ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு நடிப்பில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி மெகா ஹிட் ஆனது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இப்போது எடுத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திரமுகி 2 படம், வரும் விநாயகர் சதுர்த்தி அன்றுContinue Reading

மகாராஷ்டிராவில் ஓடும் அதிவிரைவு தொடர்வண்டியில் 4 பயணிகளை ஆர்பிஎஃப் காவலர் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பை செல்லும் அதிவிரைவு விரைவு தொடர்வண்டியில் பயணித்த சிடி சேத்தன் என்ற தொடர்வண்டி பாதுகாப்புப்படை காவலர் சிடி சேத்தன் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். மகாராஷ்டிராவின் பல்கார் தொடர்வண்டி நிலையத்தை, விரைவு தொடர்வண்டி கடந்த போது, பி5 பெட்டியில் 3 பயணிகள் மற்றும் ஆர்பிஎஃப் துணை சார்பு ஆய்வாளர் ஆகியோர்Continue Reading

அரசின் நிதிநிலைமை சீரான பிறகு மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, துறைமுகம் தொகுதி தம்பு செட்டி தெருவில் உள்ள முத்தியால் பேட்டை மேல்நிலைப்பள்ளியில் ,இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் தொடங்கிContinue Reading

சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் முழு விவரம்: ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும். அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, இடர்கள் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்குContinue Reading

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி உட்பட எப்படிப்பட்ட ஜாம்பாவான் போட்டியிட்டாலும் தோல்வியை பரிசாக வழங்குவோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட தங்கசாலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலை, அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, 130 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியContinue Reading

கிருஷ்ணகிரி வெடி கடை வெடித்து சிதறி 9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சிலிண்டர் கசிவுதான் காரணம் என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் வெடி கடை ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவராண வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். படுகாயமடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாயும்Continue Reading

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆறு ஏழை ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவச தானியங்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரண்டு நாள் உச்சிமாநாடு நடைபெற்றது. உச்சிமாநாட்டின் முக்கிய உரையில், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு தானியங்களை அனுப்புவதாக புடின் உறுதியளித்தார். வரும் மாதங்களில் புர்கினா பாசோ, ஜிம்பாப்வே, மாலி, சோமாலியா, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு 25,000 முதல் 50,000 டன் தானியங்களை இலவசமாக வழங்குவதாகContinue Reading

ஆபத்தான முறையில் அணையை கடந்து வழியும் வெள்ளம் – அச்சத்தில் ஓட்டம் பிடித்த எம்எல்ஏ…. தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நிர்மல் மாவட்டத்தில் உள்ள கடம் அணை நீர்பிடிப்புப் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடம் அணைக்கான நீர்வரத்து 4 லட்சம் நொடிக்கு கன‌அடியாக உயர்ந்துள்ளது. அணையின் கொள்ள‌ளவான 700 அடியில் 699.5 அடியை தொட்டுள்ளதால், அணையை தாண்டி தண்ணீர் வழிந்தோடுகிறது. அணையில் உள்ள 18Continue Reading

ஓய்வெடுப்பதற்காக மரத்தடியில் தூங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி தூங்குவோர் மீது எறும்பு உள்ளிட்ட பூச்சிகள் சட்டைக்குள் புகுந்து கடிக்கும்.   இதனால், பூச்சி ஏதும் வராத இடமாக பார்த்து மரத்தடியில் படுத்து உறங்குவர். அப்படி, பார்த்து பார்த்து உறங்கினாலும், இப்படி ஒரு ஆபத்து வரும் என யாரும் நினைத்த‌து இல்லை.   ஆம், மரத்தடியில் படுத்து உறங்கிய நபரின் சட்டைக்குள் மிகப்பெரிய பாம்பு புகுந்தால் என்ன ஆகும்? சமூகContinue Reading

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சுபாஷ் முண்டாவை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.   ராஞ்சியில் உள்ள தனது அலுவலகத்தில் சுபாஷ் முண்டா நேற்றிரவு இருந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயமடைந்த சுபாஷ் முண்டா உயிரிழந்த நிலையில், மர்ம நபர்கள் தப்பியோடினர்.   இதையறிந்த அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், சாலை மறியலில்Continue Reading

மகாராஷ்டிராவில் மீண்டும் முதலமைச்சர் மாற்றம்? – முன்னாள் முதலமைச்சர் கருத்தால் பரபரப்பு…. மகாராஸ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பதிலாக அஜித் பவார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று முன்னாள் முதலமைச்சர் பிரித்திவிராஜ் சவான் தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை தனது வசமாக்கிய ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி வைத்து, முதலமைச்சராக பொறுப்பேற்றார். இது மராட்டிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைContinue Reading

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல்துறையினர் இன்று காலை ஆய்வை தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், இந்திய தொல்லியல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இஇந்த வழக்குகள் மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி முடிந்த‌து. இதையடுத்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவுContinue Reading

இன்னும் பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும், தானாகவே மாட்டிகொள்வார்கள்,மாட்டிவிடத் தேவையில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி தங்கயூர் ஊராட்சிக்கு உட்பட்ட காவடிக்காரனுர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்ற பெயர் பெற்றது. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகாலம் ஆகிறது. அதிமுக ஆட்சிContinue Reading

கூகுளில் பார்பி என்று தேடினால் மொத்த பக்கமும் பிங்க் நிறத்தில் வெடி வெடிப்பது போன்றும், எழுத்துக்கள் அனைத்தும் பிங்க் நிறத்திலும் மாறியுள்ளது. ஹாலிவுட் திரைப்படமான பார்பி தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. க்ரெடா கர்விக் என்ற பெண் இயக்குநரின் படைப்பில் பார்பி உருவாகியுள்ளது. வார்னர் பிரதர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் பார்பியாக மார்கட் ராபி நடித்துள்ளார். இவருடைய பெயரை கிளிக் செய்தாலும் பிங்க நிரத்தில்Continue Reading

அரியலூரில் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 81 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். 81 வயதாகயன இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 11 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், சுந்தரத்தை மகளிர்‌ காவல் துறையினர் கைதுContinue Reading

தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 02.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்Continue Reading

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை.20 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரல்ஹாத் சிங் ஜோஷி அறிவித்துள்ளார். மழைக்கால கூட்டத் தொடரில், அரசின் முக்கிய மசோதாக்கள் மற்றும் இதர நாடாளுமன்ற அலுவலகத்தின் மீது ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற ஒத்துழைக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுவதாக நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரல்ஹாத் சிங் ஜோஷி தெரிவித்துள்ளார். எதிர்வரும்Continue Reading

அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழலை வெளியே சொல்லிவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த தாதாபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் கிராமத்தில் இருந்து நகரம் வரை ஏழை மக்கள் உயர்ந்துள்ளார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான் காரணம் என்றார்.Continue Reading

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார்,Continue Reading

ஆதி திராவிடர் நல வாரிய சமையல்காரருக்கு 6 ஆண்டுகளாக சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல வாரியத்தில் சமையல்காரராக உள்ள தனக்கு, 2017 டிசம்பர் 1ம் தேதி முதல் சம்பளம் வழங்கப்படாததால், தனது சம்பள பாக்கியை வழங்க ஆதி திராவிடர் நலத்துறைக்கு உத்தரவிடக் கோரி மூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.Continue Reading

ஆன்லைன் சூதாட்ட இழப்பு தற்கொலைகள் கூடாது; மன உறுதியுடன் மீண்டு வர போராட வேண்டும்! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிசெல்வம் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார் என்றContinue Reading