Dravida Munnetra Kazhagam led by C.N.Annadurai won the elections and came to power on this day | 1967ம் ஆண்டு இதே நாள்! தமிழ்நாட்டில் திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள்


பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 1967ம் ஆண்டு இதே நாளில்  முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியாக தேர்தலில் வென்று ஆட்சியமைத்தது. 

மார்ச் 6! இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த… pic.twitter.com/Svhmb5K9Vf
— M.K.Stalin (@mkstalin) March 6, 2024

இதுகுறித்து தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மார்ச் 6! 
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!
பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!
அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #INDIA-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது. 
மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம்!”என குறிப்பிட்டுள்ளார். 
 
 

மேலும் காண

Source link