இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில், அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் ‘அஹ்லன் மோடி’ நிகழ்ச்சியில் பிரதமர் இன்று கலந்து கொண்டார்.

"அனைவரின் இதயத்துடிப்பும் ஒன்றைதான் சொல்கிறது"

ஆயிரக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, " அபுதாபியில் புதிய சரித்திரம் படைத்துள்ளீர்கள். நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால், அனைவரின் இதயமும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று மைதானத்தில், இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் நட்பு வாழ்க என ஒவ்வொரு இதயத்துடிப்பும், ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு குரலும் சொல்கிறது. எனது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வந்துள்ளேன். நீங்கள் பிறந்த மண்ணின் நறுமணத்தைக் கொண்டு வந்துள்ளேன். 140 கோடி மக்களின் செய்தியைக் கொண்டு வந்துள்ளேன். உங்களால் பாரதம் பெருமை கொள்கிறது என்பதே அந்த செய்தி.

2015ஆம் ஆண்டில் நான் மத்தியில் ஆட்சிக்கு வந்து கொஞ்ச காலமே ஆனது. அப்போது, முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தது எனக்கு நினைவிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் அதுவாகும்.

"என்னால் மறக்கவே முடியாது"

ராஜாங்க ரீதியான உறவு எனக்குப் புதிது. அப்போது, விமான நிலையத்தில் அன்றைய பட்டத்து இளவரசரும் இன்றைய அதிபரும், அவரது சகோதரர்கள் ஐந்து பேரும் என்னை வரவேற்றனர். அந்த அரவணைப்பு, அவர்களின் கண்களில் தெரிந்த பிரகாசம் அதை என்னால் மறக்கவே முடியாது. அந்த வரவேற்பு எனக்கு மட்டுமல்ல. 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்தது.

கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்வது இது 7ஆவது முறை. சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அவர்களும் இன்று என்னை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக வந்தார். இது அவரைச் சிறப்புறச் செய்கிறது. இந்தியாவில் நான்கு முறை அவரை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு அவர் குஜராத்துக்கு வந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்க லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் கூடினர். ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய சிவிலியன் விருதான தி ஆர்டர் ஆஃப் சயீதை வழங்கியது எனது அதிர்ஷ்டம். இந்த கௌரவம் என்னுடையது மட்டுமல்ல. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் உரியது.

"இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இந்தியனின் குறிக்கோள்"

கடந்த 2015 ஆம் ஆண்டு, உங்கள் அனைவரின் சார்பாக அபுதாபியில் கோயில் கட்டும் திட்டத்தை அவரிடம் (ஷேக் முகமது பின் சயீத்) முன்வைத்தபோது, அவர் உடனடியாக அதற்கு ஆம் என்றார். இப்போது இந்த பிரம்மாண்டமான (BAPS) திறப்பு விழாவிற்கான நேரம் வந்துவிட்டது.

இன்று, ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. இன்று ஐக்கிய அரபு அமீரகம் ஏழாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. எளிதாக வாழ்வதற்கும், எளிதாக தொழில் செய்வதற்கும் இரு நாடுகளும் நிறைய ஒத்துழைக்கின்றன. இன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த உறுதிமொழியை முன்னெடுத்துச் செல்கின்றன.

நாங்கள் எங்கள் நிதி அமைப்பை ஒருங்கிணைக்கிறோம். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டாண்மை தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சமூகம் மற்றும் கலாச்சாரத்தில், இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சாதித்தது உலகிற்கு முன்மாதிரியாக உள்ளது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதுதான் ஒவ்வொரு இந்தியனின் குறிக்கோளும்" என்றார்.

Month: February 2024

இந்தியர்களின் லட்சியம் இதுதான்? அபுதாபியில் சக்கைபோடு போட்ட பிரதமர் மோடி!

Sri Lanka has issued Travel document to Rajiv Gandhi assassination convict Santhan Says Tamil Nadu govt
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான சாந்தன் என்ற சுதேந்திரராஜா, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்தாண்டு விடுதலை செய்யப்பட்டார். இலங்கை தமிழரான அவர், திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே, இலங்கைக்கு சென்று தனது வயதான தாயாரை பார்த்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என சாந்தன் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
சாந்தன் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டதா?
இந்த நிலையில், இலங்கைக்கு செல்ல சாந்தன்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், இதற்கான பயண ஆவணத்தை வழங்கியுள்ளது. ஆனால், இந்த பயண ஆவணம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைதான் செல்லுபடியாகும். எனவே, இலங்கைக்கு சாந்தன் சென்றாலும் அவர் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாக இந்தியா திரும்ப வேண்டும். அல்லது பயணத்தை நீட்டிக்க இலங்கை அரசிடம் அனுமதி கோர வேண்டும்.
தமிழ்நாடு அரசுக்கு இலங்கை துணை தூதர் அனுப்பியுள்ள கடிதத்தின் நகலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2ஆம் தேதி, பிறப்பித்த பயண ஆவணத்தின் நகலை நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார், கே. குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு, அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் சமர்பித்தார்.
பின்னர் பேசிய முனியப்பராஜ், “இலங்கை துணை தூதர் அனுப்பிய கடிதத்தை கடந்த 9ஆம் தேதி, சென்னையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு அனுமப்பியுள்ளோம்” என்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்:
இதை தொடர்ந்து பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்.எல். சுந்தரேசன், “வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவிப்படவில்லை. ஆனால், கடிதத்தின் நகலை எனக்கு அரசு கூடுதல் வழக்கறிஞர் அளித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தின் அறிவுறுத்தல் என்ன என்பதை அறிந்து கொள்ள நேரம் வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், “இலங்கைக்கு செல்ல வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் அனுமதிக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வரும் பிப்ரவரி 29ஆம் தேதி வரை கால அவகாசம் தருகிறோம்” என்றார்கள்.
இலங்கை துணை தூதர் அனுப்பியுள்ள கடிதத்தில், “சாந்தன்-க்கு பயண ஆவணம் வழங்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி கோரிக்கை விடுத்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Pulwama Terror Attack: பிப்ரவரி 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம்.. மறக்க முடியுமா? இன்று புல்வாமா தாக்குதல் நினைவு தினம்!மேலும் காண

Valentine’s Day 2024 celebrities Lovers day celebrations here | Valentine’s Day: காதலர் தினத்தில் சிங்கிளாக புகைப்படம் பதிவிட்ட பிரபலங்கள்
காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் தனியாக புகைப்படம் பதிவிட்டு வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டின் காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஒவ்வொருவரும் தங்கள் காதல் துணை மற்றும் இல்வாழ்க்கை துணைக்கு காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் காதலிக்காதவர்களும் சரி, தங்களுக்கு பிடித்தமான உறவுகளுக்கு அன்புகளை பரிமாறிக் கொண்டும் வருகின்றனர். இப்படியான நிலையில் பல திரைப் பிரபலங்கள் காதலர் தினத்தில் சிங்கிளாக புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை வர்ஷா பொல்லம்மா:
96, பிகில் போன்ற படங்களில் நடித்த வர்ஷா பொல்லம்மா, “மகிழ்ச்சியாக இருப்பது எப்படி – உங்கள் சொந்த நகைச்சுவைகளைப் பார்த்து சிரிக்கவும் 🤓♥️. மேலும், அதிர்ஷ்டசாலிகளுக்கு நட்பு தின வாழ்த்துக்கள் மற்றும் ரக்ஷாபந்தன் நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.நடிகை நதியா:
நீங்கள் என் காதலராக இருப்பீர்களா? என்ற கேப்ஷனோடு 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியான நதியா புகைப்படம் பதிவிட்டுள்ளார்.நடிகை பிரியா பவானி ஷங்கர்:
ஒரு விசித்திரக் கதையிலிருந்து மேஜிக்காக என்ற கேப்ஷனோடு நடிகை பிரியா பவானி ஷங்கர் காதலர் தின வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
நடிகை பிரிகிடா:
இரவின் நிழல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை பிரிகிடாவின் காதலர் தின புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகை லட்சுமி மஞ்சு:
நடிகர் மோகன் பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “செல்ஃப் லவ் இஸ் பெஸ்ட் லவ்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: Valentine’s Day: பள்ளியில் மட்டும் 3 காதல்கள்.. சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நிலையா?
மேலும் காண

In the Rajya Sabha election to be held on February 27, It is reported that L. Murugan will contest bjp releases second candidate list
மத்திய அமைச்சர் எல். முருகன் எம்.பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுவார் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
BJP releases another list of candidates for the Rajya Sabha Biennial elections.Union Minister L Murugan from Madhya PradeshUnion Minister Ashwini Vaishnaw from Odisha pic.twitter.com/gE7m8geLCu
— ANI (@ANI) February 14, 202415 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தொகுதிகளுக்கும் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஹரியானா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை வரை வேட்பமனு தாக்கல் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி வேட்பமனு மீதான பரிசீலனை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை தங்களது பெயர்களை திரும்பப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் எல். முருகன். மத்திய அமைச்சர் எல். முருகன் எம்.பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுவார் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார். அதே சமயம் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தாராப்புரம் தொகுதியில் போட்டியிட்டு எல்.முருகன் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் மத்திய இணை அமைச்சரானதும் 2021 ஆம் ஆண்டு எம்.பியாக தேர்வானார் எல்.முருகன்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் (ராஜஸ்தான்) பதவிக்காலமும் இந்த ஆண்டு ஏப்ரலில் முடிவடைகிறது. ஏப்ரல் 2, 2024 அன்று, உத்தரப் பிரதேசத்தில் இருந்து 10, மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் இருந்து தலா 6, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகாவிலிருந்து தலா 4, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர், ஹரியானாவில் இருந்து தலா 3 , இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1 ராஜ்யசபா எம்.பி., ஓய்வு பெறுகின்றனர்.
மேலும் காண

Smriti Mandhana Rises To Fourth Spot In ICC Women’s ODI Batting Rankings
ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி தரவரிசை:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணி வீராங்கனை நடாலி ஸ்கிவர்-பிரண்ட் 807 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இலங்கை வீராங்கனை சாமரி அடப்பாட்டு 736 புள்ளிகளுடனும், 717 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி உள்ளார்.
நான்காவது இடத்திற்கு முன்னேறிய மந்தனா:
இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டு இடங்கள் முன்னேறி 696 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 689 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ஹர்மன்ப்ரீ கவுர் 639 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தில் இருக்கிறார். ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 746 புள்ளிகளை பெற்றி முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் 677 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் 675 புள்ளி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 654 புள்ளிகளுடன ஒரு இடம் சரிந்து நான்காவது இடத்தில் உள்ளார்.
Fight for the No. 1 ODI bowler intensifies in the latest ICC Women’s ODI Player Rankings 🔥Read on 👇
— ICC (@ICC) February 13, 2024பந்துவீச்சாளர்கள் தரவரிசை:
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மாவை தவிர முதல் 10 இடங்களில் வேறு எந்த இந்திய வீராங்கனையும் இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் 452 புள்ளிகளுடன முதல் இடத்திலும், இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் 360 புள்ளிகளை பெற்று இரண்டாவத இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் 358 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், நியூசிலாந்தின் அமெலியா கெர் 347 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா 345 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
மேலும் படிக்க: Jasprit Bumrah: கிண்டல் செய்த நபர்.. பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் கொடுத்த பதிலடி!
மேலும் படிக்க: MS Dhoni: என்னா மனுஷன்யா…சிறுவயது நட்பை மறக்காமல் தோனி செய்த செயல்!

Priya Bhavani Shankar Photos : சுவிட்சர்லாந்த் பனியில் பிரியா பவானி ஷங்கர் எடுத்துக்கொண்ட சில் க்ளிக்ஸ்!
Priya Bhavani Shankar Photos : சுவிட்சர்லாந்த் பனியில் பிரியா பவானி ஷங்கர் எடுத்துக்கொண்ட சில் க்ளிக்ஸ்!
Neenga Road Rajava | Neenga Road Rajava: நீங்க ரோடு ராஜாவா..? காவல்துறையின் அவர்னஸ் போர்டால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தா..?
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் நடுவில் உள்ள கம்பங்களில் காவல்துறையினரால் ‘நீங்க ரோடு ராஜாவா..?’ என்ற அச்சிடப்பட்ட குட்டி பேனர் ஒன்று நெடுதூரம் வைக்கப்பட்டுள்ளது. இது காவல்துறையினரால் ஏன் வைக்கப்பட்டது..? எதற்காக வைக்கப்பட்டது..? என்று இப்போது வரை யாருக்கு தெரியவில்லை.
ஆனால், ஏதோ ஒரு பாதுகாப்பு தொடர்பான அவர்னஸுக்காகதான் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் அவார்னஸுக்காக வைக்கப்பட்டுள்ள பேனரே, வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தையும், உயிரை எடுத்துவிடும் சூழலை தந்துவிடுமோ என்ற அச்சத்தை தற்போது கொடுத்துள்ளது.
What is this #NeengaRoadRajaVa? pic.twitter.com/4TGqYzj11w
— 🇮🇳 Vidyasagar Jagadeesan🇮🇳 (@jvidyasagar) February 12, 2024ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. அவர்களது கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஏதேனும் பகுதிகளுக்கு வரும்போது, அவரை வரவேற்பதற்காக அக்கட்சியின் தொண்டர்கள் தலைவர்களை வரவேற்று சாலைகளின் ஓரங்களிலும் கட்சி கொடிக் கம்பங்களையும், பேனர்களை வைப்பார்கள். இது தமிழ்நாட்டில் நிகழும் பொதுவான நிகழ்வுதான் என்றாலும், இந்த கொடிக் கம்பங்கள் மற்றும் பேனர்கள் வாகன ஓட்டிகளின் மீது எத்தனையோ அசம்பாவிதங்களை விளைவித்துள்ளது.
உதாரணத்திற்கு, கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்த சுபஸ்ரீ என்ற 23 வயது பெண், பள்ளிக்கரணை சுற்றுச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு வருகை புரிந்த அப்போதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்று சாலையின் நடுவில் இதுபோன்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சுபஸ்ரீ வந்தபோது, நடுவில் இருந்த பேனர் ஒன்று காற்றில் சரிந்து அவர் மீது விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரும் அப்போது கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதேபோல், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே விளம்பரப் பலகை சரிந்து விழுந்து மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்வளவு ஏன் கடந்த மாதம் கூட, திருத்தணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆமா @ChennaiTraffic..#NeengaRoadRajaVa?#நீங்கரோடுராஜாவா?#RoadRaja pic.twitter.com/8j74Sx2rBx
— Daniel Alfi Vis 47 (@dav___47) February 12, 2024இப்படி இந்த பேனர் கலாச்சாரத்தால் எத்தனை விபத்துகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்க அப்பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் முறைப்படி அனுமதி பெற்று பேனர்கள் வைக்கப்பட வேண்டும் என்று நிலை உள்ளது. இப்படி பேனர் வைக்க காவல்நிலையங்களில் அனுமதி வாங்கும் நிலையில், யார் அனுமதியுடன் சென்னையின் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் ‘நீங்க ரோடு ராஜாவா..?’ என்ற அச்சிடப்பட்ட குட்டி பேனரை வைத்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது. அப்படியே தமிழ்நாடு அரசு அல்லது சென்னை மாநகராட்சி அனுமதியுடன் காவல்துறையினர் பேனர் வைத்திருந்தாலும், இத்தகைய பேனர்கள் முற்றிலும் பாதுகாப்பற்றதாகவே இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் வைக்கப்பட்ட இந்த பேனரானது இன்று காலை ஜெமினி பிரிட்ஜில் (அண்ணா மேம்பாலம்) கடந்து வரும்போது குடை சாய்ந்து இருந்தது. சுற்றிலும் 4 ரீப்பர் கட்டை மற்றும் பக்கவாட்டில் ஒரு கட்டையுடன் பேனர் ஒட்டப்பட்டு, வெறும் கட்டிடம் கட்டும் கட்டுகம்பியுடன் காவல்துறையினர் சென்னை மாநகரம் முழுவதும் பேனர்களை வைத்துள்ளது. அதிகபட்சமாக காற்று வேகமாக அடித்தால் கூட இம்மாதிரியான பேனர்கள் கிழிந்து அல்லது சாலைகளில் வரும் வாகன ஓட்டிகளின் உயிரைகளை காவு வாங்க போதுமானதாக இருக்கும்.
சாலைகளுக்கு நடுவே வைக்க தகரத்துடன் கூடிய டிஜிட்டல் மையமாக்கப்பட்ட போர்டுகள்தான் சிறந்தது. அதுவே மிகவும் பாதுகாப்பானது. அத்தகைய டிஜிட்டல் மையமாக்கட்ட போர்டுகளைதான் காவல்துறையினர் எப்போதும் சாலைகளின் பயன்படுத்தும். உதாரணத்திற்கு ‘NO FREE LEFT, இது விபத்து பகுதி’ என்ற வாசகங்கள் இடம் பெற்ற போர்டுகள். எனவே, வாகன ஓட்டிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு சிக்னல்களிலும் ஹெல்மெட்கள் இன்றி ஓட்டிவரும் வாகனஓட்டிகளிடம் கட்டணத்தை வசூலிக்கும் காவல்துறையினர் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, அவார்னஸுக்கு வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக எடுத்துவிட்டு, டிஜிட்டல் மையமாக்கப்பட்ட போர்டுகளை வைத்தால் மிகவும் நல்லது.மேலும் காண

மேட்டூர் அணையின் நீர் வரத்து 43 கன அடியில் இருந்து 54 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 44 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 43 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 65.85 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 29.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.42 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.80 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 488 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,122 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 52.58 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 102 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.

Latest Gold Silver Rate Today February 1 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 46,000 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,750 விற்பனை செய்யப்படுகிறது.ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49.760 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,220 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 க்கு விற்பனையாகிறது.
கோயம்புத்தூர்
“தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,220 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,750 ஆகவும் விற்பனையாகிறது.
மதுரை
மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,220 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,750 ஆகவும் விற்பனையாகிறது.
திருச்சி
திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,220 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,750 ஆகவும் விற்பனையாகிறது.
வேலூர்
வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,220 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,750 ஆகவும் விற்பனையாகிறது.
நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
மும்பை
மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,284 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,760 ஆகவும் விற்பனையாகிறது.
புது டெல்லி
புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்ஒன்றிற்கு ரூ.6,289 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,775 ஆகவும் விற்பனையாகிறது.
கொல்கத்தா
கொல்கத்தாவில் (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,284 கவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,760 ஆகவும் விற்பனையாகிறது.
ஐதராபாத்
ஐதராபாத் நகரில் (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,284 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,760 ஆகவும் விற்பனையாகிறது.
அகமதாபாத்
அகமதபாத் (Gold Rate in Ahmedabad) நகரில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,289 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,765 ஆகவும் விற்பனையாகிறது.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தில் (Gold Rate Trivandrum) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,284 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,760 ஆகவும் விற்பனையாகிறது.
பெங்களூரு
பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,284 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,760 ஆகவும் விற்பனையாகிறது.
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூரில் (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,299 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,775 ஆகவும் விற்பனையாகிறது.
புனே
புனே நகரில் (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,284 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,760 ஆகவும் விற்பனையாகிறது.
TN Assembly: சட்டபேரவையில் பின்னுக்கு தள்ளப்பட்ட ஓபிஎஸ்.. உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நீண்ட நாட்கள் கோரிக்கைக்குப் பின் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தற்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வரும் அதே நேரத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளையும், மக்களின் பொதுப்பிரச்சினைகளையும் எழுப்பி வருகின்றனர். இதற்கு முதலமைச்சர் முதல் அந்தந்த துறை அமைச்சர்கள் வரை பதிலளித்து வருகின்றனர்.

நேற்று கூட்டத்தொடரின் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, ‘சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகில் தான் துணைத்தலைவர் அமர்வது மரபாக உள்ளது. அப்படி இருக்கையில் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.,க்களால் தேர்வு செய்யப்பட்டும், அவருக்கான இருக்கை ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை தங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு விட்டது’ என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கையை மறுபரிசீலனை செய்து அதற்கு தக்க ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இடத்தில் இதுவரை அமர்ந்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரண்டாவது வரிசையில் இடம் மாற்றப்பட்டுள்ளது. அவர் இருந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சில தினங்களுக்கு முன் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜியின் இருக்கையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சி பிரிவில் 2வது வரிசையில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு முதல் வரிசையில் இடமளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிமுகவின் நீண்ட நாள் கோரிக்கைக்கு முடிவு கிடைத்து விட்டது.

Valentine's Day: காதல் கல்யாணத்துல இருக்கும் மைனஸ்.. வெளிப்படையாக பேசிய சரண்யா பொன்வண்ணன்!

காதல் திருமணம் வெற்றிகரமாக அமைய என்ன செய்ய வேண்டும் என்பதை நடிகை சரண்யா பொன்வண்ணன் சொன்ன வீடியோ பற்றி காணலாம்.

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சரண்யா. அடுத்த சில ஆண்டுகள் பல படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் மறைந்த இயக்குநர் ராஜசேகரை முதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை 3 ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டனர். 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த திருமணம் 29 ஆண்டுகளை எட்டி தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர்.

இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். சரண்யா பொன்வண்ணன் தான் தமிழ் சினிமாவின் டாப் மோஸ்ட் அம்மா நடிகையாக வலம் வருகிறார். விஜய் தவிர்த்து மற்ற அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்து விட்டார். பொன்வண்ணனும் நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலான கேரக்டரில் நடித்து வருகிறார்.

இதனிடையே உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை துணை அல்லது காதலிக்கும் நபருக்கு தங்களது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் சரண்யா பொன்வண்ணன், வெற்றிகரமான காதல் வாழ்க்கை அமைவதற்கான முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில், “காதல் கல்யாணத்துல இருக்குற முக்கியமான மைனஸ் என்னன்னு பார்த்தால், காதலிக்கும்போது நிறைய சொல்வாங்க. அடிக்கடி வெளியே கூப்பிட்டு போவாங்க, கிஃப்ட் வாங்கி கொடுப்பாங்க. இனிமையான சொற்கள் எல்லாம் பேசுவாங்க. அழகா இருக்க என்கிற மாதிரியெல்லாம் சொற்கள் சொல்லுவாங்க. கல்யாணத்துக்கு பிறகு இவ என்னுடையவள், எனக்கு சொந்தமானவள். இதெல்லாம் சொல்லிகிட்டா இருக்கணும்ன்னு தோணும். குழந்தை பொறக்கலாம், ஆபீஸ் வேலை, குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இதற்கு காரணமாக இருக்கலாம்.

அதனால் வெளியே கூப்பிட்டு போகிற எண்ணம் தோன்றாமல் இருக்கலாம். 5 வயசுல நமக்கு சைக்கிள் வேணும்ன்னு தோணும். 10 வயசுல நமக்கு வேற ஒன்று தோன்றும். 5 வயசு ஃபீலிங் 10 வயசுல இருக்காது இல்லையா? . அதேமாதிரி தான் காதலிக்கும் போது இருக்கும் எண்ணம் கல்யாணத்துக்கு பிறகு எப்படி இருக்கும். அதுவேறு இதுவேறு என புரிந்து கொள்ள வேண்டும். இதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்தால் காதல் கல்யாணம் கண்டிப்பாக ஜெயிக்கும். முக்கியமாக இருவருக்கும் சண்டை வர அப்ப ஒன்னு சொன்னீங்க, இப்ப ஒன்னு செய்றீங்கன்னு இந்த விஷயத்துல தான் சண்டை வரும். இதை புரிந்து கொண்டால் கண்டிப்பாக காதல் கல்யாணம் வெற்றிகரமாக அமையும்” என சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:  Valentine’s Day: காதலர் தின சிறப்பு ராசி பலன்.. உங்கள் ராசிக்கு தம்பதியரின் காதல் வெற்றியா ? தோல்வியா ?

TN Assembly: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு.. சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித் தீர்மானம் இன்று நடக்கும் நிகழ்வின் போது கொண்டு வரப்படுகிறது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அதேசமயத்தில் மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் நோக்கமாகும். இதனால் அரசுக்கான செலவுகள் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நம் இந்தியாவில் புதிது அல்ல. சில மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் சேர்த்தே நடத்தப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இவ்வாறு நடக்கும்போது பொதுமக்கள் 2 வாக்குகளை செலுத்த வேண்டும்.

மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை வலியுறுத்தி வருகிறது. இத்திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடியது. அன்றைய தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் புறக்கணித்தார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று நடந்த 2வது நாள் கூட்டத்தொடரில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம், அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

இப்படியான நிலையில் 3வது நாளான இன்று தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிராக இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிய உள்ள நிலையில் இதனுடன் சேர்த்து மொத்தம் 2 தீர்மானமாக தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால் அதனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது’ என்றும், இரண்டாவதாக 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்பட இருக்கும் மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டுமென்ற இரண்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட உள்ளது. இவற்றின் மீது விவாதம் நடைபெற்று பின்னர் நிறைவேற்றப்படும்.

top news India today abp nadu morning top India news February 14th 2024 know full details
வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கட்; ஒழுங்கு நடவடிக்கையும் பாயும்: ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு செக்!அரசு ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் சக்தி காந்த தாஸ் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கத்தினர், நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முன்மொழிந்துள்ளனர். தமிழக அரசின் விதிப்படி, அரசின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய எந்தவித வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களிலும் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது அல்லது ஈடுபடப்போவதாக பயமுறுத்தக்கூடாது. அது, அரசு விதிகளை மீறியதாக அமைந்துவிடும். மேலும் படிக்க..
கிடைக்குமா ஜாமின்? செந்தில் பாலாஜியின் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை..அமைச்சர் பதவியை நேற்று முன் தினம் ராஜினாமா செய்த நிலையில் செந்தில் பாலாஜியின் பிணை மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான அதிமுக ஆட்சியின்போது செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்த, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மோசடி செய்யப்பட்டதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மேலும் படிக்க..
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு.. சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித் தீர்மானம் இன்று நடக்கும் நிகழ்வின் போது கொண்டு வரப்படுகிறது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அதேசமயத்தில் மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் நோக்கமாகும். இதனால் அரசுக்கான செலவுகள் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நம் இந்தியாவில் புதிது அல்ல. சில மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் சேர்த்தே நடத்தப்படுகிறது. மேலும் படிக்க..
டெல்லியை நோக்கி பேரணி – நள்ளிரவிலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சுவிவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க, எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் கோரிக்கைகள நிறைவேற்றுவது தொடர்பாக நடைபெற்ற, மத்திய அரசு உடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியை தழுவின. இதையடுத்து நேற்று காலை முதலே பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஷாம்பு பகுதியில், போலீசாரால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழலும் ஏற்பட்டது. மேலும் படிக்க..
மேலும் காண

Lovers Day 2024 Tamilnadu Government Take Action to Implement Lovers Safety Act MK Stalin Annadurai DMK
பிப்ரவரி 14ஆம் தேதி என்றாலே உலகம் முழுவதும் காதல் திருவிழாதான். காதலர்கள் தாங்கள் வருடத்தில் எத்தனை நாட்கள் சந்தித்துக் கொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தி இருந்தாலும், காதலர் தினத்தில் சந்திதுத்து, அந்த தினத்தில் தனது காதலரிடம் கொடுப்பதற்காக பல நாட்களாக அலைந்து திரிந்து அல்லது தானே பல மணி நேரங்களோ பல நாட்களோ செலவழித்து ஏற்பாடு செய்த பரிசை எடுத்துக் கொண்டு, தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களைப் போல் காதல் கொண்டவர்கள் தங்களது காதலரைச் சந்திக்கும் வரை அவர்கள் மனதில் கொப்பளிக்கும் அன்பை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.எதிர்க்கப்படும் காதலர் தினம்
என்னதான் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது எனக் கூறினாலும் ஒரு சில நாடுகள் காதலர் தினத்தை தங்களது மதத்திற்கு எதிரானது, தங்களது கலாச்சாரத்திற்கு எதிரானது எனக் கூறி எதிர்த்து வருகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் வடக்கு மாநிலங்களிலும் மத்திய மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவ அமைப்புகள் காதலர் தினத்தைக் கொண்டாடக் கூடாது எனவும் காதலர் தினத்தில் பொது இடங்களில் காதலர்களை அடையாளம் கண்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன் என மிரட்டுவதும் இங்கு நடந்துள்ளது.இது போன்று தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகள், ஜாதி கட்சிகள் மற்றும் ஜாதிச் சங்கங்கள் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக விலங்குகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகள் பல நடைபெற்றுள்ளது. ஒரு தினத்தை கொண்டாடுவது அல்லது ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளாதது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தது. அதே நேரத்தில் பாகுபாடு கற்பிக்காத சாதியாலும் மதத்தாலும் நமது சமூகம் இருந்தால் கூட பரவாயில்லை, பிரிவினையை, ஏற்றத்தாழ்வை கற்பிக்கின்ற சமூகமாக இந்திய சமூகம் இருப்பதாக வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் தினமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளில் ஒன்றாக இருப்பது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நடைமுறைப்படுத்திய சாதி மறுப்பு திருமணச் சட்டம். அதாவது இந்து திருமணச் சட்டத்தின்படி சுயாமரியாதைத் திருமணங்கள் சட்டப்பூர்வமானது. கடந்த 1967ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள்தான் ஆட்சியில் உள்ளது. மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை கொண்டு வந்த சுயமரியாதைச் சட்டபூர்வமானது இந்து திருமணச் சட்டத்தின்படி என்றாலும், அதன் பின்னர் காலங்கள் கிட்டத்தட்ட 57 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை கொண்டு வந்த சட்டத்தினைப் பற்றி மாறி மாறி பேசும் திராவிடக் கட்சிகள் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் விட்டது ஏமாற்றத்தை ஏற்படுத்தாமல் இல்லை என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது.முன்னுரிமை மட்டும் போதுமா?
சாதி மறுப்பு திருமணங்கள் (சுயமரியாதைத் திருமணம்) செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது அரசின் கொள்கை முடிவுகளில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள், தங்களின் முன்னோடிகளில் பெரியாரையும், பாபாசாகேப் அம்பேத்கரையும் கூறிவருகின்றனர். அவர்கள் சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்தனர். அதற்கு காரணம் சாதி மறுப்பு திருமணங்கள் சாதி ஒழிப்பின் ஒரு வழியாக கருதியதால்தான். அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை, அரசு உதவித் தொகை என்றெல்லாம் அரசு அறிவித்த பின்னரும் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறும் சதவீதம் அதிகரித்துவிட்டதா என்றால், அதற்கு பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.
ஆணவக் கொலைகள்
தமிழ்நாட்டில் நடைபெறும் சாதி மறுப்பு திருமணங்கள் என்பது இரண்டு குடும்பத்தாரும் நேரடியாக கலந்து பேசி அந்த திருமணங்களை நடத்தி வைப்பது கிடையாது. மாறாக இங்கு நடைபெறும் பெரும்பான்மையான சாதி மறுப்பு திருமணங்கள் அனைத்தும் காதல் திருமணங்கள்தான். இப்படியான காதல் திருமணங்கள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கதுதான். அதே நேரத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்றால் அங்கு பிரச்னையாக எழுவது பொருளாதார நிலை. காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் யாரேனும் ஒருவர் வேறு சாதி எனத் தெரிந்தால், மேல் சாதி எனக் கருதும் தரப்பினர் இருவரையும் கொலை செய்யும் கேவலமான செயல்களையும் பார்க்க முடிகின்றது. திருமணம் வரை ஏன் செல்ல வேண்டும் மாற்று சாதியைச் சேர்ந்தவர்கள் இருவர் பேசிக்கொண்டு இருந்தற்காக, அதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததுதானே.பண்பட்ட சமூகம்
இப்படியான நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மடல் அரசு காதல் திருமணம் அதாவது சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்பவர்கள், மத மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கென தனி பாதுகாப்புச் சட்டத்தினை இயற்ற வேண்டும் எனவும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் கணிசமான அளவு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை பெரியாரிய, அம்பேத்கரிய மற்றும் மார்க்சிய அமைப்புகளிடம் இருந்து எழாமல் இல்லை. தனிச் சட்டம் இயற்றுவது மட்டும் இல்லாமல் சமூகத்தை பண்படுத்தும் காதலர் தினத்தில், சாதி மறுப்பு திருமணத்தை கொள்கை முடிவாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு காதலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வாழ்த்து தெரிவித்தால் மகிழ்ச்சி என்பதைக் கடந்து ஒரு பண்பட்ட சமூகத்தின் அடையாளமாக தமிழ்நாடு விளங்க ஒரு முன்னெடுப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண

Tom Cruise: 25 வயது குறைவான பெண்ணுடன் டாம் குரூஸ் காதல் – ரசிகர்கள் கிண்டல்!

ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரமான டாம் குரூஸ் ரஷ்யாவைச் சேர்ந்த எல்சினா கைரோவாவை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள சைராகுஸில் 1962 ஆம் ஆண்டு பிறந்த டாம் குரூஸ் 1981 ஆம் ஆண்டு Endless Love என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு வெளியான "ரிஸ்கி பிசினஸ்" திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின்னர் டாப் கன், காக் டெயில், டேஸ் ஆஃப் தண்டர், ஃபேர் அண்ட் அவே, மிஷன் இம்பாசிபிள், வித் அவுட் லிமிட்ஸ், தி லாஸ்ட் சாமுராய், மிஷன் இம்பாசிபிள் 2 மற்றும் 3ஆம் பாகம், ராக் ஆஃப் ஏஜ்ஸ், எட்ஜ் ஆஃப் டுமாரோ, அமெரிக்கன் மேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7 பாகங்கள் வெளியாகி விட்டது. டாம் குரூஸ் என்றாலே அர்ப்பணிப்பு தான் என்பது அவரது ரசிகர்கள் சொல்லும் தாரக மந்திரமாக உள்ளது. டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து பார்வையாளர்களை பிரமிக்க வைப்பார். டாம் குரூஸ் 1987 ஆம் ஆண்டு நடிகை மிமி ரோஜர்ஸை திருமணம் செய்தார். அதற்கு முன்னதாக நடிக்க வந்த புதிதில் மெலிசா கில்பர்ட், ரெபேக்கா டி மோர்னே, பட்டி ஸ்கால்ஃபா, செர் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார்.

இப்படியான நிலையில் 1990 ஆம் ஆண்டு மிமியை விவாகரத்து செய்த டாம் குரூஸ், 1990 ஆம் ஆண்டு நடிகை நிக்கோல் கிட்மேனை திருமணம் செய்தார். பின்னர் இவரை 2001 ஆம் ஆண்டு பிரிந்தார். இது நடைபெற்ற அடுத்த சில மாதங்களில் நடிகை பெனெலோப் குரூஸுடன் காதல் வயப்பட்டார். இவர்களின் காதல் 3வருடங்களில் முடிவுக்கு வந்தது. 2006ல் நடிகை கேட்டி ஹோம்ஸுடனை திருமணம் செய்து 2012ல் பிரிந்தார்.

இந்நிலையில் டாம் குரூஸூக்கு தற்போது 61 வயதாகிறது. அவர் 36 வயதான சேர்ந்த எல்சினா கைரோவாவுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வருவதாகவும், புகைப்படங்கள் எதுவும் வெளிவராமல் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. டாம் குரூஸ் எல்சினாவின் லண்டன் குடியிருப்பில் தான் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் கடந்த டிசம்பரில் ராஃபிள்ஸ் ஹோட்டலில் நடந்த அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்டனர். அப்போது முதல் இருவருக்கும் இடையே காதல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதில் எல்சினா ரஷ்யாவின் எம்.பி., ஒருவருன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. டாம் குரூஸின் புதிய காதலை கேள்விப்பட்ட ரசிகர்கள் தலைவன் திரையில் மட்டுமல்ல தரையிலும் சகலகலா வல்லவன் தான் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

If you don’t come to work, you won’t get paid – Tamil Nadu government warns employees
TN Govt Warning To Employees: அரசு ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை:
தமிழ்நாடு அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் சக்தி காந்த தாஸ் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கத்தினர், நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முன்மொழிந்துள்ளனர். தமிழக அரசின் விதிப்படி, அரசின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய எந்தவித வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களிலும் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது அல்லது ஈடுபடப்போவதாக பயமுறுத்தக்கூடாது. அது, அரசு விதிகளை மீறியதாக அமைந்துவிடும்.
எனவே, இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்கள் கீழ் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 15ம் தேதியன்று அரசு ஊழியர்கள் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றாலோ அல்லது இந்த சங்கத்தினர் நிர்ணயிக்கும் வேறு தேதியில் வரவில்லை என்றாலோ அவர்கள் பணிக்கு வரவில்லை என்று கருத வேண்டும். எனவே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். இந்த போராட்டம் நடைபெறும் 15ம் தேதி மருத்துவ விடுப்பு தவிர மற்ற விடுப்புக்கள் அளிக்கக்கூடாது. எனவே அன்றைய தினம் காலை 10.15 மணிக்குள் உங்கள் துறையில் உள்ள பணியாளர்களின் வருகை பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது” என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் போராட்டம் அறிவிப்பு:
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 15ம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, பிப்ரவரி மாதம் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
அரசின் சமரச முயற்சிகள்:
இதனிடயே, போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், ‛‛அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். நிதி நிலைமை சரியான உடன் படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை ஜாக்டோ ஜியோ ஏற்கவில்லை. தங்களின் கோரிக்கையை தமிழக அரசு ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா எச்சரித்துள்ளார்.மேலும் காண

Senthil Balaji’s bail plea is coming up for hearing in the Madras High Court today as he resigned from the post of minister
அமைச்சர் பதவியை நேற்று முன் தினம் ராஜினாமா செய்த நிலையில் செந்தில் பாலாஜியின் பிணை மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான அதிமுக ஆட்சியின்போது செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்த, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மோசடி செய்யப்பட்டதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் அவர் மீது அமலாக்கத்துறை தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சுமார் 8 மாத காலமாக எந்த துறையும் ஒதுக்கப்படாமல் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். அவர் அமைச்சராக இருக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அமைச்சர் பதவி நீடித்து வந்தது. இந்த சூழலில் நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தார். இந்த கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாண்புமிகு முதலமைச்சர், 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கீகரித்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், இன்று அவர் ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அமைச்சராக இருந்த போது, ஜாமின் வழங்கப்பட்டால் சாட்சியை கலைக்கக்கூடும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று பிணை மனு விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண

tear gas bomb used on farmers at night in haryana border who marched towards delhi | Farmers Protest 2.0: டெல்லியை நோக்கி பேரணி
Farmers Protest 2.0: விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க, எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இரவிலும் கண்ணீர் புகை குண்டு வீச்சு:
விவசாயிகளின் கோரிக்கைகள நிறைவேற்றுவது தொடர்பாக நடைபெற்ற, மத்திய அரசு உடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியை தழுவின. இதையடுத்து நேற்று காலை முதலே பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஷாம்பு பகுதியில், போலீசாரால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழலும் ஏற்பட்டது. இந்நிலையில், நள்ளிரவிலும் அந்த பகுதியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.#WATCH | Police use tear gas to disperse protesting farmers at the Haryana-Punjab Shambhu Border. The farmers have announced to continue to march towards the National Capital. pic.twitter.com/bJC0xXPCaU
— ANI (@ANI) February 13, 2024விவசாயிகளின் கோரிக்கை:
பரபரப்பான சூழலுக்கு மத்திய்ல் போராட்டம் தொடர்பாக பேசும் விவசாய சங்க தலைவர்கள், “நாங்கள் புதிய கோரிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லை. அரசாங்கம் எங்களிடம் ஏற்கனவே உறுதியளித்துள்ளது. அந்த உறுதிமொழிகள் குறித்து நாங்கள் பலமுறை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தோம். இருப்பினும், அரசாங்கம் இன்றுவரை அதில் தீவிரம் காட்டவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை நாங்கள் கோரும்போது, அவர்கள் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். கடன் தள்ளுபடி மற்றும் சுவாமிநாதன் அறிக்கை பற்றி நாங்கள் விவாதிக்கும்போது, அவர்கள் உடன்படவில்லை. நாங்கள் இந்த நாட்டின் விவசாயிகள், நாங்கள் சண்டையிடமாட்டோம். நீங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டதை போன்று குறைந்தபட்ச ஆதார விலை சட்டம், சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் விளக்கம்:
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “ மோடி அரசு விவசாயத்துறை மேம்பாட்டிற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் அதிக அளவில் உழைத்துள்ளது. விவசாயிகள் கோரிக்கைகளை எழுப்பியபோது, உடனடியாக விவாதத்திற்கு ஒப்புக்கொண்டோம். நாங்கள் பல மணி நேரம் விவசாயிகள் சங்க தலைவர்களுடன் விவாதம் நடத்தினோம். உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா விலக வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் புதிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறோம், ஆனால் மாநில அரசுகள் மற்றும் விவசாய அமைப்புகள் போன்ற பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். போராட்டக்காரர்களிடம் வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம் என்று மட்டுமே கூறுவேன், மேலும் விவசாயிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
எல்லைகளில் பலத்த பாதுகாப்பு:
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்த கைவிடும்போது, வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக செல்வதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால், 2021ம் ஆண்டு சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்க்கூடாது என டெல்லி எல்லையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள், கொக்கி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டெய்னர்கள் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, வாகனங்களின் டயர்களை பஞ்சராக்க சாலைகளில் ஆணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு எல்லையில், 64 கம்பெனி துணை ராணுவப்படையினரும், 50 கம்பெனி ஹரியானா போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, காக்கர் ஆற்றுப்படுகையில் பள்ளங்களும் தோண்டட்டுள்ளன. ட்ரோன்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இவற்றை எல்லாமும் மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் அடங்குவர்.மேலும் காண

‘India-UAE Ties About Talent, Innovation, Culture’: PM Addresses ‘Ahlan Modi’ Event In Abu Dhabi in tamil
PM Modi In UAE: அபுதாபியில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ‘அஹ்லான் மோடி’ நிகழ்ச்சியில், பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அபுதாபியில் பிரதமர் மோடி:
அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின், முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை அபுதாபி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்த, ”அஹ்லான் மோடி” எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அபுதாபி சயீத் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
”இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்பு வாழ்க”
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று அபுதாபியில் புதிய சரித்திரம் படைத்துள்ளீர்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்துள்ளீர்கள். ஆனால் அனைவரின் இதயமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று மைதானத்தில் உள்ள ஒவ்வொரு இதயத்துடிப்பும் உள்ளது, ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு குரலும் இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்பு வாழ்க என்று சொல்கிறது. எனது குடும்பத்தினரை சந்திக்க இங்கு வந்துள்ளேன். நீங்கள் பிறந்த மண்ணின் நறுமணத்தை கொண்டு வந்து 140 கோடி மக்களின் செய்தியை கொண்டு வந்துள்ளேன். உங்களால் பாரதம் பெருமை கொள்கிறது என்பதே அந்த செய்தி.
#WATCH | At the ‘Ahlan Modi’ event in Abu Dhabi, PM Modi says, “Today in Abu Dhabi, you have created a new history. You have come here from all corners of the UAE and different states of India. But everyone’s heart is connected. At this historic stadium, every heartbeat, every… pic.twitter.com/2VzShb2YAK
— ANI (@ANI) February 13, 2024பெருமிதம் கொண்ட மோடி:
ஐக்கிய அரபு அமீரகம் எனக்கு அதன் உயரிய சிவிலியன் விருதான – ஆர்டர் ஆஃப் சயீதை வழங்கியது எனது அதிர்ஷ்டம். இந்த கௌரவம் என்னுடையது மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் உரியது. 2015 ஆம் ஆண்டு, அபுதாபியில் உங்கள் அனைவரின் சார்பாக ஒரு கோயில் கட்டும் திட்டத்தை நான் ஷேக் முகமது பின் சயீத்திடம் முன்வைத்தபோது, அவர் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டார். .இப்போது இந்த பிரமாண்டமான (BAPS) கோவிலை திறப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
இருநாடுகள் உறவு:
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான உறவு திறமை, கண்டுபிடிப்பு மற்றும் கலாச்சாரம் பற்றியது. கடந்த காலங்களில், நாங்கள் எங்கள் உறவுகளை, ஒவ்வொரு திசையிலும், மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளோம். இரு நாடுகளும் ஒன்றாக நடந்து, ஒன்றாக முன்னேறியுள்ளன. இன்று, UAE இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. UAE ஏழாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. எளிதாக வாழ்வதற்கும், எளிதாக தொழில் செய்வதற்கும் நாடுகள் பெரிதும் ஒத்துழைக்கின்றன.இன்றும் கூட, நம்மிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த உறுதிமொழியை முன்னெடுத்துச் செல்கின்றன. நமது நிதி அமைப்பை நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டாண்மை தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.சமூகம் மற்றும் கலாச்சாரத்தில், இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சாதித்தது உலகிற்கு ஒரு முன்மாதிரியாக உள்ளன.
இந்தியாவின் வளர்ச்சி:
2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியனின் குறிக்கோளும். பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடு எது? நமது இந்தியா… உலகின் மூன்றாவது பெரிய தொடக்கத்தை கொண்ட நாடு எது? நமது இந்தியா. முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தை அடைந்த நாடு எது? நம் இந்தியா. இந்தியாவின் குரல் உலகின் அனைத்து முக்கிய தளங்களிலும் ஒலிக்கிறது. எங்கு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் முதலில் அங்கு சென்றடையும் நாடுகளில் இந்தியா என்ற பெயரும் வருகிறது. இன்றைய வலிமையான இந்தியா ஒவ்வொரு அடியிலும் மக்களுடன் நிற்கிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும் காண

Pro Kabaddi 2023: தபாங் டெல்லியை தடம் புரள செய்யுமா தமிழ் தலைவாஸ்..? இன்று நேருக்குநேர் மோதல்..!

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு ஸ்டேடியத்தில் ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 120வது போட்டியில் தபாங் டெல்லி அணியும், தமிழ் தலைவாஸ் அணியிம் மோத இருக்கின்றன.

இந்த சீசனில் தபாங் டெல்லி 20 போட்டிகளில் 69 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும், முந்தைய தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் தபாங் டெல்லி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும், தபாங் டெல்லி அணிக்கு இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முந்தி செல்ல கடுமையாக போராடும். தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தபாங் டெல்லி , தனது 21வது போட்டியில் விளையாடவுள்ளது.

அதேநேரத்தில், தமிழ்தலைவாஸ் அணி தனது ப்ரோ கபடி லீக்கின் 21வது போட்டியில் இன்று விளையாடுகிறது. இதுவரை இந்த சீசனில் 12 போட்டிகளில் தோல்வியடைந்து 8 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே, பிளே ஆஃப் சுற்றை இழந்த தமிழ்தலைவாஸ் அணி இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற்று ஆறுதல் பரிசை பெற விரும்பும்.

இரு அணிகளும் கடந்த போட்டிகளில் எப்படி..?

தமிழ் தலைவாஸ் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்துள்ளது. இந்த அணி கடைசியாக புனேரி பல்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி (56-29) என்ற கணக்கில் மோசமான தோல்விய சந்தித்தது. அதேபோல், தபாங் டெல்லி அணியும் தனது கடைசி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் 22-27 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 9 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக தபாங் டெல்லி 5 போட்டிகளிலும், தமிழ் தலைவாஸ் அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

விளையாடிய போட்டிகள் – 9

தபாங் டெல்லி வென்ற போட்டிகள் – 5

தமிழ் தலைவாஸ் வென்ற போட்டிகள் – 2

கடந்த 3 போட்டிகளிலும் இரு அணிகளும் நேருக்குநேர்:

தமிழ் தலைவாஸ் தனது கடைசி மூன்று ப்ரோ கபடி லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லிக்கு எதிராக இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.

இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-31 தபாங் டெல்லி அணிக்கு எதிராக அபார வெற்றிபெற்றது. அந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் அஜிங்க்யா பவார் 21 புள்ளிகளை பெற்று அசத்தினார்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

தபாங் டெல்லி:

அஷு மாலிக், மோஹித், விக்ராந்த், நவீன் குமார் (கேப்டன்), மீது சர்மா, யோகேஷ், ஆஷிஷ்

தமிழ் தலைவாஸ்:

சாகர் ரதி (கேப்டன்), சாஹில், மோஹித், எம். அபிஷேக், ஹிமான்ஷு, அஜிங்க்யா பவார், நரேந்தர் ஹோஷியார்.

போட்டியை எங்கு, எப்போது பார்க்கலாம்..?

தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக கண்டுகளிக்கலாம். அதேபோல், ஹாட்ஸ்டாரில் நேரடியாக மொபைல் மற்றும் லேப்டாப்பில் காணலாம்.

நேரம் - இரவு 8:00 மணி

ஸ்ட்ரீமிங்- ஸ்டார் ஸ்போர்ட்ஸ்/ டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.

Valentine’s Day 2024 here the best love tamil songs on heroines | Valentine’s Day: “மனம் விரும்புதே உன்னை”
உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பொதுவாக சினிமாவில் ஆண்கள் தான் பெண்ணின் மீதான காதலை நினைத்து பாடல் பாடுவது போன்ற காட்சிகள் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில படங்களில் பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவது போன்ற பாடல்கள் இருக்கும். அதனைப் பற்றி காணலாம்.
தாஜ்மகால் – சொட்ட சொட்ட நனையுது1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் மனோஜ் ஹீரோவாக அறிமுகமான படம் “தாஜ்மஹால்”. ரியா சென் இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சுஜாதா பாடிய “சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்” பாடல் மிகப்பிரபலமானது.
நேருக்கு நேர் – மனம் விரும்புதே உன்னை1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் தேவா இசையில் விஜய், சூர்யா, கௌசல்யா, சிம்ரன் நடிப்பில் வெளியான படம் “நேருக்கு நேர்”. இப்படத்தில் ஹரிணி பாடிய “மனம் விரும்புதே உன்னை” பாடல் இடம் பெற்றிருந்தது.
கண்ணெதிரே தோன்றினாள் – சந்தா ஓ சந்தா1998 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரசாந்த், கரண், சிம்ரன் நடிப்பில் “கண்ணெதிரே தோன்றினாள்” படம் வெளியானது. இதில் தேவா இசையில் ஹரிணி குரலில் இடம்பெற்ற ”சந்தா ஓ சந்தா” பாடல் பெண்ணின் காதலை அழகாக எடுத்துரைத்தது.
ரிதம் – கல கலவென
2000 ஆம் ஆண்டு அர்ஜூன், மீனா, ஜோதிகா, ரமேஷ் அரவிந்த் நடிப்பில் வசந்த் இயக்கத்தில் வெளியான படம் “ரிதம்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் சாதனா சர்க்கம் பாடிய “கலகலவென பொழியும்” பாடல் பெண்ணின் காதலை மழைச்சாரலாக தூவியிருந்தது.
அமர்க்களம் – உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடித்த அமர்க்களம் படம் வெளியானது. இப்படத்தில் பரத்வாஜ் இசையில் சித்ரா குரலில் இடம் பெற்ற “உன்னோடு வாழாத வாழ்வென்ன” பாடல் காதலர்களின் கீதமாக அமைந்தது.
நினைத்தேன் வந்தாய் – உன் மார்பில் விழி மூடி
1998 ஆம் ஆண்டு கே.செல்வபாரதி இயக்கத்தில் விஜய், தேவயானி, ரம்பா நடிப்பில் வெளியான படம் “நினைத்தேன் வந்தாய்”. இப்படத்தில் தேவா இசையில் கே.எஸ்.சித்ரா பாடிய “உன் மார்பில் விழி மூடி” பாடலின் வரிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.
காதல் சுகமானது – சொல்லத்தான் நினைக்கிறேன்
2002 ஆம் ஆண்டு பாலசேகரனின் இயக்கத்தில் தருண் குமார், சினேகா, ப்ரீதா விஜயகுமார் நடிப்பில் வெளியான படம் “காதல் சுகமானது”. சிவ ஷங்கர் இசையமைத்த இப்படத்தில் “சொல்லத்தான் நினைக்கிறேன்” என்ற பாடலை நா.முத்துகுமார் எழுத கே.எஸ்.சித்ரா பாடியிருந்தார். காதல் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை அழகாக கொடுத்திருப்பார்கள்.
தெய்வத்திருமகள் – விழியிலே
2011 ஆம் ஆண்டு தெய்வத்திருமகள் படம் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில் “விழிகளில் ஒரு வானவில்” பாடல் சைந்தவி குரலில் இடம் பெற்றிருந்தது.
றெக்க – கண்ணை காட்டு போதும்
2016 ஆம் ஆண்டு ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில் “றெக்க” படம் வெளியானது. டி.இமான் இசையமைத்த இந்த படத்தில் ஷ்ரேயா கோஷல் பாடிய “கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்” என்ற பாடல் காதலின் உறுதியை வெளிப்படுத்தியது.
மன்மதன் – மன்மதனே நீ
2004 ஆம் ஆண்டு சிலம்பரசன், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் “மன்மதன்”. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் சாதனா சர்க்கம் பாடிய “மன்மதனே நீ கலைஞன் தான்” பாடல் காதலை கொண்டாடுபவர்களின் கீதமாக அமைந்தது.மேலும் காண

7 am headlines today 2024 14th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு:
அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சிவில் கோர்ட்டில் நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்; குழந்தை பெற்ற மறுநாளில் தேர்வு எழுதி ஸ்ரீபதி சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கோயம்பேடு பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது – ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முனைய விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு – எடப்பாடி பழனிசாமி கடும் மோதல்
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்சனை; எடப்பாடி அருகே ஆர்.பி.உதயகுமாருக்கு இடம் – முதலமைச்சர் கூறியதை ஏற்று சபாநாயகர் அறிவிப்பு
அரசால் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் மருத்துவ விடுப்பில் சென்றார் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்; விதிகளை மீறி துணைவேந்தர் அனுமதி வழங்கியதாக பேராசிரியர்கள் குற்றச்சாட்டு
உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரலாக எதிரொலிப்போம்; மொத்த இந்தியாவுக்கும் விடியல் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை – திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றம்.இந்தியா:
வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘பிரதமர் சூர்யா கர்’ எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த புதிய சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
விவசாயிகளின் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் பேரணி தொடங்கியுள்ளதை அடுத்து, இருசக்கர வாகனங்களில் டெல்லி நோக்கி வந்த போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
லட்சக்கணக்கில் விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் முற்றுகை; டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு – 3 மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கானோர் கைதுஉலகம்:
துருக்கி தங்கச்சுரங்கத்தில் நிலச்சரிவு: 9 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்தனர்.
ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் கைது – இஸ்ரேல் தகவல்.
அபுதாபியில் முதல் இந்து கோயிலை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.
அபுதாபியில் யு.பி.ஐ பயன்பாட்டை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி.
பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியை தவிர பிற கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஏமனில் கண்ணிவெடியில் சிக்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு, 4 பேர் காயம்விளையாட்டு:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான இடைநீக்கம் ரத்து.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கரால் நிரப்ப முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ICC Player Of The Month என்ற விருதை வென்ற முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் இளம் வீரர் ஷமர் ஜோசப்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாட் நேற்று காலை பரோடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
ப்ரோ கபடி லீக்: தபாங் டெல்லி அணியை இன்று எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணிPublished at : 14 Feb 2024 07:04 AM (IST)
மேலும் காண

Premalu Movie Review in tamil Naslen K. Gafoor and Mamitha Baiju Gireesh premalu malayalam Movie Review Rating
கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி மலையாளத்தில் வெளியாகிய படம் பிரேமலு. கிரீஷ் ஏ.டி இப்படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜு மற்றும் நஸ்லென் கே கஃபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஷியாம் மோகன், மீனாக்ஷி ரவீந்திரன், மேத்யு தாமஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். ஃபகத் ஃபாசில் இப்படத்தை தயாரித்துள்ளார். பிரேமலு படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.பிரேமலு
இயக்குநர் கிரீஷ் இயக்கத்தில் முன்னதாக வெளியான சூப்பர் ஷரண்யா படத்திற்கும் பிரேமலு படத்திற்கும் சில தொடர்புகளைப் பார்க்கலாம். இரண்டு படங்களின் முக்கிய கதாபாத்திரங்களின் இயல்பும் ஒன்று போல தான். கூச்ச சுபாவம் கொண்ட பெரியளவில் சாமர்த்தியங்களை வெளிப்படுத்தாதவர்களே இப்படத்தின் கதாபாத்திரங்கள். இவர்கள் தெரியாமல் தங்களுடைய இயல்பில் இருந்து செய்யும் பல செயல்கள் நமக்கு நகைச்சுவையானதாக இருக்கும்.
அடிக்கடி தவறு செய்பவர்களாகவும் தங்களுடைய நண்பர்களால் கேலி செய்யப்படுபவர்களாக நமது நட்பு வட்டத்தில் ஓரமாக இருப்பவர்களையே தனது படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக மாற்றுகிறார் இயக்குநர் கிரீஷ்.இரண்டு படத்திற்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் என்றால் சூப்பர் ஷரண்யா படம் கதாநாயகியை மையப்படுத்தியது என்றால் பிரேமலு படத்தில் ஒரு ஆணை மையப்படுத்தி இருக்கிறது.
கதைகுறைவான மதிப்பெண்கள் பெற்றதால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் சேலத்தில் ஒரு சுமாரான கல்லூரியில் தனது படிப்பை முடித்துச் செல்கிறான் சச்சின். நான்கு ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணிடம் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து காதலை சொல்லி அவளால் நிராகரிக்கப்படுகிறான். எப்போதும் முட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோர்கள், சலிப்படைந்த தனது ஊரை விட்டு எப்படியாவது லண்டனுக்குச் சென்று தனது இந்த மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து விடுபட நினைக்கிறான். ஆனால் விதி அவனை விஸா கிடைக்காமல் தனது நண்பனுடன் கேட் பரீட்சைக்கு ஹைதராபாதில் கோர்ஸ் சேர வைக்கிறது.
மறுபக்கம் ஹைதராபாதில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார் ரீனு. புதிதான வேலை, நண்பர்கள், கை நிறைய சம்பளம் என வாழ்க்கையை புதிதாக தொடங்கும் ரீனுவுக்கு ஒரே ஆசைதான். நல்ல பொறுப்பான, செட்டில் ஆன ஒரு ஆணை திருமனம் செய்துகொண்டு 30 வயதிற்குள் குழைந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
லட்சியத்தோடு இருக்கும் ரீனுவும் இலக்கற்று சுற்றும் சச்சினும் சந்தித்துக் கொள்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் ரீனு மீது காதல் வயப்படுகிறான் சச்சின். இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை இந்த முறையும் ஒன் சைட் லவ்வராகவே இருந்தானா சச்சின்? என்பதே பிரேமலு படத்தின் கதை.
புதுசா என்ன இருக்கு
கதை என்னமோ தமிழ். இந்தி, மலையாளம் , கன்னடம் என உலகத்தின் எல்லா மொழிகளிலும் எடுக்கப்பட்ட அதே பழையக் கதைதான். ஒன் சைட் லவ்வர்ஸூக்கு இருக்கும் ஏக்கம், எல்லாவற்றையும் கூடவே இருந்து சகித்துக் கொள்ளும் நண்பன், மிடில் கிளாஸ் வாழ்க்கை, காதலிக்கும் பெண்ணின் அலுவலகத்தில் கூட வேலை செய்யும் பாய் பெஸ்டி, என இதுவரை நாம் பார்த்த எல்லா எமோஷன்களும் இப்படத்தில் இருக்கின்றன.
ஆனால் எதையுமே ஹைலைட் செய்யாமல் எல்லாவற்றையும் இயல்பாக நடக்கவிட்டு திரையரங்கத்தை கலகலவென சிரிப்பொலிகளால் நிறப்புகிறார்கள். நகைச்சுவையிலும் எழுதி மனப்பாடம் செய்த நகைச்சுவைத் துணுக்குகளாக இல்லாமல் எதார்த்த வாழ்க்கையில் வெளிப்படும் அபத்தமான உணர்ச்சிகளை, தருணங்களையே நகைச்சுவையாக மாற்றியிருக்கிறார்கள். இடையிடையில் செல்வராகவன் , யுவன் ஷங்கர் ராஜா மீது இயக்குநருக்கு இருக்கும் ஆதர்சமும் வெளிப்படுவது தமிழ் ரசிகர்களை படத்துடன் இன்னும் ஒன்ற வைக்கிறது.
நடிகர்கள் ஒவ்வொருவரும் கதையின் இந்த இயல்போடு ஒன்றி தங்களது கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறார்கள். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பப் பார்ப்பது சில இடங்களில் சலிப்பாக இருக்கும் காட்சிகளில் கூட சிரிப்பிற்கு குறைவிருக்கவில்லை. பின்னணி இசையும் பாடல்களும் பார்வையாளர்களை கவர்கின்றன. இந்த காதலர் தினத்தில் சிங்கிளாக இருக்கிறோமே என்று வருத்தப்படுபவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் பிரேமலு.மேலும் காண

petrol and diesel price chennai on February 14th 2024 know full details
Petrol Diesel Price Today, February 14: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 14ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 634வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்மேலும் காண

Shamar Joseph Becomes 1st West Indian To Become ICC Player Of The Month
கரிபீயன் புயல்:
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஷமர் ஜோசப் எடுத்த முதல் விக்கெட்டே ஸ்மித்தின் விக்கெட்தான். ஸ்மித் ஓப்பனராக இறங்கிய முதல் போட்டியிலேயே ஷமரிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். தொடர்ந்து ஸ்டார்க், லயான் ஆகியோர்களையும் முட்டி மோதி வீழ்த்தி அறிமுகப் போட்டியிலேயே அதிலும் ஆஸ்திரேலியாவில் வைத்து ஐந்து விக்கெட்டை வீழ்த்தினார் ஷமர்.
அதேபோல், முதல் இன்னிங்ஸில் 36 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எடுத்துக்கொடுத்தார். முதல் போட்டியில் 20 ஓவர்கள் வீசிய இவர் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கின் யார்க்கர் பந்துவீச்சு, ஷமர் ஜோசப்பின் காலை பதம் பார்த்தது. இதனால், அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை வாரி சுருட்டினார். அதன்படி, 11 ஓவர்கள் மட்டுமே வீசி 68 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
கரீபியனில் உள்ள பராகரா என்ற கிராமத்தில் பிறந்து கூலித்தொழிலாளியாக வேலையைத் தொடங்கியவர். பின்னர் செக்யூரிட்டியாக 12 மணி நேர ஷிஃப்டில் பணியாற்ற அங்கிருந்து கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடிய அவர், ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணத்தில் முதன் முறையாக இடம்பிடித்து காபா டெஸ்டில் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்று சாதனையின் நாயகனாக மிளிர்ந்தார்.
ICC Player Of The Month Award:
இந்நிலையில் தான் தற்போது ICC Player Of The Month என்ற விருதை வென்றிருக்கிறார் ஷமர் ஜோசப். அந்த வகையில் இந்த விருதை வெல்லும் முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது தொடர்பாக பேசிய ஷமர் ஜோசப், “இந்த விருதை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உலக அரங்கில் இப்படியொரு விருதைப் பெறுவது சிறப்பு. அவுஸ்திரேலியாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் முழுமையாக அனுபவித்தேன், குறிப்பாக கபாவில் நடந்த இறுதி நாளில் நடந்த மேஜிக்கை. போட்டியில் வெற்றி பெற விக்கெட் எடுப்பது கனவாக இருந்தது” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “இது எனக்கு உண்மையிலேயே மறக்கமுடியாத தருணம், நான் தொடர்ந்து கடினமாக உழைக்க விரும்புகிறேன் மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எனது பந்து வீச்சின் மூலம் வெற்றிகளை பெற்றித்தர விரும்புகிறேன். தேவைப்படும் போது பேட்டிங்கின் மூலமும் எனது அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்பேன்.
ஆஸ்திரேலியாவில் இருந்த சக வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் விருதை பெறுவேன், ஆனால் இது அணிக்காகவும், வெஸ்ட் இண்டீஸில் உள்ள அனைத்து ரசிகர்களுக்காகவும்” என்று ஷமர் ஜோசப் கூறியுள்ளார். முன்னதாக ,கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக ஷமர் ஜோசப்பை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்… இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!
மேலும் படிக்க:India vs England Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவேஷ் கானை நீக்கியது ஏன்? ஆகாஷ் சோப்ரா கேள்வி!
Karthigai Deepam: தீபாவின் கச்சேரிக்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்: மாஸ் காட்டிய கார்த்திக்: கார்த்திகை தீபம் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவளி கச்சேரியை தடுத்து நிறுத்த ரூபஸ்ரீ ஐஸ்வர்யா மற்றும் மாயா ஆகியோர் கூட்டு சேர்ந்து ஏதோ சதித்திட்டம் தீட்டிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்த சபாவின் மேனேஜர் உங்களுடைய பாட்டுக் கச்சேரியை இங்கு நடத்த முடியாது என சொல்கிறார்.

உடனே இளையராஜா மற்றும் கார்த்திக் சபாவிற்கு வந்து, “ஏன் நடக்க முடியாது, என்ன விஷயம்?” என்று கேட்க, பில்டிங் ரொம்ப மோசமான கண்டிஷனில் இருப்பதால் பாட்டு கச்சேரி நடக்கும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் கார்த்திக் நம்ப மறுக்கிறான்.

இதனால் கார்த்திக் தன்னுடைய ஆஃபிஸில் வேலை செய்பவர்களைக் கூப்பிட்டு சபா முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவ, ஐஸ்வர்யா அபிராமியிடம் காட்ட, அபிராமி கார்த்திக் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கணும் என்று கடுப்பாகிறாள்.

உடனே போலீசும் அங்கு வந்துவிட கார்த்திக், “நான் இங்க கச்சேரி நடத்துவதற்காக அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து புக் பண்ணி இருக்கேன் ஆனா கடைசி நிமிடத்தில் இங்கு கச்சேரி நடத்தக்கூடாதுன்னு சொல்றாங்க. அத பத்தி நீங்களே கேளுங்க” என்று ஆதாரங்களைக் கொடுக்க மேனேஜர் ஜெர்க் ஆகிறார்.

கார்த்திக் “பில்டிங் எஞ்சினியரை வரச் சொல்லுங்க” என்று கூப்பிட, “மேனேஜர் அதெல்லாம் வர சொல்ல முடியாது” என்று சொல்கிறார். “சரி ஓனருக்கு போன் போடுங்க” என்று சொல்ல, அவர் “கார்த்தி தனியாக கூட்டிச்சென்று நீங்க புக் பண்ண மாதிரி கச்சேரி நடத்துங்க, பிரச்சனை வேண்டாம்” என்று சொல்கிறார். மேலும் ரூபஸ்ரீக்கு ஃபோன் செய்து “நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன், உங்களுடைய பிளான் ஒர்க் ஆகல, இங்கே கார்த்திக் சொன்ன மாதிரி கச்சேரி நடக்கும்” எனச் சொல்கிறார்.

மறுபக்கம் அபிராமி கார்த்தியை நினைத்துப் புலம்ப, அருணாச்சலம் அவன் எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க? தெரியல முழுசா உண்மை தெரிஞ்சதும் அது பத்தி பேசுவோம்” என்று சொல்லி விடுகிறார். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

Jasprit Bumrah’s Wife Sanjana Ganesan Was The Target Of Online Trolling. But, She Gave A Befitting Reply
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமானவர். அதேபோல், டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகமானார். அந்தவகையில், இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 155 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அதேபோல், 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார். டி20 போட்டிகளை பொறுத்தவரை 62 போட்டிகள் விளையாடி 74 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார் பும்ரா.
இந்நிலையில் தான் தொலைக்காட்சி தொகுப்பாளரும், மாடலுமான சஞ்சனா கணேசன் என்பவரை கடந்த 2021-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் கூட தான் இந்திய அணிக்காக எடுத்த விக்கெட்டுகளை தன்னுடைய மகனுக்கு அர்ப்பணிப்பதாக பும்ரா கூறியிருந்தார்.
இதனிடையே, குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது மனைவியுடன் வெளியில் பயணிப்பது என தன்னுடைய குடும்பத்தினருடன் இருந்து வருகிறார் பும்ரா. அதேநேரம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பும்ரா வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள சூழலில் பும்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
கிண்டல் செய்த நபர்:சஞ்சனாவின் பதிலடி:
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், “என்ன அண்ணி பார்ப்பதற்கு கொஞ்சம் உண்டாக இருக்கிறார்கள்? என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கமெண்ட்டினை வெளியிட்டுள்ள சஞ்சனா கணேசன், “உன் பள்ளியில் கொடுக்கப்படும் அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில் என்ன இருக்கிறது? என்பது உனக்கு தெரியாது. ஆனால் ஒரு பெண்ணின் உடல் வடிவம் பற்றி இங்கு கருத்து கூறுகிறாய். இங்கிருந்து ஒழுங்காக ஓடி விடு” என்று அந்த நபரை கண்டித்துள்ளார். இதனிடையே ரசிகர்கள் சிலர் பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னேறுவதை பற்றி யோசியுங்கள் என்பது போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Watch Video: கிரிக்கெட்டில் கலக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுட்டிக் குழந்தை ஹ்யூகோ! வைரல் வீடியோ!
மேலும் படிக்க: Shamar Joseph: விருதை வென்ற முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்…ஷமர் ஜோசப்பின் அடுத்த சாதனை!
actor mammootty requests fans to watch bramayugam to with an open mind because they might get disappointed
பிரம்மயுகம் படத்தை ரசிகர்கள் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் மம்மூட்டி.
பிரம்மயுகம்
மம்மூட்டி நடிப்பில் உருவாகி, வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் “பிரம்மயுகம்”. பூதக்காலம் படத்தை இயக்கிய ராஹுல் சதாசிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அர்ஜூன் அசோகன், அமல்டா லிஸ், மற்றும் சித்தார்த் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிர்ஸ்டோ ஸேவியர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளது. தனது முதல் படத்தைப் போலவே தனது இரண்டாவது படத்தையும் ஹாரர் படமாக உருவாக்கியுள்ளார் ராகுல் சதாசிவன். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
ரசிகர்களுக்கு வேண்டுகோள்
#Bramayugam Trailer is OUT NOW ! Malayalam : https://t.co/zuX0HDqqKuTamil, Telugu, Kannada & Hindi : https://t.co/q6L8dqIUhl#BramayugamFromFeb15 @allnightshifts pic.twitter.com/jRSTCNNNBg
— Mammootty (@mammukka) February 10, 2024முழுக்க முழுக்க ப்ளாக் & ஒயிட்டில் எடுக்கப்பட்டுள்ளது இப்படம். மேலும் மம்மூட்டி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் மம்மூட்டி ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
“இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பின் நிச்சயமாக படம் பற்றிய நிறைய ஐடியாக்கள் மனதில் உருவாகி இருக்கும். ஆனால் இப்படம் நிச்சயமாக ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்றாக இருக்காது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைய வாய்ப்புள்ளது” என்றார். மேலும் இப்படத்தின் கதையை ரசிகர்கள் எந்த விதமான முன் தீர்மானங்களும் இல்லாமல் திறந்த மனதுடன் பார்ப்பது படத்தை சரியாக மதிப்பிட முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இப்படம் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் புதுவிதமான ஒரு அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
டர்போ
பிரம்மயுகம் தவிர்த்து மம்மூட்டி நடித்து வரும் மற்றொரு படம் டர்போ. சமீபத்தில் டர்போ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்தப் போஸ்டரில் மம்மூட்டி கருப்புச் சட்டையில் முற்றிலும் ரக்கடான ஒரு லுக்கில் காணப்படுகிறார்.
புலி முருகன் படத்தை இயக்கிய இயக்குநர் வைசாக் இந்தப் படத்தை இயக்குகிறார். முன்னதாக மம்மூட்டி நடித்த மதுர ராஜா மற்றும் போக்கிரி ராஜா உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ஜோடி கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி ஃபிலிம் கம்பேனி இந்தப் படத்தை தயாரித்துள்ளது.மேலும் காண

Seetha Raman: நான்சிக்கு சவால் விட்ட சீதா: கோபப்பட்ட ராம்: சீதா ராமன் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்சி மகா வீட்டுக்கு வர, எல்லோரும் சீதாவை நான்சியிடம் பேச சொல்ல, அவள் நோ சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சீதா எல்லோரும் திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தினால் நான்சியிடம் பேச வருகிறாள். ஆனால் நான்சி, நீ குற்றவாளி என்பது போல பேச, சீதா “ஒருவேளை இது மகாவா இருக்குமோ?” என சந்தேகப்படுகிறாள்.

மேலும் நான்சியிடம் “மகாவை நான் கொல்லவில்லை, என்னுடைய குழந்தை ஒரு கொலைகாரிக்கு பொறக்கக் கூடாது, நான் அப்படி பொறக்க விடவும் மாட்டேன். இந்த நிரபராதி சீதாவுக்கு தான் அந்தக் குழந்தை பிறக்கும். நான் தப்பு பண்ணலன்னு நிரூபித்துக் காட்டுகிறேன்” என்று சவால் விடுகிறாள்.

அதன் பிறகு அர்ச்சனா கல்பனாவிடம் “மகாவைக் கொன்றது நீ தானே?” என்று போனில் பேசிக் கொண்டிருக்க, அங்கே நான்சி வந்துவிட, அர்ச்சனா பதற்றம் அடைகிறார். “நான் பேசுனது எதையும் கேட்கலல்ல?” என்று பதற, நான்சி “நான் எதுவும் கேட்கல, காபி கேட்க தான் வந்தேன்” என்று சொல்கிறாள். அர்ச்சனா திரும்பத் திரும்ப கேட்க, போனில் இருந்த கல்பனா “இவளே மாட்டி விட்டுடுவா போல” என்று போனை வைத்து விடுகிறாள்.

அதன் பிறகு நான்சி சீதா குற்றவாளி என்பது போல பேசுகிறாள். “சீதாவுக்கு நிச்சயமா தண்டனை கிடைக்கும்” என்பது போல கூறுகிறார். அதைத் தொடர்ந்து ராம் மற்றும் சீதா ரூமுக்கு சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க, இவர்களுக்குள் மீண்டும் கோர்ட்டு பிரச்சனை குறித்த பேச்சு எழ, ராம் கோபப்பட, சீதா கோபித்துக் கொண்டு சோபாவில் வந்து படுத்து விடுகிறார். இதனால் ராம் சீதாவிடம் வந்து கெஞ்சுகிறான்.

இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் நிறைவடைகிறது.

music composer G V Prakash kumar praises tribe woman sripathi
திருவள்ளுவர் எழுதிய குறளைப் பகிர்ந்து இளம்பெண் ஸ்ரீபதிக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் நீதிபதி
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஸ்ரீபதி வயது (22). ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்த ஸ்ரீபதிக்கு படித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என். பி.எஸ் .சி சிவில் நீதிபதி தேர்வு எழுத ஆயத்தமாகி வந்த அதே சமயத்தில் அவர் கர்ப்பமாகவும் இருந்துள்ளார். அதன் பிறகு தேர்வுக்கு முந்தைய நாளே ஸ்ரீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் ஸ்ரீபதி உறுதியாக இருந்துள்ளார். தனது கணவர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2-வது நாளில் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதினார். டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீபதி. இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்னறனர்.
முதலமைச்சர் வாழ்த்து
தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீபதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
” சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்! “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, – முன் னேறவேண்டும்வைய மேலே!” என பாரதிதாசனின் வரிகளைப் பகிர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஜி.வி பிரகாஷ் பாராட்டு
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை – திருவள்ளுவர்👏👏👏👏👏👏👏👏 pic.twitter.com/VQokp7S7bJ
— G.V.Prakash Kumar (@gvprakash) February 13, 2024இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் ஸ்ரீபதியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை ’
என்கிற குறளை அவர் பதிவிட்டு ஸ்ரீபதிக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அழிவில்லாத சிறந்த செல்வம் என்பது கல்விச் செல்வமே. மற்றைய செல்வமான பொன், பொருள், மண் ஆகியவை ஒருவனுக்கு சிறந்த செல்வம் ஆகாது. என்பதே இந்த குரலின் விளக்கம்.மேலும் காண

MSP: விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்த காங்கிரஸ்.. ராகுல் காந்தியின் முதல் தேர்தல் வாக்குறுதி!

அடுத்த மாத இறுதியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது முதல் தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்தல் வாக்குறுதி:

டெல்லியின் எல்லை பகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி ஓராண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்குப் பிறகு, மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்பது, விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கிய போராட்டத்தை விவசாய அமைப்புகள் அறிவித்தன.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இது மத்திய பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை தந்துள்ளது. விவசாய சங்கங்கள், மத்திய அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.

விவசாயிகளுக்கு ராகுல் காந்தி தந்த சர்ப்ரைஸ்:

இந்த நிலையில், மத்தியில் ஆட்சி அமைத்தால் சுவாமிநாதன் ஆணையம் வழங்கிய பரிந்துரையின்படி, விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

किसान भाइयों आज ऐतिहासिक दिन है!

कांग्रेस ने हर किसान को फसल पर स्वामीनाथन कमीशन के अनुसार MSP की कानूनी गारंटी देने का फैसला लिया है।

यह कदम 15 करोड़ किसान परिवारों की समृद्धि सुनिश्चित कर उनका जीवन बदल देगा।

न्याय के पथ पर यह कांग्रेस की पहली गारंटी है।#KisaanNYAYGuarantee

— Rahul Gandhi (@RahulGandhi) February 13, 2024

இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிடுகையில், "விவசாய சகோதர சகோதரிகளே, இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். சுவாமிநாதன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி, அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வ உத்தரவாதமாக அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை 15 கோடி விவசாயக் குடும்பங்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். நீதியின் பாதையில் காங்கிரஸின் முதல் உத்தரவாதம் இதுதான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: Farmers’ Protest 2.0: பரபரப்பாகும் டெல்லி: பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

Sunil Gavaskar names discarded Indian player to play Hardik Pandya’s role at Gujarat Titans in IPL 2024 | IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார்
ஐபிஎல் 2024:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகளில் கேப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண இருக்கிறது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் பலமான அணிகளாக பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு நிகராக குஜராத் டைட்டன்ஸ் அணியும் திகழ்கிறது. அதற்கான காரணம் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமான வருடத்திலேயே அந்த அணி கேப்பையை வென்று அசத்தியது. அதேபோல், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் இறுதிப்போட்டி வரை சென்றது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. இச்சூழலில் தான் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை இந்த சீசனுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. இதனால் குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் சங்கரால் முடியும்:
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கரால் நிரப்ப முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் இரண்டு வருடங்களாக விளையாடி வரும் விஜய் சங்கர் அவரிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றிருப்பார். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் கடினமான நேரங்களில் எப்படி பந்துவீச வேண்டும், எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பதையும் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து கற்றுக்கொண்டிருப்பார்.
விஜய் சங்கர் 80 அல்லது 90 சதவீத தாக்கத்தை கொடுத்தாலே போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் விஜய் சங்கரால் அவரின் இடத்தை நிரப்ப முடியும்” என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.
மேலும் படிக்க: Watch Video: கிரிக்கெட்டில் கலக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுட்டிக் குழந்தை ஹ்யூகோ! வைரல் வீடியோ!
மேலும் படிக்க: MS Dhoni: என்னா மனுஷன்யா…சிறுவயது நட்பை மறக்காமல் தோனி செய்த செயல்!
மேலும் காண

Munnar Ramesh Interview on Private News Channel Super Star Rajinikanth Lal Salaam | Munnar Ramesh: ரஜினியின் தீவிர ரசிகன்; காரித்துப்பிய சவுதி அரேபியா
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து, அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்ப்பவர் மூணார் ரமேஷ். இவர் சமீபத்தில் வெளியாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சலாம் படத்தில் சிறப்பான குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் தீண்ட தீண்ட, தலைநகரம், புதுப்பேட்டை, சிவாஜி, கிரீடம், பொல்லாதவன், பீமா, ஜெயம்கொண்டான், ஆடுகளம், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இதற்கு முன்னர் சிவாஜி படத்தில் நடித்திருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் நன்கு வரவேற்பைப் பெற்றுக்கொடுத்த திரைப்படம் செல்வராகனவனின் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படம்தான். புதுப்பேட்டை படத்தில் இவர் தனுஷின் தந்தையாக நடித்திருப்பார். அந்த படத்தில் அவர் பேசிய வசனங்களான, அத உள்ள வை குமாரு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய வசனங்கள் இன்றைக்கும் மீம் டெம்ளேட்.
மறைந்த இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்தவர் என்பதால் இயக்குநர் வெற்றிமாறனின் படத்தில் கட்டாயம் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்துவிடுவார். வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை உள்ளிட்ட கடைசியாக வெளியான விடுதலை படத்திலும் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தான் ஒரு ரஜினி ரசிகர் எனவும் சிறுவயதில் ரஜினி ரசிகர் என்பதால் பள்ளியில் ஆசிரியர்களிடம் அடி வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், “ நான் சிறுவயது முதலே தீவிரமான ரஜினி ரசிகன். நடந்தால் கூட ரஜினிபோலத்தான் நடப்பேன். அவரது காளி படத்தின் போஸ்டரை எனது பெரிய நேட்டின் அட்டையில் ஒட்டிக்கொள்வேன். ஆசியர்கள் இதற்காக என்னை அடித்துள்ளார்கள். அவர்கள் அடிக்கும்போது கை நீட்டச் சொல்வார்கள், அப்போது கூட நான் ரஜினிபோலத்தான் கையை நீட்டுவேன்.
ரஜினி நடிப்பில் மிகவும் பிடித்த படம் என்றால் அது ஜானி. நான் இளைஞனாக இருந்த போது எங்கள் ஊர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவன் நான்தான். என்னை எல்லோரும் அழைப்பதே ரஜினி ரசிகன் என்றுதான் அழைப்பார்கள். தளபதி படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்பதற்கு கணக்கே இல்லை. இன்றைக்கு நான் அவருடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். அவரது ஆன்மீகமும் எனக்கு பிடிக்கும்.
சாதி, மதங்களை விட்டுவிட்டால் நமது நாடு நன்றாக இருக்கும் என்பதைத்தான் லால் சலாம் படத்தில் கூறியுள்ளோம். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் சவுதி அரேபியாவில் வேலையில் இருந்தேன். மசூதி இடிக்கப்பட்டது அங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் இருந்து வந்து அங்கு வேலைக்கு வந்தவர்கள் பெரும் அவதியைச் சந்தித்தனர். ஒருமுறை நான் செய்யாத தவறுக்கு சிறைக்குச் சென்றேன். அப்போது என்னை எந்த நாடு எனக் கேட்டார்கள். அதற்கு, நான் இந்தியா எனக் கூறினேன். அதன் பின்னர் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு துப்பினார்கள்” எனக் கூறியுள்ளார்.மேலும் காண

Election Commissioner : தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம்.. புது சட்டத்திற்கு எதிராக வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு!

இந்தியாவை பொறுத்தவரையில், மக்களவை தேர்தல் தொடங்கி சட்டப்பேரவை தேர்தல் வரை, தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையிடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகிறது.

மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புது சட்டம்:

இப்படியிருக்க, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதில் சீர்திருத்தம் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, "பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர்), இந்திய தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமிப்பார்" என தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக சட்டம் இயற்றும் வரை, இந்த நடைமுறையே தொடரும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்கும் சட்டம் கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஜெயா தாக்கூர் வழக்கு தொடர்ந்தார்.

நிலைபாட்டை மாற்றாத உச்ச நீதிமன்றம்:

இந்திய தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அமைச்சரை நியமித்திருப்பதன் மூலம் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம், 2023, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்துள்ளது என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தடை வதிக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்கும் சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமும் (Association for Democratic Reforms) வேறொரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டத்திற்கு தடை விதிக்க இரண்டாவது முறையாக மறுப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக நிலுவையில் இருக்கும் மற்ற மனுக்களுடன் சேர்த்து, தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிரான வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இம்ரான் கானுக்கு செக்.. நவாஸ் ஷெரீப்புடன் கைகோர்க்கும் பிலாவல் பூட்டோ.. பாகிஸ்தான் அடுத்த பிரதமர் யார்?

பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நிலை நீடித்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அடுத்த நாள் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், புதிய அரசை அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் சிறுபான்மை சமூகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்:

எனவே, 266 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பஜாவூரில் ஒரு வேட்பாளர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை அடுத்து, ஒரு இடத்தில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 102 இடங்களில் வெற்றிபெற்றனர்.

அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றது. மற்றவர்கள், 28 இடங்களில் வெற்றிபெற்றனர்.

தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன. குறிப்பாக, பரம எதிரிகளாக கருதப்படும் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அடுத்த பிரதமர் யார்?

இந்த நிலையில், புதிய அரசாங்கத்தை அமைக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவு அளித்தாலும், நவாஸ் ஷெரீப் அரசாங்கத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணையாது என கூறப்படுகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ கூறுகையில், "பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். மத்தியில் ஆட்சி அமைக்க எனது கட்சிக்கு போதுமான எண்ணிக்கை இல்லை. அதே சமயத்தில், சுயேட்சைகள் தலைமையிலான அரசுக்கும் வாய்ப்பில்லை.

இந்த அவை அரசாங்கத்தை அமைக்கத் தவறினால், நாடு மீண்டும் தேர்தலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அது அரசியல் நெருக்கடிக்கு வழிவகுக்கும். எனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரி மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலகினார். இதையடுத்து, நவாஸ் ஷெரீப் கட்சியும் பிலாவல் பூட்டோ கட்சியும் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமரானார்.

Anna Serial: பஞ்சாயத்திக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முத்துப்பாண்டி, ஷண்முகம் முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஊர் பெரியவர்கள் வந்து சௌந்தரபாண்டி பஞ்சாயத்தைக் கூட்ட சொல்லி இருப்பதாக சொல்ல, ஷண்முகம் வர முடியாது என்று மறுக்க, பரணி “நீங்க ஏற்பாடு பண்ணுங்க” என்று சொல்லி அனுப்பிய நிலையில். இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஊர் பெரியவர்கள் அடுத்து நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து ஷண்முகம் பஞ்சாயத்துக்கு வருவதாக சொல்லி விட்டதாகக் கூறுகின்றனர். “முதலில் வர மாட்டேன்னு தான் சொன்னா. பரணி பாப்பா கூட்டி வருவதாக சொல்லி இருக்கு” என்று சொல்ல இவர்கள் சந்தோசப்படுகின்றனர்.

அடுத்து சௌந்தரபாண்டி பாக்கியத்தைக் கூப்பிட்டு “நீ தான் பேசணும், பேசி இந்த வீட்டிற்கு கூட்டி வரணும்” என்று மைண்ட் வாய்ஸ் செய்ய, அவளும் ஒப்பு கொள்கிறாள். அதோடு முத்துப்பாண்டியிடம் பஞ்சாயத்தில் எல்லாரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லி வைக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து கூட, பாக்கியம் இசக்கியை தனது வீட்டிற்கு அனுப்பி வைக்கச் சொல்ல, ஷண்முகம் முடியாது என்று மறுக்கிறான். முத்துப்பாண்டி “ஊர் பெரிய மனுஷங்க காலில் விழுந்து தப்பு பண்ணிட்டேன் தான், என்னை மன்னிச்சிடுங்க, இசக்கியை நான் நல்லபடியா வச்சி வாழுறேன்” என்று சொல்கிறான்.

ஊர் பெரியவர்கள் “ஒரு பொண்ணுங்க ஒரு முறை தான் கல்யாணம் நடக்கும், அது இசக்கிக்கு நடந்து போச்சு. அவனும் தப்பை உணர்ந்து நல்லா வச்சி பார்த்துக்கறதா சொல்றான், அனுப்பி வை பா” என்று சொல்ல, ஷண்முகம் அப்போதும் மறுப்பு தெரிவிக்க, ஊர் பெரியவர்கள் இசக்கி முடிவை கேட்க, ஷண்முகம் “அவ என்ன சொல்லணும், நான் சொன்னது தான் அவளோட முடிவு” என்று சொல்ல, இசக்கி வாயால் சொல்லட்டும் என்று கூறுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மத்திய அரசு போட்ட ஸ்கெட்ச்; செக் வைக்கும் தமிழ்நாடு அரசு; நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தீர்மானங்கள் இவைதான்

தமிழ்நாடு சட்டப் பேரவை நேற்று அதாவது பிப்ரவரி 12ஆம் தேதியில் இருந்து ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் வரும் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேபோல் வரும் 19ஆம் தேதி 2024 -2025ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இப்படியான நிலையில், நாளை அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி, சட்டப்பேரவையில் மிக முக்கியமான தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்த தீர்மானங்களில் பெரும்பாலானவர்கள் கவனத்தை ஈர்த்துள்ள தீர்மானங்கள் என்றால் அது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. அதேபோல் தொகுதி மறுவரையை எதிர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான போயஸ் கார்டன் வீட்டினை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதை எதிர்த்து தனித் தீர்மானம்:

இந்த திட்டம் அதிகார பரவலுக்கு எதிரானது எனவும், மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் கூறி இந்த தீர்மானத்தை நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்து தனித் தீர்மானம்:

மக்கள் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவருகின்றார்.

Sonia Gandhi set to contest Rajya Sabha election to file nomination tomorrow
நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில், இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
56 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல்:
இரண்டாவது மாநிலங்களவை. இதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். 250 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவையில் பெரும் பங்காற்றிய 12 பேர், குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், மாநிலங்களவை உறுப்பினர்களில் 68 பேரின் பதவிக்காலம் இந்தாண்டு நிறைவடைய உள்ளது. அதில், 56 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
14 மாநிலங்களவை இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என். சிங், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுதன்ஷு திரிவேதி, உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் ஆகியோர் பாஜக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் போட்ட பக்கா ஸ்கெட்ச்:
இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் மாநிலத்தில் இருந்தோ அல்லது இமாச்சல பிரதேசத்தில் இருந்தோ மாநிலங்களவை தேர்தலுக்கு அவர் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. உடல்நிலை காரணமாக சமீப காலமாக தேர்தல் பிரச்சாரத்தை தவிர்த்து வருகிறார் சோனியா காந்தி. எனவே, மக்களவைக்கு பதில் அவரை மாநிலங்களவை தேர்தலில் களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானிலிருந்து அவர் மாநிலங்களவைக்கு போட்டியிட வேண்டும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் தோதசரா கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோன்ற கோரிக்கைகளை மத்திய பிரதேச, தெலங்கானா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் முன்வைத்திருந்தனர்.
மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடும் பட்சத்தில் அவர் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள ரே பரேலி தொகுதியில் அவருக்கு பதில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரே பரேலி தொகுதியை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது.
இதையும் படிக்க: MSP: விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்த காங்கிரஸ்.. ராகுல் காந்தியின் முதல் தேர்தல் வாக்குறுதி!மேலும் காண

வெற்றி துரைசாமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனுமான வெற்றி துரைசாமி கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இமாச்சலபிரதேசத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 9 நாட்கள் தொடர் தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டது. தற்போது சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வெற்றி துரைசாமி உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.மேலும் காண

MS Dhoni: என்னா மனுஷன்யா…சிறுவயது நட்பை மறக்காமல் தோனி செய்த செயல்!

எம்.எஸ்.தோனி:

இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச ஒரு நாள் உலககோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பைகளை வென்றுகொடுத்தவர் எம்.எஸ்.தோனி. கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். இதனிடையே இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாட இருக்கும் தோனி பல்வேறு விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கையெழுத்திட்ட பேட்டை பரிசாக வழங்கினார்:

இந்நிலையில், கிரிக்கெட் வாழ்வில் ஆரம்பகாலகட்டத்தில் தனக்கு பேட் ஸ்பான்சர் செய்த பால்யகால நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் எம்.எஸ்.தோனி. அண்மையில் பேட்டிங் பயிற்சி செய்த தோனி ‘பிரைம் ஸ்போர்ட்ஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டை வைத்துத்தான் பயிற்சியை மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. முன்னதாக, தோனிக்கு சிறுவயதில் பேட் ஸ்பான்சர் செய்தது பரம்ஜித் சிங்தான் என்பது ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் காட்டப்பட்டிருக்கும். இதனிடையே எம்.எஸ்.தோனி தான் வந்த வழியை மறக்காமல் இருக்கிறார் என்பது போன்ற கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்தனர்.

நம்பர் 1 நட்பு:

இதனிடையே, எம்.எஸ்.தோனி தான் கையெப்பம் இட்ட பேட் ஒன்றை பரம்ஜித் சிங்கிற்கு பரிசாக வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த வகையில், "வாழ்த்துக்கள் சோட்டு பையா”என்று பரிசாக வழங்கிய அந்த பேட்டில் எழுதியுள்ளார். இதனிடையே, தோனியிடம் பேட்டை பரிசாக பெற்ற பரம்ஜித் சிங் பேசுகையில், “நான் தோனியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். தோனி எப்போதும் எங்களுக்காக இருக்கிறார். இது தான் எங்கள் நட்பு. நம்பர் 1 நட்பு எங்களுடையது” என்று கூறியுள்ளார்.

இச்சூழலில் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டை வைத்து தோனி பயிற்சி மேற்கொண்டது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ் பேசியுள்ளார். அதில்,”நெட்ஸில் எம்.எஸ்.தோனி சில பந்துகளை அடிப்பதை நான் பார்த்தேன். அவரது பேட்டில் புதிய பேட் ஸ்டிக்கர் உள்ளது. அவரது பள்ளித் தோழர் ஒருவரின் உள்ளூர் விளையாட்டுக் கடை விற்பனையை அதிகரிக்க உங்கள் பேட்டில் நிறுவனத்தின் பெயரை ஒட்டவும்”என்று கூறினார்.

மேலும் படிக்க: Watch Video: கிரிக்கெட்டில் கலக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுட்டிக் குழந்தை ஹ்யூகோ! வைரல் வீடியோ!

மேலும் படிக்க: Saurabh Tiwary: சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கலக்கிய செளரப் திவாரி

PM Modi Launches Muft Bijli Free Electricity Scheme Shares Link To Join | PM Modi: பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்! 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்
PM Modi: வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘பிரதமர் சூர்யா கர்’ எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
2024-25ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின்போது, மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஒரு கோடி வீடுகளில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் மூலம் ஒரு வீட்டிற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
300 யூனிட் இலவச மின்சாரம்:
இந்த நிலையில், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘பிரதமர் சூர்யா கர்’ எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக, நாங்கள் பிரதமர் சூர்யா கர் என்ற திட்டத்தை தொடங்குகிறோம். ரூ.75,000 கோடி செலவில், ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் 1 கோடி வீடுகளுக்கு சோலார் மின்சாரத்தை கொண்டு வர இத்திட்டம் வழிவகுக்கும்.
மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும் கணிசமான மானியங்கள் முதல் சலுகைகளுடன் கடன்கள் வரை, சோலார் மின்சாரக் களங்களை வீடுகளில் அமைப்பதில் மக்களுக்கு கூடுதலாக செலவுகள் சுமை இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.
“1 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம்”
முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தில் தொடர்புள்ள அனைத்து பயனர்களையும் ஆன்லைன் போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படுவார்கள். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாய்த்துகள் வரை வீட்டின் மேல் சோலார் பேனல் (rooftop solar systems) அமைக்க ஊக்குவிக்கப்படும். இந்த திட்டம் நாட்டின் அனைத்து தரப்பு மக்களை இணைக்கும் வசதியாக இருக்கும்.
In order to further sustainable development and people’s wellbeing, we are launching the PM Surya Ghar: Muft Bijli Yojana. This project, with an investment of over Rs. 75,000 crores, aims to light up 1 crore households by providing up to 300 units of free electricity every month.
— Narendra Modi (@narendramodi) February 13, 2024இந்த திட்டம் மூலம் மக்களின் வருமானம் பெறுகுவதோடு, மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும். https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனாவை வலுப்படுத்துமாறு அனைத்து மக்களையும், குறிப்பாக இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க
MSP: விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்த காங்கிரஸ்.. ராகுல் காந்தியின் முதல் தேர்தல் வாக்குறுதி!
மேலும் காண

Student Scholarship Collector notification that Tiruvannamalai students can apply for scholarship – TNN | Scholarship: திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதுப்பித்தல் (Renewal) மாணக்கருக்கான விண்ணப்பங்கள் சென்ற ஆண்டு தரவு தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து (Tamil Nadu State Scholarship Portal – TNSSP) https://ssp.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பரீசீலிக்கப்பட்டு மாணாக்கரின் வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2023-2024 ஆம் கல்வியாண்டி புதியதாக சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் (Fresh students) கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 01.02.2024 முதல் மேற்காணும் இணையதளம் திறக்கபட்டுள்ளது. மேற்காணும் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயனடைய விரும்பும் மாணாக்கர்கள் கீழ்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 2023-2024-ஆம் கல்வியாண்டிலிருந்து கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கர்களின் விவரங்களை University management and Information System (UMIS) தரவு தளத்திலிருந்தும் மற்றும் பள்ளிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கரின் விவரங்களை Educational Management Information System (EMIS) தரவு தளத்திலிருந்தும் Tamil Nadu State Scholarship Portal (TNSSP) தரவு தளத்துக்கு பதிவிறக்கம் செய்யப்படும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட புதிய (Fresh) மாணாக்கர்கள் TNSSP என்ற இணையதளத்தில்மாணாக்கர்களுக்கான Login-ல் ஆதார் எண்ணை உள்ளீடு செய்த பின் வரும் OTP-யினை கொண்டு மேற்காணும் இணையதளத்தில் தங்களுக்கான கல்வி உதவித்தொகையை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு கீழ்க்காணும் ஆவணங்கள் மற்றும் நெறிமுறைகள் அவசியமாகும்.
1.இணையவழியில் பெறப்பட்ட சாதிச்சான்று
2. இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று. (இணைய வழி வருமான சான்றானது மாணாக்கர், குடும்ப தலைவரின் பெயரில் பெற வேண்டும்)
3.மாணாக்கர்களின் வங்கி கணக்கானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு (Seeding) செயல்பாட்டில் (Active) உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தவர்கள் (Not Seeded). தங்களது வங்கி கிளைளை அணுகி ஆதார் எண்ணை வங்கியுடன் seed செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தினை ”ஆல யுயனாயச ”My Aadhar UIDAI” என்ற இணையத்தில் உறுதி செய்துகொள்ளலாம். ஆதார் எண்ணை வங்கியுடன் இணைக்காத மாணாக்கருக்கு கல்வி உதவித்தொகை வழங்க இயலாது.மேலும் விவரங்களுக்கு கல்வி உதவித்தொகை இணைய முகவரி (website address) https://ssp.tn.gov.in, கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கான தொலைபேசி எண்: (call centre no) 1800-599-7638 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.மேலும் காண

Vetri Duraisamy unfulfilled dreams his film directorial ended in a single movie Endraavathu Oru Naal ajith close friend
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், தமிழ் சினிமாவின் இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்கள் தொடர் தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.
சர்வதேச விருதுகளை வென்ற படம்
தமிழ் திரைப்பட இயக்குநரும் வைல்ட் லைஃப் போட்டோகிராபருமான வெற்றி துரைசாமி இயக்கிய ‘என்றாவது ஒருநாள்’ திரைப்படம் 2021ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியானது. குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த தம்பதி அன்புடன் வளர்க்கும் இரண்டு கால்நடைகளையும் சுற்றிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் நடிகர் விதார்த், ரம்யா நம்பீசன், குழந்தை நட்சத்திரமாக ராகவன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் உலகளவில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 42க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றது.
அடுத்ததாக ஒரு த்ரில்லர் ஜானரில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க நினைத்த வெற்றி துரைசாமி, அதற்காக லொகேஷன் பார்ப்பதற்காக தனது நண்பர் கோபிநாத் மற்றும் டிரைவர் தன்ஜின் உடன் இமாச்சலப் பிரதேசத்துக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்னர் சென்ற போது, அவரின் கார் கசாங் நலா என்ற பகுதியில் செல்லும்போது பாறை ஒன்றில் மோதி 200 அடி பள்ளத்தில் விழுந்து சட்லஜ் நதிக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
வெற்றி துரைசாமியின் டிரைவர் தன்ஜின் இறந்துவிட அவரது நண்பர் கோபிநாத் ஆபத்தான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமியின் நிலை இத்தனை நாட்களாக என்ன ஆனது என தெரியாமல் இருந்த நிலையில், இமாச்சல பிரதேசத்து காவல் துறையினர் ஆழ்கடல் நீச்சல் வீரர்களை வைத்து தீவிரமாக தேடி உடலை சடலமாக மீட்டு எடுத்தனர். அவரின் உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
இயக்குநர் வெற்றி துரைசாமியின் மரணத்திற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், அதிகாரிகள் எனப் பலரும் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், அவரின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தார். இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
‘என்றாவது ஒரு நாள்’ என்ற ஒரு தரமான திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் வெற்றி துரைசாமி, பல கனவுகளுடன் அடுத்ததாக எடுக்க நினைத்த படத்தை எடுக்க முடியாமல் இப்படி அகால மரணமடைந்தது அவரது குடும்பத்தினரையும், திரையுலகத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஆசை மற்றும் கனவுகளுடன் லொகேஷன் பார்க்கச் சென்ற அவரின் பயணமே அவரது கடைசி பயணமாக முடிந்தது.மேலும் காண

வெளிச்சத்தை பாய்ச்சுவாரா கமல்? மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும் முக்கிய பங்காற்றி வந்துள்ளது.

பரபரக்கும் தேர்தள் களம்:

ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறாவிட்டாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் பாஜக எளிதாக ஆட்சி அமைத்தது. ஆனால், இம்முறை ஆட்சிக்கு எதிரான மனநிலை, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடந்த முறை பெற்றது போல எளிதான வெற்றியை பாஜகவால் பெற முடியாது என கருதப்படுகிறது.

எனவே, வட மாநிலங்களில் பெறும் தோல்வியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றிபெறுவது மூலம் ஈடுகட்ட பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால், அதற்கு திமுக தலைமையிலான கூட்டணி பெரும் சவாலாக உள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி என பலமான கூட்டணியை கொண்டுள்ளது.

கமலின் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு:

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக தனது கூட்டணியை மேலும் பலப்படுத்து முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் கமல் இணைந்தால், அவர் தனிச் சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவாரா என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

Tiruvannamalai district collector said that only if the women think they can separate the garbage and give it as non-biodegradable garbage – TNN | பெண்கள் நினைத்தால் மட்டுமே குப்பைகளை தரம் பிரித்து வழங்க முடியும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு நகராட்சி 10 பேரூராட்சிகளில் 860 ஊராட்சிகளில் தினந்தோறும் வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிக்கும் பணியினை தூய்மைப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகளில் உள்ள மக்கள் தொகை 1 இலட்சத்து 65 ஆயிரம் உள்ளனர். இதன் சுற்றளவு 13.64 கிலோமீட்டர் ஆகும். நாள்தோறும் 24 லாரி (இலகுரக கனரக) மற்றும் 60 பேட்டரி வண்டிகள் மூலம் 254 ஒப்பந்தப்பணியாளர்கள் மற்றும் 55 நிரந்தர துப்புரவு பணியாளர்களை கொண்டு தினமும் மக்கும் குப்பை 35 டன் மற்றும் மக்காத குப்பை 20 டன் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் சேர்க்கப்படுவதை 10 மேற்பார்வையாளர் 13 தற்காலிக மேற்பார்வையாளர் மூலம் பணிகள் நடைபெறுகிறது. இன்று திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 12 ல் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பையை சேகரிப்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களிடம் பேசுகையில்,
பொதுமக்களிடம் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பையினை பயன்படுத்துவதை தவிர்த்து நமது நகரத்தை தூய்மையாக வைத்திருக்க சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கதிடனும், எதிர்கால மக்களின் நலனை காக்கவும் நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ஒவ்வொரு தனிமனிதனும் முயற்சி செய்தால் மட்டுமே நமது நகரத்தை தூய்மையாக வைத்துகொள்ள முடியும். மேலும் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பெண்களை சார்ந்தே அமைந்துள்ளது. அதேபோல் பெண்கள் நினைத்தால் மட்டுமே குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பை என வழங்க முடியும். அப்படி தரம் பிரித்து தரும்பட்சத்தில் நகரில் மையத்தில் உள்ள குப்பை கிடங்கில் குப்பை சேகரிப்பை குறைக்க முடியும். மக்காத குப்பை சேகரிப்பை தவிர்க்க முடியும். மேலும் பிற மாநிலங்களிலிருந்து திருவண்ணாமலை நகராட்சிக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகிறார்கள்.
அவர்களுக்கு நம்முடைய நகரத்தினை தூய்மையாக வைத்திருக்க உறுதுணையாக இருக்க எடுத்துரைக்க வேண்டுமெனவும் கிரிவலப்பாதையில் வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் தங்களுடைய நிறுவனங்கள் மூலம் வரக்கூடிய குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதால் மட்டுமே கிரிவலப்பாதையை தூய்மையாக வைத்திருக்க ஏதுவாக இருக்கும். கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் குப்பைகளை குப்பை தொட்டி வைத்து குப்பைகள் பறக்காமல் இருக்க குப்பை தொட்டிகளை வைக்கவேண்டும். மேலும் மஞ்சப்பை, துணிப்பை, பாத்திரங்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் இவ்வாறு பேசினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, நகராட்சி ஆணையர் எம்.ஆர் வசந்தி, நகரமன்ற துணைத்தலைவர் ராஜங்கம், சுகாதார அலுவலர் செல்வராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் தூய்மைப்பணியாளர்கள் உடனிருந்தனர்.மேலும் காண

Tamil Nadu government has advised Omni bus owners to avoid picking up and dropping passengers at city | Omni Buses: “சென்னையில் இனி 2 இடத்தில்தான் ஆம்னி பேருந்தில் ஏற முடியும்”
பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் பயணிகளின் முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த பின்னர் அதனை எதிர்த்து ஒரு சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல நீதிப் பேராணை மனுக்களை தாக்கல் செய்தனர்.
”சென்னைக்குள் 2 இடத்தில்தான் அனுமதி”
மேற்படி வழக்குகளை விசாரித்த மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 09.02.2024 அன்று ஒரு இடைக்கால உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. அதன்படி மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஏற்பாடாக வழக்கு தொடுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் பத்தி எண் 16-ல் சென்னை மாநகருக்குள் உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளுக்கு வாகனங்களைக் கொண்டு வருவது குறித்து குறிப்பிட்டுள்ளதை ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவறாகப் புரிந்துக்கொண்டு அந்தப் பணிமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என தவறான ஒரு கருத்து உருவாக்கத்தை அனைத்து ஊடகங்கள் வாயிலாக பொது மக்களிடையே தவறான செய்திகளை பரப்பி வருவது குறித்து இந்த துறையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. எனவே இதனை தவறான கண்ணோட்டத்துடன், தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளின் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
”பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்த்திடுக”
அது மட்டுமல்லாமல் அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் செயல் எனவும் தெளிவுப்படுத்தப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளவாறு சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் குறிப்பிட பட வேண்டும் எனவும் பிற இடங்களை குறிப்பிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த தவறான புரிதலின் காரணமாக பொது மக்களிடையே தேயைற்ற குழப்பத்தினை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் பயணிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறது.
அதனை மீறுவதால் பயணிகளுக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் என்பதையும் மேலும் அத்தகைய நடவடிக்கை ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததை கேள்விக்குறியாக்கும் செயல் ஆகும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த இயலாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் காண

துணை முதலமைச்சர் பதவி அரசியலமைப்புக்கு எதிரானதா? உச்சநீதிமன்றம் பரபர கருத்து!

அரசியலமைப்பை பொறுத்தவரையில், துணை முதலமைச்சர் என்ற பதவி இல்லாவிட்டாலும் பல்வேறு மாநிலங்களில் துணை முதலமைச்சர்களை நியமிப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு சில மாநிலங்களில் எல்லாம் இரண்டுக்கும் மேற்பட்ட துணை முதலமைச்சர்கள் இருக்கின்றனர்.

துணை முதலமைச்சர் பதவி அரசியலமைப்புக்கு உட்பட்டதா?

குறிப்பாக, ஆந்திர பிரதேசத்தில் ஐந்து துணை முதலமைச்சர்கள் இருக்கின்றனர். ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டு முதலமைச்சர்கள் பதவி வகித்து வருகின்றனர். அரசியலமைப்பில் இல்லாத ஒரு பதவி உருவாக்கப்பட்டு, அது வழக்கமாகி வரும் நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத ரீதியாக துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவதாக கூறி, துணை முதலமைச்சர் நியமனத்திற்கு எதிராக பொதுமக்கள் அரசியல் கட்சியால் வழக்கு தொடர்ந்தது. அரசியலமைப்பு சட்ட பிரிவு 14 (Right to equality), பிரிவு 15 (மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்பதை நிறுவும் சட்டப்பிரிவு).

இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. துணை முதலமைச்சர்கள் நியமிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து:

துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் மாநிலத்தின் அமைச்சர்களாகவும் இருப்பதால் அவர்களை துணை முதலமைச்சராக நியமிப்பதில் எந்த தவறும் இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. வழக்கை தள்ளுபடி செய்த இந்திய தலைமை நீதிபதி, "மாநில அரசின் முதன்மை அமைச்சர்களாக துணை முதலமைச்சர்கள் உள்ளனர்.

துணை முதலமைச்சராக பதவி வகிப்பவர்கள், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும். இம்மாதிரியான நியமனங்கள் அரசியலமைப்பை மீறவில்லை. துணை முதலமைச்சராக பதவி வகிப்பவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதில்லை. அரசின் மற்ற அமைச்சர்களை போன்றுதான் அவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது" என்றார்.

பொதுவாக, கூட்டணி அரசு அமைக்கும்போது, துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா – பாஜக – தேசியவாக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசாங்கம் நடந்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

கூட்டணி அரசு இல்லாத ஒரே கட்சி ஆட்சி அமைக்கும்போதும் துணை முதலமைச்சரை நியமிப்பது வழக்கமாகி வருகிறது. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால் ஆந்திர பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வந்தாலும், அங்கு ஐந்து முதலமைச்சர்கள் இருக்கின்றனர்.

Priyanka Nalkari broke her relationship with her husband within one year has shocken her fans
சன் டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா நல்காரி. மிகவும் பிரபலமாக ஏராளமான சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் தொடராக ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை பிரியங்கா நல்கரி. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னணியில் தொடர்ச்சியாக இருந்து வந்தது ரோஜா சீரியல். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரியங்காவின் திருமணம் முடிவுக்கு வந்தது என சில தகவல்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ரோஜா சீரியல் முடிவடைந்ததும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட ‘சீதா ராமன்’ சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்தார் பிரியங்கா நல்காரி. அந்த சீரியலில் பிஸியாக நடித்து வந்த பிரியங்கா திடீரென தனது காதலர் ராகுல் என்பவரை, மலேசியா கோயிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அவரின் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். பெற்றோர் இன்றி அவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பதில் சிரமமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்தார். மலேசியாவில் செட்டிலாகப் போவதால் ஒவ்வொரு முறை ஷூட்டிங் சமயத்திலும் வந்து செல்வது கடினமாக இருப்பதாகத் தெரிவித்து இருந்தார் பிரியங்கா. அவர் தொடர்ந்து நடிக்காததற்கு பிரியங்காவின் கணவர் தான் காரணம் எனக் கூறப்பட்டது. பிரியங்காவின் வெள்ளந்தியான நடிப்பை மிகவும் மிஸ் செய்தார்கள் அவரின் தீவிர ரசிகர்கள்.
இனி பிரியங்கா நல்காரி நடிக்கப் போவதில்லை என நினைத்த போது திடீரென ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நளதமயந்தி’ சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் அதே நேரத்தில் சந்தோஷமாகவும் இருந்தது.
இந்நிலையில் பிரியங்கா நல்காரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் ராகுலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் டெலீட் செய்துள்ளார். அதே போல பிரியங்காவின் கணவர் ராகுலும் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அகற்றியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட் ஒன்றில் பேசிய பிரியங்கா நல்காரியிடம், ரசிகர் ஒருவர் “நீங்கள் சிங்கிளா?” எனக் கேட்டதற்கு ஆம் என பதில் அளித்துள்ளார். திருமணம் நடைபெற்று ஒரே ஆண்டில் இருவரும் பிரிந்துள்ளது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உறுத
அரசு ஊழியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், விரைவில் நிதி நிலமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். எனவே வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு ஊழியர் சங்கங்கள், அரசு ஆசிரியர் சங்கங்கள் அந்த அறிவிப்பை கைவிட்டுவிட்டு, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் காண

மரக்காணம் கடலில் முதற்கட்டமாக 100 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் விடப்பட்டது

‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமை

இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வ மானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் இதுதான். இந்த வகை ஆமை இனங்கள் இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக் கூடியவை.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்கிறது. இதுபோல் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் எடுத்து அவைகளை பாதுகாத்து ஆமைக்குஞ்சுகள் உடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர். கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.

ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது

இந்த நிலையில், ஆலிவ் ரிட்லி ஆமைகள், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் உள்ளிட்ட கடலோர பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதை வழக்கமாககும். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தீர்த்தவாரி பகுதியில் ஆமைகள் முட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்படும். முட்டைகள் பொறிந்து வெளியே வரும் ஆமை குஞ்சுகளை கடலில் விடுவர். இந்த ஆண்டு இதுவரை 4000 ஆமை முட்டைகள் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் இன்று 100 ஆமை குஞ்சுகள் பொறிக்கப்பட்டது. இந்த ஆமை குஞ்சுகளை வனத்துறை அதிகாரி கடலில் விட்டனர்.

Revenue Officers Association and Jacto Jio organization on hunger strike in Salem – TNN | தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இணைந்து சேலத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். 200க்கும் மேற்பட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இணைந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும், 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட வேண்டும், அரசின் திட்டப்பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதைத் தவிர்த்து திட்டப் பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டம் குறித்து தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி கூறுகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தங்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் காலி பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தால் அரசு அறிவிக்கும் புதிய திட்டங்கள் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் கூடுதல் பணி சுமை காரணமாக வருவாய் துறை அலுவலர்கள் மன உளைச்சலில் உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இம்மாதம் 22 ஆம் தேதி காத்திருப்பு போராட்டமும், 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் காண

vettaiyan release date Ajith consoles Vetri Duraisamys family Cinema headlines | Cinema Headlines : வேட்டையன் ரிலீஸ் தேதி; வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன அஜித்
Vetri Duraisamy: மறைந்த உயிர் நண்பன்! வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் சென்று அஜித் ஆறுதல்!
வெற்றி துரைசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் அஜித்குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார். வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.மேலும் படிக்க
Actor Sathish: அரசியலில் விஜய் vs உதயநிதி.. நடிகர் சதீஷின் சப்போர்ட் யாருக்கு தெரியுமா?
“வித்தைக்காரன்” படத்தில் சதீஷ் ஹீரோவாகவும், சிம்ரன் குப்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய சதீஷிடம் சினிமாவில் இருந்து அரசியலில் இருக்கும் விஜய், உதயநிதி ஸ்டாலின் இருவரில் யாருக்கு சப்போர்ட் செய்வீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘உதயநிதி சகோதரர் ரொம்ப நாளா ஒரே போன் நம்பர் தான் வைத்திருக்கிறார். நடிகராக இருக்கும்போது எப்ப கால் பண்ணாலும் பேசுவார். இன்னைக்கு அமைச்சராக இருந்தாலும் எப்ப போன் பண்ணாலும் பேசுகிறார். நான் பார்த்ததில் மிகச்சிறந்த நபர் அவர். அந்த தன்மை அவரை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்கும்’ என சொன்னார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் படிக்க
Ticket Price: தியேட்டர் கட்டணத்தை குறையுங்கள்.. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!
தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை குறைத்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என உரிமையாளர்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட கண்காட்சியாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.மேலும் படிக்க
Sarfira: சூரரைப் போற்று ரீமேக்.. சூர்யாவுக்கு பதில் அக்ஷய்குமார்.. வெளியானது ரிலீஸ் தேதி!
தமிழில் நல்ல வரவேற்பையும் தேசிய விருதையும் பெற்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலிலும், நடிகர் சரத்குமார், பரேஷ் ராவல் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் படிக்க
Vettaiyan: பண்டிகையில் பட்டையைக் கிளப்பவரும் ரஜினிகாந்த்! வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?
வேட்டையன் படத்தின் 85 விழுக்காடு ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ரஜினிகாந்தின் காட்சிகளைப் படம்பிடிக்க இன்னும் 3 வாரங்கள் மட்டுமே தேவைப்படுவதாகவும், இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஷூட்டிங் நிறைவு பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி ரிலீஸாக வேட்டையன் திரைப்படம் திரைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்கமேலும் காண

விழுப்புரத்தில் தூங்கி கொண்டிருந்த விவசாயி வீட்டில் 10 சவரன் தங்க நகை கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போதே 10 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

விவசாயி வீட்டில் நகை கொள்ளை

விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்திற்குட்பட்ட பிடாகம் குச்சிபாளையம் கிராமத்தில் காந்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். விவசாயியான இவர் நேற்று இரவு மனைவியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அதிகாலையில் அவரது மனைவி எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது அறையின் உள்ள பிரோ கதவுகள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

கொள்ளை சம்பவம் குறித்து காந்தியின் மகன் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைரேகை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் காந்தி மற்றும் அவரது மனைவி தூங்கி கொண்டிருந்த போதே வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை அகற்றிவிட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 5 லட்சம் மதிப்பிலான நகைகள், பொருட்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Bangladesh Captain: வங்கதேச கிரிக்கெட் அணியில் பெரிய மாற்றம்.. புதிய கேப்டனாக நஸ்முல் ஹுசைன் சாண்டோ நியமனம்!

வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வங்கதேச கிரிக்கெட் அணியில் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதன்படி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் மூன்று வடிவங்களிலும் புதிய கேப்டனின் பெயரை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஹகிப் அல் ஹசன் இனி எந்த வடிவத்திலும் அணியின் கேப்டனாக இருக்க மாட்டார் என தெரிகிறது.

புதிய கேப்டன் யார்..?

வங்கதேச கிரிக்கெட் வாரியம் நஸ்முல் ஹுசைன் சாண்டோவை மூன்று வடிவங்களிலும் கேப்டனாக நியமித்துள்ளது. 25 வயதான சாண்டோ வங்கதேசத்தின் கேப்டனாக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். இதிலிருந்து 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு நஸ்முல் ஹுசைன் சாண்டோ கேப்டனாக இருப்பார் என்பது தெளிவாகியுள்ளது.

வங்கதேசத்தின் இந்த திறமையான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஏற்கனவே, அந்நாட்டு அணிக்காக சில போட்டிகளில் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்.

ஹகிப் அல் ஹசன் எங்கே..?

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் நஸ்முல் ஹுசைன் சாண்டோ கேப்டனாக இருந்தார். இந்த போட்டிகளின்போது ஹாண்டோ, வங்கதேச அணியை சிறப்பாகவே வழிநடத்தினார். அதேசமயம் 2023 உலகக் கோப்பையின் கடைசிப் போட்டியில், ஷகிப் அல் ஹசன் இல்லாதபோது, சாண்டோவுக்கு கேப்டன்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒருநாள் கேப்டனாக ஹகிப் அல் ஹசனை பரிசீலித்தது. ஆனால், ஒரு சில வீரர்கள் சாண்டோவின் பெயரையே முன்வைத்தனது. ஹகிப் அல் ஹசன் தனது கண்களில் சில பிரச்சனைகள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இவர் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இவர், கண் பிரச்சினை காரணமாக டெஸ்டில் தொடர வாய்ப்பில்லை என்றாலும், டி20 உலகக் கோப்பையின்போது அணிக்கு தலைமை தாங்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அனைத்து வடிவங்களிலும் சாண்டோவையே கேப்டனாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ஹகிப் அல் ஹசன் கடந்த 12 மாதங்களாக வங்கதேச அணியை சிறப்பாகவே வழிநடத்தி கொண்டு சென்றார். இவரது தலைமையில் வங்கதேச அணி, இங்கிலாந்து தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

சாண்டோவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

இதுவரை நஸ்முல் ஹுசைன் ஷாண்டோ வங்கதேச அணிக்காக மொத்தம் இரண்டு டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நஸ்முல் ஹுசைன் சாண்டோ இதுவரை வங்கதேச அணிக்காக 25 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 28 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில், அவர் ஐந்து சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்களுடன் 1449 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் இரண்டு சதங்கள் மற்றும் 8 அரை சதங்களுடன் 1501 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, சர்வதேச டி20 போட்டிகளில் ஷாண்டோ 602 ரன்கள் எடுத்துள்ளார்.

பாஜகவில் சேர்ந்த முதல் நாளே இப்படியா! கட்சி பெயரை மாற்றி சொன்ன அசோக் சவான்.. வாய்விட்டு சிரித்த பட்னாவிஸ்

எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாகவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், பாஜகவில் இணைந்துள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு டாடா காண்பித்த அசோக் சவான்:

அந்த வரிசையில் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவானும் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய நிலையில், மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பவன்குலே, பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தார்.

கிட்டத்தட்டு 38 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்த அசோக் சவான், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், பாஜகவில் இணையும் நிகழ்வின்போது, கட்சி பெயரை அசோக் சவான் தவறுதலாக மாற்றி குறிப்பிட்டது பாஜக தலைவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாஜக தலைவர்களை சங்கடப்படுத்திய அசோக் சவான்:

ஆஷிஷ் ஷெலரை மும்பை பாஜக தலைவர் என சொல்வதற்கு பதில் மும்பை காங்கிரஸ் தலைவர் என அசோக் சவான் குறிப்பிட்டார். இதை கேட்டதும் அனைவரும் சிரித்துவிட்டனர். அருகில் அமர்ந்திருந்த தேவேந்திர பட்னாவிஸ், ‘பாஜக’ என குறிப்பிடும்படி அசோக் சவானை திருத்தம் செய்கிறார். ஆனால், சொல்லிவிட்டு அவரும் சிரித்துவிட்டார்.

பாஜகவில் சேர்ந்ததை தொடர்ந்து பேசிய அசோக் சவான், "நான் இப்போதுதான் (பாஜகவில்) சேர்ந்துள்ளேன். எனவே, வாய் தவறி சொல்லிவிட்டேன். காங்கிரஸில் 38 ஆண்டுகளாக இருந்துவிட்டு, பாஜகவில் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்குகிறேன்.

’சப்கா சாத், சப்கா விகாஸ்’ என பிரதமர் மோடி உறுதிமொழி அளித்துள்ளார். சில நேரங்களில், (காங்கிரஸில் இருந்துபோது) நான் அவரை எதிர்க்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நான் எப்போதும் பாசிட்டிவ் அரசியலே செய்து வந்துள்ளேன். நான் பாஜகவுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்வேன். நான் எதுவும் கேட்கவில்லை. யாரும் என்னை வெளியேறச் சொல்லவில்லை. இது என்னுடைய முடிவு. காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறுமாறு யாரிடமும் சொல்லவில்லை" என்றார். மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: "சிந்தியா முதல் மிலிந்த் தியோரா வரை" ராகுல் காந்திக்கு ஷாக் கொடுக்கும் தலைவர்கள் – தொடரும் பா.ஜ.க. மிஷன்!

lal salaam actor vishnu vishal brother rudra to debut in oho enthan baby movie
நடிகர் விஷ்ணு விஷாலில் சகோதரரான ருத்ரா ’ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடிக் குழு, குள்ள நரிக்கூட்டம் , நீர்ப்பறவை, ஜீவா, மாவீரன் கிட்டு, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தும் விஷ்ணு விஷால், திரை உலகின் பல்வேறு தோல்விகளையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார். இந்த சவால்களில் இருந்து மீண்டு தன்னை எப்போதும் பாசிட்டிவாக வைத்துக் கொள்ள முயற்சிப்பவர் விஷ்ணு விஷால்.
சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள லால் சலாம் படம் வெளியாகியுள்ளது. லால் சலாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தனது அடுத்தக்கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.
கதாநாயகனாக அறிமுகமாகும் ருத்ரா
The big day is here for my brother @TheActorRudra ❤️ need all your blessings and support for us.. Thrilled to introduce him in #OhoEnthanBaby – shoot started today.. Producing it at @VVStudioz along with dear #RomeoPictures @mynameisraahul and @DCompanyOffl @DuraiKv.… pic.twitter.com/w9kZoVHgJB
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) February 11, 2024விஷ்ணு விஷாலைத் தொடர்ந்து தற்போது அவரது சகோதரர் ருத்ராவும் திரையில் அடியெடுத்து வைக்கிறார். கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கும் ‘ஒஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் ருத்ரா.
இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். என்னை நோக்கி பாயும் தோட்டா, முதல் நீ முடிவும் நீ படங்களுக்கு இசையமைத்த தர்புக்கா சிவா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ’ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு தனது சகோதரர் ருத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
மேலும் இப்படத்தில் சென்ற சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நிவாசினியும் நடிக்க உள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நிவாசினி பகிர்ந்துள்ளார்.
விஷ்ணு விஷால் நடிக்கும் படம்
2022ஆம் ஆண்டில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும் இந்தப் புதிய திரைப்படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11வது தயாரிப்பாக (VVS11) உருவாகிறது.
மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும். இந்தப் புதிய திரைப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள், தற்போது தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழு சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளதுமேலும் காண

Vetri Duraisamy rip Actor Ajith visited the bereaved family of Vetri Duraisamy and expressed his condolences
அதிமுகவின் ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சைதை துரைசாமி. தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவி செய்வது என எண்ணற்ற செயல்கள் மூலம் அப்பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
வெற்றி துரைசாமி மரணம்:
இவரது ஒரே மகனான வெற்றி, இளம் தொழில் முனைவோராகவும், வனவிலங்கு புகைப்படக் கலைஞராகவும் இருந்தார். அதேசமயம் வெற்றிக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. இப்படியான நிலையில் இவர் தனது புதிய படம் தொடர்பான பணிக்காக இமாச்சலப் பிரதேசம் சென்றிருந்தார்.
உடன் நண்பர் கோபிநாத் சென்றிருந்த நிலையில் கடந்த வாரம் உள்ளூர் ஓட்டுநர் டென்ஜின் என்பவரது காரில் இருவரும் பயணம் மேற்கொண்டனர். அப்போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, கார் கட்டுப்பாட்டை இழந்து கின்னவுர் பகுதியில் ஓடும் சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் டென்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பின் தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று வெற்றி துரைசாமி உடல் கண்டெடுக்கப்பட்டது. சென்னை கொண்டு வரப்படும் வெற்றி துரைசாமியின் உடல், இறுதிச் சடங்குகளுக்கு பிறகு இன்று மாலை கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் அஜித்:
அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைத்தளத்தில் #RIPVetriDuraisamy என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ள நிலையில், அதில் மனிதநேய அறக்கட்டளையில் படித்து இன்றைக்கு சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பலரும் வெற்றி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், சைதை துரைசாமிக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.
Ajith sir paid his last respect at the funeral of his beloved friend Vetri Duraisamy 💔🙏🏻💐#RIPVetriDuraisamypic.twitter.com/3Ti4EQ8Swo
— AJITH MANIA (@AjithMania) February 13, 2024இந்த நிலையில், வெற்றி துரைசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் அஜித்குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார். வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தாம்பரம் அடுத்து படப்பையில் உள்ள சைதை துரைசாமியின் பண்ணை இல்லத்திற்குச் சென்று நடிகர் அஜித்குமார் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு வெற்றி துரைசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண

PM Modi: ஏழாவது முறையாக ஐக்கிய அமீரக எமிரேட்ஸ்க்கு பிரதமர் மோடி பயணம்; நாட்டு மக்களுக்கு சென்னது என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“பிப்ரவரி 13 முதல் 14 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், பிப்ரவரி 14-15 தேதிகளில் கத்தாருக்கும் நான் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நான் மேற்கொள்ளும் ஏழாவது பயணமாகும். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கத்தாருக்கு நான் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து, உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு, கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான நமது ஒத்துழைப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. நமது கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அபுதாபியில் சந்தித்து, நமது விரிவான உத்திசார் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்து விரிவான விவாதங்கள் நடத்துவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு 2024-ல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அந்நாட்டின் இளவரசரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபரும், பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், 2024 பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களின் கூட்டத்தில் நான் உரையாற்ற உள்ளேன். உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உடனான எனது விவாதங்கள், துபாயுடனான பன்முக உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளேன்.

இந்தப் பயணத்தின்போது, அபுதாபியில் முதலாவது இந்து ஆலயத்தையும் திறந்து வைக்க உள்ளேன். இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பகிர்ந்து கொள்ளும் நல்லிணக்கம், அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மதிப்புகளுக்கு பிஏபிஎஸ் கோயில் ஒரு நிலையான புகழாரமாக இருக்கும்.

அபுதாபியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து இந்திய சமூகத்தினரிடமும் நான் உரையாற்ற உள்ளேன்.

கத்தாரில், அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அவரது தலைமையின் கீழ் கத்தார் தொடர்ந்து மிகப்பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டு வருகிறது. கத்தாரில் உள்ள இதர முக்கியப் பிரமுகர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்.

இந்தியாவும், கத்தாரும் வரலாற்று ரீதியாக நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ளன. சமீப ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீடு, நமது எரிசக்தி பங்களிப்பை வலுப்படுத்துதல், கலாச்சாரம் மற்றும் கல்வியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நமது பன்முக உறவுகள் தொடர்ந்து ஆழமடைந்து வருகின்றன. தோஹாவில் 8,00,000-க்கும் மேற்பட்ட வலுவான இந்திய சமூகத்தினர் இருப்பது இருநாட்டு மக்களுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்குச் சான்றாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

cm mk stalin replied to edappadi palanisamy on kilambakkam bus stand issue
பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூ: தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறந்து வைத்திருக்கிறீர்கள். அங்கிருந்து நகருக்குள் வருவதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இப்பிரச்சினையில் முதலமைச்சர், போக்குவரத்து மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: கிளாம்பாக்கத்தை அதிமுக ஆட்சியில் தான் தேர்வு செய்தது.நீங்கள் ஆரம்பித்த அந்த திட்டத்தை பாதியில் விடாமல் திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டது. 30% பணிகளோடு அதிமுக ஆட்சியில் விட்டு செல்லப்பட்ட நிலையில் இன்று மீதமுள்ள பணிகள் திமுக ஆட்சியில் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முழுவதுமாக மக்கள் ஏற்று பயணித்து கொண்டிருக்கிறார்கள். பேருந்தில் பயணிப்பவர்கள் யாரும் பிரச்சினை செய்வதில்லை. பயணிக்காதவர்கள் தான் பிரச்சினை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர் சேகர்பாபு: 2013 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கிளாம்பாக்கம் திட்டம் 2018 ஆம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு 2019ல் ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு பணி தொடங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்த கால அளவு முடிய வேண்டியது. ஆனால் ஆட்சி மாற்றம் நடந்த பின் நிறுத்தப்பட்ட பணிகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருமுறை கூட பணிகளை சென்று பார்க்கவில்லை. நேற்று கூட அவர் ஒரு பேட்டியில், போதிய வசதிகள் செய்யவில்லை’ என குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற பணிகளை பட்டியலிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் கொடுத்த அறிக்கையில், சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்திருந்தால் மக்கள் நடுரோட்டில் போராட்டம் நடத்தியிருக்க மாட்டார்கள். அதனை சரி செய்ய வேண்டும் என்று தான் சொன்னோம்.
முதலமைச்சர் ஸ்டாலின்: சிறு சிறு பிரச்சினைகள் மட்டுமல்ல பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை தீர்த்து வைத்து தான் திறந்து வைத்தோம். அமைச்சரே, ‘இன்னும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள். நேரடியாக வாருங்கள். தீர்த்து வைக்கிறோம்’ என சொல்லியிருக்கிறார். அதனால் இந்த பிரச்சினையை இத்தோடு முடித்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
இப்படியான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக இன்று காரசார விவாதம் நடைபெற்றது.மேலும் காண

Priyanka Mohan: சொக்கவைக்கும் பேரழகி.. பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவின் இளம் நடிகையான பிரியங்கா மோகனின் சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “டாக்டர்”. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். பார்த்தவுடன் பிடித்து விடும் அளவுக்கு முதல் படத்தில் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் டாக்டர் படத்தில் அவரின் காமெடி கலந்த நடிப்பை அனைவரும் பாராட்டி தள்ளினர்.

1994 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்த பிரியங்கா மோகன், பெங்களூரில் தான் பிறந்து வளர்ந்துள்ளார். ஆனால் படித்தது சென்னையில் தான். இவரது தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர், தாயார் கர்நாடகாவைச் சேர்ந்தவர். பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்த பிரியங்காவுக்கு மாடலிங்கில் அதீத ஆர்வம் இருந்தது. 2019 ஆம் ஆண்டு கிரிஷ் ஜி இயக்கிய கன்னடத் திரைப்படமான ஒன்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் பிரியங்கா அறிமுகமானார்.

View this post on Instagram

A post shared by Priyanka Mohan (@priyankaamohanofficial)

அதே ஆண்டில் விக்ரம் குமார் இயக்கிய நானியின் கேங் லீடர் என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தான் தமிழுக்கு நடிக்க வந்தார். டாக்டர் படத்தை தொடர்ந்து அவர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் ஜோடி சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த பொங்கலுக்கு தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த “கேப்டன் மில்லர்” படம் வெளியானது. அதேசமயம் கடந்த ஆண்டு இறுதியில் அவர் நடிப்பில் டிக்டாக் என்ற படம் வெளியானது. இதுதான் தமிழில் அவர் நடித்த முதல் படமாகும். அதில் சற்று நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் பிரியங்கா மோகனின் சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு சென்னையில் முக்கிய இடங்களில் வீடு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பெங்களூருவிலும் வீடு, இடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் 5 படங்களிலும் மொத்தத்தில் 8 படம் நடித்திருந்தாலும் பிரியங்காவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக பிரியங்கா தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக பிரதர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu latest headlines news till afternoon 11th February 2024 flash news details here
“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி” நீதிபதி தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின இளம்பெண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் படிக்க
CM Stalin: சர்ச்சைக்குள்ளான கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்: கேள்வி எழுப்பிய இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்!பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறந்து வைத்திருக்கிறீர்கள். மேலும் படிக்க
Senthil Balaji: செந்தில்பாலாஜிக்காக கோரிக்கை வைத்த முதல்வர் – ஏற்றுக்கொண்ட ஆளுநர்! அதிகாரப்பூர்வ அறிவிப்புஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அங்கீகரித்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
JEE Mains Result: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு; முழு மதிப்பெண்கள் பெற்ற 23 பேர்- காண்பது எப்படி?2024ஆம் ஆண்டுக்கான பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. மதிப்பெண்களை எப்படித் தெரிந்துகொள்வது என்று பார்க்கலாம். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. மேலும் படிக்க
Woman Judge: ரத்தம் சொட்ட சொட்ட எழுதிய தேர்வு… 22 வயதில் நீதிபதி – பழங்குடியினருக்கு பெருமை சேர்த்த இளம்பெண்திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஸ்ரீபதி வயது (22). இவர் ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீபதிக்கு திருமணம் ஆகியுள்ளது. மேலும் இவருக்கு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. மேலும் படிக்க
மேலும் காண

What is speed dating? Growing support among the young generation, opposition from political leaders
Speed Dating: ஸ்பீட் டேட்டிங் நடைமுறை என்றால் என்ன? அது இளம் தலைமுறையினர் இடையே அதிக கவனம் ஈர்ப்பது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
காதலர் தின கொண்டாட்டமும் – எதிர்ப்பும்:
காதலர் தின கொண்டாட்டம் வழக்கம்போல் நடப்பாண்டில் இளைஞர்கள் மத்தியில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதேநேரம், இந்து முன்னணி போன்ற வலதுசாரி அமைப்பினர் காதலர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கண்ட இடத்திலேயே இருவரையும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவது போன்ற நிகழ்வுகளும் தொடர்கதையாகி வருகின்றன. முந்தைய காலத்தில் மதரீதியான அமைப்புகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்த காதலர் தினத்திற்கு, தற்போது சாதிய அமைப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதற்கு சான்றாக தான், தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மணமகன் – மணமகள் கூட்டம், வள்ளி கும்மி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
வள்ளிக்கும்மி – திருமண சந்திப்புக் கூட்டம்:
காதல் திருமணத்தை கடுமையாக எதிர்க்கும் சாதிய அமைப்புகள், தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுக்காக இணையை தேர்வு செய்ய சிறப்பு திருமண சந்திப்புக் கூட்டங்களை நடத்துகின்றனர். ஈரோட்டில் நடைபெற்ற வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில், தங்கள் சாதி ஆணையே திருமணம் செய்து கொள்வோம் என்று கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களிடம் உறுதிமொழி வாங்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த நிலையில் தான் மேற்கூறிய கலாசாராத்திற்கு நேர் எதிராக, வெளிநாடுகளில் பின்பற்றப்படும் பல புதிய நடைமுறைகள் தற்போது இந்திய இளைஞர்கள் மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது.
கேரளாவின் ‘அன்பின் முத்தம்’ போராட்டம்:
அந்த வகையில் கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 2014ல், ‘கிஸ் ஆப் லவ் – அன்பின் முத்தம்’ என்ற பெயரில், பேஸ்புக் சமூக வலைதளம் வாயிலாக இணைந்த காதலர்கள் போராட்டம் நடத்தினர். காதலுக்கும், காதலர் தினத்துக்கும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், வீதியில் இறங்கி தங்களுக்குள் முத்தம் கொடுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் தாக்கமாக நாட்டின் பல பகுதிகளில், அன்பின் முத்தம் போராட்டங்கள் நடைபெற்றன.
‘ஸ்பீட் டேட்டிங்’ என்றால் என்ன?
இதனிடையே, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், சமூக வலைதளங்கள் வாயிலாக தற்போது புதுப்புது வகையான முயற்சிகளை இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தான், சமூக தொடர்பை விரிவுபடுத்துவதாக் கூறி ‘ஸ்பீட் டேட்’ என்பதை அறிமுகப்படுத்தியுள்ளனர். அறிமுகம் இல்லாத நபர்கள் ஒன்று கூடி அங்கு ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவது, பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, உணவு மற்றும் தேநீர் அருந்துவது போன்றவை ‘ஸ்பீட் டேட்’ நிகழ்ச்சியின் நடைமுறைகளாக உள்ளன. அதோடு, முன்பு அறிமுகம் இல்லாதவர்களுடன் டீ குடிப்பது (டீ டேட்), கண்களை கட்டிக்கொண்டு புதிய நபர்களுடன் பேசுவது (பிளைண்ட் டேட்), ஓவியம் வரைவதென போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சிகள், தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் அதிக அளவில் நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அண்மையில் கோவையிலும் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ஸ்பீட் டேட் ஆதரவும், கண்டனங்களும்:
’’தொழில்நுட்பம் வளருகிறது, எல்லாம் மாறுகிறது, உலகமே மிகவும் சிறிதாகிவிட்டது. ஆனால், இன்னமும் சாதி, மதம் என்று கூறி காதலர்களை அடிப்பது, துன்புறுத்துவது, காதலை எதிர்ப்பது எல்லாம் நடந்து வருகிறது. இது போன்ற பிரச்னைகளை களையவும், சமூக தொடர்பை அதிகரிக்கவும் தான் காதலர் தினத்தை முன்னிட்டு, பல நகரங்களில் ஸ்பீட் டேட் நடத்தப்படுவதாக, பங்கேற்பாளர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தெரிவிக்கின்றனர். அதேநேரம், இந்த டேட்டிங் போன்ற நடைமுறைகள், கலாசாரா சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாக சில சாதிய பிரிவு தலைவர்கள் விமர்சிக்கின்றனர். யாரென்றே தெரியாதவர்களை சந்திப்பது, மது குடிப்பது, டீ குடிப்பது எல்லாம் சீர்கெடுவதற்கான முயற்சி தான் என்றும், குடும்ப முறையை அழிக்கும் முயற்சியை செய்து வருகின்றனர் என்றும் சிலர் சாடுகின்றனர்.மேலும் காண

ஜவ்வாது மலையைச்சேர்ந்த 23 வயதான பழங்குடியினப் பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஸ்ரீபதி வயது (22). இவர் ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீபதிக்கு திருமணம் ஆகியுள்ளது. மேலும் இவருக்கு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதி பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு தேர்வுக்கு முந்தைய நாளே ஸ்ரீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் ஸ்ரீபதி உறுதியாக இருந்துள்ளார். மேலும் ஸ்ரீபதியின் கணவர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2-வது நாளில் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார். தற்போது வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இதன்மூலம் ஜவ்வாது மலையில் 22 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து ஐவ்வாது மலையில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரல்
மலைக்கிராம பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதி ஸ்ரீபதி ஜவ்வாதுமலையில் பிறந்து, ஏலகிரி மலையில் கல்வி கற்று, பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் தொடர்ந்து படித்தார். இதுகுறித்து மலையும், மாவட்டமும், தெரிந்தவர்கள் அனைவரும் ஸ்ரீபதியைப் பாராட்டிப் போற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் அவருடைய வயதா அல்லது அவருடைய இனமா, அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா மூன்றுமே எனலாம். ஆனால் நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் இந்தத் தகவலைக் கேட்டபோது, ஸ்ரீபதிக்குத் தேர்வு வரும் தேதியிலேயே தான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டு தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது. தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார். மருத்துவரின் ஆலோசனைப்படி பத்திரமாக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம் மட்டும் கூறியிருந்தேன். அவர் சென்றாரா இல்லையா என்றுகூட கேட்கவில்லை.
யார் வேண்டுமானாலும் ஆலோசனை கூறலாம். ஆனால் எடுத்து செயல்படுத்துவதில்தானே எல்லாமே உள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து, வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி சென்னை சென்று தேர்வு எழுதினார். தற்போது வெற்றிவாகையும் சூடியிருக்கிறார். உண்மையாகவே நினைத்துப்பார்த்தால் “ஏய் …எப்புட்றா” என்று சொல்வதற்குமுன் தொண்டைக்குழிக்குள் திக் திக் அடிக்கிறது. இரத்தம் சொட்ட சொட்ட எப்படித்தான் ஸ்ரீபதி இதை எதிர்கொண்டாரோ என்று. அதைவிட பெருமைப்படவும், பாராட்டப்படவும் வேண்டிய நபர் வெங்கட்ராமன், ஸ்ரீபதியின் இணையர். புள்ளதான் முக்கியமென்று சொல்லி, தடைகல்லாக நிற்கும் ஆண்களுக்கு மத்தியில் அவர் ஸ்ரீபதியின் இறக்கைகளில் பாராசூட் பொருத்திவிட்டவர் போன்று தெரிகிறார் எனப் பாராட்டியுள்ளார்.
மேலும் காண

“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி” நீதிபதி தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின பெண்ணுக்கு ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்.
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்! “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, – முன் னேறவேண் டும்வைய மேலே!” என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதியான பழங்குடியின இளம்பெண்:
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஸ்ரீபதி வயது (22). இவர் ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீபதிக்கு திருமணம் ஆகியுள்ளது.
மேலும் இவருக்கு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதி பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பிறகு தேர்வுக்கு முந்தைய நாளே ஸ்ரீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் ஸ்ரீபதி உறுதியாக இருந்துள்ளார். மேலும் ஸ்ரீபதியின் கணவர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2-வது நாளில் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார்.
தற்போது வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீபதி. இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்னறனர்.மேலும் படிக்க
CM Stalin: சர்ச்சைக்குள்ளான கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்: கேள்வி எழுப்பிய இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்!மேலும் காண

manikandan lover and rajinikanth lal salaam movie box office collection
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான லால் சலாம் மற்றும் லவ்வர் ஆகிய இரு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனைப் பார்க்கலாம்.
லவ்வர் Vs லால் சலாம்
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிய படங்கள் லவ்வர் (Lover Movie) மற்றும் லால் சலாம் (Lal Salaam). இரு படங்களுக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், இரு படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தைப் சாக்னிக் தளம் வெளியிட்டுள்ளது.
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படம் கடந்த பிப்ரவரி 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் லால் சலாம் படத்தின் ரிலீஸை கொண்டாடி வருகிறார்கள். லால் சலாம் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வந்துகொண்டிருக்கும் நிலையில், படத்தில் ரஜினியின் நடிப்பு சிறப்பாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். சாதி, மத பேதங்கள் இல்லாமல் ஒற்றுமையை இப்படம் வலியுறுத்தியுள்ளது ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
வசூல் நிலவரம்லால் சலாம் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ. 3.55 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில்ரூ. 3.25 கோடியும், 3ஆவது நாளில் ரூ. 3.15 கோடியும் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து நான்காவது நாளான நேற்று பிப்ரவரி 12ஆம் தேதி ரூ. 1.24 கோடிகளை வசூலித்தது. நான்காவது நாளில் லால் சலாம் படத்தின் வசூல் தொய்வடைந்ததைத் தொடர்ந்து இன்று ஐந்தாவது நாளாக படம் ரூ. 42 லட்சம் வரை வசூல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லவ்வர்
குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம், ஹரிணி , நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வேலண்டைன்ஸ் வார ஸ்பெஷலாக இப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கும் லவ்வர் படம் இளம் தலைமுறையினர் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
வசூல் நிலவரம்லவ்வர் படம் முதல் நாளில் ரூ.70 லட்சம் வசூல் செய்தது. தொடர்ந்து 2 ஆவது நாளில் ரூ. 1 கோடியும், 3ஆவது நாளில் ரூ.99 லட்சமும் வசூல் செய்தது. நான்காவது நாளாக நேற்று ரூ.36 லட்சம் படம் வசூலித்துள்ளது. இன்று பிப்ரவரி 13ஆம் தேதி வசூல் பாதியாகக் குறையலாம் என எதிர்பார்ப்படுகிறது. மேலும் நாளை காதலர் தினத்தன்று இப்படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காண

Election 2024: கரூரை காப்பாற்றுங்கள்…. ரத்தத்தால் கடிதம் எழுதிய நிர்வாகி – எம்பி ஜோதிமணிக்கு எதிராக உள்ளூர் காங்கிரஸ் போர்க்கொடி
பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளதை அடுத்து நாடு முழுவதும் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அதற்கான பணிகளை தொடங்கி தற்போது விறுவிறுப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை மும்முனைப் போட்டி என கருதப்படுகிறது. அதாவது திமுக ஒரு கூட்டணியாகவும், அதிமுக ஒரு கூட்டணியாகவும், பாரதிய ஜனதா கட்சி ஒரு கூட்டணியாகவும் தமிழகத்தில் உள்ள புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தங்களது தேர்தல் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். குறிப்பாக திமுக தலைமைக் கழகத்தின் சார்பாக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதே நிலையில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகள் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இப்படி மாநிலத்தில் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும் பஞ்சமில்லாத கரூர் மாவட்ட அரசியல் நிலைமை வேறு விதமாக உள்ளது. அதிலும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணிக்கு தற்போது வரும் தேர்தல் மிகுந்த ஒரு சவாலான தேர்தலாகவே விளங்குகிறது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக ஜோதிமணி பல்வேறு இடங்களில் கடந்த ஆறு மாத காலமாக நலத்திட்ட உதவிகள், மாணவர் மத்தியில் உரையாடல் மற்றும் கட்சி நிர்வாகிகளினை சந்தித்து வரும் நிலையில் கூட்டணி கட்சியான திமுகவிடம் ஒத்துப் போகாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது ஒருபுறம் இருக்கும் நிலையில் கடந்த வாரத்தில் திமுக தலைமை மாவட்ட வாரியாக தங்கள் தொகுதியில் போட்டியிட விரும்பும் நபர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தனர். அப்பொழுது கரூர் மாவட்டத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தொகுதி ஜோதிமணிக்கு சீட்டு கொடுக்க வேண்டாம் என ஒட்டுமொத்தமாக தங்களது மனுவாக எழுதி கொடுத்ததாக தகவல் வெளியானது. இந்த பிரச்சனை முடிவதற்குள் மீண்டும் புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது அது என்னவென்றால் தற்போது அவர் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடி புதிதாக பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி ஆலோசனை கூட்டம் நடத்தி, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐந்துக்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான தீர்மானங்கள் தற்போது கரூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சம் வாக்குகள் மேல் பெற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நம்பிக்கை பெற்ற ஒருவராக இருக்கும் ஜோதிமணிக்கு எதிராகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட்டு வழங்கக் கூடாது என மாநில தலைமைக்கு தீர்மான நகலை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சரிவர மதிப்பது இல்லை எனவும் தன்னிச்சையான போக்கை கையாளுவதாகவும் மூத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தங்கள் பங்கு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலாகவும் கரூர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் பேங்க் சுப்ரமணியம் என்பவர் செய்தியாளர்களை சந்தித்து கூட்டத்தைப் பற்றி விரிவாக கூறினார். அப்பொழுது தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடந்த ஆறு மாதமாக பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது அவருக்கு உரிய முறையில் பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைப்பதில்லை. அதேபோல் கட்சி நிர்வாகிகளையும் அவர் கலந்து ஆலோசிப்பதில்லை எனவே மீண்டும் அவருக்கு சீட்டு வழங்க வேண்டாம் என தெரிவித்ததுடன் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார். காலை தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் மதியம் வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. கடந்த முறை திமுக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கரூர் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் ஜோதி மணிக்கு இரவு பகல் பாராமல் செந்தில் பாலாஜி தேர்தல் பணியாற்றி நாலு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்தார் என்பது அனைவரும் அறிந்த நிகழ்வு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி தற்போது களத்தில் இல்லாதபோது எப்படி கரூர் பாராளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என திமுக தலைமை யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு திமுக மற்றும் அவரது கட்சி இருந்த நிர்வாகிகள் இடையே ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் கரூர் பாராளுமன்ற தொகுதி இந்த முறை திமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுமா அல்லது திமுகவுக்கு வழங்கப்படுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இருந்தபோதும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது டெல்லி வட்டார நட்புடன் பேசி மீண்டும் கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட முயற்சிகள் மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கரூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகவும், மிக முக்கிய தொகுதியாக கருதப்படுகிறது ஏனெனில் பாஜக தலைவர் அண்ணாமலை சொந்த ஊர் கரூர் மாவட்டம், அதே நிலையில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சொந்த ஊர் கரூர். மேலும் அரசியலில் ஆணிவேர் என்று கருதப்படும் செந்தில் பாலாஜி சொந்த ஊர் கரூர். இப்படி மும்மூர்த்திகளின் பிறப்பிடமாக கரூர் திகழ்வதால் கரூர் மாவட்டத்தில் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை குழி தோண்டி புதைத்து விட்டார் என பரமத்தியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் தனது ரத்தத்தால் கடிதத்தை மாநில தலைமைக்கு அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண

Former Indian Cricket Team Captain Dattajirao Gaekwad Passes Away Know Stats Unknown Facts
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட்டின் தந்தையும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தத்தாஜிராவ் கெய்க்வாட் இன்று காலை பரோடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு தற்போது வயது 95. இவரே தற்போது வரை இந்தியாவின் மிக நீண்ட டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆவார். தத்தாஜிராவும் இந்தியாவுக்காக 9 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
தத்தாஜிராவ் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட்டின் தந்தை ஆவார். அன்ஷுமான் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அன்ஷுமான் 1975 முதல் 1987 வரை இந்தியாவுக்காக விளையாடினார்.
தத்தாஜிராவ் கெய்க்வாட் அறிமுகம்:
கடந்த 1952ம் ஆண்டு தத்தாஜிராவ் கெய்க்வாட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது முதல் டெஸ்டில் அறிமுகமானார். அதன்பிறகு, அவர் இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தனது கடைசி டெஸ்டில் 1961 இல் பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் அறிமுகமான பிறகு, தத்தாஜிராவ் கெய்க்வாட் மோசமான பார்ம் காரணமாக சில காலம் அணியில் இருந்து வெளியேறினார்.
The BCCI expresses its profound grief at the passing away of Dattajirao Gaekwad, former India captain and India’s oldest Test cricketer. He played in 11 Tests and led the team during India’s Tour of England in 1959. Under his captaincy, Baroda also won the Ranji Trophy in the… pic.twitter.com/HSUArGrjDF
— BCCI (@BCCI) February 13, 2024அதன்பிறகு, கடந்த 1959 ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தத்தாஜிராவ் மீண்டும் கேப்டனாக களமிறங்கி இந்திய அணியை வழிநடத்தினார். அப்போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 110 ரன்கள் மட்டுமே அடித்தார். இதன் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 5-0 என்ற கணக்கில் வென்றது.
பரோடா அணியில் பட்டையை கிளப்பிய தத்தாஜிராவ்:
இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, தத்தாஜிராவ் நீண்ட காலமாக உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்தார். உதா 1957-58 சீசனில், பரோடா அணி முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது. அப்போது, பரோடா அணிக்கு தலைமை தாங்கி வென்று கொடுத்தவர் தத்தாஜிராவ் கெய்க்வாட்தான். சர்வீசஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தத்தாஜிராவ் கெய்க்வாட் சதம் (132) அடித்து முக்கிய பங்காற்றினார். தத்தாஜிராவ் கெய்க்வாட் இதுவரை 110 முதல் தர போட்டிகளில் விளையாடி 17 சதங்களின் உதவியுடன் 5788 ரன்கள் எடுத்தார். ஆட்டமிழக்காமல் 249 ரன்கள் எடுத்தது இவரது சிறந்த ஸ்கோராகும்.
2016 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார் தத்தாஜிராவ் கெய்க்வாட். இவருக்கு முன், தீபக் ஷோதன் இந்தியாவின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருந்தார். முன்னாள் பேட்ஸ்மேன் தீபக் ஷோதன் தனது 87வது வயதில் அகமதாபாத்தில் காலமானார். தற்போது தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது 95 வயதில் காலமாகியுள்ளார்.
Pugar petti kanchipuram Residents of Thandalam Anugiragam Avenue have petitioned the District Collector demanding road and drinking water facilities
7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை எனவும்,பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பிரதி வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைத்தீர் நாள் முகாம் நடைபெறுகிறது. இதில் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று தண்டலம் அனுகிரகா அவென்யூ விரிவில் சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதி செய்து தரக் கோரி பகுதிவாசிகள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.
File Photoஇந்த மனுவில் பகுதிவாசிகள் தெரிவித்ததாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், தண்டலம் கிராமத்தில் உள்ள அனுகிரகா அவென்யூ விரிவு என்ற நகரில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். பாலாஜி தெரு, பத்மாவதி தெரு, அலமேலு தெரு மற்றும் பேசில் கோல்ட் தெரு ஆகிய 4 தெருக்களை உள்ளடக்கி உள்ள இந்த நகரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையும் 5 ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களாலும், வாகன போக்குவரத்தினாலும் முற்றிலும் சேதமடைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் வீடுகளில் இருந்து வெளியேறும் நீரானது சாலைகளின் நடுவே தேங்குகிறது.
இதனால் சாலை சேதமடைவது மட்டுமின்றி கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா மற்றும் டைஃபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
File Photoஇதனைத் தொடர்ந்து குடியிருப்புகளின் அருகே பொது கால்வாய் உள்ளதால் அந்த கால்வாய் நீரானது குடிநீரில் கலந்து குடிநீர் மாசுபடும் சூழலும் உருவாவுதாகவும் தெரிவிக்கின்றனர். சாலை, குடிநீர் மற்றும் கால்வாய் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்போர் நல சங்கம் ஒன்றை அமைத்து அதன் மூலமாக ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர்கள், அமைச்சர் உள்ளிட்ட பலரை நேரில் சந்தித்து மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அடிப்படை வசதிகளான சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதிகளை உடனடியாக சரி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.
Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?
கவலையே வேண்டாம்.
சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை, நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.மேலும் காண

India’s biggest translocation project 16,000 corals get lifeline in Gujarat
Corals Translocation Project: குஜராத்தில் மரணத்தின் விளிம்பில் இருந்த 16,000 பவளப்பாறைகள் , 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
Corals Translocation Project (பவளப் பாறைகள் இடமாற்றம்):
ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள கடல் தேசிய பூங்காவில் (MNP Marine National Park), இந்தியாவின் மிகப்பெரிய இடமாற்றத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 16,000 பவளப்பாறைகள் , வண்ணமயமான கடல் உயிரினங்கள், மரணத்திலிருந்து வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டுள்ளன. அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கடலுக்கு அடியில் (ஐஓசி) புதிய பைப்லைனை அமைத்ததால் இந்த பவளபாறைகள் இடமாற்றம் செய்ய வேண்டியதாயிற்று. 40 ஆண்டுகள் பழமையான அதன் தேய்ந்து போன பைப்லைனை மாற்ற வேண்டியதன் காரணமாக, இந்த பவள பாறைகளின் தொகுப்பு அழிவின் அபாயத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
திட்டம் தொடங்கியது எப்போது?
அழிந்து வரும் இந்த உயிரினங்களை நுட்பமாக கையாள வேண்டிய திட்டம் ஜூலை 2021ம் ஆண்டில், குஜராத் வனத்துறையால் இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) நிபுணர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. பவளப்பாறைகள் நீருக்கடியில் சுற்றுச்சூழலை அழிவதிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் அவை பொழுதுபோக்கு நடவடிக்கைகளை உருவாக்குவதால் பொருளாதார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன. IOCL இன் பழைய பைப்லைனின் ஆயுட்காலம் முடிவடைய இருந்ததால், புதிய குழாய் பதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த உயிரினங்களை சேதப்படுத்தாமல் மாற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் இருந்து பவளப் பாறை தொகுப்பை இடமாற்றம் செய்வதற்கான அனுமதியை அந்நிறுவனம் பெற்றது.
சவால்களும், சாதனையும்:
கடல் தேசிய பூங்காவின் தலைமை வனப் பாதுகாவலர் செந்தில் குமரன் இந்த இடமாற்றம் தொடர்பாக பேசுகையில், “எங்களுக்கு முன் உள்ள பிரச்னை பாதுகாப்பு, அதன் வளர்ச்சி மற்றும் பவளப்பாறைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எவ்வாறு தணிப்பது என்பதுதான். கடந்த காலத்தில் சிறிய அளவில் பவளப்பாறைகளை இடமாற்றம் செய்தோம், ஆனால் இதுதான் இந்திய வரலாற்றில் பவளப் பாறைகளின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான இடமாற்றம். கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட ZSI இன் பத்து நிபுணர்கள் ஒன்றரை வருடங்கள் இந்த இடமாற்ற பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பவளப்பாறைகள் நாராராவில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த உயிரினங்களுக்கு ஏற்ற தளத்திற்கு மாற்றப்பட்டன” என செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.
பவளப்பாறைகள் பாதுகப்பாக உள்ளனவா?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள கடல் தேசிய பூங்காவில் இரண்டு வகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன. ஒன்று ஆழமான நீரில் செழித்து வளரும் சப்டிடல் பவளப்பாறைகள் மற்றும் இரண்டாவது மேற்பரப்பில் காணப்படும் இடைநிலை பவளப்பாறைகள். இவை ஸ்நோர்கெல்லிங் மற்றும் ஸ்கூபா டைவிங் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டன. “இதை வெற்றிகரமான இடமாற்றம் என்று அழைக்கிறோம், ஏனென்றால் அவற்றின் உயிர் பிழைப்பு விகிதம் 90% க்கும் அதிகமாக உள்ளது. இது ஐந்தாண்டு திட்டமாகும். மேலும் பவளப் பாறைகள் அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு ஏதேனும் நோய்கள் அல்லது பாசிகளை உருவாக்குகின்றனவா, என தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதன் மூலம் அவற்றின் தொடர்ச்சியான ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யப்படும்” என செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.மேலும் காண

TN Weather Update Expected Rain Here February 14 Valentines Day IMD Update
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”இன்றும் நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
15.02.2024 முதல் 18.02.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்: 12.02.2024 மற்றும் 13.02.2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
CM Stalin: சர்ச்சைக்குள்ளான கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்: கேள்வி எழுப்பிய இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்!
Breaking News LIVE: துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைமேலும் காண

Super singer fame Rajalakshmi slams the netizans for their bad comments
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஏராளமான பாடகர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றும் ஒரு அற்புதமான மேடையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாட்டுப்புறப் பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி தம்பதி சூப்பர் சிங்கர் சீசன் 6இல் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்கள். அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பப்ளிசிட்டியால் ஏராளமான திரைப்படங்களில் பாடி வருகிறார்கள்.
பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான ‘சார்லி சாப்ளின்’ திரைப்படத்தில் ராஜலக்ஷ்மி பாடிய சின்ன மச்சான்… என்ற பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ஐயா சாமி… பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ட்ரெண்டிங் பாடலைப் பாடிய ராஜலக்ஷ்மிக்கு ஏராளமான வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இருவரும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மட்டுமின்றி சர்வதேச அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உலக அளவில் பிரபலமடைந்தும் வருகிறார்கள். ஒரு பாடகியாக மட்டுமின்றி ஒரு நடிகையாகவும் களம் இறங்கியுள்ளார் ராஜலக்ஷ்மி. ‘லைசென்ஸ்’ என்ற திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.
செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி தம்பதி யூடியூப் சேனல் ஒன்றையும் தற்போது நடத்தி வருகிறார்கள். அந்த சேனலில் ஏராளமான வீடியோக்களை போஸ்ட் செய்துள்ளனர். அந்த வகையில் அவர்கள் அமெரிக்கா சென்று இருந்தபோது அங்கே இளைஞர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்து இருந்தனர். அதில் ராஜலக்ஷ்மி பேண்ட் ஷர்ட் அணிந்திருந்ததை வைத்து பலரும் அவரின் உடையை விமர்சித்து வந்தனர். என்றுமே புடவையில் தோன்றும் ராஜலக்ஷ்மியை, பேண்ட் சர்ட்டில் பார்த்ததால் நெட்டிசன்கள் பலரும் அவரைக் கலாய்த்து கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் ராஜலக்ஷ்மி.
“ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதை நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். நமக்குள்ளே பேசிக்கொண்டால் நம்முடைய தவறு தெரியாது. பொது இடங்களில் மற்றவர்களுடன் பேசிப் பழகினால் தான் நம்முடைய தவறு என்ன என்பது தெரியும். அதனால் தான் நான் அந்த வீடியோவில் அப்படிப் பேசி இருந்தேன். அதற்கு பலர் மோசமாக கமெண்ட் செய்திருந்தனர். அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி எல்லாம் பேசுவார்கள்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவரின் உடை குறித்து மோசமான கமெண்ட்களை பதிவிட்டவர்களுக்கு பதிலடியாக “எந்த உடை அணிய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். எது எனக்கு சரின்னு படுதோ அதை நான் போடுறேன். சுய ஒழுக்கம் என்பது எனக்கு இருக்கிறது. எனவே அதை நான் கடைபிடிப்பேன்” என கூறிய ராஜலக்ஷ்மி அந்த உடையில் எடுத்த பல புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.மேலும் காண

TN TRB SGT Notification 2024 Secondary Grade Teachers apply from tomorrow feb 14 Check Vacancy Exam Date All Details | TN TRB SGT Notification: 1768 பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
1768 பணியிடங்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை (பிப்.14) தொடங்குவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் மார்ச் 15ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம்
பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணை எண் 149, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.
எனினும் தற்போது போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறையில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், இதற்கு பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.
எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவினர், பிசி முஸ்லிம்கள், எம்பிசி ஆகிய பிரிவினருக்கு அதிகபட்சம் 58 வயது வரை இருக்கலாம்.
கல்வித் தகுதி
* ஆசிரியர்களுக்கான பி.எட். அல்லது டி.டிஎட் அல்லது அதற்கு இணையான படிப்புகள்
மற்றும்
* தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TNTET)
தேர்வு முறை
* கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு
* எழுத்துத் தேர்வு
* சான்றிதழ் சரிபார்ப்புசான்றிதழ் சரிபார்ப்பில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
* 10வது வகுப்பு/ எஸ்.எஸ்.எல்.சி.
* 12வது வகுப்பு/ மேல்நிலைப் படிப்பு/ டிப்ளமோ அல்லது அதற்கு இணையான படிப்பு.
* ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ / தொடக்கக் கல்வியில் டிப்ளமோ / டிப்ளமோ (சிறப்புக் கல்வி)
* பட்டப்படிப்புச் சான்றிதழ் அல்லது தற்காலிகச் சான்றிதழ்
* இளநிலை பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம்
* தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் (TNTET) – தாள் I
* தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் (PSTM) சான்றிதழ் (தேவைப்பட்டால்)
* ஊனமுற்றோர் சான்றிதழ் (தேவைப்பட்டால்)விண்ணப்பிப்பது எப்படி?
* இடைநிலை ஆசிரியர் பணி இடங்களுக்கான தேர்வுகளுக்கு https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முன்னதாக, விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, காலி இடங்கள், வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய அறிவிக்கையை https://www.trb.tn.gov.in/admin/pdf/994791851SGT%20Notification%20%20-%202024.pdf என்ற இணைப்பில் காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/மேலும் காண

Minister sivasankar said that selection of kilambakkam was planned only during the AIADMK regime | Minister Sivasankar: கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான்
தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டியளித்தார்.
போக்குவரத்துத் துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று தொடங்கி வைத்து, பின்னர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார்.
இந்த பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கி பேரணி, தீவுத்திடலில் நிறைவு பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடை பேரணி இங்கே நடைபெறுகிறது. 19 போதிலிருந்து 32 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகம் சாலை விபத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.
சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடக்கிறது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களை காப்பாற்ற இன் உயிர் காப்போம் என்ற மகத்தான திட்டத்தை ஏற்படுத்தி, உயிரை காப்பாற்ற தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கான தொகையை செலுத்தி உயிரைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடத்திலும் விழிப்புணர்வு வரவேண்டும், கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது சாலை விபத்து குறைந்திருந்தாலும் முற்றிலும் குறைக்க துறை நடவடிக்கை எடுத்து வருகிறது” கூறினார்.
தொடர்ந்து கிளாம்பாக்கம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கரிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டனர். அப்போது பதிலளித்த அவர், “அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 3,200 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்று கொரோனா காலத்திற்குபின் சுமார் 4,000 பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, படிப்படியாக வாங்கப்பட இருக்கிறது. மீதி இருக்கும் காலக்கட்டத்தில் இன்னும் கூடுதலாக புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கிறார்கள். எனவே, எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் என்ன செய்தார் என்பதை ஆராய்ந்து இங்கு பேச வேண்டும்.
கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான் திட்டமிடப்பட்டது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை:
போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலம் கட்டப்படுமா என்று காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். அதற்கு காரணம், ஸ்ரீபெரும்புத்தூரில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. ஸ்ரீபெரும்புத்தூரில் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இன்று ஆசியாவிலேயே மிகச் சிறந்த பேருந்து முனையமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைந்துள்ளது. இதனை பல்வேறு பத்திரிக்கைகளும் பாராட்டி வருகிறது. இதையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நம்ப மறுத்தால், அவர் கிளாம்பாக்கத்திற்கு வர தயார் என்றால், அழைத்து சென்று என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக இருக்கிறோம்.” என்றார்.கிளாம்பாக்கம் பேருந்து முனையம் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர், ”கிளாம்பாக்கத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இல்லை, பெரிய பிரச்சனைகள் இருந்தன. அனையெல்லாவற்றையும் நாங்கள் தீர்த்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் சொல்லக்கூடிய சிறு பிரச்சனையையும் தீர்த்து வைப்போம்” என்றார்.
மேலும் காண

15 Years of SMS : டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை.. 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் சிவா மனசுல சக்தி!
15 Years of SMS : டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை.. 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் சிவா மனசுல சக்தி!
Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலஜியின் ராஜினாமா ஏற்பு
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அங்கீகரித்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி:
பண மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு செந்தில் பாலாஜி, சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும், அவர் இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் நீடித்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது பரிந்துரையின் பேரில், ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக தற்போது அறிவித்துள்ளார்.
எதனால் கைது
திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியபோது, கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது வசம் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியின்போது 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்தியபோது, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தரவில்லை எனவும், பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் கூறி செந்தில் பாலாஜி மீது நேரடியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல கட்டங்களைக் கடந்து அமலாக்கத்துறை வசம் வந்தது. அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி பல முறை சம்மன் அனுப்பியும் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி நள்ளிரவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து பலமுறை அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தாலும், மீண்டும் மீண்டும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அமைச்சரவையில் நீடிப்பதால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்கக் கூடும் எனவும் அமலாக்கத்துறை வாதாடி வந்தது. இந்நிலையில் தான், செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் தனக்கு விரைவில் ஜாமின் கிடைக்கும் என அவர் நம்புவதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,
மேலும் காண

Release MGNREGS Funds For Bengal’: Rahul backs Mamata Banerjee Writes To PM Modi
Rahul Gandhi: மேற்கு வங்க மாநிலத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் – மம்தா பானர்ஜி முரண்:
ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக, அண்மையில் தான் மேற்கு வங்கத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இதனிடயே, I.N.D.I.A. கூட்டணியில் தொடர்ந்தாலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படமாட்டாது, திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அக்கட்சி தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த சூழலில் தான், மேற்குவங்க அரசின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்:
ராகுல் காந்தி எழுதியுள்ள அந்த கடிதத்தில், “மேற்கு வங்காளத்தில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட (MGREGS) தொழிலாளர்களின், பேரழிவு நிலை மற்றும் நீதிக்கான அவர்களின் இடைவிடாத போராட்டம் தொடர்பாக நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக மேற்கு வங்காளத்திற்கு சமீபத்தில் நான் சென்றிருந்தபோது, MGNREGS தொழிலாளர்களின் ஒரு குழு, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து என்னிடம் கூறினர். பிரதிநிதித்துவத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் பல தொழிலாளர்களுக்கு 2021-ல் செய்த பணிக்கான ஊதியமே இதுவரை வழங்கப்படவில்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. 2021-22ல் 75 லட்சமாக இருந்த வேலை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை, 2023-24ல் 8000க்கும் குறைவான குடும்பங்களாக சரிந்துள்ளது. இது பெண்கள் மற்றும் எஸ்சி & எஸ்டியினர் மீது கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. MGNREGS வேலை இல்லாமை மற்றும் நிலுவையில் உள்ள ஊதியங்கள் ஆகிய பிரச்னைகள், பலரை புலம்பெயர்வு போன்ற கடினமான தேர்வுகளை செய்ய நிர்ப்பந்தித்துள்ளன. மார்ச் 2022 முதல் மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு MGREGS இன் கீழ் வேலை மற்றும் ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Congress MP Rahul Gandhi writes to Prime Minister Narendra ModiThe letter reads, “I am writing to you regarding the devastating plight of MGREGS workers in West Bengal, and their relentless fight for justice. During my recent visit to West Bengal as part of the Bharat Jodo… pic.twitter.com/39zjxvuXTW
— ANI (@ANI) February 12, 2024அரசியல் கணக்குகள் நிறைவேறுமா?
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை வழங்கவில்லை என, மத்திய அரசை கண்டித்து மேற்குவங்க அரசு நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக, அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்தும் மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் தான், மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம், மம்தாவின் கோபம் தணிந்து, மீண்டும் காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தையை தொடங்குவார் என அக்கட்சி மேலிடம் எதிர்பார்க்கிறது. அதேநேரம், ராகுல் காந்தியின் கடிதத்திற்கு பிரதமர் மோடியின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.மேலும் காண

Hosur Rose: காதலர் தினத்தில் கரைசேருமா ஓசூர் ரோஜா? மதிப்பை இழப்பதாக விவசாயிகள் வருத்தம்..!

காதலர் தினம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரோஜாக்கள் என்றே கூறலாம். அதேபோல், உலக மலர் சந்தையில் தனக்கென தனி இடம் பதித்துள்ள ஓசூர் ரோஜா மலர்களே நினைவுக்கு வரும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமை குடில்கள் அமைத்து சுமார் 2000 ஹேக்டர் நிலபரப்பலவில் கொய்மலர் சாகுபடி செய்துவரும் விவசாயிகள், அதிக அளவில் காதலர் தினத்திற்கு அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகும். தாஜ்மஹாலுக்கு செல்லகூடிய 15 முதல் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள சிவப்பு ரோஜாக்களுக்கு தனி சிறப்பு உண்டு, கொய்மலர் விவசாயிகள் அதிக அளவில் சிவப்பு ரோஜாக்களை சாகுபடி செய்து வருவது வழக்கம்.

கொரோனா காலக்கட்டத்தை தொடர்ந்து சில ஆண்டுகளாக கொய்மலர் சாகுபடியில் பெரும் நஷ்டத்தை சந்தித்து அதிலிருந்து மீண்டு, கடந்த ஆண்டு முதல் மீண்டும் கொய்மலர் விவசாயம் செழிக்க தொடங்கியது,

நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 21 தேதி முதல் காதலர் தினத்திற்கான ரோஜா மலர் ஏற்றுமதி தொடங்கி இருப்பதாலும் அதேசமயம் விளை ஏற்றம் கண்டிருப்பதாலும் கொய் மலர் ரோஜா விவசாயிகள் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் உலக மலர் சந்தையில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு வரவேற்பு குறைந்து புது வகையான ஆப்ரிகா ரோஜாக்களுக்கு மவுசு உயர்ந்து வருவதால் இம்முறை ஏற்றுமதி குறைந்தே காணப்படுகிறது என்று ரோஜா ஏற்றுமதியாளர்கள் கூறி வருகின்றனர்.

ஏற்றுமதி குறைந்து இருப்பதால் வேதனை அடைந்துள்ளனர் என்றாலும், தற்போது தமிழகம், கர்நாடகம், தெலுங்கான, ஆந்திர, கேரள உள்ளிட்ட மாநிலங்களில் கல்யாண முகூர்த்தங்களும் சுப நிகழ்ச்சிகளும் அதிகமாகவுள்ளதால் உள்ளூர் சந்தைகளிலே ரோஜா மலர் ஒன்றுக்கு ரூ.16 முதல் 18 ரூபாய் வரை நல்ல விலை கிடைத்து வருவதாகவும் கொய்மலர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

உலக சர்வதேச மலர் சந்தையில் மற்ற நாடுகளின் புது வரவு மலர்களால், தற்சமயம் பெரும் பின்னடைவு சத்தித்து வரும் ஓசூர் கொய் மலர் சாகுபடி புதுவகையான கொய் மலர் அறிமுகம் செய்தால் மட்டுமே உலக சர்வதேச மலர் சந்தையில் மீண்டும் ஓசூர் ரோஜாக்கள் தனக்கென தனி இடம் பிடிக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்: அதுவே காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி: சி.முருகன் ஓசூர்-நிருபர்.

Pushpa 2 : சமந்தாவிற்கு பதில் திஷா பத்தானி.. புஷ்பா 2வில் நடனமாடவிருக்கும் கங்குவா நடிகை!
Pushpa 2 : சமந்தாவிற்கு பதில் திஷா பத்தானி.. புஷ்பா 2வில் நடனமாடவிருக்கும் கங்குவா நடிகை!
Devdutt Paddikal Replaces Added To Indian Test Squad 3rd Match Here Know His Stats Records
Devdutt Paddikal Stats & Records: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. காயம் காரணமாக் வெளியேறியுள்ள கே.எல்.ராகுல், ராஜ்கோட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்தது. அதேநேரத்தில், கே.எல்.ராகுலுக்கு பதிலாக கர்நாடக வீரர் தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல்தர போட்டியில் தேவ்தத் படிக்கல் அசத்தல்:
கடந்த 6 முதல் தர போட்டியில் தேவ்தத் படிக்கல் 4 முறை சதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் போன்ற பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் தேவ்தத் படிக்கல் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று இந்திய ரசிகர்கள் நம்புகிறார்கள். முன்னதாக, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தேவ்தத் படிக்கல் 105 ரன்கள் எடுத்திருந்தார். அதற்கு பிறகு, ரஞ்சி டிராபியில் கர்நாடகா அணிக்காக களமிறங்கிய அவர், பஞ்சாப் அணிக்கு எதிராக 103 ரன்களும், கோவா அணிக்கு எதிராக 103 ரன்களும் எடுத்தார்.
Welll.. so it’s official now.Happy for DDPDevdutt Paddikal was in amazing form recently. – In last 6 FC matches, He has smashed 4 centuries – 105 v ENG lions-103 v PUN-103 v Goa-151 v Tamil Nadu (2 days ago)
— Varun Giri (@Varungiri0) February 12, 2024தொடர்ந்து, சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டிற்கு எதிரான போட்டியில் 151 ரன்கள் குவித்தார் தேவ்தத் படிக்கல். ரஞ்சிக் கோப்பையின் கடைசி 4 ஆட்டங்களில் 92.66 சராசரியில் 556 ரன்கள் குவித்துள்ளார் தேவ்தத் படிக்கல். இதில் 3 சதங்களும் அடங்கும். இதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் தேவ்தத் படிக்கல் நிச்சயம் அறிமுகம் செய்வார் என்று நம்பப்படுகிறது.
முதல்தர கிரிக்கெட்டில் தேவ்தத் படிக்கலின் சாதனை என்ன?
தேவ்தத் படிக்கல் வெறும் 31 முதல் தர போட்டிகளில் 12 சதங்கள் உள்பட 2200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
ஆண்டுகள்
போட்டிகள்
இன்னிங்ஸ்
ரன்கள்
சராசரி
ஸ்ட்ரைக் ரேட்
50/100
அதிகப்பட்ச ஸ்கோர்
2018 – தற்போது வரை
31
53
2227
44.54
59.45
6 / 12
193
2023-2024 சீசனில் தேவ்தத் படிக்கலின் பேட்டிங் எப்படி?
இந்த ஆண்டு தேவ்தத் படிக்கல் இதுவரை கர்நாடகா மற்றும் இந்தியா ஏ அணிக்காக இடம்பெற்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி சீசனில் கர்நாடகாவுக்காக படிக்கல் மூன்று சதங்களை அடித்தார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 191 ரன்கள் எடுத்தார்.
இந்த ஆண்டு இதுவரை ரெட்-பால் கிரிக்கெட்டில் கர்நாடகா மற்றும் இந்தியா ஏ அணிக்காக படிக்கலின் சாதனை இதோ.
போட்டிகள்
இன்னிங்ஸ்
ரன்கள்
சராசரி
ஸ்ட்ரைக் ரேட்
50
100
அதிகப்பட்ச ஸ்கோர்
6
9
747
83.00
76.85
1
4
193
3 ஆண்டுகளுக்கு இந்திய ஜெர்சியில் தேவ்தத் படிக்கல்:
2021 இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பெற்ற தேவ்தத் படிக்கல், அந்த சுற்றுப்பயணத்தில் 2 டி20 போட்டிகளில் விளையாடி 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு அவர் இந்திய அணியில் இடம்பெறவே இல்லை. இப்போது, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தற்போது அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர். , குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல்.
farmers protest 2.0 borders sealed as delhi gears up for march centre hopeful of resolution | Farmers’ Protest 2.0: டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்
Farmers’ Protest 2.0: விவசாயிகள் அமைப்பு மற்றும் மத்திய அரசு இடையே, திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்:
பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இன்று தலைநகர் டெல்லியில் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்க உள்ளன. முன்னதாக திங்கட்கிழமை இரவு விவசாய பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர் அடங்கிய குழு இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலைக்கு தெளிவான சட்ட உத்தரவாதம் எதுவும் இல்லை என்பதால், திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும் என விவசாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ”விவசாயிகள் முன்னிலைப்படுத்திய பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன, மீதமுள்ள பிரச்னைகளைக் கையாள ஒரு குழுவை அமைக்க அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது” என மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
#WATCH | Punjab: Punjab Kisan Mazdoor Sangharsh Committee General Secretary Sarwan Singh Pandher holds a meeting with farmer unions in Fatehgarh Sahib. pic.twitter.com/ybwnEV8aLl
— ANI (@ANI) February 13, 2024144 தடை உத்தரவு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:
விவசாயிகளின் டெல்லி சலோ அணிவகுப்பு காலை 10 மணிக்குத் தொடங்க உள்ளது. இதனிடையே, பஞ்சாபிலிருந்து ஹரியானாவிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க, ஹரியானா அரசாங்கம் மாநில எல்லைகளில் விரிவான தடுப்புகளை அமைத்துள்ளது. 2020-21 விவசாயிகளின் போராட்டம் மீண்டும் நிகழாமல் தடுக்கும் முயற்சியில் டெல்லியின் எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதான சாலைகளில் முள்வேலி, சிமெண்ட் தடுப்பு, சாலைகளில் ஆணிகள் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே டெல்லியில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது. இதனால், முன் அனுமதியின்றி 5-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது, பேரணியாக செல்வது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரணி அறிவிப்பை முன்னிட்டு, டெல்லி போக்குவரத்திலும் இன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
#WATCH | Security heightened at Delhi borders in view of the march declared by farmers towards the national capital today (Drone visuals from Singhu border) pic.twitter.com/FD5IaQRRMh
— ANI (@ANI) February 13, 2024மீண்டும் விவசாயிகள் போராட்டம் ஏன்?
டெல்லி எல்லையில் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி ஓராண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்குப் பிறகு, மூன்று வேளாண்சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவது, விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ போராட்டத்தை கடந்த ஆண்டு விவசாய அமைப்புகள் அறிவித்தன.
#WATCH | Ambala, Haryana: Security heightened at the Shambhu border in view of the march declared by farmers towards Delhi today. pic.twitter.com/AwRAHprtgC
— ANI (@ANI) February 13, 2024மேலும் காண

Valentines Day 2024 list of tamil movies that showcased salt and pepper love
காதலுக்கு கண்ணில்லை என்பது வழக்கமான ஃபார்முலா என்றாலும் காதலுக்கு வயதுமில்லை என்பது தான் சமீப காலமாக சினிமாவில் ட்ரெண்டாகி வரும் ஒரு ஃபார்முலா. திரைப்பட தயாரிப்பாளர்கள் வயதான காலத்தில் மலரும் அழகான காதலை படமாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அப்படி இலையுதிர் காலத்திலும் காதல் மலர்ந்து பூ பூக்கும் என்பதற்கு உதாரணமாக தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் குறித்த ஒரு சிறு தொகுப்பு :
ப. பாண்டி : ராஜ்கிரண் – ரேவதி
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான முதல் படம் ‘ப. பாண்டி’. ரிட்டையரான சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ராஜ்கிரணுக்கு நிறைவேறாமல் போன தன்னுடைய பால்ய காதலி ரேவதியை தேடி கண்டுபிடித்து அதை புதுப்பித்த இப்படம் கொள்ளை அழகு. பெற்றோர்களை சந்தோஷமாக வாழ வைக்க வேண்டும், அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என புரிய வைத்த திரைப்படம்.
ஓ காதல் கண்மணி – பிரகாஷ் ராஜ்-லீலா சாம்சன்
இளம் ஜோடிகளுக்கு இடையேயான காதலை லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் மூலம் காட்டினாலும் பிரகாஷ்ராஜ் – லீலா சாம்சன் இடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் எளிமையான காதலை வெளிப்படுத்தியது. அவர்களின் புரிதலையும் காதலையும் பார்த்து இளம் ஜோடியினருக்கு திருமணம் என்பது அன்பின் இயல்பான முன்னேற்றம் என்பதை உணர்த்திய படம்.
பலே வெள்ளைய தேவா : சங்கிலி முருகன் – கோவை சரளா
குழந்தை இல்லாத தம்பதிகளான சங்கிலி முருகன் – கோவை சரளாவை இந்த சமூகம் வேற்றுமையுடன் பார்க்கிறது. அவை அனைத்தையும் மறைத்து செல்பி மோகத்தில் அல்ட்ரா மார்டன் பாட்டியாக வலம் வரும் கோவை சரளா மற்றும் அவருக்கு சற்றும் சளைக்காத கணவனாக சங்கிலி முருகனும் சக்கை போடு போட்டிருந்தனர்.
பண்ணையாரும் பத்மினியும் : ஜெயபிரகாஷ் – துளசி
ஊரின் மதிப்புமிக்க பண்ணையார் அவரது அம்பாசிடர் கார் பத்மினியை பற்றிய கதை என்றாலும் அதில் பண்ணையாருக்கும் அவரது மனைவி துளசிக்கும் இடையே இருக்கும் ஊடல் கலந்த காதலையும் அழகாக சித்தரித்த ஒரு திரைப்படம். இப்படத்தில் இடம்பெற்ற உனக்காக பிறந்தேனே எனதழகா… பிரியாம இருப்பேனே பகல் இரவா… என்ற பாடல் மூலம் அவர்களின் அன்பை வெளிப்படுத்தியது. அப்பாடல் இன்று வரை ரசிக்கப்படும் ரொமான்டிக் பாடல்.
கபாலி : ரஜினிகாந்த் – ராதிகா ஆப்தே
25 ஆண்டு சிறை வாழ்க்கைக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தை தேடி செல்லும் போது இறந்ததாக நினைத்த மனைவியை சந்திக்கும் அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவர்களின் முதிர்ச்சியில் வந்த காதலை மாயநதி பாடல் வசீகரமாக வெளிப்படுத்தியது.
தண்டட்டி : பசுபதி – ரோகினி
ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும் காதல் ஜோடியை பிரித்து காதலை அடித்து கிணற்றில் போடும் அண்ணன்கள். வயதான காலத்தில் தங்க பொண்ணுவின் தண்டட்டிக்காக அடித்து கொள்ளும் குடும்பம். கதையின் பிற்பகுதியில் தொலைத்த காதலன் தண்டட்டிக்கு காவலாக வந்த போலீசாகரர் என்பது புலப்படுகிறது. தங்கப்பொண்ணுவாக ரோகினி ஒரு சில காட்சிகள் வந்தாலும் நிறைவான நடிப்பு. ஒட்டுமொத்த படத்தையும் தன் தோள்மீது சுமந்த பசுபதியின் மற்றுமொரு சிறந்த படைப்பு.
மேலும் காண

top news India today abp nadu morning top India news February 13th 2024 know full details
புது டிவிஸ்ட்.. மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி..!
மேற்கு வங்க மாநிலத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக, அண்மையில் தான் மேற்கு வங்கத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இதனிடயே, I.N.D.I.A. கூட்டணியில் தொடர்ந்தாலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படமாட்டாது, திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அக்கட்சி தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் படிக்க..
அபுதாபியில் முதல் இந்து கோயில் – திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று பயணம்..!
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 900 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரங்களுடன், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் இறுதி வடிவம் பெற்றுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும் படிக்க..
இனி இந்த நாடுகளுக்கு செல்லும்போது கையில் பணமே வேண்டாம் – 7 நாடுகளில் யுபிஐ சேவை அனுமதி
இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், இந்திய பணப்பரிவர்த்தனை தற்போது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகிறது. மேலும் படிக்க..
தீர்ந்து போன பெட்ரோல்; கறார் காட்டிய வாடிக்கையாளர்.. ரேபிடோ டிரைவருக்கு வந்த சோதனை!
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ola, uber, rapido போன்ற கார் மற்றும் பைக் டாக்ஸிகள் எத்தனையோ நகர்புறங்களில் படையெடுக்க தொடங்கி விட்டது. நம் நின்ற இடத்தில் இருந்து மொபைல் மூலம் புக் செய்தால் போதும், தங்கள் முன் வந்து நின்று ஏற்றிசென்று, செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்தில் இறக்கிவிடுவார்கள். இப்படி ஒருபுறம் அனைத்து நல்ல விதமாக சென்றாலும், அவ்வபோது வாகன ஓட்டிகளும், வாடிக்கையாளர்களும் பல சிரமங்களை சந்திக்கின்றனர்.
சமீபத்தில் இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரேபிடோ டிரைவர் படும் கஷ்டத்தை பார்க்க பரிதாபமாக உள்ளது என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் படிக்க..
டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் – குவிக்கப்பட்டுள்ள போலீசார்: 144 தடை, எல்லைகள் மூடல்
பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இன்று தலைநகர் டெல்லியில் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்க உள்ளன. முன்னதாக திங்கட்கிழமை இரவு விவசாய பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர் அடங்கிய குழு இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலைக்கு தெளிவான சட்ட உத்தரவாதம் எதுவும் இல்லை என்பதால், திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும் என விவசாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க..
மேலும் காண

மேட்டூர் அணையின் நீர் வரத்து 44 கன அடியில் இருந்து 43 கன அடியாக குறைவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 45 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 44 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 43 கன அடியாக குறைந்துள்ளது.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 65.97 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 29.33 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.42 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.80 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 488 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,122 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 52.58 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 102 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.

actor jeeva siva manasula sakthi movie completed 15 years
தமிழ் சினிமாவின் முக்கியமான காதல் படங்களில் ஒன்றான “சிவா மனசுல சக்தி” படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இயக்குநர் ராஜேஷ் – ஜீவா கூட்டணி
கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய், ஜோதிகா நடிப்பில் “குஷி” படம் வெளியாகி சூப்பரான வெற்றியைப் பெற்றது. இருவருக்குள்ளான ஈகோ மோதல் காதலாக மாறுவது பற்றிய கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இப்படம் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில் அமைந்தது தான் ‘சிவா மனசுல சக்தி’ படம்.
90ஸ் கிட்ஸ்களுக்கு மீண்டும் ஒரு யூத் ஃபுல்லான அந்த காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு கதையை உருவாக்கி தனது அறிமுக படத்திலேயே கவர்ந்தார் இயக்குநர் ராஜேஷ். சிவா மனசுல சக்தி படத்தை விகடன் நிறுவனம் தான் தயாரித்தது. இப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி, பேராசிரியர் ஞானசம்பந்தம் என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மோதல் – காதல்
சிவா மனசுல சக்தி படம் ஆரம்பம் முதலே ஒரு ஜாலியான மோடில் தான் பயணிக்கும். முதல் காட்சியில் கோவையில் இருந்து சென்னைக்கு ஒரே ரயிலில் பயணிக்கும் ஜீவா, அனுயா இருவரும் அறிமுகமாகின்றனர். இதில் ஜீவா தன்னை ஒரு ராணுவ வீரன் என்றும், அனுயா தான் ஒரு விமான பணிப்பெண் என்றும் சொல்லிக் கொள்வார்கள். அடுத்த சில காட்சிகள் உண்மை வெளிப்படும். இருவருக்குள்ளும் பயங்கரமான ஈகோ பற்றிக் கொள்ளும். ஆனாலும் ஒரு பிடிப்பு இருந்துக் கொண்டே இருக்கும்.
இது காதலாக மாறும் இடமும் சரி, மோதலாக வெடிக்கும் இடமும் சரி ரசிகர்களை ஜாலி மோடில் வைத்திருந்தது. சிவாவாக வரும் ஜீவாவும், சக்தியாக வரும் அனுயாவும் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பார்கள்.
SMS is not a movie; it’s a vibe♥️#SivaManasulaSakthi pic.twitter.com/WqobSGSFAt
— Subash | Lax stan (@iamtheSubash) July 16, 2021பலமாக அமைந்த சந்தானம் காமெடி
நண்பனால் ஏற்படும் தொல்லையை பொறுத்து அவரோடு எல்லா நிலையிலும் பயணிக்கும் நபராக சந்தானம் காமெடியில் பின்னியிருப்பார். இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி, நல்லவங்க பேச்சு ரீச் ஆகும்.. என்ன கொஞ்சம் லேட் ஆகும், மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன், அவ போய் ஆறு மாசம் ஆகுது என அத்தனை டயலாக்குகளும் மனப்பாடமாக அமைந்தது.
படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளும் தான். காதலர்களின் சோக கீதமாக அமைந்த “ஒரு கல் ஒரு கண்ணாடி” பாடல் என்றைக்குமான அருமருந்து தான். இந்த படத்தில் நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த காட்சி தான் படத்தின் மிக முக்கியமான திருப்புமுனையாகவும் இருந்தது. சமீபத்தில் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்தை காண அலைமோதியவர்கள் அதிகம். அப்படிப்பட்ட நிலையில் இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் சிவா மனசுல சக்தி காதலின் ஸ்பெஷல் படமாக இருக்கும்..!மேலும் காண

காதலனுடன் சேர்ந்து போதை: மது அருந்திய கல்லூரி மாணவி திடீரென உயிரிழப்பு! நடந்தது என்ன?

ஊட்டியில் காதலனுடன் சேர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழந்ததற்கு, போதை காளான் காரணமா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஊட்டியில் கல்லூரி மாணவி மரணம்:

ஊட்டியில் தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவி, தனது காதலனுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது போதை காளானையும் உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் போதை தலைக்கேற, இருவரும் சுருண்டு விழுந்துள்ளனர். காலையில் காதலன் எழுந்த பார்க்கையில், உடனிருந்த இளம்பெண் உயிரற்று கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த இளைஞனை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி பருவ காதல்:

நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20). அவரது பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஆகாஷ் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தன்னுடன் 10ம் வகுப்பில் பயின்ற, ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த ரிதி ஏஞ்சல் (19) என்பவருடன்,ஆகாஷிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பள்ளி பருவம் முடிந்த நிலையில் ஆகாஷ் நீலகிரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியிலும், ரிதி ஏஞ்சல் கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியிலும் சேர்ந்தனர். இருப்பினும் இருவரும் அவ்வப்போது சந்திப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

காலனாய் வந்த காளான்:

இந்தநிலையில், கல்லூரி விடுமுறையான கடந்த சனிக்கிழமை ஆகாஷ் வகுத்துகொடுத்த திட்டப்படி, ரிதி ஏஞ்சல் கோவையில் இருந்து ஊட்டி வந்துள்ளார். அங்கிருந்து ரிதியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்ட ஆகாஷ், மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் மது அருந்தியதோடு, இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதிக்கு சென்று மேஜிக் காளான் எனப்படும் போதை காளான் பறித்து வந்து மதுவுடன் சேர்த்து உண்டதாக கூறப்படுகிறது. இதனால் போதை உச்சம்தொட்டு, இருவரும் நிலைகுலைந்து மயங்கி விழுந்து விடியும் வரை தூங்கியுள்ளனர்.

மாணவி உயிரிழப்பு:

காலையில் தூக்கம் கலைந்து எழுந்த ஆகாஷ், நீண்ட நேரமாகியும் படுக்கையை விட்டு எழாத ரிதியை எழுப்ப முயன்றுள்ளார். அவரது முயற்சிகள் எதுவும் பலிக்காத நிலையில். 108 ஆம்புலன்சுக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த மருத்துவ பணியாளர், இளம் பெண்ணின் உடலை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பின்னர் கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்துதல் பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆகாஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PM Modi to inaugurate first Hindu temple in UAE Check full schedule, key details in tamil | Modi UAE Visit: அபுதாபியில் முதல் இந்து கோயில்
Modi UAE Visit: இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயில்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 900 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரங்களுடன், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் இறுதி வடிவம் பெற்றுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று அபுதாபி புறப்படுகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் ஏழாவது முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். கடந்த எட்டு மாதங்களில் இது மூன்றாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
UAE’s Hindu Temple: அபுதாபியில் முதல் இந்து கோயில் – ரூ.900 கோடி செலவு, 7 பிரமாண்ட கோபுரங்கள், பிரமிக்கச் செய்யும் அம்சங்கள்
பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயண விவரம்:
இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்கு செல்கிறார் பிரதமர் மோடி
இன்று மாலை ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்தித்து உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்
அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
நாளை (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் துபாயில் 3-வது நாளாக நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும், பொதுவான பிராந்திய பிரச்னைகளை கையாள்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
கோயிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.கத்தார் செல்லும் பிரதமர் மோடி:
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து பிரதமர் மோடி நேரடியாக கத்தார் தலைநகர் தோஹாவிற்கு செல்கிறார். 2016ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக அங்கு செல்லும் பிரதமர், கத்தார் அமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2023 ஆம் ஆண்டு கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு இந்திய கடற்படை வீரர்கள், அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.மேலும் காண

cinematographer PC Sreeram condemn to Governor RN Ravi behavior in TN Assembly
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் சரியே இல்லை என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ள இவரின் ஒளிப்பதிவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படியான நிலையில் மத்திய, மாநில அரசை விமர்சித்து அவ்வப்போது பி.சி.ஸ்ரீராம் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
நடந்தது என்ன?
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி 2024-2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இப்படியான நிலையில் முதல் நாளான நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது.
அவர் பேசுகையில், ”நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.மேலும் தமிழ்நாடு அரசு அளித்த ஆளுநர் உரையில் இருக்கும் கருத்துகளை உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்து அதனை படிக்காமல் புறக்கணித்தார். மேலும் சட்டப்பேரவையில் நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும்போதே பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சட்டப்பேரவையின் மாண்பை ஆளுநர் மீறிவிட்டதாக ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
ஆளுநர் மாளிகை விளக்கம்
அதில், “தமிழக அரசிடமிருந்து பெறப்பட்ட ஆளுநரின் உரையில் உண்மைக்கு அப்பாற்பட்ட தவறான கருத்துகள் இருந்தது. ஆளுநரின் உரை அரசாங்கத்தின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு மன்றமாக இருக்கக்கூடாது. இதனால் உரையை படிக்க இயலாது என கூறினார்.
#RNRavi Sorry sir your behavior is not acceptable. Why do Governors in non Bjp ruled states behave like spoilt brats.
— pcsreeramISC (@pcsreeram) February 12, 2024சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி ஆளுநர் தேசிய கீதத்திற்காக எழுந்தார். ஆனால் சபாநாயகர் நாதுராம் கோட்சே போன்றோரை ஆளுநர் பின்பற்றுவதாக கூறினார். இதனால் ஆளுநர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்” என தெரிவிக்கப்பட்டது.
பி.சி.ஸ்ரீராம் வெளியிட்ட பதிவு
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆளுநர் ஆர்.என்.ரவி சார் மன்னிக்கவும். நீங்கள் நடந்து கொண்ட விதம் ஏற்கத்தக்கது அல்ல. ஏன் பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும் காண

Kelvin Kiptum: கார் விபத்தில் உயிரிழந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

மாரத்தான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஓட்டப்பந்தய வீரர் கெல்வின் கார் விபத்தில் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவைச் சேர்ந்த கெல்வின் கிப்தும் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பிரபலமான வீரராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் நடந்த சிகாகோ மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். சுமார் 42.19 கிலோ மீட்டர் கொண்ட பந்தய தூரத்தை 2 மணி நேரம் 35 விநாடிகள் கடந்து உலக சாதனைப் படைத்தார் கெல்வின். அதுமட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற வலன்சியா மாரத்தான் போட்டி மற்றும் 2023 ஆம் ஆண்டு நடந்த லண்டன் மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்ற்று அவர் முதலிடம் பிடித்தார்.

இதனிடையே நடப்பாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு கெல்வின் கிப்தும் தயாராகி வந்தார். 24 வயதான இவர் இந்த ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த போட்டியில் பந்தய இலக்கை 2 மணி நேரத்தில் கடக்க தேவையான பயிற்சிகளையும் கெல்வின் எடுத்து வந்தார். இந்த நிலையில் மேற்கு கென்யாவில் நேற்று முன்தினம் இரவு பயிற்சி முடித்து விட்டு வழக்கம்போல மாரத்தான் வீரர் கெல்வின் கிப்தும் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் பயிற்சியாளர் ருவாண்டாவைச் சேர்ந்த கெர்வாஸ் ஹகிசிமானா மற்றும் இளம்பெண் ஒருவர் இருந்துள்ளனர்.

3 பேரும் காரில் இருந்த நிலையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விபத்தை தவிர்க்க கெல்வின் முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. சாலையில் இருந்து விலகிய கார் அருகிலிருந்த கால்வாய்க்குள் இறங்கி பின் அங்கிருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சின்னபின்னமாக நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே மாரத்தான் வீரர் கெல்வின் மற்றும் பயிற்சியாளர் கெர்வாஸ் இருவரும் உயிரிழந்தார்கள். இளம்பெண் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலக சாதனைப் படைத்த மாரத்தான் வீரர் கெல்வின் கிப்துமின் மரண செய்தி ஒட்டுமொத்த கென்யா மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூடோ, உலக தடகள சங்கத் தலைவர் செபாஸ்டியன் கோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் உலகளவில் விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்களும் கெல்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவேஷ் கானை நீக்கியது ஏன்? ஆகாஷ் சோப்ரா கேள்வி!

7 am headlines today 2024 13th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு:
தமிழக சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி; உண்மைக்கு புறம்பாக இருந்ததாக குற்றச்சாட்டு
சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகனின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து மீட்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பேருந்து நிலையத்தில் வசதிகளை காண்பிக்கிறோம்; கிளாம்பாக்கத்துக்கு இபிஎஸ் வர தயாரா..? அமைச்சர் சிவசங்கர் சவால்
குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு உறுதி
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி – விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக உள்ளன, என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.
பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்புஇந்தியா:
பீகாரில் அந்த மாநில சபாநாயகருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 129 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் நிதிஷ்குமார் அரசு வெற்றி
விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் நோக்கில் டெல்லியில் வரும் மார்ச் 12ம் தேதி வரை கும்பலாக சேருவதற்கு தடை விதிக்கும் விதமாக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பணிப்பரிவர்த்தனைக்கான யுபிஐ சேவை, தற்போது எந்தெந்த நாடுகளில் செயல்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முள்வேலி அமைத்து தடுக்க போலீஸ் முயற்சி; டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணி – விவசாய சங்க முக்கிய தலைவர்கள் கைது
கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் 8 கடற்படை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.உலகம்:
பிரதமர் மோடி இன்று அமீரகத்திற்கு பயணம்: அபுதாபியில் இந்து கோயிலை திறந்து வைக்கிறார்.
புதிய நாடாளுமன்றத்தில் இரு பொறுப்பான எதிர்க்கட்சியாக பி.டி.ஐ. செயல்படும் என இம்ரான் கட்சி அறிவித்துள்ளது.
பணய கைதிகள் மீட்பின்போது இஸ்ரேல் தாக்குதல் – 50 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு.
அமெரிக்காவின் உள்ள சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மடகாஸ்கர் நாடாளுமன்றம்.விளையாட்டு:
சென்னையில் நடைபெற்ற ரஞ்சிக் கிரிக்கெட்டில் தமிழ்நாடு கர்நாடகா அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்துள்ளது.
இந்தியா அணி வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவருமான செளரப் திவாரி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
டி20 சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் உலக சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார்.Published at : 13 Feb 2024 07:05 AM (IST)
மேலும் காண

Actor Ajith Kumar is saddened by the death of his friend Vetri Duraisamy | Vetri Duraisamy: வெற்றி துரைசாமி மரணம்.. நண்பர் மறைவால் சோகத்தில் அஜித்
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவால் நடிகர் அஜித்குமார் மிகுந்த சோகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சியும் முன்னாள் மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சைதை துரைசாமி. தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவி செய்வது என எண்ணற்ற செயல்கள் மூலம் அப்பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது ஒரே மகனான வெற்றி இளம் தொழில் முனைவோராகவும், வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும் இருந்தார். அதேசமயம் வெற்றிக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது.
இப்படியான நிலையில் இவர் தனது புதிய படம் தொடர்பான பணிக்காக இமாச்சலபிரதேசம் சென்றிருந்தார். உடன் நண்பர் கோபிநாத் சென்றிருந்த நிலையில் கடந்த வாரம் உள்ளூர் ஓட்டுநர் டென்ஜின் என்பவரது காரில் இருவரும் பயணம் மேற்கொண்டனர். அப்போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே கார் கட்டுப்பாட்டை இழந்து கின்னவுர் பகுதியில் ஓடும் சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் டென்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பின் தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று வெற்றி துரைசாமி உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைத்தளத்தில் #RIPVetriDuraisamy என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ள நிலையில், அதில் மனிதநேய அறக்கட்டளையில் படித்து இன்றைக்கு சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பலரும் வெற்றி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், சைதை துரைசாமிக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் வெற்றியின் மறைவால் நடிகர் அஜித்குமார் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு வெற்றி துரைசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதேசமயம் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி எக்ஸ் வலைத்தளத்தில் வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வெற்றியின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அவருடன் அஜித் இருக்கும் போட்டோவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.மேலும் காண

Minister Udhayanidhi says Vijay Amritraj’s contributions to tennis and the society will leave an indelible mark in history | Minister Udhayanidhi: டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்த விஜய் அமிர்தராஜிற்கு பாராட்டு விழா
Minister Udhayanidhi – Vijay Amritraj: டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்த விஜய் அமிர்தராஜிற்கான பாராட்டு விழாவில், தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்:
அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள ஹால், 1955 முதல் செயல்பட்டு வருகிறது. இது டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற பங்களிப்பாளர்களை கவுரவிக்கிறது. இந்த ஹாலில் இடம்பெறுவது டென்னிஸ் வீரர்களுக்கு கிடைக்கும் பெரும் அங்கீகாரமாக கருதப்படுகிறது. அந்த வகையில், ஆடவர் இரட்டையர் அல்லது கலப்பு இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், மற்றொரு முன்னாள் இந்திய டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜ் ஆகியோர் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இந்த அங்கீகாரத்தை பெற்ற முதல் ஆசிய வீரர்கள் என்ற பெருமையை பெற்றனர். அதோடு, ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற 28வது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. முன்னதாக, இரண்டு கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற சீன வீராங்கனையான லீ நா, 2019ல் இந்த அங்கீகாரத்தை பெற்றார். அதாவது, சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற முதல் ஆசிய டென்னிஸ் பிரதிநிதி ஆனார்.
விஜய் அமிர்தராஜிற்கு பாராட்டு விழா:
இந்நிலையில், சென்னையை பூர்வீகமாக கொண்ட விஜய் அமிர்தராஜிற்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. சென்னையில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி, செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் டென்னிஸ் வீரர் ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசியவர்கள், விஜய் அமிர்தராஜ் உடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
Delighted to take part in the felicitation ceremony of Indian #Tennis ace and two-time Davis Cup finalist, Thiru @Vijay_Amritraj, on his induction into the International Tennis Hall of Fame. He stands as the first Indian alongside Leander Paes to receive this prestigious… pic.twitter.com/QeskMGHpbG
— Udhay (@Udhaystalin) February 12, 2024உதயநிதி பெருமிதம்:
நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்திய டென்னிஸ் வீரரும், இரண்டு முறை டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியாளருமான விஜய் அமிர்தராஜ், சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டதற்கான பாராட்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. லியாண்டர் பயஸுடன் இணைந்து இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். விஜய் அமிர்தராஜின் டென்னிஸ் மற்றும் சமூகத்தின் பங்களிப்புகள் வரலாற்றில் அழியாத முத்திரையை பதிக்கும். அவரது அசாதாரண சாதனைகளை கொண்டாடுவோம், அவருடைய பாரம்பரியம் சந்தேகத்திற்கு இடமின்றி வரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும்” என உதயநிதி பதிவிட்டுள்ளார்.மேலும் காண

petrol and diesel price chennai on February 13th 2024 know full details
Petrol Diesel Price Today, February 13: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 13ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 633வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்மேலும் காண

india player Saurabh Tiwary announces retirement from professional cricket Mumbai Indians
ஓய்வை அறிவித்த திவாரி:
செளரப் திவாரி தன்னுடைய 11 வது வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். கடந்த 2006-2007 ல் ரஞ்சி டிராபி சீசன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.பின்னர் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் விளையாடினார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு விளையாடினார். இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக செளரப் திவாரி அறிவித்துள்ளார்.
கடினமான முடிவு:
Saurabh Tiwari has announced his retirement from professional cricket. pic.twitter.com/k2KthN3Odz
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 12, 2024இது தொடர்பாக அவர் பேசுகையில், “எனது பள்ளிப்படிப்புக்கு முன்பே நான் தொடங்கிய இந்தப் பயணத்தில் இருந்து விடைபெறுவது கொஞ்சம் கடினமானது. ஆனால், இதற்கு இதுவே சரியான நேரம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம தேசிய அணி மற்றும் ஐபிஎல்லில் இல்லை என்றால், ஒரு இளைஞருக்கு மாநில அளவில் ஒரு இடத்தைக் கொடுப்பதற்காக நாம் அந்த இடத்தைன் காலி செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். இளைஞர்கள் நிறைய வாய்ப்பு இருக்கிறது. டெஸ்ட் அணியில் வாய்ப்புகள் அதிகம் அதனால் இந்த முடிவை எடுக்கிறேன். எனது ஆட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இதை முடிவு செய்தேன்.
ரஞ்சி போட்டியிலும் கடந்த உள்நாட்டு சீசனிலும் எனது சாதனையை நீங்கள் பார்க்கலாம். நான் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்று எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், இப்போதைக்கு எனக்கு கிரிக்கெட் என்று ஒன்று மட்டுமே தெரியும். எனக்கு தெரிந்த ஒரே விஷயம் அதனால் நான் விளையாட்டில் எப்போதும் இணைந்திருப்பேன். அரசியலில் இருந்தும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆனால் நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
மும்பை அணியில் விளையாடினார்:
முன்னதாக செளரப் திவாரி இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 49 ரன்கள் எடுத்திருக்கிறார். அதேபோல், 17 ஆண்டுகளில் 115 முதல் தர போட்டிகளில் விளையாடி 189 இன்னிங்ஸ்களில் 22 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் உட்பட 47.51 சராசரியில் 8030 ரன்கள் குவித்திருக்கிறார். ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய போது 419 ரன்கள் எடுத்திருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்… இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!
மேலும் படிக்க: IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி…கே.எல்.ராகுல் விலகல்?
மேலும் காண

Bollywood Star Ranveer Singh Collaborates With Johnny Sins Ad To Promote Mens Health Brand Internet Reacts | Ranveer Singh: என்ன இப்படி இறங்கிட்டாரு
Ranveer Singh: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஆபாசப்பட நடிகர் ஜானி சின்சுடன் இணைந்து நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்கள் சிலர் அழகுசாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் ரன்வீர் சிங் நடித்த விளம்பர வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பாலிவுட் ஸ்டாரான ரன்வீர் சிங், ஆபாசப்பட நடிகர் ஜானி சின்ஸ் இணைந்து ஆண்களுக்கு உதவும் வகையிலான பாலியல் ஆரோக்கியம் பற்றிய விளம்பரத்தில் நடித்துள்ளனர்.
சீரியல் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில் கணவருடன் சரியான உறவு இல்லாத மனைவி வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த மனைவியின் கணவராக ஆபாசப்பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்துள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணை ரன்வீர் சிங் தடுத்து நிறுத்தும்போது, அவரது மாமியார் அடிக்கிறார். இப்படி காமெடியாக ஆண்களுக்கு உதவக்கூடிய விளம்பரத்தில் ரன்பீர் சிங் நடித்திருப்பது நெட்டிசன்ஸை கிண்டலடிக்க வைத்துள்ளது. ஆபாசப்பட நடிகரை இந்திய விளம்பரத்தில் பார்த்த நெட்டிசன்ஸ் வாயடைத்துப் போனதுடன், விளம்பரத்திற்கு இப்படி ஒரு ஐடியாவை கொடுத்த அந்த இயக்குநர் யார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு சிலர் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, ரன்வீர் சிங்குடன் ஆபாசப்பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்துள்ளதை கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்றும், பாலிவுட்டில் சரியான ஆளை தான் அழைத்து வந்துள்ளனர் எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து வந்தாலும், திரைப்படங்களைக் காட்டிலும் விளம்பரங்களில் நடிப்பதிலேயே ரன்வீர் சிங் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். முன்னதாக ஆணுறை தொடர்பான விளம்பரங்களில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். தொடர்ந்து 2022ம் ஆண்டு நிர்வாண போட்டோஷூட் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ரன்வீர் சிங், தீபிகா படுகோனை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது பாலுறவு தொடர்பான விளம்பரத்தில் நடித்துள்ள ரன்வீர் சிங் மீண்டும் டிரெண்டாகி வருகிறார்.
மேலும் காண

Director Nagaraj says he miss an opportunity to make a film with vijay because of his addiction to drinking
தமிழ் சினிமாவில் ஒன்று இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தவுடன் பிரபலமாகிவிட்ட இயக்குநர்கள் என ஒரு சில இருப்பார்கள். அப்படி 1998ஆம் ஆண்டு முரளி, சுவலட்சுமி, மணிவண்ணன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ‘தினந்தோறும்’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் நாகராஜ். அப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால் அவரை அனைவரும் ‘தினந்தோறும்’ நாகராஜ் என்றே அழைத்தனர். அப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களுக்கு வசனங்களை நாகராஜ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இயக்குநர் நாகராஜ் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டபோது தனது திரைப் பயணத்தில் அவர் தவறவிட்ட அற்புதமான வாய்ப்பு குறித்து மனவேதனையுடன் பேசி இருந்தார். மிகவும் திறமையான ஒரு இயக்குநராக இருந்த போதிலும் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த காரணத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் பலரும் வாய்ப்பு கொடுக்க மறுத்துள்ளனர்.
சினிமாவில் ஜெயிக்காமல் தோற்றுப் போய் இருந்தால் வலி இருந்து இருக்காது. ஆனால் ஒரு நூறு நாள் ஓடும் வெற்றிப்படம் ஒன்றை கொடுத்த பின்னர் ஒண்ணுமே இல்லாமல் போனவர் இயக்குநர் நாகராஜ். அந்த மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிட்டது.
அப்படி ஒரு சம்பவம் பற்றி இயக்குநர் நாகராஜ் கூறுகையில் “எஸ்.ஏ. சந்திரசேகர் ஆஃபீஸூக்கு வரச்சொல்லி நடிகர் விஜய் என்னிடம் கதை கேட்டார். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்து போனதால், உடனடியாக கால்ஷீட் டேட்ஸ் கொடுத்து அடுத்த நாள் அக்ரிமெண்ட் போட வரச்சொல்லி இருந்தார்.
அடுத்து நாள் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆபீஸுக்கு அதே தப்பை பண்ணிட்டு போய் நின்னேன். ஒரு இயக்குநர் இப்படி போய் நின்னா யார் தான் வாய்ப்பு குடுப்பாங்க. அப்பவும் இப்ப என்ன தப்பு பண்ணிட்டேன் என நான் கேட்கிறேன். குடிச்சு இருந்தாலும் நான் நல்லா படம் பண்ணுவேன் அப்படினு விவாதம் பண்ணேன். எஸ்.ஏ.சி சாருக்கு பிடிக்காததால முடியாதுன்னு சொல்லிட்டார்.
இதனால் விஜய்யை வைச்சு படம் பண்ற நல்ல வாய்ப்பை இழந்துட்டேன். எல்லாரும் சொல்வாங்க, குடிச்சு இருந்தா நிறைய சீன் வரும். குடிச்சா சீன் எல்லாம் வராது, வியாதி தான் வரும். சீனை தவிர பிபி, சுகர் என மத்ததெல்லாம் தான் வரும். பிராக்டிகலா சொல்லனும்னா அந்தத் தீய பழக்கத்திற்கு உள்ள வரைக்கும் போயிட்டு வந்தவன் நான். ஹெல்த் நல்லா இல்லைனா எதுவுமே பண்ண முடியாது” என்று பேசிள்ளார் இயக்குநர் நாகராஜ்.
“குடிப்பழக்கத்தால் என்னுடைய வாழ்க்கை, குடும்பம், நண்பர்கள், நம்மை சார்ந்து இருந்தவர்கள் எல்லாரையும் இழந்துவிட்டேன். நான் இப்படி போயிட்டனே என ஆத்மார்த்தமாக என்னை நல்வழிப்படுத்த நிறைய பேர் இருந்தார்கள். நான் இன்று இந்த நிலைக்கு திரும்பி வந்துள்ளேன் என்றால் அதற்கு நிறைய பேருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்” எனப் பேசியுள்ளார் இயக்குநர் நாகராஜ்.
மேலும் காண

India vs England Test Aakash Chopra raises questions Avesh Khan exclusion
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தரம்ஷாலாவில் தொடங்குகிறது. இச்சூழலில், கடைசி மூன்று தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அவேஷ் கான் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
அவேஷ்கானை நீக்கியது ஏன்?
இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்து நடைபெறவுள்ள மூன்று போட்டிகளுக்கு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே அவேஷ் கான் எங்கு சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விசாகப்பட்டிணத்தில் முழு முயற்சியுடன் அவர் பயிற்சி எடுத்து பந்து வீசுவதை நான் நேரடியாக பார்த்தேன். இப்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான பட்டியலில் அவேஷ் கான் பெயர் இடம்பெறவில்லை.
இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நெட்ஸில் ஆகாஷ் தீப் பந்துவீசியதால் டீம் மேனேஜ்மென்ட் அவரை மிகவும் விரும்பி உள்ளது.அவர் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே அவர் அணியில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்க கூடியது தான். ஆனால் அவேஷ் கான் எந்த தவறும் செய்யவில்லை. இப்படி இருக்கையில் அவருக்கான தகுதியை நிரூபிக்க நியாயமான வாய்ப்புகள் வழங்காமல் கைவிடுவது தேர்வு நடைமுறைகளின் நேர்மையை கேள்வி எழுப்புவதாக உள்ளது.” என்று பேசியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
தொடர்ந்து பேசிய அவர், “ஜஸ்ப்ரித் பும்ரா இருக்கிறார். அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் நன்றாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அதேநேரம் ராஞ்சியில் நடக்கும் நான்காவது ஆட்டத்தை தவறவிட்டாலும் தர்மசாலாவில் நடைபெறும் ஐந்தாவது போட்டியில் பும்ரா விளையாடுவார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகளை பொறுத்தே இது அமையும்” என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Akash Deep: இந்திய அணிக்கு தேர்வானது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை – வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ்தீப் ஓபன் டாக்
மேலும் படிக்க: Shreyas Iyer:இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்… ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம்…காரணம் என்ன?மேலும் காண