``இந்திய மீனவர்கள் மீது இலங்கை நீதிமன்ற அபராதம் கண்டனத்துக்குரியது" - மாணிக்கம் தாகூர் | A Sri Lankan court has imposed a fine on Rameswaram fishermen.


ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 22-ம் தேதி மீன்பிடிக்க சென்ற அந்தோணி பிரசாத் விசைப்படகையும், அதிலிருந்த மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீனவர்களின் காவல் நேற்று முடிந்ததை அடுத்து மீண்டும் தலைமன்னார் நீதிமன்றத்தில் 4-வது முறையாக ஆஜர்படுத்தினர்.

மீன்வளத்துறை அதிகாரிகள் 9 மீனவர்கள் மீதும் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் அடிப்படையில், தலைமன்னார் நீதிமன்ற நீதிபதி, 8 மீனவர்களுக்கு தலா ரூ.72 ஆயிரம் அபராதமும், அதேபோல் இலங்கை கடற்படையால் 2வது முறை சிறைபிடிக்கப்பட்ட மீனவர் செந்தில் என்பவருக்கு ரூ.80 ஆயிரம் (இந்திய பணம்) அபராதமும் விதித்தார்.

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்
X

அபராதத்தை கட்ட தவறும்பட்சத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய படகுக்கான வழக்கு ஜனவரி 7-ம் தேதி விசாரிக்கப்படும். அன்றைய தினம் படகின் உரிமையாளர், உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ₹5.76 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Независимый рейтинг https://рейтинг-аутстаффинговых-компаний.рф аутстаффинговых компаний для бизнеса. Сравниваем поставщиков услуг по работе с персоналом, кадровому сопровождению и предоставлению сотрудников. Оцените…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed