தூபியா தொகுத்து வழங்கிவருகிறார். பொதுவாக நகைச்சுவையாகவும் கேலிக்கையாகவும் இருக்கும் பிற நிகழ்ச்சிகல் போல் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களின் வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு சவால்கள் , உண்மைகளை விவாத களத்திற்கு கொண்டு வந்துள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக குறுகிய காலத்தில் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா பலருக்கு வெளியே தெரியாத தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது

புஷ்பா 2

தற்போது ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. தொடர்ந்து தனுஷ் நடித்து சேகர் கமுல்லா இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார்.

“சாமானியனின் நம்பிக்கையை உறுதி செய்துள்ளது” தேர்தல் பத்திரம் ரத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!
பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்திருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டில் இருந்து மத்தியில் ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2018 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு:
அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தால் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகள் பெற்றது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை கிடைக்கப் பெற்றது கடும் சர்ச்சைகளை உண்டாக்கியது.
இதனை அடுத்து, தேர்தல் பத்திரங்கள் மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி 2019ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, “தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருகிறவர்கள் யார்? யார்? என்கிற விவரத்தை அறியக் கூடிய உரிமை பொது மக்களுக்கு கிடையாது.இந்த திட்டத்தில் சட்ட விதிகள் மீறப்படவில்லை” என கூறியிருந்தது.
இந்நிலையில் தேர்தல் பத்திரம் திட்டம் சட்ட விரோதமானது எனக்கூறி ரத்து செய்து அதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில், “தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் சட்டத்துக்கு எதிரான உள்ளது. இதுதொடர்பான விவரங்களை வழங்க முடியாததற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை.
தேர்தல் பத்திரங்களை வழங்க வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக விதிக்கப்பட்டுள்ள குறைந்தப்பட்ச விதிகள் திருப்திகரமாக இல்லை. பெரிய நிறுவனங்கள் நிதியுதவி அதிகளவில் வழங்கும்போது அதற்கு கைம்மாறு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
”அனைத்துக் கட்சிகளின் ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளது”
இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் ரத்து தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்ச நீதிமன்றமே சரியாக கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படைத் தன்மையுடன் கூடிய தேர்தல் நடைமுறையை உறுதி செய்யும். அனைத்துக் கட்சிகளின் ஜனநாயகத்தையும் சம நிலையையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீட்டெடுத்துள்ளது. தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு தேர்தலில் சாமானியர்களின் நம்பிக்கையையும் உறுதி செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க
Electoral Bond: அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு! .. தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்புமேலும் காண

Jeyam Ravi : "ஓட்ட ஆம்புலன்ஸ்-ஆ ஓட்ட சொன்னாங்க" | Keerthy Suresh | Siren

"ஓட்ட ஆம்புலன்ஸ்-ஆ ஓட்ட சொன்னாங்க" | Jeyam Ravi | Keerthy Suresh | Siren

IPL 2024: இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள்.. இறுதிப்போட்டி எப்போது..? தகவலை சொன்ன ஐபிஎல் தலைவர்!

கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் இந்தியாவிலேயே நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். முன்னதாக, மக்களவை தேர்தல் காரணமாக, ஐபிஎல் 17வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. ஆனால், தற்போது இந்த செய்தி பொய் மற்றும் யூகங்கள்தான் என்றும் இது உண்மையல்ல என்பதுபோல் செய்தி ஒன்று வந்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசனி இறுதிப் போட்டி மே 26ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், ஜூன் 1ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, இந்திய அணி வீரர்களுக்கு குறைந்தது 8 முதல் 10 நாட்கள் ஓய்வு அல்லது அவகாசம் வழங்க பிசிசிஐ விரும்புகிறது.

IPL 2024 final could tentatively happen on May 26. [PTI] pic.twitter.com/SuFZVnEdkC

— Johns. (@CricCrazyJohns) February 14, 2024

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஐபிஎல் தலைவர் அருண் துமால், “ ஐபிஎல் 17வது சீசன் இந்தியாவில் மட்டுமே நடைபெறும். இதற்கான தேதியை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ளது. மக்களவை தேர்தல் தேதிக்காக காத்திருக்கிறோம். மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், ஐபிஎல் 17வது சீசன் அட்டவணையை வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.

போட்டிகள் வெளிநாடுகளுக்கு மாற்றப்படாது:

செய்தி நிறுவனமான பிடிஐயின் அறிக்கையின்படி, ஐபிஎல் 17வது சீசனின் இறுதிப் போட்டி மே 26 ம் தேதி நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியை அயர்லாந்து அணிக்கு எதிராக ஜூன் 5-ஆம் தேதி தொடங்க உள்ளதால், பிசிசிஐ வீரர்களுக்கு 8 முதல் 10 நாட்கள் அவகாசம் அளிக்கலாம். இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை என்று தெரிவித்திருந்தது.

முன்னதாக, மக்களவை தேர்தல் காரணமாக, ஐபிஎல் 17வது சீசன் இந்தியாவுக்கு பதிலாக வெளிநாடுகளுக்கு மாற்றப்படும் என ஊகங்கள் எழுந்தன. ஐபிஎல் இரண்டாவது சீசன் 2009 மக்களவைத் தேர்தலின் போது தென்னாப்பிரிக்காவில் ஏற்பாடு நடத்தப்பட்டது. அதேபோல், 2014-ம் ஆண்டும் மக்களவைத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்றபோது ஐபிஎல் போட்டியின் முதல் பாதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது. இருப்பினும், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்த முறையும் பிசிசிஐ ஐபிஎல் 17வது சீசனை இந்தியாவில் மக்களவை தேர்தலின் போது பாதுகாப்பாக நடத்த திட்டமிட்டு வருகிறது.

Electoral Bond: தேர்தல் பத்திர சட்டத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றம்.. ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள்..!

அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழக்கும் தேர்தல் பத்திரம் திட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும், சட்ட விரோதமானது என தெரிவித்தும் அதை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த சட்டத்தை கடும் எதிர்ப்பை மீறி 2018ல் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த சட்டம் இயற்றபடுவதற்கு முன்பாக, பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்திருந்தது. இந்த சட்டம் இயற்றியதற்கு பின்னர் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகள் பெற்றதாக கூறப்படுகிறது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி 2019ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம் சட்ட விரோதமானது என கூறி தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது.

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தற்போது எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி:

தேர்தல் பத்திரத்தின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக பாஜக பெற்றது. பெரிய நிறுவனங்கள் கறுப்பு பணத்தையே நன்கொடையாக வழங்குகின்றன. தேர்தல் பத்திர சட்டதிருத்த மசோதாக்கள் ரத்திற்கு ஆரம்பம் முதலே காங்கிரஸ் எதிர்ப்புதான் தெரிவித்து வந்தது. இதற்கு காரணம், முதலில் இதில் வெளிப்படைதன்மை இல்லை. இரண்டாவது, ஆளுங்கட்சிக்கு சாதகமான இந்த சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்மூலம் அவர்கள் நிறைய பணத்தினை பெற்று தங்களது அரசியல் சித்து விளையாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின்படி, எல்லாருக்கும் எல்லா நிலையும் இருக்க வேண்டும். தற்போது, தேர்தல் பத்திர சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பையே வழங்கியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:

மத்திய அரசு ஒரு நம்பகத்தன்மையற்ற சட்டத்தை இயற்றி, பத்திரங்கள் மூலம் நன்கொடை தரலாம். அந்த பத்திரத்தின் மூலம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தரலாம். அதை கொடுத்தார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வழங்கப்படும் நிதியை பெறும் அரசியல் கட்சிகளின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் அறிய முடியாது என்ற அடிப்படையிலான சட்டத்தை உச்சநீதிமன்றம் முழுமையாக விசாரித்து ரத்து செய்து நீதி வழங்கியுள்ளது. இதை முழுமையாக நாங்கள் ஆதரிக்கிறோம்

ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம்:

உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு காப்புரிமை பெற்று தந்துள்ளது. தேர்தல் வரும்போது பெரும் நிறுவனங்கள் அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கக்கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு.

என்று பல்வேறு அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Mouni roy shares that faced lots of rejection in becoming bollywood actor
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றிகரமாக பயணித்த பல நடிகைகளில் ஒருவர் பாலிவுட் நடிகை மௌனி ராய். இந்தி சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘நாகினி’ தொடர் வெற்றிபெற்றதை அடுத்து அது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பானது. அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கும் ‘ஷோடைம்’ என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அதன் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை மௌனி ராய் அவர் நிராகரிக்கப்பட்டதை பற்றியும் அவர் எப்படி கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க டைப்காஸ்ட் செய்யப்பட்டார் என்பதை பற்றியும் பேசி இருந்தார்.
நடிகை மௌனி ராய் பேசுகையில் “நான் டைப்காஸ்ட் செய்யப்பட்டேனா என யாராவாவது என்னிடம் கேட்டால் ‘ஆமாம்’ என்பது தான் என்னுடைய பதிலாக இருக்கும். இருப்பினும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் என்னை தேர்ந்தெடுத்ததால் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
திரை தொழில் என்பது நியாயமான ஒரு தொழிலாக இருக்கலாம் ஆனால் மிகவும் கடினமானது என்பதை நான் உண்மையாக நம்புகிறேன். கடின உழைப்பு மற்றும் சவால்கள் இல்லாமல் போராட்டம் இல்லாமல் இருக்காது. அதே போல வெற்றிக்கு குறுக்கு வழி இல்லை. வேலை செய்வது நிச்சயம் அதற்கான பலனை கொடுக்கும் என்பதை நான் முழுமனதாக நம்புகிறேன்” என்றார் மௌனி ராய்.
”நடனம், நடிப்பு என எதுவாக இருந்தாலும் உண்மையான உழைப்பைகொடுக்கும் போது நிச்சயமாக ஒரு நாள் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். இது தான் என்னுடைய வாழ்க்கையின் தாரக மந்திரம். நான் யாரிடமாவது பேசினால், என் 100 சதவீத கவனமும் அவர்களிடம் மட்டுமே இருக்கும்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் “பாலிவுட் நடிகையாகும் திறமை என்னிடம் இல்லை என நான் நிராகரிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும் என்னுடைய வாழ்க்கையில் நான் முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், தயாரிப்பாளர்கள் என்னை புறக்கணித்த போதும் திரைத்துறை மீது எந்த ஒரு கசப்பும் இல்லாமல் என்னால் பயணிக்க முடிந்தது” என்றார் மௌனி ராய்.
மேலும் உங்களை பற்றிய லேட்டஸ்ட் வதந்தி ஒன்றை கூறுங்கள் என கரண் ஜோகர் கேட்க “என்னை பற்றி நான் பரப்ப விரும்பும் ஒரு வதந்தி என்னவென்றால் நான் நீங்கள் இயக்க போகும் அடுத்த படத்தில் நடிக்கிறேன் என்பது தான்” என சொல்லி கரண் ஜோகருக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்தார்.
கடந்த ஆண்டு வெளியான ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படத்தில் ஜுனூன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மௌனி ராய் பாராட்டுகளை குவித்தார். மேலும் அவரின் நடிப்பு ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பை காட்டிலும் பாராட்டை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

Job Fair 2024 at Chengalpattu held on pallavaram dated on 17th February tnn
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 17.02.2024 சனிக்கிழமை அன்று பல்லாவரம் வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் (VISTAS) செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திட உள்ளது.
தனியார் துறை நிறுவனங்கள்
இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.
யார் யாருக்கு வாய்ப்பு
இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், பார்மசி/பாரா மெடிக்கல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.
வயது வரம்பு என்ன ?
வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 17.02.2024 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேரில் வருகை புரிந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்ய வேண்டியவை என்ன ?
மேலும், இம்முகாமில் பங்குபெற விருப்பமுள்ள வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மேலும் காண

TN Weather Update: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை.. இனி வறண்ட வானிலையே இருக்கும்..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை2, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக் கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 31.9 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 32.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு வட மாநிலங்களில் மட்டுமே பனிப்பொழிவு காணப்பட்டது. தமிழ்நாட்டில் இயல்பை விட குறைந்த அளவிலே பனிப்பொழிவு இருந்ததாக தனியார் வானிலை ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.

Karnataka First driverless metro train reaches Bengaluru to run on Yellow Line
நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று பெங்களூர். கர்நாடக தலைநகரான பெங்களூரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் மக்கள் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகமுள்ள பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னையைப் போல மெட்ரோ சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்:
இந்த நிலையில், பெங்களூர் நகர மெட்ரோ ரயில்சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அரசு திட்டமிட்டது. இதன் காரணமாக, ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயிலை இயக்க முடிவு செய்தது. அதற்கான மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டது.
From China to Chennai and to the Final Destination, the driverless Coaches (6) have finally arrived in the town! #YellowLine #NammaMetro PC/Source: BMRCL and Rahman’s X a/c pic.twitter.com/yLBZB54lqj
— Bangalore Metro Updates (@WF_Watcher) February 14, 2024இதன்படி, ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்பட்டு நேற்று அந்த மெட்ரோ ரயில் பெட்டிகள் பெங்களூர் வந்தடைந்தது. தெற்கு பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஹெப்பகோடி டிப்போவிற்கு வந்தடைந்தது. இந்த புகைப்படங்களை பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
First driverless, Chinese-made train (6 coaches) for #BengaluruMetro’s #YellowLine reached the Hebbagodi depot near E-City this morning.The 6 coaches will be coupled & put through static tests at the depot, followed by trial runs.@WF_Watcher @NammaBengaluroo @0RRCA @KARailway pic.twitter.com/i7mv0UC3IM
— Muthi-ur-Rahman Siddiqui (@ever_pessimist) February 14, 2024இந்தியாவிலே முதன்முறை:
இந்த ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் ஆர்.வி. சாலை முதல் சில்க் சாலை வழியாக எலக்ட்ரானிக் சிட்டி வரை மஞ்சள் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இதேபோல 216 பெட்டிகள் தயாரிக்க அந்த சீன நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் 90 பெட்டிகள் 15 மெட்ரோ ரயிலாக மஞ்சள் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் இயக்கப்படும் நகரம் என்ற பெருமையை பெங்களூர் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: Electoral Bond: அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு! .. தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மேலும் படிக்க: Atrocities On Dalits: ”பணம் தரமாட்டியா?” பழங்குடியின இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய கும்பல் – என்ன நடக்குது இந்தியாவில்?மேலும் காண

Thiruporur Kandaswamy temple in Thiruporur Masi Brahmotsava festival flag hoisting – TNN
திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்.
திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில்
செங்கல்பட்டு (Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இன்று திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா திருப்போரூர் முருகன் கோயில், வட்டமண்டவதில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
விமரிசையாக கொடியேற்றம்
அதனை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளித்தார். பின்னர், கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகச்சியாக வருகிற 21 ஆம் தேதி காலை 9 மணிக்குமேல் திருதேர் திருவிழா நடைபெற உள்ளது.முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு மாட வீதிகள் வழியாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நான்கு மாடவீதிகளிலும் செல்வார்கள் வழி எங்கும் நீர் மோர் அன்னதானம் உள்ளிட்டை பக்தர்களுக்கு வழங்கி வருவார்கள். திருத்தேர் திருவிழாவை ஒட்டி ஓ.எம். ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும், இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
22 ஆம் தேதி பரிவேட்டை முருகப்பெருமான் ஆலத்தூர் கிராமம் சென்று அசுரர்களை வதம் செய்வார். மறுநாள் திருப்போரூர் ஆதி திராவிடர் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி மக்கள் வழிபாடு செய்யும் வகையில் நீதிமன்றம் உத்தரவு படி இரண்டாம் ஆண்டாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் தொட்டி வாகனத்தில் வலம் வருவார் அன்றைய தினம் அப்பகுதி மக்கள் திருவிழாவாக கொண்டாடி முருகப்பெருமானை வழிபாடு செய்வார்.24 ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் தெப்ப உற்ச்சவம் முருக பெருமான் குதிரை வாகனம் மத்தியில் தெப்ப குளத்தில் வளம் வருவார். 27 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் காண

Actress Sadha : பச்சை நிறமே பச்சை நிறமே… கிளி போல ஜொலிக்கும் சதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Actress Sadha : பச்சை நிறமே பச்சை நிறமே… கிளி போல ஜொலிக்கும் சதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
| ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து
தமிழகத்தின் துாத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை, 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஆலை அமைந்துள்ள பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கடந்த 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து வேதாந்த நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்த நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் தவான், ஸ்டெர்லைட் ஆலையை மூடும்போது நாட்டின் 36 சதவீத காப்பர் உற்பத்தியை பூர்த்தி செய்தது. 2014 மற்றும் 18 காலகட்டத்தில் ரூ. 13 ஆயிரத்து 500 கோடி வரி செலுத்தியுள்ளது தினமும் 1200 டன் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையில் வசதிகள் உள்ளன என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீரி, ஐ ஐ டி, மத்திய மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நிபுணர்கள் மற்றும் பிரபலமான சுற்றுச்சூழல் நிபுணர் அடங்கிய குழுவை அமைத்து ஆராயலாம். அந்த குழு இந்த நிறுவனத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கலாமா என்றும் முந்தைய உத்தரவுகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த நிறுவனம் காப்பர் உற்பத்தியுடன் தொடர்புடையது நாட்டின் பொருளாதாரத்துடன் பங்களிப்பது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.
தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், முதலில் தமிழக அரசு தரப்பு வாதத்தை கேட்ட பின்னரே எந்த முடிவுக்கும் வர வேண்டும். ஏற்கனவே பல விதிமுறை மீறல்களை இந்த ஆலை செய்துள்ளது. ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் கூட விதிக்கப்பட்டது. இந்த ஆலையை பொறுத்தவரை எந்த உத்தரவையும் மதிப்பதில்லை, அமல்படுத்துவதில்லை எனவே இந்த விவகாரத்தில் முழுமையான வாதம் கேட்ட பின்னரே நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்றார். மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த விவகாரம் சுற்றுசூழல், உடல்நலம் உள்ளிட்டவை சம்பந்தப்பட்டது. எனவே இந்த விவகாரத்தை பொருளாதார நோக்கில் பார்க்கக்கூடாது சில விசயங்கள் பணத்தால் பெற முடியாது என்றார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த ஆலையை ஆய்வு செய்ய குழுவை அமைக்கலாம். அந்த நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி முடிவு எடுக்கலாம். மேலும் தமிழக அரசின் எதிர்ப்புகளையும் கருத்துக்களையும் புறம் தள்ளிவிட முடியாது என்று அவர்கள், அதே நேரம் நாட்டுக்கு தாமிரம் தேவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது உள்ளது. எனவே வேதாந்தா நிறுவனம் தனது தரப்பு வாதத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் சிறு குறிப்பாக தாக்கல் செய்யலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை இன்று தள்ளி வைத்தனர்.
மேலும் காண

kanchi kamakshi temple brahmotsavam 2024 started with the early morning flag hoisting – TNN
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ( Kanchipuram Kamakshi Temple )
கோயில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. காமாட்சி அம்மனை மனம் உருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. புராண காலத்தில் பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்துள்ளான். பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று சக்தி மிக்கவனாக இருந்து வந்துள்ளார். பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கு, பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். இந்த அசுரனை பராசக்தி காஞ்சி காமாட்சி அம்மன் அழித்தது வரலாறு.
சக்தி தலங்களில் ஒட்டியான பீட ஸ்தலமாக விளங்கும் முதன்மை ஸ்தலமான உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. லட்சுமி சரஸ்வதியுடன் காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்கக்கொடி மரத்தில் காமாட்சி அம்பாள் படம் பொறித்த கொடியை கோயில் ஸ்தானிகர்கள் ஏற்றி வைத்தனர். கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி பிரம்மோற்சவம் முக்கிய நிகழ்வான தங்க பல்லக்கு உற்சவம் வரும் 19 ஆம் தேதியும்,ரத உற்சவம் 21ம் தேதியும், வெள்ளிதேர் உற்சவம் 23-ம் தேதியும் நடைபெறும். 26 ஆம் தேதி அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும். அதனை தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்- ( kanchi kamakshi temple brahmotsavam 2024 )
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 14 ஆம் தேதி காலையில் சண்டி ஹோமத்துடனும், இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதியுலாவோடும் திருவிழா தொடங்குகிறது.
விழாவையொட்டி ஆலயத்தின் முன்பாக பிரம்மாண்டமான விழாப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பிப்.15 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழாக் கொடியேற்றமும், அதனையடுத்து காலையில் வெள்ளி விருஷப வாகனத்திலும், மாலையில் தங்க மான் வாகனத்திலும் காமாட்சி அம்பிகை வீதியுலா வருகிறார். விழாவினைத் தொடர்ந்து தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி காஞ்சிபுரம் மாநகரின் ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளார். பிப்.17 ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் அலங்காரமாகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் வரும் 23 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதனையடுத்து விடையாற்றி உற்சவம் வரும் 26 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளன்று புஷ்பப்பல்லக்கில் அம்மன் காஞ்சிபுரத்தின் ராஜவீதிகளில் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது. தினசரி இரவு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேசன், செயல் அலுவலர் எஸ். சீனிவாசன் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
மேலும் காண

top news India today abp nadu morning top India news February 15th 2024 know full details
இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: மாணவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது?சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி (இன்று) முதல் காலை 10.30 மணிக்கு தொடங்குகின்றன. இன்று தொடங்கும் இந்த தேர்வானது மார்ச் 13ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியும் முடிவடைகிறது. இந்த தேர்வை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 39 லட்சத்திற்கும் அதிகமாக மாணவர்கள் எழுதுகின்றனர். இந்தநிலையில், சி.பி.எஸ்.இ தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்குள் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
காரசாரமான வாதங்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் விசாரணை.. செந்தில் பாலாஜிக்கு கிடைக்குமா ஜாமின்?சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், ” சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45 வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது குறித்து விசாரணையின் போது தான் நிரூபிக்க முடியும் என அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. மேலும் படிக்க..
தேர்தல் பத்திரம் திட்டம் செல்லுபடியாகுமா? – இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்திருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டில் இருந்து மத்தியில் ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2018 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..
2 நாள் பயணமாக கத்தார் சென்றார் பிரதமர் மோடி.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 7வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அபுதாபி விமான நிலையம் சென்றடைந்த அவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் அகமத் பின் சயீத் அல் நஹ்யான் கட்டித்தழுவி வரவேற்றார். இதன்பின்னர் இருவரும் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் கட்டமைப்பு,எரிசக்தி , இருநாட்டு மக்களிடையேயான நல்லுறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி – அதிபர் நஹ்யான் இடையே பல்வேறு துறைசார் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் படிக்க..
மேலும் காண

SK23 Shoot Begins : ஏ.ஆர். முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!
SK23 Shoot Begins : ஏ.ஆர். முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!
”வடக்கு வளர தெற்கு உதவுகிறது..” சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தெற்கு வளர்கிறது, வடக்கு வளரவும் தெற்கு உதவுகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், “ தமிழும், தமிழ்நாடு நம்மை இயக்கி கொண்டு இருப்பதால்தான் உற்சாகமாக இயங்குகொண்டு இருக்கிறோம். இந்தியாவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை நம் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற உன்னத தலைவர்கள் போட்டு தந்த வழிதடம்தான் காரணம். திராவிட மாடல் வளர்ச்சியில் நாம் பயணித்துகொண்டு இருப்பதால்தான் யாராலும் நம் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது.
ஒரு காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று நாமே முழங்கினோம். இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது. இத்தகைய தகுதியும், பெருமையும் எதனால் என்றால் திராவிட இயக்கதால்தான்.
ஆட்சி என்பது வெறும் அதிகாரம் அல்ல, கொள்கையை செயல்படும் களம் என்பதை நிரூபித்து காட்டியவர்கள்தான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும்.” என்று தொடர்ந்து பேசி வருகிறார்.மேலும் காண

IND Vs ENG 3rd Test India Won Toss Elected Bat First Dhruv Joel Sarfaraz Khan Debut
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் முதன்முறையாக துருவ் ஜோயல் மற்றும் சர்ப்ராஸ் கான் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர். இதுவரை இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக களமிறங்கி வந்த கே.எஸ்.பரத்துக்கு பதிலாக இந்த போட்டியில் துருவ் ஜோயல் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ளார்.
🚨 Team Update 🚨4⃣ changes in #TeamIndia’s Playing XI for RajkotDhruv Jurel and Sarfaraz Khan are all set to make their Test Debuts 🙌Follow the match ▶️ https://t.co/FM0hVG5X8M#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/rk1o1dNQMc
— BCCI (@BCCI) February 15, 2024இந்த மைதானம் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து அணியில் பந்துவீச்சாளர்களாக ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் வேகத்தில் மிரட்ட காத்துள்ளனர். இவர்களுடன் பென் ஸ்டோக்சும் இந்திய அணியை வேகத்தில் அச்சுறுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் புதிய இளம் சுழல் கூட்டணி ரெஹன் அகமது – டாம் ஹார்ட்லி இந்த போட்டியில் எப்படி வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித்சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்குகின்றனர். சுப்மன்கில் கடந்த டெஸ்ட் போல இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினால் இந்திய அணிக்கு பக்கபலமாக அமையும்.
இளம் வீரர்களான படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல் தங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுழல் கூட்டணியாக ஜடேஜா – அஸ்வின் – குல்தீப் யாதவ் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் மிரட்ட காத்துள்ளனர்.
இதுவரை இரு அணிகளும் மோதிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து, இந்தியா தலா 1 போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் முனைப்பு காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில் இந்திய அணி ரன்களை குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இளம் வீரர்கள் படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல் எப்படி ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

greater chennai traffic police creating awareness regarding road rules via road raja campaign
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் நடுவில் உள்ள கம்பங்களில் காவல்துறையினரால் ‘நீங்க ரோடு ராஜாவா..?’ என்ற அச்சிடப்பட்ட குட்டி பேனர் ஒன்று நெடுதூரம் வைக்கப்பட்டிருந்தது. இது காவல்துறையினரால் ஏன் வைக்கப்பட்டது..? எதற்காக வைக்கப்பட்டது..? என்று குழப்பம் மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது. ஆனால் இந்த பேனர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் ரோடு ராஜா விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
Do you know the meaning of the white stripes on the road? #ZebraCrossing Don’t ignore them or you will face a heavy penalty. Watch this video to learn more! #TrafficAwareness #RoadSafety @SandeepRRathore @R_Sudhakar_Ips @chennaipolice_ @iYogiBabu @roadraja pic.twitter.com/9QdFFytofT
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) February 14, 2024அதாவது மக்கள் சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றவே இந்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேரு வீடியோக்களை பதிவு செய்துள்ளது. அதில் திரையுலக நடிகர்கள் இடம்பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
U-Turn violations are dangerous and illegal. They can cause accidents, injuries, and traffic jams. If you see someone making a U-Turn where it is prohibited, report it to us. Help us keep the roads safe and smooth. #UTurnViolations @SandeepRRathore @roadraja @R_Sudhakar_Ips pic.twitter.com/YRAhd36QaJ
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) February 14, 2024குறிப்பாக சாலை விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் @RoadRaja என பயன்படுத்தி பதிவு செய்தால் உடனடியாக அந்த நபரை அடையாளம் கண்டு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
A Road Safety initiative from #GreaterChenaniTrafficPolice#roadraja #TrafficAwareness #RoadSafety @SandeepRRathore @R_Sudhakar_Ips pic.twitter.com/QHShMkz8GB
— Road Raja (@roadraja) February 14, 2024மேலும் இந்த மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பை உறுதி செய்ய நேற்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. சாலை விதிமீறல் அல்லது சாலை பாதுகாப்பபு குறைபாடு காரணமாக ஆண்டுதோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகிறது. பலரும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதனால் சாலை பாதுகாப்பை உறுதி செய்ய பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் காண

Latest Gold Silver Rate Today February 15 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 45,920 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,740 விற்பனை செய்யப்படுகிறது.ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49,680 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,210 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 க்கு விற்பனையாகிறது.
கோயம்புத்தூர்
“தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,210 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,740 ஆகவும் விற்பனையாகிறது.
மதுரை
மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,210 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,740 ஆகவும் விற்பனையாகிறது.
திருச்சி
திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,210 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,740 ஆகவும் விற்பனையாகிறது.
வேலூர்
வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,210 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,740 ஆகவும் விற்பனையாகிறது.
நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
மும்பை
மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,218 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,700 ஆகவும் விற்பனையாகிறது.
புது டெல்லி
புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்ஒன்றிற்கு ரூ.6,231 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,715 ஆகவும் விற்பனையாகிறது.
கொல்கத்தா
கொல்கத்தாவில் (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,218 கவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,700 ஆகவும் விற்பனையாகிறது.
ஐதராபாத்
ஐதராபாத் நகரில் (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,218 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,700 ஆகவும் விற்பனையாகிறது.
அகமதாபாத்
அகமதபாத் (Gold Rate in Ahmedabad) நகரில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,221 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,705 ஆகவும் விற்பனையாகிறது.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தில் (Gold Rate Trivandrum) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,218 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,700 ஆகவும் விற்பனையாகிறது.
பெங்களூரு
பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,218 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,700 ஆகவும் விற்பனையாகிறது.
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூரில் (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,231 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,715 ஆகவும் விற்பனையாகிறது.
புனே
புனே நகரில் (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,218 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,700 ஆகவும் விற்பனையாகிறது.
Bigg boss fame Abhishek Raja introduces his new girl friend on Valentines day
யூடியூப் மூலம் பிரபலமான பலரும் மிகவும் பரீட்சையமான செலிபிரிட்டிகளாக மாறி வருகிறார்கள். அந்த வகையில் அதிரடி விமர்சகராக யூடியூப் மூலம் அறியப்பட்டவர் அபிஷேக் ராஜா. சினிமா விமர்சனங்கள் கூறி வந்த அபிஷேக் ராஜா, கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஸ்டார்களை பேட்டி எடுத்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்ற பிறகு அபிஷேக் ராஜா பப்ளிசிட்டி வேற லெவெலில் எகிறியது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று தன்னுடைய காதலியை சோசியல் மீடியா மூலம் அறிமுகம் செய்து வைத்துள்ளார் அபிஷேக் ராஜா.
பிக் பாஸில் அபிஷேக் :
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட அபிஷேக் ராஜா சக போட்டியாளர்களான நிரூப் மாற்று பிரியங்கா தேஷ்பாண்டே கூட்டாளியாக பயங்கரமான ஸ்டேட்டர்ஜியுடன் விளையாடினார். இவர் மற்றவர்களிடம் கடுமையாக பேசும் விதம் பிடிக்காதல் நாமினேட் செய்யப்பட்டு 21ம் நாள் வெளியேற்றப்பட்டார். பின்னர் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து 63 நாட்கள் வரை தாக்குப் பிடித்து பின்னர் மீண்டும் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டவர் அபிஷேக் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிக அளவில் பிரபலமானார்.
பாதியில் முடிந்த முதல் திருமணம் :
அபிஷேக் ராஜா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தான் தெரியவந்தது. காதலித்து திருமணம் செய்து கொண்ட அபிஷேக் ராஜாவின் திருமணம் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. விமர்சகராக இருந்த போதிலும் ஒரு சில திரைப்படங்களில் தலை காட்டி உள்ளார். ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் ஒரு துணை நடிகராக ஹீரோயின் ராஷி கண்ணாவின் நண்பராக நடித்திருப்பார். தற்போது இயக்குநராகவும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார். ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘ஸ்டார் டா’ என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய காதலி :
முதல் திருமணம் முறிந்து போன நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த அபிஷேக் ராஜா, காதலர் தினத்தை முன்னிட்டு இன்று தன்னுடைய புதிய காதலியின் புகைப்படத்தை சோசியல் மீடியா மூலம் அறிமுகப்படுத்தி குறிப்பு ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார்.
“குறைபாடுள்ள என்னை ஒரு பார்ட்னராக மாற்றியதற்கு நன்றி!விட்டுக்கொடுக்காததற்கும் நன்றி! ஹாப்பி பிப்ரவரி 14 ஸ்வாட்!
பார்ட்டிக்கு பிறகு நான் ஏன் ஆதிபுருஷ் பிரபாஸ் போல இருக்கிறேன் என எனக்கு புரியவில்லை!” என பதிவிட்டுள்ளார்.
அபிஷேக் ராஜாவின் இந்த போஸ்டுக்கு பலர் லைக்ஸ் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் காண

Farmer Protest: 3வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.. மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை..

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள நிறைவேற்றுவது தொடர்பாக நடைபெற்ற, மத்திய அரசு உடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியை தழுவின. இதையடுத்து நேற்று முன் தினம் முதலே பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஷாம்பு பகுதியில், போலீசாரால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழலும் ஏற்பட்டது.

ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் மூன்றாவது முறையாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் மத்திய மந்திரிகள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் கலந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளடு. இதில் பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா நிர்வாகி தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்த கைவிடும்போது, வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக செல்வதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால், 2021 ஆம் ஆண்டு சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்க்கூடாது என டெல்லி எல்லையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள், கொக்கி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டெய்னர்கள் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, வாகனங்களின் டயர்களை பஞ்சராக்க சாலைகளில் ஆணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு எல்லையில், 64 கம்பெனி துணை ராணுவப்படையினரும், 50 கம்பெனி ஹரியானா போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, காக்கர் ஆற்றுப்படுகையில் பள்ளங்களும் தோண்டட்டுள்ளன. ட்ரோன்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இவற்றை எல்லாமும் மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் அடங்குவர்.

vairamuthu posted sad tweet about chennai udhayam theatre closing ceremony
சென்னையின் பிரபலமான தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ள நிலையில் இதுதொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொதுவாக தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கிருக்கும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக தியேட்டர்கள் திகழ்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகளால் நம்மை கட்டிப்போட்ட பங்கு அந்த 3 மணி நேர காட்சிகளுக்கு உண்டு. அப்படிப்பட்ட தியேட்டர்கள் காலப்போக்கிற்கு ஏற்றவாறு அப்டேட் வெர்ஷனாக மாற்றப்பட்டாலும், பல பிரபல தியேட்டர்கள் திருமண மண்டபம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆக கட்டப்பட்டது சோகத்திலும் சோகமான நிகழ்வு தான்.
இப்படியான நிலையில் சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையின் மிக முக்கியப்பகுதியாக உள்ள அசோக் நகரில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 ஸ்கிரீன்களுடன் கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தியேட்டர் சென்னை மட்டுமல்லாது வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற தியேட்டராகவும் திகழ்ந்தது. உண்மையில் இந்த தியேட்டரால் ஏழை, எளிய மக்கள் சினிமா பார்க்கும் கனவு நிஜமானது என்பதே உண்மை.
பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய தியேட்டர் மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களின் ஷூட்டிங்கும் இந்த தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றுள்ளது. உதயம் தியேட்டர் என்றாலே கொண்டாட்டம் என்றிருந்த நிலையில் அந்த தியேட்டர் மூடப்படுவது மிகவும் வருந்ததக்க ஒன்றாகவே உள்ளது. இதன் அருகில் இருக்கும் உதயம் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களை பிரபலமான கட்டுமான நிறுவனம் விலைக்கு வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் உதயம் தியேட்டர் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;இதயம் கிறீச்சிடுகிறதுமுதல் மரியாதை, சிந்து பைரவி,பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்ரோஜா என்றுநான் பாட்டெழுதியபல வெற்றிப் படங்களைவெளியிட்ட உதயம் திரைவளாகம்மூடப்படுவது கண்டுஎன் கண்கள்கலைக் கண்ணீர் வடிக்கின்றனமாற்றங்களின்ஆக்டோபஸ் கரங்களுக்கு… pic.twitter.com/ckGwDDD6bC
— வைரமுத்து (@Vairamuthu) February 15, 2024இந்நிலையில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த தியேட்டர் மூடப்படுவது திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து உதயம் தியேட்டர் தொடர்பான பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில்,
“ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது; இதயம் கிறீச்சிடுகிறது.
முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன் ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றனமாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும்
-நன்றி உதயம்” என தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: Vijay – AjithKumar: தல – தளபதி ரசிகர்களே தயாரா? – ரீ-ரிலீஸ் ஆகும் காதலுக்கு மரியாதை,வாலி படங்கள்..!
மேலும் காண

இரண்டாம் நாளாக 54 கன அடியாக நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர் வரத்து

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 65.73 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 29.14 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.42 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.80 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 488 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,122 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 52.58 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 102 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.

ரயிலில் மாணவர்கள் மோதல்! காவல்துறை முன் நடந்தேறிய சம்பவம்! 60 பேர் டிஸ்மிஸ்!

பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்களிடையே வெடித்த மோதல். பச்சையப்பன் மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரப்பரப்பு. 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 10 பேரை தேடி வருவதாக ரயில்வே டிஎஸ்பி தகவல்

சென்னை பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும், பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் முக்கிய ரயில் நிலையமாக கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பச்சையப்பன் கல்லூரி மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. நேற்று மாலை 3 மணியளவில் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த போது, சென்னை கடற்கரை முதல் அரக்கோணம் வரை செல்லக்கூடிய மின்சார ரயில் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தது.

பச்சையப்பன் கல்லூரி மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்

அந்த ரயிலில் பயணித்து வந்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள், திடீரென பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். இந்நிலையில் ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றபோது பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் அந்த ரயிலில் ஏறினர். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்த மின்சார ரயில் மீது கற்களை எரிந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையும் பச்சையப்பன் கல்லூரி மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றறிக்கை

இச்சம்பவம் குறித்து ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் கூறுகையில், சென்னையில் பல கல்லூரிகள் இருந்தாலும் இந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் பல முறை எச்சரித்தும் அவர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தாக்குதல் ஈடுபட்ட இரண்டு கல்லூரி மாணவர்களையும் கல்லூரியில் இருந்து உடனடியாக நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறியிருந்தார். பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக அளவில் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தை பயன்படுத்தக்கூடிய நிலையில், மாணவர்களின் இந்த மோதலால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. சுமார் 60 மாணவர்களை நீக்குவதற்காக பரிந்துரை சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dharsha Gupta: தேவதையே வா வா .. ரசிகர்களை கட்டிப்போட்ட தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வரும் தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காதலர் தின புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் தங்கள் துணைக்கு ரோஜா பூ முதல் விலை உயர்ந்த பொருட்கள் வரை பரிசாக வழங்கி தங்கள் அன்பையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தினர். அதே சமயம் சமூக வலைத்தளங்கள் முழுக்க காதலர் தின பதிவுகளை பார்க்கவும் முடிந்தது. மேலும் கோயில்கள் கடற்கரை பூங்காக்கள் என எங்கு திரும்பினாலும் காதலர் தினம் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. இதனிடையே சினிமா பிரபலங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்து கொண்டனர்.

இதில் சில நடிகர்கள் தங்கள் காதலர்களோடும் இல்வாழ்க்கை துணையோடும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர். சிலரோ தனியாக இருக்கும் புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு ரசிகர்களுக்கு காதலர் தினம் பற்றி தங்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினர். இப்படியான நிலையில் இளம் நடிகையான தர்ஷா குப்தா நேற்றிரவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் சிவப்பு நிற கவர்ச்சி உடையில் காதலர் தின புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில் "காதல் என்பது கண்ணில் தோன்றி கனவில் முடிவதில்லை. அது மனதில் தோன்றி மரணம் வரை நீடிப்பது. அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்" என பதிவிட்டிருந்தார். அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் சரி தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அன்றைய நாள் முடிவுக்கு வராது என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது.

View this post on Instagram

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவளும் நானும் என்ற சீரியல் மூலம் கலை உலகில் தர்ஷா குப்தா நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களிலும், காமெடி சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு ரசிகர்களுடைய பிரபலமானார். இவரை 2021 ஆம் ஆண்டு தான் இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் மோகன் ஜி. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs ENG: இன்று 3வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்துமா இந்தியா?

இந்தியா வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இன்று 3வது டெஸ்ட்:

இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் மோதுகின்றனர். இரு அணிகளும் தலா 1 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஆர்வத்துடன் இருப்பார்கள்.

கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தன்னம்பிக்கையுடன் இருக்கும். இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக விராட்கோலி இந்த தொடரில் இருந்து விலகியிருப்பது அமைந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் விராட் கோலி ஒரு டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகியிருப்பது இதுவே முதன்முறை ஆகும். கே.எல்.ராகுலும் இந்த டெஸ்டில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பலவீனம் ஆகும்.

பேட்டிங், பவுலிங்:

இந்திய அணிக்கு பேட்டிங்கில் பலமாக ஜெய்ஸ்வால், சுப்மன்கில் போன்ற இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த கேப்டன் ரோகித்சர்மா உள்ளார். கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்காத ரோகித் சர்மா இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தால் இங்கிலாந்துக்கு தலைவலியாக அமையும். ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இளம் வீரர்களான படிதார், பரத், படிக்கல் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். பந்துவீச்சில் பும்ரா அசத்தி வருகிறார். அவருடன் கடந்த போட்டியில் களமிறங்காத சிராஜ் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு பக்கபலமாக இருப்பது அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா சுழல் ஆகும். இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் கண்டிப்பாக 500 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து பலம், பலவீனம்:

இங்கிலாந்து அணியும் சரிசம பலம் வாய்ந்த அணியாக உள்ளனர். கிராவ்லி, டக்கெட் சிறந்த தொடக்கம் அளித்தால் பின்வரிசைக்கு பக்கபலமாக அமையும். ஒல்லி போப்பும் சிறந்த ஃபார்மில் உள்ளார். முன்னாள் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து மோசமாக ஆடி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதப்படுகிறது. இளம் வீரர் சோயிப் பஷீர், ரெஹன் அகமது சுழலில் அச்சுறுத்தலாக திகழ்வார்கள் என்று கருதப்படுகிறது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அந்த அணிக்கு பக்கபலமாக உள்ளார்.

பேட்டிங் சாதகம்:

சரிசம பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று மோதுவதால் நிச்சயம் ரசிகர்களுக்கு இந்த போட்டி விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது. ராஜ்கோட் மைதானத்தில் 28 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியும். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு பக்கபலமான மைதானம் ஆகும்.

முதல் இன்னிங்சின் சராசரி ஸ்கோர் இங்கு 593 ஆகும். இரண்டாவது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 334 ஆகும். 3வது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 228 ஆகும். 4வது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 172 ஆகும்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி இந்த மைதானத்தில் 649 ரன்களை விளாசியதே அதிகபட்சம் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களை எடுத்ததே குறைந்தபட்சம் ஆகும்.

pm modi arrives Qatar after finished uae trip
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 7வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அபுதாபி விமான நிலையம் சென்றடைந்த அவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் அகமத் பின் சயீத் அல் நஹ்யான் கட்டித்தழுவி வரவேற்றார். இதன்பின்னர் இருவரும் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் கட்டமைப்பு,எரிசக்தி , இருநாட்டு மக்களிடையேயான நல்லுறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி – அதிபர் நஹ்யான் இடையே பல்வேறு துறைசார் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனையடுத்து டெல்லி ஐஐடியின் அபுதாபி வளாகத்தின் முதலாவது பிரிவு மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு என்பது இரண்டு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைப்பதாக தெரிவித்தார். முன்னதாக பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் இந்தப் பயணத்தின்போது, அபுதாபியில் முதலாவது இந்து ஆலயத்தையும் திறந்து வைக்க உள்ளேன் என தெரிவித்திருந்தார்.
“Had a wonderful meeting with PM Sheikh Mohammed bin Abdulrahman Al Thani. Our discussions revolved around ways to boost India-Qatar friendship,” tweets Prime Minister Narendra Modi pic.twitter.com/KyZE3CpFW1
— ANI (@ANI) February 14, 2024அதன்படி, 27 ஏக்கரில் பரந்து விரிந்து ரூபாய் 700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த BAPS கோயில் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கோவிலில் மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்களில் ராமர், சிவன், ஜகன்னாதர், கிருஷ்ணர், கிருஷ்ணரின் மறு அவதாரமாகக் கருதப்படும் சுவாமி நாராயண், திருப்பதி பாலாஜி மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் உள்ளன. இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்த பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக கத்தார் புறப்பட்டு சென்றார்.
4வது முறையாக அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை தோஹா விமான நிலையத்தில் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் சோல்தான் பின் சாத் அல்-முரைக்கி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து தோஹாவில் கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் பிரதமர் மோடி சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பின்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி மற்றும் நிதி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில் , “பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் ஒரு அற்புதமான சந்திப்பு நிகழ்ந்தது. எங்களின் விவாதங்கள் இந்தியா-கத்தார் நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.மேலும் காண

Senthil Balaji’s bail plea is coming up for hearing again today in the Madras High Court before Justice Anand Venkatesh.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், ” சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45 வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது குறித்து விசாரணையின் போது தான் நிரூபிக்க முடியும் என அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கி விட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. சந்தேகத்துக்கு இடமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
அமலாக்கத் துறையின் மொத்த வழக்கும், சோதனையின் போது பறிமுதல் செய்த பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் அடிப்படையிலேயே உள்ளது. சோதனையின் போது ஐந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்த நிலையில், நீதிமன்றத்தில் வேறு மின்னணு சாதனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
பறிமுதலுக்கு பின், அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்கு பின் பென் டிரைவ் குறித்த அறிக்கையில் 284 கோப்புகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்த பென் டிரைவ் குறித்த மற்றொரு அறிக்கையில் 472 கோப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமலாக்க துறையினரால் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களுக்கு என்ன மதிப்பு உள்ளது, ஆதாரங்கள் திருத்தம் தொடர்பாக தற்போது நிரூபிக்க முடியாத நிலையில் விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா?
பறிமுதலுக்கு பின் பென் டிரைவ், ஹார்டு டிஸ்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கையெழுத்து இல்லாத கடிதங்களை அமலாக்க துறை ஆதாரங்களாக சேர்த்துள்ளது. பணத்தை வசூலித்து உதவியாளர் சண்முகத்திடம் வழங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால் சண்முகம் உதவியாளரே அல்ல. சட்டவிரோதமாக எந்த பண பரிமாற்றமும் நடைபெறவில்லை.
கடந்த 2013ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அது குற்றம் மூலம் ஈட்டப்பட்டது எனவும் அமலாக்க துறை தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் 64 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் 58 லட்சம் எடுக்கப்பட்டது. இத்தொகை தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்குக்காக எடுக்கப்பட்டு, பின் அத்தொகை வேறு கணக்கில் இருந்து டிபாசிட் செய்யப்பட்டது.
பொருளாதார குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது” என வாதிட்டார்.
இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கப்பதாலும், சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம் என்பதாலும், ஜாமீன் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்பதாலும், சந்தர்ப்ப சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறி ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய மூத்த வழக்கறிஞர், ” தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. வெளிநாடுகளுக்கு தப்பி விடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதத்தை நிறைவு செய்தார்.
அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தான் பெறப்பட்டன என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு விசாரணையை இன்று பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.மேலும் காண

Electoral Bond: தேர்தல் பத்திரம் திட்டம் செல்லுபடியாகுமா? – இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்திருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டில் இருந்து மத்தியில் ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2018 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தால் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகள் பெற்றது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை கிடைக்கப் பெற்றது கடும் சர்ச்சைகளை உண்டாக்கியது. ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரையிலான தேர்தல் பத்திரங்களை பாரத் ஸ்டேட் வங்கி தான் வெளியிடும். இதனை ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் காலத்தில் கூடுதலாக 30 நாட்கள் தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு அரசியல் கட்சிகள் அனுமதி வழங்கும்.

இதனிடையே இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி தொடர்பான விவரங்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பிரச்சினையை கிளப்பியது. அதன்படி 2022-23 ஆம் நிதியாண்டில் பாஜக ரூ.1,294 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.171 கோடி பெற்றுள்ளது. மொத்த விற்பனையில் 55 சதவிகித தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. ரூ.12 ஆயிரம் கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு இதில் பாஜகவுக்கு மட்டும் ரூ.6,564 கோடி பாஜகவுக்கு கிடைத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இப்படியான நிலையில் தேர்தல் பத்திரங்கள் மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி 2019ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, “தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருகிறவர்கள் யார்? யார்? என்கிற விவரத்தை அறியக் கூடிய உரிமை பொது மக்களுக்கு கிடையாது.இந்த திட்டத்தில் சட்ட விதிகள் மீறப்படவில்லை” என கூறியிருந்தது. இந்நிலையில் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

28 years of Actor Vijay’s first blockbuster movie poove unakkaga Special story | Poove Unakkaga: “காதல்ங்கிறது பூ மாதிரி.. ஒருமுறை உதிர்ந்துட்டா அவ்வளவு தான்”
நடிகர் விஜய்யின் முதல் பிளாக்பஸ்டர் படமாக அமைந்த பூவே உனக்காக வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு அடைந்துள்ளது.
1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படம் மூலம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் விஜய் ஹீரோவாக அறிமுகமானார். அவரின் முகம் பரீட்சையமாக தெரிய மறைந்த நடிகர் விஜயகாந்த் உதவி செய்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய செந்தூரபாண்டி படத்தில் விஜய்க்கு அண்ணனாக அவர் நடித்திருந்தார். அதேசமயம் ஹீரோவாக மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடிக்க விஜய் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.
இடைப்பட்ட காலக்கட்டத்தில் அவருக்கென சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அமையவே இல்லை. இதில் பல படங்கள் அவரது அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியும் விஜய் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் தான் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானது. விக்ரமனும், சூப்பர்குட் பிலிம்ஸூம் அதற்கு முன்னால் பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தனர்.
அப்படியான நிலையில் விஜய்யை வைத்து தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறார்கள் என பலரும் நினைத்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் “பூவே உனக்காக” தவிடுபொடியாக்கியது. அந்த படம் மகத்தான வெற்றி பெற்றதோடு, விஜய்யின் சினிமா கேரியரில் முதல் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இவ்வளவு ஏன் ஒன்சைட் லவ்வர்ஸ்களின் ஆல்டைம் பேவரைட் படமாக இப்படம் அமைந்தது.
இப்படத்தில் விஜய், சங்கீதா, சார்லி, மலேசியா வாசுதேவன், ஜெய்கணேஷ், அஞ்சு, மீசை முருகேஷ், நாகேஷ், நம்பியார், விஜயகுமாரி, சிவா, தாரிணி, சக்திகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
தான் ஆசைப்பட்ட பெண்ணுடன் தான் காதல் கைகூடவில்லை. ஆனால் அப்பெண் ஆசைப்பட்டதையாவது நிறைவேற்றி வைக்கலாமே என்பது தான் பூவே உனக்காக படத்தின் கதையாகும். ஒரு ஊரில் இந்து, கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த இரு நண்பர்கள் வீட்டில் உள்ள இருவர் காதலிக்கின்றனர். காதலர்கள் வீட்டை விட்டு வெளியேற நண்பர்களாக இருந்த குடும்பம் எதிரியாக மாறுகிறது.
இதனிடையே 25 ஆண்டுகளுக்குப் பின் இந்த இரு குடும்பங்களின் பேரன் என சொல்லிக் கொண்டு விஜய் வருவார். அவர் இரு குடும்பங்களையும் இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது சங்கீதா வருவார். விஜய் அந்த இரண்டு வீட்டின் பேரன் இல்லை என சங்கீதா சொல்ல, உண்மையில் விஜய் யார்? அவர் ஏன் இருகுடும்பங்களையும் சேர்த்து வைக்க மெனக்கெடுகிறார்? என்பதை பிளாஸ்பேக் காட்சிகளோடு அழகாக சொல்லியது “பூவே உனக்காக”.
தேனிசை பாடல்கள்
பூவே உனக்காக படத்தில் சொல்லாமலே யார் பார்த்தது, ஆனந்தம் ஆனந்தம் பாடலும் எவர்க்ரீன் பாடலாக அமைந்தது. இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு இப்படம் 50வது படமாக அமைந்து மிகப்பெரிய அளவில் அவரை கொண்டு சேர்த்தது.
எவர்க்ரீன் வசனங்கள்
“மதம் மனுசங்க கிட்டதான் இருக்கு.. ஆனால் காதல் காக்கா, குருவிகிட்ட கூட இருக்கு”, “காதல்ங்கறது ஒரு செடில பூக்கிற பூ மாதிரி. உதிர்ந்துருச்சின்னா உதிர்ந்ததுதான்” என படத்தில் இடம்பெற்ற வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.தமிழகத்தின் பல ஊர்களிலும் 200 நாட்களை தாண்டி இப்படம் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

7 am headlines today 2024 15th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு:
சென்னை ராஜகீழ்பாக்கத்தில் சைதை துரைசாமியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.
முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை சுமூகம்; இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு – ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பேரவையில் 2 தனி தீர்மானம் நிறைவேறியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
முடிவுக்கு வந்தது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பிரச்சினை; இரண்டாவது வரிசைக்கு ஓ.பன்னீர் செல்வம் மாற்றப்பட்டு ஆர்.பி.உதயகுமாருக்கு முன்வரிசையில் இடம்
உதகை மலை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கக் கூடாது – ரயில்வேக்கு அரசு வலியுறுத்தல்.
சென்னையில் 2023ல் நடந்த 499 விபத்துகளில் 504 பேர் உயிரிழப்பு – போக்குவரத்து போலீஸ் தகவல்
ஈரோடு: அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 5.50 ஏக்கர் நிலம் மீட்பு
பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
சென்னை நந்தனத்தில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
செந்தில் பாலாஜியிடம் பறிமுதல் செய்த ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன – மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பரபரப்பு வாதம்இந்தியா:
அபுதாபியில் புதிதாக கட்டப்பட்ட இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஜெய்ப்பூரில் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாநிலங்களவைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டி.
டெல்லி செல்லும் விவசாயிகள் மீது 2ம் நாளாக டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.
விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவில் மொபைல் இணையதள சேவை நிறுத்தம்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பஞ்சாபில் இன்று ரயில் மறியல் போராட்டம்.
மாநிலங்களவை தேர்தல்: மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா.
காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அசோக் சவானுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை.உலகம்:
பிரதமர் மோடி வருகையையொட்டி புர்ஜ் கலீபா கோபுரத்தில் ஒளிர்ந்த இந்திய தேசியக் கொடி.
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்து பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் கண்டுபிடிப்பு.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு.
மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவுவிளையாட்டு:
ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிஐ வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி.
ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : இந்தியா காலிறுதிக்கு தகுதி.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவதன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்Published at : 15 Feb 2024 07:03 AM (IST)
மேலும் காண

today movies in tv tamil February 15th television schedule Sethupathi ips Nimirndhu Nil Kuruvi engeyum eppothum chandi veeran
Thursday Movies: பிப்ரவரி 15ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி
மதியம் 3.30 மணி: சேதுபதி ஐபிஎஸ்
சன் லைஃப்
காலை 11.00 மணி: பட்டணத்தில் பூதம் மதியம் 3.00 மணி: கணவன்
கே டிவி
காலை 7.00 மணி: சூரக்கோட்டை சிங்கக்குட்டி காலை 10.00 மணி: டிக் டிக் டிக் மதியம் 1.00 மணி: பூவேலி மாலை 4.00 மணி: மக்கள் வீரன் மாலை 7.00 மணி: நிமிர்ந்து நில் இரவு 10.30 மணி: நான் அவன் இல்லை 2
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: குருவி இரவு 11 மணி: குருவி
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: படவா ராஸ்கல்மதியம் 12 மணி: முத்து காளை மதியம் 3 மணி: கன்னித்தீவு இரவு 9.00 மணி: படவா ராஸ்கல்
ஜெயா டிவி
காலை 10 மணி: சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி மதியம் 1.30 மணி: ராசுக்குட்டி இரவு 10.00 மணி: ராசுக்குட்டி
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: புன்னகை மன்னன்இரவு 9.30 மணி: கிருஷ்ணன் வந்தான்
ஜீ திரை
காலை 6 மணி: மாமனிதன்காலை 8.30 மணி: பெங்களூரு நாட்கள் மதியம் 12 மணி: மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் மதியம் 3.30 மணி: காட்டேரிமாலை 6 மணி: உல்ஃப் இரவு 8.30 மணி: மூன்று பேர் மூன்று காதல்இரவு 11 மணி: வாயை மூடி பேசவும்
முரசு டிவி
காலை 6.00 மணி: பிடிச்சிருக்கு மதியம் 3.00 மணி: கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை மாலை 6.00 மணி: மலைக்கோட்டை இரவு 9.30 மணி: அலிபாபா
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: எஃப் ஐ ஆர் காலை 8.30 மணி: எங்கேயும் எப்போதும்காலை 11.00 மணி: அஸ்வதம்மா மதியம் 1.30 மணி: வால்டர் வீரய்யாமாலை 4.00 மணி: குட் லக் சகி மாலை 6.30 மணி: சண்டி வீரன் மாலை 9.30 மணி: கணேஷ்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: சிம்மாசனம் காலை 10.00 மணி: தினமும் என்னை கவனி மதியம் 1.00 மணி: உதிரிப்பூக்கள் மாலை 4.00 மணி: கோடம்பாக்கம் இரவு 7.00 மணி: கும்பக்கரை தங்கையாஇரவு 10.30 மணி: மேயர் மீனாட்சி
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: பாண்டி நாட்டு தங்கம் இரவு 7.30 மணி: காத்திருப்போர் பட்டியல்
மெகா டிவி
காலை 9.30 மணி: எல்லாம் ஐயப்பன் மதியம் 1.30 மணி: ருத்ர தாண்டவம் இரவு 11 மணி: கோடை மழைகாலை 5.30 மணி: ஆசாமியின் அமெரிக்க பயணம் காலை 8.00 மணி: நகரம் மறுபக்கம் காலை 11.00 மணி: மைக்கேல் மதியம் 2.00 மணி: தேள் மாலை 4.30 மணி: காதலே காதலேஇரவு 7 மணி: உறவுக்கு மரியாதை இரவு 9.30 மணி: வேழம்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: கடவுள் அமைத்த மேடை மதியம் 1.30 மணி: என் பொண்டாட்டி கலெக்டர்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: பெற்றால் தான் பிள்ளையாமாலை 7.30 மணி: மணமகளே வா
மெகா 24 டிவி
காலை 10 மணி: லாரி டிரைவர்மதியம் 2 மணி: பாட்டி சொன்ன கதை மாலை 6 மணி: நட்பு
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: பதில் சொல்வாள் பத்திரகாளி காலை 10 மணி: சின்ன கவுண்டர் மதியம் 1.30 மணி: மாங்குடி மைனர்மாலை 4.30 மணி: இதயத்தில் நீ மாலை 7.30 மணி: நீதி இரவு 10.30 மணி: சேரன் சோழன் பாண்டியன்மேலும் படிக்க: Ananthika Sanilkumar:ப்ரபோஸ் பண்ண லிமிட் இருக்கு.. தாண்டினால் அடிச்சிருவேன் – ரஜினி பட நடிகை அதிரடி
மேலும் காண

R Ashwin: 500 விக்கெட்டுகளை நோக்கி சுழற்பந்து ராட்ஷசன் அஸ்வின்; உலக சாதனையில் தடம் பதிப்பாரா?

இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரர் என்று வீரர்களை வரிசைப்படுத்தினால் அதில் கட்டாயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் கட்டாயம் இடம் பெறும். சுழற்பந்து வீச்சாளராக விளங்கும் அஸ்வின், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றார். அணிக்கு ஒரு பந்து வீச்சாளராக மட்டும் இல்லாமல், சிறந்த பேட்ஸ்மேனாகவும் விளங்கி வருகின்றார். நெருக்கடியான நிலையில் இந்திய அணி அஸ்வினை களமிறக்கி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாத வண்ணம் விளையாட வைக்கும் அளவிற்கு பேட்டிங்கிலும் கைதேர்ந்தவர் அஸ்வின் என்றே கூறவேண்டும்.

இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதுவரை முடிந்துள்ள இரண்டு போட்டிகளுடன் சேர்த்து அஸ்வின் 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அடுத்து வரும் மூன்று போட்டிகளில் விளையாடினால் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

அஸ்வின் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 499 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். நாளை நடக்கவுள்ள அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அடைவார். இதன் மூலம் சர்வதேச அளவில் 500 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 9வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் அடைவார். இது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையையும் தன் வசப்படுத்தியுள்ளார். இதுவரை அஸ்வின் 95 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அஸ்வின் மொத்தம் நான்கு ஆயிரத்து 284.3 ஓவர்கள் பந்து வீசியுள்ளார். அதாவது 25 ஆயிரத்து 707 பந்துகள் வீசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது சிறந்து பந்து வீச்சு என்றால் அது 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியதுதான். அதேபோல் அஸ்வின், இதுவரை 34 முறை 5 விக்கெட்டுகளும் 24 முறை 4 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். 500 மற்றும் அதற்கு மேல் டெஸ்ட்டில் விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் என்றால் அது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே. இவர் 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகள் கைப்பற்றி, சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற வரிசையில் 4வது இடத்தில் உள்ளார்.

இது மட்டும் இல்லாமல் அஸ்வின் பேட்டிங்கில் தனி முத்திரை பதித்துள்ளார் என்றே கூறவேண்டும். 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 138 இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அதில் 5 சதங்களும் 14 அரைசதங்களும் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 124. 375 பவுண்டரிகளும் 21 சிக்ஸர்களும் பறக்கவிட்டுள்ளார் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அஸ்வின் ஆறு ஆயிரத்து 37 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இவரது ஆவ்ரேஜ் ஸ்கோர் 26.59ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 54.18ஆகவும் உள்ளது.

POR Movie Promotion Coimbatore Actor Arjun Das Believes That Even After Starting Political Party Actor Vijay will act in films- TNN | Arjun Das on Vijay: அரசியல் கட்சி துவங்கிய பின்னரும்விஜய் படங்களில் நடிப்பார்
இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் உருவான போர் திரைப்படம் மார்ச் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள ப்ராட் வே மாலில் அத்திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ், ”போர் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரவிருக்கிறது. தமிழில் நாங்கள் நடித்துள்ளோம். இப்படம் கல்லூரி மாணவர்களின் சேட்டைகளை கதைகளமாக கொண்டது. இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் காண வேண்டும். வில்லன் கதாபாத்திரம், கதாநாயகன் கதாபாத்திரம் இரண்டும் கடினமானது. நல்ல கதாபாத்திரம் எது கிடைத்தாலும் செய்வேன். இந்த படத்தில் நான் வில்லனா இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. மக்கள் என்னை அன்பாகவும் ரசித்தார்கள், வில்லன் கதாபாத்திரத்திலும் ரசித்தார்கள். மக்கள் எதனை ஏற்றுக்கொள்கிறார்களோ அதனை தொடர்ந்து செய்வேன். லோகேஷ் கனகராஜ் வில்லன் கதாபாத்திரத்திற்கு அழைத்தால் அதுதான் லைன் அப் நெகட்டிவ் ரோலாக இருக்கும்” என தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய உள்ளது குறித்தான கேள்விக்கு, ”நடிகர் விஜய்க்கு ஆன்லைனில் வாழ்த்துக்களை தெரிவித்தேன். நன்கு யோசித்து தான் அவர் அந்த முடிவை எடுத்திருப்பார். அரசியல் கட்சி துவங்கிய பின்பும் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என நம்பிக்கை உள்ளது. அவர்களது ரசிகர்களும் அதனைத் தான் விரும்புவார்கள். என்னைப் பொறுத்தவரை அவரது படங்களை பார்க்க ஆசைப்படுவேன். ஆனால் அது அவர் எடுத்த முடிவாக இருக்கலாம்” என பதிலளித்தார்.பின்னர் பேசிய நடிகர் காளிதாஸ் ஜெயராம், ”இது ஒரு கனவு போல் உள்ளது. இந்த படம் பல்வேறு விஷயங்களை தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துள்ளோம். இந்த படத்தை பற்றி நினைக்கும் போதே பல்வேறு நல்ல நினைவுகள் தான் நினைவிற்கு வருகிறது. விக்ரம் படத்தில் தன்னுடைய கதையும், அர்ஜுன் தாஸ் கதையும் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் ஒற்றுமையாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாவக்கதைகள் திரைப்படம் முடித்தவுடன் அது போன்ற சமூக அக்கறை உடைய படங்களை நடிக்க வேண்டும் என எண்ணி இருந்தேன். ஆனால் நடிகர் மக்களுக்காக அனைத்து கதாபாத்திரங்களையும் நடிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய இயக்குநர் பிஜோய் நம்பியார், ”இந்த படம் கல்லூரி வாழ்க்கை சார்ந்த கதை. சமூகம் சார்ந்த கருத்துக்களும் இதில் அடங்கி உள்ளது. இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளனர். போர் என்ற பெயர் இந்த படத்திற்கு பொருந்தும் என்பதால் பயன்படுத்தினேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து பேசிய நடிகை சஞ்சனா நடராஜன், ”சோலோ, டேவிட் படங்களை எல்லாம் பார்க்கும் போது மிகவும் அற்புதமாக இருக்கும். அதுபோன்ற படங்களில் எப்போதாவது நடிக்க மாட்டோமா என்று எண்ணினேன். இப்படிப்பட்ட நேரத்தில் இந்த திரைப்படத்தில் எனக்கு இந்த கதாப்பாத்திரம் வேண்டுமென சண்டை போட்டு இந்த கதாபாத்திரத்தை வாங்கினேன். சார்பட்டா இரண்டாவது பாகம் வருவது என்பதே சமூக வலைத்தளங்களை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். தற்போதைக்கு அது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை” எனத் தெரிவித்தார்.மேலும் காண

Nayanthara : மகன்களுடன் காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
Nayanthara : மகன்களுடன் காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
Seetha Raman: அர்ச்சனாவுக்கு விழுந்த தர்மஅடி.. ராமுக்கு ஷாக் கொடுத்த ராஜசேகர் – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா நான்சிக்கு நான் நிரபராதி என்று நிரூபித்து காட்டுவதாக சவால் விட்டிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சுபாஷ் ரவுடிக்கு போன் செய்து மகாவை கொன்றது பற்றி கேட்க அவன் நான் கொல்லவில்லை என்ற உண்மையை உடைக்க சுபாஷ் அர்ச்சனாவிடம் இதை பற்றி சொல்லி புலம்பும் போது மகாவை கொன்றது நானும் கல்பனாவும் தான் என்று சொல்ல முதலில் அதிர்ச்சியாகும் சுபாஷ் பிறகு சிப்பேர் என சந்தோசப்படுகிறான்.

அடுத்து நான்சியையும் விட கூடாது என்று அர்ச்சனா முகத்தை மறைத்து கொண்டு கட்டையால் தாக்க செல்ல இருட்டில் இதை பார்த்து பெண் ஒருவரும் பின்னாடியே செல்ல கடைசியில் சீதா இருட்டில் யார் என்று தெரியாமல் அர்ச்சனாவை கட்டையால் அடித்து விட எல்லாரும் கூடி விடுகின்றனர்.

ராம் சீதாவிடம் எதுக்கு நீ சித்தியை அடித்த என்று கேட்க அவள் இதையும் கொலை முயற்சியில் சேத்துடாதீங்க பாஸ், இவங்க எதுக்கு கட்டையோட செல்வி அக்கா ரூமுக்கு போனாங்கனு கேளுங்க என்று கோர்த்து விடுகிறாள். பிறகு அர்ச்சனாவும் சுபாஷும் நான்சியை பார்த்து பேச அவள் எல்லாத்தையும் நீங்க பண்ணீங்கன்னு தெரியும் என்பது போல பேச இவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு ராம் ஸ்டேஷனுக்கே ராஜசேகர் ட்ரான்ஸ்வர் வாங்கி வந்து ஷாக் கொடுக்க ராம் நீங்க எதுக்கு வந்தீங்க என்று கேட்க அரசாங்கம் அனுப்பிச்சு வந்தேன் என்று பதிலடி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

A Video Of A Batter Falling Quite Incredibly To A Delivery That Spun Extraordinarily Has Been Doing The Rounds On Social Media KCC T20 Challengers Cup 2024
KCC T20 சேலஞ்சர்ஸ் கோப்பை 2024:
பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் நாம் நினைத்து கூடபார்க்க முடியாத பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது வழக்கம். சில நேரங்களில் நகைச்சுவையாக நடைபெறும் சில விஷயங்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். அப்படி ஒரு நிகழ்வுதான் குவைத்தில் நடைபெற்றுள்ளது.
அதாவது குவைத்தில் கேசிசி டி20 சேலஞ்சர்ஸ் என்ற தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குவைத் நேசனல்ஸ் அணியும் எஸ்பிஎஸ் சிசி அணியும் மோதியுள்ளன. இதில் முதலில் டாஸ் வென்றது எஸ்பிஎஸ் சிசி அணி. ஆனால், அந்த அணி பேட்டிங்கைத்தான் முதலில் தேர்வு செய்தது. அப்போது குவைத் அணி வீரர் வக்கார் என்பவர் வீசிய பந்து தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது அந்த பந்து வேறு எங்கேயோ குத்தி wide ஆகப்போகிறது என பேட்ஸ்மேன் நினைத்து அதை அடிக்காமல் விட அந்த பந்து நேரடியாக செல்லாமல் திரும்பி ஸ்டெம்பை பதம்பார்த்தது.
வைரல் வீடியோ:
இதை சற்றும் எதிர்பார்க்காத பேட்ஸ்மேன் அப்படியே நிற்கிறார். இதன் மூலம் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். முன்னதாக, ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்து எப்படி ஸ்டெம்பை தாக்கியது என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
unplayable. via Kuwait Cricket pic.twitter.com/Nx44HdMah6
— That’s So Village (@ThatsSoVillage) February 11, 2024எட்டாயிரம் பேர் லைக் செய்துள்ளனர் மற்றும் 400க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். அதேபோல் ரசிகர்கள் பலரும் பந்து வீச்சாளரை பாராட்டி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு இது தான் என்று கூறியுள்ளார்.
Ball of the century.
— HENRY MORRIS (@mrhenrymorris) February 12, 2024
மேலும் சிலர் சுழற்பந்தில் முத்தையா முரளிதரன், ஹர்பஜங் சிங்கையே இந்த பந்து வீச்சாளர் மிஞ்சிவிட்டார் என்பது போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். கிரிக்கெட் போட்டிகளில் நாம் நினைத்து பார்க்காத எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றும் சிலர் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: ICC Women’s ODI Rankings: ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி தரவரிசை… 4-வது இடத்திற்கு முன்னேறிய ஸ்மிருதி மந்தனா!
மேலும் படிக்க: IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் – சுனில் கவாஸ்கர்!

zee tamil karthigai deepam serial february 14th episode update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் வில்லிகளின் சதியை வீழ்த்தி கச்சேரி நடத்த ஏற்பட்ட தடையை உடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கார்த்திக் ஆபிசில் இருக்கும் போது ரூபஸ்ரீ மற்றும் கோகிலா என இருவரும் உள்ளே வருகின்றனர். இவர்கள் வருவதை சிசிடிவி கேமராவில் பார்த்து விடும் கார்த்திக் அவர்களை உள்ளே விட சொல்கிறான், பிறகு உள்ளே வந்த இவர்கள் அப்படியே நல்லவர்கள் போல பேசி நடிக்கின்றனர்.
கார்த்திக் நீங்க தான் கச்சேரியை நடக்க விட கூடாதுனு பிளான் போட்டது என்று கேட்க நாங்க எதுக்கு அப்படி பண்ணனும் நாங்க இல்ல என்று சமாளிக்கின்றனர். பிறகு சரி தர்மலிங்கம் வீட்டிற்கு போய் ஏன் பணத்தை கேட்டீங்க என்று கேட்க அவங்க கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டோம். கொடுத்துட்டாங்க என்று சொல்லி சமாளிக்கின்றனர்.
பிறகு ரூபாஸ்ரீ இங்கும் அங்கும் சுத்தி பாத்து விட்டு பாத்ரூம் எங்கே என்று கேட்டு உள்ளே சென்று கையில் எடுத்து வந்திருந்த பணப்பையை வைத்து வெளியே வந்து இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட்டிற்கு தகவல் கொடுக்கின்றனர். அவர்கள் சோதனையிட கார்த்திக் ஆபிஸ்க்கு வருகின்றனர். வெளியே போன கோகிலா மற்றும் ரூபாஸ்ரீ மீண்டும் உள்ளே வருகின்றனர்.
ஆபிஸ் முழுவதும் பணத்தை தேட எங்கும் எதுவும் கிடைக்காத நிலையில் இவர்கள் பாத்ரூமில் தேடி பார்க்க சொல்ல பிறகு அங்கும் தேடி பார்க்கின்றனர், பிறகு நீங்க இங்க எல்லாம் வர கூடாது என்று ரூபாஸ்ரீ மற்றும் கோகிலாவை வெளியே துரத்தி விடுகின்றனர். எங்கும் பணம் கிடைக்கவில்லை தவறான தகவல் வந்ததாக சொல்லி வெளியே கிளம்புகின்றனர்.
பிறகு கார்த்திக் கோகிலா வீட்டிற்கு வந்து ஒரு கவரை கொடுத்து உங்க பணத்தை உங்க அக்கவுண்ட்லயே போட்டுட்டோம் என்று ஷாக் கொடுக்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்டைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Valentine’s Day: பள்ளியில் மட்டும் 3 காதல்கள்.. சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நிலையா?
Valentine’s Day: காதலர் தினத்தில் சிங்கிளாக புகைப்படம் பதிவிட்ட பிரபலங்கள் – என்ன சொன்னாங்க தெரியுமா?
மேலும் காண

parking movie crew celebrates 75 days releases special review
பார்க்கிங் படன் வெளியாகி 75 நாட்கள் நிறைவடையும் நிலையில் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
பார்கிங்
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கிய படம் பார்க்கிங். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிராத்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்த நிலையில், ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இரண்டு ஆண்களுக்கு இடையில் ஏற்படும் ஈகோ எந்த அளவிற்கு தீவிர பிரச்சனையாக மாறுகிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் எப்படி பாதிக்கப் படுகின்றன என்பதை மையமாக வைத்து நகைச்சுவை , செண்டிமெண்ட். த்ரில்லர் என சுவாரஸ்யமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது.
பார்க்கிங் படம் வெளியான சமயத்தில் சென்னையில் மிக்ஜாம் புயலால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இருந்தபோதிலும் படத்திற்கான வரவேறு குறையாமல் இருந்தது.
பார்க்கிங் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சென்னையில் இப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் படத்தின் இயக்குநருக்கு தங்க வளையம் பரிசாக அணிவித்தார். இப்படத்தில் ஹீரோ ஹீரோயின் காம்பினேஷனை விட ஹீரோ வில்லன் காம்பினேஷன் ரசிகர்களால் அதிகம் பாராட்டப் பட்டது. ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் ஆகிய இருவருக்கு இடையில் இருந்த கெமிஸ்ட்ரி படத்தைத் தாண்டி நிறைய நிஜ மனிதர்களுடன் தொடர்பு படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
75 நாள் கொண்டாட்டம்
What if Ilamparuthi and Eswar meet again? Celebrating 75 days of #Parking with a deleted scene Watch it now on Hotstar #75DaysOfParking🚗@iamharishkalyan @Actress_Indhuja @sinish_s @Sudhans2017 @ImRamkumar_B @SoldiersFactory @PassionStudios_ pic.twitter.com/nZd14Ao6UU
— Ramesh Bala (@rameshlaus) February 14, 2024திரையரங்கத்தைத் தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது பார்க்கிங் திரைப்படம். இந்நிலையில் இன்றுடன் 75 நாட்களை பார்க்கிங் படம் நிறைவு செய்துள்ளது. இதனைத் கொண்டாடும் விதமாக படக்குழு சார்பாக சிறப்பு வீடியோ ஒன்றும் வெளியிடப் பட்டுள்ளது. இப்படத்தில் நடித்த ஹரிஷ் கல்யான் மற்றும் எம்.எஸ் பாஸ்கரின் கதாபாத்திரங்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ள நேர்ந்தால் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்கிற வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
மேலும் படிக்க ; Yezhu Kadal Yezhu Malai : இன்று மாலை வெளியாகிறது ஏழு கடல் ஏழு மலை ஃபர்ஸ்ட் சிங்கிள்!
Sai Pallavi: நாக சைதன்யாவுடன் ரொமான்ஸ்.. காதலர் தின வீடியோ வெளியிட்ட சாய் பல்லவி!மேலும் காண

கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ்; இறுதியில் சொதப்பல்; டெல்லி வெற்றி!
10 வது ப்ரோ கபடி லீக்:
10-வது ப்ரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடி வருகின்றன.
தபாங் டெல்லி – தமிழ் தலைவாஸ்:
Dilliwalo kaisa laga Dabangs ka comeback? 😉 #DabangDelhi #HarDumDabang #DELvCHE pic.twitter.com/LOEKSfOten
— Dabang Delhi KC (@DabangDelhiKC) February 14, 2024இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி – தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 45-43 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது.
தமிழ் தலைவாஸ்:
Raid points: 21
Super raids : 0
Tackle points: 14
All out points: 6
Extra points: 2
தபாங் டெல்லி:
Raid points: 26
Super raids : 1
Tackle points: 10
All out points: 6
Extra points: 3
இதையடுத்து இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – புனேரி பால்டன் அணிகள் ஆடி வருகின்றன.
மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்…சோயப் பஷீரை கழட்டி விட்ட இங்கிலாந்து! பிளேயிங் லெவன் அறிவிப்பு!
மேலும் படிக்க: Watch Video: இப்படி கூடவா பந்து போடுவாங்க.. வாயை பிளந்த நெட்டிசன்கள்…குவைத் கிரிக்கெட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
மேலும் காண

Malavika Mohanan : காதலர்களுக்கு நடிகை மாளவிகா மோகனன் சொல்லும் 3 அறிவுரைகள்!
Malavika Mohanan : காதலர்களுக்கு நடிகை மாளவிகா மோகனன் சொல்லும் 3 அறிவுரைகள்!
Russia Vladimir Putin : ரஷிய அதிபர் புதினை படுகொலை செய்ய சதி.. கதிகலங்க வைத்த எலான் மஸ்க்!

கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க தொடங்கியது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக போர் தொடர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இந்த போரில், ரஷியா பல சவால்களை சந்தித்துள்ளது. பல சவால்களுக்கு மத்தியிலும், உக்ரைனில் பல முக்கிய இடங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது.

"புதினை படுகொலை செய்துவிடுவார்கள்"

இந்த நிலையில், உக்ரைனில் இருந்து ரஷிய அதிபர் புதின் பின்வாங்கினால் அவரை படுகொலை செய்துவிடுவார்கள் என உலகின் டாப் 2 பணக்காரர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க குடியரசு கட்சி செனட் உறுப்பினர்கள் உடனான கலந்துரையாடலின்போது, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இப்படி தெரிவித்துள்ளார்.

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளை வழங்கும் நோக்கில் அமெரிக்க செனட் சபையில் மசோதா கொண்டு வரப்பட்டது. உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலர்களும் இஸ்ரேல், தைவான், காசாவுக்கு 35 பில்லியன் டாலர்களும் வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க குடியரசு கட்சி செனட் உறுப்பினர்கள், எக்ஸ் தளத்தில் நடந்த ஸ்பெஸஸ் கலந்துரையாடலில் பங்கேற்றனர். விஸ்கான்சின் செனட் உறுப்பினர் ரான் ஜான்சன், ஓஹியோ செனட் உறுப்பினர் ஜேடி வான்ஸ், உட்டா செனட் உறுப்பினர் மைக் லீ, குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் விவேக் ராமசுவாமி, கிராஃப்ட் வென்ச்சர்ஸ் எல்எல்சியின் இணை நிறுவனர் டேவிட் சாக்ஸ் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்று பேசினர்.

பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்:

அப்போது, உக்ரைன் வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் கற்பனை உலகில் வாழ்கின்றனர் என ஜான்சன் தெரிவித்தார். இந்த கருத்தை ஒப்புக்கொண்ட எலான் மஸ்க், "உக்ரைனுக்கு ஏதிரான போரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தோற்பதற்கு வாய்ப்பே இல்லை. உக்ரைன் மசோதா பற்றி தெரிந்து கொள்ள அமெரிக்கர்கள் தங்களின் மக்கள் பிரதிநிதிகளை தொடர்புகொள்வார்கள் என நம்புகிறேன்.

இந்தச் செலவு உக்ரைனுக்கு உதவாது. போரை நீட்டிக்க உக்ரைனுக்கு உதவாது. போரில் வெல்ல உக்ரைனுக்கு திறன் இருக்கிறதா என தெரியவில்லை. சண்டையை முடிவுக்கு கொண்டுவர புதினுக்கு அழுத்தம் தரப்படுகிறது. அவர் போரில் இருந்து பின்வாங்கினால், அவர் படுகொலை செய்யப்படுவார்.

சில சமயங்களில் புதினின் ஆதரவாளர் என விமர்சிக்கப்படுகிறேன். ஆனால், அந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது. போரில் ரஷியாவை மட்டுப்படுத்த மற்றவற்றை காட்டிலும் எனது நிறுவனங்கள் நிறையவற்றை செய்துள்ளது" என்றார். எலான் மஸ்கின் ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனம் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கி வருகிறது.

போரை தொடர்ந்து, உக்ரைனின் தொலைத்தொடர்பில் எலான் மஸ்கின் ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனம் பெரும் பங்காற்றி வருகிறது. இருப்பினும், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு நிதி உதவி வழங்க எலான் மக்ஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

Poonam Pandey : அவதூறு பரப்பியதால் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு.. இறந்துவிட்டதாக பொய்யான தகவல் பரப்பியதால் வந்த வினை

கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் பாதிப்பால் இறந்துவிட்டதாக பொய்யான தகவல் பரப்பிய காரணத்திற்காக நடிகை பூனம் பாண்டேவின் மீது புகாரளிக்கப் பட்டுள்ளது.

பூனம் பாண்டே

சர்ச்சைக்குரிய நடிகையாக திரையுலகில் வலம் வந்த பூனம் பாண்டே கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கர்ப்பைப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. பூனம் பாண்டே உயிரிழந்தது தொடர்பான செய்தி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் புரட்டி போட்டது. பலராலும் இந்த தகவலை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடந்த நிகழ்வு அவர் இறப்புக்கு வருந்திய அனைவரும் அவர் மீது வெறுப்படைந்தார்கள்.

விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி ஒரு ஸ்டண்ட்

"நான் உயிருடன் தான் இருக்கிறேன். கர்ப்பவாய் புற்றுநோய் என்னைக் கொல்லவில்லை. ஆனால் சோகம் என்னவென்றால், இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய அறிவு இல்லாததால் இந்நோய் ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரைக் கொன்றுள்ளது. மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பவாய் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது. இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் உள்ளன" என்று பேசி பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டார் . கர்ப்பப்பை வாய் புற்று நொய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் இப்படி செய்ததாக அவர் கூறினார்.

கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மாதிரியான ஒரு உயிர்கொள்ளும் நோயால் எத்தனை பேர் சிரமப்பட்டுள்ளார்கள். இப்படியான ஒரு சென்சிட்டிவான விஷயத்தை எடுத்து பப்ளிட்டிக்காக இப்படி ஒரு கீழ்த்தரமான விஷயத்தை செய்துள்ளதாக கூறி பூனம் பாண்டேவை பலர் விமர்சித்தார்கள். மேலும் அவரது இந்த செயலுக்காக அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று பலர் கூறினார்கள்.

இதனைத் தொடர்ந்து பூனம் பாண்டே தனது செயல் பலரை காயப்படுத்தி இருப்பதால் மன்னிப்பு கேட்டார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லெண்ணத்தில் தான் இப்படி செய்ததாக அவர் விளக்கமளித்தார்.

100 கோடி அபராதம்

தற்போது நடிகை பூனம் பாண்டே அவரது முன்னாள் கணவரான சாம் பாம்பே ஆகிய இருவரது மீது ஃபைஸன் அன்ஸார் என்பவர் கான்பூர் கமிஷனரிடம் புகாரளித்துள்ளார். தனது இறப்பு குறித்து பொய்யான தகவல் பரப்பியதாகவும் , தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக தீவிர பிரச்சனை ஒன்றை பயன்படுத்தியதாகவும். திரை பிரபலங்களின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கையை உடைத்த காரணத்திற்காகவும் பூனம் பாண்டே மீதும் அவரது முன்னாள் கணவர் சாம் பாம்பே மீதும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கச் சொல்லு அவர் புகாரளித்துள்ளார். மேலும் பூனம் பாண்டே மற்றும் சாம் பாம்பே ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய ஆணை பிறப்பிக்கும்படியும் அவர்களை கான்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக கேட்டுக் கொள்ள இந்த புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Arvind Kejriwal: அடம் பிடிக்கும் கெஜ்ரிவால்; விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை; 6வது முறையாக சம்மன்

ஆம் ஆத்மி கட்யின் தலைவரும் டெல்லி முதலமைச்சராகவும் உள்ளவர் அரவிந்த் கெஜ்ரிவால். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது இது ஆறாவது முறையாகும்.

கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகிய இருவர் சிறையில் உள்ளனர். ஆனால் ஏற்கனவே 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை.

பிப்ரவரி 7 அன்று, கலால் கொள்கை தொடர்பான வழக்கில் சம்மனைத் தவிர்த்ததற்காக அமலாக்கத்துறை தாக்கல் செய்த புகாரின் பேரில் பிப்ரவரி 17 ஆம் தேதி கெஜ்ரிவாலை நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

Valentine's Day Special : ”LUST-தா LOVE-னு 2K KIDS இருக்கு” விளாசும் 90's KIDS

Valentine’s Day Special : ”LUST-தா LOVE-னு 2K KIDS இருக்கு” விளாசும் 90’s KIDS

தலைக்கு ஏறிய பாலியல் வெறி.. மாத்திரை போட்டு உறவில் ஈடுபட்ட கணவரால் மனைவி உயிரிழப்பு

உத்தர பிரதேசம் மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. முதலிரவின்போது, புதிதாக திருமணம் செய்து கொண்ட நபர், பாலியல் உணர்வுகளை அதிகப்படுத்துவதற்காக மாத்திரைகளை எடுத்து கொண்டுள்ளார். முதலிரவில் வரம்பு மீறிய காரணத்தால் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலிரவில் கணவன் வெறிச்செயல்:

மாத்திரைகளை எடுத்து கொண்ட கணவரால் மனைவிக்கு கடும் காயம் ஏற்பட்டது. இதனால், மனைவியின் உடல்நிலை மோசமானதை அடுத்து, கான்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

அந்தப் பெண் புதன்கிழமை (பிப்ரவரி 7) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். (பிப்ரவரி 10) சனிக்கிழமை அன்று அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். கணவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளரிடம் இறந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது வீட்டை பூட்டிவிட்டு கிராமத்தில் இருந்து இறந்த பெண்ணின் கணவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த விதமான புகாரும் அளிக்கப்படவில்லை என விளக்கம் அளித்த ஹமிர்பூர் காவல்துறை, "கோட்வாலி நகர காவல் நிலையத்திற்கு இது தொடர்பாக எந்த தகவலும்/புகாரும் வரவில்லை. புகார் கிடைத்ததும் விசாரணை நடத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளது.

மனைவிக்கு நேர்ந்த கொடூரம்:

புதிதாக திருமணம் செய்து கொண்ட நபர், பாலியல் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தனது மனைவி மீது காயத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் அவரின் உடல்நிலை மோசமானதாகவும் கூறப்படுகிறது. பெண்ணின் உடல்நிலை மோசமானதையடுத்து, மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு இணையான காயங்கள் அந்த பெண்ணின் உடலில் இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி, அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. அரசு ஊழியரான பெண்ணின் சகோதரர்தான், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

Euthanasia Former Dutch PM : மனைவியின் கையை பிடித்தபடி கருணை கொலை: முடிந்தது நெதர்லாந்து முன்னாள் பிரதமரின் வாழ்வு..

நெதர்லாந்து நாட்டின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான ட்ரைஸ் வான் அக்ட், தனது மனைவி யூஜெனியுடன் சேர்ந்து கருணை கொலை செய்து கொண்டார். சொந்த ஊரான நிஜ்மேகனில் 93ஆவது வயதில், இருவரும் ஒருவரை ஒருவர் கைகளை பிடித்தபடி மரணம் அடைந்துள்ளனர்.

மனைவியுடன் கருணை கொலை செய்து கொண்ட முன்னாள் பிரதமர்:

கடந்த 1977ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை, நெதர்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்த ட்ரைஸ் வான் அக்ட், கிறிஸ்தவ ஜனநாயக முறையீட்டு கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். தான் கொண்ட கொள்கையில் இறுதி வரை உறுதியுடன் இருந்த காரணத்தால்தான், பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக போராடும் உரிமைகள் மன்றத்தை கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கினார். ட்ரைஸ் வான் அக்ட் – யூஜெனி தம்பதி மறைவு குறித்து செய்தியை உரிமைகள் மன்றம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "நெருங்கிய குடும்பத்தினருடன் கலந்தாலோசித்ததில், எங்கள் நிறுவனர் மற்றும் கெளரவத் தலைவரான ட்ரைஸ் வான் அக்ட் பிப்ரவரி 5ஆம் தேதி, அவரது சொந்த ஊரான நிஜ்மேகனில் காலமானார் என்பதை தெரிவித்து கொள்கிறோம். தனது மனைவியுடன் உயிரிழந்துள்ளார்.

"முடிவில்லா காதல் காவியம்"

ட்ரைஸ் வான் அக்ட்-க்கு எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மனைவி யூஜெனி வான் அக்ட் ஆதரவாக இருந்துள்ளார். ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அவர் எப்போதும் தனது மனைவியை ‘my girl’ என்றுதான் குறிப்பிடுவார். இறுதிச் சடங்கு தனிப்பட்ட முறையில் நடந்தது. வான் அக்ட் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 93 வயது.

கடந்த 2019-இல், ட்ரைஸ் வான் அக்ட்-க்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் கடைசி வரை முழுமையாக குணமடையவில்லை. அவரும் அவரது மனைவியும் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தனர். ஒருவரைவிட்டு ஒருவர் இல்லாமல் வாழ முடியவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டில் வயதான கணவன் – மனைவி இணைந்து கருணை கொலை செய்வது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இது, இரட்டை கருணைக்கொலை என அழைக்கப்படுகிறது. இரட்டை கருணைக்கொலையின்போது, தம்பதி இருவருக்கும் ஒரே நேரத்தில் விஷ ஊசி போடப்படும்.

கடந்த 2022ஆம் ஆண்டு, 29 தம்பதிகள் கருணைக் கொலை செய்து கொண்ட நிலையில், 2021ஆம் ஆண்டு 16 தம்பதிகள் கருணைக் கொலை செய்து கொண்டனர். கடந்த 2020ஆம் ஆண்டு, 13 தம்பதிகள் கருணைக் கொலை செய்து கொண்டனர்.

இதையும் படிக்க: இதை யாரும் எதிர்பார்க்கல.. நவாஸ் ஷெரீப் வெச்ச ட்விஸ்ட்.. பாகிஸ்தானின் புதிய பிரதமர் இவரா?

India vs England: குழப்பங்களுக்கு மத்தியில் களமிறங்கும் இந்தியா; இங்கிலாந்துக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் நாளை தொடக்கம்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தற்போது தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி, ராஜ் கோட்டில் உள்ள சௌராஷ்ட்ரா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் சர்ஃபர்ஸ்கான் அறிமுகமாகவுள்ளார். அதேபோல் இளம் வீரரான துருவ் ஜொரோலும் நாளை தனது சர்வதேச போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது.

இந்திய அணிக்கு உள்ள சிக்கல்

இந்திய அணிக்கு உள்ள பெரும் பின்னடைவாக கருதப்படுவது, இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நங்கூரமாக கருதப்படும் விராட் கோலி விளையாடப்போவதில்லை. சொந்த காரணங்களுக்காக விராட் கோலி இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேபோல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுல் இந்த தொடர் முழுவதும் விளையாடப்போவதில்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுமட்டும் இல்லாமல் முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா இரண்டாவது டெஸ்ட்டில் விளையாடவில்லை. அவர் இந்த போட்டியில் அணியுடன் இணையவுள்ளார். மேலும், இரண்டாவது டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் மூன்றாவது டெஸ்ட்டில் இருந்து பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.

இதுமட்டும் இல்லாமல் இந்திய அணிக்கு தற்போது உள்ள பெரும் தலைவலியாக பார்க்கப்படுவது, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்தான். ரோகித் சர்மா கடந்த ஓராண்டுக்கு மேலாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்காத நிலையில், மூன்றாவது டெஸ்ட்டில் என்ன செய்யப்போகின்றார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்திய அணிக்கு தற்போது பேட்டிங் வரிசையில் இருக்கும் நம்பிக்கை என்றால் அது ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் மட்டும்தான். மற்றவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு கடந்த இரண்டு போட்டிகள் அமையவில்லை.

பந்து வீச்சினைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு உள்ள ஒற்றை நம்பிக்கையாக இருப்பவர் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. நாளை நடக்கவுள்ள போட்டியில் முகமது சிராஜ் களமிறங்கினால் அணியின் வேகப்பந்து வீச்சு பலப்படும். அஸ்வின் சுழற்பந்து வீச்சு பட்டாளத்தை வழிநடத்தினாலும் அஸ்வின் தவிர மற்றவர்கள் இன்னும் கவனிக்கப்படும் அளவிற்கு அணிக்கு பங்களிப்பை வழங்கவில்லை. அஸ்வின் இதுவரை 499 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் இன்னும் ஒரு விக்கெட்டினை எடுத்தால் 500 வது விக்கெட்டினை எட்டுவார்.

நாளைய போட்டிக்கான இரு அணிகள்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல்.

இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஷோயப் பஷீர், டான் லாரன்ஸ், சாக் கிராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஆலி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வூட்.

Katrina Kaif in CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் நடிகை கத்ரினா கைஃப்..?
Katrina Kaif in CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் நடிகை கத்ரினா கைஃப்..?
Chennai Comic Con 2024 largest pop culture celebration the 17th and18th February 2024 in chennai | Chennai Comic Con: முதன்முறையாக சென்னையில் ’காமிக் கான்’ நிகழ்வு! எங்கு, எப்போது?
நாட்டின் மிகப்பெரிய பாப்-கலாச்சார கொண்டாட்டமான ’காமிக் கான்’ இந்தியா, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. காமிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 10 ஆண்டுகளாக ‘காமிக் கான்’ இந்தியா நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
’காமிக் கான்’ இந்தியா 2024:
‘காமிக் கான்’ இந்தியா, மிகப்பெரிய பாப் கலாச்சார கொண்டாட்டம், பரபரப்பான நகரத்தில் மாநாட்டின் முதல் பதிப்பில், முன்னெப்போதும் இல்லாத வகையில் கற்பனை யதார்த்தத்தை சந்திக்கும் ஒரு மண்டலத்தில் ரசிகர்களை மூழ்கடிப்பதற்கு தயாராகிறது. இந்த பரபரப்பான வார இறுதியானது, காஸ்ப்ளே அனிமேஷன் பிரியர்களுக்கு, ஏராளமான சர்வதேச மற்றும் இந்திய காமிக் படைப்பாளிகள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் பிரபலமான தொழில்துறைப் பெயர்கள் சிறந்த படைப்புகளை காட்சிக்கு வைக்கும் அனுபவத்தை அளிக்கிறது.
சென்னையில் முதன்முறையாக…
மாருதி சுசுகி அரேனா வழங்கும் சென்னை காமிக் கான் 2024, கிரஞ்சிரோல் மூலம் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு பங்கேற்பாளரும் இன்ஃபினிட்டி கான்ட்லெட் காமிக் புத்தகத்தின் பிரத்தியேக நகலைப் பெறுவார்கள். முதன்முறையாக சென்னையில் காமிக் கான் இந்தியா நிகழ்வு நடக்கிறது.
சென்னை காமிக் கான் 2024, 17 மற்றும் 18 பிப்ரவரியில் சென்னை வர்த்தக மையத்தில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. நிகழ்வில், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பல உற்சாகமான செயல்பாடுகளுடன் கூடிய தினசரி போட்டிகள், ஈஸ்போர்ட்ஸ் மற்றும் பிரபலமான ஸ்ட்ரீமர்கள் மற்றும் கேமிங் அனுபவங்கள் கொண்ட 2500 சதுர அடி கேமிங் அரங்கான ‘தி அரேனா’ (தி ஈஸ்போர்ட்ஸ் கிளப் உடன் இணைந்து) இடம்பெறும்.
என்னென்ன நிகழ்ச்சிகள்?
இதனுடன், அமர் சித்ரா கதா, கிரஞ்சிரோல், நருடோ தமிழ் வாய்ஸ் ஓவர் கலைஞர்கள் மற்றும் முன்னணி இந்திய மற்றும் சர்வதேச படைப்பாளிகளுடன் பேனல்கள் மற்றும் பிரத்யேக அமர்வுகளையும் காமிக் கான் இந்தியா பார்க்கும். பிரபல இரட்டையர்களான ரோஹன் ஜோஷி மற்றும் சாஹில் ஷா ஆகியோரின் சிறப்பு நிலைப்பாட்டுடன், அபிஷேக் குமார், டூயலிட்டி, பால் டப்பா, எம்டிவி ஹஸ்டல் நம்ம பேட்டை ராப் நிகழ்ச்சி, ஆர்ட் கை ரோப் மற்றும் பலரின் ஆற்றல் மிக்க நிகழ்ச்சிகளும்இடம்பெறும்.
மாருதி சுசுகி அரேனா, கிரஞ்ச்ரோல், குங்ஃபூ பாண்டா அனுபவம் மற்றும் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வழங்கும் ஐதராபாத்தில் உள்ள மிகப்பெரிய காமிக் புத்தகக்கடை ஆகியவற்றுடன் சென்னை பங்கேற்பாளர்கள் கவர்ச்சிகரமான அனுபவங்களை காணும் வாய்ப்பை பெறுவார்கள். செலியோ, போன்கர்ஸ் கார்னர், ரெட் உல்ஃப், பேவாகூஃப்.காம் போன்ற பிராண்டுகளுடன் ஷாப்பிங் நிகழ்வுக்கு செல்ல பாப் கலாச்சார பிரியர்களை இந்த நிகழ்வு ஊக்குவிக்கும்.
முன்பதிவு செய்யுங்கள்:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் காமிக் கான் இந்தியா நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கான பாஸ்களை பெற பாஸ்கள் www.comicconindia.com மற்றும் புக்மைஷோ-வில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், www.comicconindia.com என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து பாஸ்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

PM Modi: அபுதாபியில் முதல் இந்துக்கோயல்; ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்ட பிரமாண்டம்: திறந்து வைத்த பிரதமர் மோடி
அபுதாபியின் முதல் இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மத்திய கிழக்கு நாடுகளில் இந்த கோவில் மிகப்பெரிய கோவிலாக உள்ளது. இங்கு கோவில் கட்ட கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய அமீரக நாடு நிலம் வழங்குவதாக அறிவித்தது. அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கியது.
27 ஏக்கரில் பரந்து விரிந்து ரூபாய் 700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த BAPS கோயில், இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே உள்ள ஆழமான உறவின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கோவிலில் மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்களில் ராமர், சிவன், ஜகன்னாதர், கிருஷ்ணர், சுவாமிநாராயண் (கிருஷ்ணரின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறது), திருப்பதி பாலாஜி மற்றும் ஐயப்பா உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் உள்ளன. ஏழு ஷிகர்களும் அதாவது கோபுரங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்களைக் குறிக்கின்றன.” BAPS இன் தலைவர் பிரம்மவிஹாரிதாஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.மேலும் காண

zee tamil ninaithen vanthai serial february 14th episode update | Ninaithen Vanthai :எழில் வீட்டு வந்த சுடர்.. டார்ச்சர் செய்ய ஸ்கெட்ச் போடும் குழந்தைகள்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் கோவிலுக்கு போயிட்டு எழில் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ராமையா சர்டிபிகேட்டுடன் வந்துட்டியா என்று கேட்க சுடர் கொண்டு வந்திருப்பதாக சொன்னதும் அவளை உள்ளே அழைத்து வர கனகவள்ளி நீ குழந்தைகளை நல்லபடியாக பார்த்துப்பேன்னு நம்புறேன் என்று வேலைக்கு எடுத்து கொள்வதாக சொல்கிறாள்.
அதன் பிறகு காபி கொடுக்க சுடர் காபியோட நிறுத்திடுவாங்க போலயே, எனக்கு வேற பயங்கரமா பசிக்குதே என்று யோசிக்கிறாள், பிறகு செல்வி சுடருக்கு ரூமை காட்ட அதை பார்த்து இவ்வளவு பெரிய ரூமா? நான் மட்டும் தான் படுத்து தூங்க போறானா? என மெய் சிலிர்த்து போகிறாள். அடுத்து அவளுக்கு அப்பா சொன்ன விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்து போகிறது.
ராமையா அங்கு வர அவரின் பெயரை கேட்டதும் கலாய்த்து பாட்டு பாடி ஆட்டம் போடுகிறாள், இந்த வேலையை கொடுத்த கனகவல்லி மேடம்க்கு நன்றி சொல்லணும் என்று சுடர் சொல்ல உன்ன ரெகமெண்ட் பண்ணது குழந்தைங்க தான் என்று சொல்ல குழந்தைகள் சுடரை டார்ச்சர் பண்ணனும், கொஞ்ச நேரம் ஆனதும் நம்ம வேலையை ஸ்டார்ட் பண்ணிடனும் என்று பிளான் போடுகின்றனர்.
பிறகு சுடர் குழந்தைகளுக்கு நன்றி சொல்லி என்மேல உங்களுக்கு அவ்வளவு பாசமாக என்று கேட்க குழந்தைகள் ஆமாம் என்று நக்கலாக சொல்கின்றனர், பிறகு உங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்க கூடாது தான் சாரி எனவும் சொல்கிறாள். பிறகு மனோகரி எழில் போட்டோ முன்பு நின்று எதையோ பேசி கொண்டிருக்க எழில் அங்கு வந்து விட சமாளித்து வெளியே வருகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Valentine’s Day: காதல் கல்யாணத்துல இருக்கும் மைனஸ்.. வெளிப்படையாக பேசிய சரண்யா பொன்வண்ணன்!
Valentine’s Day: பள்ளியில் மட்டும் 3 காதல்கள்.. சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நிலையா?மேலும் காண

போலீஸ் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக பட்டதாரி இளைஞர் சேலம் ஆட்சியரிடம் மனு

சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். சூழல் ஆர்வலரான இவர் கட்டுமான பொறியியல் பட்டதாரி. இவர் கட்டுமான பொறியாளராகவும் சுயதொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கதிர்ராஜ் என்பவருக்கு வீடு கட்டி கொடுப்பதில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கதிர்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சுரேந்திரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் பிணையில் வந்துள்ள சுரேந்திரன், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுரேந்திரன், புகார்தாரரின் கையொப்பமே இல்லாத ஒரு மனுவை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட காவல்துறையினர் தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்கில் ஒன்றரை கோடி ரூபாய் நான் முறைகேடு செய்துள்ளதாக பத்திரிகைகளுக்கு காவல்துறையினர் தவறான தகவலை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். தன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே காவல்துறையினர் இதுபோன்று பொய்யான புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ததாக கூறிய அவர், தனது வழக்கில் இதுவரை காவல்துறையினர் எந்த ஒரு குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல் தான் தலைமறைவாக உள்ளதாக பொய்யான தகவலை பரப்பி விட்டதாகவும் இதன் மூலம் தனது நற்பெயருக்கும் தனது நிறுவனத்திற்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். தனது பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் அதனை காவல்துறையினர் மறைத்து நீதிமன்றத்திற்கு பொய்யான தகவலை கொடுத்து தன்னை கைது செய்வதற்காக உத்தரவு பெற்றுள்ளதாக கூறிய அவர், தனது வழக்கில் காவல்துறையினர் அடுக்கடுக்கான விதிமுறை மீரல்களை கையாண்டு உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் சேகரித்துள்ளதாக கூறினார். அவ்வாறு பொய் புகார் பதிவு செய்த காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

அது மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் இதுபோன்று ஏராளமான பொய் வழக்குகள் மூலம் பல ஆயிரக்கணக்கானோர் சிறையில் உள்ளதாகவும், இனி மேலும் காவல்துறையினரின் மிரட்டல்களை எதிர்கொள்ள சட்டரீதியாக உள்ள வழிமுறைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அதற்கான ஆய்வு கட்டுரை ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், அதனை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு, தான் அலைகழிக்கப்பட்டது தொடர்பாக மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும் தனது வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு லஞ்சம் வாங்கிய 5 துறைகளை சேர்ந்த 12 அதிகாரிகளின் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டேன். அதற்காக தற்போது தன் மீது பொய் வழக்கு போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Dalit Groom Assaulted For Riding Horse During Wedding Procession In Gujarat | Shocking Video: ”நீ எப்படி குதிரையில் ஏறலாம்” : பட்டியலின மாப்பிள்ளையை கொடூரமாக தாக்கிய கும்பல்
Atrocities On Dalits: குஜராத்தில் குதிரையில் சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த திருமண மாப்பிள்ளையை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
குதிரையில் சென்ற பட்டியலின இளைஞர்:
இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது குஜராத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி, குதிரையில் சென்ற பட்டியலின சமுகத்தைச் சேர்ந்த திருமண மாப்பிள்ளையை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் நேற்று திருமண ஊர்வலம் ஒன்று நடந்தது. இந்த திருமண ஊர்வலத்தில் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டர். அப்போது, மணமகளின் வீட்டிற்கு செல்ல மணமகன் விகாஸ் சாவ்டாவை குதிரையில் ஏறி ஊர்வலமாக சென்றுக் கொண்டிருந்தனர்.
A #Dalit groom was assaulted for riding a horse in his wedding procession in a village in #Gujarat’s #Gandhinagar district. Police have rounded up four persons from upper caste Thakor community. pic.twitter.com/SQKyiQkLvt
— Hate Detector 🔍 (@HateDetectors) February 13, 2024அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், குதிரையில் சென்றுக் கொண்டிருந்த மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை மறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இவருடன் 4 பேரும் இருந்துள்ளனர். குதிரையில் அமர்ந்து திருமண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை சாதி பெயர் சொல்லி இழிவாக பேசியிருக்கின்றனர்.
கொடூரமாக தாக்கிய 4 பேர்:
மேலும், அவரை தாக்கியும் உள்ளனர். குதிரையில் அமர்ந்திருந்த கீழே இறங்க சொல்லி தாக்கி உள்ளனர். குதிரையில் இருந்து மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை கீழே தள்ளி அறைந்துள்ளனர். மேலும், “எங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குதிரையில் செல்ல முடியும். நீங்கள் குதிரையில் ஏறவே கூடாது” என்று கூறி சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளனர். சைலேஷ் தாகூர், ஜெயேஷ் தாகூர், சமீர் தாக்கூர் மற்றும் அஷ்வின் தாக்கூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.மேலும் காண

காயத்ரி ரகுராமை அடுத்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி
பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற நடிகை கவுதமி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். மேலும், எடப்பாடி பழனிசாமி பணிகள் தன்னை ஈர்த்ததால் அதிமுகவில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் 25 வருடங்கள் பாஜகவில் பணியாற்றியதாகவும் கூறியுள்ளார்.மேலும் காண

தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு!

இரண்டு நாள் பயணமாக நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில், துபாயில் இன்று நடந்த உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தூய்மையான, வெளிப்படைத்தன்மையான அரசின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

"தொழில்நுட்பத்தின் உலகளாவிய மையமாக துபாய் மாறிவருவது"

தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "உலகளாவிய பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தின் உலகளாவிய மையமாக துபாய் மாறிவருவது ஒரு பெரிய விஷயம். மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீடுகள் குறைவாக இருப்பதை உறுதி செய்வது அரசின் வேலை என்று நான் நம்புகிறேன்.

’குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ என்பதே எனது மிகப்பெரிய கொள்கை. குடிமக்களிடம் தொழில் மற்றும் ஆற்றல் உணர்வு வளரும் சூழலை உருவாக்குவதை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக உள்ளடக்குவதே எங்கள் அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது.

இதன் காரணமாக இன்று இந்தியாவில் வங்கிக் கணக்கு இல்லாத 50 கோடிக்கும் அதிகமானோர் வங்கியில் இணைந்துள்ளனர். இது இந்தியாவை ஃபின்டெக் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் துறைகளில் முன்னோக்கி கொண்டு சென்றுள்ளது. பெண்கள் தலைமையிலான வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளோம்.

"உலகளாவிய தெற்கின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்"

இன்று, நாம் நம் நாட்டை மாற்றும் போது, உலகளாவிய நிர்வாக நிறுவனங்களிலும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டாமா? வளரும் நாடுகளின் கவலைகளையும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். உலகளவில் முடிவெடுப்பதில் உலகளாவிய தெற்கின் பங்கேற்பையும் நாம் ஊக்குவிக்க வேண்டும்.

உலகளாவிய தெற்கின் குரலுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அவர்களின் முன்னுரிமைகளை முன்வைக்க வேண்டும். தேவைப்படும் நாடுகளுக்கு உதவ வேண்டும். (AI) செயற்கை நுண்ணறிவு மற்றும் கிரிப்டோகரன்சி மற்றும் சைபர் கிரைம் போன்ற வளர்ந்து வரும் சவால்களுக்கு உலகளாவிய முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும். நாம் நமது தேசிய இறையாண்மைக்கு முன்னுரிமை கொடுப்பதோடு சர்வதேச சட்டத்தின் கண்ணியத்தையும் பேண வேண்டும்" என்றார்.

இதை தொடர்ந்து, சர்வதேச எரிசக்தி அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "10 ஆண்டுகளில், 11வது பெரிய பொருளாதாரத்தில் இருந்து, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளோம். அதே காலகட்டத்தில், நமது சூரிய ஒளி சக்தி திறன் 26 மடங்கு அதிகரித்தது.

நமது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனும் இரட்டிப்பாகியது. மேலும் இது தொடர்பான நமது பாரிஸ் உறுதிமொழிகளை காலக்கெடுவிற்கு முன்னதாகவே எட்டினோம். உலக மக்கள்தொகையில் 17% இந்தியாவில் வசிக்கிறது. ஆனால், நமது கார்பன் வெளியேற்றம் உலக மொத்தத்தில் 4% மட்டுமே உள்ளது" என்றார்.

Siren Movie Promotion Coimbatore Actor Jayam Ravi Advice to Students TNN | Jayam Ravi: தேர்வில் தோற்றால் தப்பில்லை, வாழ்க்கையில் தோற்றால் தான் தப்பு
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டார். அவரது வருகையின் போது அரங்கத்தில் இருந்த மாணவ, மாணவிகள் அனைவரும் ஆரவாரத்துடன் உற்சாக முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய நடிகர் ஜெயம்ரவி, ”இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அவர், என்னுடைய காதலர் தினத்தை விட்டு விட்டு இங்கு வந்துள்ளேன். எனக்கு நீங்கள் அனைவரும் ஒரு உறவாக இருக்கிறீர்கள். வருங்காலம் பின்னால் ஓடாதீர்கள் இப்போது இருக்கின்ற மாதிரி மகிழ்ச்சியாக இருந்தாலே வருங்காலம் உங்களை தேடி வரும். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தப்பில்லை, ஆனால் வாழ்க்கையில் தேர்ச்சி பெறாமல் போனால் தான் தப்பு” எனத் தெரிவித்தார்.
அவரிடம் காதலர் தினம் குறித்து கருத்து கேட்டதற்கு, ”18 வயது நினைவுகளை நினைவுப்படுத்தினால் 18 வயதில் ஒரு இன்னொசென்ஸ் இருக்கும். அது காதலில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். காதல் அனைத்தையும் கடந்த ஒன்று அனைவரையும் மதிக்க வைக்கிறது” என்றார். 18 வயதில் ரசித்த காதல் பாடல் என்ன என்ற கேள்விக்கு, சிங்கிள் சைடு காதல் இருந்த போது ரசித்த பாடல் என்னவென்றால் ’மஞ்சம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடல் என பதிலளித்து அந்த பாடலை பாடினார். திருமணம் குறித்தான கேள்விக்கு, ”ஏன் திருமணம் செய்கிறோம் என்றால் உன்னுடைய வாழ்க்கையை உன்னுடன் வாழந்த பெண் சொல்ல வேண்டும். அது தான் வாழ்க்கை எதற்கு தான் திருமணம்” எனக் கூறினார். பின்னர் மாணவர்களின் கோரிக்கைக்கிணங்க மேடையில் நடனமாடினார்.இந்த நிகழ்ச்சியில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள சைரன் திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. அது குறித்து பேசிய ஜெயம் ரவி, ”சைரன் படம் அப்பா மகள் பாசத்தை எடுத்துரைக்கும் படம். 15 ஆண்டுகளாக அப்பாக்களுக்கு நடக்க கூடிய கதை இது. அனைவரும் இந்த படத்தை விரும்புவர்” எனத் தெரிவித்தார். மேலும் சைரன் படத்தில் அவர் நடித்துள்ள இரண்டு கதாப்பாத்திரங்கள் போலவும், பொன்னியின் செல்வன் பட வசனத்தையும் பேசி அசத்தினார். அப்போது மாணவிகள் சந்தோஷ் சந்தோஷ் என ஆர்ப்பரித்தனர். அதனை தொடர்ந்து சைரன் படத்தின் 10 நொடி காட்சிகள் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”கோவை வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சைரன் படம் மிக முக்கியமான படம். குடும்பத்திற்காக இந்த படம் செய்துள்ளேன். இந்த படம் எனக்கு சவாலாக தான் இருந்தது. 15 ஆண்டுகால வித்தியாசங்களை இதில் அனைவரும் காண்பித்துள்ளோம். எனவே இந்த படம் ஒரு ஆர்கானிக் ஆக வந்துள்ளது” என்றார்.
மேலும் காண

Education Loan Mela : விழுப்புரத்தில் நாளை மாபெரும் கல்விக்கடன் முகாம் – முழுவிவரம் உள்ளே

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், மாபெரும் சிறப்பு கல்விக்கடன் மற்றும் கல்விக்கடன் வழங்கல் முகாம் வருகின்ற பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல், பட்டய பொறியியல், மருத்துவம், விவசாயம், செவிலியர், சட்டம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற 2 ஆண்டிற்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி படிப்பிற்கான கல்விக்கடனை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ, மாணவியர்கள் பெற்றோருடன் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், மாணவர்கள் பெற்றோரின் பாஸ்போர்ட் புகைப்படம்-3, பான்கார்டு நகல், 10,11,12ம் வகுப்பு மற்றும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று நகல், ஜாதி சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், கல்லூரி கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கவுன்சலிங் சான்று, சேர்க்கைக்கான ஆவண நகல், கல்லூரி சேர்க்கை கடித நகல், கல்லூரி கட்டண விபரங்களுக்கான சான்று நகல், கல்லூரியின் அப்ரூவல் சான்று நகல், கல்விக் கடன் பெறும் வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண், வங்கி பாஸ்புக் நகலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து பயன்பெறலாம்.

கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in, https://www.jansamarth.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கல்விக்கடன் முகாம் நடைபெறும் தினத்தில் விண்ணப்பத்தின் நகல் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலாதவர்கள் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக இ-சேவை மையம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம், பதிவிறக்கம் செய்யப்படும்.

இந்த சிறப்பு முகாமில் விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மற்ற மாவட்டங்களில், மாநிலங்களில், வெளிநாடுகளில் தற்போது படிப்பவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். கல்விக்கடன் தொகை ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 இலட்சம் வரை மாணவர்கள், பெற்றோரின் உறுதி மொழி பத்திரம் மட்டும் போதுமானது. மேலும், ரூ.7.5 இலட்சத்திற்கு மேல் கல்விக்கடன் தேவைப்படுவோர் கட்டாயம் சொத்து பிணை அவசியம் மற்றும் 3ம் நபர் உத்திரவாதமும் கொண்டுவர வேண்டும்.

முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் பங்கேற்று விண்ணப்பங்களை பெற்று தகுதியானவர்களுக்கு கல்விக்கடன் வழங்க, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மூலம், விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Pulwama Terror Attack: பிப்ரவரி 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம்.. மறக்க முடியுமா? இன்று புல்வாமா தாக்குதல் நினைவு தினம்!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாள் இந்தியாவுக்கு கருப்பு நாளாகவே அமைந்தது. ஜம்முவில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் கான்வாய் மூலம் ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வழக்கம்போல இந்த நாள் என்றும் எண்ணிக்கொண்டு சென்ற அந்த வீரர்கள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரிவில்லை..? சரியாக இன்னும் 30 கி.மீ தூரம் சென்றால் ஸ்ரீநகர் வந்துவிடும். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று கான்வாய் மீது மோதியது. அடுத்த கணம் மிகப்பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது அடுத்த 10 கிலோமீட்டர் தூரம் வரை வெடிச்சத்தம் கேட்டம். சுற்றிலும் புகை அனைத்தையும் மறைத்தது. புகை மறைந்ததும் அந்த காரோ, கார் மோதிய கான்வாய் வாகனமோ சில்லு சில்லாய் சிதறி கிடந்தது. மேலும், அதனை சுற்றி, நம் இந்திய ராணுவ வீரர்களின் உடல்களும்…

புல்வாமாவில் இந்த கொடூரமான தாக்குதல் நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் தாக்கம் இன்று வரை ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் மறையாத வடுவாக உள்ளது. இந்த தாக்குதல் இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கியது. வீர மரணமடைந்த வீரர்களின் கும்பங்களின் கண்ணீருக்கு பதில் அளிக்கப்படும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எப்போது, எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ராணுவத்திற்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்தது. சரியாக 12 நாட்களுக்கு பிறகு, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகத்திற்கு இந்தியா பழிவாங்கியது. இந்திய விமானப்படை விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் உள்ள பாலகோட்டையை சுக்குநூறாக்கியது.

பிப்ரவரி 14ம் தேதி என்ன நடந்தது..?

2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 பேருந்துகள் கொண்ட சிஆர்பிஎஃப் கான்வாயில், 2500க்கும் மேற்பட்ட வீரர்களுடன் கிளம்பியது. இந்த தாக்குதலுக்கான சதித்திட்டம் மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு, 3 மணியளவில் புல்வாமா வழியாக கான்வாய் சென்றபோது, பயங்கரவாதி அடில் அகமது தார் ஒரு காருடன் கான்வாயில் வேகமாக மோதியது. இந்த காரில் 100 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிப்பொருட்களில் வீரியத்தால் கான்வாயின் பெரும்பாலான பேருந்துகளின் கண்ணாடிகள் விரிசல் ஏற்பட்டு, பல வீரர்கள் காயமடைந்தனர். இதில், சிஆர்பிஎஃப் 76 பட்டாலியனின் பேருந்து கான்வாயில் இருந்த 40 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரித்தலில் மசூத் அசார் மற்றும் அவரது சகோதரர்கள் அப்துல் ரவூப் அஸ்கர் மற்றும் மௌலானா அம்மார் அல்வி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டனர். இது தவிர, முகமது இஸ்மாயில், முகமது அப்பாஸ், பிலால் அகமது, ஷாகீர் பஷீர் ஆகியோரின் பெயர்களும் வெளியிடப்பட்டது.

12 நாட்களில் பழிதீர்த்த இந்திய ராணுவம்:

இந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி இரவு, குவாலியர் விமானத் தளத்தில் இருந்து மிராஜ்-2000 விமானங்கள் புறப்பட்டு, 26 பிப்ரவரி 2019 அன்று, இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை குறிவைத்தது தாக்கியது.

இந்த பழிவாங்கும் நடவடிக்கையால் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பெருமளவில் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு பாலகோட் ஸ்டிரைக் என்று பெயரிடப்பட்டது.

இந்த தாக்குதலின்போதுதான் பாகிஸ்தான் எல்லைக்குள் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர் அபிநந்தன் வர்தமான், 2019ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, இந்திய அரசு அபிநந்தன் வர்தமானுக்கு ‘வீர் சக்ரா’ விருது வழங்கி கௌரவித்தது.

Tamil Nadu latest headlines news till afternoon 14th February 2024 flash news details here | TN Headlines: சட்டப்பேரவையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்; மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்
TN Assembly: ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு தனித்தீர்மானம் – சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த நிலையில் அவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அதேசமயத்தில் மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் நோக்கமாகும். மேலும் படிக்க
Lok Sabha Constituency TN: தமிழ்நாட்டின் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள், எந்தெந்த மக்களவை தொகுதியில் அடங்கும் தெரியுமா?நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் இதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 1,849,924 வாக்காளர்களுக்கு ஒரு தொகுதி என மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க
Rajya Sabha: மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக..மத்திய அமைச்சர் எல். முருகன் எம்.பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுவார் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தொகுதிகளுக்கும் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் படிக்க
Neenga Road Rajava: நீங்க ரோடு ராஜாவா..? தலைநகர் சென்னையை கலக்கும் விளம்பர பலகை: வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தா..?சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் நடுவில் உள்ள கம்பங்களில் காவல்துறையினரால் ‘நீங்க ரோடு ராஜாவா..?’ என்ற அச்சிடப்பட்ட குட்டி பேனர் ஒன்று நெடுதூரம் வைக்கப்பட்டுள்ளது. இது காவல்துறையினரால் ஏன் வைக்கப்பட்டது..? எதற்காக வைக்கப்பட்டது..? என்று இப்போது வரை யாருக்கு தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒரு பாதுகாப்பு தொடர்பான அவர்னஸுக்காகதான் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படிக்க
Watch Video: ”அந்த வார்த்தை வேண்டும் ஐயாவுக்கு..” சபாநாயகர் கேள்விக்கு சிரிப்பலையை ஏற்படுத்திய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!தமிழ்நடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சட்டப்பேரவையின் மூன்றாம் நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் அரசின் 2 தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார். மேலும் படிக்க
மேலும் காண

Indian Cricketer Cheteshwar Pujara Explains How Age Is Just A Number To Him
எந்தவொரு செயலையும் சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு பலரும் உதாரணமாக உள்ளனர். விளையாட்டிலும் சாதிப்பதற்கு வயது தடையில்லை என்றாலும், உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இதன் காரணமாக, பல விளையாட்டுகளில் 33 வயதை கடந்த பிறகு ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட்டிற்கும் அது பொருந்தும்.
புஜாரா:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. 36 வயதான புஜாரா டெஸ்ட் வீரர் என்றே முத்திரை குத்தப்பட்டவர். இந்திய அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற வைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
வயது என்பது வெறும் எண்:
புஜாரா தன்னால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ என்னைப் பொறுத்தவரை வயது என்பதை ஒரு எண்ணாகவே கருதுகிறேன். உதாரணத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 41 வயதாகிவிட்டது. ஆனால், இப்போது வரை இங்கிலாந்தின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் அவர். ஜோகோவிச் சமீபத்தில் 35 என்பது புதிய 25 என்றார்.
நான் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடினால் எனது உடலை சிறப்பாக பராமரிக்க முடியும். நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செ ்ய வேண்டும். இங்கிலாந்து அணி தற்போது தாக்குதல் ஆட்டம் ஆடுகிறது. ஆனால், அது அனைத்து மைதானங்களிலும் கிடையாது. டியூக்ஸ் பந்துகளில் அதேபோல நகர்வுகள் கிடையாது.
வெற்றியே முக்கியம்:
முன்பு இங்கிலாந்தில் கிரிக்கெட் என்பது கடினம். தற்போது கிரிக்கெட் மாறுகிறது. ஏராளமான ஷாட்கள் ஆடுகிறார்கள். மைதானங்கள் தற்போது அதற்கு ஒத்துழைக்கிறது. ஆனால், உங்களால் அதை தென்னாப்பிரிக்காவில் செய்ய முடியாது.
நான் என் பலத்தை புரிந்து கொள்ள வேண்டும், அது எப்படி அணிக்கு உதவ வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு அடுத்து பேட் செய்ய வருபவர்களுக்கு பலமாக இருக்க வேண்டும். நான் நன்றாக ஸ்கோர் செய்திருந்தால் அது அணிக்கு உதவும். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நன்றாக ஆடுவதை விட வெற்றி பெறுவதே முக்கியம் என்று நான் கருதுகிறேன். நீங்கள் நேர்மறையுடன் ஆடி அணியை வெற்றி பெற வைத்தால் அது அணிக்கு நல்லது. விளையாடுவதற்கு பல வழிகள் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது புஜாரா ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். சவுராஷ்ட்ரா அணிக்காக ஆடி வரும் புஜாரா தற்போது நடந்து வரும் தொடரில் 10 இன்னிங்ஸில் ஆடி 673 ரன்களை எடுத்துள்ளார். அதில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 243 ரன்கள் எடுத்ததும் அடங்கும். புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 35 அரைசதங்கள் உள்பட 7 ஆயிரத்து 195 ரன்கள் எடுத்துள்ளார். 5 ஒருநாள் போட்டிகளில் ஆடி 51 ரன்களும், 30 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 அரைசதம் உள்பட 390 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க: Imran Tahir: 44 வயதில் 500 டி20 விக்கெட்டுகள்.. வயது தடையல்ல என நிரூபித்த இம்ரான் தாஹிர்!
மேலும் படிக்க: IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் – சுனில் கவாஸ்கர்!
zee tamil anna serial february 14th episode update | Anna Serial :பஞ்சாயத்தில் ட்விஸ்ட் கொடுத்த இசக்கி.. கோபத்தில் ஷண்முகம் எடுத்த முடிவு
அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் முத்துப்பாண்டி எல்லார் காலிலும் விழுந்து இசக்கியோட சேர்த்து வைக்க சொல்லி கேட்க ஷண்முகம் மறுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஷண்முகம் இசக்கியை அனுப்ப முடியாது என்று சொல்ல ஊர் பெரியவர்கள் அவன் தான் நல்லா பாத்துக்கறேன்னு சொல்றானேப்பா அனுப்பி வை என்று சொல்ல ஷண்முகம் தனது முடிவில் உறுதியாக இருக்கிறான்.
இதனால் ஊர் பெரியவர்கள் இசக்கியோட முடிவை சொல்லட்டும் என்று சொல்ல, ஷண்முகம் அவ என்ன சொல்லணும் என்னுடைய முடிவு தான் அவளோட முடிவு என்று சொல்ல, இசக்கி வாயால சொல்லட்டும் என்று பேசுகின்றனர்.
உடனே ஷண்முகம் இசக்கியிடம், அவ வேண்டான்னு சொல்லிட்டு தாலியை கழட்டி போட்டுட்டு வா புள்ள என்று சொல்ல, இசக்கி நான் சேர்ந்து வாழறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.
ஷண்முகம் குடும்பம் மொத்தமும் அதிர்ச்சியாக சௌந்தரபாண்டி சந்தோசப்படுகிறார், ஷண்முகம் இந்த அண்ணன் முக்கியமா? இல்ல அவன் முக்கியமா? அவன் தான் முக்கியம்னா இந்த துண்டைத்தாண்டி போ. அதுக்கப்புறம் உனக்கும் எனக்கும் எந்த ஒட்டும் உறவும் இருக்காது என்று சொல்ல இசக்கி துண்டை தாண்டி சென்று பேரதிர்ச்சி கொடுக்கிறாள்.
இசக்கி, அண்ணனுக்காகவும் ரத்னாவின் வாழ்க்கைக்காகவும் எடுத்த முடிவை புரிந்து கொள்ளாத ஷண்முகம் இனிமே நீ இந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று அவளது துணிகளை எடுத்து வெளியே போட்டு கொளுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? இசக்கி என்ன செய்ய போகிறாள் என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Siragadikka Aasai: சத்யா-முத்து மோதல்.. மீனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி- சிறகடிக்க ஆசையில் இன்று!
Valentine’s Day: காதல் கல்யாணத்துல இருக்கும் மைனஸ்.. வெளிப்படையாக பேசிய சரண்யா பொன்வண்ணன்!
மேலும் காண

Education Loan: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நாளை மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கடன் முகாம்

கல்விக்கடன் பெற மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு

மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (GDP HALL) (15.02.2024) வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தபடுகிறார்கள். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து கடன் ஆணை வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

விண்ணப்ப நகல் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம் வங்கி Joint account பாஸ்புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று, பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும்

கல்விக்கட்டண விவரம்

பத்து, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள். முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வெற்றி துரைசாமி மறைவுக்குரஜினிகாந்த் நேரில் ஆறுதல்
வெற்றி துரைசாமி மறைவுக்கு, அவரது தந்தையான சைதை துரைசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.மேலும் காண

Farmers Protest 2024 delhi border Tear gas shells fired at agitating farmers near Shambhu border | Farmers Protest 2.0: விவசாயிகளின் 2ஆவது நாள் போராட்டம்! தொடரும் காவல்துறை அடக்கமுறை
Farmers Protest 2.0: டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக படையெடுத்த விவசாயிகள் மீது 2வது நாளாக கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசியுள்ளனர்.
தலைநகரில் 2வது நாளாக தொடரும் பதற்றம்
டெல்லியின் எல்லை பகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி ஓராண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்குப் பிறகு, மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்பது, விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கிய போராட்டத்தை விவசாய அமைப்புகள் அறிவித்தன.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இது மத்திய பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை தந்துள்ளது. விவசாய சங்கங்கள், மத்திய அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் நேற்று தொடங்கியது.
2வது நாளும் கண்ணீர் புகை குண்டு வீச்சு:
நேற்று காலை முதலே பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஷாம்பு பகுதியில், போலீசாரால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழலும் ஏற்பட்டது. நள்ளிரவிலும் அந்த பகுதியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
#WATCH | Farmers’ protest | Tear gas shells fired to disperse the agitating farmers who were approaching the Police barricade.Visuals from Shambhu Border. pic.twitter.com/AnROqRZfTQ
— ANI (@ANI) February 14, 2024இதனை தொடர்ந்து, இன்று ஷம்பு எல்லையில் விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதில், சுமார் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, நாளை வரை 7 இடங்களில் இணைய சேவை முடக்கியது அரசு. அதன்படி, அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத், சிர்சா ஆகிய இடங்களில் நாளை வரை இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சொல்வது என்ன?
இந்த பரபரப்பான சூழலில் பஞ்சாப் கிசான் மஸ்தூர் கமிட்டி பொதுச்செயலாளர் சர்வான் சிங் கூறுகையில், “இந்திய வரலாற்றில் இது ஒரு இருண்ட நாள். விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக பிரதமர் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஷம்பு எல்லையில் சுமார் 10,000 பேர் உள்ளனர். விவசாயிகள் அமைதியான சூழ்நிலையை பேணி வருகின்றனர். இருப்பினும், விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன. எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என்றார்.
மேலும் காண

கரூரில் வழிப்பறியில் ஈடுபடுபவர்கள் மீது குண்டாஸ் பாயும் – மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

கரூரில் வழிப்பறி செய்த குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரவக்குறிச்சி நாகம்பள்ளி காந்தி நகரை சேர்ந்த ராதிகா (37) மற்றும் நாகம்பள்ளி, படத்தநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னாச்சி (50) ஆகியோர் சில தினங்களுக்கு முன் (TN 47 BX 2021 suzuki access ) இருசக்கர வாகனத்தில் கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அரவக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு மதுரை டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது

அந்த வழியாக அவர்களைப் பின் தொடர்ந்து வந்த மதுரை மாவட்டம், மேலூர் பகுதியை சேர்ந்த பக்ருதீன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வந்த், சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி, மணப்பேட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன், மதுரை மாவட்டம், பொட்டல் களம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் டாட்டா சுமோ காரில் பின் தொடர்ந்து வந்து விபத்து ஏற்படுத்துவது போல் நடித்து அரவக்குறிச்சி நாகம்பள்ளியைச் சேர்ந்த ராதிகா மற்றும் பொன்னாச்சி அணிந்திருந்த ஒன்பதரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

இது சம்பந்தமாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அரவக்குறிச்சி நாகம்பள்ளியைச் சேர்ந்த ராதிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான பகுருத்தீன், அஸ்வந்த் இருவரையும் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி இந்தத் திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பக்ருதீன், அஸ்வந்த் ஆகியோருக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த திருட்டு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்த அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை போலீசாருக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார்.

கரூர் மக்கள் பயமின்றி வாழ இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் மேலும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார் . மேலும் வழிப்பறி, திருட்டு மற்றும் கொள்ளை போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டாஸ் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை யாரும் எதிர்பார்க்கல.. நவாஸ் ஷெரீப் வெச்ச ட்விஸ்ட்.. பாகிஸ்தானின் புதிய பிரதமர் இவரா?

பாகிஸ்தானின் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நிலை நீடித்தது. கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அடுத்த நாள் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், புதிய அரசை அமைக்க முடியாத நிலை உருவானது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றிபெற்றனர்.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களிலும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றது. 17 இடங்களில் பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் வெற்றிபெற்றது. மற்ற கட்சிகள் 17 இடங்களில் வெற்றிபெற்றனர். வேட்பாளர் இறந்ததால் ஒரு இடத்தில் தேர்தல் நடத்தபடவில்லை.

புதிய அரசை அமைக்க 133 இடங்களில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் முயற்சித்தன. குறிப்பாக, பரம எதிரிகளாக கருதப்படும் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

அதன்படி, பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிய பிலாவல் பூட்டோ, நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு அளித்தார். ஆனால், அரசாங்கத்தில் இணைய மாட்டோம் என தெரிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

நவாஸ் ஷெரீப் வெச்ச ட்விஸ்ட்:

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியும் ஔரங்கசீப் வெளியிட்ட பதிவில், "நவாஸ் ஷெரீப், தனது இளைய சகோதரர் ஷேபாஸ் ஷெரீப்பை (72) பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

தனது மகள் மரியம் நவாஸ் (50) பஞ்சாப் மாகாண முதலமைச்சராக நியமனம் செய்துள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கு (வரவிருக்கும் அரசாங்கத்தை அமைப்பதில்) ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற முடிவுகளின் மூலம் பாகிஸ்தான் நெருக்கடிகளில் இருந்து வெளிவரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில், நவாஸ் ஷெரீப்புக்கு ராணுவத்தின் ஆதரவு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஊழல் வழக்கில் சிக்கி லண்டனுக்கு சென்ற நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து, அவர் சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பினார். ராணுவத்தின் ஆதரவோடுதான், அவர் பாகிஸ்தான் திரும்பியிருப்பதாகவும் அவரை வெற்றிபெற வைக்க தேர்தலில் ராணுவம் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், மக்கள் மத்தியில் இம்ரான் கானுக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக அவரின் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் பெரிய வெற்றியை பதிவு செய்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், இம்ரான் கான் ஆதரவாளர்களை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க நவாஸ் ஷெரீப்பை பிரதமராக ஆக்க ராணுவம் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

கே.வி ஆனந்த் மகளின் கல்யாணத்திற்கு தங்க நாணயங்களை அனுப்பிய சூர்யா..

சூர்யா தொடர்ச்சியாக தொலைபேசியின் மூலம் தங்களது குடும்பத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வதாக மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்தின் மனைவி தெரிவித்துள்ளார்.

கே.வி ஆனந்த்

தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான கதைகளை தேர்வு செய்து தனித்துவமான கதை சொல்லல் முறையைக் கொண்ட இயக்குநர் கேவி ஆனந்த் . திரைத்துறைக்கு வருவதற்கு முன் கே.வி ஆனந்த் லயோலா கல்லூரியில் காட்சி தொடர்பியல் முடித்த கே.வி.ஆனந்த் பத்திரிகைகளில் ஃபோட்டோ ஜர்னலிஸ்டாக வேலை செய்தார். கல்கி, இந்தியா டுடே என மொத்தம் 200 பிரபலமான இதழ்களில் இவர் எடுத்த புகைப்படங்கள் முகப்புப் படமாக வெளிவந்திருக்கின்றன. பல முதலமைச்சர்களை அருகில் இருந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.

பின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் கே.வி.ஆனந்த். அமரன், கோபுர வாசலிலே, மீரா உள்ளிட்ட படங்களில் உதவியாளராக இருந்த கே.வி.ஆனந்த், பி.சி.,யின் பரிந்துரையின் பேரில் மலையாளப் படமான தென்மாவின் கொம்பத் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இந்த படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றார் கே.வி ஆனந்த். தமிழில் கே.வி ஆனந்த் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியப் படம் காதல் தேசம். இதனைத் தொடர்ந்து ஷங்கர் போன்ற பல முதன்மையான இயக்குனர்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறார்.

கனா கண்டேன் திரைப்படத்தின் வழியாக. இயக்குநராக கே வி ஆனந்த் அறிமுகமானார்.ஒரு இயக்குனராக கே.வி ஆனந்தின் கதை தேர்வு என்றும் புதுமையானதாக இருந்திருக்கிறது. அயன் , மாற்றான் , அனேகன், காப்பான், என இவரது படங்கள் கதையாகவோ, மேக்கிங்காகவோ ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை என்டர்டெயின் செய்யத் தவறியதில்லை. குறிப்பாக சூர்யாவுடன் இவர் இயக்கிய அயன் படம் இன்று வரை ஒரு சிறந்த கடத்தல் சார்ந்து எடுக்கப்பட்ட படங்களில் டாப்பில் இருக்கிறது.

திடீர் மரணம்

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 31 ஆம் தேதி கே.வி ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது இறப்பு தமிழ் சினிமாவில் பலருக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. குறிப்பாக அயன் , மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களில் கே.வி ஆனந்துடன் இணைந்து பணியாற்றிய நடிகர் சூர்யாவுக்கு அவருடன் நெருங்கிய நட்பு இருந்து வந்தது.

தற்போது இயக்குநர் கே.வி ஆனந்தின் மனைவி நடிகர் சூர்யா குறித்து பேசியுள்ள தகவல் ஒன்று இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தனது கணவரின் இறப்புக்குப் பின் சூர்யா தொடர்ச்சியாக அவரின் மகள்களின் படிப்பை பற்றி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்து வருவதாகவும் தனது மூத்த மகளின் திருமணத்திற்கு அவர் தங்க நாணயங்களை தனது மேனேஜர் வழியாக சூர்யா கொடுத்தனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த செயல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது

எமர்ஜென்சி கதவை ஓபன் செய்த முயன்ற பயணி..! போலீசில் ஒப்படைப்பு நடந்தது என்ன ?

டெல்லி விமானத்தின் அவசர கால கதவை, பயணி ஒருவர் திறக்க முயன்றதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு. விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்ட பயணி, போலீசில் ஒப்படைப்பு. இதனால் விமானம், ஒரு மணிநேரம் தாமதமாக, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து, டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 7 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 159 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.

இதை அடுத்து விமானி, விமானத்தை ஓடு பாதையில், இயக்குவதற்கு தயாரானார். அந்த நேரத்தில் திடீரென, விமானத்தின் அவசரகால கதவை திறந்தால்,ஒலிக்கக்கூடிய அலாரம், விமானத்துக்குள் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்திவிட்டு, அவசரகால கதவை திறந்தது யார்? என்று விசாரிக்க தொடங்கினர். இதை அடுத்து பரபரப்படைந்த விமான பணிப்பெண்கள், அவசர கால கதவு அருகே உள்ள, இருக்கையில் அமர்ந்திருந்த, பயணியிடம் சென்று விசாரித்தனர்.

அப்போது அந்தப் பயணி, நான் கதவை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த பட்டனை அழுத்தவில்லை. அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால், அதை தெரியாமல் நான் அழுத்தி விட்டேன். உடனே விமானத்துக்குள், அந்த அலாரம் ஒலித்து விட்டது. மேலும் நான் முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், எனக்கு அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது என்றார்.

ஆனாலும் விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள், அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பயணியை உடனடியாக விமானத்திலிருந்து கீழே இறக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை விமான நிலைய மேலாளருக்கு, தலைமை விமானி அவசர தகவல் கொடுத்தார். இதை அடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன.விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விரைந்து வந்து, அந்தப் பயணியிடம் விசாரனை நடத்தினர்.அதோடு அந்த பயணி, விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார்.மேலும் அவருடைய விமான பயணமும் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்பு பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய அதிகாரிகளும், தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக, இரவு 8 மணிக்கு, 158 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

அதன்பின்பு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பயணியை, சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய போலீசார் பயணியை விசாரித்த போது, அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். அவருடைய பெயர் சரோஸ் (27). சென்னையில் ஒரு வேலையில் சேர்வதற்காக, இண்டர்வியூக்கு, உத்தரபிரதேசத்தில் இருந்து, வரும்போது ரயிலில் வந்துள்ளார். இப்போது அவர் விமானத்தில் டெல்லிக்கு திரும்பி செல்கிறார் என்று தெரியவந்தது. மேலும் இந்தப் பயணிக்கு இது முதல் விமான பயணம் என்பதும் தெரிந்தது.இதை அடுத்து அந்தப் பயணி சென்னை விமான நிலைய போலீசாரிடம், தான் தெரியாமல் செய்து விட்டேன் என்று கூறினார். இந்த நிலையில் விமானநிலைய போலீசார், விமான நிறுவனம் அளித்துள்ள புகாரின்பேரில், சி எஸ் ஆர் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

CM Stalin: ”யார் தீவிரவாதிகள்? உழவர்களா? அரசாங்கமா?” விவசாயிகள் போராட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மக்களவை தேர்தலுக்காக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு – புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை முழக்கம் ஒலிக்க இருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும். உரிமையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்” என்றார்.

மேலும், ”தி.மு.க.வின் கொள்கை பலமும், உடன்பிறப்புகளாம் உங்களுடைய உள்ளத்தின் வலிவும் பாசிச சக்திகளை அச்சப்பட வைத்திருக்கிறது. மதவெறி அரசியல் நடத்தும் பா.ஜ.க.வைச் கருத்தியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் உண்டு என்பதால்தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவர்கள் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம். அவர்களுக்கே அப்படியென்றால், அந்தக் கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு இரவுமே தூக்கம் தொலைத்த இரவுகள்தான்” என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

”தலைநகர் டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்? ஒன்றிய பா.ஜ.க அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது.

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய உழவர்களின் வயிற்றிலடித்த ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து ஏறத்தாழ ஓராண்டு காலம் இடைவிடாது போராடினார்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அவர்கள் பக்கம் உறுதியாக நின்றது. நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பியது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியது.

அசைந்து கொடுக்க மறுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு உழவர்களை ஒடுக்க நினைத்தது. அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தது. அப்போதும் உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முடியாத காரணத்தால், 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. ஆனால், உழவர்களின் வாழ்வு செழிப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவில்லை. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெறவில்லை. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராட்டம் நடத்த வரும் உழவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்… உழவர்களா? அரசாங்கமா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Rajya Sabha Election BJP nominates Union Ministers JP Nadda from Gujarat Ashok Chavan from Maharashtra
இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று கீழ் சபை என அழைக்கப்படும் மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
மாநிலங்களவை தேர்தல்:
இரண்டாவது மேல் சபை என அழைக்கப்படும் மாநிலங்களவை. இதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். 250 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவையில் பெரும் பங்காற்றிய 12 பேர், குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், மாநிலங்களவை உறுப்பினர்களில் 68 பேரின் பதவிக்காலம் இந்தாண்டு நிறைவடைய உள்ளது. அதில், 56 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
14 மாநிலங்களவை இடங்களுக்கு பாஜக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என். சிங், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுதன்ஷு திரிவேதி, உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் ஆகியோர் பாஜக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களை அறிவித்த பாஜக:
மேலும், 13 மாநிலங்களவை இடங்களுக்கு பாஜக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, பாஜக தேசிய தலைவர் நட்டா குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை தவிர, கோவிந்த்பாய் தோலாகியா, மயங்பாய் நாயக், ஜஸ்வந்த் சிங் சலாம்சிங் பர்மர் ஆகியோரும் பாஜக சார்பில் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகின்றனர்.
அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அசோக் சவான், மேதா குல்கர்னி, அஜித் கோப்சட்டே ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். மத்திய இணை அமைச்சர் எல். முருகன், உமேஷ் நாத் மகாராஜ், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோர் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகின்றனர். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தில் இருந்து போட்டியிடுகின்றனர்.
BJP releases another list of candidates for the Rajya Sabha Biennial elections. Party president JP Nadda from GujaratAshok Chavan, Medha Kulkarni from Maharashtra pic.twitter.com/eIZXmvyjcn
— ANI (@ANI) February 14, 2024காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட உள்ளார். ராஜஸ்தானில் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு அவர் போட்டியிட உள்ளார்.
இதையும் படிக்க: கடைகள் முதல் மருத்துவமனைகள் வரை.. கன்னட மொழி கட்டாயம்.. சாட்டையை சுழற்றிய சித்தராமையா!மேலும் காண

CM Stalin: ”யார் தீவிரவாதிகள்? உழவர்களா? அரசாங்கமா?” விவசாயிகள் போராட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மக்களவை தேர்தலுக்காக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு – புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை முழக்கம் ஒலிக்க இருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும். உரிமையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்” என்றார்.

மேலும், ”தி.மு.க.வின் கொள்கை பலமும், உடன்பிறப்புகளாம் உங்களுடைய உள்ளத்தின் வலிவும் பாசிச சக்திகளை அச்சப்பட வைத்திருக்கிறது. மதவெறி அரசியல் நடத்தும் பா.ஜ.க.வைச் கருத்தியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் உண்டு என்பதால்தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவர்கள் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம். அவர்களுக்கே அப்படியென்றால், அந்தக் கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு இரவுமே தூக்கம் தொலைத்த இரவுகள்தான்” என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தலைநகர் டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்? ஒன்றிய பா.ஜ.க அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது.

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய உழவர்களின் வயிற்றிலடித்த ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து ஏறத்தாழ ஓராண்டு காலம் இடைவிடாது போராடினார்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அவர்கள் பக்கம் உறுதியாக நின்றது. நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பியது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியது.

அசைந்து கொடுக்க மறுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு உழவர்களை ஒடுக்க நினைத்தது. அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தது. அப்போதும் உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முடியாத காரணத்தால், 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. ஆனால், உழவர்களின் வாழ்வு செழிப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவில்லை. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெறவில்லை. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராட்டம் நடத்த வரும் உழவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்… உழவர்களா? அரசாங்கமா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Annamalai said candidates are ready for all constituencies – TNN | Annamalai:அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எல்.முருகன் மறுபடியும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது எங்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.. மத்திய பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். 1952 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றது. இதுவரை 91 முறை மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டது. அதில் 50 முறை இந்திரா காந்தி ஆட்சிகளை கலைத்ததால் தேர்தல் நடத்தும் நேரம் மாறியது. ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தை படிக்கவில்லையா?
இப்போது இல்லையென்றாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும். 2024 ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த முடியும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். எடுத்தோம் கவிழ்த்தோம் என பத்து வரி எழுதி வந்து முதல்வர் சட்டமன்றத்தில் ஆதரவு, எதிர்ப்பு கேட்பது என்பது யோசனை இல்லாமல் கொண்டு வந்துள்ளார். எல்.முருகனை நீலகிரியில் போட்டியிட நாங்கள் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார்படுத்தி தர அவரிடம் சொல்லி இருந்தோம். நீலகிரியில் வேட்பாளர் தயாராக உள்ளார். எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை கொண்டு வர 40 இலட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். ராகுல்காந்தி விவசாயிகள் தற்கொலை செய்த போது எங்கே போனார்? விவசாயிகள் சும்மா சும்மா வந்தால் என்ன அர்த்தம்? கரும்பு விலை உயர்வு, ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தருவதாக திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதை எதிர்த்து ஏன் விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை? சில விவசாயிகள் குழுவிற்கு தேர்தல் வந்தால் மட்டும் கண் திறக்கும். விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் கள்ளு கடையை திறக்க வேண்டும். விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க தயாராக இருக்கிறோம். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக இயற்ற இயலாது.
கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க திமுக கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அக்குற்றவாளிகளை எந்த காரணத்திற்காகவும் விடுவிக்க கூடாது. கோவை இன்னும் அபாயத்தில் இருந்து தப்பிக்கவில்லை. கொத்தடிமைகள் கூட்டம் அதிகமாக உள்ளது. கொத்தடிமைகள் ஜால்ரா போடுபவர்களாக மாற்றியுள்ளார்கள். எம்.ஜி.ஆர். அரசியலில் இருக்கும் போது திமுகவினர் கேவலமாக பேசினார்கள். உதயநிதி குடும்ப கோட்டாவில் வந்தவர்கள். உதயநிதியை எம்.ஜி.ஆர். உடன் 1 சதவீதம் கூட ஒப்பிட முடியாது” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு, ”எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம்” என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”சபாநாயகர் திமுககாரரை விட மோசமாக உள்ளார். சபாநாயகர் நடுநிலையாக இருந்தால் பிரச்சனை இருக்காது. நாங்கள் யாரையும் போன் போட்டு கட்சிக்கு வர அழைப்பதில்லை. விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் இணைகிறார்கள். ஒரு கட்சியை உடைத்து கட்சியை வளர்க்கும் வேலையை பாஜக செய்யாது. எங்கள் கட்சியில் இணைந்தவர்களை வயதானவர்கள் என்ற வேலுமணி, எடப்பாடி பழனிசாமி வயது என்ன? வயதை பற்றி பேசி வேலுமணி அவரது கட்சி தலைவர் கேவலப்படுகிறார். எடப்பாடி பழனிசாமி இளைஞரா? எடப்பாடி பழனிசாமி வயதை விட எங்கள் கட்சியில் இணைந்தவர்களின் வயது 90 சதவீதம் குறைவு தான். வேலுமணி கண்ணாடி கூண்டில் இருந்து கல் ஏறிய கூடாது.இப்படி தவறாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
கேரள அரசு சிறுவாணி அணையில் தரும் தண்ணீரின் அளவை குறைக்க கூடாது. கோவை சீட் கம்யூனிஸ்ட்களுக்கு கிடைக்குமா என தெரியவில்லை. கம்யூனிஸ்ட் மக்கள் பிரச்சனைகளை பேசி 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அது நல்லகண்ணு கால கம்யூனிஸ்ட்கள். தற்போது அவர்கள் கமர்சியலாகி விட்டார்கள். திமுக காங்கிரஸ் போல காதல் திருமணம் இருக்க கூடாது. மோடி பாஜக போல காதல் திருமணம் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.மேலும் காண

Kangana Ranaut co star Mallika Rajput sucide is suspicious
சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ‘ரிவால்வர் ராணி’ படத்தில் அவருடன் உடன் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மல்லிகா ராஜ்புத். விஜயலட்சுமி என அழைக்கப்படும் மல்லிகா ராஜ்புத் ஒரு பாடகியாகவும் நடிகையாகவும் பிரபலமானவர். இவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மல்லிகாவின் தற்கொலை :
உத்திரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் தன்னுடைய வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் நடிகை மல்லிகா ராஜ்புத். அவருக்கு வயது 35. மல்லிகா ராஜ்புத் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வந்து அவரின் உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மல்லிகா ராஜ்புத் தயார் :
மல்லிகா ராஜ்புத் தயார் சுமித்ரா சிங் இந்த சம்பவம் குறித்து பேசுகையில் வீட்டில் உள்ள அனைவரும் இரவு தூங்கி கொண்டு இருந்ததால் மல்லிகாவின் இந்த மரணம் எப்போது நடந்தது என தெரியவில்லை. அறையின் கதவு உள்பக்கமாக தாளிட்டு இருந்தது. நீண்ட நேரமாக மின்விளக்குகள் எரிந்து கொண்டே இருந்தால் வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தேன். அப்போது அவள் மின்விசிறியில் தூக்கிட்டு நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து என்னுடைய கணவரையும் மற்றவர்களை எழுப்பினேன் என அதிர்ச்சியுடன் அழுது கொண்டே தெரிவித்துள்ளார் மல்லிகாவின் தாயார் சுமித்ரா சிங்.
மல்லிகா ராஜ்புத் யார் ?
2014ம் ஆண்டு நகைச்சுவை கலந்த கிரைம் திரில்லர் திரைப்படத்தில் லீட் ரோலில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க துணை கதாபாத்திரத்தில் மல்லிகா ராஜ்புத் நடித்திருந்தார். இவர் ஒரு சில பாடல்களை பாடி வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். மறைந்த பாடகர் ஷான் எழுதிய யாரா துஜே பாடலின் இசை ஆல்பத்தில் தோன்றி இருந்தார். நடிப்பு, பாட்டு மட்டுமின்றி அரசியலிலும் இறங்கி பாரதிய ஜனதா கட்சியில் 2016ம் ஆண்டு இணைந்தார். பின்னர் இரண்டே ஆண்டுகளில் அந்த கட்சியில் இருந்து விலகினார்.
மல்லிகா ராஜ்புத் ஆன்மீகத்தில் சில நாட்கள் பயணித்தார். அது மட்டுமின்றி கதக் நடன பயிற்சியாளர் மற்றும் தனது சொந்த புத்தகங்களை கூட எழுதியுள்ளார். இப்படி பன்முக திறைமையாளராக இருந்த மல்லிகா ராஜ்புத் மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே மல்லிகாவின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காண

Former Union Minister Thangapalu welcomes actor Vijay party launch – TNN | நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை வரவேற்கிறேன், வாழ்த்துக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் மைதானத்தில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நீதி பயண விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் 65 அடி அளவில் கொடியேற்றுதல், பண்டிதர் ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி, பாரத ரத்னா ராஜீவ் காந்தி மூவரின் முழு உருவ சிலை திறப்பு என முப்பெரும் விழா நடைபெற இருந்தது.
இதற்கு கொடி ஏற்றி வைத்து சிறப்பிக்க முன்னாள் மத்திய அமைச்சர் தங்கப்பாலு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கபாலு பேசியதாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்திய அளவில் மாற்றம் வரவேண்டும். தமிழகத்தில் வெற்றிக்கூட்டணி தான் மிகப்பெரிய கூட்டணி. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க போகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்தும் தெரியும். சரியான முடிவை எடுப்பார்கள் இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகம் தான். ராகுல் காந்தி சாதிவாரி கணக்கு எடுப்பார் அதன் மூலம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்த வில்லை. பாஜக வை எதிர்ப்பவர்களை அவர்களின் மீது வழக்கு போடுகிறார்கள். தமிழகத்தில் 40 இடங்களிலும் எங்கள் கூட்டணிதான் வெல்லும். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பாஜக ஆட்சியை கண்டித்து போராட்டம் நடத்தினால் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதை வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார்.
இந்த முப்பெரும் விழாவில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.மேலும் காண

Atrocities On Dalits Tribal Man Stripped Hung Upside Down And Thrashed In Madhya Pradesh |
Atrocities On Dalits: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞரை நிர்வாணமாக்கி தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
பழங்குடியின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்:
இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
அதாவது, மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் டீக்கடையில் இருந்த பழங்குடியின இளைஞரிடன், ஒரு கும்பல் பணத்தை கேட்டுள்ளனர். பணம் தர மறுத்த இளைஞரை, அந்த கும்பல் ஈவு இரக்கமின்றி தாக்கி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோவும் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில், பழங்குடியின இளைஞரின் ஆடைகளை அவிழ்த்து, தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக அடித்துள்ளனர். பெல்ட், கட்டை மற்றும் செருப்பால் கடுமையாக தாக்கியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக இளைஞரை அந்த கும்பல் தாக்கி இருப்பதாக தெரிகிறது.
வழக்குப்பதிவு:
இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், “ஒரு கும்பல் என்னுடைய ஆடைகளை அவிழ்த்து தலைகீழாக தொங்கவிட்டு அடித்தது. கட்டை, பெல்ட் மற்றும் செருப்பால் அடித்தனர். நான் ஏன் தாக்கப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் நான் நடத்தி வரும் டீக்கடைக்கு பணம் கேட்டார்கள்.
அவர்கள் துப்பாக்கி வைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் கொலை செய்துள்ளார் என்று கேள்விப்பட்டேன். அதனால் நான் யாரிடமும் இதை பற்றி சொல்லவில்லை. இது சம்பந்தமான வீடியோ வைரலானபோது, நான் சகோதரரிடம் தெரிவித்தேன்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்:
இதனை தொடர்ந்து, குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் பட்டியலின மாப்பிள்ளை ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். குதிரையில் அமர்ந்து திருமண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தி தாக்கி இருக்கிறது ஒரு கும்பல். குதிரையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை விகாஸை தாக்கி கீழே தள்ளி அந்த கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.
அந்த கும்பல், “குதிரையில் நீயெல்லாம் ஏறிச் செல்லக்கூடாது என்றும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குதிரையில் ஏறிச் செல்ல அனுமதி” என்று கூறியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளனர். சைலேஷ் தாகூர், ஜெயேஷ் தாகூர், சமீர் தாக்கூர் மற்றும் அஷ்வின் தாக்கூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் காண

tamilnadu Legislative Assembly SPeaker appavu trolled Vanathi Srinivasan -Watch Video
தமிழ்நடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சட்டப்பேரவையின் மூன்றாம் நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் அரசின் 2 தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
அந்த தீர்மானங்கள் பின்வருமாறு:
முதல் தீர்மானம்:
வருகின்ற 2026க்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” தொகுதி வரையறை என்ற பெயரில் எந்த காரணத்துக்காவும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. தொகுதி வரையறை என்ற பெயரில் எந்த காரணத்துக்காவும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. இது தென்னிந்திய மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ளது. இந்த 2 திட்டங்களும் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறைக்கு எதிரானது” என தெரிவித்தார்.
2வது தீர்மானம்:
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டம் மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால், இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்பட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர், “இந்த திட்டம் மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பு சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று. நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடத்த முடியாத சூழல் உள்ளது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது இயலாத ஒன்றாகும்” என தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து 2 முக்கிய தீர்மானங்கள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வந்தது. விவாதத்தின்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “பேரவை தலைவர் அவர்களே! இன்று சட்டமன்றத்தில் 2 தனித்தீர்மானங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. முதல் தீர்மானம் தொகுதியுடைய மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையிலான மாற்றங்கள் என்பது குறித்தது. ஒட்டுமொத்தமாக ஒரு பறவை பார்வையில் பார்க்கின்றபோது தென்மாநிலங்கள் பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதாலும் சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறார்கள். நாளை அதாவது வருங்காலத்தில் இந்த எண்ணிக்கைகள் குறைகின்றபோது, நமக்கான குரல்கள் அங்கு ஒலிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுமோ என்ற அச்சம் நியாயமானது. பாரதீய ஜனதா கட்சி அந்த தீர்மானத்தை பொறுத்தவரை கவலையை புரிந்துகொள்கிறோம். அதற்கான என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கு பாரதீய ஜனதா கட்சி முழுமையாக அந்த தீர்மானத்தின் கவலையை புரிந்துகொண்டு அதில் நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “ஆதரிக்கிறீங்க அதனே” என கேள்வி எழுப்பினார். உடனடியாக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “ அந்த வார்த்தை வேண்டும் ஐயாவுக்கு” என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் சிரிப்பலை சிறிதுநேரம் தொடர்ந்தது.
மேலும் காண

Rare Case Of Bubonic Plague In US oregon detected It Killed 50 Million In 14th Century
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் புபோனிக் பிளேக் என்ற அரிய நோயால் (Rare Case Of Bubonic Plague) பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக 2015 ஆம் ஆண்டு இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வளர்ப்பு பூனை மூலம் இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது வரை ஒருவருக்கு மட்டுமே இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Oregon Reports Case of Bubonic Plague.A case of bubonic plague, responsible for the Black Death that killed tens of millions of people in the Middle Ages, has been reported in Oregon. The plague victim has been identified only as a man believed to have been infected by his… pic.twitter.com/gl8OW4VUH7
— Tony Seruga (@TonySeruga) February 12, 202414 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் கருப்பு மரணம் (Black Death) என்று அழைக்கப்படும் பிளேக் நோய் பரவியது. மனித வரலாற்றில் மிகக் கொடிய தொற்று நோய்களில் ஒன்றான புபோனிக் பிளேகால் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புபோனிக் பிளேக் என்பது பாலூட்டிகளை பாதிக்கக்கூடிய ஒரு தொற்று நோயாகும். பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று நோயை ப்ளேக் என்று அழைக்கப்படுகிறது. யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா மூலம் ப்ளேக் தொற்று நோய் உருவாகிறது. இந்த வகை பாக்டீரியா விலங்குகளில் வாழும். குறிப்பாக அணில் போல காட்சியளிக்கும் ரோடண்ட் என்ற வகை விலங்குகளிலும், அதன் உடலில் உள்ள உண்ணிகளிலும் இந்த பாக்டீரியா அதிகம் காணப்படுகிறது. இது மனிதர்களுக்கு எளிதாக பரவக்கூடியது. குறிப்பாக புபோனிக் பிளேக் என்பது பொதுவாக பரவக்கூடிய நோய்களில் ஒன்றாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதங்கள், விரல்கள் போன்ற உடல் பாகங்கள் கருப்பாக மாறிவிடும் என்பதால், இதனை `தி பிளாக் டெத்` என அழைக்கப்படுகிறது.
காய்ச்சல், குமட்டல், பலவீனம், குளிர் மற்றும் தசை வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என்றும் கூறப்படுகிறது. புபோனிக் பிளேகை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நுரையீரலை பாதிக்கும் நிமோனிக் பிளேக் அல்லது ரத்த ஓட்டத்தில் தொற்றை உண்டாக்கும் செப்டிசிமிக் பிளேக் ஆகியவையை உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Check out below Health Tools-Calculate Your Body Mass Index ( BMI )Calculate The Age Through Age Calculator
மேலும் காண

Imran Tahir Becomes Only 4th Bowler To Have Completed 500 Wickets In T20 Cricket History Latest Tamil Sports News
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை போல, வங்கதேசத்திலும் வங்கதேச பிரிமீயர் லீக் ஆண்டுதோறும் நடைபெறும். இந்தநிலையில், இந்த ஆண்டுக்காக வங்கதேச பிரிமீயர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இம்ரான் தாஹிர், குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் நான்காவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் காரணமாக இம்ரான் தாஹிர் தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் இம்ரான் தாஹிர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 44 வயதான இம்ரான் தாஹிர் தனது வயது காரணமாக விவாதப் பொருளாகவே இருந்து வருகிறார். பங்கேற்கும் அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் இம்ரான் தாஹிர் சிறப்பாக செயல்பட்டாலும், ஏலத்தின்போது ஒவ்வொரு அணி நிர்வாகமும் இவரை எடுக்க ஒரு நொடி யோசிக்கதான் செய்கிறது.
இப்படியாக சூழ்நிலையில், இம்ரான் தாஹிர் இந்த வயதில் சாதனை படைத்திருப்பது பாராட்டுக்குரியது என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
500 விக்கெட்கள்:
வங்கதேச பிரிமீயர் லீக்கின் நேற்றைய போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இம்ரான் தாஹிர், குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசினார். ஆரம்பம் முதல் அட்டகாசமாக பந்துவீசி, அலெக்ஸ் ஹேல்ஸ், அன்முல் ஹக், அபிஃப் ஹொசைன், ஹபிபுர் ரெஹ்மான் சோஹன், அக்பர் அலி ஆகியோரை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 500 டி20 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். தற்போது, இம்ரான் தாஹிர் 404 டி20 போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
History – Imran Tahir becomes only 4th bowler to have completed 500 wickets in T20 Cricket history.He is 44-years old and he completed 500 wickets – Take a bow, Tahir. pic.twitter.com/HcDXT3ir62
— CricketMAN2 (@ImTanujSingh) February 13, 2024அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்
டுவைன் பிராவோ – 624 விக்கெட்டுகள்ரஷித் கான் – 556 விக்கெட்கள்சுனில் நரைன் – 532 விக்கெட்கள்இம்ரான் தாஹிர் – 502 விக்கெட்டுகள்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ டி20 வடிவத்தில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் ஆவார். இவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஷித் கான் இரண்டாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த மற்றொரு பந்துவீச்சாளரான சுனில் நரைன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதே சமயம் இந்த பட்டியலில் தற்போது இம்ரான் தாஹிரின் பெயர் சேர்ந்துள்ளது. இதுவரை, டி20 போட்டிகளில் டுவைன் பிராவோ 624 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் டி20 போட்டிகளில் 556 விக்கெட்டுகளையும், சுனில் நரேன் 532 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
இம்ரான் தாஹிரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
இம்ரான் தாஹிர், தென்னாப்பிரிக்கா அணிக்காக இதுவரை 20 டெஸ்ட், 107 ஒருநாள் மற்றும் 38 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இது தவிர, இம்ரான் தாஹிர் ஐபிஎல் தொடரில் 59 போட்டிகளில் விளையாடியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இம்ரான் தாஹிர் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல்லில் 51 போட்டிகளில் விளையாடியுள்ள இம்ரான் தாஹிர் 20.77 சராசரியிலும், 7.76 பொருளாதாரத்திலும் 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இம்ரான் தாஹிரின் சிறந்த பந்துவீச்சாகும்.
Lok Sabha Election 2024 Lok Sabha Constituencies And Their Assembly Segments Complete Details
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் அடங்கும், 6 சட்டமன்ற தொகுதிகள் எவை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ்நாடு மக்களவை தொகுதிகள்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் இதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 1,849,924 வாக்காளர்களுக்கு ஒரு தொகுதி என மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் சராசரியாக 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மக்களவை தொகுதியின் கீழ் வரும் சட்டமன்ற தொகுதிகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
மக்களவை தொகுதிகளுக்குள் வரும் சட்டமன்ற தொகுதிகள்:
1.திருவள்ளூர் மக்களவை தொகுதி (தனி)
சட்டமன்ற தொகுதிகள்: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர் , பூவிருந்தவல்லி (தனி), ஆவடி, மாதவரம்.
மாவட்டம்: திருவள்ளூர்
2.வடசென்னை மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்: திருவொற்றியூர், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி), இராயபுரம்
மாவட்டம்: சென்னை திருவள்ளூர்
3.தென்சென்னை மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்: விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர்
மாவட்டம்: சென்னை காஞ்சிபுரம்
4.மத்திய சென்னை மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர்
மாவட்டம்: சென்னை
5.ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் (தனி)
மாவட்டம்: காஞ்சிபுரம்
6.காஞ்சிபுரம் மக்களவை தொகுதி (தனி)
சட்டமன்ற தொகுதிகள்: செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யார் (தனி), மதுராந்தகம் (தனி), காஞ்சிபுரம், உத்திர மேரூர்
மாவட்டம்: காஞ்சிபுரம்
7.அரக்கோணம் மக்களவை தொகுதி:
அதனுள் அடங்கும் சட்டமன்ற தொகுதிகள்: அரக்கோணம் (தனி), திருத்தணி, சோழிங்கர், காட்பாடி, இராணிப்பேட்டை, ஆற்காடு
மாவட்டம்: வேலூர், திருவள்ளூர்
8.வேலூர் மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்: வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், கீழ்வைத்தினன் குப்பம் (தனி)
மாவட்டம்: வேலூர்
9.கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை (தனி), பர்கூர், ஒசூர், தளி, வேப்பனஹள்ளி
மாவட்டம்: கிருஷ்ணகிரி
10.தர்மபுரி மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: தர்மபுரி, பாலக்கோடு, பெண்ணாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி), மேட்டூர்
மாவட்டம்: தர்மபுரி, சேலம்
11.திருவண்ணாமலை மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம் (தனி), கலசபாக்கம் ,ஜோலார் பேட்டை, திருப்பத்தூர்
மாவட்டம்: திருவண்ணாமலை வேலூர்
12.ஆரணி மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்: போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம்.
மாவட்டம்: திருவண்ணாமலை
13.விழுப்புரம் மக்களவை தொகுதி (தனி)
சட்டமன்ற தொகுதிகள்: விழுப்புரம், திண்டிவனம் (தனி) , விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர் பேட்டை, வானூர் (தனி).
மாவட்டம்: விழுப்புரம்
14.கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்: ரிசிவந்தியம், சங்கரபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவலி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி)
மாவட்டம்: விழுப்புரம்
15.சேலம் மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்: சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), எடப்பாடி, வீரபாண்டி, ஓமலூர்
மாவட்டம்: சேலம்
16.நாமக்கல் மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்: நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர், சங்ககிரி, இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி).
மாவட்டம்: நாமக்கல் சேலம்
17.ஈரோடு மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம், ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு).
மாவட்டம்: ஈரோடு நாமக்கல்
18.திருப்பூர் மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம்
மாவட்டம்: திருப்பூர், ஈரோடு
19.நீலகிரி மக்களவை தொகுதி (தனி):
சட்டமன்ற தொகுதிகள்: பவானிசாகர் (தனி), உதகமண்டலம், குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி (தனி)
மாவட்டம்: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு
20.கோயம்புத்தூர் மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு).
மாவட்டம்: கோயம்புத்தூர்
21.பொள்ளாச்சி மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்
மாவட்டம்: கோயம்புத்தூர்
22.திண்டுக்கல் மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம்
மாவட்டம்: திண்டுக்கல்
23.தேனி மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்:: ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி),
மாவட்டம்: தேனி, மதுரை
24.கரூர் மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர், விராலிமலை, மணப்பாறை
மாவட்டம்: கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி
25.திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்: திருச்சிராப்பள்ளி (கிழக்கு), திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை
26.பெரம்பலூர் மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: குளித்தலை, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி)
மாவட்டம்: பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர்
27.கடலூர் மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: திட்டக்குடி, விருதாச்சலம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, கடலூர்
மாவட்டம்: கடலூர்
28.சிதம்பரம் மக்களவை தொகுதி (தனி):
சட்டமன்ற தொகுதிகள்: அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம் , காட்டுமன்னார்கோயில் (தனி), குன்னம்
மாவட்டம்: கடலூர் , அரியலூர்
29.மயிலாடுதுறை மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், திருவிடைமருதூர் (தனி), பாபநாசம், கும்பகோணம்
மாவட்டம்: நாகப்பட்டிணம், தஞ்சாவூர்
30.நாகப்பட்டிணம் மக்களவை தொகுதி (தனி):
சட்டமன்ற தொகுதிகள்: திருத்துறைப்பூண்டி (தனி), நாகப்பட்டிணம், வேதாரண்யம், திருவாரூர், நன்னிலம், கீழ்வேலூர் (தனி)
மாவட்டம்: நாகப்பட்டிணம், திருவாரூர்
31.தஞ்சாவூர் மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி
மாவட்டம்: தஞ்சாவூர்
32.சிவகங்கை மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: சிவகங்கை, திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி)
மாவட்டம்: சிவகங்கை , புதுக்கோட்டை
33.மதுரை மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: மேலூர், மதுரை (கிழக்கு), மதுரை (மேற்கு), மதுரை (வடக்கு), மதுரை (தெற்கு), மதுரை (நடு)
மாவட்டம்: மதுரை
34.விருதுநகர் மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர்
மாவட்டம்: விருதுநகர், மதுரை
35.ராமநாதபுரம் மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்: இராமநாதபுரம், முதுகுளத்தூர், அறந்தாங்கி, பரமகுடி (தனி), திருச்சுழி, திருவாடனை
மாவட்டம்: இராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர்
36.தூத்துக்குடி மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம்: தூத்துக்குடி
37.தென்காசி மக்களவை தொகுதி (தனி):
சட்டமன்ற தொகுதிகள்: தென்காசி, கடயநல்லூர், இராஜபாளையம், சங்கரன்கோயில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), ஸ்ரீவல்லிப்புத்தூர் (தனி)
மாவட்டம்: திருநெல்வேலி, விருதுநகர்
38.திருநெல்வேலி மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையம்கோட்டை, நான்குநேரி, இராதாபுரம்
மாவட்டம்: திருநெல்வேலி
39.கன்னியாகுமரி மக்களவை தொகுதி:
சட்டமன்ற தொகுதிகள்: கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு
மாவட்டம்: கன்னியாகுமரி
Sun tv Ethirneechal serial today episode february 14 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 13) எபிசோடில் நந்தினியை போலீஸ் உள்ளே மீண்டும் அழைத்து செல்ல கதிர் அவளை அழுது கொண்டே ஆறுதல் சொல்லி அனுப்புகிறான். அவர்கள் நால்வரையும் எப்படி வெளியே எடுப்பது என்பது குறித்து அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆதிரை போன் செய்து ஒரு இடத்திற்கு வரச்சொல்கிறாள். சாரு பாலாவை சந்தித்து பேசுகிறார்கள். அவரும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக கூறுகிறார். இருப்பினும் குணசேகரனை சமாதானம் செய்து கேஸை வாபஸ் வாங்க வைக்க சொல்கிறார்.நந்தினி கதிர் தன் மீது காட்டிய அன்பை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறாள். அவர்களோடு இருக்கும் போது வெறுப்பை கொட்டிவிட்டு இப்போது எதற்கு இத்தனை பாசம் காட்ட வேண்டும். இந்த சமயத்தில் அவர்களோடு இருக்க முடியவில்லையே என வருத்தப்பட்டு பேசுகிறாள். அவள் பேசியதை கேட்டு ஜனனி, ஈஸ்வரி மற்றும் ரேணுகா வருத்தப்படுகிறார்கள். தர்ஷினியை கடத்தி வைத்திருந்த ரவுடிக்கு ஒருவர் போன் செய்து தர்ஷினி தப்பித்ததை பற்றி விசாரித்து திட்டுகிறார். அவள் உயிருடன் திரும்ப கூடாது என ரவுடிக்கு ஆர்டர் போடுகிறார். கதிர், சக்தி மற்றும் ஞானம் வீட்டுக்கு சென்று குணசேகரனை சந்தித்து கேஸை வாபஸ் வாங்க சொல்லி கேட்க அவர் வீம்பாக என்னுடைய மகளை காணவில்லை அதற்காக தான் நான் கேஸ் போட்டேன் என சொல்லி வாபஸ் வாங்க மறுக்கிறார். மேலும் நாளைக்கு அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என சொல்லி சஸ்பென்ஸ் ஒன்றை வைக்கிறார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஜீவானந்தம், ஈஸ்வரிடம் நான் சொல்லும் விஷயங்களை மட்டும் கோர்ட்டுல சொல்லுங்க என சொல்கிறார். அதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள்.
வீட்டில் குணசேகரனிடம் வந்து வாபஸ் வாங்குவது பற்றி சக்தியும் கதிரும் கேட்க “காலையிலேயே பிரச்சினை பண்ண வேணாம் என சொல்லு” என குணசேகரன் விசாலாட்சி அம்மாவிடம் சொல்கிறார். “தேவையில்லாமல் வீட்டு பொம்பிளைகளை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் அனுப்பீட்டு, எல்லாம் வேலையையும் நீங்க பார்த்துப்பிட்டு இப்போ எங்களை வந்து பிரச்சினை பண்றோம்னு சொல்றீங்களா நீங்க?” என சக்தி கேட்டதும் அவனை பார்த்து குணசேகரன் முறைக்கிறார்.
குணசேகரனுக்கு ஆதரவாக விசாலாட்சி அம்மா பேச “இவரை நியாயப்படுத்துறதுக்காக இல்லாத காரணத்தை எல்லாம் தேடிகிட்டு இருக்க. இப்போ உடைச்சு சொல்றேன் கேட்டுட்டு நல்லா சந்தோஷபட்டுக்கோ” என சொல்லி நந்தினியையும் மற்றவர்களையும் நடக்க கூட முடியாத அளவுக்கு அடித்து போலீஸ் சித்தரவதை செய்வதை பற்றி விசாலாட்சி அம்மாவிடம் கதிர் சொல்ல அதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைகிறார். அழுது கொண்டே கதிர் வெளியே சென்றுவிடுகிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ.
மேலும் காண

Valentine’s Day Introduction of fire cake on the occasion of lovers day in Karaikal – TNN
காரைக்காலில் காதலர் தினத்தை முன்னிட்டு ஃபயர் கேக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பேக்கரி திறந்த ஒரு சில மணி நேரத்திலேயே கேக் விற்று தீர்ந்தது.
பல்வேறு உலக நாடுகளில் அன்னோனியமாக பழகும் நபர்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் காதலர்கள் தங்கள் அன்பை, நேசத்தை, காதலை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், பரிசு பொருட்கள், மலர்கள் ஆகியவற்றை 14ஆன் தேதி காதலர் தினத்தில் பரிமாறிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். காதலர்களே பெரும்பாலும் கொண்டாடுவதால் காதலர் தினம் என்றும் (lovers day) அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் காதலின் பெயரால் ரோசாப்பூ, இதய வடிவிலான பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் விற்பனை படு ஜோராக நடைபெறும். இதில் ஒருபடி மேலாக காதலர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் பேக்கரியில் காதலர் தினத்தை முன்னிட்டு அன்பளிப்பாக வழங்குவதற்காக புதிதாக ஃபயர் கேக் அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஃபயர் கேக் சாக்லேட், ஸ்ட்ராபெரி உள்ளிட்ட பல்வேறு ரகத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபயர் கேக்கில் காதலர் தின அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருக்கும். பின்னர் அதன் மேல் தீ வைத்தால் அவர்களது புகைப்படம் வரும். இதனால், இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பேக்கரியில் ஃபயர் கேக் குறித்து தகவல் தெரிந்த கல்லூரி மாணவர்கள் முதல் இளைஞர்கள் என அனைவரும் காலை முதலே கடையில் குவிந்ததால் கடை திறந்து சில மணி நேரங்களிலேயே கேக்குகள் முழுமையாக வெற்றி தீர்ந்தது. மேலும் கேக் தயாரிக்கும் பணியில் பேக்கரி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காண

கடைகள் முதல் மருத்துவமனைகள் வரை.. கன்னட மொழி கட்டாயம்.. சாட்டையை சுழற்றிய சித்தராமையா!

கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியில் கேள்வி கேட்டால் பதில் அளிக்க மறுப்பது, இந்தி திணிப்பை விமர்சிப்பது என சித்தராமையா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அதிரடி நடவடிக்கை:

அதன் தொடர்ச்சியாக, தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகளில் கன்னட பெயர்களில் பெயர்பலகை வைக்க வேண்டும் என விதி கொண்டு வரப்பட்டது. பெயர்பலகைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதமாவது கன்னட வார்த்தைகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி விதி கொண்டு வந்தது.

ஆனால், பெரும்பாலான கடைகளில் இந்த விதி பின்பற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள அனைத்து கடைகளும் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள், இந்த விதியை பின்பற்ற வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள வணிக கட்டிடங்களில் பெயர் பலகையின் மேற்பகுதியில் 60% கன்னட வார்த்தைகள் இடம்பெறுவதை கட்டாயமாக்கும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அறக்கட்டளைகள், ஆலோசனை மையங்கள், மருத்துவமனைகள், ஆய்வு கூடங்கள், பொழுதுபோக்கு மையங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றின் பெயர்பலகைகளில் 60% கன்னட வார்த்தைகள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெயர் பலகைகளில் கன்னட மொழி கட்டாயம்:

அதுமட்டும் இன்றி, மாநில அரசின் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களிலும் பெயர்பலகைகள் 60 சதவிகிதம் கன்னடத்தில் இடம்பெற வேண்டும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் பெயர்பலகைகளும் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் அறிவிப்புகள், விளம்பரங்கள், விண்ணப்பப் படிவங்கள், டிஜிட்டல் படிவங்கள், சான்றிதழ்கள் மற்றும் மாநிலத்தில் வெளியிடுவதற்காக அரசு அல்லது உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவிப்புகள் கன்னடத்தில் இருக்க வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள், ஃப்ளெக்ஸ், மின்னணுக் காட்சிப் பலகைகள், தகவல்கள், அறிவிப்புகள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உதவி பெறும் மற்றும் உதவிபெறாத நிறுவனங்கள் நடத்தும் பிற நிகழ்ச்சிகள் கன்னடத்தில் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா ரக்ஷனா வேதிகே (KRV) என்ற கன்னட அமைப்புக்கள் பெயர் பலகைகளில் கன்னடத்தை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக, பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள பல கடைகளில் இருந்து ஆங்கில பெயர் பலகைகளை அகற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: Sonia Gandhi : காங்கிரஸ் கட்சியின் கோட்டைக்கு டாடா.. மாநிலங்களவை தேர்தலுக்கு தயாராகும் சோனியா காந்தி!

TN Weather Update: பொளக்கப்போகும் வெயில்.. 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்..

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இயல்பை விட அதிகமான வெப்பநிலை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக 32.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

நாலுமுக்கு (திருநெல்வேலி மாவட்டம்), ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Lal salaam Ananthika Sanilkumar comment about love proposals | Ananthika Sanilkumar:ப்ரபோஸ் பண்ண லிமிட் இருக்கு.. தாண்டினால் அடிச்சிருவேன்
எனக்கு அதிகமாக கோபம் வந்தால் அடித்து விடுவேன் என லால் சலாம் படத்தின் நடிகை அனந்திகா தெரிவித்துள்ளார்.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் “லால் சலாம்” படம் வெளியாகினது. நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். மேலும் அனந்திகா சனில்குமார், தன்யா பாலகிருஷ்ணா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா என பலரும் நடித்துள்ளனர்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இருவரும் முக்கிய கேரக்டரில் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் பற்றி பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. சாதி, மத பேதங்கள் இல்லாமல் ஒற்றுமையை இப்படம் வலியுறுத்தியுள்ளது ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
இதனிடையே லால் சலாம் படத்தின் மூலம் அனந்திகா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு தமிழில் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், லால் சலாம் பற்றி பல விஷயங்களை தெரிவித்தார்.
அதில், “லால் சலாம் ரிலீசாவதற்கு முந்தைய நாள் ரொம்ப பதற்றமாக இருந்தது. இப்படம் நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. இவ்வளவு பெரிய படத்தில் ஒரு பகுதியாக இருப்பது சந்தோசமாக உள்ளது. படத்தில் நான் கோபப்படும் காட்சியில் நடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. நிறைய டேக் எடுத்தார்கள். பெண் இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர்கள் எப்படி வேலை வாங்குகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
நான் தமிழ் சினிமாவுக்குள் வருவதற்கு முன் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. லால் சலாம் படத்துக்குப் பின் என்னை தம்பி ராமையா உள்ளிட்ட சிலர் போன் பண்ணி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ரஜினிகாந்த சார் என்னிடம் பாடல்கள், கொஞ்சம் காட்சிகள் பார்த்தேன் எல்லாம் நல்லாருக்குமா என சொன்னார்கள்.எனக்கு அதிகமாக கோபம் வந்தால் எதிரே உள்ளவர்களை அடித்து விடுவேன். இதனால் நண்பர்களுக்குள் மிகப்பெரிய சண்டையே நடந்துள்ளது. எனக்கு ப்ரோபோசல்கள் வந்திருக்கு. அப்படி வந்தபோது வேண்டாம் என சொல்வேன். அது ஒரு லிமிட் வரைக்கும் பொறுமையாக இருப்பேன். அதை தாண்டினால் தான் அடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: Valentine’s Day: பள்ளியில் மட்டும் 3 காதல்கள்.. சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நிலையா?
மேலும் காண

Ahead Of Parliamentary Lok Sabha Elections – Tamil Nadu’s Constituencies, Full Details Of Voters | Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவை தேர்தல்
Lok Sabha Election 2024: தமிழக மக்களவை தொகுதிகள் மற்றும் மொத்த வாக்காளர்களின் முழு விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயார் செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மறுபுறம் பாஜகவும் தனிக்கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வியூகங்கள் அமைத்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகள் மற்றும் வாக்காளர்கள் தொடர்பான முக்கிய விவரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழக மக்களவை தொகுதிகள்:
தென்னிந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதன்படி, மாநிலத்தில் மொத்தமாக 39 தொகுதிகள் உள்ளன. இதில் 7 தனி தொகுதிகளாக இருக்க, 32 தொகுதிகள் பொதுதொகுதிகளாக உள்ளன. வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஸ்ரீபெரும்பதூர் தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய மக்களவை தொகுதியாக உள்ளது. அதேநேரம், மத்திய சென்னை மாநிலத்தின் சிறிய மக்களவை தொகுதியாக உள்ளது.
வாக்காளர்கள் விவரங்கள்:
தமிழ்நாட்டிற்கான திருத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 13.61 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்த்துள்ளனர். , 6.02 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப் பட்டுள்ளன. 3.23 லட்சம் வாக்களர்கள் விவரங்களை திருத்தம் செய்துள்ளனர்.
மொத்த வாக்காளர்கள்: 6,18,90,034பெண் வாக்காளர்கள்: 3,14,85,724ஆண் வாக்காளர்கள்: 3,03,96,3303ஆம் பாலின வாக்காளர்கள்: 8,294மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்: 4,32,80518-19 வயது வாக்காளர்கள்: 5,26,205
2019ம் ஆண்டு தேர்தல் முடிவு விவரங்கள்:
2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும் முக்கிய போட்டியாளர்களாக களமிறங்கின. அதன் முடிவில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணிக்கு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி வசமாகியது.
வாக்கு சதவிகித விவரம்:
2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் 4.22 கோடி. வாக்கு சதவிகிதம் 71.87. இது கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பதிவான 73.82 சதவிகிதத்தை விடக் குறைவாகும். 2014ம் ஆண்டு தேர்தலில் 23.6 சதவிகித வாக்குகளை பெற்ற திமுக கூட்டணி, 2019ம் ஆண்டில் பதிவான மொத்த வாக்குகளில் 52.64 சதவிகிதத்தை கைப்பற்றியது. இதில் தி.மு.க மட்டும் பெற்ற வாக்கு சதவிகிதம் 32.76 ஆகும். 2014-ம் ஆண்டு தேர்தலில் பதிவான வாக்குகளில் 44.3 சதவிகிதத்தை கைப்பற்றிய அதிமுக, 2019ம் ஆண்டில் 18.48 சதவிகித வாக்குகள மட்டுமே பெற்றது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவிகித வாக்குகளை பெற்ற காங்கிரஸ், 2019ம் ஆண்டு தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 12.76 சதவிகித வாக்குகளை பெற்றது.
Top 5 MOST POWERFUL BOMBS IN THE WORLD check the list | POWERFUL BOMBS: உலகின் சக்தி வாய்ந்த, பேரழிவை ஏற்படுத்தக் கூடிய வெடிகுண்டுகள்
POWERFUL ATOMIC BOMBS: பேரழிவை ஏற்படுத்தக் கூடிய வெடிகுண்டுகளின் பட்டியலில், ரஷ்யாவின் சார் பாம்பே அணுகுண்டு முதலிடத்தை பிடித்துள்ளது.
POWERFUL ATOMIC BOMBS:
சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளின் வளர்ச்சியும், பெருக்கமும் நவீன போரின் அடையாளமாக உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளின் பேரழிவு தாக்கம், முதன்மையான நாடுகளுக்கு இடையே நடந்து வரும் ஆயுதப் போட்டி காரணமாக, அதிகளவில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை உருவாக்கப்படுவதை உலகம் கண்டுள்ளது. அதில் மிக முக்கியமானதாக அணு ஆயுதங்கள் கருதப்படுகின்றன. மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் குறிப்பாக கதிரியக்க அணு ஆயுதங்கள் மனித இனத்திற்கே பேரபத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்த சூழலில் உலகின் மிக சக்திவாய்ந்த, ஆபத்தான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் 5 வெடிகுண்டுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
5. FOAB (Father of All Bombs):
ரஷ்யாவின் FOAB (Father Of All Bombs) என்பது ஒரு தெர்மோபரிக் குண்டு ஆகும். இதுவரை உருவாக்கப்பட்ட அணுகுண்டு அல்லாத வெடிபொருட்களில் இது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். 44 டன் டிரினிட்ரோடோலூயினுக்கு (TNT – ஒரு வித வெடிபொருள்) சமமான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக இதன் காரணமாக, FOAB வெடிகுண்டு ஒரு சிறிய அணு ஆயுதத்திற்கு இணையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சுரங்கப்பாதை வளாகங்கள், பதுங்கு குழிகளை அழிக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது. 300 மீட்டர் சுற்றளவிற்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படும் என கூறப்படுகிறது.
4. MOAB (Massive Ordnance Air Blast):
அமெரிக்காவின் MOAB (Massive Ordnance Air Blast) என்பது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு அல்லாத சக்திவாய்ந்த வெடிகுண்டு ஆகும். இது ஏப்ரல் 2017 இல் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்டபோது உலகளாவிய கவனத்தைப் பெற்றது. MOAB என்பது போரில் இதுவரை பயன்படுத்தப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த வழக்கமான வெடிகுண்டு ஆகும். இது வெடிக்கும்போது 11 டன் டிரினிட்ரோடோலூயினுக்கு க்கு சமமான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. 1 மைல் சுற்றளவிற்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
03. R-36M2 Voevoda (Satan)
R-36M2 Voevoda, மேற்கத்திய நாடுகளில் சாத்தான்” என்று அழைக்கப்படுகிறது. இது ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இது பல சுயாதீனமாக இலக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய (எம்ஐஆர்வி) ஆயுதமாகும். ஒவ்வொரு எம்ஐஆர்வியும் 10 அணு ஆயுதங்களை சுமந்து செல்ல கூடியது. மேலும் இந்த ஏவுகணை 10,000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது. R-36M2 Voevoda ரஷ்யாவின் அணு ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாகும். இது பல இலக்குகளை ஒரே நேரத்தில் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டுள்ளது.
02. B83 Nuclear Bomb:
B83 என்பது அமெரிக்காவின் அணு ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள ஒரு தெர்மோநியூக்ளியர் வெடிகுண்டு ஆகும். தற்போதும் பயன்பாட்டில் உள்ள உலகின் மிக சக்திவாய்ந்த குண்டுகளில் ஒன்றாகும். 300 டன் டிரினிட்ரோடோலூயினுக்கு சமமானதில் இருந்து, 1.2 மெகா டன்னுக்கு சமமான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தக்கூடியது ஆகும். B83 வெடிப்பினால் ஏற்படும் அதிர்ச்சி அலையானது 2.5 கிமீ சுற்றளவில் உள்ள உறுதியான கான்கிரீட் கட்டிடங்களை முழுவதுமாக சேதப்படுத்தி 100% உயிரிழப்புகளை ஏற்படுத்தும். 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டமைப்பு ரீதியாக பலவீனமான வீடுகள் மற்றும் கடைகளை தரைமட்டமாக்கும். 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறக்கூடும். இந்த வெடிகுண்டு வெளியிடும் கதிர்வீச்சு இறப்பு மற்றும் காயங்களை அதிகரிக்கும்.
01. Tsar Bomba:
RDS-220 என்றும் அழைக்கப்படும் Tsar Bomba, இதுவரை உருவாக்கப்பட்ட அணு குண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும். சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட பேராபத்தை ஏற்படுத்தும் இந்த சாதனம், அக்டோபர் 30, 1961 அன்று ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நோவாயா ஜெம்லியா தீவில் சோதிக்கப்பட்டது. 50 மெகாடன் டிரினிட்ரோடோலூயினுக்கு சமமான ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த குண்டு, இது இதுவரை வெடித்த அணு குண்டுகளில் மிகவும் சக்தி வாய்ந்தது. சோதனையின்போது 1000 கிமீ தூரத்தில் இருந்தாலும் தெரியும் அளவிலான ஒரு தீப்பிழம்பை ஏற்படுத்தியதோடு, 210,000 அடி உயரத்தை அடைந்த புகைமூட்டத்தை உருவாக்கியது. வெடிக்கும் பகுதியிலிருந்து 55 கிலோ தொலைவிலான பகுதிக தரைமட்டமாக்கப்படும். 160 கிமீ தொலைவில் உள்ள கட்டிடங்கள் சேதமடையக்கூடும். குண்டுவெடிப்பின் வெப்பம் 100 கிமீ தொலைவில் இருக்கும் நபர்களுக்கு கூட மூன்றாம் நிலை தீக்காயங்களை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.மேலும் காண

செம்மரக்கடத்தலில் ஆந்திர காவலரை கொன்ற கும்பல்; முக்கிய நபர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்

ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது காரை ஏற்றி கொலை செய்த கடத்தல் கும்பலின் முக்கிய நபர் விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

செம்மரக்கடத்தல்

ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதிகளில் செம்மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க ஆந்திர அரசு, சிறப்பு அதிரடிப்படையை நியமித்துள்ளது. இந்த படை காவலர்கள் செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர எல்லையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 6ம் தேதி அதிகாலை 3 மணியளவில் அதிரடிப் படையை சேர்ந்த காவலர்கள் திருப்பதி அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டம், கேவி பல்லி மண்டலம், குன்றேவாரி பல்லி கூட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வேகமாக வந்த காரை காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

காவலர் உயிரிழப்பு

அந்த கார், காவலர் கணேஷ் (32) மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த காவலர் கணேஷை, பீலேரு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, அதிரடிப்படை காவலர்கள் விரட்டி சென்று கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் அதில் இருந்த 7 செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.

முக்கிய நபர் நீதிமன்றத்தில் சரண்

இதில் தலைமறைவாக உள்ள ஆறு பேரை தனிப்படை அமைத்து ஆந்திர மாநில காவல்துறையினர் தேடி வரும் நிலையில் முக்கிய நபரான ராமன் விழுப்புரத்தில் உள்ள இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அகிலா முன்பாக சரணடைந்தார். சரணடைந்துள்ள ராமனை நீதிமன்றம் அறையில் அமர வைக்குப்படியும் சிறிது நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.