தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி கண்ணீருடன் புலம்ப. அதை சிவபாலன் கேட்டு பீல் செய்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது ஷண்முகம் வீட்டிற்கு வராமல் ஓரிடத்தில் புலம்பிக் கொண்டிருக்க, வெட்டுக்கிளி அவனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைக்க, “ஷண்முகம் வீட்டிற்கு வந்தா இசக்கி ஞாபகமாவே இருக்கு, நான் வரல” என்று சொல்ல, ”அப்பா ரொம்ப வருத்தப்படுறாரு, வா அண்ணே” என்று கூப்பிட்டும் ஷண்முகம் வர மறுக்கிறான்.

மறுபக்கம் பாக்கியத்துக்கு கை கால் வலியாக இருக்க, வீட்டிற்கு உருவி விட வந்த பாட்டி, “கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு, அடுத்து என்ன?” என்று கேட்க, பாக்கியம் என்ன செய்யறதுன்னு புரியாமல் இருப்பதாக சொல்கிறாள். பாட்டி “நீ மட்டும் உன் புருஷனை விரும்பியா கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த? ஆனால் அவன் கூட சேர்ந்து வாழலையா? அதே மாதிரி தான் சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணு, அவங்களும் நல்லபடியா சேர்ந்து வாழ்வாங்க” என்று சொல்கிறாள்.

இதனைத் தொடர்ந்து பாக்கியம் ஜோசியரை சந்தித்து நாள் குறித்து கொடுக்க சொல்லிக் கேட்க, “இன்னைக்கே நாள் நல்லா தான் இருக்கு” என்று சொல்கிறார். “பையனுக்கு மட்டும் நாள் குறிக்க வந்திருக்கீங்க, பொண்ணுக்கு வேற ஜோசியரைப் பார்த்து நாள் குறிச்சிடீங்களா?” என்று கேட்க, பாக்கியம் “அவங்களுக்கு பிடிக்காமல் கல்யாணம் நடந்ததால் இன்னும் எதுவும் நடக்கல” என்று சொல்ல ஜோசியர் அவங்களுக்கும் நாள் குறித்து கொடுத்து அனுப்புகிறார்.

பாக்கியம் பரணியை வரவைத்து முத்துப்பாண்டி – இசக்கி சாந்திமுகூர்த்தம் குறித்து சொல்ல, பரணி பிடித்து திட்டி வீட்டிற்கு அழைத்து வருகிறாள். இங்க இசக்கி பரணியைப் பார்த்ததும் “அண்ணன் ஏதாவது சொல்லுச்சா?” என்று விசாரிக்க, பரணி எதுவும் சொல்லல என்று சொல்கிறாள். ஜோசியர் சண்முகத்தை பார்க்க பரணியும் பாக்கியமும் சாந்தி முகூர்த்தத்துக்கு நாள் குறிக்க வந்ததாக சொல்ல, பரணியை தப்பாகப் புரிந்து கொண்டு கோபமடைகிறான். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Flashback: கன்னத்தில் முத்தமிட்டால் இந்திரா: சிறப்பாக நடித்தும் தேசிய விருதை மிஸ் செய்த சிம்ரன்! இப்படி ஒரு காரணமா!

Thalapathy: பாட்டுல கூட அரசியலா? – விஜய் பட பிரச்னையால் கோபப்பட்ட விஜய் ஆண்டனி

Month: February 2024

Anna Serial: இசக்கி விஷயத்தில் பாக்கியம் எடுத்த முடிவு: சண்முகத்துக்கு ஏறிய டென்ஷன்: அண்ணா சீரியல் இன்று!

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் அஜ்மல் கான் திருமணம்!

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் அஜ்மல் கான் திருமணம்!

Ravichandran Ashwin 500 Test Wickets List Of Players With Fewest Tests Taken To Reach 500 Wickets | 500 Test Wickets: அதிவேக 500 விக்கெட்! முரளிதரனுக்கு அடுத்து நம்ம அஸ்வின்தான்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
அஸ்வின் 500 விக்கெட்டுகள்:
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது. பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் படி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் சாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவ்வாறாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை கடந்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
அதிவேக டெஸ்ட் விக்கெட்டுகள்:
முத்தையா முரளிதரன்:
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அதாவது தன்னுடைய 87 வது டெஸ்ட் இன்னிங்ஸிலேயே அவர் 500 வது விக்கெட்டை எடுத்து விட்டார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் முத்தையா முரளிதரன் இந்த சாதனையை படைத்தார். இவரது பந்தில் 500 வது விக்கெட்டை பறிகொடுத்தவர் ஆஸ்திரேலிய அணி வீரர் மைக்கேல் காஸ்ப்ரோவிச் ஆவார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்:
இந்த பட்டியலில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தன்னுடைய 98 வது டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார். அதன்படி, அஸ்வின் சுழலில் 500 வது விக்கெட்டுக்கு இரையானவர் இங்கிலாந்து அணி வீரர் சாக் கிராலி.
அனில் கும்ப்ளே:
அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. இவர் தான் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி மொகாலியில் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் கும்ப்ளே இந்த சாதனையை படைத்தார். அதன்படி படி 105 வது டெஸ்டில் கும்ப்ளே கைப்பற்றிய 500 வது விக்கெட் இங்கிலாந்து அணி வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் உடையது.
ஷேன் வார்ன்:
அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணி வீரர் ஷேன் வார்ன். தான் விளையாடிய 108 வது டெஸ்ட் இன்னிங்ஸில் தான் ஷேன் வார்ன் இந்த சாதனையை படைத்தார். அதன்படி, கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹஷான் திலகரத்னாவை வீழ்த்தியதன் மூலம் தன்னுடைய 500 வது விக்கெட்டை பதிவு செய்தார் ஷேன் வார்ன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்:
Player
Team
Matches
Date
Time since debut
முத்தையா முரளிதரன்
இலங்கை
87
மார்ச் 16, 2004
11 வருடங்கள் 201 நாட்கள்
ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்தியா
98
பிப்ரவரி 16, 2024
12 வருடங்கள் 102 நாட்கள்
அனில் கும்ப்ளே
இந்தியா
105
மார்ச் 9, 2006
15 வருடங்கள் 212 நாட்கள்
ஷேன் வார்ன்
ஆஸ்திரேலியா
108
மார்ச் 8, 2004
12 வருடங்கள் 66 நாட்கள்
கிளென் மெக்ராத்
ஆஸ்திரேலியா
110
ஜூலை 21, 2005
11 வருடங்கள் 251 நாட்கள்
கோர்ட்னி வால்ஷ்
வெஸ்ட் இண்டீஸ்
129
மார்ச் 17, 2001
16 வருடம் 128 நாட்கள்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து
129
செப்டம்பர் 7, 2017
14 வருடம் 108 நாட்கள்
ஸ்டூவர்ட் பிராட்
இங்கிலாந்து
140
ஜூலை 24, 2020
12 வருடங்கள் 228 நாட்கள்

"அண்ணாவோட இடத்தை யாரும் REPLACE பண்ண முடியாது"

"அண்ணாவோட இடத்தை யாரும் REPLACE பண்ண முடியாது"

Kajal Aggarwal Photos : நடிகை காஜல் அகர்வாலின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
Kajal Aggarwal Photos : நடிகை காஜல் அகர்வாலின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
Unwanted Test Records England James Anderson Goes Past Anil Kumble Conceding Most Runs By Bowler
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது. பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் படி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
மோசமான சாதனை:
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். அந்த வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேவின் மோசமான சாதனையைத்தான் அவர் முறியடித்து இருக்கிறார். அதாவது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அனில் கும்ப்ளே இந்திய அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இதில் 40 ஆயிரத்து 850 பந்துகள் வீசியுள்ள இவர் 619 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். ஆனால், 18 ஆயிரத்து 355 ரன்களை எதிரணிக்காக விட்டுக்கொடுத்துள்ளார். இச்சூழலில் தான் கும்ப்ளேவின் இந்த மோசமான சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்து இருக்கிறார். அந்த வகையில் 184 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 39 ஆயிரத்து 427 பந்துகள் வீசியுள்ளார்.
696 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் 18 ஆயிரத்து 371 ரன்களை விட்டுக்கொடுத்து இருக்கிறார். அதேநேரம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோருக்குப் பிறகு டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். அதேபோல், 700 விக்கெட்டுகளுக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே இவருக்கு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 500 Test Wickets: அதிவேக 500 விக்கெட்! முரளிதரனுக்கு அடுத்து நம்ம அஸ்வின்தான் – பட்டியலை பாருங்க!
மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: அதிரடியாக சதம் விளாசிய பென் டக்கெட்! தடுமாறிய இந்திய பவுலிங்! பேட்டிங்கில் மிரட்டும் இங்கிலாந்து!

"SIREN படத்துல நிறைய நல்ல விஷயம் இருக்கு"

"SIREN படத்துல நிறைய நல்ல விஷயம் இருக்கு"

The Kerala Story: ஓடிடியில் ரிலீசானது சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி!

சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரள ஸ்டோரி படம் இன்று அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி ஜீ ஃபைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தி கேரள ஸ்டோரி:

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேலோங்கி இருப்பதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து மே 5ஆம் தேதி வெளியான இப்படம் கடும் விமர்சனங்களைப் பெற்று சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்தியில் உருவான இப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படம் தடைசெய்யப்பட்டது.

வெடித்த போராட்டங்கள்:

பல மாநிலங்களில் இப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்த நிலையில், தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாததால் இப்படம் திரையிடப்பட மாட்டாது என மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தெரிவித்து படத்தினை திரையிடுவதை நிறுத்திக் கொண்டன.

மற்றொருபுறம் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் 240 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூலைக் குவித்தது. இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வசூலைக் குவித்தபோதும் முன்னணி ஓடிடி நிறுவனங்கள் எதுவும் முன்வரவில்லை எனத் தகவல்கள் வெளியானது.

எரிச்சல்:

முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த தி கேரளா ஸ்டோரி இயக்குநர் சுதிப்தோ சென், எந்த ஓடிடி தளங்களும் தங்களை அணுகவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதுவரை, நாங்கள் பரிசீலிக்கத் தகுந்த எந்த சலுகையும் வரவில்லை. எங்களை தண்டிக்க திரைப்படத் துறையினர் ஒன்றுகூடி உள்ளனர். எங்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி திரைப்படத் துறையின் பல பிரிவினரை எரிச்சலடையச் செய்துள்ளது. எங்கள் வெற்றிக்காக எங்களை தண்டிக்க பொழுதுபோக்குத் துறையின் ஒரு பகுதி ஒன்றிணைந்ததாக நாங்கள் உணர்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கேரளா, தமிழ்நாடு அரசுகள் தடை கோரிய நிலையில், “மதச்சார்பின்மை மாநிலமான கேரளாவில், மத தீவிரவாதத்தின் மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சங்பரிவார், இப்படத்தின் மூலம் பிரச்சாரத்தை பரப்ப முயற்சிக்கிறது” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடியிருந்தார்.

இன்று ரிலீஸ்:

இதேபோல் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற உலகநாயகன் கமல்ஹாசன் தி கேரளா ஸ்டோரி ஒரு பிரச்சாரத் திரைப்படம் என்றும், தான் பிரச்சாரத் திரைப்படங்களுக்கு முற்றிலும் எதிரானவர் என்றும் கருத்துத் தெரிவித்தைருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் இன்று ஜூ ஃபைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

1200 வருடம் பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு.!
8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம், மற்றும் அருப்புக்கோட்டை ஸ்ரீதர் , தாமரைக் கண்ணன் இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது ,நெய்வனையை அடுத்த பில்ராம்பட்டு கிராமத்தில் வயல்வெளியில் சிற்பம் ஒன்று இருப்பதாக வந்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர்.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வதிடம் பேசுகையில், சேஷ நதிக்கரையின் வடக்கே அமைந்துள்ள பில்ராம்பட்டு ஊரின் வயல்வெளியில் மத்தியில் மரங்கள் சூழ அதன் அடியில் ஒரு பலகை கல்லினால் ஆன சிற்பம் ஒன்று காணப்பட்டது. சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் படைப்பு சிற்பமாகப் பெண் உருவம் காணப்பெறுகிறது. அச்சிற்பத்தைத் தூய்மை செய்து ஆய்வு செய்ததில் அச்சிற்பம் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை என்று கண்டறியப்பட்டது.
கொற்றவையின் கைகளில் அடுக்கடுக்காக வளையல்கள்
வித்தியாசமான உள்ளூர் கலைபாணியில் அமைந்த மகுடம் தலையை அலங்கரிக்க , நீள் வட்டமான முகத்தில் தடித்த உதடுகளும் இரு செவிகளில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் சரப்பளி போன்ற பட்டையான அணிகலனையும், தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான மார்பு கச்சை அணிந்து காட்சியளிக்கிறார். எட்டு கரங்களில் தனது மேல் வலது கரம் சக்கரத்தை ஏந்திய நிலையில் ஏனைய வலது கரங்கள் முறையே வாள் , மணியுடன் மற்றொரு கரம் அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும் , மேல் இடது கரத்தில் சங்கும் ஏனைய கைகள் முறையே வில், கேடயம் ஏந்திய நிலையில் கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. அனைத்து கைகளிலும் அடுக்கடுக்காக வளையல்கள் காட்டப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
1200 வருடம் பழமையான கொற்றவை சிற்பம்
கொற்றவையின் தலையருகே வலது புறம் சூலமும், சிம்மமும் காட்டப்பட்டுள்ள நிலையில் இடதுபுறம் கலைமானும், காலருகே இருபக்கமும் வீரர்கள் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறது. இச்சிற்ப அமைதி மற்றும் அணிகலன்களின் கொண்டு இக்கொற்றவை சிற்பம் கி.பி 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏராளமான கொற்றவை சிற்பங்கள் இப்பகுதியில் ஆவணம் செய்யப்பட்டிருந்தாலும் , இக்கொற்றவையின் தலை மகுடம் எங்கும் காணாத வகையில் தனித்துவமாய் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். சுமார் 1200 வருடம் பழமையான இக்கொற்றவை இன்றும் வயல்வெளியின் மத்தியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.மேலும் காண

Indian Student From Hyderabad Dies Of Cardiac Arrest In Canada and letter to external minister jaishankar
சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது. வழக்கம்போல் வேலை செய்யும் இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
கனடாவில் உயிரிழந்த இந்திய மாணவர்:
இந்த நிலையில், கனடா நாட்டில் இந்திய மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக் முசாமில் அகமதி. இவருக்கு வயது 25. இவர் தனது மேற்படிப்புக்காக கடந்த 2022ஆம் ஆண்டில் கனடாவுக்கு வந்துள்ளார்.
கனடாவில் ஒன்டாரியோவில் உள்ள கோனெஸ்டோகா கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், மாணவர் ஷேக் முசாமில் அகமதி மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் அம்ஜத் உல்லா கான் என்பவர் இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, ”தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷேக் முஸம்மில் அகமது (25), கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கோனெஸ்டோகா கல்லூரியில் ஐடி முதுகலைப் படித்து வந்தார். இவர், கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்:
இந்த நிலையில், இன்று மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக அவரது நண்பரிடமிருந்து அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு வந்தது. இந்தச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் முழு குடும்பமும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவரது உடலை விரைவில் ஹைதராபாத்திற்கு அனுப்புமாறு கனடா அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
.@DrSJaishankar Sir, One Shaik Muzammil Ahmed-25 years from Hyderabad, Telangana State persuing Masters in IT from Conestoga College, Waterloo Campus in Kitchener City in Ontario, Canada since Dec 2022 was suffering from fever since last one week, but his family received a call… pic.twitter.com/hvA1munXaX
— Amjed Ullah Khan MBT (@amjedmbt) February 15, 2024உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு உதவி கோரி கடிதம் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில், “கனடாவில் படித்து வந்த 24 வயதுடைய மாணவர் ஷேக் முசாமில் அகமது மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வந்தது. எனவே, எங்களது மகனின் உடலை சொந்த ஊரான ஹைதரபாத்துக்கு கொண்டு வர உதவு வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Priyanka Gandhi Hospitalized: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா காந்தி! என்னாச்சு?
மேலும் காண

கர்நாடகாவால் அணை கட்டமுடியாது…துரைமுருகன் திட்டவட்டம்…சொல்லும் காரணம் என்ன?

கர்நாடகாவால் மேகதாது அணை கட்டமுடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்ட வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் அனுமதி வேண்டும், அனுமதி பெறாமல் கட்ட முடியாது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்…பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது. பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் படி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் தன்னுடைய 500 வது விக்கெட்டை அஸ்வின் எடுத்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து கூறிவரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் சிகரங்களைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
Vaibav starring ranam trailer is out now released by actor simbu
தனக்கென ஒரு தனி ஸ்டைல் படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் வைபவ். சென்னை 28, மங்காத்தா, ஆம்பள, அரண்மனை 2, லாக் அப், மேயாத மான், மலேசியா டூ அம்னீசியா, ஆலம்பனா, பஃபூன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.
ரணம்:
அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் நகைச்சுவை கலந்த படங்களாகவே இருந்து வந்தன. ஆனால் தற்போது நடிகர் வைபவ் நடித்துள்ள 25வது திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் வைபவ் நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘ரணம்’.
படக்குழு:
மித்ரா மிதுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் நாகராஜன் தயாரிப்பில், ஷெரிஃப் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ள ‘ரணம்’ திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சுரேஷ் சக்கரவர்த்தி, சரஸ் மேனன், பதமன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அருள் கரோலி இப்படத்திற்கு இசையமைக்க பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு பணிகளையும், முனீஸ் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘பொல்லாத குருவி’ பாடலை நடிகர் அசோக் செல்வன் வெளியிட்டார்.
சிம்பு வெளியிட்ட ட்ரெயிலர் :
கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘ரணம்’ திரைப்படம் பிப்ரவரி 23ம் தேதி வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் படத்தின் ட்ரெயிலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதை நடிகர் சிம்பு தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். “அன்பு சகோதரன் வைபவ் நடித்திருக்கும் 25 வது படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல மைல் கற்களை விரைவில் அடைய வேண்டும். கடவுளின் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும்” என குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார் நடிகர் சிம்பு.
ரணம் படத்தில் நடிகர் வைபவ் சடலங்களின் முகத்தை வரையும் கலைஞராகவும், கிரைம் கதை எழுத்தாளராகவும் நடித்துள்ளார். இதுவரையில் வைபவ் நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் அவரின் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் காண

Actor Mansoor Ali Khan Share His Opinion About Actor Vijay Political Party TVK | Actor Mansoor Ali Khan: நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு விருப்பமில்லை
நடிகர்கள் கட்சித் தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டி:
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், ” நான் இதற்கு முன்னர் தொடங்கிய கட்சிக்கு தமிழ் தேசிய புலிகள் என பெயரிட்டிருந்தேன். ஆனால் இந்தியா முழுவதும் முழுமைக்கு தமிழ்நாட்டின் முன்னேற்றம் அடைந்ததாகத் தெரியவில்லை. தமிழ் இனத்தில் முன்னேற்றமில்லை. ஒரு தமிழனை பிரதமராக்க முடியவில்லை. இது தொடர்பாக 24ஆம் தேதி நடத்தவுள்ள மாநாட்டில் விரிவாக பேசவுள்ளேன். வரும் மக்களவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவோம். ஆனால் எத்தனைத் தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் என இன்னும் முடிவு செய்யவில்லை.”
எனக்கு உடன்பாடில்லை:
”நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கே உடன்பாடு இல்லை. என்னை நான் ஒரு நடிகனாகக் கருதவில்லை. கடந்த 1991ஆம் ஆண்டுதான் எனது முதல் படம் வெளியானது. ஆனால் கடந்த 1987, 88 ஆண்டுகளில் மறைந்த ஆதித்தனாரை தமிழர் தலைவர் என அழைத்தற்கு அதனை விமர்சித்து ஒரு பத்திரிகை கடுமையாக எழுதியது. இதனைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது நான் நடனக் கலைஞராக இருந்தேன்.”
”அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்ற காவிரி, இலங்கைப் பிரச்னைகளுக்கான போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆளுநர் மாளிகைக்கு எதிராக கிரிக்கெட் விளையாடச் சென்றேன். அப்போது தமிழ் நாட்டில் மைதானங்களே இல்லை. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல முடியாத காலகட்டம். இதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். நடிப்பு என்பது தொழிலாகத்தான் எனக்கு இருந்தது.”
புதிய கட்சி:
”சமீபகாலமாக நாட்டில் என்ன நடக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு முடிவோடு இறங்கி இருக்கின்றேன், பார்ப்போம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்துள்ளனர். 15 ஆயிரம் பேருக்கு மேல் பொறுப்புகள் போட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளோம். இந்தியா முழுமைக்குமான உரிமைகளுக்கு குரல் கொடுப்போம். எங்கள் கட்சி தேசிய அளவில் இருக்கும். அதற்காக நாங்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. தமிழர்களுக்கான உரிமைகள் பல மறுக்கப்படுகின்றது. ஒக்கிப் புயல் வந்தபோது பல நாட்கள் கடல் நீரில் மீனவர்கள் மிதந்தார்கள். ஆனால் ஒரு ஹெலிகாப்ட்டர் கூட மினவர்களை மீட்கச் செல்லவில்லை. நம்மால் அப்படி இருக்க முடியுமா? மீனவர்கள் யாராவது நம்மை மீட்க வருவார்களா என காத்துக்கொண்டு இருந்தனர்.”
”நான் விடப்போவதில்லை. அதிரடி அரசியல், உரியடி பதவிகள். தேசியக் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதற்காக அவருடன் உடனே சேர்ந்து பயணிக்க முடியாது. அவர் தனது கொள்கைகளைச் சொல்லட்டும், பின்னர் பார்க்கலாம். பல்லாவரத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.”
”தமிழ்நாட்டில் படிப்பறிவு குறைவாக உள்ளது. பார்ப்பதற்கு ஹாலிவுட் பட நடிகர் போல உள்ளார். ஒரு ஜெராக்ஸ் கடை எங்கு உள்ளது எனக் கேட்டால் தெரியவில்லை. இப்படியான நிலையில்தான் தமிழ்நாடு உள்ளது” என மன்சூர் அலிகான் அந்த பேட்டியில் கூறினார்.
மேலும் காண

Ravichandran Ashwin 500 Test Wickets TN CM MK Stalin Actor Dhanush Congratulate Ashwin Incredible Achievement
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்குபவர் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின். இவர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜாக் க்ராவ்லி விக்கெட்டினை கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினை கைப்பற்றிய 9வது சர்வதேச வீரர் என்றும், 500 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சென்னை மண்ணின் வீரர்:
500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வினுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஸ்வினுடன் எடுத்துக்கொண்ட பழைய படத்தினைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் தெரிவித்துள்ள வாழ்த்தில், “ சாதனைகளை முறியடித்து கனவுகளை வெல்லும் சென்னை மண்ணின் வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகள்.
சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தான் வீசும் ஒவ்வொரு சுழற்பந்திலும் பல்வேறு சாதனைகளை உருவாக்கி வருகின்றார். 500 விக்கெட்டுகள் கைப்பற்றி மிகச் சிறப்பான சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார். சென்னை மண்ணின் சொந்த ஜாம்பவானுக்கு இன்னும் பல விக்கெட்டுகளும் வெற்றிகளும் வந்து சேர வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Breaking Records & Crafting Dreams, that’s Chennai’s own boy, @ashwinravi99!With every turn, he weaves a tale of determination and skill, marking a truly SPINtacular milestone!Hats off to Ashwin’s magical spin, masterfully securing his 500th Test wicket in the annals of… pic.twitter.com/5mSv3Wm5Rd
— M.K.Stalin (@mkstalin) February 16, 2024அதேபோல் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ள வாழ்த்து குறிப்பில், வாழ்த்துகள் அஸ்வின். நம்பமுடியாத சாதனையப் படைத்து எங்களை பெருமைப்படுத்திவிட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Congratulations @ashwinravi99 on this incredible achievement. Thank you for making us proud #ashwin500
— Dhanush (@dhanushkraja) February 16, 2024சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 500 விக்கெட்டுகள் கைப்பற்றியதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

Online marriage registration begins in Karnataka on a pilot basis to be extended across State soon | Karnataka Marriage: காதலர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்! ஆன்லைனிலேயே திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்
திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் தம்பதியினர், தங்களின் திருமணத்தைப் பதிவு செய்து கொள்வது என்பது தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், விசா பெறுவது முதல் பல்வேறு விஷயங்களுக்கு திருமண பதிவுச் சான்றிதழ் அவசியம் என்பதல், திருமணமான ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
திருமணச் சான்றிதழ்:
திருமணத்தை பதிவு செய்வதற்கு ஒவ்வொரு மதத்திற்கு ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றன. அத்துடன் சிறப்புச் திருமணச் சட்டமும் இருக்கிறது. இந்த சட்டங்களின் அடிப்படையில் தான் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை 2009ஆம் ஆண்டு முதல் திருமணப் பதிவு செய்வதை கட்டாயமாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் திருமணத்தைப் பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டும். ஆனால், அதற்கு முன்பு, தம்பதியினரின் புகைப்படங்கள் உள்ளிட்ட நகலுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, சார் பதிவாளர் அலுவலகம் வர வேண்டிய தேதி விவரங்கள் அனுப்பப்படும்.
இதனை அடுத்து தான் சார் பதிவாளர் வந்து திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். திருமணம் நடந்து 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதுதான் தமிழ்நாட்டில் தற்போது வரை உள்ள நடைமுறைகள். இதே போன்று, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது.
ஆன்லைனில் திருமணச் சான்றிதழ்:
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஆன்லைனிலேயே திருமணப் பதிவு செய்யும் நடைமுறை நேற்று கொண்டு வரப்பட்டது. திருமண சட்டம் 1955-இன் படி திருமணப் பதிவை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த வசதியை மல்லேஸ்வரம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தொடங்கி வைத்தார். இதன் மூலம், இனிமே சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் இருந்தப்படியே ஆதார் அட்டை, தம்பதியரின் புகைப்படங்கள், திருமணப் புகைப்படங்கள், திருமண வீடியோக்கள், வயது விவரத்திற்கு கல்லூரி, பள்ளி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை சமர்பித்து, ஆன்லைனிலேயே கையெழுத்திட்டு, திருமணப் பதிவு செய்யலாம்.
Now one doesn’t have to visit the sub-registrar’s office for registering their marriage under Hindu Marriage Act. A cerificate is generated at the comfort of home by providing wedding invite,video, Aadhaar. One more step towards transparency and service delivery. #revenue #gok… pic.twitter.com/a233SlXO9l
— Krishna Byre Gowda (@krishnabgowda) February 15, 2024இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கூறுகையில், ”திருமண பதிவு செயல்முறையை நவீனமயமாக்கும் நோக்கில் ஆன்லைனில் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கர்நாடகாவில் 30 சதவீத திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.
இதனால், ஆன்லைனில் திருமணப் பதிவு நடைமுறையை கொண்டு வந்தோம். இந்த நடைமுறை சிறப்பு திருமணப் பதிவுக்கு கிடையாது. இந்த ஆன்லைனில் திருமணப் பதிவு இந்து மதத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த மாத இறுத்திக்குள் மாநில முழுவதும் விரிவுப்படுத்தப்படும்” என்றார்.மேலும் காண

Kanchipuram MLA CVMP Ezhilarasan sat on the floor and discussed with the students who were taking the public examination in the Government Girls’ School – TNN
அரசு மகளிர் பள்ளியில் பயிலும் பொது தேர்வு எழுதும் மாணவியர்களுக்கு எழுது பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்த காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மாணவிகளுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார்
தமிழ்நாட்டில் அரசு பொது தேர்வுகள்
காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழ்நாட்டில் அரசு பொது தேர்வுகள் விரைவில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவ மாணவியர்கள் அரசு பொது தேர்வுக்கான பயிற்சிகளை அதிக கவனமாக கொண்டு வருகின்றனர். மேலும் அரசு பொது தேர்வை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10, +1 மற்றும் +2 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பாட பிரிவுகளுக்கான தேர்வு வினா வங்கி புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குக்கு உட்பட்ட 30 – க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் எழுது பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் .
இந்நிலையில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் காஞ்சிபுரம் நகரில் செயல்பட்டு வரும் ஆற்காடு நாராயணசாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 312 பத்தாம் வகுப்பு மற்றும் 512 பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் என மொத்தம் 824 மாணவிகளுக்கு தேர்வு எழுது பொருட்களான பேனா, பென்சில் , ரப்பர், ஸ்கேல் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
மேலும், அரசு பொது தேர்வுகளை பள்ளி மாணவ, மாணவிகள் எதிர் கொள்ள வேண்டிய செயல்களை எடுத்துரைத்தார். தேர்வு எழுதும் முறைகள் குறித்து ஆசிரியர் தரும் எளிய சிறு குறிப்புகளை கவனமாக கேட்டறிந்து சிறப்பான முறையில் பேர் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மாணவ, மாணவிகளிடம் கேட்டுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மாணவிகளுடன் தரையில், அமர்ந்து அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்ததார்.
இந்தநிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி ஏழரைசன் மாணவிகள் மத்தியில் பேசுகையில், “பொதுத்தேர்வு நெருங்க உள்ள சூழலில் இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. தூங்குகின்ற நேரம் அன்றாட பணிகள் உள்ளிட்ட நேரங்களை கழித்து விட்டு பார்த்தால், ஒரு சில நாட்கள் மட்டுமே மிச்சம் இருக்கும். படிப்பு மட்டுமே அழியாத செல்வம், பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலம் தான். சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி குறிப்பிட்ட காலம் மட்டுமே இருக்கும் ஆனால் நான் படித்த, பொறியாளர் மற்றும் வழக்கறிஞர் படிப்பு என்பது என் வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதுபோல் நீங்களும் படிக்க வேண்டும். தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொழுது சற்று போரடித்தால், அதே பாடத்தை படிக்காமல் வேறு பாடத்தை படிக்கும் பொழுது புத்துணர்ச்சி கொடுக்கும். உங்களுக்கு பிடித்த பாடத்தை படிக்க துவங்குங்கள் என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கும் சென்று எழுது பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகிறார். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.Published at : 16 Feb 2024 07:39 PM (IST)
மேலும் காண

seetha raman serial udapte today february 16th zee tamil written update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸி கல்பனாவை அர்ச்சனா கெட்டப்பில் வீட்டிற்கு அழைத்து வர, மூன்று பெண்களும் கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, சுபாஷ் அது கல்பனா எனத் தெரியாமல் ஐ லவ் யூ சொல்லி கட்டிப்பிடிக்கப் போக, கல்பனா கடுப்பாகிறாள். மூன்று பெண்களும் ஒன்றாக சேர்ந்து கேக் கட் பண்ண சொல்ல, இருவரும் கேக்கை கட் செய்ய, சுபாஷ் ஊட்டி விட்டு முகத்தில் கிரீம் தடவ, சீதா இதைப் பார்த்து “மகா செத்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள இப்படியா, இதெல்லாம் தேவையா?” என்று சத்தம் போட, நான்சி “மகா சாவுக்கு நீ தான் காரணம். உனக்கு தூக்கு தண்டனை வாங்கித் தராமல் விட மாட்டேன்” என்று எச்சரிக்கிறாள்.
பிறகு ரூமுக்குள் செல்லும் கல்பனா, கதவை லாக் செய்து ஸ்மோக் செய்ய, சேது அர்ச்சனாவை கூல் செய்ய மேலே வந்து கதவைத் தட்ட, சிகிரெட்டை தூக்கிப் போட்டு கதவைத் திறக்க, சுபாஷ் ரொமான்டிக்காக நெருங்கி வர, கல்பனா ஒரு அறை விட்டு வெளியே துரத்துகிறாள். உடனே நான்ஸி கல்பனாவை தனது ரூமுக்கு கூப்பிட்டு சுபாஷை அடித்ததற்காகவும் ஸ்மோக் செய்தததற்காகவும் பளாரென அறைகிறாள். “இன்னொரு முறை இப்படி நடந்துக்கிட்டா ஜெயிலுக்குள்ள தான் இருக்கனும்” என வார்னிங் கொடுக்க, இவர்கள் பேசுவதை சீதா பார்த்து விடுகிறாள்.
ஆனால் என்ன பேசிக்கிறாங்க என்று தெரியாமல் கன்ப்யூஸ் ஆகிறாள். அதனைத் தொடர்ந்து ராஜசேகர் ராமை கூட்டிக்கொண்டு அனுபவம் வாய்ந்த தடவியல் நிபுணர் ஒருவரை சந்தித்து துப்பாக்கியைக் கொடுத்து கை ரேகை குறித்து ஆராய்ந்து சொல்ல சொல்கின்றனர்.
அதை ஆய்வு செய்த அவர், “சீதா இந்தத் துப்பாக்கியை ஒரே முறை தான் எடுத்து சுட்டு இருக்கா, திரும்பவும் அவ இந்த துப்பாக்கியையே தொடல” என்று சொல்ல, ராம் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Flashback: கன்னத்தில் முத்தமிட்டால் இந்திரா: சிறப்பாக நடித்தும் தேசிய விருதை மிஸ் செய்த சிம்ரன்! இப்படி ஒரு காரணமா!
Thalapathy: பாட்டுல கூட அரசியலா? – விஜய் பட பிரச்னையால் கோபப்பட்ட விஜய் ஆண்டனிமேலும் காண

கந்தசாமி கோயிலில் மாசி கிருத்திகை..! அரோகரா அரோகரா கோஷம் போட்ட பக்தர்கள்..!

மாசி கிருத்திகை திருப்போரூர் முருகன் கோவிலில் பல்வேறு காவடிகளில் பக்தர்கள் நான்கு மாத வீதிகளிலும் வளர்ந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்ம உற்சவத்துடன் கூடிய மாசி கிருத்திகை வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் நேற்று (15-ஆம் தேதி) முருகன் கோயில் உயர் கோபுரம் மண்டபத்திற்கு வெளியில் உள்ள வட்டம் மண்டபத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தங்க கொடி மராத்தில் கொடி ஏற்றப்பட்டது. தினமும் முருகப்பெருமானுக்கு காலை, மாலை நேரங்களில் தீப தூப ஆராதனை ஆராதனை செய்து முருகப்பெருமான் நான்கு மாத வீதிகளிலும் உலா வந்து பக்தர் காட்சி அளிக்கிறார்.

மாசி கிருத்திகை திருப்போரூர் முருகன் கோவிலில் பல்வேறு காவடிகளில் பக்தர்கள் நான்கு மாத வீதிகளிலும் வளர்ந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்

பிரம்ம உற்சவத்துடன் கூடிய மாசி கிருத்திகை மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது மாசி கிருத்திகையை ஒட்டி அதிகாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் அதிகாலை முதலே மொட்டை அடித்து அலகுகுத்தி காவடி எடுத்து நான்கு மாட வீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். அதிகாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் இரவு விடிய விடிய பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்தி காவடி எடுத்து பல்வேறு உருவத்தில் முருகப்பெருமானை அலங்கரித்து அரோகரா அரோகரா கோஷமிட்ட பாரு ஆண்கள் பெண்கள் என்ன பலரும் காவடி ஆடி வழிபாடு செய்து வருகின்றனர். கோயில் கோயில் உள்ள அரங்கிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

வெளியூர்களில் இருந்து வந்த முருகன் பக்தர்கள் 4 மாடவீதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின் காவடி மண்டபத்திலிருந்து, பால் காவடி, பண்ணீர்காவடி, சந்தன காவடி, புஷ்பகாவடி உள்ளிட்ட பல விதமான காவடிகளை சுமந்தபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட விதிகளின் ஆட்டம் பட்டத்துடன் ஆடி மகிழ்ந்தனர்.

ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்ம உற்சவத்துடன் கூடிய மாசி கிருத்திகை வெகு விமர்சையாக நடைபெறும்.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காலை முதல் ஓஎம்ஆர் சாலை யில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர், மருத்துவத் துறையினர், சுகாதாரத் துறையினர், காவல் துறை நண்பர்கள் குழுவினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மாத வீதிகளிலும் பல்வேறு அமைப்பினர் வாழை இலையில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இரவில் பூத வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். திருப்போரூர் முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவும் நடைபெற்று வருவதால் தற்பொழுது கோவில் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.

Dindivanam town has become like Sahara desert admk CV Shanmugam alleges – TNN | சஹாரா பாலைவனம் போல திண்டிவனம் நகரம் மாறிவிட்டது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 33 மாத திமுக ஆட்சியில் மக்கள் வேதனை அடைந்துள்ளதாக சிவி.சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்படவில்லை, சாலை அமைக்கப்படவில்லை, குடிநீர், தெருவுக்கு உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும் நகராட்சி நிர்வாகம் முடங்கி இருப்பதாக குற்றம் சாட்சி அதிமுக சார்பில் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம்:
நேற்று ஸ்டாலின் வருகிறார் விடியல் தரப்போகிறார் என பேசினார்கள். ஆனால் திமுகவுக்கும், ஸ்டாலின் குடும்பம் தான் வளர்ச்சி அடைந்தது. தற்போது மீண்டும் ஸ்டாலின் குரல் என பேசி வருகிறார்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக அரசு பொறுப்பேற்று 33 மாதங்கள் ஆகிறது, இந்த 33 மாதங்களில் சாதனை எதுவும் இல்லை, இது மக்களுக்கு சோதனையும், ஏமாற்றமும் தான் மிஞ்சியுள்ளது.
சஹாரா பாலைவனம்
திண்டிவனம் நகராட்சியில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் நகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. திண்டிவனம் நகர் முழுவதும் புழுதி பறக்கிறது. சஹாரா பாலைவனம் போல திண்டிவனம் நகரம் மாறிவிட்டது. இதற்கு நகராட்சி நிர்வாகமும், நகர மன்ற தலைவரும், ஆணையரம்தான் காரணம். திமுக நகரமன்ற தலைவர் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் நகராட்சி ஆணையரும் பதில் சொல்ல வேண்டும் என பேசினார்.மேலும் காண

என்னால் மூச்சு விட முடியல…என்ன காப்பாத்துங்க… மலேசியாவிலிருந்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட இளைஞர்

கள்ளக்குறிச்சி: மலேசியாவில் வேலைக்கு சென்ற இடத்தில் உடல்நிலை சரியில்லாததால், தன்னை தாயகம் அழைத்து வர வேண்டுமென முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட இளைஞர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது மண்டகப்பாடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த இரண்டாம் தேதி மலேசியாவில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வேலைக்கு சென்ற நாள் முதல் தனக்கு மலேசியாவின் தட்பவெப்ப நிலை ஒத்துப்போகவில்லை எனவும்,இதன் காரணமாக உடம்பில் கொப்பளங்கள் வருகிறது எனவும், மூச்சு திணறல் ஏற்படுகிறது என்றும் தமது பெற்றோர்களிடம் தெரிவித்த பிரவீன் குமார், மேலும் தன்னை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறியுள்ளார். ஆனால் ஏஜென்டு மூலமாக வேலைக்குச் சென்றதால் அழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சருக்கும், வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சருக்கும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கும் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் இளைஞர் பிரவீன் குமார் .

அந்த வீடியோவில், தான் மலேசியாவிற்கு வேலைக்காக வந்ததாகவும் ஆனால் வந்த இடத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் உடலில் கொப்பளங்கள் வருகிறது எனவும் கூறி தன்னை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். இதே போல தனது மகனை மீட்டு தர வேண்டும் என பிரவீன் குமாரின் தாய் தந்தை ஆகிய இருவரும் கைகூப்பி மண்டியிட்டு வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இளைஞரை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா காந்தி! என்னாச்சு?
Priyanka Gandhi Hospitalized: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது நடை பயணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பாரத் ஜடோ நியாய யாத்திரை:
காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார். இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.
மணிப்பூரில் யாத்திரையை தொடங்கிய அவர், தற்போது பீகார் மாநிலத்தில் சென்றிருக்கிறார். கடந்த சில தினங்களாக அவர் நடை பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்றுடன் பீகார் மாநிலத்தில் அவருடைய நடைபயணம் முடிவடைகிறது.
இன்று காலை பீகார் மாநிலம் சசராமில் ராகுல் காந்தியை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் அவரை வரவேற்றார். அதன்பின், இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, உத்தர பிரதேசத்திற்கு செல்ல இருக்கிறார் ராகுல் காந்தி.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா காந்தி:
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக உத்தர பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை உத்தர பிரதேச வரும் ராகுல் காந்தியுடன் பாத் ஜடோ நியாய யாத்திரையில் பங்கேற்பதாக தெரிவித்திருந்தார் பிரியங்கா காந்தி.
I was really looking forward to receiving the BJNY in UP today but unfortunately, have ended up admitted to hospital. I will be there as soon as I am better! Meanwhile wishing all the yatris, my colleagues in UP who have worked hard towards making arrangements for the yatra and…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 16, 2024இந்த நிலையில் தான், பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “நான் இன்று உ.பி.யில் பாரத் ஜடோ நியாய யாத்திரையில் பங்கேற்பதாக இருந்தேன்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என் உடல்நிலை சரியானதும் யாத்திரையில் பங்கேற்பேன். யாத்திரையில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். என் இனிய சகோதரர் சந்தௌலி பகுதியை அடைந்து வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும் படிக்க
நெருக்கடி தரும் ED.. சிக்ஸர் அடித்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு!மேலும் காண

In Villupuram, the accused who stole a goat at night was caught red-handed by the police | Crime: விழுப்புரத்தில் இரவு நேரத்தில் ஆடு திருடிய ஆசாமி
விழுப்புரம் : கண்டமங்கலத்தில் ஆட்டுப்பட்டியிலுள்ள இரும்பு ஷீட்டினை உடைத்து ஆறு ஆடுகளை திருடிய நபரை கண்டமங்கலம் போலீசார் கையும் களவுமாக கைது செய்து ஆறு ஆடுகளை பறிமுதல் செய்தனர்.
ஆடுகளை திருடிய மர்ம நபர்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் ஆறுமுகம் என்பவர் ஆந்திராவிலிருந்து ஆடுகளை வாங்கி வந்து கண்டமங்கலம் புதுச்சேரி பகுதியில் செயல்படும் ஆட்டு கறி கடைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ஆந்திராவிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன் ஆடுகளை வாங்கி வந்த ஆறுமுகம், கண்டமங்கலத்திலுள்ள தனது ஆட்டுபட்டியில் விட்டு விட்டு, இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை ஆட்டு பட்டிக்கு ஆறுமுகம் வந்து பார்த்தபோது ஆட்டுபட்டியின் கம்பிகளை உடைத்து உள்ளே இருந்த ஆறு ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிவந்தது.
ஆடுகளை திருடிய ஆசாமி கைது
இதனையடுத்து ஆடு திருட்டு சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தபுகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில் கண்டமங்கலத்தை சார்ந்த சுகுராஜ் என்ற நபர் ஆடுகளை திருடி சென்று அருகிலுள்ள திருபுவனையில் ஆட்டு கறி விற்பனை செய்யும் கடையில் இன்று ஆடுகளை விற்பனைக்காக கொண்டு சென்றபோது கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரனையில் சுகுராஜ் கண்டமங்கலம் பகுதியில் தொடர்ந்து ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்தது விசாரனையில் தெரியவந்தது.மேலும் காண

Vladimir Putin Critic Russian Opposition Leader Alexei Navalny Dies in Prison AFP News Agency | Alexei Navalny: புதினை எதிர்த்தா கதை அம்பேல்? ரஷிய எதிர்க்கட்சி தலைவர் மர்ம மரணம்
ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் மர்ம மரணம் அடைவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, ரஷிய அதிபர் புதினை விமர்சிக்கும் தலைவர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்து வருவது உலகளவில் பரபரப்பை கிளப்பி வருகிறது. சமீபத்தில், புதினுக்கு எதிராக உள்நாட்டில் கிளர்ச்சியை தொடங்கிய, வாக்னர் கூலிப்படையின் தலைவர் எக்னி பிரிகோசின், விமான விபத்தில் மர்மமான முறையில் இறந்தார்.
ரஷிய எதிர்க்கட்சி தலைவர் மர்ம மரணம்:
அந்த வரிசையில், புதினை கடுமையாக விமர்சித்து வந்த ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார். 19 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அலெக்ஸி நவல்னி, ஆர்க்டிக் சிறை காலனியில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அலெக்ஸி நவல்னி மரணம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறை நிர்வாகம், “நடைபயிற்சி சென்று வந்த நவல்னி, உடனடியாக சுயநினைவை இழந்தார். மருத்துவ ஊழியர்கள் உடனடியாக வந்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அவரை சுயநினைவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவை நேர்மறையான முடிவுகளைத் தரவில்லை. நவல்னியின் மரணத்தை சுகாதார பணியாளர்கள் உறுதி செய்தனர். மரணத்திற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என தெரிவித்துள்ளது. இந்த மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாக ரஷிய விசாரணை குழு தெரிவித்துள்ளது.
பகீர் கிளப்பும் கொலை முயற்சிகள்:
நவல்னியின் ஊடக செயலாளர் கிரா யர்மிஷ், இதுகுறித்து கூறுகையில், “அவரது மரணம் குறித்து எங்களின் குழுவுக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. நவல்னியின் வக்கீல் இப்போது கார்ப்பிற்கு சென்று கொண்டிருக்கிறார். அங்குதான், சிறை உள்ளது” என்றார். இந்த மரணம் குறித்து ரஷிய அதிபர் புதினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷியாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவராக உள்ள நவல்னி, புதின் அரசாங்கத்தில் ஊழல் நடப்பதாக தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வந்தார். இதன் காரணமாக, அவருக்கு பெரும் ஆதரவு பெருகியது. குறிப்பாக, நவல்னியின் யூடியூப் வீடியோக்கள், லட்சக்கணக்கான பார்வைகளை குவித்தது.
ரஷியாவில் போராட்டத்தில் ஈடுபட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், நவல்னியின் வீடியோவை பார்த்து வெகுண்டெழுந்த மக்கள், தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜெர்மனியில் இருந்து ரஷியாவுக்குத் திரும்பிய பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை கொல்ல பல முறை முயற்சி நடந்துள்ளது. ஜெர்மனியில் அவரை கொல்ல விஷ ஊசி போட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதிலிருந்துதான் அவர் தப்பியுள்ளார். இதை தொடர்ந்து, பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.
மேலும் காண

"மனத்திரையில் நீயே காதலாய் ஓடிக்கொண்டிருக்கிறாய்" உதயம் தியேட்டர் இடிப்பு குறித்து பேரரசு உருக்கம்!

சென்னையின் மிக முக்கியப்பகுதியாக உள்ள அசோக் நகரில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 ஸ்கிரீன்களுடன் கடந்த 1983 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தியேட்டர் உதயம் தியேட்டர் என்ற மக்கள் மத்தியில் பரீட்சயமானது.

இடிக்கப்படும் உதயம்:

சென்னை மட்டுமல்லாது வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற தியேட்டராகவும் திகழ்ந்தது. உண்மையில் இந்த தியேட்டரால் ஏழை, எளிய மக்கள் சினிமா பார்க்கும் கனவு நிஜமானது என்பதே உண்மை.

பொதுவாக தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கிருக்கும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக தியேட்டர்கள் திகழ்கின்றன. உணர்வுகளால் நம்மை கட்டிப்போட்ட பங்கு அந்த 3 மணி நேர காட்சிகளுக்கு உண்டு. அப்படிப்பட்ட தியேட்டர்கள் காலப்போக்கிற்கு ஏற்றவாறு அப்டேட் வெர்ஷனாக மாற்றப்பட்டாலும், பல பிரபல தியேட்டர்கள் திருமண மண்டபம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆக கட்டப்பட்டது சோகத்திலும் சோகமான நிகழ்வு தான்.

இதயத்தோடு நெருங்கிய உதயம்:

இப்படியான நிலையில் சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சினிமா ரசிகர்களும் கூட இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் பேரரசு இது குறித்து தெரிவித்துள்ளதாவது:

”நான் சென்னையில் முதன்முதலாக படம் பார்த்த தியேட்டர் ‘உதயம்’. பார்த்த படம் ரஜினி நடித்த படிக்காதவன். அதனை தொடர்ந்து பாண்டியராஜன் நடித்த ஆண் பாவம். அதன் பிறகு உதவி இயக்குனராக பணியாற்றிய காலகட்டங்களில் நாயகன் உட்பட அதிகப்படியான படங்களை பார்த்தது உதயம் தியேட்டரில்தான். நான் இயக்கிய சிவகாசி, தர்மபுரி, திருவண்ணாமலை, பழனி, திருத்தணி போன்ற அனைத்து படங்களும் உதயத்தில்தான் ரிலீஸ் ஆனது.

என் இதயத்தோடு சம்பந்தப்பட்டது உதயம். இன்று உதயம் தியேட்டர் இடிக்கப்பட போவதாக வந்த செய்தியால் இதயம் இடிபட்டது.ஏதோ மனம் கனத்துப் போனது.

உன் வெண்திரையில் எத்தனையோ காதல் படங்கள் ஓடியிருக்கும்,,

இன்று எங்கள் மனத்திரையில் நீயே காதலாய் ஓடிக்கொண்டிருக்கிறாய்…
சூரிய உதயத்திற்குத்தான் அஸ்தமனமென்றால்,
தியேட்டர் உதயத்திற்கும் அஸ்தமனமா?
சென்னை என்றதுமே ஒருசில இடங்களை வாழ்க்கையில் மறக்கவே முடியாது.

அதில் முக்கியமான ஒன்று உதயம் தியேட்டர்
உதயமே! உன்மீது எந்தக் கட்டிடம் வந்தாலும் எங்கள் கண்ணுக்கு நீதான் அழியாத ஓவியமாய் தெரிவாய்..” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

Selvaraghavan: மம்மூட்டியைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

Jayam Ravi: விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா? நடிகர் ஜெயம் ரவி பரபரப்பு பதில்

நெருக்கடி தரும் ED.. சிக்ஸர் அடித்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு!
மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.
கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், கட்சியின் செய்தித்தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயரை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என கடந்த சில நாள்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், இதுவரை அதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு:
இப்படிப்பட்ட சூழலில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 6 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்படும் என அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி முதலமைச்சர் விரைவில் கைது செய்யப்படுவார் எனக் கூறி பாஜக உறுப்பினர்கள் தங்களை அணுகியதாக இரண்டு ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் என்னிடம் கூறினர்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலக ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மேலும் பலர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் எம்எல்ஏக்களிடம் தெரிவிக்கப்பட்டது. பாஜகவில் சேர, எம்.எல்.ஏ.,க்களுக்கு, 25 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளனர்.
டெல்லியில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’:
ஆனால், பணம் வேண்டாம் என எம்.எல்.ஏ.க்கள் என தெரிவித்தனர். மற்ற எம்எல்ஏக்களிடம் பேசியபோது, அவர்கள் 21 எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ளவில்லை என தெரிய வந்தது. 7 பேரை மட்டுமே தொடர்பு கொண்டுள்ளனர். பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர ஆபரேஷன் லோட்டஸை அமல்படுத்த முயற்சிக்கின்றனர்.
மதுக்கொள்கை ஊழல் மோசடியே அல்ல. மற்ற மாநிலங்களில் உள்ளது போல் பொய் வழக்குகள் போட்டு எங்கள் கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி என்பது தெளிவாகிறது. இவர்களின் நோக்கம் விசாரணை நடத்துவது அல்ல, மதுபானக் கொள்கை வழக்கு என்ற போர்வையில் நமது தலைவர்களை கைது செய்வதே.
ஏற்கனவே சிலரை கைது செய்துள்ளார்கள். டெல்லியில் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று அவர்களுக்குத் தெரியும் என்பதால், ஆட்சியைக் கவிழ்ப்பதே அவர்களின் நோக்கம்” என்றார்.
மேலும் காண

IND Vs ENG 3rd Test Day 2 Highlights England Trail By 238 Runs Agianst India Saurashtra Cricket Association Stadium
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது.
ரோகித், ஜடேஜா, சர்ப்ராஸ்:
முன்னதாக, இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா 196 பந்துகள் களத்தில் நின்று 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 131 ரன்களை குவித்தார். அதேபோல், ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 225 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 112 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியின் மூலம் அறிமுக வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் களம் இறங்கிய சர்பராஸ் கான் 66 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் என 62 ரன்களை குவித்தார்.
இதனிடையே இரண்டாவது நாள் ஆட்டத்தில் துருவ் ஜூரல் சிறப்பாக விளையாடி 46 ரன்களை எடுத்தர். அஸ்வின் 37 ரன்களும், ஜஸ்ப்ரித் பும்ரா 26 ரன்களும் எடுக்க இவ்வாறாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
சதம் விளாசிய பென் டக்கெட்
இந்நிலையில் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் அஸ்வின் வீசிய 13 வது ஓவரின் முதல் பந்தில் கிராவ்லி தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.
இதனிடையே, அதிரடியாக விளையாடி வந்த இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட் சதம் விளாசினார். அவர் 118 பந்துகளில் 21 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 133 ரன்களுடன், ஜோ ரூட்டுடன் களத்தில் இருக்கிறார். இவ்வாறாக இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் படிக்க: Sarfaraz Khan: சர்ஃபராஸ் கான் ரன் அவுட்.. கடுமையாக சாடிய ரசிகர்கள்! வருத்தம் தெரிவித்த ஜடேஜா!
மேலும் படிக்க: Most Test Wickets: 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்! டெஸ்ட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் யார்? லிஸ்ட் இதோ!

Urbanrise World of joy launching 1 2 and 3 BHK premium gated community apartments at Chennai Siruseri with 150 plus amenities
உலகத்தரம் வாய்ந்த குடியிருப்புகளை கட்டி பெயர் பெற்ற Urbanrise நிறுவனம், சென்னை சிறுசேரியில் (Siruseri) பலதரப்பட்ட வசதிகளுடன் பிரம்மாண்டமான குடியிருப்புகளை கட்டியுள்ளது. மக்களின் நம்பிக்கையை பெற்ற Urbanrise நிறுவனம், சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கும் வகையில் அப்பார்ட்மெண்டை கட்டியுள்ளது.சென்னைவாசிகளுக்கு அடித்த ஜாக்பாட்:
சென்னை சிறுசேரியில் 10.13 ஏக்கர் நிலபரப்பில் MIVAN தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூரில் இருந்து 10 நிமிட தொலைவில் கேட்டட் கம்யூனிட்டியை கட்டியுள்ளது Urbanrise குடியிருப்பு நிறுவனம். The World of Joy என்ற பெயரில் ஜீரோ பர்சன்ட் வேஸ்டேஜ் உடன் அப்பார்ட்மெண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, வாடிக்கையாளர்களின் அப்பார்ட்மெண்டில் ஒரு சதுர அடி நிலபரப்பு கூட வீண் செய்யாமல் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது. 1BHK, 2 BHK, 3 BHK பிரீமியம் ஹோம்களாக குடியிருப்புகள் விற்கப்பட்டு வருகிறது. 150க்கும் மேற்பட்ட வசதிகளுடன் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரிலாக்ஸ் செய்ய ஏதுவான இடங்களும் அப்பார்ட்மெண்டில் கட்டப்பட்டுள்ளது. இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு அப்பார்ட்மெண்டின் ரூப் டாப்பிலும் சிறப்பான வசதிகள் இருக்கும் வகையில் Urbanrise The World of Joy வடிவமைத்துள்ளது.
58 லட்ச ரூபாயில் அசத்தலான குடியிருப்புகள்:
மொத்தமாக 75,000 சதுர அடி நிலபரப்பில் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது. மினி சினிமா தியேட்டர், பார்பிக்யூ (சமைப்பதற்காக பிரத்யேகம் பயன்படுத்தப்படும் பகுதி), வெளியே உட்கார்ந்து அமரும் வகையில் டைனிங், குழந்தைகளுக்கான கேமிங் ஸோன், இணைந்து பணியாற்றி வகையில் கோ வொர்க்கிங் ஸ்பாட், யோகா செய்வதற்கான ஸ்பாட் உள்பட எக்கச்சக்க வசதிகளுடன் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது.
1BHK பிரீமியம் ஹோம்களின் விலை 30 லட்ச ரூபாயுடன் தொடங்குகிறது. 2BHK ரெகுலர் ஹோம்கள் 48.5 லட்சம் ரூபாயுடனும் 2BHK லார்ஜ் ஹோம்களின் விலை 51 லட்சம் ரூபாயுடன் தொடங்குகிறது. 3BHK ரெகுலர் ஹோம்கள் 58 லட்சம் ரூபாயுடனும் 3BHK லார்ஜ் ஹோம்களின் விலை 61 லட்சம் ரூபாயுடன் தொடங்குகிறது.
மேலும் காண

"மேகதாதுவில் அணை கட்ட அனைத்தும் தயார்" கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா அதிரடி!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் எனக் கூறி தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை பொருட்படுத்தாத கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வர, தமிழக அரசும் அதை எதிர்த்து சட்டரிதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

தொடர் சர்ச்சையை கிளப்பும் மேகதாது அணை:

இப்படிப்பட்ட சூழலில்தான், கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜகவை தொடர்ந்து கர்நாடகாவில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசும், மேகதாது விவகாரத்தில் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்ட அனைத்தும் தயார்நிலையில் உள்ளதாக கர்நாடக அரசு பட்ஜெட் தாக்கலின்போது அறிவிப்பு வெளியிட்டிருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மேகதாது மட்டும் இன்றி கலசா – பந்தூரி, மேல் கிருஷ்ணா, மேல் பத்ரா மற்றும் எட்டிஹனோல் உள்பட பல்வேறு பாசன, குடிநீர் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "காவிரி ஆற்றின் குறுக்கே லட்சிய திட்டமான மேகதாது அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த தனித் திட்டப் பிரிவு மற்றும் இரண்டு துணைப் பிரிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

கர்நாடக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு:

இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிலத்தை கண்டறிய ஆய்வு நடத்தப்படும். மரங்களை எண்ணும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதியை பெற்ற பிறகு, பணிகளை முன்கூட்டியே தொடங்க முன்னுரிமையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கலசா – பந்தூரி நாலா மாற்றுத் திட்டத்தின் கீழ் 3.9 டிஎம்சி தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் வன அனுமதியை எதிர்பார்த்து மாநில அரசு டெண்டர் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியக் கூட்டத்தில், வன அனுமதி வழங்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. கர்நாடகாவின் செயல்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு உரிய பதிலடி தர வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறது.

இதையும் படிக்க: Tirupati Lion Kills: செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட விபரீதம்.. துரத்தி துரத்தி தாக்கிய சிங்கம் : திருப்பதியில் அதிர்ச்சி சம்பவம்

Selvaraghavan: மம்மூட்டியைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

நடிகர் மம்மூட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவில் இயக்குநர் செல்வராகவன் கமெண்ட் செய்தது வைரலாகி வருகிறது.

பிரம்மயுகம்

மம்மூட்டி நடித்து நேற்று திரையரங்கில் வெளியான திரைப்டம் "பிரம்மயுகம்". பூதக்காலம் படத்தை இயக்கிய ராஹுல் சதாசிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அர்ஜூன் அசோகன், அமல்டா லிஸ், மற்றும் சித்தார்த் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிர்ஸ்டோ ஸேவியர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளார். ஹாரர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என்று படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின்போது நடிகர் மம்மூட்டி தெரிவித்திருந்தார்.

பிரம்மயுகம் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மேலும் இப்படம் மலையாள சினிமாவில் ஒரு பெரிய மலை கல்லாக அமையும் என்று பலர் கூறிவருகிறார்கள். மம்மூட்டி நடித்து சமீபத்தில் வெளியான ‘காதல் தி கோர்’ படமும் சிறப்பான வெற்றிபெற்ற நிலையில், தற்போது பிரம்மயுகம் படமும் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மலையாள சினிமாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்தும் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்வு செய்து நடிக்கும் மம்மூட்டியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

உங்களுடைய மிகப்பெரிய ஃபேன்

View this post on Instagram

A post shared by Mammootty (@mammootty)

தமிழில் தளபதி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், பேரன்பு உள்ளிட்டப் படங்களில் நடித்த மம்மூட்டிக்கு தமிழில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த பலர் மம்மூடியின் ரசிகர்கள்தாம். அந்த வகையில் இயக்குநர் செல்வராகவன் மம்மூட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ” நான் உங்களுடைய மிகப்பெரிய ஃபேன் சார்” என்று செல்வராகவன் மம்மூட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவில் கமெண்ட் செய்துள்ளார்.

பிரம்மயுகம் போஸ்டரை மம்மூட்டி பகிர்ந்துள்ள நிலையில், வாவ் சார்.. பிரமிப்பாக உள்ளது” எனவும் கமெண்ட் செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மம்மூட்டி நடித்து வரும் படங்கள்

பிரம்மயுகம் படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி டர்போ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்தப் போஸ்டரில் மம்மூட்டி கருப்புச் சட்டையில் முற்றிலும் ரக்கடான ஒரு லுக்கில் காணப்படுகிறார். புலி முருகன் படத்தை இயக்கிய இயக்குநர் வைசாக் இந்தப் படத்தை இயக்குகிறார். மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி ஃபிலிம் கம்பேனி இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

Senthil Balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிப்பு…எந்த தேதி வரை தெரியுமா?
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியில் நீதிமன்ற காவலை 21-வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், ஜூன் 14-ஆம் தேதி கைதான செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும் காண

24 year old MTech student found dead in IIT Delhi hostel cops suspect suicide | IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! கதிகலங்க வைக்கும் மாணவர்களின் மரணம்
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
மாணவர் தற்கொலை:
இந்த நிலையில், டெல்லி ஐஐடி கல்லூரியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரியில் எம்.டெக் படித்து வந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான மாணவர், டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தான் மாணவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தன்று, சக மாணவர்கள் அறையின் கதவை நீண்ட நேரமாக திறக்க முயன்றார். கதவு திறக்க முடியாததால், விடுதி காப்பாளரிடம் தெரிவித்தனர்.
தூக்கில் தொங்கிய மாணவர்:
விடுதி காப்பாளர் கதவை உடைத்து அறையில் பார்த்தபோது, மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தது சஞ்சய் நெர்கர் (24) மாணவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “மாணவரின் பெற்றோர்கள் வியாழன்கிழமை இரவு அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் மாணவர் பதிலளிக்காததால், விடுதி காப்பாளரிடன் பெற்றோர் கூறியிருக்கின்றர். இதனை அடுத்து தான், மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது” என்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை – 600 028. தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)மேலும் படிக்க
TNPSC Members Appointment: டிஎன்பிஎஸ்சிக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்; அரசு அறிவிப்பு- யார் யார்?
Crime: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் மர்ம மரணம்! சடலமாக மீட்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்! என்னாச்சு?மேலும் காண

Rakul Preet Singh Photos : திருமண மலர்கள் தருவாயா..நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
Rakul Preet Singh Photos : திருமண மலர்கள் தருவாயா..நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிப்பு…எந்த தேதி வரை தெரியுமா?
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியில் நீதிமன்ற காவலை 21-வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், ஜூன் 14-ஆம் தேதி கைதான செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் காண

Annamalai: தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும் தேதி மாற்றம்! காரணம் என்ன? அண்ணாமலை பேட்டி

என் மண் என் மக்கள் நிறைவு விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சி இருப்பதால், பிரதமரின் வருகை தேதியை உறுதி செய்த பின் தேதி அறிவிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

யாத்திரை:

சென்னை ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். வழக்கறிஞர்களுக்கு உள்ள சிக்கல்கள், பிரச்சனைகள் என்னென்ன என்பது குறித்தும், மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கும் நீதித்துறைக்கும் என்னென்ன செய்துள்ளது ,இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் மட்டுமின்றி மூத்த வழக்கறிஞர்கள் நீதித்துறையில் பணியாற்றுபவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேடையில் பேசுகையில், “ யாத்திரையில் 200 தொகுதிகளை தாண்டி இன்று சென்னையில் நின்று கொண்டு இருக்கின்றோம். யாத்திரை என்றால் மாறுதல் என்று பொருள். இசை கலைஞர்கள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர், ஜோமாட்டோ-ஜூவிக்கி ஊழியர்களை சந்தித்துள்ளோம்.

வழக்காடு மொழி:

காற்று எப்படி வீசினாலும், யார் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீதி துறை செயல்பட்டு கொண்டு இருக்கிறது. நீதி வழங்கப்படுவது மக்களுக்கும் தெரியும் வகையில் தற்போது மாறி உள்ளது. தமிழகத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என நமது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

2022 ஆம் ஆண்டு பிரதமர் உரையில் இந்தியாவில் உள்ள அந்தந்த மாநிலங்களின் தாய் மொழிகளுக்கு ஏற்றவாறு நீதிமன்ற வழக்காடு மொழிகளை கொண்டு வரவேண்டும் என பேசியுள்ளார். உச்சநீதிமன்றமும் அரசு இணைந்து வழக்காடு மொழிகளாக அவரவர்களின் தாய் மொழியை கொண்டுவர வேண்டும் என எதிர்பார்த்து இருக்கிறோம்.

வழக்கறிஞர்கள் நலன்:

நீதித்துறையில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு இருக்கும் சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 1824 சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியும் சிலவற்றையும் நீக்கியும் உள்ளோம். ஆந்திராவில் வாகன ஆய்வாளராக இருக்க வேண்டும் என்றால், தூய்மையான பற்களை கொண்டு இருக்க வேண்டும் என, சட்டமிருந்தது. அதுபோன்ற சட்டங்களை தான் இன்று நீக்கி உள்ளோம்.

மத்திய அரசின் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களின் மீது ஒரு தரப்பினர் தொடர்ந்து வழக்கு தொடுக்கின்றனர். புதிய நாடாளுமன்றம், ரபேல், பணமதிப்பிழப்பு, பெகாசஸ் போன்று பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிப்பட்டுள்ளது. பாஜக புதுமையாக கொண்டு வந்துள்ள திட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தால் அதனையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். டில்லியில் பார்கவுன்சிலுக்கு ரூ.100 கோடி அம்மாநில அரசு வழங்கி உள்ளது. அதுபோல 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் வழக்கறிஞர்களின் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

அயோத்தி ராமர் கோயிலில் ஒரு ஆண்டுக்குள் 5 மக்கள் செல்வர் என கணிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் இதன் மூலம் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சி இருக்கும். இதன் மூலம் அம்மாநில அரசிற்கு ரூ 25000 கோடி வரி வருவாய் கிடைக்கும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.1500 கோடி ரூபாய் கட்டப்பட்ட குழந்தை ராமர் கோயிலால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இருப்பது போல், வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்புச் சட்டம் தேவைப்படும் சூழல் உள்ளது என்றார்.சிஸ்டத்தை சரியாக வைத்து விட்டு செல்ல வேண்டும். அதை சரியாக செய்து விட்டால் அடுத்து வருபவர்கள் சரியாக செயல்படுவார்கள்.

கூட்டணி யாருடன்?

அதனை தொடர்து செய்துயாளர்களிடம் பேசிய அவர், “ இதுவரைக்கும் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட வில்லை. முறையான நேரத்தில் அதற்கு உரியவர்களால் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். "தேர்தல் பத்திரம்" தகவல் அறியும் சட்டத்திற்கு எதிராக உள்ளதால் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.

பத்திரம் மூலமாக பஜகவிற்கு 52 சதவீதம் நிதி பெறப்படுகிறது. பத்திரம் மூலமாக திமுகவிற்கு 91 சதவீதம் நிதி பெறப்படுகிறது .தேர்தல் செலவுகளை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் பத்திரம் முறை கொண்டுவரப்பட்டது. திமுகவிற்கு தமிழகத்தில் இருந்து மட்டும் 600 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது. பாஜக ஒரு மாநிலத்தில் சராசரியாக 220 கோடி ரூபாய் தான் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றுள்ளது.

தேர்தல் செலவினங்களை வரையறுப்பது மிகவும் முக்கியம் மேலும் தேர்தல் நிதியை பணமாக செலவு செய்யாமல் காசோலையாகவும் தேர்தல் பத்திரமாகவும் செலவு செய்வதன் மூலம் அதனை வருமான வரி துறையின் கண்காணிப்பில் கொண்டு வர முடியும்.

பிரதமர் வரும் தேதி மாற்றம்:

தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்ததை முழுமையாக ஏற்கிறோம். ஆனால் இதில் மாற்றங்கள் செய்து மீண்டும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற பாஜக முயற்சி செய்யும். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது 5500 பாஜக வேட்பாளர்களுக்கு காசோலை மூலமாக தேர்தல் நிதி கொடுத்த ஒரே கட்சி பாஜக தான்.

என் மண், என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் கலந்து கொள்வது உறுதி.ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் இருப்பதன் காரணமாக பிரதமர் கலந்து கொள்ளும் தேதி மாற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதிற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜகவை குறை கூறுவதை விட்டுவிட்டு அவர்களது பணியை பார்க்க வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. இதனை திமுகவினர் வாய் திறந்து சொல்ல மாட்டார்கள். திமுகவால் தான் தமிழகம் தேய்ந்து போகிறது திமுகவால் தான் தமிழகம் பின்னோக்கி செல்கிறது கோபாலபுரம் குடும்பத்தால்தான் தமிழகம் அழிகிறது தமிழகத்தின் முதல் குடிமகன்களாக தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பெரும் முதல் நபர்களாக மாற்றுத்திறனாளிகள் இருப்பார்கள். 2026ல் பாஜக தேர்தல் அறிக்கையாகவும் இது இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Congress party will participate in the Bharat Bandh today to support the farmers’ protest rahul gandhi to meet farmers
Farmers Protest : விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று காங்கிரஸ் கட்சி பாரத் பந்தில் கலந்துக்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள நிறைவேற்றுவது தொடர்பாக நடைபெற்ற, மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்படி காங்கிரஸ் கட்சிக்கு விவசாயிகள் சங்கம் நேற்றைய தினம் அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று இன்று நடக்கும் பாரத் பந்தில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்கிறது.
காங்கிரஸ் தெரிவிப்பது என்ன?
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிப்ரவரி 15 அன்று விவசாயிகள் அளித்துள்ள பாரத் பந்த் அழைப்பிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளின் அழைப்புக்கு கட்சி ஆதரவாக இருப்பதாகவும், இன்று (பிப்ரவரி 16 ஆம் தேதி) சசரத்தில் விவசாயிகளை ராகுல் காந்தி சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “விவசாயிகளின் பாரத் பந்த் அழைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். சசரத்தில் ராகுல் காந்தி விவசாயிகளை இரண்டு மணி நேரம் சந்திக்கிறார். விவசாயிகளுடனான அமைச்சர்களின் சந்திப்பு வெறும் நாடகம். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. இது வருத்தமளிப்பது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கது. பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் 35வது நாள் இன்று. நாங்கள் ரோஹ்தாஸில் இருக்கிறோம். இன்று அவுரங்காபாத்தில் மெகா பேரணி நடத்தப்படும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை கைவிடும்போது, வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக செல்வதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால், 2021 ஆம் ஆண்டு சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என டெல்லி எல்லையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள், கொக்கி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டெய்னர்கள் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, வாகனங்களின் டயர்களை பஞ்சராக்குவதற்கு சாலைகளில் ஆணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு எல்லையில், 64 கம்பெனி துணை ராணுவப்படையினரும், 50 கம்பெனி ஹரியானா போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, காக்கர் ஆற்றுப்படுகையில் பள்ளங்களும் தோண்டட்டுள்ளன. ட்ரோன்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இவற்றை எல்லாமும் மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் அடங்குவர்.மேலும் காண

Ashwin Test Wickets: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்; சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500வது விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இவர் இந்த சாதனையை 98வது டெஸ்ட்டில் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 500 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அஸ்வின் தனது 500வது விக்கெட்டாக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கார்வ்லேவை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்தார்.

திருப்போரூர் கந்தசாமி கோயில் தேர் விழாவுக்காக நடந்த சமாதான கூட்டம்

நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டாம் ஆண்டு திருப்போரூர் ஆதி திராவிடர் குடியிருப்பு மக்கள் வசிக்கும் பகுதிக்கு முருகர் தேர் செல்வது சம்பந்தமாக அனைத்து சமூகத்தினர் சமாதான கூட்டம் மாமல்லபுரம் டிஎஸ்பி தலைமையில் திருப்போரூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் ( thiruporur kandaswamy temple )

செங்கல்பட்டு ( Chengalpattu News ): செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் மாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வாக கிருத்திகை, தேர்த்திருவிழா, தெப்ப திருவிழா உள்ளிட்ட விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.

திருத்தேர் திருவிழாவின் மறுநாள் 22 ஆம் தேதி பரிவேட்டை உற்சவம் ஆலத்தூர் கிராம பகுதிக்கு இரவு நேரத்தில் நடைபெறும். அந்த பரிவேட்டை நிகழ்வு அடுத்த நாள் ஆலத்தூரில் இருந்து முருகப்பெருமான் தண்டலம், மேட்டு தண்டலம் உள்ளிட்ட இடங்களில் அருள் பலித்து இறுதியாக 23ஆம் தேதி திருப்போரூர் ஆதிதிராவிடர் பகுதி மக்கள் வசிக்கும் படவட்டம்மன் கோயில் தெரு பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு 400ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவின் படி இரண்டாம் ஆண்டாக செல்ல உள்ளது.

கடந்த ஆண்டு முருகர் உற்சவம் தேர் திருவிழா ஆதிதிராவிடர் பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400 ஆண்டுகளுக்கு பிறகு சென்றது பின்னர் அப்பகுதி மக்கள் திருவிழாவாக கொண்டாடி முருகப் பெருமானை வழிபாடு செய்தனர்.

அதேபோன்று இந்த ஆண்டும் வரும் 23ஆம் தேதி ஆதிதிராவிடர் வசிக்கும் படவேட்டம்மன் கோயில் தெரு பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு முருகப்பெருமான் தேர்வு செல்வதை பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம். அரியரை வழங்கியது அதன் அடிப்படையில் இன்று மாமல்லபுரம் டிஎஸ்பி ரவிஅபிராம் தலைமையில் அனைத்து சமூகத்தினர் ஆலோசனைக் கூட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஆலத்தூர் தண்டலம் பூந்தண்டலம் திருப்போரூர் மற்றும் ஆதிதிராவிடர் பகுதி மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் பங்கேற்றனர்.

இதில் கடந்த ஆண்டு நீதிமன்ற உத்திரப்படி படவேட்டம்மன் கோவில் தெரு பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் தேர் வீதிஉலா வந்தது. அதில் ஒரு சில சலசலப்பு ஏற்பட்டது. இந்தாண்டு அப்பகுதிக்கு சுமூகமாக சென்று, அப்பகுதி மக்கள் வழிபாடு செய்த பின் மீண்டும் கோவில் வந்தடையும் வரை அனைத்து சமூக மக்களிடம் சம்பந்தமான சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் அன்றைய தினம் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sun tv Ethirneechal serial today episode february 16 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 15) எபிசோடில் வீட்டு பெண்களை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு எப்படியாவது அவர்களையும், ஜீவானந்தத்தையும் பழி வாங்க வேண்டும் என முன்னேற்பாடுகளுடன் காய் நகர்த்துகிறார் குணசேகரன். அந்த வகையில் நேற்று அவர்கள் அனைவரையும் கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களின் நிலையை பார்த்து தர்ஷன், கதிர், ஞானம் மற்றும் சக்தி என அனைவரும் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். ஆனால் அது எதையுமே பொருட்படுத்தாமல் கர்வமாக நிற்கிறார் குணசேகரன்.
சாருபாலா என்ட்ரி:
கோர்ட்டில் பெண்கள் தரப்பில் வழக்கை எடுத்து நடத்த சாருபாலா என்ட்ரி கொடுக்கிறார். அவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். எதிர்தரப்பு வக்கீல் தேவையே இல்லாமல் ஈஸ்வரியின் கடந்த கால வாழ்க்கை என அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சொல்லி, குணசேகரன் மிகவும் நல்லவர் என்றும் ஈஸ்வரிக்கு அனைத்து சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார் என்ற போக்கில் வாதாடுகிறார். அடுத்ததாக ரேணுகாவை விசாரிக்க அழைக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வீடியோ மூலம் தர்ஷினி:
எந்த தப்புமே செய்யாத பெண்களை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து, குற்றவாளிகளாக முத்திரை குத்த பிளான் போடுகிறார் குணசேகரன். அவர்கள் அனைவரையும் எதிர் தரப்பு வக்கீல் விசாரணை செய்கிறார். அப்போது அவர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் தர்ஷினி வீடியோ மூலம் வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறாள். அதை கேட்டு குணசேகரன் கூட கலங்குகிறார். அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் பெண்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.வீடியோ மூலம் வந்த தர்ஷினி அப்படி என்ன சொல்லி இருப்பாள்? இது அனைத்தும் குணசேகரன் சதி திட்டமாக இருக்குமோ? இதை தான் சில எபிசோட்களுக்கு முன்னர் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என சொன்னாரா? தர்ஷினி பழி அனைத்தையும் அம்மா மற்றும் சித்திகள் மீது சுமத்த போகிறாளா? அவளுக்கு பின்னால் இருந்து ஆட்டி வைப்பது யார்? குணசேகரன் கலங்குவது போல் நடிப்பது எதற்காக? இப்படி பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தர்ஷினி காணாமல் போனதை பற்றியும், அவளை தேடும் படலம் ஒரு பக்கம் இருக்க குணசேகரனுக்கு எதிராக திரும்பிய தம்பிகள் சார்ந்த கதைக்களம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. தர்ஷினி பற்றிய தகவலறிய ரசிகர்களும் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். இப்படி விறுவிறுப்பாக நகர்ந்து வந்த சூழலில் திடீரென ஒரு ட்விஸ்ட் வைத்து தர்ஷினியை வீடியோ மூலம் காட்டி அதன் மூலம் அடுத்த இடியை இறக்கியுள்ளார் இயக்குநர். இது ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. அடுத்து எதிர்நீச்சலில் (Ethirneechal ) என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.
மேலும் காண

Tamil Nadu latest headlines news till afternoon 16th February 2024 flash news details here | TN Headlines: 15 நாட்களில் 1253 பேருக்கு அரசுப்பணி! 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலை
CM MK Stalin: ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம்; 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு‘மக்களுடன் முதல்வர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்வான இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரங்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
TNPSC: அடடே… 15 நாட்களில் 1253 பேருக்கு அரசுப்பணி; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு- விமர்சனங்களுக்கு பதிலா?2024ஆம் ஆண்டில் பிப்ரவரி 1 முதல் 15 வரையிலான 15 நாட்களில் 1253 பேர், அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி, தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்யும். மேலும் படிக்க
TNPSC Members Appointment: டிஎன்பிஎஸ்சிக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்; அரசு அறிவிப்பு- யார் யார்?டிஎன்பிஎஸ்சி அமைப்பின் புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், ஐஆர்எஸ் அதிகாரி சரவண குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார், முனைவர் பிரேம் குமார் ஆகிய 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து 6 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
TN Weather Update: 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும்.. வெப்பநிலை அதிகரிக்கும் எச்சரிக்கை..கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் படிக்க
Thiruvallur Lok Sabha Constituency: திருவள்ளூர் மக்களவை தொகுதி – எந்த கட்சிக்கு சாதகம்? இதுவரை சாதித்தது யார்? தேர்தல் வரலாறுநாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். மேலும் படிக்க
மேலும் காண

திருப்போரூர் கந்தசாமி கோவில் தேர் விழா! டி.எஸ்.பி. தலைமையில் அனைத்து சமுதாய கூட்டம்!

நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டாம் ஆண்டு திருப்போரூர் ஆதி திராவிடர் குடியிருப்பு மக்கள் வசிக்கும் பகுதிக்கு முருகர் தேர் செல்வது சம்பந்தமாக அனைத்து சமூகத்தினர் சமாதான கூட்டம் மாமல்லபுரம் டிஎஸ்பி தலைமையில் திருப்போரூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது

திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் ( thiruporur kandaswamy temple )

செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் மாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வாக கிருத்திகை, தேர்த்திருவிழா, தெப்ப திருவிழா உள்ளிட்ட விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.

திருப்போரூர் திருவிழா:

திருத்தேர் திருவிழாவின் மறுநாள் 22 ஆம் தேதி பரிவேட்டை உற்சவம் ஆலத்தூர் கிராம பகுதிக்கு இரவு நேரத்தில் நடைபெறும் அந்த பரிவேட்டை நிகழ்வு, அடுத்த நாள் ஆலத்தூரில் இருந்து முருகப்பெருமான் தண்டலம், மேட்டு தண்டலம் உள்ளிட்ட இடங்களில் அருள்பாலித்து இறுதியாக 23ஆம் தேதி திருப்போரூர் ஆதிதிராவிடர் பகுதி மக்கள் வசிக்கும் படவட்டம்மன் கோவில் தெரு பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு 400 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவின் படி இரண்டாம் ஆண்டாக செல்ல உள்ளது.

முருகன் தேர் திருவிழா:

கடந்த ஆண்டு முருகர் உற்சவம் தேர் திருவிழா ஆதிதிராவிடர் பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் நீதிமன்றம் உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400 ஆண்டுகளுக்கு பிறகு சென்றது. பின்னர் அப்பகுதி மக்கள் திருவிழாவாக கொண்டாடி முருகப் பெருமானை வழிபாடு செய்தனர்.

அதேபோன்று இந்த ஆண்டும் வரும் 23ஆம் தேதி ஆதிதிராவிடர் வசிக்கும் படவேட்டம்மன் கோவில் தெரு பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு முருகப்பெருமான் தேர் செல்வதை பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியது. அதன் அடிப்படையில் இன்று மாமல்லபுரம் டி.எஸ்.பி. ரவி அபிராம் தலைமையில் அனைத்து சமூகத்தினர் ஆலோசனைக் கூட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆலத்தூர் தண்டலம் பூந்தண்டலம் திருப்போரூர் மற்றும் ஆதிதிராவிடர் பகுதி மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் பங்கேற்றனர்.

இதில் கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி, படவேட்டம்மன் கோவில் தெரு பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் தேர் வீதி உலா வந்தது. அதில் ஒரு சில சலசலப்பு ஏற்பட்டது. இந்தாண்டு அப்பகுதிக்கு சுமூகமாக சென்று, அப்பகுதி மக்கள் வழிபாடு செய்த பின் மீண்டும் கோவில் வந்தடையும் வரை அனைத்து சமூக மக்களிடம் சம்பந்தமான சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் அன்றைய தினம் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கிக் கணக்குகள்; தற்காலிகமாக செயல்பட வருமானவரித்துறை தீர்ப்பாயம் ஒப்புதல்
அகில இந்திய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியதாக இன்று அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கென் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ராகுல் காந்தி தனது கண்டனங்களையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக முறையிடப்பட்டது. இதனால், வருமானவரித்துறை தரப்பில் இருந்து தற்காலிகமாக வங்கிக் கணக்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர், அஜய் மக்கென் கூறுகையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தை நசுக்கும் செயல். இது தொடர்பாக வருமானவரித்துறையை நாடியபோது, கடந்த 2018 -2019 ஆம் நிதியாண்டின் செலவு கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக காங்கிரஸ் சமர்ப்பித்ததாக தெரிவித்தற்காக தற்போது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக கூறியதாக கூறினார். மேலும் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக நிதி பெறும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. முடகப்பட்ட கணக்குகளில் ரூபாய் 210 கோடி உள்ளது எனக் கூறினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், பயப்படாதீர்கள் மோடிஜி. காங்கிரஸின் பலம் பணத்தில் இல்லை. காங்கிரஸின் பலம் மக்கள்தான். ஜனநாயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை காங்கிரஸ் கட்சியினர் பலமாக எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.மேலும் காண

samantha replies to fan calling her a failure and commenting her divorce with naga chaitanya
சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்தார். இந்த படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 2017-ஆம் ஆண்டு இருவீட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். நாகசைதன்யா மற்றும் சமந்தாவின் திருமணம் இந்திய சினிமாவின் முன்னணி திரைப்பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
விவாகரத்து
தென் இந்திய சினிமாவின் புகழ்பெற்ற தம்பதிகளாக இருந்து வந்த நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக முடிவுசெய்து கொள்ளப்போவதாக பரஸ்பரம் முடிவு எடுத்து அதை அறிக்கையாக வெளியிட்டனர். அவர்களின் இந்த முடிவு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த விவகாரத்திற்கான காரணத்தை இருவருமே வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
அவர்களின் பிரிவுக்கு பல்வேறு விஷயங்கள் காரணங்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகளாக பரவி வந்தன. ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் ஐட்டம் பாடலான ‘ஊ சொல்றியா மாமா…’ பாடலுக்கு பயங்கரமாக நடனமாடி இருந்தார் நடிகை சமந்தா. அதுதான் அவர்களின் விவாகரத்துக்கு காரணம் என சில செய்திகள் பரவின. இது தொடர்பாக சமந்தா அளித்த விளக்கத்தில்..
“என்னுடைய விருப்பம் எது, வெறுப்பு எது என்பதை நான் புரிந்துகொள்ளாததுதான் நான் செய்த பெரிய தவறாக நினைக்கிறன். என்னுடைய பார்ட்னரின் தாக்கம் தான் அதில் அதிகமாக இருந்தது. நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மோசமாக நேரத்தில் கூட பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் உணர்ந்தபோதுதான் நான் தனிப்பட்ட வளர்ச்சியைப் பெற்றேன்” என்று கூறியுள்ளார்
மையோசிட்டிஸ்
இதனைத் தொடர்ந்து சமந்தா மையோசிட்டிஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. தொடர்ச்சியான திரைப்பட தோல்விகள், உடல் நிலை காரணமாக சினிமாவில் இருந்து ஒரு வருட காலம் ஓய்வு எடுக்க இருப்பதாக சமந்தா தெரிவித்தார். தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக தனது ரசிகர்களுடன் உரையாடி வரும் சமந்தா பல்வேறு விமர்சனங்களையும் வசைகளைம் எதிர்கொண்டு வருகிறார். சமீபத்தில் நெட்டிசன் ஒருவர் சமந்தாவை மிகவும் கடுமையாக விமர்சித்து கமெண்ட் செய்துள்ளதும், அதற்கு சமந்தா மிக பொறுமையாக பதிலளித்துள்ளதும் கவனம் பெற்றுள்ளது.
இவ்வளவு வெறுப்பு எதற்கு?சமந்தாவின் பதிவில் கமெண்ட் செய்த நெட்டிசன் “நீங்கள் ஏன் உங்கள் கணவரை விட்டு பிரிந்தீர்கள். வாழ்க்கையில் தோற்ற ஒருவரிடம் இருந்து எனக்கு அட்வைஸ் தேவையில்லை” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த சமந்தா “இவ்வளவு வெறுப்பை உங்களிடம் உருவாக்கும் நோயிலிருந்து நீங்கள் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார்
மேலும் காண

Kanchipuram news Sunguvarchatram Panchayat councilor son murder case pmk member released video saying he and his family’s lives are in danger – TNN | திமுக பிரமுகர் கொலை வழக்கு; உயிருக்கு பாதுகாப்பு இல்லை
ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமனில் வெளிவந்த பாமக பிரமுகர் தனக்கும் தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் டோம்னிக் (53). திமுக பிரமுகர். இவரது மனைவி குமுதா ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களது மகன் ஆல்பர்ட் (28) சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எடுக்கும் தொழில் செய்து வந்தார்.
தொழில் போட்டி
இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் சுரேஷுக்கும் ஆல்பர்ட்டுக்கும் ஸ்கிராப் எடுப்பதில் தொழில் போட்டி ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்தாண்டு எட்டாம் மாதம் வல்லம் சிப்காட்டில் இருந்த ஆல்பர்ட்டை மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டு வீசி சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்தது.
பிரபல ரவுடி மணியின் கூட்டாளிகள்
இந்த கொலை வழக்கில் எச்சூர் பகுதியை சேர்ந்த சுரேஷ், தாம்பரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மணியின் கூட்டாளிகள் மாதவன், செந்தில்குமார் அஸ்வின் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் நிபந்தனை ஜாமினில் கடந்த இரண்டாம் தேதி வெளியே வந்தார்.
ஆல்பர்ட்டின் கூட்டாளிகள்
இதனை அறிந்த ஆல்பர்ட்டின் தந்தை டோம்னிக் சுரேஷை பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் அடுத்த கோட்டையூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரிடம் சுரேஷை கொலை செய்ய ரூ.15 லட்சம் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் டோம்னிக், அவரது கார் ஓட்டுநர் தேவன், கூலிப்படை தலைவன் முருகன், கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த நவீன், ஆல்பர்ட்டின் கூட்டாளிகள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.கொலை செய்ய முயற்சி
இதற்கிடையே நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக உள்ள சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை டோம்னிக் திட்டம் போட்டு கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார், ஆல்பர்ட் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் வெளியே உள்ளனர். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் டோம்னிக் மூலம் ஆபத்து உள்ளது. தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் டோம்னிக் , அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ், திமுக பிரமுகர் போஸ்கோ தான் காரணம் என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே பிணையில் வந்த சுரேஷ் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாததால் தலைமறைவாக உள்ள சுரேசை போலீசார் தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

TN Weather Update: 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும்.. வெப்பநிலை அதிகரிக்கும் எச்சரிக்கை..

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை (பிப்ரவரி 17), தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

16.02.2024 மற்றும் 17.02.2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Rahul Gandhi Tours Bihar In Jeep Wrangler, Tejashwi Yadav In Driver’s Seat | Rahul Gandhi: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜடோ நியாய யாத்திரையில் பிஹார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார்.
ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜடோ நியாய யாத்திரை கடந்த 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. மேகாலயா, ஜார்கண்ட்.அஸ்ஸாம், மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களை அடுத்து பிஹாரில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள சசரம் (Sasaram) பகுதியிலிருந்து தொடங்கிய பயணத்தில் ராஷ்டிரிய ஜனதா தள (Rashtriya Janata Dal) தலைவர் தேஜஸ்வி யாதவ் ராகுல் காந்தியுடன் இணைந்துள்ளார்.
சிகப்பு நிற காரில் ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி கார் ஓட்டிச்செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நிதிஷ் குமார், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், பிஹாரில் ராகுல் காந்தியின் பயணம் பெரிது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணிக்கு கைமூரில் (Kaimur) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் தேஜஸ்வியும் உரையாற்ற உள்ளனர்.
सासाराम, #बिहार से भारत जोड़ो न्याय यात्रा की आज की शुरुआत @RahulGandhi pic.twitter.com/2EFQnuEmRg
— Tejashwi Yadav (@yadavtejashwi) February 16, 2024I.N.D.I.A. கூட்டணியிலிருந்து பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளிய பிறகு,தேஜஸ்வி யாதவ் ராகுல் காந்தியுடன் இணைந்து பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது.
ராகுல் காந்தியில் நியாய யாத்திரை பிகாரை அடுத்து இன்று மாலை உத்தர பிரதேசத்தின் சண்டெளலி (Chandauli) பகுதியை அடைகிறது. அங்கு நடைபெறும் பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர், எம்.பி. பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து, ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியிலான இந்த பயணம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரில் முடிவடைந்தது.
பாரத் ஜடோ நியாய யாத்திரை
ராகுல் காந்தி பாரத் நியாய யாத்திரை என்ற பெயரில் தனது இரண்டாவது கட்ட நடைபயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த பயணம் மும்பையில் முடிவடைய உள்ளது.மேலும் காண

vijay tv siragadikka aasai february 16th episode update | Siragadikka Aasai: மீனாவுக்கு தெரிய வந்த உண்மை.. சிக்கப்போகும் முத்து
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
முத்து சத்யாவை அடிக்க கை ஓங்குகிறார். அதற்குள் நர்ஸ் உள்ளிடோர் அறைக்குள் வந்து விடுகின்றனர். பின் முத்து அங்கிருந்து சென்று மது அருந்துகிறார். சத்யா சொன்னதையெல்லாம் தன் நண்பரிடம் சொல்கிறார் முத்து. ”இவனை விட பெரிய பெரிய ஆளெல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கிறவன்டா நான்” என்கிறார் முத்து. போதையில் வருத்தப்பட்டு தன் நண்பரிடம் பேசுகிறார் முத்து.
சத்யா சிட்டிக்கு போன் செய்து “நாம் விஜயாவிடம் இருந்து பணம் அடித்தது மாமாவுக்கு தெரிந்து விட்டது” என சொல்கிறார். “எதாச்சி பண்ணா சொல்லு நம்ம பசங்க கிட்ட சொல்லி 2 தட்டு தட்ட சொல்லலாம்” என்கிறார் சிட்டி. அதெல்லாம் வேண்டாம் என்கிறார் சத்யா. ஸ்கேன் ரிப்போர்ட்டில் சத்யாவின் கை எலும்பு உடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
சீதா மீனாவிடம், “அக்கா உடனே ஆப்ரேஷன் பண்ணனுமா. 30 ஆயிரம் கட்ட சொல்லி இருக்காங்க” என்கிறார். மீனாவிடம் வெறும் 6 ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது. மாமாக்கிட்ட கேட்டு பாரு என்கிறார் சீதா. மீனா முத்துவுக்கு போன் செய்கிறார். ஆனால் முத்து போனை எடுக்கவில்லை. அவரின் நண்பர் எடுத்து பேசுடா எதாவது பிரச்சனையா இருக்க போகுது என சொல்கிறார். ஆனாலும் முத்து போனை எடுக்கவில்லை. “அவரு போன் எடுக்கல, கார் ஓட்டிக்கிட்டு இருக்காருனு நெனைக்குறேன்” என்கிறார் மீனா.
”அண்ணாமலை மாமா கிட்ட கேட்டு பார்க்கலாமா?” என்கிறார் சீதா. ”ஏய் வேணாடி அவங்க சும்மாவே எதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க. இப்போ காசு கேட்டு போயி நிண்ணா இதுக்குதான் பொண்ணை கட்டிக்குடுத்தியானு” கேப்பாங்க என்கிறார் மீனாவின் அம்மா. பின் மீனாவும் அவரின் அம்மாவும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் போன் செய்து காசு கேட்கின்றனர்.
மீனாவுக்கு தெரிந்தவர்கள் சத்யாவை பார்க்க மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களிடம் மீனா காசு பற்றி கேட்கிறார். ”அதற்கு அவர்கள் அந்த டாக்டர் ரொம்ப நல்லவர் ஏழைங்களுக்கு எல்லாம் உதவி பண்ணுவாரு. நீ போய் பேசி பாரு” என சொல்கின்றனர். பின் மீனா அந்த டாக்டரிடம் சென்று பேசுகிறார். மருத்துவரும் பணத்தை தவணை முறை கட்டச் சொல்கிறார்.
டாக்டர் மீனாவிடம் ”அவன் ஏதோ அடிதடிக்கு போயிருக்கான்மா அவனை யாரோ பலமான போர்ஸ் கொடுத்து கையை முறுக்கி இருக்காங்க” என்று சொல்கிறார். சத்யா கல்லூரிக்கு செல்ல முடியாது என எண்ணி சத்யாவின் குடும்பத்தினர் வருத்தப்படுகின்றனர். பின் டாக்டர் சொன்னதை மீனா குடும்பத்தினரிடம் சொல்கிறார். சத்யாவும் தன் கையை முறுக்கி விட்டதாக சொல்கின்றார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.மேலும் காண

Lok Sabha Election 2024 Tiruvallur Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | Thiruvallur Lok Sabha Constituency: திருவள்ளூர் மக்களவை தொகுதி
Thiruvallur Parliamentary Constituency: திருவள்ளூர் மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். அந்த வகையில் மாநிலத்தின் முதல் தொகுதியான, திருவள்ளூர் மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாற்றை சற்றே விரிவாக அலசி ஆராயலாம்.
திருவள்ளூர் மக்களவை தொகுதி உருவான வரலாறு:
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி (Thiruvallur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் முதலாவது தொகுதி ஆகும். 1950-களிலேயே திருவள்ளூர் மக்களவை தொகுதி என ஒன்று இருந்தது. ஆனால், அதில் இருந்த சட்டமன்ற தொகுதிகள் என்பன வேறானவை. ஆனால், மொழிவாரி மாநிலங்கள், புதிய மாவட்டங்கள் உருவானது ஆகிய காரணங்களால் காலப்போக்கில் திருவள்ளூர் என தனி மக்களவை தொகுதி இல்லாமலே போனது. இந்நிலையில் தான், கடந்த 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்படி, திருவள்ளூர் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. இதில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி( தற்போது தனி தொகுதி), திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
திருவள்ளூர் மக்களவை தொகுதி எப்படி:
தமிழ்நாட்டில் உள்ள 7 தனி தொகுதிகளில் திருவள்ளூரும் ஒன்று. அதாவது, பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தொகுதி ஆகும். தனித்தொகுதியாக உருவாக்கப்பட்ட திருவள்ளூர் மக்களவை தொகுதியில், சென்னை நகரின் சில பகுதிகளும், புறநகர் பகுதிகளும் அடங்கும். கும்மிடிபூண்டி, பொன்னேரி தவிர மற்ற பகுதிகளில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இவற்றில் பணியாற்றும் பணியாளர்களும், தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் தொகுதி இது. அதாவது வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஒன்று என கூறலாம். ஆந்திரமாநிலத்தின் எல்லையை ஒட்டி இருப்பதால் இங்கு தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம். ஆதிதிராவிட மக்களும் வன்னியர்களும் கணிசமாக உள்ளனர்.
தொகுதியின் பிரச்னை என்ன?
தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பினும், இந்த தொகுதியின் பெரும்பகுதி விவசாயத்தை நம்பி உள்ளது. நெல், பருப்பு வகைகள் மற்றும் நிலக்கடலை ஆகியவை முக்கிய பயிர் வகைகளாக உள்ளன. அடையாறு மற்றும் கூவம் ஆற்றைக்காட்டிலும் பெரிய ஆறாக சொல்லப்படும் கொசஸ்தலை ஆறும், திருவள்ளூரில் இருந்தாலும் இங்கு தண்ணீர் பிரச்னை என்பது தலையாய பிரச்னையாக உள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதும், சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் இங்கு கொட்டப்படுவதும் நீண்டநாள் பிரச்சனையாக உள்ளன.
திருவள்ளூர் மக்களவை தொகுதி தேர்தல் வரலாறு:
பழைய திருவள்ளூர் மக்களவை தொகுதியில் 1951, 1957 மற்றும் 1962ம் ஆண்டுகளில் என மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அந்த அனைத்திலுமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தான் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதேநேரம், 2008ம் ஆண்டு புதியதாக உருவாக்கப்பட்ட பிறகு திருவள்ளூர் தொகுதிக்கு இதுவரை, மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு முறை அதிமுக வேட்பாளரும், ஒருமுறை திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
1951
மரகதம் சந்திரசேகர்
காங்கிரஸ்
1957
ஆர். கோவிந்தராஜுலு நாயுடு
காங்கிரஸ்
1962
வி. கோவிந்தசாமி நாயுடு
காங்கிரஸ்
2009
வேணுகோபால்
அதிமுக
2014
வேணுகோபால்
அதிமுக
2014
ஜெயக்குமார்
காங்கிரஸ்
வாக்காளர்கள் விவரம் (2024):
ஆண் வாக்காளர்கள் – 10,10,968
பெண் வாக்காளர்கள் – 10,46,755
மூன்றாம் பாலினத்தவர் – 375
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
கும்மிடிப்பூண்டி – கோவிந்தராஜன் (திமுக)
பொன்னேரி – துரை சந்திரசேகர் (காங்கிரஸ்)
பூந்தமல்லி – கிருஷ்ணசாமி (திமுக)
திருவள்ளூர் – வி.ஜி. ராஜேந்திரன் (திமுக)
ஆவடி – நாசர் (திமுக)
மாதவரம் – சுதர்சனம் (திமுக)
திருவள்ளூர் எம்.பி., ஜெயக்குமர் சாதித்ததும், சறுக்கியதும்?
வேலைவாய்ப்பு உள்ளிட்ட 29 விவாதங்களில் பங்கேற்று தொகுதி மக்களின் பிரச்னைகளை ஜெயக்குமார் பேசியுள்ளார். நிண்ட காலமாக தொடங்கப்படாமல் இருந்த திருப்பாலைவனம் – மீஞ்சூர் சாலை பணியும் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளார். சாலை வசதி, உயர் கோபுர மின் விளக்குகள், குடிநீர் வசதி ஆகிய 267 பணிகளுக்காக, மக்களவை உறுப்பினருக்கான ரூ.17 கோடி நிதியில் இருந்து ரூ.15 கோடியே 35 லட்சத்து 21 ஆயிரம் செலவு செய்துள்ளார்.
அதே நேரம், மீனவர்களின் நீண்டகால கோரிக்கையான பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார நடவடிக்கை எடுக்காதது, ரயில்வே மேம்பால பணிகளை முடிக்காதது போன்றவை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. மாதவரம் தொடங்கி ஆரம்பாக்கம் வரையிலான சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல ஆண்டுகளாக முடியாமல் இருப்பது, திருவள்ளூரில் சுரங்க நடைபாதை அமைக்காததும் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
Rathasaptami day Kanchipuram Varadaraja Perumal Surya Prabhai Vahanam and crawled through the streets – TNN
ரதசப்தமி தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சூரிய பிரபை
ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ பாவ காரியங்கள் செய்துவிடுகிறோம். அதன் பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமே ரத சப்தமி விரதம் என்பதாகும். தை முதல் நாள் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகிறோம். தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் திதி ரத சப்தமியாகக் கொண்டாடுகிறோம்.
மணவாள மாமுனி மற்றும் ராமானுஜர் சன்னதி
அவ்வகையில் இன்று அத்திவரதர் புகழ்பெற்ற காட்சி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ரதசப்தமி நிகழ்வையொட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் மலையில் இருந்து கீழே இறங்கி சிறப்பு மலர் அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து திருக்கோயில் வளாகத்தில் உள்ள மணவாள மாமுனி மற்றும் ராமானுஜர் சன்னதி வழியாக திருக்கோயில் ராஜகோபுரம் அருகே எழுந்தருளி சிறப்பு தீபாரதம் நடைபெற்று பக்தர்களுக்கு சடாரி ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
ரதசப்தமி விழா
ரதசப்தமி விழாவை பற்றி காஞ்சி வரதராஜ பெருமாளின் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலில் திருக்கோவிலில் குவிந்தனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வைணவ தளங்களில், இன்று ரதசப்தமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
அத்தி வரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக உள்ளது . ஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது. வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும் மிகவும் முக்கிய கோவிலாக கோவில் வழங்கி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவும், வருடம் தோறும் நடக்கும் வைகாசி பிரம்மோற்சவம் இந்த கோவிலில் மிக முக்கிய திருவிழாவாக இருந்து வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட சேவையை காண பல லட்சம் மக்கள் குவியவதும் வழக்கம். இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் மேற்கு நோக்கியபடி 135 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மிகப்பெரிய தொங்கும் கருச்சங்களில் கோவிலில் மற்றொரு தனிச்சிறப்பு. இக்கோவிலில் உள்ள பிரதான குலத்திற்கு அனந்த சரஸ் என்ற பெயர் உள்ளது. இக்கோவிலில் மூலவராக தேவராஜ பெருமாள், உற்சவமூர்த்தியாக பேரருளாளன் ,தயாராக பெருந்தேவி தாயார், இதுபோக மூலஸ்தானத்திற்கு அருகே நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் மலையாள நாச்சியார், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற சன்னத்துகளும் அமைந்துள்ளன. மிக அரிதாக காட்சியளிக்கும் 12 திருக்கழுங்கள் கரங்களுடன் சக்கரத்தாழ்வாழும் காட்சி தருகிறார்.
இக்கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுபோக ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் நாள்தோறும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. வட இந்தியாவை சேர்ந்த பக்தர்களும் இந்த கோவிலுக்கு வந்து வரதராஜ பெருமாளை தரிசித்து செல்கின்றனர் காஞ்சிபுரத்தில் இருக்கும் மிக முக்கிய பெருமாள் கோவிலாக கோவில் விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அடுத்த மிக பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விளங்கி வருகிறது.
மேலும் காண

வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கு.. மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை..
வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் மு.க அழகிரியை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு 2011 ஆம் தொடரப்பட்டது. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும் காண

Congress: நெருங்கும் தேர்தகாங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கிய வருமானவரித்துறை
காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் வருமானவரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர் அஜய் மக்கென் தெரிவித்துள்ளார். மேலும், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வங்கிக் கணக்குகளை முடக்குவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
#WATCH | Congress Treasurer Ajay Maken says “We got information yesterday that banks are not honouring the cheque we are issuing. On further investigation, we got to know that the Youth Congress bank accounts have been frozen. The accounts of the Congress party have also been… pic.twitter.com/JsZL1FEy9d
— ANI (@ANI) February 16, 2024இது தொடர்பாக அவர் கூறுகையில், நாங்கள் கொடுத்த காசோலைகள் வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது, வங்கியில் விசாரித்துப் பார்த்தோம். அப்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது, வருமானவரித்துறையால் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளும், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட நிதியான ரூபாய் 210 கோடி வருமானவரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் காண

India Vs England 3rd Test Sarfaraz Khan Speaks About Run Out | India Vs England 3rd Test: தவறான புரிதலால் அவுட் ஆவது சகஜம்தான்
இந்தியா – இங்கிலாந்து:
குஜராத் மாநிலம் ராஜ்கோட் செளராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 15) தொடங்கியது. அந்த வகையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 326 ரன்கள் எடுத்துள்ளது. அதன்படி, 110 ரன்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் 1 ரன்னுடன் குல்தீப் யாதவும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடினார். 66 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 62 ரன்கள் எடுத்தார். அப்போது ஜடேஜாவின் செயலால் ரன் அவுட் ஆனார். அதாவது, ஜடேஜா 99 ரன்கள் எடுத்த போது 1 ரன்னை எடுத்து சதத்தை பதிவு செய்வதற்கு திணறிக்கொண்டிருந்தார். அப்போது வீசப்பட்ட பந்தை அடித்த ஜடேஜா 100 வது ரன்னை எடுக்க பாதி தூரம் வரையில் ஓடி வந்து விட்டார். ஜடேஜா ஓடிவருவதை பார்த்த சர்ஃபராஸ் கானும் பந்து எங்கே செல்கிறது என்பதை கவனிக்காமல் பாதி தூரம் ஓடிவிட்டார். அப்போது பந்து பில்டரின் கையில் சென்றதை உணர்ந்த ஜடேஜா அப்படியே நின்றுவிட்டார். ஜடேஜாவின் இந்த செயலால் பாதியிலே சிக்கிக் கொண்டு மீண்டும் கிரீசுக்கு செல்வதற்கு முன்பு ரன் அவுட் ஆனார் சர்ஃபராஸ் கான்.
விளையாட்டில் ஒரு அங்கம் தான்:
இந்நிலையில் தவறான புரிதலால் விக்கெட்டை பறிகொடுப்பது விளையாட்டில் ஒரு அங்கம் தான் என்று சர்ஃபராஸ் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,”போட்டியின்போது இப்படி நடப்பது சகஜமான ஒன்றுதான். இப்படி தவறான புரிதலால் அவுட் ஆகி செல்வதும் விளையாட்டின் ஒரு பகுதி தான். உண்மையில் இன்னிங்ஸ் முழுவதும் ஜடேஜா என்னை வழி நடத்தினார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடினாலே ரன்கள் தாமாக வரும் என்று அவர் எனக்கு ஆலோசனை வழங்கினார்.
இறுதியில் போட்டி முடிந்ததும் சற்று தவறான புரிதலால் ரன் அவுட்டானதாக அவர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார். இதனிடையே சமூக வலைதள பக்கத்தின் மூலமாகவும் தன்னுடைய செயலுக்கு ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: ரோஹித் – ஜடேஜா சதம்.. சர்ஃப்ராஸ் கான் அரைசதம்! 326 ரன்களை குவித்த இந்தியா!
மேலும் படிக்க: Sarfaraz Khan: சர்ஃபராஸ் கானை ரன் – அவுட் செய்த ஜடேஜா…கோபத்தின் உச்சிக்கு சென்ற ரோஹித் செய்த செயல்!வைரல் வீடியோ!
மேலும் படிக்க: Rohit Sharma Record: டெஸ்ட் போட்டியில் சரவெடி…தோனியை பின்னுக்குத்தள்ளிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
மேலும் படிக்க: Sarfaraz Khan: சர்ஃபராஸ் கானை ரன் – அவுட் செய்த ஜடேஜா…கோபத்தின் உச்சிக்கு சென்ற ரோஹித் செய்த செயல்!வைரல் வீடியோ!

Life imprisonment for four persons in case of rowdy murder of Pashupathi Pandian supporter near Karur – TNN | கரூரில் மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்த பிரபல கொலை வழக்கு
கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ரவுடி கொலை வழக்கில் நான்கு நபர்களுக்கு ஆயுள் தண்டனை இரண்டு நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கரூர் மாவட்டம், கருப்பத்துரைச் சேர்ந்த கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (52), பசுபதிபாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காவல் துறையின் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பசுபதிபாண்டியன் படுகொலைக்குப் பிறகு, கடந்த சில ஆண்டுகளாக கரூர் லாலாப்பேட்டை அருகே உள்ள கருப்பத்தூர் என்னும் சொந்த கிராமத்தில் அவர் விவசாயம் செய்து வந்தார்.
இதனிடையை 2021-ம் ஆண்டு OCT – 06 ஆம் தேதி அதிகாலை கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பு உள்ள விவசாயத்தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான 3 தனிப்படைகள் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொலை வழக்குத் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படைக்குத் தொடர்பு இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர், உறுதுணையாக இருந்த கரூர் லாலாப்பேட்டை கருப்பத்தூரைச் சேர்ந்த ராஜா சரவணன், சுந்தர், ரவிவர்மா என்கின்ற பாம் ரவி, குமுளி ராஜ்குமார், கருப்பு ரவி, மனோஜ், கார்த்தி, ஜெயராமன் சுரேஷ், நந்தகுமார், கருப்பு குமார் ஆகிய 11 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கருப்பு ரவி தவிர பத்து நபர்களை கைது செய்து, வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை பெற்ற நிலையில், நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருப்பத்தூர் கோபால் வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜா, சரவணன், சுந்தர், ரவி என்கிற பாம் ரவி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், சுரேஷ், நந்தகுமார் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், மீதமுள்ள நான்கு நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரூரில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்பார்த்து இரு தரப்பிலும் காத்திருந்ததால் அங்கு நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் காண

kalidas jayaram and arjun das starring Por Movie Trailer Released | Por Trailer: “சத்தம் போட்டா தான் கேட்கும்ன்னா கத்துவோம்”
நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் இணைந்து நடித்துள்ள “போர்” படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம், ஜீவா நடிப்பில் வெளியான “டேவிட்:” படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பிஜேய் நம்பியார். மலையாளத்தில் 2005 ஆம் ஆண்டே இயக்குநராக அறிமுகமாகி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். இதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு அமேசன் ஓடிடி தளத்துக்காக “ஸ்வீட் காரம் காஃபி” என்ற வெப் சீரிஸை இயக்கினார்.
இதனிடையே பிஜேய் நம்பியார் தற்போது “போர்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இளம் நடிகர்களான அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். மேலும் டிஜே பானு, சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். மார்ச் 1 ஆம் தேதி போர் படம் தியேட்டரில் வெளியாகவுள்ளது. டி சீரிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Battle lines are drawn and the stakes are higher than ever! Brace yourself #Por is about to take over!🔥 Pick a side! ⚡️ Trailer out now: https://t.co/0rVNsEK22m#Por #PorTheFilm#tseries @AAFilmsIndia @harsh16dec @itsEhanBhat @nikifyinglife @TJBhanuOfficial @iam_arjundas… pic.twitter.com/ZhRCmlNBFs
— T-Series (@TSeries) February 16, 2024இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ் இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக வருகிறார். இதில் காளிதாஸ் கல்லூரியிம் பிளேபாய் கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர்களுக்கான மோதல் என்பது அர்ஜூன் தாஸ் காதலி மூலம் வெடிக்கிறது. இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக ட்ரெய்லர் காட்சிகளை பார்க்கும்போது தெரிகிறது.
போர் படத்தில் இடம் பெற்றுள்ள‘சத்தம் போட்டா தான் சில காதுகளுக்கு கேட்கும்ன்னா கத்தத் தான் செய்வோம்’ என்ற வசனங்களும் கவனம் ஈர்த்துள்ளது. இளம் வயதினரை கவரும் நோக்கில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள போர் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
முன்னதாக சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர், “போர் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரவிருக்கிறது. தமிழில் நாங்கள் நடித்துள்ளோம். இப்படம் கல்லூரி மாணவர்களின் சேட்டைகளை கதைகளமாக கொண்டது. இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் காண வேண்டும்” என கேட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

Special Bus: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா? கிளாம்பாக்கத்தில் இருந்து 750 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்..

வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின் போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தற்போது வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த வாரத்தில் மாநிலத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, சேலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் இயக்கப்படுகிறது. தினசரி இயக்கப்படும் பேருந்துகள் உடன் கூடுதலாக சென்னையில் இருந்து 550 பேருந்துகளும், பெங்களூரு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 200 பேருந்துகள் என 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய இதுவரை 9,679 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை (சனிக்கிழமை) 5,468 மற்றும் வருகிற 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 8,481 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத்திட்டத்திற்கு ஏற்ப டிக்கெட் முன்பதிவை www.tnstc.in என்ற இணையதளம் மூலம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Gold Silver Rate Today February 16 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.260 அதிகரித்து ரூ. 46,080 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,760 விற்பனை செய்யப்படுகிறது.ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49,840 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,230 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 க்கு விற்பனையாகிறது.
கோயம்புத்தூர்
“தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,230 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,760 ஆகவும் விற்பனையாகிறது.
மதுரை
மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,230 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,760 ஆகவும் விற்பனையாகிறது.
திருச்சி
திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,230 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,760 ஆகவும் விற்பனையாகிறது.
வேலூர்
வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,230 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,760 ஆகவும் விற்பனையாகிறது.
நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
மும்பை
மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,207 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,690 ஆகவும் விற்பனையாகிறது.
புது டெல்லி
புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்ஒன்றிற்கு ரூ.6,222 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,705 ஆகவும் விற்பனையாகிறது.
கொல்கத்தா
கொல்கத்தாவில் (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,207 கவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,690 ஆகவும் விற்பனையாகிறது.
ஐதராபாத்
ஐதராபாத் நகரில் (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,207 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,690 ஆகவும் விற்பனையாகிறது.
அகமதாபாத்
அகமதபாத் (Gold Rate in Ahmedabad) நகரில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,212 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,695 ஆகவும் விற்பனையாகிறது.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தில் (Gold Rate Trivandrum) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,207 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,700 ஆகவும் விற்பனையாகிறது.
பெங்களூரு
பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,218 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,690 ஆகவும் விற்பனையாகிறது.
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூரில் (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,222 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,705 ஆகவும் விற்பனையாகிறது.
புனே
புனே நகரில் (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,218 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,690 ஆகவும் விற்பனையாகிறது.
Henley Passport Index 2024 India Passport Rank Stands at 80th Position
எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்தது என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவிக்கிறது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. இந்த குறியீடானது 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை மதிப்பீடு செய்து வெளியிடுகிறது.ஒவ்வொரு நாட்டவரும், எத்தனை நாடுகளுக்கு முன் விசா இன்றி பயணம் செய்யலாம் அல்லது அந்த நாடுகளுக்கு சென்ற பின் விசா எடுத்துக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாக அறியப்படுகிறது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான பாஸ்போர்ட் குறியீட்டில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான், ஃப்ரான்ஸ், உள்ளிட்ட நாடுகளின் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. இந்த 6 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளால் 194 நாடுகளுக்கு முன் விசா இன்றி பயணம் செய்யலாம் என்பதால் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Biggest Stars: சூரியனை விட ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்கள் பால்வெளியில் உள்ளன – எவை என்று தெரியுமா?
இரண்டாவதாக தென் கொரியா, ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டால் 193 நாடுகளுக்கு முன் விசா இன்றி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் சக்தி குறைந்த பாஸ்போர்ட் உள்ள நாடாக ஆஃப்கானிஸ்தான் உள்ளது. இந்த நாட்டுக்கு 28 நாடுகள் மட்டுமே முன் விசா இன்றி பயணம் செய்யலாம் அனுமதியளித்துள்ளது. இந்தியா 80 வது இடத்தில் உள்ளதாக இந்த குறியீடு தெரிவிக்கிறது. இந்திய குடிமக்கள் 60 நாடுகளுக்கு முன் விசா அனுமதி இன்றி பயணம் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Also Read: Migratory Birds: கோடைகாலத்தில் இந்தியாவுக்கு வருகைதரும் அழகிய பறவைகள்…Published at : 16 Feb 2024 06:45 AM (IST)
மேலும் காண

Ajithkumar: ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஜித் என்னை மிரட்டினார்.. அதிர்ச்சியடைந்த நடிகை ஆர்த்தி!

திருப்பதி பட ஷூட்டிங்கில் நடிகர் அஜித் தன்னை மிரட்டியதாக நடிகை ஆர்த்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் “திருப்பதி”. இப்படத்தில் சதா, கஞ்சா கருப்பு, ரியாஸ் கான், ஹரிஷ் ராகவேந்திரா, அருண் பாண்டியன், லிவிங்ஸ்டன், ஆர்த்தி என பலரும் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வழக்கம்போல இதில் சென்டிமென்ட் காட்சிகளை புகுத்தி பேரரசு ரசிகர்களை கவர வைத்தார்.

இதனிடையே இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது மறக்க முடியாத சம்பவம் ஒன்றை நடிகை ஆர்த்தி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், “அஜித்துடன் நான் திருப்பதி என்ற படம் பண்னேன். அதில் என்னுடைய பிறந்தநாள் தொடர்பான காட்சி ஒன்று எடுத்தார்கள். என்னோட ஷூட்டிங்கிற்கு வந்த அம்மா கேரவனில் இருந்தார்கள். அதனுள் ஏசி அளவு அதிகமாக வைக்கப்பட்டிருந்தது. வெளியே வந்து தம்பி தம்பி என அங்கிருந்த ஆட்களை அழைத்துள்ளார்கள். அப்போது அந்த பக்கமாக ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்த அஜித் அதனை கவனித்து என்னவென்று விசாரித்துள்ளார்.

உடனே அவர் விஷயத்தை கேட்டு உள்ளே தூங்கி கொண்டிருந்த வேலை செய்பவரை எழுப்பி ரிமோட் வாங்கி ஏசி அளவை சரியாக வைத்துக் கொடுத்துவிட்டு சென்றார். நேராக அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். நான் ஹாய் என சொன்னதும் அம்மா ஷூட்டிங்கிற்கு வந்துருக்காங்களா? என கேட்டார். நான் ஆமாம் என சொன்னதும், ‘நீ அடிக்கடி உதவியாளரை அனுப்பி அல்லது போன் பண்ணி அல்லது நேராக போய் அம்மாவை போய் பார்த்துட்டு இருக்கணும். குளிர்ல அம்மாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது. இல்லைன்னா கூட்டிட்டு வரக்கூடாது. நீ பொறுப்பா நடந்துக்கோ என சொல்லி மிரட்டினார். அது மிரட்டல் இல்லை அது அன்பா சொன்ன விஷயம். நான் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.

இவர் ஒரு ஹீரோ நடிச்சா கேரவனுக்கு போய் உட்காரணும். பக்கத்து கேரவனில் சொல்றதை கேட்டு வந்து சொல்றாரேன்னு நினைச்சேன். அன்னைக்கு ஒருநாள் மட்டும் இல்லை. கிட்டதட்ட 6 நாட்கள் அப்படத்தின் ஷூட்டிங்கிற்கும் அம்மா வந்திருந்தார். எல்லா நாளும் போகும்போது கேரவனை தட்டி ‘அம்மா ஓகே வா?’ என கேட்பார். இதை அம்மா என்னிடம் சொல்வார். அதேபோல் கேரவன் அருகில் உட்கார்ந்திருப்பவர்கள் அஜித் வரும்போது மரியாதைக்கு எழுந்து நிற்பார்கள். ஆனால் இன்னொரு டைம் எழுந்தால் நான் இறங்கி வரமாட்டேன் என சொல்லுவார். என்ன மனுஷன்பா என அஜித் என்னை வியக்க வைத்தார்” என ஆர்த்தி அதில் பேசியிருப்பார்.

NEET aspirant physically abuses in Rajasthan’s Kota, four students arrested investigation going on
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) தயாராகிக்கொண்டிருந்த 17 வயது மாணவி, ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் கடந்த வாரம் நான்கு மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானாவில் உள்ள குருகிராமில் வசிக்கும் சிறுமி, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையத்தில் இருந்து நீட் தேர்வுக்கு தயாராவதற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக கோட்டாவில் உள்ள விடுதியில் தங்கி உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக பேசிய மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் உமா ஷர்மா, “உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஒரு மாதத்திற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் அந்த பெண் சந்தித்துள்ளார். சனிக்கிழமையன்று, அந்த நபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். மேலும் அந்த நபர், தனது மூன்று நண்பர்களையும் அங்கு அழைத்துள்ளார்.
சிறுமி அந்த நபரின் வீட்டிற்கு சென்ற பின், 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். முதலில் இந்த சம்பவம் தொடர்பாக அவர் வெளியே தகவல் தெரிவிக்க தயக்கம் காட்டிய நிலையில், நண்பர்களிடம் இந்த விஷயத்தை மாணவி பகிர்ந்துள்ளார். பின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி நண்பர்கள் அறிவுறுத்தியதையடுத்து அந்த மாணவி புகார் அளித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை புகார் அளிக்கப்பட்ட நிலையில், வியாழன் அன்று 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்” என தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 டி (கூட்டு பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், உளவியல் ஆலோசனை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டா இந்தியாவின் போட்டித் தேர்வுக்கான வணிகத்தின் மையமாக உள்ளது, ஆண்டுதோறும் சுமார் ரூ. 10,000 கோடி வருமானம் அப்பகுதியில் ஈட்டப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதிலுமிருந்து மாணவர்கள் பத்தாம் வகுப்பை முடித்த பிறகு அதிக எண்ணிக்கையில் கோட்டவில் வந்து தங்கி, தேர்வு மையங்களில் பதிவு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

கரூரில் கருப்பணசாமிக்கு ஆயிரம் முட்டைகள், ஏழு கிடாவுடன் பிரம்மாண்ட அசைவ படையல்.. குவிந்த பக்தர்கள்

கரூர் காணியாளம்பட்டியில் தமிழகத்தின் முதல்முறையாக மேற்கு திசை நோக்கி உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி ஆலயத்தில் 21 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கருப்பு சுவாமி சிலை நிறுவப்பட்டது.

கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அருகே உள்ள கோயில்பட்டி பகுதியில் பிரம்மாண்டமாக பதினெட்டாம்படி கருப்பண சுவாமி ஆலயம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆலயத்தில் கிடாய் வெட்டி கருப்பசுவாமி 25 அடி சிலையை நிறுவப்பட்டது. மிகப்பெரிய அளவிலான கிரேன் வாகனத்தின் மூலம் சுமார் 50 டன் எடை கொண்ட கருப்பணசுவாமி சிலை பிரதிஷ்டையானது

அதன் தொடர்ச்சியாக பிரம்மாண்ட கருப்பண சுவாமிக்கு கையில் அருவாள் பொருத்தப்பட்டு தொடர்ச்சியாக பிரம்மாண்ட வண்ண மாலை, எலுமிச்சம் கனிமாலை உள்ளிட்ட மாலைகள் அணிவித்து, பட்டாடை உடுத்தி தொடர்ச்சியாக கருப்பண சுவாமி வாசலில் படையலிட்டு அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் மற்றும் ஆட்டுக்கறி மற்றும் அன்னம் படைக்கப்பட்டு மதுபானம், சுருட்டு உள்ளிட்ட பொருட்கள், கருப்பண சுவாமிக்கு பிடித்தமான உணவுகளை வைத்து படையல் இட்டு தொடர்ச்சியாக அருள்வாக்கு வந்தபடி ஆலயத்தின் பூசாரி காளிமுத்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டினார்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கருப்பண சுவாமிக்கு படையல் இட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கருப்பு சுவாமி பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பு – தமிழகத்தில் ஒரே கல்லினால் ஆன மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள கருப்பு சுவாமி கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற 18-ஆம் படி கருப்பண சுவாமி பிரதிஷ்டை நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை முதல் யாக வேள்வி நடைபெற்றது அதைத் தொடர்ந்து காலை ஆகவேண்டி 9:00 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெற்றது அதன் பிறகு சாமி அந்தஸ்தை நிகழ்ச்சி நடைபெற்று அதன் தொடர்ச்சியாக குடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் அசைவிருந்து வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் அருள்வாக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

குறிப்பாக குழந்தையின்மை திருமண தடை தொழில் தடை மற்றும் பில்லி சூனியம் ஏவல் கண் திருஷ்டி போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு காணப்படுவதாக நம்பப்படுகிறது என ஆலயத்தின் தலைவர் காளிமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருப்பண்ண சுவாமி ஆலய தலைவர் மற்றும் பூசாரி காளிமுத்து புகைப்படம்

மேலும் பக்தர்கள் வசதிக்காக பிரத்யேகமாக காணியாளம்பட்டியில் இருந்து போக்குவரத்து வசதியும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தில் வரும் பக்தர்கள் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மேலும் தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Ops On Eps: ”அந்தர் பல்டி அடித்த எடப்பாடி பழனிசாமி” : திமுக உடன் கைகோர்த்துவிட்டதாக ஓபிஎஸ் சாடல்

Ops On Eps: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊதுகுழல் ஆகிவிட்டதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ் அறிக்கை:

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2022 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்’ என்று கூறியவர் எடப்பாடி பழனிசாமி.

இதனைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கொள்கையை அதிமுக ஆதரிக்கிறது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே மிக முக்கியமாக இருக்கும் என்றும், எந்த அரசும் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்ட கால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும் என்றும் தனது டிவிட்டர் பதிவில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்தக் கொள்கையிலிருந்து தற்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாட்டினை எதிர்த்து 14-02-2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின்மீது பேசிய என். தளவாய் சுந்தரம், "2024 ஆம் ஆண்டு முதல் தொடங்கி 2034 ஆம் ஆண்டில் முடிவடையும் 10 ஆண்டுகளுக்குள்ளான கிட்டத்தட்ட 10 கோரிக்கைகள் அளித்திருக்கிறோம். Committee அவற்றை பரிசீலனை செய்து அவற்றை ஏற்றுக்கொண்டு, அதனை மத்திய அரசிற்கு அனுப்பி, அதன் மூலமான எங்களுடைய சாதகங்களையும், பாதகங்களையும் பார்க்கின்ற நிலை வரும்பொழுது, நாங்கள் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்கின்ற சூழ்நிலை உருவாகும் பொழுது குழு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமானால், நாங்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்போம்" என்று அரைகுறையாக, மழுப்பலாக குழப்பி இருக்கிறார்.

27 அமாவாசை என்று 2022-ல் கூறியது இப்போது 2034-க்கு சென்றுவிட்டது. இது மட்டுமல்லாமல், இந்தத் தீர்மானம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து, தி.மு.கவுடன் கைகோர்த்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எந்த தி.மு.க என்கிற தீயசக்தியை எதிர்த்து எம்ஜிஆர் கட்சியை தொடங்கினாரோ, எந்தத் தீயசக்தியை எதிர்த்து ஜெயலலிதா கட்சியை வளர்த்தாரோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தி.மு.க.வுடன் கைகோர்த்திருப்பது. ரகசிய உடன்பாடு செய்திருப்பது என்பது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு அடையாளம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஓஇயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2016 ஆம் ஆண்டு முழங்கியவர் ஜெயலலிதா.

இதற்கு முற்றிலும் முரணாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுயநலத்திற்காக தி.மு.க.விடம் சரணாகதி அடைந்துவிட்டார். கட்சியின் தனித் தன்மை தாரைவார்க்கப்பட்டு விட்டது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் துரோகக் கூட்டம் நான்காவது இடத்திற்கு மக்களால் தூத்தி அடிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஓ. பன்னீர் செல்வம் சாடியுள்ளார்.

top news India today abp nadu morning top India news February 16th 2024 know full details
விசா, மாஸ்டர்கார்டு – வணிக ரீதியிலான கிரெடிட் கார்டு பரிவர்த்தனை நிறுத்தி வைக்க ஆர்.பி.ஐ. உத்தரவு!‘விசா’,’மாஸ்டர்கார்டு’ கிரெடிட், டெபிட் கார்டு கொண்டு மேற்கொள்ளப்படும் வணிக ரீதியிலான பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ரிசர்வ் வங்கி (Reserve Bank of India’s (RBI)) அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சமீக காலமாக நிறைய விதிமுறைகளை விதித்து வருகிறது. பே.டி.எம். நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி விதிமுறைகளை சரியாக பின்பற்றதாக காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. மேலும் படிக்க..
தமிழக பள்ளிக்கல்வியில் புதிய நடைமுறை – விருப்பப் பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம்..!விருப்பப் பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண்னை நிர்ணயித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழை தாய்மொழியாக கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10ம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே போதும். தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அந்த வகையில் விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க..
தேர்தல் பத்திரங்கள் – ரூ.16 ஆயிரம் கோடிக்கு விற்பனை – பாஜகவிற்கு மட்டும் இத்தனை ஆயிரம் கோடிகளா?தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி, பாஜக மட்டும் இதுவரை 6000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கறுப்பு பணம் ஒழியும் என மத்தியில் ஆளும் பாஜக தலைமயிலான அரசால், கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறி, உச்சநீதிமன்றம் ரத்து செய்து அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் நிதி பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க..
விண்ணில் பாய தயாரான GSLV-F14 விண்கலம் – இன்று தொடங்குகிறது 27.5 மணி நேர கவுண்டவுன்..இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் GSLV-F14 விண்கலம், நாளை மாலை 5.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் நாளை மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக GSLV-F14 விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள, இந்த விண்கலத்திற்கான 27.5 மணி நேர கவுண்டவுன் இன்று பிற்பகல் 02.05 மணிக்கு தொடங்குகிறது. பூமி அறிவியல் அமைச்சகம் இந்த திட்டத்திற்கான மொத்த செலவையும் ஏற்றுள்ளது. INSAT-3DS புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் படிக்க..
மேலும் காண

Sivakarthikeyan’s new film directed by Murugadoss is in trouble | Sivakarthikeyan: ஆரம்பமே பிரச்னை.. சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தால் பிற படங்கள் மற்றும் சீரியல்களின் ஷூட்டிங் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்படத்தில் கன்னட நடிகை ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தில் நடித்த ருக்மணி வசந்த் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் ஆக்ஷன் பாணியில் உருவாவதாக கூறப்படுகிறது.
மேலும் நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் படப்பிடிப்பு தொடங்கி 2 நாட்களிலேயே இந்த படத்துக்கு பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது, தென்னிந்திய தொலைக்காட்சி வெளி மாநில அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், “M/S ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் திரைப்பட நிறுவனத்தார் தயாரிக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இயக்குநராக AR முருகதாஸூம், ஒளிப்பதிவாளராக சுதிப்பும், மேளாலராக சுந்தரராஜன் உள்ளிட்டோர் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த தமிழ் திரைப்படத்துக்கு தாஹிர் (Taher) எனும் வெளி மாநில அவுட்டோர் யூனிட்டை பயன்படுத்துகிறார்கள்.
#ARMurugadoss about #SK23 :A Fast paced action film set in Chennai with an interesting Screenplay like Ghajini 😎As much as action, there will also be romance in the story 💥#Sivakarthikeyan is in training for body language as his character in the film is not a regular one. pic.twitter.com/vZEaFqSQyr
— Filmy Fanatic (@FanaticFilmy) February 16, 2024வெளி மாநில அவுட்டோர் யூனிட்டுகளை தமிழ் திரைப்படங்களுக்கு பயன்படுத்துவதில்லை என பல கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், ஏற்கனவே தாங்கள் அறிவித்துள்ளீர்கள் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதோடு மேற்படி பேச்சுவார்த்தையை மீறி வெளிமாநில அவுட்டோர் யூனிட்டை மேற்படி தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்துவதால் எங்களது அவுட்டோர் யூனிட் உரிமையாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் மற்றும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே இன்று (16.02.2024) முதல் எந்தவித படப்பிடிப்புக்கும். சீரியல் படப்பிடிப்புக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என எங்களது அவசர பொதுக்குழு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு இங்குள்ள அவுட்டோர் யூனிட்டுகளின் தொழில் நலன் காக்க ஒரு நிரந்தர தீர்வுக்கு வழி வகை செய்யுமாறு தங்கள் அனைவரையும் அன்படன் கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் இன்று முதல் திட்டமிட்டபடி சீரியல் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும் படிக்க: Siren Review: தமிழ் சினிமா தொடாத கதை.. ஜெயம் ரவியின் “சைரன்” படத்தின் முழு விமர்சனம் இதோ..!
மேலும் காண

The water inflow of Mettur dam has remained at 54 cubic feet for the third day.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக அதிகரித்துள்ளது.நீர்மட்டம்:
அணையின் நீர் மட்டம் 65.61 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 29.04 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.42 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.80 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 488 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,122 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 52.58 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 102 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.மேலும் காண

India Vs England 3rd Test Ravindra Jadeja Apologising To Sarfaraz Khan
சர்ஃபராஸ் கான் ரன் அவுட்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. அந்த வகையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 326 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் நிற்கின்றனர்.
முன்னதாக, இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடினார். அதன்படி, 66 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 62 ரன்கள் எடுத்தார். அப்போது ஜடேஜாவின் செயலால் ரன் அவுட் ஆனார் சர்ஃபராஸ். அதாவது என்னவென்றால் ஜடேஜா 99 ரன்கள் எடுத்த போது 1 ரன்னை எடுத்து சதத்தை பதிவு செய்வதற்கு திணறிக்கொண்டிருந்தார். அப்போது வீசப்பட்ட பந்தை அடித்த ஜடேஜா 100 வது ரன்னை எடுக்க பாதி தூரம் வரையில் ஓடி வந்து விட்டார்.
ஜடேஜா ஓடிவருவதை பார்த்த சர்ஃபராஸ் கானும் பந்து எங்கே செல்கிறது என்பதை கவனிக்காமல் பாதி தூரம் ஓடிவிட்டார். அப்போது பந்து பில்டரின் கையில் சென்றதை உணர்ந்த ஜடேஜா அப்படியே நின்றுவிட்டார். ஜடேஜாவின் இந்த செயலால் பாதியிலே சிக்கிக் கொண்டு மீண்டும் கிரீசுக்கு செல்வதற்கு முன்பு ரன் அவுட் ஆனார் சர்ஃபராஸ் கான். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செயலை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா தலையில் கை வைத்துக்கொண்டு தன்னுடைய தொப்பியை கடும் கோவத்துடன் தூக்கி எறிந்தார். அதோடு ஏதோ சொல்லி ஜடேஜாவை திட்டினார் ரோகித் சர்மா. சர்ஃபராஸ் கானுக்கு அறிவுரையும் வழங்கினார்.
வருத்தம் தெரிவித்த ஜடேஜா:
Ravindra Jadeja apologising to Sarfaraz Khan. pic.twitter.com/9QlW5CuWin
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 15, 2024இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவை ரசிகர்கள் பலரும் கடுமையாக சாடினார்கள். தன்னுடைய சுயநலத்திற்காக சர்ஃபராஸ் கானை ரன் அவுட் செய்ததாகவும் குற்றம் சாட்டினார்கள். இச்சூழலில் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ஜடேஜா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தனது தவறான அழைப்பால் சர்ஃபராஸ் கான் ரன் அவுட் ஆனதாக வருத்தம் தெரிவித்துள்ள அவர் சிறப்பாக விளையாடியதாகவும் பாராட்டியுள்ளார்.
மேலும் படிக்க: Watch Video: அறிமுக போட்டி…அரைசதம் விளாசிய சர்ஃப்ராஸ் கான்…ப்ளைன் கிஸ் கொடுத்த மனைவி!வைரல் வீடியோ!
மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: ரோஹித் – ஜடேஜா சதம்.. சர்ஃப்ராஸ் கான் அரைசதம்! 326 ரன்களை குவித்த இந்தியா!
Lion kills man who entered enclosure for taking selfie in Tirupati Zoological Park | Tirupati: செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட நபர்.. துரத்தி துரத்தி தாக்கிய சிங்கம்
திருப்பதியில் சிங்கத்துடன் செல்ஃபி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆங்காங்கே நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப உயிரியல் பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் வருகை தருவது வழக்கம். இத்தகைய பூங்காக்காளில் இருக்கும் உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மக்கள் பார்வையிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஆர்வம் மிகுதியில் இங்கு வருகை தரும் மக்கள் செய்யும் செயல்கள் அவர்களுக்கே ஆபத்தாக அமைகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் திருப்பதியில் நடைபெற்றுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் புகழ்பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல் இதே திருப்பதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் மக்களின் பார்வைக்காக இடம் பெற்றுள்ளது. உள்ளூர் மக்களை விட வெளியூரில் இருந்து வருபவர்கள் உயிரியல் பூங்காவுக்குள் சென்று வனவிலங்குகளை நேரில் பார்த்து ரசிப்பது வழக்கம்.
இந்த பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கம் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளது. சிங்கம் இருக்கும் இடத்துக்கும், மக்கள் செல்லும் இடத்துக்கும் இடையே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று சிங்கத்தை பார்வையிட வந்த நபர் ஒருவர் அங்கிருந்த தடுப்புகளை தாண்டி ஏறி குதித்து சிங்கம் இருக்கும் இடத்துக்கு சென்றார். இதனைப் பார்த்து அங்கிருந்த ஊழியர் அதிர்ச்சியடைந்து அந்த இளைஞரை திரும்ப வருமாறு எச்சரித்தார்.
ஆனால் அந்த நபர் எதையும் கேட்காமல் சிங்கத்தோடு செல்ஃபி எடுக்க முயன்றார். தன்னுடைய இடத்தில் ஏற்பட்ட அசௌகரிய நிலைமையால் ஆக்ரோஷமான துங்காபூர் என்ற ஆண் சிங்கம் அந்த நபரின் கழுத்தை கடித்தது. இதனைப் பார்த்து பூங்காவில் இருந்த நபர் கத்தி கூச்சலிட்டனர். ஆனால் விடாமல் சிங்கம் அந்த நபரை பலமாக தாக்கியது. அவரோ தப்பித்து மரத்தில் ஏற முயன்றார். சிங்கம் விடாமல் தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்தார்.
இதனையடுத்து வனவிலங்கு ஊழியர்கள், பூங்கா ஊழியர்கள், போலீசார் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து சிங்கத்திடம் இருந்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் இறந்த நபர், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பன்சூர் பகுதியை சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் என்பது தெரியவந்தது. அவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் என்ன நிலவரம் என தெரியவரும். உயிரியல் பூங்காவில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் காண

Australia PM Marriage: 60 வயதிலும் காதல் மலரும்.. காதலியை கரம்பிடித்த ஆஸ்திரேலிய பிரதமர்..

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசு இன்று ( பிப்.15 )சமூக வலைதளத்தில் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது காதலி, காதலை ஏற்றுக் கொண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக, தனது காதலியுடன் செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசுவின் காதலி ஜோடி ஹெய்டன். இவர்கள் இருவரும், 2020 ஆம் ஆண்டு முதன் முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த பிரதமர் தேர்தலிலும் அந்தோனிக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஹெய்டன் தேர்தல் பரப்புரைக்கு சென்றார். பின்னர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டு பயணங்களின்போதும் ஹெய்டனை, அந்தோனி அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், தனது காதலி, காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டார் என்று, இருவரும் இணைந்த புகைப்படத்தை, பிரதமர் அந்தோனி சமூக வலைதளங்களில் தெரிவித்தார். இதையடுத்து, பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தோனி, தனது முதல் மனைவியை 2019 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டதாகவும். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Anthony Albanese (@albomp)

60 வயதான பிரதமர், 46 வயதான ஹெய்டனை நிச்சயம் செய்ததை பார்க்கையில், காதலுக்கு வயது என்பது தடையே இல்லை என்றும், காதலுக்கு காதல் மட்டுமே இருந்தால் போதும் என்பதையும் காண்பிக்கிறது.

Also Read: Amy Jackson : அம்மாவின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மகன்.. எமி ஜாக்சன் சொன்ன சுவாரஸ்யம்..

Deepika Padukone: ஹில்டன் நிறுவனத்தின் சர்வதேச தூதுவராக தீபிகா படுகோன் நியமனம்…

பன்னாட்டு நிறுவனமான ஹில்டன், தனது நிறுவனத்தின் சர்வதேச தூதுவராக தீபிகா படுகோனை நியமனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹில்டன் ஓட்டல், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இது தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தெரிவித்துள்ளதாவது, பிரபல நடிகையும் தொழிலதிபருமான தீபிகா படுகோனை ஹில்டன் குடும்பத்திற்குள் இணைந்ததை பெருமையாக கருதுகிறோம்.

தீபிகா இந்தியாவின் உணர்வுகளை வெளிப்படுத்துவராக இருக்கிறார். இவர் ஹில்டனின் உலகளாவிய சந்தைப்படுத்துதலில் சிறந்த நபராக இருப்பார்.

பல்வேறு நாடுகளில் பயணத்தின் போது, சரியான ஓட்டல்களில் தங்கி இருப்பதை ஏன் முக்கியம் என்பதை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தும் வகையில் ஹில்டன் ஓட்டல் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஹில்டனுடன் இணைந்திருப்பதை சிறப்பான தருணமாக கருதுகிறோம். உங்களுடன் பலவற்றைப் பகிர்வதற்கு நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.

View this post on Instagram

A post shared by Hilton Chennai (@hiltonchennai)

ஹில்டனுடன் இணைந்தது குறித்து பெருமிதம் கொள்வதாக தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ளதாவது, "உலகளவில் உள்ள இந்தியர்களுக்கான ஓட்டல்களின் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்காக ஹில்டன் போன்ற உலகளாவிய பிராண்டுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஹில்டனைப் பற்றி நான் விரும்புவது என்னவென்றால், அவர்கள் தங்கி இருப்பதன் முக்கியத்துவத்தை, சரியாக புரிந்து கொள்கிறார்கள். நீங்கள் ஓட்டல் நிழைவு வாயிலில் நுழைவதற்கு முன்பே உங்கள் தேவைகளை எதிர்பார்த்து கவனித்துக்கொள்ளப்படும் வகையில் சேவை இருக்கும். நீங்கள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் கவனித்துக் கொள்ளப்படுகிறீர்கள் என்பதை உங்களால் உணர முடியும். இதுபோன்ற சேவைகளை ஹில்டன் வழங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், சர்வதேச நிறுவனத்தில் தூதுவராக நியமனம் செய்யப்பட்டதையடுத்து, அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Also Read: Amy Jackson : அம்மாவின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மகன்.. எமி ஜாக்சன் சொன்ன சுவாரஸ்யம்..

electoral bonds worth rupees 16000 cr sold since its inception bjp gets maximum share | Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் – ரூ.16 ஆயிரம் கோடிக்கு விற்பனை
Electoral Bonds: தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி, பாஜக மட்டும் இதுவரை 6000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் சட்டம் ரத்து:
கறுப்பு பணம் ஒழியும் என மத்தியில் ஆளும் பாஜக தலைமயிலான அரசால், கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறி, உச்சநீதிமன்றம் ரத்து செய்து அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் நிதி பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பாஜகவிற்கு எவ்வளவு நிதி?
முந்தைய நிதியாண்டு வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டாக ரூ.12,000 கோடிக்கு மேல் நிதியை பெற்றுள்ளன. இதில் பெரும்பான்மையான தொகுதியை பாஜக எனும் ஒற்றை கட்சி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) தரவுகள் அடிப்படையில், தேர்தல் பத்திரங்கள் மூலமான நிதியில் ஆளும் பாஜக 55 சதவிகித நிதியை பெற்றுள்ளது. அதாவது சுமார் 6,565 கோடி ரூபாயை நிதியாக பெற்றுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான வருடாந்திர தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, கட்சி வாரியான தரவு பின்னர் கிடைக்கும். மார்ச் 2018 முதல் ஜனவரி 2024 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் கிடைத்த மொத்த நிதி ரூ.16,518.11 கோடி என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது. இந்த பத்திரங்கள் கட்சிகளால் பெறப்பட்ட மொத்த நிதி பங்களிப்புகளில் பாதிக்கும் மேலானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சில மாநிலக் கட்சிகள் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன. பாஜகவும் அதன் வருமானத்தில் பாதிக்கும் மேல் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.
கட்சிகளுக்கான நிதி:
நாட்டின் பணக்கார கட்சியாக இருந்த காங்கிரஸ் அந்த இடத்தை தற்போது பாஜகவிடம் இழந்துள்ளது. அதாவது 2013-14-ஆம் ஆண்டில் காங்கிரஸின் வருவாய் ரூ. 598 கோடியாக இருந்த நிலையில், பாஜகவின் வருவாய் ரூ. 673.8 கோடியாக உயர்ந்தது. இதன் பிறகு காங்கிரசின் நிதி என்பது தொடர்ந்து சரிந்து வருகிறது. 2017-18ல் ரூ.1,027 கோடி வருவாயாக பெற்ற பாஜக, தேர்தல் பத்திரங்கள் அமலுக்கு வந்த 2018- 19-ஆம் ஆண்டில் ரூ. 2,410 கோடியை வருவாயாக பெற்றது. இதே காலகட்டத்தில் காங்கிரஸின் வருவாய் முறையே ரூ. 199 மற்றும் ரூ. 918-ஆக பதிவானது. 2021-22 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு ரூ.1,033 கோடியும், காங்கிரசுக்கு ரூ. 236 கோடி கிடைத்தது. 2022-23- ஆம் ஆண்டில் பாஜகவின் மொத்த வருவாய் ரூ. 2,360 கோடி. இதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ. 1,300 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரசுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 171 கோடி உட்பட மொத்த வருவாயாக ரூ. 452 கோடி கிடைத்தது. 2022-23-ஆம் நிதியாண்டில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.325 கோடியும், பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ரூ. 529 கோடியும், திமுகவுக்கு ரூ. 185 கோடியும், பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ரூ. 152 கோடியும், தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ.34 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்துள்ளது. மாநில கட்சிகளில் அதிக நிதி பெற்ற கட்சியாக திமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவிற்கு வாரி வழங்கிய கார்ப்ரேட் நிறுவனங்கள்:
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள், தங்களுக்கு சாதகமாக சட்டங்களை இயற்ற அரசை வலியுறுத்த வாய்ப்புள்ளதாக கூறி தான், தேர்தல் பத்திரங்கள் சட்டத்தையே உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், 2022-23 நிதியாண்டில் மொத்தமாக 680 கோடி ரூபாய் கார்ப்ரேட் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் நிதியாக பெற்றுள்ளன. அதில் 90 சதவிகிதம் அதாவது 610 கோடி ரூபாயை பாஜக தான் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் 55 கோடி ரூபாயை கார்ப்ரேட் நிதியாக பெற்றுள்ளது.
மேலும் காண

Shah Rukh Khan : தன்னுடன் அடுத்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா ஷாருக்கான் ? யஷ் சொன்ன பதில் இதுதான்

தனது படத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பதாக வெளியானத் தகவல் குறித்து நடிகர் யாஷ் பதிலளித்துள்ளார்.

டாக்ஸிக்

தமிழ் சினிமாவுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர் கீது மோகன்தாஸ் . சத்யராஜ் – சுஹாசினி நடித்த ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் . தொடர்ந்து நடிகர் மாதவன் உடன் ‘நள தமயந்தி’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஹீரோயினாக கீது மோகன்தாஸ் நடித்துள்ளார்.

பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள கீது மோகன்தாஸ், ‘லையர்ஸ் டைஸ்’ என்ற இந்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இந்தப் படத்திற்கான தேசிய விருதை வென்ற இவர், நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கிய மூத்தோன் திரைப்படத்துக்காக பெரும் பாராட்டுகளைக் குவித்தார். தற்போது கீது மோகன்தாஸ் யஷ் உடன் முதன்முதலாகக் கைகோர்த்துள்ளது சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. மிகத்தீவிரமாக சினிமாக்களை இயக்கும் கீது மோகன்தாஸ் ஒரு பாப்புலர் ஸ்டாரான யஷ்ஷுடன் இணைவது குறித்து அனைவருக்கும் ஆச்சரியம்தான். மேலும் இந்தப் படத்திற்கு அவர் டாக்ஸிக் என்று பெயர் வைத்தது இன்னும் ஆச்சரியத்தை கிளப்பியது.

இது குறித்து பேசிய கீது மோகன்தாஸ் “என்னுடைய இரண்டு படங்களும் சர்வதேச அங்கீகாரம் பெற்றன, ஆனால் என்னுடைய சொந்த ஊரில் மக்கள் ரசிக்கும் வகையிலான ஒரு படத்தை நான் எடுக்க ஆசைப்படுகிறேன். நான் சந்தித்த மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் யஷ், அவருடன் இணைந்து இந்த மாயாஜால பயணத்தை எங்கள் குழு தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று முன்னதாக கூறியிருந்தார்.

யார் கதாநாயகி?

இப்படத்தில் யஷ்ஷுக்கு கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக முன்னதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது . இதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கரீனா கபூர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. படக்குழு சார்பாக எந்த விதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாததால் இந்த குழப்பஙக்ள் நிலவி வருகின்றன.

ஷாருக்கான் நடிக்கிறாரா?

தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஷாருக்கானிடம் கதை சொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் சரி என்றும் இல்லை என்றும் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் யஷ், ஷாருக்கான் இப்படத்தில் நடிப்பது என்பது உறுதியான தகவல் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தின் நடிகர்கள் பற்றிய தகவல்களை. கூடிய விரைவில் படக்குழு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

TN Education Dept: தமிழக பள்ளிக்கல்வியில் புதிய நடைமுறை
TN Education Dept: விருப்பப் பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண்னை நிர்ணயித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழை தாய்மொழியாக கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10ம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே போதும். தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அந்த வகையில் விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் காண

7 am headlines today 2024 16th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு:
தெற்கு வளர்வதோடு, வடக்கு வளர்வதற்கும் சேர்த்து வாரி வழங்குவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னை வருகை
சென்னை மெட்ரோ ரயில்களில் பெண்களின் பாதுகாப்புக்கு பிங்க் ஸ்குவாட் அமைப்பு – பொதுமக்கள் வரவேற்பு
சென்னை வேப்பேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் – கைது நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்
தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
தமிழக விவசாயிகளை திமுக வஞ்சிக்கிறது – பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு – வழக்கு பிப்ரவரி 19க்கு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறை வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு – செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
3 நாட்கள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி பயணம்
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மாணவர்கள் கல்விக்கடன் பெற வசதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் – ஏராளமானோர் பங்கேற்புஇந்தியா:
அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு கத்தார் சென்றார் பிரதமர் மோடி – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து – பெறப்பட்ட நிதிகளை திருப்பி அளிக்குமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியது
ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 14 ராக்கெட் – 27 மணி நேர கவுண்டவுன் இன்று தொடக்கம்
காஷ்மீரில் இருந்து மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து பாலக்காடு ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை
கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் சித்தராமையா – புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
அரியானாவில் செல்போன் இணையசேவை தடையை பிர்பவரி 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு
திருப்பதி உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு – செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம்உலகம்:
கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை
அமெரிக்காவில் 2 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவால் 1000 விமானங்கள் ரத்து
அமெரிக்காவில் வெற்றி பேரணியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
60 வயதில் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசு – பதவியில் இருக்கும்போது திருமணம் செய்பவர் என்ற சாதனைப் படைத்தார்விளையாட்டு:
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்: ரோகித், ஜடேஜா சதத்தால் முதல்நாளில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவிப்பு
டெஸ்டில் அறிமுகமானார் சர்ப்ராஸ் கான் – ஜடேஜாவின் தவறான அழைப்பால் 62 ரன்களில் அவுட்
சர்ப்ராஸ் கான் ரன் அவுட் – தவறுக்கு வருந்துவதாக ஜடேஜா இன்ஸ்டாகிராமில் பதிவு
சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணிக்கு சறுக்கல் – 15 இடங்கள் இறங்கி 117வது இடம் பிடித்துள்ளது.Published at : 16 Feb 2024 06:52 AM (IST)
மேலும் காண

today movies in tv tamil February 16th television schedule Diary Mynaa Bahubali Comali Jagame Thanthiram
Friday Movies: பிப்ரவரி 16ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி
மதியம் 3.30 மணி: மீண்டும் அம்மன்
சன் லைஃப்
காலை 11.00 மணி: நீதிக்கு தலை வணங்கு மதியம் 3.00 மணி: வெள்ளிக்கிழமை விரதம்
கே டிவி
காலை 7.00 மணி: கலக்குற சந்துரு காலை 10.00 மணி: பூவெல்லாம் கேட்டுப் பார்மதியம் 1.00 மணி: எட்டுப்பட்டி ராசாமாலை 4.00 மணி: லூட்டி மாலை 7.00 மணி: ராஜ வம்சம் இரவு 10.30 மணி: அம்மாவின் கைப்பேசி
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: டைரி இரவு 11 மணி: டைரி
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: இவன் பட்டாளத்தான் மதியம் 12.30 மணி: ஆர்.கே.நகர்மதியம் 3.30 மணி: வெல்வெட் நகரம் இரவு 9.00 மணி: ஆர்.கே.நகர்
ஜெயா டிவி
காலை 10 மணி:பிரம்மாமதியம் 1.30 மணி: சின்ன ஜமீன் இரவு 10.00 மணி: சின்ன ஜமீன்
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: காதல் கோட்டை இரவு 9.30 மணி: மறுபடியும்
ஜீ திரை
காலை 5.30 மணி: மேகாகாலை 8.30 மணி: கப்பல் மதியம் 12 மணி: பட்டுக்கோட்டை பெரியப்பாமதியம் 2.30 மணி: பஜ்ரங்கி 2மாலை 6 மணி: வெள்ளக்காரத் துரை இரவு 8.30 மணி: அடடே சுந்தரா
முரசு டிவி
காலை 6.00 மணி: கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை மதியம் 3.00 மணி: கில்லாடி மாலை 6.00 மணி: முனி இரவு 9.30 மணி: ராமன் தேடிய சீதை
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: சித்ராலஹரி காலை 8.30 மணி: கோமாளி காலை 11.00 மணி: ஆறு அடி புல்லட்மதியம் 1.30 மணி: பாகுபலி தி கன்க்ளூஷன்மாலை 4.00 மணி: மைனாமாலை 6.30 மணி: லிஃப்ட்மாலை 9.30 மணி: ஜகமே தந்திரம்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: கும்பக்கரை தங்கையாகாலை 10.00 மணி: வேலுண்டு வினையில்லை மதியம் 1.00 மணி: மகராசன் மாலை 4.00 மணி: காரைக்கால் அம்மையார்இரவு 7.00 மணி: மூவேந்தர்இரவு 10.30 மணி: கேஸ் லைட் மங்கம்மா
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி இரவு 7.30 மணி: பகவான்
மெகா டிவி
காலை 9.30 மணி: திருவருள் மதியம் 1.30 மணி: சக்கரவர்த்தி இரவு 11 மணி: சித்திகாலை 5.30 மணி: உன் காதல் தடத்தில் காலை 8.00 மணி: மிஸ்டர் காலை 11.00 மணி: கழுகு 2 மதியம் 2.00 மணி: பெட்ரோமேக்ஸ் மாலை 4.30 மணி: யூ-டர்ன் இரவு 7 மணி: மிரள் இரவு 9.30 மணி: காவியத்தலைவன்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: பஞ்ச கல்யாணி மதியம் 1.30 மணி: மேல்மருவத்தூர் அற்புதங்கள் இரவு 8 மணி: டார்க் வாட்டர்இரவு 10.30 மணி: உறவை காத்த கிளி
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: களத்தூர் கண்ணம்மாமாலை 7.30 மணி: சிம்லா ஸ்பெஷல்
மெகா 24 டிவி
காலை 10 மணி: தர்ம பிரபு மதியம் 2 மணி: துணைவன் மாலை 6 மணி: மகா சக்தி மாரியம்மன்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: என் பொண்டாட்டி நல்லவகாலை 10 மணி: செண்பகமே செண்பகமேமதியம் 1.30 மணி: ராணி தேனீமாலை 4.30 மணி: சம்சார தீபம் மாலை 7.30 மணி: அலாவுதீனும் அற்புத விளக்கும் இரவு 10.30 மணி: மண்ணுக்குள் வைரம்மேலும் படிக்க: Super Singer: கண்ணீரில் உருக வைத்த பாடகர் கானா சேட்டுவின் கதை! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!
மேலும் காண

petrol and diesel price chennai on February 16th 2024 know full details | Petrol Diesel Price Today: அதே நிலையில் தொடரும் பெட்ரோல், டீசல் விலை?
Petrol Diesel Price Today, February 16: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 16ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 636வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்மேலும் காண

Sarfaraz Khan Run Out Rohit Sharma Angry Threw His Cap In Frustration IND Vs ENG 3rd Test | Sarfaraz Khan: சர்ஃபராஸ் கானை ரன்
மூன்றாவது டெஸ்ட் போட்டி:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் இங்கிலாந்து அணி வீரர் மார்க் வுட் வீசிய பந்தில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்தார். 10 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்கள் எடுத்தார். மறுபுறம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார்.
அப்போது களம் இறங்கிய சுப்மன் கில் டக் அவுட் ஆக, பின்னர் வந்த ராஜத் படிதர் 5 ரன்களில் நடையைக்கட்டினார். இதனிடையே ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா 196 பந்துகள் களத்தில் நின்ற 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட 131 ரன்களை குவித்தார். அதேபோல் ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக விளையாடினர். அவருடன் அறிமுக வீரராக களம் இறங்கிய சர்ஃப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். அதன்படி, இந்த போட்டியின் மூலம் தன்னுடைய அறிமுக அரைசதத்தை பதிவு செய்தார் சர்ஃபராஸ் கான்.
ஜடேஜாவின் செயல்:
முன்னதாக போட்டி ஆரம்பித்த போது பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த மைதானம் நேரம் ஆக ஆக தொய்வாக மாறி பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுத்தது. அதேநேரம் அதிரடியாக விளையாடி வந்த சர்ஃபராஸ் கான் சதம் விளாசும் பட்சத்தில் கண்டிப்பாக இந்திய அணியின் ஸ்கோர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 400-ஐ தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவெல்லாம் ஜடேஜாவின் செயலால் தவிடுபொடியானது. அந்த வகையில் ஜடேஜா 99 ரன்கள் எடுத்த போது 1 ரன்னை எடுத்து சதத்தை பதிவு செய்வதற்கு திணறிக்கொண்டிருந்தார். அப்போது வீசப்பட்ட பந்தை அடித்த ஜடேஜா 100 வது ரன்னை எடுக்க பாதி தூரம் வரையில் ஓடி வந்து விட்டார். ஜடேஜா ஓடிவருவதை பார்த்த சர்ஃப்ராஸ் கானும் பந்து எங்கே செல்கிறது என்பதை கவனிக்காமல் பாதி தூரம் ஓடிவிட்டார். அப்போது பந்து பில்டரின் கையில் சென்றதை உணர்ந்த ஜடேஜா அப்படியே நின்றுவிட்டார்.
தொப்பியை கழட்டி வீசிய ரோகித் சர்மா:
ஜடேஜாவின் இந்த செயலால் பாதியிலே சிக்கிக் கொண்டு மீண்டும் கிரீசுக்கு செல்வதற்கு முன்பு ரன் அவுட் ஆனார் சர்ஃபராஸ் கான். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
Rohit sharma was not happy with Jadeja…. #INDvsENGTest #INDvENG #SarfarazKhan pic.twitter.com/IixlTG3e7Q
— SadhuWeatherman (@abhiramsirapar2) February 15, 2024
இந்த செயலை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா தலையில் கை வைத்துக்கொண்டு தன்னுடைய தொப்பியை கடும் கோவத்துடன் தூக்கி எறிந்து ஏதோ சில வார்த்தைகளில் திட்டினார். அதன் பிறகு மைதானத்தில் இருந்து பெவிலியனுக்கு திரும்பிய சர்ஃபராஸ் கானிடம் இனி எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனை நம்பாமல் பந்து பில்டரின் கையில் செல்கிறதா என்பதை பார்த்துக்கொண்டு ஓடுங்கள் என்பது போன்ற அறிவுரையை கூறினார். இதனிடையே ரோகித் சர்மா கோவத்தில் தொப்பியை தூக்கி எறிந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Rohit Sharma Record: டெஸ்ட் போட்டியில் சரவெடி…தோனியை பின்னுக்குத்தள்ளிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
மேலும் படிக்க:IND vs ENG 3rd Test: ரோஹித் – ஜடேஜா சதம்.. சர்ஃப்ராஸ் கான் அரைசதம்! 326 ரன்களை குவித்த இந்தியா!

Amy Jackson son Andreas gives her a green signal to marry ed westwick
வாம்மா துரையம்மா… ‘மதராசபட்டினம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் மூலம் மக்கள் மத்தியில் ஒரு துரையம்மாவாகவே இடம் பிடித்தவர் நடிகை எமி ஜாக்சன். ஹாலிவுட் நடிகையான இவரை ஏ.எல். விஜய் தன்னுடைய ‘மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அந்த கதாபாத்திரத்தில் அச்சு அசலாக பொருந்திய எமி ஜாக்சனை தமிழ் சினிமா ஆரத்தழுவி வாய்ப்புகளை குவித்தது. முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து விக்ரமுடன் ஐ, விஜய்யுடன் தெறி, ரஜினிகாந்துடன் 2.0, தனுஷுடன் தங்க மகன், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக கெத்து உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். ஒரு இடைவேளைக்கு பிறகு இந்த பொங்கலுக்கு வெளியான ‘மிஷன் சேப்டர் 1’ திரைப்படத்தில் அருண் விஜய்யுடன் மிக சிறப்பாக நடித்ததற்காக பாராட்டுகளை குவித்தார் எமி ஜாக்சன்.தனது மகனுடன் வெளிநாட்டில் வசித்து வரும் எமி ஜாக்சன் தற்போது ஒரு சில ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். எமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் டேட்டிங் செய்து வந்தார்கள். அவர்களுக்கு 2019ம் ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே பிரிந்தனர்.
இந்நிலையில் மகன் ஆண்ட்ரியாஸ் உடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் அவ்வப்போது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளிவிடுவார். சமீப காலமாக ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் டேட்டிங் செய்து வருகிறார் எமி ஜாக்சன். அவர்கள் இருவரும் போஸ்ட் செய்த புகைப்படங்களை பார்த்து இருவரும் காதலிக்கிறார்கள் என அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் சுவிட்சர்லாந்து சென்ற இந்த ஜோடி மோதிரம் மாற்றி கொண்டு தங்களின் காதலை வெளிப்படுத்தினர். மேலும் இருவர் இடையேயும் நல்ல புரிதல் உள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற தகவலையும் தெரிவித்து இருந்தார் எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்ட்விக்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட எமி ஜாக்சன், அவருடைய மகன் ஆண்ட்ரியாஸ் தங்களின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டான் என்பதை தெரிவித்து இருந்தார். சிறு வயது முதலே ஆண்டிரியாஸ், எட் வெஸ்ட்விக் உடன் மிகவும் நட்புடன் பழகி வந்தான். ஒரு முறை அவனே என்னிடம் வந்து, ஏன் இன்னும் நீங்கள் எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்து கொள்ளவில்லை என கேட்டான். அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் கேட்டது மட்டுமில்லாமல், எட் வெஸ்ட்விக்கிடமும் சென்று ஏன் என்னுடைய மம்மியை நீங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என கேட்கப்போகிறேன் என சொல்லி ஷாக் கொடுத்தான்.
நிச்சயம் எட் வெஸ்ட்விக் என்னையும், ஆண்ட்ரியாஸையும் நன்றாக பார்த்து கொள்வார் என நம்புகிறோம் என தெரிவித்து இருந்தார் எமி ஜாக்சன்.மேலும் காண

Sarfaraz Khan Maiden Fifty Sarfaraz Khan Father Wife Reaction Viral Sarfaraz Khan Half Century IND Vs ENG 3rd Test
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய யஜஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த சுப்மன் கில் டக் அவுட் முறையில் வெளியேறினார். ராஜத் படிதர் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 196 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 131 ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் 199 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். முன்னதாக இந்த போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் இறங்கினார் சர்ஃபராஸ் கான். தன்னுடைய அறிமுக போட்டியில் எப்படி விளையாட போகிறார் கான் என்ற எதிர்பார்ப்பு இந்திய அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் எழுந்தது.
ப்ளைன் கிஸ் கொடுத்த சர்ஃப்ராஸ் கான் மனைவி:
So so so happy for him, Sarfraz khan. You champ. ❤️💪 #INDvENGTest #SarfarazKhan pic.twitter.com/AKjSZTI7WF
— Prayag (@theprayagtiwari) February 15, 2024இந்நிலையில் தான் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் விளாசி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் சர்ஃபராஸ் கான். அதன்படி மொத்தம் 66 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 62 ரன்களை குவித்தார். இதனிடையே சர்ஃபராஸ் கான் விளையாடுவதை மைதானத்தில் இருந்து அவருடைய தந்தை நௌஷாத் கான் மற்றும் மனைவி ரோமானா ஜாஹூர் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டனர். அப்போது சர்ஃப்ராஸ் கான் 48 வது பந்தில் அரைசதம் விளாசியாதை பார்த்த அவருடைய மனைவி ரோமானா ஜாஹூர் மற்றும் தந்தை நெளஷாத் கான் நெகிழ்ச்சியில் மூழ்கினார்கள்.
பின்னர் சர்ஃப்ராஸ் கான் மனைவி ரோமனா ஜாஹூர் மைதானத்தில் இருந்த படி தன்னுடைய கணவரை பார்த்து ப்ளைன் கிஸ் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தற்போது அது தொடர்பான வீடியோ காட்சி தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக 26 வயது ஆகும் சர்ஃப்ராஸ் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி ரோமானா ஜாஹூரை கரம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்…சோயப் பஷீரை கழட்டி விட்ட இங்கிலாந்து! பிளேயிங் லெவன் அறிவிப்பு!
மேலும் படிக்க: Watch Video: இப்படி கூடவா பந்து போடுவாங்க.. வாயை பிளந்த நெட்டிசன்கள்…குவைத் கிரிக்கெட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
Kavin, who is acting in Vetrimaran movie; Udayam theater closure, Vairamuthu in grief – Cinema headlines | Cinema Headlines :வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்; உதயம் தியேட்டர் மூடல், வேதனையில் வைரமுத்து
Kavin: வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்.. வெளியான சூப்பர் அப்டேட் இதோ!
கவினின் அடுத்த புதுப்படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். கிராஸ் ரூட் கம்பெனி இப்படத்தை தயாரிக்க வெற்றி மாறனின் உதவி இயக்குநரான விகர்னன் அசோகன் இயக்கவுள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க
Udhayam Theatre: கண்ணீர் வடிக்கின்றேன்.. உதயம் தியேட்டர் மூடப்படுவதால் வைரமுத்து வேதனை!
சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து உதயம் தியேட்டர் தொடர்பான பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
Ramki: நிரோஷாவே வேண்டாம் என சொல்லியும் கேட்கல.. நடிகர் ராம்கி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
நேர்காணல் ஒன்றில் பேசிய ராம்கி, நிரோஷாவுடன் தனக்கு காதல் ஏற்பட்ட தருணம் பற்றி பேசியுள்ளார். அதில்,”நிரோஷாவை என்னிடம் அறிமுகம் செய்தபோது அவர் கமலுடன் சூரசம்ஹாரம் படத்தில் நடித்து வந்தார். எந்த பத்திரிக்கை எடுத்தாலும் அட்டைப்படத்தில் இடம்பிடித்தார். நிரோஷாவின் பின்னணி என்பது வேற லெவலில் இருந்தது. அக்னி நட்சத்திரம் படத்தில் நடித்த அவரை செந்தூரப்பூவே படத்தில் ஹீரோயினாக போடலாம் என சொன்னார்கள். ஆனால் நான், ‘இவங்க வேண்டாம். நல்ல பொண்ணா நான் சொல்றேன்’ என சொன்னேன்.மேலும் படிக்க
SPB Pallavi: பல ஆண்டுகளாக பாடாமல் இருக்கும் எஸ்.பி.பி., மகள் பல்லவி – என்ன காரணம் தெரியுமா?
தான் ஏன் பாடவில்லை என்பதை பல்லவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்பா என்னிடம் நிறைய கிளாசிக்கல் இசை கற்றுக் கொள்ள சொன்னார். ஆனால் எனக்கும் தம்பிக்கும் பெரிதாக விருப்பமில்லை. எஸ்.பி.பி.யின் பையன், பொண்ணு என்று சில வாய்ப்புகள் வந்தது. ஒரு சில காரணங்களுக்காக நான் பாடுவதை நிறுத்தி விட்டேன். குடும்பத்தினருடன் பிஸியாகி விட்டதால் அதனால் விருப்பம் போய்விட்டது. ஆனால் முறைப்படி பயிற்சி எடுக்காமல் மீண்டும் களமிறங்கினால் அது சரியாக இருக்காது. நான் நியாயமாக இருக்கிறேன் என்று சொல்வதை விட அப்பாவின் பெயரை கெடுக்காமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மேலும் படிக்க
Yezhu Kadal Yezhu Malai: மறுபடியும் நீ.. என் தோழி ஆவாயா..! மனதை உருக்கும் ஏழு கடல் ஏழு மலை முதல் பாடல் ரிலீஸ்
ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகி இருந்தது. இந்த நிலையில் ஏழுமலை ஏழு கடல் படத்தின் முதல் பாடலான ‘மறுபடி நீ’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகரும் பாடகருமான சித்தார்த் பாடியுள்ளார். இந்த பாடல் மெலடி பாடலாக உள்ளதால், பெரும்பான்மையான ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. மேலும் படிக்கமேலும் காண

Shriya Saran Photos : தங்க நிற உடையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை ஸ்ரேயா சரண்!
Shriya Saran Photos : தங்க நிற உடையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை ஸ்ரேயா சரண்!
zee tamil anna serial february 15th episode update | Anna Serial :சூடாமணிக்கு உயிருக்கு வந்த ஆபத்து.. இசக்கியை தலை மூழ்கிய ஷண்முகம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் வைத்து இசக்கி முத்துபாண்டியிடம் வாழ்வதாக அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, பஞ்சாயத்துக்கு நடக்கும் நேரத்தில் ஜெயிலில் இருக்கும் சூடாமணிக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்று சாக போய் கடைசியாக கண் விழிக்கிறாள். அடுத்து வீட்டிற்கு வந்த ஷண்முகம் இனிமே இந்த வீட்டில் யாரும் இசக்கியை பற்றி பேச கூடாது. அவளுக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறான்.
இந்த நேரம் பார்த்து இசக்கியும் பாக்கியமும் ஆட்டோவில் வந்து இறங்க உள்ளே வர விடாமல் தடுத்து நிறுத்தும் ஷண்முகம் இசக்கியின் துணிகளை தூக்கி வெளியே போட்டு கொளுத்துகிறான். இனிமே ஓட்டும் இல்ல உறவும் இல்ல என்று சொல்ல இசக்கி கண்ணீருடன் வெளியேறுகிறாள்.
அடுத்து பாக்கியம் அவளை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்ல ரூமுக்குள் சென்ற இசக்கி ரத்தனாவோட வாழ்க்கைக்காகவும் நீ கொலைகாரனாக ஆகிட கூடாது என்பதற்காகவும் தான் இப்படியொரு முடிவை எடுத்தேன், இதை நான் பிடித்து எடுக்கல என்று கலங்கி அழ சிவபாலன் இதை கேட்டு விடுகிறான்.
உடனே அவன் ரூமுக்குள் வர இசக்கி அழுகையை அடக்கி கொண்டு எதுவும் காட்டி கொள்ளாமல் இருக்க சிவபாலனும் எதையும் கேட்காதது போல் இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Ninaithen Vanthai :ஸ்கெட்ச் போட்ட குழந்தைகள்.. வாண்டடாக சிக்கிய மனோகரி – நினைத்தேன் வந்தாய் எபிசோட் அப்டேட்!
Karthigai Deepam :கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.. தீபாவுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Ethirneechal : கோர்ட்டுக்கு வந்த சாருபாலா: அதிர்ச்சியில் உறையும் குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று!
மேலும் காண

Ravindra Jadeja : நான் செய்த தவற்றை நினைத்து வருந்துகிறேன்..இன்ஸ்டாவில் ஜடேஜா உருக்கமான பதிவு!
Ravindra Jadeja : நான் செய்த தவற்றை நினைத்து வருந்துகிறேன்..இன்ஸ்டாவில் ஜடேஜா உருக்கமான பதிவு!
Odisha CM Naveen Patnaik follows Tamil Nadu CM Stalin initiative in organ donation
இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருந்து வரும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பார்த்து, பல மாநில அரசுகள், அதை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தியுள்ளது. சத்துணவு திட்டம் தொடங்கி மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வரை பல திட்டங்களை சொல்லி கொண்டே போகலாம்.
அந்த வகையில், உடல் உறுப்பு தானம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பை ஒடிசா அரசு, தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
உடல் உறுப்பு தானம்:
உடல் உறுப்பு தானம் செய்வது மகத்தான செயலாக பார்க்கப்படுகிறது. ஒருவரின் உயிர் என்பது விலை மதிப்பற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் சரியான உடல் உறுப்பு கிடைக்காததால் உயிரிழப்புகள் நிகழ்வதுண்டு. இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயலாற்றி வருவதாக பாராட்டை பெற்று வருகிறது. சமீபத்தில், சிறந்த உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புக்கான விருதை தமிழ்நாடு பெற்றது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, அந்த விருதை வழங்கியிருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தமிழ்நாட்டை பின்பற்றும் ஒடிசா:
இந்த நிலையில், தமிழ்நாட்டை போன்றே, இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் உறுப்புகளை தானம் செய்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை உறுப்பு தானம் தொடர்பாக பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.
Odisha CM @Naveen_Odisha announces that last rites of those who save the lives of others by donating their organs will be done with State honour. The step is likely create widespread awareness in the field of organ donation, reports @satyabarik @the_hindu
— Nistula Hebbar (@nistula) February 15, 2024மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்பை பெறும் திட்டம், தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, 1,706 பேரிடமிருந்து உடல் உறுப்பு பெறப்பட்டுள்ளது. 786 இதயங்கள், 801 நுரையீரல், 1,566 கல்லீரல், 3,047 சிறுநீரகங்கள், 37 கணையம், ஆறு சிறுகுடல்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இந்த திட்டத்தின் முலம் பெற்று மக்கள் பயன் அடைந்துள்ளனர். உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்யும் உரிமத்தை பெற்ற மருத்துவமனைகளை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
மேலும் காண

Super singer season 10 vijay tv contestant gana settu story made everyone melt in super singer show
கொண்ட்டாடமும் கோலாகலமுமாகத் துவங்கி நடந்து வரும் சூப்பர் சிங்கர் சீனியர் 10 வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வாரம் பார்க்கும் அனைவரையும் நெகிழ வைக்கும்படியான அற்புதமான சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. எளிய பின்னணியிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா பாடகர் சேட்டுவிற்கு சினிமா வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.
சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் நிகழ்ச்சியிலும் அந்நிகச்சி இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே இசையமைப்பாளர் தமன் பல ஜூனியர் பங்கேற்பாளர்களுக்கு சினிமா வாய்ப்பினை அளித்தார். அதே போல் இப்போது சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆரம்பகட்டத்திலேயே, ஒரு பங்கேற்பாளருக்கு சினிமா வாய்ப்பை உறுதி செய்திருப்பது எல்லோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் இசைத்துறையில் புதிய புரட்சியை உருவாக்கிய, சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், தற்போது துவங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. பல அற்புத திறமையாளர்களின் பங்களிப்பில், ஒவ்வொரு வாரமும் பல நெகிழ்வான சம்பவங்களால் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.
மிக எளிய பின்னணியிலிருந்து வந்த கானா பாடகர் மணிகண்டன் எனும் கானா சேட்டு, கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இறப்பு நிகழ்ச்சிகளில் கானா பாடியும், ஓட்டலில் சர்வராகவும் கனவைச் சுமந்து கொண்டு, வாழ்க்கையில் போராடி வரும் கானா சேட்டுவின் கதை, அனைவரையும் உருக வைத்தது. தனக்குப் பிறந்த மகன் எந்த கஷ்டமும் படக்கூடாது என்று, இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளதாக அவர் கூறியது அனைவரது கண்ணிலும் கண்ணீர் வர வைத்தது.
கடந்த வார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா சேட்டு, கானா பாடலில் வித்தியாசமாக, பக்திப்பாடல் ஒன்றை அற்புதமாகப் பாடி அனைவரையும் திரும்பி வைத்தார். அவரது பாடலைக் கேட்ட நீதிபதிகள் அனைவரும் இணைந்து, கானா சேட்டின் குடும்பத்தை மேடையேற்றி அழகு பார்த்ததுடன், பரிசுகள் தந்து, அவரது மகனுக்கு தீட்சன் எனப் பெயரிட்டது, ஒரு நெகிழ்ச்சி சம்பவமாக அமைந்தது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தான் இசையமைக்கும் படத்தில் கானா சேட்டுக்கு பாடும் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். எதிர்பாராத இந்த சர்ப்ரைஸால் கானா சேட்டு மகிழ்ச்சியோடு நன்றி கூறினார்.
கானா பாடகருக்கு சினிமா வாய்ப்பு
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், இறுதிக்கட்ட வெற்றியாளர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதைத் தாண்டி, ஆரம்பத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு பங்கேற்பாளருக்குக் கிடைத்தது அனைவரையும் வியக்கவைத்த அற்புத தருணமாக அமைந்தது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் இந்நிகழ்ச்சி மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிய பின்னணியிலிருந்து, இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பல திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் பலர் ஜொலித்து வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், 10 வது சீசன் துவங்கி நடந்து வரும் நிலையில், இந்நிகழ்ச்சி ஆரம்பக் கட்டத்திலேயே பல நெகிழ்ச்சி சம்பவங்களால் பார்வையாளர்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள். பல திறமையாளர்களுக்கான அடையாளமாகத் திகழும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த 10 வது சீசனிலும் களைகட்டி வருகிறது.மேலும் காண

அனைத்து துறைகளும் வீழ்ச்சி.. ஜப்பானை தொடர்ந்து பொருளாதார மந்தநிலையில் சிக்கிய பிரிட்டன்!

பிரிட்டனில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருப்பது உலக பொருளதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, பொருளாதாரத்தை சீர்செய்வேன் என்ற உறுதிமொழியுடன் ஆட்சி அமைத்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பொருளாதார மந்தநிலை பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

பொருளாதார மந்தநிலை என்றால் என்ன?

தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வீழ்ச்சி அடைந்தால் அதுவே பொருளாதார மந்தநிலை எனப்படும். அந்த வகையில், ஜப்பானை தொடர்ந்து பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் 2023ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 0.1 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்த நிலையில், நான்காவது காலாண்டில் 0.3 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டது.

பிரிட்டனில் அனைத்து முக்கிய துறைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தி, கட்டுமானம், மொத்த விற்பனை ஆகிய துறைகள் வீழ்ச்சிக்கான முக்கிய காரணியாக உள்ளது என தெரிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு, பிரிட்டன் ஜிடிபி 0.1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியால் நிலைகுலையும் பிரிட்டன்:

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பார்க்கையில், கொரோனாவால் பாதிப்புக்குள்ளான 2020ஆம் ஆண்டை தவிர்த்தால், இது பிரிட்டனின் மோசமான வளர்ச்சியாகும். கடந்த 2009ஆம் ஆண்டு, உலக பொருளாதார வீழ்ச்சியால் உலக நாடுகளே ஸ்தம்பித்தன. கடந்த 2022ஆம் ஆண்டு, பிரிட்டன் 4.3 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்தது.

இந்தாண்டின் இறுதியில் பிரிட்டன் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வெளியாகி வரும் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை கன்சர்வேடிவ் கட்சிக்கு மேலும் பின்னடைவை தந்துள்ளது.

பிரிட்டனை போன்றே, ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் 3.3 சதவீதமாக குறைந்த நிலையில், அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 0.4 சதவீதமாக சரிந்துள்ளது. இதனால், உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஜப்பான் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஆபத்தா?

முதலீடு மற்றும் உள்நாட்டு தேவையின் அடிப்படையில் இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று கூறுகின்றனர். வல்லரசு நாடுகள் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்து வருகிறது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 3 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வருகிறதா சரத் பவார் அரசியல் அத்தியாயம்? முற்றுப்புள்ளி வைத்த மகாராஷ்டிரா சபாநாயகர்!

கடந்தாண்டு, மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டு இரண்டாக உடைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தனர்.

சரத் பவாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அண்ணன் மகன்:

மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், சமீபத்தில்தான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அஜித் பவாருடன் அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், சரத் பவாருக்கும் அவரின் அண்ணன் மகனுமான அஜித் பவாருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் தொடர் பிரச்னை நிலவி வந்த நிலையில், இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்றது. அஜித் பவாரின் கட்சியை உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

அதன்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கடிகார சின்னமும் அஜித் பவாருக்கு ஒதுக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களும் எம்பிக்களும் அஜித் பவாருக்கு ஆதரவாக இருந்ததால், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

முடிவுக்கு வருகிறதா சரத் பவார் அரசியல் அத்தியாயம்?

இந்த நிலையில், மேலும் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளார் சரத் பவார். அஜித் பவாருக்கு ஆதரவாக இருக்கும் 41 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் இன்று அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பின்பற்றியே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று நான் நம்புகிறேன். அவர்களே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அஜித் பவாருக்கு 41 எம்எல்ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. இது மறுக்க முடியாதது. தகுதி நீக்கம் கோரிய அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்படுகின்றன" என்றார்.

அஜித் பவார் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அவகாசம் அளித்தது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில், அஜித் பவாருக்கு ஆதரவாக 41 எம்எல்ஏக்களும் சரத் பவாருக்கு ஆதரவாக 12 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

யார் இந்த சரத் பவார்?

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் சரத் பவாரும் முக்கியமானவர். இவர்1958ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியலில் உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டவர்.

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிரிவுகளின்போது சரத் பவார் என்கிற பெயரும் அடிபட்டுக்கொண்டே இருந்தது. இவர் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 4 முறை பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மத்திய பாதுகாப்புத் துறை, வேளாண்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

இத்தாலியில் பிறந்த காரணத்தால் சோனியா காந்தியை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களில் சரத் பவாரும் ஒருவர். இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டதை தொடர்ந்து, மற்ற தலைவர்களுடன் இணைந்து 1999 ஆம் ஆண்டு மே மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தனர்.

mammootty starrer bramayugam movie twitter review
ஹாரர் திரைப்படத்தில் மம்மூட்டி மிரட்டியுள்ளதாக ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
பிரம்மயுகம்
மம்மூட்டி நடித்து இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் “பிரம்மயுகம்”. பூதக்காலம் படத்தை இயக்கிய ராஹுல் சதாசிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அர்ஜூன் அசோகன், அமல்டா லிஸ், மற்றும் சித்தார்த் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிர்ஸ்டோ ஸேவியர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளார். ஹாரர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என்று படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நடிகர் மம்மூட்டி கூறியிருந்தார். இந்நிலையில் பிரம்மயுகம் படத்தைப் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
தேர்ந்த திரைக்கதையும் சிறப்பான நடிப்புல் கலந்து இப்படம் அமைந்துள்ளதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
#Bramayugamreview (From UK)A cult classic with a good storyline and a proper screenplay.Perfect performance from all the lead heroes. Never saw such from mollywood,the Bgm and DOP Work was perfect Rating : 4/5 Worthy watch. #Bramayugam @mammukka pic.twitter.com/GZJDsQGHgg
— JD🦇 (@johndurairajvj) February 15, 2024
நடிகர் மம்மூட்டி இப்படத்தில் பார்வையாளர்களை அச்சமூட்டும் அளவிற்கு நடித்துள்ளதாகவும், இதுவரை இல்லாத புதுமையான ஹாரர் படமாக இப்படம் உருவாகி இருப்பதாக மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
*#Bramayugam**First Half Review -**I screamed out of fear 8 Times whenever #Mammootty came 😥**His character is so creepy and scary !!**The person sitting near me nearly had a heart attack from one scene…that was the scariest scene of the movie 😭**Superb Movie 👏🏻* pic.twitter.com/CSsxfSIHbT
— Classic Cinema (@ClassicCin86483) February 15, 2024
படத்தின் கதை மட்டுமில்லாமல் , இசை , ஒளிப்பதிவு என எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
#Bramayugam Review:Superb Horror Thriller 👏#Mammootty again shows his versatility & performs well 👌#ArjunAshokan & others were good too ✌️Technical Aspects (BGM etc) were brilliant 😃Writing Works 👍Rating: ⭐⭐⭐💫/5#BramayugamReview #Mammootty𓃵 pic.twitter.com/ibFMtrmnsO
— Swayam Kumar Das (@KumarSwayam3) February 15, 2024
நடிகர் மம்மூட்டி தவிர்த்து படத்தில் நடித்த பிற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளார்கள். மம்மூட்டி நடித்து சமீபத்தில் வெளியான காதல் தி கோர் படம் மற்றும் கன்னூர் ஸ்குவாட் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது,
மேலும் காண

Mahua Moitra Summoned By Enforcement Directorate In Foreign Exchange Violation Case | ED
Mahua Moitra : லஞ்சம் பெற்ற வழக்கில் மக்களவை உறுப்பினர் பதவியை இழந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் மஹுவா மொய்த்ராவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
தொடர் சவால்களை சந்திக்கும் மஹுவா மொய்த்ரா:
நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் அனல் பறக்க கேள்விகளை எழுப்பியவர் மஹுவா மொய்த்ரா. இந்த கேள்விகளை எழுப்ப இவர், லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. மொய்த்ரா, தன்னிடம் லஞ்சம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார்.
இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபேவிடம் அளித்த மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய், மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐயிடம் புகார் அளித்தார்.
இரு தரப்பையும் அழைத்து, மக்களவை நெறிமுறைகள் குழு, விசாரணை நடத்தியது. இறுதியில், மக்களவையில் இருந்து மொய்த்ராவை சஸ்பெண்ட் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துரைத்தது. இதை தொடர்ந்து, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.
ஸ்கெட்ச் போட்டு தூக்கும் அமலாக்கத்துறை:
தொடர் சவால்களை சந்தித்து வரும் மஹுவா மொய்த்ராவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியது தொடர்பாக மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது மட்டும் இன்றி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடக்க உள்ள விசாரணைக்கு வரும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்.
மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்தது.
அந்த வரிசையில், நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவரான ஹேமந்த் சோரனை தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி தரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விவசாய சின்னத்தை இழக்கிறதா நாம் தமிழர்? கர்நாடக கட்சியால் வந்த சிக்கல்.. அடுத்த பிளான் என்ன?மேலும் காண

Anju Kurian Photos : நடிகை அஞ்சு குரியனின் க்யூட்டான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்!
Anju Kurian Photos : நடிகை அஞ்சு குரியனின் க்யூட்டான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்!
Sarfaraz Khan Maiden Fifty Dinesh Karthik Dhawan Yusuf Pathan Congratulated Sarfaraz Khan On His Test Debut Fifty
மூன்றாவது டெஸ்ட்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 326 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினார்கள். அதேபோல், சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். அதன்படி, 66 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 62 ரன்களை குவித்தார். இச்சூழலில் அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசியதன் மூலம் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
பாராட்டு மழையில் சர்ஃப்ராஸ் கான்:
இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை சர்ஃப்ராஸ் கானுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில், “சர்ஃபராஸ் குடும்பன் என்ன சொல்கிறது என்பது தொடர்பான புகைப்படங்களை பார்க்கிறேன். நாட்டுக்காக விளையாடுவதற்காக இரவும் பகலும் உழைக்கும் பல சிறுவர், சிறுமிகளுக்கு இது ஒரு பாடம். கடினமாக உழைக்கவும். உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். அது உண்மையாகிவிட்டால், அதைவிட சிறந்த உணர்வுகள் எதுவும் இல்லை.
Just watching pictures of what it meant to the Sarfaraz family. It’s a lesson for a lot of the young boys and girls toiling day n night to play for the country Work hard Chase your dreams When it comes true , there are no better feelings than that It’s not just a win…
— DK (@DineshKarthik) February 15, 2024
இது சர்ஃபராஸ், அவரது அப்பா மற்றும் குடும்பத்திற்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல இது ஒரு விளையாட்டாக கிரிக்கெட்டுக்கு கிடைத்த வெற்றி உள்நாட்டில் உள்ள பல இளம் திறமையாளர்கள் இதைப் பார்த்து, இந்திய அணிக்காக விளையாடுவதற்குத் தங்களைத் தூண்டும் அளவுக்கு ஊக்கமளிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
ஷிகர் தவான் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில, “ உங்கள் டெஸ்ட் அறிமுகத்திற்கு வாழ்த்துகள். சர்ஃபராஸ். பல வெற்றிகளில் இதுவே முதல் வெற்றியாக இருக்கட்டும்” என்று கூறியுள்ளார். யுசூப் பதான் வெளியிட்டுள்ள பதிவில், “டெஸ்டில் அறிமுகமாகி 50 ரன்களை அடித்ததற்கு வாழ்த்துகள் சர்ஃபராஸ் கான். உள்நாட்டு கிரிக்கெட்டில் உங்கள் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பலனளித்துள்ளது. குறிப்பாக உங்கள் பெற்றோர் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் ஆரம்பித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜொலித்துக் கொண்டே இருங்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Sarfaraz Khan: சர்ஃப்ராஸ் கானை ரன் – அவுட் செய்த ஜடேஜா…கோபத்தின் உச்சிக்கு சென்ற ரோஹித் செய்த செயல்!வைரல் வீடியோ!
மேலும் படிக்க:Watch Video: அறிமுக போட்டி…அரைசதம் விளாசிய சர்ஃப்ராஸ் கான்…ப்ளைன் கிஸ் கொடுத்த மனைவி!வைரல் வீடியோ!

Monkey fever Salem District Collector said that checking has been increased at state borders – TNN | குரங்கு காய்ச்சல் எதிரொலி: வெளிமாநில எல்லைகளில் கண்காணிப்பு அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, கருமந்துறை, பாலமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் காட்டுத் தீ ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு மலைப்பகுதியில் தீ விபத்துகள் ஏதும் ஏற்படாமல் இருக்க சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான ஏற்காடு, கருமந்துறை போன்ற மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து வர தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த விவசாய மிச்சங்களை எரிக்க கூடாது என எச்சரித்துள்ள சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, கோடை காலங்களில் அரசால் தெரிவிக்கப்படும் வன பாதுகாப்பு நடவடிக்கைகளை சுற்றுலா பயணிகளும், வனப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களும் பின்பற்றி வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்திட உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடைய சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது, “வெளி மாநிலங்களில் குரங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதாரத்துறையால் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை சேலத்தில் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.மேலும், சேலம் ஏற்காடு மலைப் பகுதிகளில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லாமல் இருக்க சேலம் மாவட்ட வனத்துறை மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்காடு மலைப்பாதையில் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
குறிப்பாக கோடை காலம் துவங்கி வரும் நிலையில் வனப்பகுதிகளில் இருக்கும் வன உயிரினங்கள் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு வருவது குறித்த கேள்விக்கு, வனத்துறை மூலமாக வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வருவது குறையும் என்றும் கூறினார்.மேலும் காண

Keerthy Suresh Photos : இணையத்தை கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்!
Keerthy Suresh Photos : இணையத்தை கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்!
கல்வி கடன் முகாம்: திருவண்ணாமலையில் 63 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட கடனுதவி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கல்வி கடன் முகாமில் 400 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

வங்கிக்கடன் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:

கல்விக்கடன் முகாமில் ஒரு தலைமுறை மாற்றம் பெற வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கல்வி கற்றால் மட்டுமே முன்னேற முடியும். கல்வி தான் அழகு. கல்வி தான் செல்வம், கல்வி இல்லாமல் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போய் விடக்கூடாது என்பதற்கு ஒருவர் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தான் கல்வி கற்க முடியவில்லை என்கிற சூழ்நிலை வரக்கூடாது என்ற அடிப்படையில் கல்வி கடன் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

கல்வி கடனை அனைத்து மாணவர்களும் பெற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் கல்வி கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்பதற்காக இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக பல இடங்களில் கல்வி கடன் அளிக்க மறுக்கின்றனர். எனவே அந்த சிக்கலை நீக்குவதற்காக அனைத்து வங்கிகளும் இணைந்து இந்த சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. கல்வி கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்த முகாம் மூலம் எடுத்துரைப்பார்கள். அதன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து அந்த விதிமுறைகளை பின்பற்றி அனைவருக்கும் கல்வி கடன் வழங்க நாங்கள் இந்த முகாம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும் வங்கிகளில் கல்வி கடன் பெறும் மாணவர்கள் அந்த கல்வி கடனை திருப்பி செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் கல்வி கடன் அடுத்த தலைமுறைகளுக்கு வழங்க ஒரு முன் உதாரணமாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்தியன் வங்கி மூலம் 20 மாணவர்களுக்கு ரூ 1 கோடியே 3 இலட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் 10 மாணவர்களுக்கு ரூ 41 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 7 மாணவர்களுக்கு ரூ19 இலட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலும், பாங்க ஆப் பரோடா சார்பில் 6 மாணவர்களுக்கு ரூ84 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் 4 மாணவர்களுக்கு ரூ 16 இலட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மூலம் 5 மாணவர்களுக்கு ரூ70 இலட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலும், கனரா வங்கி மூலம் 3 மாணவர்களுக்கு ரூ 6 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் 1 மாணவர்களுக்கு ரூ 1 இலட்சம் மதிப்பிலும், ஐடிபிஐ வங்கி மூலம் 1 மாணவர்களுக்கு ரூ 2 இலட்சம் மதிப்பில் கொடுக்கப்பட்டது. கல்வி கடனாக 63 மாணவர்களுக்கு ருபாய் 3 கோடியே 45 இலட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் மாணவர்களுக்கு கல்வி கடன் உதவியினை வழங்கினார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் மு.அருண்பாண்டியன் மற்றும் அனைத்து வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Education scholarship Backward students can apply for in Tiruvannamalai dist – TNN | Education scholarship: பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பிவ) மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை, பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம்
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூபாய் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்
நடப்பாண்டில் புதியது மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login-,இல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verfication செய்யவேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதியதிற்கு (Fresh) 01.02.2024 முதல் செயல்பட துவங்கும் புதியதிற்கான விண்ணப்பங்களை மாணாக்கர்கள் 29. 02. 2024-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.மேலும் காண

Man Asks Blinkit To Let Him Deliver Flowers To Girlfriend on Valentines Day CEO Albinder Dhindsa Reacts
சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். ஒருவர், இன்னொருவரை காதலிக்க காரணம் எல்லாம் தேவை இல்லை. எந்த வித காரணமும் இல்லாமல் ஹார்மோன்கள் விளையாடும் விளையாட்டே காதல். உலகை விழுங்கும் ஆபத்தான மிருகம் வெறுப்பு என்றால் அதை கட்டி ஆளும் ஆயுதம்தான் காதல்.
இப்படிப்பட்ட மகத்தான உணர்வை போற்றும் காதலர் தினம் வழக்கம்போல் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. காதலர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ரோஸ், சாக்லெட்களை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேரில் பார்த்து கொள்ள முடியாத காதலர்களுக்கு தொழில்நுட்பம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
காதலியை பார்க்க முடியாத தவித்த காதலன்:
அந்த வகையில், நேரில் பார்க்க முடியாத தன் காதலிக்கு பூக்களை வாங்க இளைஞர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது. பொருள்களை வாங்கி ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யும் பிளிங்கிட் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளார் இளைஞர்.
காதலர் தினத்தன்று தனது காதலியின் பெற்றோர் அவரை வெளியே செல்ல விடவில்லை தடுத்து வைத்திருப்பதாக கூறி, தன்னுடைய காதலியிடம் அழைத்து செல்லுமாறு பயனர் ஒருவர் பிளிங்கிட் டெலிவரி நிர்வாகியிடம் உதவி கேட்டுள்ளார். இந்த ஸ்கிரீன்ஷாட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் பிளிங்கிட் தலைமை செயல் அதிகாரி (CEO) அல்பிந்தர் திந்த்சா.
இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், “இந்தியா, ஆரம்நிலையில் இருப்பவர்களுக்கு அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகிறது” என பதிவிட்டுள்ளஆர். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. எக்ஸ் தளத்தில் இந்த பதிவு 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.
காதலர் தினத்தன்று செம்ம ரகளை:
மேலும், அந்த காதலரின் ஆசையை பூர்த்தி செய்யும்படி எக்ஸ் பயனர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ஒரு பயனர், இதை விளம்பர உத்தி என விமர்சனம் செய்துள்ளனர்.
அந்த வகையில் கருத்து பதிவிட்ட பயனர் ஒருவர், “கட்டணத்தை வசூலித்துவிட்டு அவரை டெலிவரி செய்யவும். உங்களுக்கான புதிய வருவாய் வந்திருக்கிறது. அனைவருக்கும் மகிழ்ச்சி தானே” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “இது விளம்பர உத்தி. சகோ, கஸ்டமர் சப்போர்ட்டில் இந்த அளவுக்கு வேகமாக பதில் அளித்ததை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு விளம்பர உத்தியை வகுத்து தரும் நபருக்கு போதுமான அனுபவம் கிடையாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என கலாய்த்துள்ளார்.
India is clearly not for beginners 🤦♂️ https://t.co/JIqwpls2pN
— Albinder Dhindsa (@albinder) February 14, 2024மேலும் காண

பெரியார் பல்கலை., துணைவேந்தர், பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விதி மீறல் குற்ற செயல்களில் ஈடுபட்ட பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு விதி மீறல்கள் நடைபெற்று உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகந்நாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் மீது தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை கண்டித்து பெரியார் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஊழல் மறைக்கேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொண்டு நிரூபணம் ஆகியும் இதுவரை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேலை தமிழக அரசு தகுதி நீக்கம் செய்யவில்லை. மேலும் இப்பிரச்சனையில் தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் எனவும் உடனடியாக இருவரையும் தமிழக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் நேரடியான தலையீடு செய்து வருகிறார். குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இந்துத்துவா கொள்கைகளை பரப்பி வரும் செயல் நீடித்து வருகிறது. எனவே பெரியாரின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில் சாதிய மத போதனைகள் அதிகம் அரங்கேறி வருவதாகவும் மாணவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் செயல்பட்டு வருவதாகவும் இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் முறைகேட்டு மற்றும் விதிமீறல் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேலு இருவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் சம்சீர் அகமது மற்றும் மாநில செயலாளர் அரவிந்த சாமி இருவரும் தெரிவித்தனர்.

Yashika Aannand Photos : சிவப்பு உடையில் ரோஜாவாய் பூத்து நிற்கும் நடிகை யாஷிகா ஆனந்த்!
Yashika Aannand Photos : சிவப்பு உடையில் ரோஜாவாய் பூத்து நிற்கும் நடிகை யாஷிகா ஆனந்த்!