திமுக: அன்பில் மகேஸைக் கைவிட்ட உதயநிதி? திருச்சி அரசியலில் திருப்பம்! | Udhayanithi Led Down Anbil Mahesh during Party restructuring!


மற்ற மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் சென்னையில் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கடலூரில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விருதுநகரில் தங்கம் தென்னரசு போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. அதேநேரம் கீதா ஜீவன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு 2 தொகுதிகள் அடங்கி மா.செ பொறுப்பு ஒதுக்கப்படவுள்ளது.

ஆனால் இவர்களுக்கு 2, மற்றவர்களுக்கு 3 எனப் பேதம் காட்டப்படவில்லை. ஆனால், திருச்சியில் மட்டும்தான் முன்னாள் அமைச்சருக்கு 2 தொகுதிகளையும் மற்றவருக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன” என்றனர்

 உதயநிதி ஸ்டாலின் - கே.என் நேரு

உதயநிதி ஸ்டாலின் – கே.என் நேரு

நம்மிடம் பேசிய தலைமைக்கு நெருக்கமானவர்கள், “கே.என் நேரு முதன்மைச் செயலாளராக இருப்பதால் 6 ஆண்டுகளுக்கு முன்பே மாவட்ட அரசியலிலிருந்து அவர் விலகிவிட்டார். எனவே மா.செ ரேஸில் அவரில்லை.

அதேசமயம், 3 தொகுதிகள் கொண்டு திருச்சி மத்திய மாவட்டத்துக்குள்தான் கே.என் நேருவின் தொகுதியாக திருச்சி மேற்கு தொகுதி வருகிறது. எனவே அந்த மத்திய மாவட்டத்தை நேருவின் மகன் அருண் நேருவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

2024-ல் நேரடி அரசியலுக்கு வந்த அருண் நேருவுக்கு 3 தொகுதிகள் அடங்கிய மா.செ பொறுப்பும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு 2 தொகுதி மா.செ பொறுப்பும் வழங்கப்படவுள்ளது.

அருண் நேருவுக்காக கே.என் நேரு வாதாடிய நிலையில் தனது நண்பர் அன்பில் மகேஸுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி போராடவில்லை. மறுசீரமைப்புக்குப் பிறகும் திருச்சி தி.மு.க கே.என். நேரு கண்ட்ரோலில்தான் இருக்கிறது ” என்றனர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed