கேப்டன் மில்லர் படத்தின் பின்னணி இசைக்காக ரஹ்மான் தனக்கு ஃபோன் செய்து பாராட்டியதாக இசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் குமார்

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானிடம் உதவியாளராக இருந்து தனது இசைப்பயணத்தைத் தொடங்கியவர் ஜி.வி பிரகாஷ் குமார். வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். மயக்கம் என்ன. ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம் , அசுரன் , சூரரைப் போற்று என தனது இசையில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையில் சமீபத்தில் வெளியான படம் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர்.

17 வருஷத்தில் முதல் முறையாக பாராட்டிய ரஹ்மான்

When @gvprakash recieved massive appreciation from ARR for his BGM in #CaptainMiller 👏👌pic.twitter.com/5YcVW2XurP

— Siddarth Srinivas (@sidhuwrites) March 10, 2024

தனது ஆசிரியரிடம் பாராட்டுக்களை பெற வேண்டும் என்பது தான் எந்த ஒரு மாணவனுக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா போல், மாரி செல்வராஜூக்கு ராம் போல் , ஜி. வி பிரகாஷுக்கு ஏ ஆர் ரஹ்மான். அப்படியான ரஹ்மான் தன்னை இந்த 17 ஆண்டுகளில் ஒருமுறை கூட பாராட்டியது இல்லை என்றும் கேப்டன் மில்லர் படத்திற்கான தனக்கு ஃபோன் செய்து ரஹ்மான் பாராட்டியதாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.வி பிரகாஷ் தெரிவித்தபோது “நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது ரஹ்மானிடம் இருந்து எனக்கு கால் வந்தது. உடனே வெளியே வந்து ஃபோனை எடுத்து பேசினேன். கேப்டன் மில்லர் படம் பார்த்தேன் செமையா பண்ணியிருக்க. பி.ஜி.எம் எல்லாம் சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சதுன்னு அவர் என்னிடம் சொன்னார். இந்த 17 ஆண்டுகளில் ரஹ்மான் எனக்கு எத்தனையோ முறை கால் செய்து பேசியிருக்கிறார், ஏதாவது நிகழ்ச்சி பற்றி பேசுவார் இல்லை என்றால் மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவார். ஆனால் ஒருமுறை கூட கால் பண்ணி மியூசிக் நல்லா இருக்குனு அவர் என்கிட்ட சொன்னது இல்ல. அவர் அப்டி சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.” என்று அவர் கூறியுள்ளார்.

ரிபெல்

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம் ரிபெல். இப்படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். ரிபெல் படத்தை இயக்கியுள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி பிரகாஷே இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். நேற்று ( மார்ச் 11 ) ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. வரும் மார்ச் 28 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.