Bigg Boss 10: சீன் கட் ஆவதாக வருந்திய நடிகைக்கு அடித்தது 'பிக்பாஸ்' ஜாக்பாட்! | news about expected contestants list of bigg boss tamil 10


விஜய் டிவியின் ஃபேவரைட் ஷோ பிக்பாஸின் பத்தாவது சீசன் வரும் ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 6-ம் தேதி) தொடங்கவிருக்கிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடந்ததில்லை. கொஞ்சம் தேதிகள் மாறி நடக்கும். ஆனால் இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக எல்லா ஒரே நேரத்தில் பிக்பாஸ் தொடங்குகிறது.

அதேபோல் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களில் இருந்து சிலரை அனுப்பலாமெனத் தீர்மானித்து “பிக்பாஸ் தி காமன் மேன்’ என்றொரு நிகழ்ச்சியையும் நடத்தி, அதில் தேர்வாகும் ஓரிருவரை பிக்பாஸ் போட்டியாளராக அனுப்புவதென்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த சீசனில் போட்டியாளர்களாகச் செல்கிறவர்களென சீரியல் நடிகை ஷப்னம், ஃபரினா, ஃபௌசி உள்ளிட்ட சிலரது பெயர்களை ஏற்கெனவே நாம் வெளியிட்டிருந்தோம்.

நிகழ்ச்சி தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் சூழலில் தற்போது மேலும் சில போட்டியாளர்கள் குறித்த விபரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவர்கள் யாரெனப் பார்க்கலாமா?

நடனம் டு நடிப்பு!

டான்ஸராக சின்னத்திரையில் கலக்கியவர் ஆனந்தி.

‘ஜோடி’ ரியாலிட்டி ஷோவில் இவரது டான்ஸ் பெரிய வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம். பிறகு சீரியல் பக்கம் வந்தார். ‘தலையணைப் பூக்கள்’ முதலான சில சீரியல்களில் நடித்தார்.

தொடர்ந்து சினிமா முயற்சியையும் மேற்கொண்டார். சில படங்களில் நடித்தார். பல படங்களில் இவர் நடித்த சீன்கள் வரவில்லை. சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ மற்றும் ஜனநாயகன் படங்களிலும் இந்த நிலை தொடர்ந்ததாக வருந்தி வீடியோ வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்த நிலையில் பத்தாவது சீசன் கை கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.

மேலும் நடிகர் ஜான் விஜய், சுவாசிகா ஆகிய இருவரும் கூட பிக்பாஸ் செல்ல வாய்ப்பிருப்பதாக உறூதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.!



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. [url=https://vavada-skachat1.ru/]vavada скачать для андроид[/url] — лучший способ быстро установить приложение и начать пользоваться сервисом на Android. Благодаря этому пользователь быстрее…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed