Tag: National News
-

22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை: கட்கரி சொன்ன வேலைவாய்ப்பு வாய்ப்பு|8 Crore Jobs Possible? Gadkari’s Big Transport Sector Pitch | ACTPnews.com
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்னை குறித்தும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் குறித்தும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளதாவது… “நமது நாட்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, இதில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதே உண்மை நிலை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஃபைலில் எடுத்த சிறிய முடிவைச் சொல்கிறேன். இருசக்கர வாகனம் அல்லது கார் வைத்திருக்கும் யாரும் தங்களின் வாகனத்தை வாடகை டாக்ஸியாக இயக்கலாம் என்று அப்போது கையெழுத்திட்டேன்.…
-

“இந்திய மீனவர்கள் மீது இலங்கை நீதிமன்ற அபராதம் கண்டனத்துக்குரியது” – மாணிக்கம் தாகூர் | A Sri Lankan court has imposed a fine on Rameswaram fishermen. | ACTPnews.com
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 22-ம் தேதி மீன்பிடிக்க சென்ற அந்தோணி பிரசாத் விசைப்படகையும், அதிலிருந்த மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீனவர்களின் காவல் நேற்று முடிந்ததை அடுத்து மீண்டும் தலைமன்னார் நீதிமன்றத்தில் 4-வது முறையாக ஆஜர்படுத்தினர். மீன்வளத்துறை அதிகாரிகள் 9 மீனவர்கள் மீதும் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் அடிப்படையில், தலைமன்னார்…
-

Volkswagen: `1 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்’ – வோக்ஸ்வேகன் முடிவின் பின்னணி? | Volkswagen plans to lay off 100,000 employees in the largest job cut in its history. | ACTPnews.com
ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேச முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் (Volkswagen), சுமார் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஜெர்மனி மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிகள், மின்சார வாகனங்களுக்கான (EV) தேவை குறைவு மற்றும் முக்கியமாக சீன சந்தையில் எழுந்துள்ள கடும் போட்டி காரணமாக ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப ஊழியர்களின் எண்ணிக்கையை மறுசீரமைப்பது அவசியமாகிவிட்டதாக ஆடி (Audi),…
-

முதல்வரின் செயலக அலுவலக புதுபிப்பு: ரூ.5.54 கோடிக்கு டெண்டர்; `ரூ.3.78 கோடி போதும்’- ராசி பில்டர்ஸ்! | The Rasi Builders has secured the tender for renovating the Cm’s new secretariat office. | ACTPnews.com
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பிரதான கட்டடத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதையொட்டி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், நிர்வாக அலுவலக வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின்னணு ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது. அதன்படி, 10-வது தளத்தில் பிளாக் 1-க்கு ரூ.2.41 கோடி, பிளாக் 2-க்கு ரூ.2.01 கோடி, பிளாக் 3-க்கு ரூ.1.12 கோடி என…
-

TATA: “எங்களுக்கு எந்தப் பயனுமில்லை…” – டாடா நிறுவனத்தை மூட கென்யா அதிபர் முடிவு! | President William Ruto has ordered the immediate suspension of Tata Chemicals’ operations in Kenya. | ACTPnews.com
இந்த விவகாரம் குறித்து கென்யாவில் இயங்கும் டாடா கெமிக்கல்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “கென்ய அரசின் அதிகாரத்திற்கு மதிப்பு அளிப்பளிக்கிறோம். சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை வழிகள் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணத் தயாராக இருக்கிறோம். அரசு தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து ஒழுங்குமுறை விதிகளுக்கும் முறையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள், மகாடி பகுதி மக்களின் நலன் மற்றும் கென்யாவின் பொருளாதார வளர்ச்சியே தங்களின் முக்கிய முன்னுரிமை.” எனக் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஜூலை மாத இறுதியில், டாடா குழுமத்தின் மகாடி சோடா…
-

தெலங்கானா காங்கிரஸ்: உட்கட்சிப் பூசல்; அமைச்சரவையிலிருந்து சுரேகா வெளியேற்றம்; என்ன நடக்கிறது? | ACTPnews.com
தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் கொண்டா சுரேகா. இவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில், வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், சுரேகா-வின் மகள் கொண்டா சுஷ்மிதா, 2028 சட்டமன்றத் தேர்தலில் வாரங்கள் மாவட்ட பார்கல் தொகுதியில் போட்டியிட விருப்பதாகச் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார் இதற்கிடையில் பார்க்கல் தொகுதிக்குச் சென்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, தற்போதைய எம்.எல்.ஏ ரெவூரி பிரகாஷ் ரெட்டிக்கு தன் ஆதரவை அறிவித்தார். இதனால் கொண்டா…
-

திமுக: அன்பில் மகேஸைக் கைவிட்ட உதயநிதி? திருச்சி அரசியலில் திருப்பம்! | Udhayanithi Led Down Anbil Mahesh during Party restructuring! | ACTPnews.com
மற்ற மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் சென்னையில் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கடலூரில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விருதுநகரில் தங்கம் தென்னரசு போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. அதேநேரம் கீதா ஜீவன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு 2 தொகுதிகள் அடங்கி மா.செ பொறுப்பு ஒதுக்கப்படவுள்ளது. ஆனால் இவர்களுக்கு 2, மற்றவர்களுக்கு 3 எனப் பேதம் காட்டப்படவில்லை. ஆனால், திருச்சியில் மட்டும்தான் முன்னாள் அமைச்சருக்கு 2 தொகுதிகளையும் மற்றவருக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன” என்றனர் உதயநிதி ஸ்டாலின்…
-

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தை ஆந்திராவுக்கு மாற்ற முயற்சி; காய் நகர்த்துகிறாரா சந்திரபாபு?| Thoothukudi shipbuilding yard to Andhra Pradesh; is Chandrababu making strategic moves? | ACTPnews.com
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த பிரபல “HD Hyundai’ நிறுவனத்தின் பிரமாண்ட கப்பல் கட்டும் தளத்தை ஆந்திர பிரதேசத்திற்கு மாற்ற அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு, மத்திய அரசுடன் கொண்டுள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை ஆந்திராவின் காக்கிநாடா பகுதிக்கு ஈர்க்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தைக் கவரும் வகையில் ஆந்திர அரசு பல்வேறு கூடுதல் சலுகைகளையும், சிறப்புத் திட்டங்களையும்…
-

தி.மு.க மறுசீரமைப்பு… செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல் ஆஃபர்… கொதிப்பில் சீனியர்கள்! | Will DMK Accomadate Senthil Balaji in Karur or Coimbatore? | ACTPnews.com
சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டுவரும் நோக்கில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பல்வேறு கறார் முடிவுகளை எடுத்துவரும் கட்சித் தலைமை, `செந்தில் பாலாஜி”க்கு மட்டும் சில ஆஃபர்களை கொடுத்திருப்பதால் கொதிப்படைந்திருக்கிறார்கள் சீனியர்கள் பலர். செந்தில் பாலாஜி அமைப்புரீதியாக மிகப்பெரிய மாற்றங்களுக்குத் தயாராகிறது தி.மு.க. கட்சியை 110 மாவட்டங்களாகப் பிரித்ததோடு, நிர்வாகப் பதவிகளுக்கு வயது உச்ச வரம்பையும் விதித்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். உட்கட்சித் தேர்தல் மூலமாக நிர்வாகிகளைத் தேர்வுசெய்யவும் முடிவெடுத்திருக்கிறார். ‘மறுசீரமைப்பு…
-

‘கறிக்கடையில் கூட இவ்வளவு வெட்டுக்குத்து நடப்பதில்லை!’ – அவையில் சீறிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி |TN Assembly: Udhayanidhi Slams Government, Says ‘Even Meat Shops Don’t See This Much Cutting!’ | ACTPnews.com
இந்த அரசு அமைந்து 116 நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்களில் இந்த அரசு புதிதாக கொண்டு வந்த திட்டங்களை விட பெயர் மாற்ற அறிவிப்புகள்தான் அதிகம் வருகிறது. இல்லையெனில், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்கிறீர்கள். பரந்தூர் விமான நிலையம், மாமல்லன் கால்வாய் என இதற்கு உதாரணமாக நிறைய விஷயங்களை குறிப்பிடலாம். விவசாயக்கடன் முழு தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு எல்லா பேருந்துகளிலும் இலவசம் என்றீர்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் பாதிப்…
-

ரயில்வே நிர்வாகத்தில் அலட்சியத்தால் பறிபோன பெண்ணின் அரசு வேலை; மனித உரிமைகள் ஆணையத்தால் கிடைத்த நீதி | ACTPnews.com
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமப்பெட்டியைச் சேர்ந்தவர் கே.ஜெயஸ்மிதா. திருவனந்தபுரத்தில் தனியாக வசித்து வந்த இவர், அரசுத் துறையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். 2023 ஜூலை 30 அன்று இரவு, இவர் வடக்காஞ்சேரியிலிருந்து திருவனந்தபுரம் செல்வதற்காக ரயில்வே கவுன்ட்டரில் படிவம் பூர்த்தி செய்து படுக்கை வசதி கொண்ட டிக்கெட் பெற்றிருந்தார். அவருக்கு எஸ்-4 பெட்டியில் 41-ம் எண் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ரயிலில் ஏறி தனது படுக்கைக்குச் சென்ற ஜெயஸ்மிதாவுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஏற்கனவே…
-

தமிழ்நாடு GST வசூல் 1% சரிவு ஏன்? நிபுணர் சொன்ன காரணம்|GST Warning for Tamil Nadu? Expert Explains the 1% Fall | ACTPnews.com
நுகர்வு என்பது கடைக்குச் சென்று மளிகைப் பொருள்களை வாங்குவது… துணிகள் வாங்குவது மட்டுமல்ல. ரியல் எஸ்டேட் வாங்குவது போன்றவையும் ஆகும். சின்னச் சின்னப் பொருள்களை விட, ரியல் எஸ்டேட் மாதிரியான பெரிய விஷயங்களுக்குச் செலவு செய்யும்போது, ஜி.எஸ்.டி வசூல் இன்னும் அதிகமாகும். இது தற்போது குறைந்திருக்கலாம். மக்களின் நுகர்வு குறைவாக இருக்கிறது என்பதற்கு இன்னொரு சான்று, தற்போது இந்தியாவிலேயே அதிக தங்க நகைக்கடன் வாங்கும் டாப் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மத்திய அரசு தரவுகள் மக்களிடம் பணப்புழக்கம்…
-

`வானத்தைத் தொட்ட புதிய வரலாறு’ – இந்தியாவின் முதல் Non-Medical பெண் Air Vice Marshal சக்தி சர்மா! | Air Vice Marshal Shakti Sharma scripts history as highest-ranking woman IAF officer | ACTPnews.com
2015-ல் Sainik School, Kapurthala-வின் முதல் பெண் Principal ஆனார். அதுமட்டுமல்லாமல், Army, Navy, Air Force ஆகிய Tri-Services-ல் இருந்து ஒரு Sainik School-ஐ வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். அவருடைய பணியின் இன்னொரு முக்கியப் பகுதி கல்வி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு இடையிலான இணைப்பு. IIT Kanpur மற்றும் Pune University-ல் IAF Chairs of Excellence அமைப்பதிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். இதன் மூலம் கல்வி நிறுவனங்களுக்கும் பாதுகாப்புத்…
-

'முதலில் ஓடியது யார்?' – முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காரசார சண்டை! | ACTPnews.com
சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகையில், “எந்த கேள்வி கேட்டாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசாமல் இன்னொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வருவதுபோல ‘இவருக்கு பதில் இவர்’ பாணியில் பதில் சொல்கிறார்கள். முதல்வரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாள்கள் நேரமிருக்கிறது. அவர் நன்றாக முன்…
-

TN Assembly : முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி;அவையில் நடந்த காரசார விவாதம் Full Story | TN Assembly : CM Vijay vs Leader of Opposition Udhayanidhi Stalin | Full Debate | ACTPnews.com
விவசாயக்கடன் முழு தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு எல்லா பேருந்துகளிலும் இலவசம் என்றீர்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் பாதிப் பாதியாக நிறைவேற்ற அறிவிப்பு மட்டுமே வெளியிட்டிருக்கிறீர்கள். இதையெல்லாம் பார்க்கையில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் போல தாய்மாமன் காது குத்தும் திட்டம் என அறிவித்திருக்கலாம். பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் நாங்கள் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தோம். உதாரணமாக வேலூரில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கி ல் 32 நாள்களில்…
-

விதி 110: “நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம்” – சீமான் காட்டம் | Seeman has raised a question regarding the Cm making announcements under Rule 110. | ACTPnews.com
கடந்த ஆகஸ்ட் 05- ம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அத்துறை தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு சட்டப்பேரவையின் விதி எண் 110- ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள்…
-

`இது முட்டாள்தனமானது’ Vs `சமநிலையைப் பேண முடியும்’ – TRB ராஜா கீர்த்தனா கருத்து மோதல்! | “This is foolish” vs. “Balance can be maintained” – TRB Rajaa and Keerthana clash of views! | ACTPnews.com
இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, “ `அரசியலை தொழில்துறையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்” என்ற கருத்து, உண்மைகள் சாதகமாக இல்லாதபோது சிலருக்கு பேசுவதற்கு வசதியாக இருக்கிறது. அதே வழியைப் பயன்படுத்தித் தங்களுக்குச் சாதகமானக் கருத்துகளைப் பரப்புவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. நல்லாட்சிக்கு நுட்பமான அணுகுமுறை தேவை. நாங்கள் எதையும் ‘சரி – தவறு’ என்ற ஒற்றைப் பார்வையில் அணுகுவதில்லை. வேலைவாய்ப்புகளையும் சுற்றுச்சூழலையும் எங்களால் ஒரே நேரத்தில் சமநிலையாகப் பாதுகாக்க முடியும். அமைச்சர் கீர்த்தனா தொழிற்சாலைகளை மூடுவது…
-

“கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே..!"- என்.ஆர்.இளங்கோ திட்டவட்டம் | ACTPnews.com
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “கழகத் தலைவரின் சார்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணைக்கு வந்தன. இன்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஒரு ரிட் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்த பல விமர்சனங்களை…
-

பஸ்ஸை முத்தமிட்டு, டயரை தொட்டு வணங்கி.. 18 ஆண்டுக்கால பணி, நிறைவு – கண்ணீர் பெருக நெகிழ்ந்த ஒட்டுநர் | ACTPnews.com
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் பால் குரியன் (56). இவர் கேரளா அரசுப் போக்குவரத்துக் கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி-யில் இடுக்கி மற்றும் கட்டப்பனை பணிமனைகளில் ஓட்டுநராகத் தனது சேவையைத் தொடங்கினார். முன்னதாக கர்நாடகாவில் நீண்ட காலம் தனியார் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட இவர், கடந்த 18 ஆண்டுகளாக கே.எஸ்.ஆர்.டி.சி-யில் அர்ப்பணிப்புடன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இதில் குறிப்பாக, கடந்த எட்டு ஆண்டுகளாக குமுளி பணிமனையில் பணியாற்றி வந்த இவர், குமுளி டு…
-

"கட்டுமானச் செலவே ரூ.4 கோடி தான்; முதல்வரின் திறப்பு விழாவுக்கு ரூ.5 கோடி செலவு!" – நயினார் தாக்கு | ACTPnews.com
திருச்சியில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த ஜூன் 12ந-ம் தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டிய மேட்டூர் அணை, உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. தற்போது, அணையைத் திறந்து வைக்க முதலமைச்சர் சென்றதற்கே 5 கோடி ரூபாய் வரை மக்கள் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்தில் அதன் மொத்த கட்டுமானச் செலவே 4 கோடி ரூபாய் தான். ஆனால், இப்போது வெறும் அணை…
-

மாணவிகள் காயம்: “அரசுத் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின்மை” – மாணிக்கம் தாகூர் விமர்சனம் | Injuries to female students: “Lack of coordination between government departments” – Manickam Tagore criticizes. | ACTPnews.com
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த பிரத்யேக வாகன வசதியை, பள்ளிக் கல்வித் துறையா அல்லது வருவாய்த் துறையா செலவை ஏற்பது என்ற அதிகாரத்துவப் பூசலால் நிறுத்தி வைத்துள்ளனர். துறைகளின் இந்த அலட்சியமே இன்று 10 மாணவிகள் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் காரணமாகியுள்ளது. அரசுத் துறைகளுக்கு இடையேயான இந்த ஒருங்கிணைப்பின்மைக்கு மாவட்ட ஆட்சியரே முழுப் பொறுப்பேற்க வேண்டும். மாணிக்கம் தாகூர் பேருந்து நிறுத்தத்தில் தற்காலிகமாக அதிகாரிகளை நிறுத்துவது நிரந்தரத் தீர்வாகாது என்பதால், பள்ளி மற்றும் கல்லூரி…
-

மேகதாது: “மேலும், மேலும் முன்னேறும் கர்நாடக அரசு… ஆனால், நாம்?” – அன்புமணி வலியுறுத்தல் | ACTPnews.com
மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு பாசனத் தேவை, குடிநீர்த் தேவை உள்ளிட்டவற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும், கர்நாடகத்தில் சுற்றுச்சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இதுவரை 100 முறைகளுக்கு மேல் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். அதன் பயனாக, மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதையும், சென்னை உள்பட 28 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.…
-

மோடி-பெசெஷ்கியன் சந்திப்பு: இந்தியாவுக்கு ரூபியோ எச்சரிக்கை|Modi Meets Iran Leader, Rubio Issues Sanctions Warning | ACTPnews.com
சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகருக்கு 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டிற்காகச் சென்றிருந்தார். அங்கே ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களைச் சந்தித்தார் மோடி. இந்த உலகத் தலைவர்களில் ஈரான் பிரதமர் பெசெஷ்கியனும் அடக்கம். நேற்று அமெரிக்காவின் செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி – பெசெஷ்கியன் சந்திப்பு குறித்து அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவிடம் கேட்கப்பட்டது. இந்த இரு…
-

"விஜய் கன்னியாகுமரி போனாரே… ஒரு தொகுதியாச்சு ஜெயிச்சீங்களா?" – உதயநிதி vs ஆனந்த் | ACTPnews.com
சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும் தவெக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருந்தது. அமைச்சர் ஆனந்த் அமைச்சர் ஆனந்த் பேசுகையில், “முதல்வருக்கு எதை எப்போது பேச வேண்டுமெனத் தெரியும். நீங்கள் இரண்டரை வருடம் எங்களைப் பேசியதால்தான் நாங்கள் இன்று ஆட்சியில் இருக்கிறோம். திமுக ஆட்சியில் தவெகவுக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தீர்கள் என எனக்குதான் தெரியும். தலைவரின் கூட்டத்துக்கு காலையில் அனுமதி கொடுத்துவிட்டு மதியம் அனுமதி இல்லை…
-

'குட்டிக்கதை சொல்லாமல் நேராக பதில் சொல்லுங்கள்!' – முதல்வரை நேரடியாக சாடிய உதயநிதி | ACTPnews.com
சட்டமன்றத்தில் முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். உதயநிதி உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘ஆளுங்கட்சியினர் தினம் தினம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் ஒரு எம்.எல்.ஏ பெயரை சொல்லி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அதில் புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லை. காவல்துறை மீதான விவாதத்தில் நான் உரையாற்றுகிறேன். அந்தத்…
-

‘5 ஆண்டுகளில் 29000 காவலர் பணி உருவாக்கப்படும்!’ !| “29,000 Police Jobs to Be Created in 5 Years!” – CM Vijay’s Big Assurance | ACTPnews.com
போதைப் பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் கிராமம் ஒன்றுக்கு 10 லட்ச ரூபாய் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும். 212 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் காவல்துறை நவீன்மயமாக்கப்படும். லஞ்சம் லாவண்யத்தை ஒழிக்க காவல்நிலையங்களுக்கு ஒதுக்கப்படும் சில்லறை செலவினங்கள் நிதி உயர்த்தி வழங்கப்படும். பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை 30 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பணியின் போது துணிச்சலாக பணியாற்றி உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு 1கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். சேலம் மற்றும்…
-

தைலாபுரம்: `ராமதாஸிடம் அரசியல் பேச வேண்டாம்!’- அறிவிப்பு பேனருடன் அனுமதிக்கப்படும் பாமக நிர்வாகிகள் | ACTPnews.com
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ராமதாஸ், சரஸ்வதி திருமண நாளில் முடிவுக்கு வந்தது. அன்று குடும்பத்துடன் தைலாபுரம் சென்ற அன்புமணி, ராமதாஸிடம் ஆசி பெற்றார். அப்போது, அன்புமணியை கட்டிப்பிடித்து அழுதார் ராமதாஸ். அதையடுத்து இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டது. தொடர்ந்து, ஜூன் மாதம் 27 ஆம் தேதி மருத்துவர் ராமதாஸின் 88-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய மருத்துவர் ராமதாஸ், `இன்று எனக்கு 88-வது…
-

`காங்கிரஸ் கட்சி ஒன்றும் தவெக-வுக்கு அடிமை கிடையாது!' – முன்னாள் முதல்வர் நாராயணசாமி | ACTPnews.com
புதுச்சேரியில் தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி நீர் தமிழகத்துக்கு வருவது முழுமையாக நிறுத்தப்படும். அதனால் காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். அதனால் மத்திய அரசு அதற்கு அனுமதி கொடுக்கக்கூடாது. புதுச்சேரியில் ஆறு நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. ஆளுநர் உரையில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு…
-

Iran: "நீங்கள் தோண்டிய குழியில் இருந்து உங்களால் தப்ப முடியாது" – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை | ACTPnews.com
அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் ‘தாக்குதல்’ மோடுக்குள் சென்றிருக்கின்றன. ஈரான் போரின் போக்கு ஈரான் போர் பிப்ரவரி மாதக் கடைசித் தேதியில் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, ஜூன் மாதம், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜூலை மாதம், ஹார்முஸ் நீர்ச்சந்தியைக் கடந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான். இதையடுத்து ஈரான், அமெரிக்கா போர் மீண்டும் தொடங்கியது. அமெரிக்கா தாக்குதல் வழியாக எவ்வளவு நெருக்கடி கொடுத்தும்,…
-

“19-ம் நூற்றாண்டின் பிற்போக்குத்தனமான கருத்து” – முஸ்லிம் மதகுரு பேச்சுக்கு கேரள முதல்வர் எதிர்ப்பு | “A regressive 19th-century idea” – Kerala CM opposes Muslim cleric’s remarks | ACTPnews.com
தங்க நகைகள் பெட்டிக்குள் இருப்பதுபோன்று பெண்களும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், பெண்கள் பொதுவெளியில் நடந்தால் நாசம் ஏற்படும். பெண்கள் வீட்டில் அடங்கி ஒடுங்கி வாழ வேண்டும் என முஸ்லிம் மதகுருவும், சமஸ்த அமைப்பின் தலைவருமான கேரளத்தைச் சேர்ந்த காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முஸ்லியார் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். இது விவாதம் ஆனநிலையில் நேற்று அமைச்சரவை கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் வி.டி.சதீசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து முதல்வர் வி.டி.சதீசன் கூறுகையில், “பொது இடங்களில்…
-

தமிழ்நாட்டில் GST வசூல் 1% குறைந்துள்ளது; தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? – TRB ராஜா கேள்வி | ACTPnews.com
தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாதம் ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு… “தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது! இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா? மேலும் கடன் வாங்குவதா? என்ற கடினமான நிலைக்கு #தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்! ஆகஸ்ட் மாத GST புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. ஜி.எஸ்.டி (GST) Gold: 5…
-

`பிரதமர் முகம் விஜய்’- தவெக ஸ்டன்ட், அப்செட்டில் விசிக; கொந்தளிக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்! | ACTPnews.com
அவ்வாறில்லாமல், “முதல்வர் விஜய்தான் பிரதமர்” எனக் கூறி, தவெக ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்ப்பது தேவையற்ற குழப்பத்தையே விளைவிக்கும். எனவே, கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தவெகவினர் பேசுவதை முதல்வர் தடுக்க வேண்டும். மேலும், “பாஜகவை வீழ்த்துவதே நோக்கம்” என்பதை முதல்வர் பேரறிவிப்பாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றிருக்கிறார். ஆளூர் ஷாநவாஸ் மற்றொரு துணைப் பொதுச்செயலாளரான ரஜினிகாந்த், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை த.வெ.க-வில் இணைப்பது, த.வெ.க-வின் சட்டமன்ற நடவடிக்கைகள், காவல்துறை நடவடிக்கைகளை…
-

52 கோயில்களில் மொபைல் போன் தடை; ₹5 டோக்கன் குறித்து அண்ணாமலை எதிர்ப்பு|No Phones Inside 52 Temples! Annamalai Questions New Rule | ACTPnews.com
நேற்று (செப்டம்பர் 1) முதல், தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களுக்கு மொபைல் போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை வைத்துச் செல்ல கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான கட்டணமும் ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது…
-

’மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது’ – நீதிபதி கருத்து | ACTPnews.com
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி, உயர் நீதிமன்றக் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். “மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்காக அச்சிடப்பட்ட பத்திரிகையில் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு பெயர் நீக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் கோயில் அறங்காவலர் குழுவின் கடமைகளைச் செய்ய தடையோ, இடையோறோ செய்யாமல் ஒத்துழைப்பை அளிக்க உத்தரவிட வேண்டும். மதச்சார்பற்ற பணிகளில் பங்கேற்க அனுமதிக்க…
-

நேபாள வெள்ளம்: இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் இழப்பீடு கோரிக்கை|Nepal Targets China, US and India Over Climate Damage | ACTPnews.com
கடந்த வாரம் (ஆகஸ்ட் 26), பனிப்பாறை சரிவினால் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் மீட்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பேரிடருக்குக் காரணம் இந்தியா, சீனா, அமெரிக்கா தான் என்று நேபாளம் குற்றம் சாட்டுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேபாளப் பெருவெள்ளம் குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் பேசியுள்ளார். ஷிசிர் கானல், “நேபாளம் பசுமைக்குடில் வாயுக்களை மிகக் குறைவாகவே வெளிப்படுத்துகிறது. இருந்தும், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் தீவிரப் பாதிப்புகளான பனிப்பாறைகள்…
-

அரகஜா திலகம் `டு' ஜெயில் பரிகாரம்… முதல்வர் விஜய்யைச் சுற்றும் ஜோதிட சர்ச்சைகள்! | ACTPnews.com
அரகஜா திலகம் : தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது கோட் ஷூட் அணிந்தது எந்தளவுக்கு பேசுபொருளானதோ அதைவிட, அவர் நெற்றியில் வைத்திருந்த கருப்பு நிற பொட்டு பேசுபொருளானது. அந்த கருப்பு மை போன்ற திலகம் அரகஜா என்றும் சொல்லப்பட்டது. புனுகு, கோரோஜனை, அத்தர், பச்சைக் கற்பூரம், ஜவ்வாது உள்ளிட்ட பொருள்களால் இது செய்யப்படுவது. இந்த மையை புருங்களில் தடவிக்கொள்ளலாம். அல்லது நெற்றியில் பொட்டாகவும் வைத்துக்கொள்ளலாம். எதிர்மறை ஆற்றல்கள் அண்டாமல் இருக்கவும் நேர்மறையான விஷயங்களை உருவாக்கக்கூடிய ஆற்றல் இதற்கு…
-

திடீரென திறந்த அரசுப் பேருந்து கதவு; கீழே விழுந்து காயமடைந்த பள்ளி மாணவிகள் – பாய்ந்த நடவடிக்கை! | Pudukkottai: Govt Bus Door Opens Suddenly, 10 Schoolgirls Injured; Driver, Conductor Suspended | ACTPnews.com
புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் அர்ஜுனன் மற்றும் நடத்துநர் மணிகண்டன் ஆகிய இருவரைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். விபத்து நடந்தது எப்படி? புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து தினசரி ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள்…
-

“கடந்த ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து’ – முதல்வர் விஜய் அறிவிப்பு |The CM has announced that the cases against farmers and teachers are being dropped under Rule 110. | ACTPnews.com
தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 2021 மே மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில், தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது முந்தைய ஆட்சியாளர்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
-

‘திரும்பயும் எம்.எல்.ஏ ஆகணும்!’ – குழப்பும் இசக்கி சுப்பையா; கடுப்பில் லோக்கல் தவெக! |“I Want to Become an MLA Again!” – Isakki Subbaiya’s Confusing Statement Leaves Local TVK Leaders Angry | ACTPnews.com
இடைத்தேர்தலில் வெல்ல வேண்டுமெனில் இப்போதே அவர் களத்தை தயார் செய்ய தொடங்க வேண்டும். தளபதிக்காக நீண்ட காலமாக உழைத்த நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். எதையுமே செய்யாத இசக்கி சுப்பையா இப்போது வந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ போஸ்டிங்கே திரும்பக் கேட்டு குழப்புகிறார். தளபதியே இடைத்தேர்தலை மீண்டும் நடத்த வேண்டுமென மனுத் தாக்கல் செய்கையில், இவர் அதற்கு நேர்மாறாக இப்படியொரு மனுவை தாக்கல் செய்வது தலைமைக்கே எதிரான செயலாக இருக்கிறது. அவர் அதிமுகவுடன் மீண்டும் பேசத் தொடங்கி…
-

தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை: எந்தெந்தக் கோயில்? | முழுப் பட்டியல்! | A ban on carrying mobile phones has been imposed in 52 temples in Tamil Nadu. | ACTPnews.com
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கும் வசதி கொண்ட கைப்பேசியை எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு நேற்று முதல் (செப்.1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “ஏற்கெனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனைத் தரிசனம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ்…
-

“ராகுல் காந்தி தளபதி கைப்பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார்” எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் | TVK MLA Kanimozhi has stated that Vijay will become CM in 2029 and PM thereafter. | ACTPnews.com
தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், 2029-ம் ஆண்டில் பிரதமர் வேட்பாளராக இருப்பார் எனக் தவெக தரப்பிலிருந்து அழுத்தமாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் – தவெக என இருகட்சிகளுக்கிடையே கருத்து மோதலும் ஏற்பட்டது. இந்த நிலையில் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாடு அரசியலில் சமீப நாட்களாகத் தளபதி தான் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சு மிகவும் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டிலும் இதே போன்ற விவாதங்கள் எழுந்தபோது,…
-

Iran War: தாக்கிய அமெரிக்கா; `வருந்துவீர்கள்' – ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம் அதிகரிப்பு! | ACTPnews.com
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல்கள் வெடித்துள்ளன, இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகம் மீண்டும் சூழ்ந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி, அமெரிக்கப் படைகள் ஈரான் மீது இரவு முழுவதும் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தன. இதற்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த பரஸ்பர…
-

SCO மாநாடு: `உலகத் தலைவர்களை ‘வெட்டி’ நடுநாயகமாக பாக். பிரதமர்’ – பிரதமர் மோடி வெளியிட்ட முழுப் படம் | Shehbaz Sharif Crops Out To Take Centre Stage In SCO Picture | ACTPnews.com
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26-வது உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. உலகத் தலைவர்கள் குழுவாக நின்றிருந்த அசல் புகைப்படத்தை வெட்டி (crop), பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை மையத்தில் முன்னிலைப்படுத்தி சமூக ஊடகத்தில் வெளியிட்டதே இந்த சர்ச்சைக்குக் காரணம். பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் செப்டம்பர் 1, 2026 அன்று பகிர்ந்த அந்தப் புகைப்படத்தில், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர்…
-

‘FQL மோசடி : ‘கோவிலுக்கு கட்ட வைத்திருந்த பணத்தை இழந்துட்டோம்’ பொதுமக்கள் கண்ணீர் மல்க புகார்! | FQL Scam: ‘We lost the money set aside for the temple’ — Public lodge tearful complaints! | ACTPnews.com
இதையடுத்து FQL நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர். இது குறித்து பேசிய பெண்கள் மற்றும் இளைஞர்கள், “கோவிலுக்கு கட்ட வைத்திருந்த பணத்தை இழந்துட்டோம், தாலி செயின் , நகைகளை அடகுவைத்து காசு கட்டுனோம். லட்சக்கணக்குல இழந்து தவிக்கிறோம், போலீஸுக்கு இது தெரியும். முன்னவே நடவடிக்கை எடுத்திருந்தால் ஏமாந்திருக்கமாட்டோம்., உறவினர்கள் சொல்லியதை கேட்டு நம்பி பணம் செலுத்தினோம்,…
-

மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் பெயரின்றி அழைப்பிதழை அச்சிட்ட அதிகாரி யார்? – நீதிமன்றம் | Meenakshi Amman Temple Board of Trustees’ invitation without names? – Court | ACTPnews.com
மீனாட்சியம்மன் திருக்கோவில் அறங்காவலர்களின் பெயர்கள், செயல் அலுவலரால் அச்சிடப்பட்ட திருக்கோவில் பத்திரிகையில் இடம்பெறவில்லை என டி.சுப்புலட்சுமி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் திருக்கோவிலின் வழக்கறிஞர் தரப்பு வாதத்தில்,” திருக்கோவில் பத்திரிகையில் முதலமைச்சர் பெயர் முதல் வார்டு கவுன்சிலர் பெயர் வரை இடம்பெறுவது கோவிலின் புரோட்டோகால். ஆனால் கோவிலுக்காக…
-

’10-க்கு 9; எல்லாம் நம்மளுடையது தானே’- சட்டமன்றத்தில் ஆதவ்வும் அதிமுகவும்!| Adhav arjuna and AIADMK speech in tn Assembly | ACTPnews.com
சட்டமன்றத்தில் இன்று (செப்.1) கைத்தறி, தொழிலாளர் நலன் – குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய தவெக எம்எல்ஏ பிராகாசம், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி தொகுதியில் செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விரைவில் முடித்து தருமாறு மாண்புமிகு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். ஆதவ் அர்ஜுனா அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திருவள்ளூர் எங்களுடைய…
-

மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்! – புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை! | ACTPnews.com
தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடிய மேட்டூர் அணையை தமிழக முதல்வர் விஜய் தற்போது திறந்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லை. இதனால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து உத்தரவிட்ட…
-

GDP வளர்ச்சியுடன் அரசியல் பதிலடி… ‘Jhooth Ki Goonj’ என்ற பிரதமர் மோடி! பின்னணி என்ன? | PM modi Jhooth Ki Goonj comment against opposition parties | ACTPnews.com
இந்தியாவின் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக வெளியான புதிய ஜி.டி.பி (GDP) தரவுகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளை விமர்சித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது தேசிய அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நாட்டின் வளர்ச்சியை மறைக்க சிலர் பரப்பும் “Jhooth Ki Goonj” (பொய்களின் எதிரொலி) எடுபடாது என்று அவர் அதில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஜி.டி.பி வளர்ச்சி மற்றும் மோடியின் வாதம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு ஜி.டி.பி வளர்ச்சி 7.8 சதவீதமாகப்…
-

நேபாளம்: "கற்பனை செய்து பார்ப்பதற்குக்கூட பயமாக இருக்கிறது" – மீண்டு வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? | ACTPnews.com
கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மானசரோபர் பயணம் சென்ற 28 பேர், நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், டெல்லி வழியாக இன்று காலை கோவை வந்தனர். கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர். சிலர் தங்களது உறவினர்களை நீண்ட நேரம் கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்ற காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. நேபாளத்தில் இருந்து பத்திரமாகத்…
-

காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதா? – காங்கிரஸ் MLA குற்றசாட்டிற்கு தங்கம் தென்னரசு பதிலடி | ACTPnews.com
“முன்னாள் முதல்வர் காமராஜர் மறைந்த போது அவரை நல்லடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் திமுக அரசு இடம் தர மறுத்தது” என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் நேற்று குற்றம்சாட்டிருந்தார். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். தங்கம் தென்னரசு இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், “நேற்றைய தினம் இந்த அவையிலே உரையாற்றிய காங்கிரஸ் கட்சின் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட், ‘கலைஞர் முதலமைச்சராக இருந்த…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Now adding the writer to a small mental list of voices I want to follow, and a look at shopzaro…
Honestly impressed, did not expect to find this level of care on the topic, and a stop at datacabin cemented…
Honestly enjoyed not being sold anything for the entire duration of the post, and a look at emberforesttradingpost kept that…
If I had to summarise the editorial sensibility of this site in a few words it would be careful and…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








Granted I am giving this site more credit than I usually give new finds, and a look at dawnorchardgoodsatelier continued…