ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்மணி ராகவனுக்கும் திருமணம் பேசி பூ வைக்கும் நிகழ்வு நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வள்ளியும் தண்டபாணியும் தனியாக சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது வள்ளி தண்டபாணியிடம் “இந்தக் கல்யாணம் நடக்காது, கேசவன் உன் பொண்ணுக்கு தான்” என வாக்கு கொடுக்கிறாள்.

இதனைத் தொடர்ந்து வீரா மாறனை சந்தித்துப் பேச வருகிறாள். அவனை சந்தித்து “இப்பொழுது இரண்டு குடும்பமும் ஒண்ணாக போகுது, அதனால பகை எல்லாம் வேண்டாம், நான் மன்னித்து விட்டேன்” என்று பேச மாறன் திமிராக “நீ என்னை என்ன மன்னிக்கிறது. ஜட்ஜ் ஐயாவே என்ன மன்னிச்சிட்டாரு, அதனாலதான் பெயில் கொடுத்தாரு, கிளம்பு கிளம்பு” என சொல்லி அனுப்புகிறான்.

வீரா அங்கிருந்து கிளம்பி வந்ததும் மாறனின் நண்பர்கள் “ஏன் அந்த பொண்ணு கிட்ட இப்படி பேசின?” என்று கேட்க, “சிலர் நல்லவனா இருக்கணும்னு சிலர் கெட்டவங்களா தான் இருக்கணும்” என கேசவனை மனதில் நினைத்து சொல்கிறான்.

அதனைத் தொடர்ந்து வீரா ராமச்சந்திரனை சந்தித்து பணம் கொடுக்க வர, அவர் “என் சொந்தக்காரங்க சொன்னதுனால இந்த பணத்தை கொண்டு வந்து தறியா?” என்று கேட்க, “இல்லைங்க சார், எங்களுக்குனு ஒரு மரியாதை இருக்கு, எங்க அக்காவுக்கு சேர்த்து வைத்த பணம்” என்று சொல்லி கல்யாணத்திற்காக பணத்தை கொடுக்க ராமச்சந்திரன் “வேண்டாம்னு சொன்னாலும் நீ கேட்கப்போவதில்லை, சரி கொடு” என்று வாங்கிக் கொள்கிறார்.

இந்த நேரம் பார்த்து ராமச்சந்திரன் கடைக்கு ரைட் வர, அக்கவுண்ட்ஸ் பார்ப்பவர் லீவு என்பதால் வீரா எல்லா கணக்குக்கும் புத்தகங்களையும் எடுத்துக்காட்டி அவர்களிடம் ஒரு வாரம் டைம் கேட்கிறாள். ஆபீஸர்களிடமிருந்து ராமச்சந்திரனை காப்பாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து இராமச்சந்திரன் “நீயே கடைக்கு வேலைக்கு வந்துடு” என்று கேட்க “இல்லைங்க சார், சொந்தக்காரங்களா யோயிட்டதால லேட்டா வந்தா கூட சொந்தக்காரர் கடை அதனால லேட்டா வராங்கன்னு சொல்லுவாங்க, அது செட்டாகாது” என சொல்ல கடையில் ப்ரொபஷனலால் நடந்து கொள்ளலாம் எனக் கூறுகிறார்.

ராமச்சந்திரன் “ஸ்ரிட்டா கரெக்ட் டைமுக்கு வேலைக்கு வந்துடணும், லீவு எல்லாம் போடக்கூடாது” என சொல்கிறார். வீராவும் “நீங்களும் சரியா சம்பளத்தை கொடுத்துடணும்” என்று சொல்லி சிரிக்கிறாள். பிறகு வீட்டுக்கு வந்து வேலை கிடைத்த விஷயத்தை சொல்ல ராமச்சந்திரன் கடை எனத் தெரிந்ததும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

“கண்மணி அந்தக் கடைக்கு வேலைக்கு போக போறியா?” எனக் கோபப்பட, “நீ அந்த வீட்டுக்கு வாழவே போற, நான் வேலைக்கு தான் போறேன், இதில் என்ன இருக்கு?” என்று வீரா கேட்க, கண்மணி மனதுக்குள் “அந்த வீட்டுக்கு வாழ போல, பழி தீர்க்க போறேன்” என சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.