`வானத்தைத் தொட்ட புதிய வரலாறு' - இந்தியாவின் முதல் Non-Medical பெண் Air Vice Marshal சக்தி சர்மா! | Air Vice Marshal Shakti Sharma scripts history as highest-ranking woman IAF officer


2015-ல் Sainik School, Kapurthala-வின் முதல் பெண் Principal ஆனார். அதுமட்டுமல்லாமல், Army, Navy, Air Force ஆகிய Tri-Services-ல் இருந்து ஒரு Sainik School-ஐ வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார்.

அவருடைய பணியின் இன்னொரு முக்கியப் பகுதி கல்வி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு இடையிலான இணைப்பு. IIT Kanpur மற்றும் Pune University-ல் IAF Chairs of Excellence அமைப்பதிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். இதன் மூலம் கல்வி நிறுவனங்களுக்கும் பாதுகாப்புத் துறைக்கும் இடையிலான academic மற்றும் strategic collaboration-ஐ வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சக்தி சர்மா -வின் சாதனை ஒரு தனிப்பட்ட பதவி உயர்வாக மட்டும் பார்க்கப்படவில்லை. 1990-களில் விமானப்படையில் இணைந்த பெண்கள் இன்று senior leadership positions-க்கு வருவதற்கான பாதை எப்படி மாறியுள்ளது என்பதற்கும் இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு.

“மருத்துவப் பிரிவுக்கு வெளியே ஒரு பெண் இவ்வளவு உயர்ந்த இரு நட்சத்திரப் பதவியை அடைய முடியுமா?” என்ற கேள்விக்கு, தன் 32 ஆண்டுகளுக்கும் மேலான சேவையால் பதில் சொல்லியிருக்கிறார் சக்தி சர்மா!

இப்போது அவர் வகிக்கும் Assistant Chief of the Air Staff (Education) பொறுப்பு, விமானப்படையின் கல்வி சார்ந்த பணிகளுக்கு இன்னொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

1994-ல் Education Branch-ல் தொடங்கிய பயணம்… 2026-ல் Air Vice Marshal என்ற வரலாற்றுப் புள்ளியைத் தொட்டிருக்கிறது.

“Touch the Sky with Glory” — இந்திய விமானப்படையின் இந்த வாசகத்தை, Shakti Sharma-வின் பயணம் இன்னும் ஒரு முறை நினைவுபடுத்துகிறது!



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed