Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal
-

வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் நடைபெறலாம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தூண்டுதலின் பேரில் சில பிற அரசியல் கட்சிகள், வாக்கு எண்ணும் மையங்களில் இடையூறுகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன என்று கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகள் வாக்குச்சாவடிகள், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்…
-

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…
பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அதிகாரப் பங்கு மற்றும் கூட்டணி ஆட்சி குறித்து தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த…
-

வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…
தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்ததாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது… நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அதே நேரத்தில், 2015 – 2016ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரியை விஜய் தாக்கல் செய்திருந்தார். அந்த கணக்கில் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் வருமானம்…
-

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்… அதிரடி தீர்ப்பு… ஆட்சியாளர்கள் அதிர்ச்சி…
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் கடந்த சில மாதங்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்நிலையில், கார்த்திகை தீபம் அன்று, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒரு தரப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி…
-

லேப்டாப் கொடுத்து, மாணவர்களிடம் ஓட்டு கேட்டாரா முதல்வர்? குவியும் கமெண்டுகள்…
முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்கி வாழ்த்தியதை, ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ததாக பலரும், கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக அரசு, லேப்டாப் கொடுக்காமல் இருந்துவிட்டு, தற்போது தேர்தல் வருவதால் இலவச லேப்டாப் வழங்குவதாக பல்வேறு கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில், விமர்சனங்களை பொருட்படுத்தாத தமிழக அரசு, மாணவர்கள் பயன்பெறுவதற்காக, 10 லட்சம் தரமான லேப்டாப்களை வழங்க ஏற்பாடு செய்தது. திட்டமிட்டபடி, தரமான லேப்டாப்கள் தயாரானதும், மாணவர்களுக்கு…
-

திருச்சியில் அமித்ஷா செய்த செயலால் நெகிழ்ந்த பாஜகவினர்… அதிர்ந்த திராவிட கட்சினர்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருச்சியில் பாஜக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய மகளிரணித் தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பாஜக சார்பில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில், அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு…
-

எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது… பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்…
எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என்று பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். சென்னை பெரம்பூரில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது… இரண்டு நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நெல்லையில் நம்முடைய அருமை சகோதரர் இனிகோ அவர்கள் நடத்திய மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற மகிழ்ச்சியை இரண்டு மடங்காக ஆக்கும் வகையில் கழக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மூலமாக தம்பி சுபேர்கான் அவர்கள்…
-

தமிழ்நாடு அரசின் தேர்வில் தமிழ் நீக்கமா? அண்ணாமலை கண்டனம்…
தமிழக சீருடை பணியாளர் வாரியம் 21.12.2025 அன்று நடத்திய சார்பு ஆய்வாளர் (SI) முதன்மைத் தேர்வுக்கான கேள்வித் தாளில், தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவுது: பொதுவாக, சீருடை வாரியம் நடத்தும் இந்த முதன்மைத் தேர்வு, பகுதி 1 – 80 பொது அறிவு கேள்விகளும், பகுதி 2 – 60 கேள்விகளில், மாணவர்களின் மொழி…
-

VBGRAMG-யால் 125 நாட்கள் வேலையா? பச்சை பொய் கூறுகிறார் ஈபிஎஸ் – முதல்வர் ஸ்டாலின் காட்டம்
VBGRAMG-யால் 125 நாட்கள் வேலையா? பச்சை பொய் கூறுகிறார் ஈபிஎஸ் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது… VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா? MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி. ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க.…
-

பாமக வட்டச் செயலாளருக்கு அரிவாள் வெட்டு – கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்
கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு: தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது வடசென்னை தண்டையார்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமக்கு சொந்தமான தானியில் 5 பேர் கஞ்சா அடித்துக் கொண்டிருந்ததை தட்டிக் கேட்ட இராஜ்குமார் என்பவரை கஞ்சா போதையிலிருந்த ஐவரும் தங்களிடமிருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இராஜ்குமார் உயிருக்கு…
-

செவிலியர்கள் கைது செய்து இப்படி செய்வதா? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
சென்னை சிவானந்தா சாலையில் போராடிய செவிலியர்களை கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கத்தில் விடப்பட்டதற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது… பணி நிரந்தரம் கோரி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய சுமார் 1,500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை, மாலையில் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது திமுக அரசு. இதனால், அதிகாலை நான்கு மணி வரை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்,…
-

குற்ற வழக்குகளை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் – 2 போலீசாருக்கு 5 ஆண்டு சிறை
குற்ற வழக்குகளை முடித்து வைக்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர், ஏட்டு ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அணாநகர் நடுவன்கரை பகுதியை சேர்ந்தவர் அபினேஷ்பாபு. இவர் மீது, சொத்து பிரச்சினை சம்பந்தமாக கடந்த 2008-ம் ஆண்டு, 2 குற்ற வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சிவில் பிரச்சினை எனக்கூறி முடித்து…
-

அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் அதிரடி வழக்கு!
“Where the Game Is Real” – Your Essential Guide to Online Gaming Let’s be real, the online gaming world is a jungle, and 99% of the sites out there are just a joke. It’s tough as nails to find a place that’s fair, pays out properly, and doesn’t give you a massive headache. After testing…
-

திமுகவின் துரோகத்தை சுட்டிக்காட்டினால் அச்சுறுத்துவதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும்; காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இன்று அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மீது ஊதியம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.…
-

தலையை எடுப்பேன் என்றவரை கைது செய்யாததுதான் திராவிட மாடலா? – அன்புமணி கேள்வி
தலையை எடுப்பேன் என்று மேடையில் பேசிவரை 3 நாட்களாகியும் கைது செய்யாததுதான் திராவிட மாடலா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கடலூர் மஞ்சக்குப்பம் பிரச்சினையை குறிப்பிட்டு பேசினார். குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் பாமகவை சேர்ந்த இளைஞரை கொடூரமாக தாக்கியதாகவும், அவருக்கு ஆறுதல் கூற சென்ற பாமக மாவட்டச் செயலாளர் வன்னியர் சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் விமர்சித்துள்ளார். 10 பேர் மீது வன்கொடுமை…
-

ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் கூறிய முக்கிய அறிவிப்பு…
திமுக விசிக இடையே எந்த விரிசலும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் வெற்றி அடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த உள்ள நிலையில், இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து பரப்புரையை மேற்கொண்டு…
-

ஆவின் ஆலையில் பணிபுரிந்த பெண் ஊழியர் மரணம்… எடப்பாடி பழனிசாமி கண்டனம்…
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவின் ஆலையில் பணிபுரிந்த பெண் ஊழியர் மரணத்துக்கு, ஆலையில் முறையான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தராததே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாராணி என்ற பெண் ஊழியர், கன்வேயர் பெல்டில் துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த உமாராணியின்…
-

3,500 சாலை பணியாளர்கள் பணி இழக்கும் ஆபத்து.. எச்சரித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தால் 3,500 சாலை பணியாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தமிழ்நாடு சாலை பணியாளர் சங்கம் எச்சரித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கப் பொதுச் செயலாளர் அம்சராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க கூடாது, இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உட்பட…
-

முதல்வர் ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்கா பயணம்… இவ்வளவு நன்மையா?
உலக முதலீடுகளை ஈட்டுவதற்கு வரும் 27ஆம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை திரும்பும் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான் பிரான்சிஸ் கோ, சிக்காகோ உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உலகம் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேச உள்ளார் சென்னையில் இருந்து 27-ம் தேதி அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், 28ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார். 28ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 2 தேதி…
-

வெஜ் ரைஸ்க்கு ஊறுகாய் கேட்ட இளைஞர்… சரமாரியாக தாக்கிய உணவக ஊழியர்கள்…
காஞ்சிபுரத்தில் வெஜ் ரைஸ் சாப்பிட ஊறுகாய் கேட்ட இளைஞரை, உணவக ஊழியர்கள் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரம் பல்லவன் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். துக்க நிகழ்ச்சிக்காக சென்ற இவர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முனியாண்டி விலாஸ்க்கு சாப்பிட சென்றார். வெஜ் ரைஸ் ஆர்டர் கொடுத்து வாங்கி சாப்பிட்டபோது, வெஜ் ரைஸ் சரியாக இல்லை என கூறி தொட்டுக்கொள்ள ஊறுகாய் கேட்டுள்ளார். ஆனால், உணவக…
-

ஒரே நாளில் 3 படுகொலைகள்… பதவி விலக வலியுறுத்தும் அன்புமணி ராமதாஸ்…
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ள நிலையில், சட்டம் ஒழங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. கடலூர் நகர அதிமுக வட்ட செயலாளரான பத்மநாதன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பணாம்பாக்கம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்…
-

முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள்… அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு..
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் தவறாக வழிநடத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, திருவான்மியூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு உள்ள ஆபத்து, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எடுத்து கூறினார்.…
-

துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி… திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு…
திமுகவில் பல சீனியர் அமைச்சர்கள் உள்ளதாகவும், அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் வேண்டாம் என்பாரா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொத்தம்பட்டி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, அதிமுக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர்…
-

அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? அண்ணாமலைக்கு தோன்றிய எண்ணம்… பரபரப்புத் தகவல்
சில சமயங்களில் அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா? என்ற எண்ணம் தனது மனதில் எழுந்தது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜகவுக்காக பணியாற்றிய பிப்புல்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பு, வாய்ஸ் ஆப் கோவை என மாற்றப்பட்டுள்ளது. அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் Modi 3.0 என்ற நிகழ்வு தன்னார்வலர்களுக்காக நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ…
-

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்… மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை…
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் விசிக கட்சி கொடியை அவர் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக கூறினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, டெல்லி ஜந்தர்…
-

ஆளுநருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு… எதற்காக தெரியுமா?
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென அவரை சந்தித்து பேசியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், 5 நாள் பயணமாக டெல்லி சென்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்தார். அவரை நேற்று மாலை திடீரென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். மாலை 6.30மணியளவில்…
-

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் கபாலீஸவரர் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பின், ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள மூத்த குடிமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். அந்த வகையில், முதலில் 200 பேர் தமிழ்நாட்டைச் சார்ந்த மக்கள் ராமேஸ்வரத்திலிருந்து காசி செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாகவும், தற்போது, 300 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுவரை…
-

மின் கட்டண உயர்வைக் கண்டித்து முதல் ஆளாய் போராடிய அன்புமணி ராமதாஸ்…
தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிர்வாகிகள், பொதுமக்கள், வணிகர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மின் கட்டண உயர்வைக் கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். உயர்த்தப்பட்ட மின் கட்டண அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும், மின்சாரத்துறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, அதன்மூலம் மின்வாரிய கடன்களை அடைக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்…
-

தண்ணீர் தரமாட்டோம் என்ற கர்நாடகா… இப்போ அறிவிப்பின்றி தண்ணீர் திறக்கிறது…
தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது கனமழை காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து 62,000 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்துவிட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கபினி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. அந்த அணையின் மொத்த கொள்ளளவான 19.52 டிஎம்சியில் தற்பொழுது 17.05 டிஎம்சியாக நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 49,334 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 61,200 கன அடியாகவும்…
-

கடலூர் 3 கொலையில் முடிவுக்கு வந்தது குழப்பம்… கைதானவர்கள் அளித்த வாக்குமூலம்…
கடலூரில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தாய் தற்கொலைக்கு சுதன் குமார் தான் காரணம் என்பதால் குடும்பத்துடன் கொலை செய்தேன் என்று கைது செய்யப்பட்ட சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். கடலூர் காராமணி குப்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐடி ஊழியரான சுதன் குமார், அவரது தாயார் கமலேஸ்வரி, அவருடைய மகன் நிஷாந்தன் ஆகிய மூன்று பேர் கொலை…
-

சவுக்கு சங்கருக்கு கிடைத்தது இடைக்கால ஜாமின்… ஆனால் சந்தோசப்பட எதுவும் இல்லையாம்…
தடுப்பு காவல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டதற்கான காரணங்களை தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கி கூறப்பட்டது. ஆனால், சவுக்கு சங்கரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கும் நோக்கில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக, அவரது தாயார் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றமே விசாரிக்க…
-

தமிழகம் பிற மாநிலங்களை விட பின்தங்கியுள்ளது… அறிக்கையை காட்டி அண்ணாமலை தகவல்…
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள, நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார். நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது அதன்மூலம் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக, ஆண் பெண் சமத்துவக் குறியீட்டில், 10 ஆவது இடத்திலும்,…
-

இங்கிலாந்தில் நடந்தது போல் இந்தியாவில் நடக்கும்… செல்வப்பெருந்தகை நம்பிக்கை…
இங்கிலாந்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் வந்துள்ளது போன்று, இந்தியாவிலும் 2029ல் ஆட்சி மாற்றம் வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரகால சட்டங்கள் முளைத்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். யாராவது தங்களது கருத்துகளை கூறினால், அவர்கள் மீது தாக்குதல் என பாசிச ஆட்சி நடந்து வருவதாக குற்றம் சாட்டினார். முழுமையான மோடி ஆட்சி என்பது போய் என்ற செல்வபெருந்தகை,…
-

மின் கட்டண உயர்வின் அவசியம் இதுதான்… இதை பார்த்தால் நீங்களே புரிஞ்சுப்பீங்க…
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துள்ள வருகின்றனர். இந்நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், எதற்காக மின் கட்டண உயர்வு அவசியம் என்று விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பு, கடந்த 10 ஆண்டுகளில், ரூ.94.312 கோடி மேலும்…
-

சீமானை பற்றி விஜயலட்சுமி பேசியதை வெளியிடுவோம்… சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை…
கருணாநிதி பற்றி தரக்குறைவாக பேசுவது தொடர்ந்தால், சீமானை பற்றி நடிகை விஜயலட்சுமி பேசிய அனைத்தையும் வெளியிடுவோம் என்று சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறையில் திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் சுப.வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனநாயக நாட்டில் யாரைப்பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்றும், ஆனால் அது அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றார். ஆனால், எந்த ஒரு அரசியலும் இல்லாமல், கருணாநிதியைப் பற்றி சீமான் தரக்குறைவாக பேசியதும், பாட்டு…
-

சட்டம் ஒழுங்கு பிரச்சினை… தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திடீரென ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தமிழகத்தில் அடுத்தடுத்து படுகொலைகள், கூலிப்படைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதோடு, அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை, நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகி கொலை, கடலூரில் பாமக நிர்வாகியை வெட்டி கொல்ல முயற்சி என அடுத்தடுத்து சம்பவங்கள்…
-

நான் ரவுடியா? வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும்.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை எச்சரிக்கை..
தன்னை ரவுடி என்று கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதனை நிரூபிக்க முடியுமா என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சவால் விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு பதிலளித்தார். எல்லா கட்சித் தலைவர்களையும் அண்ணாமலை பிளாக்மெயில் செய்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், அருவருப்பான அரசியலில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தார். தன்னை ரவுடி என்று அண்ணாமலை கூறியிருப்பதாகவும்,…
-

அரசுகள் சரியாக வேலை செய்தால் ஈபிஎஸ் சிறைக்கு செல்வார்… புகழேந்தி ஆவேசம்…
மத்திய மாநில அரசுகள் கடமையை சரியாக செய்தால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வார் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, மிரட்டல்கள் உள்ள தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன் மூலம் இனி வரும் காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி குறித்து அன்புமணி ராமதாஸ், சீமான் பேசிய வீடியோக்களை காண்பித்த புகழேந்தி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஈபிஎஸ் சிலரோடு கூட்டு…
-

தமிழக அரசை எதிர்த்து முதல்முறையாக கேள்வி கேட்ட பா.ரஞ்சித்…
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். ஆம்ஸ்ட்ராங் இல்லாத இந்த வாழ்க்கையை, அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம்.…
-

மோசடி புகாரில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சருக்கு இப்படி ஒரு சிக்கலா? முழு விவரம்…
கரூரில் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இரண்டாவது முன்ஜாமின் மனுவையும் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, தனது ஆதரவாளர்களை வைத்து மிரட்டி, போலி ஆவணங்கள் மூலம் எழுதி பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட…
-

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது பழகுடியின சமுதாயத்தை சேர்ந்தவர்… செல்வ பெருந்தகை பகீர்…
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் காரணம் அல்ல, கொலைக்கு காரணம் பழிக்குப்பழி என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கொலை குறித்து பல்வேறு…
-

ஸ்டாலின் ஆட்சி கவிழ்ந்துவிடும்… திமுகவே இருக்காது… எச்சரித்த அன்புமணி ராமதாஸ்…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தால் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வடக்குச்சிபாளையம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறும் போது, இங்கு தேர்தல் அதிகாரியே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்று வேதனை…
-

புதுச்சேரி ஒப்பந்த பேருந்து ஓட்டுநர் நடத்துநருக்கு முதலமைச்சர் ரங்கசாமி கொடுத்த அதிர்ச்சி… முழு விவரம்…
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மாத சம்பளத்தை உயர்த்தி அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகமாக பிஆர்டிசி சார்பில் உள்ளூர், தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை 100 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் என 200 ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் இவர்களுக்கும் மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், விலைவாசி…
-

தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்…
வெளி மாநில ஆம்னி பேருந்துகளை இயக்குவதை தடுக்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளை தமிழ்நாடு பதிவெண்ணுக்கு மாற்ற வேண்டும் என்று அவகாசம் விதித்த தமிழ்நாடு அரசு, அவகாசம் முடிந்த பின்னர், பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது என் திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, தமிழ்நாட்டு பதிவெண்ணுக்கு…
-

டேட்டிங் ஆப் மூலம் சினிமாக்காரருக்கு நேர்ந்த கதி… சிறுவன் உட்பட 4 பேர் கைது…
ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நபர் வீட்டிற்கு சென்ற சினிமா சவுண்ட் இன்ஜினியரை மிரட்டி பணம் பறித்த புகாரில், ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கேகே நகர் ராஜ மன்னார் சாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். 56 வயதாகி திருமணமாகாத சுரேஷ், சினிமா துறையில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். Grindr என்ற டேட்டிங் ஆப் மூலமாக சுரேஷுக்கு ஆண் நபர் ஒருவர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர்…
-

கள்ளக்குறிச்சி சம்பவம்… முதல்வர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்… எல்.முருகன் வலியுறுத்தல்…
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவையும், காவல்துறையையும் கடுமையாக அவர் குற்றம்சாட்டினார். கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கரப்பு தினம் என்று தெரிவித்துள்ள எல்.முருகன், இந்த சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம், திமுக…
-

சென்னை வேளச்சேரியில் பரபரப்பு… மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை…
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் இருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் உள்ளது. இங்கு, காதல் ஜோடிகள், ஆண்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினர், மேம்பாலத்தில் நின்று பொழுதை கழிப்பது வழக்கம். இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் கீழ் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.…
-

பசிக்கு உதவிய மூதாட்டிக்கு நேர்ந்த கதி… வீட்டுக்குள் புகுந்து 2 பேர் செய்த அதிர்ச்சியூட்டும் செயல்… கடைசியில் நடந்தது?
சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம், பசிக்கு உணவு கேட்பது போல் நாடகமாடி, நகையை பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மேற்கு மாம்பலம் மகாதேவன் தெருவை சேர்ந்தவர் பத்மாவதி. 76 வயதான இவர், கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7ஆம்எ தேதி மதியம் மூதாட்டி பத்மாவதி வீட்டில் தனியாக இருந்த போது, 2 பேர் பேசியுள்ளனர். மூதாட்டியிடம் பசிக்கிறது,…
-

அடேங்கப்பா… நீலகிரியில் இவ்வளவு பறவை இனங்களா இருக்கிறது… இது தெரியாம போச்சே…
நீலகிரி வன பகுதியில் சுமார் 128 வகையான 5110 பறவைகள் இருப்பது, பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 120 வகைக்கும் மேற்பட்ட 1886 எண்ணிக்கையிலான பறவைகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு, பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி 2022 – 2023ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி, நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என…
-

தூத்துக்குடியில் பயங்கரம்… அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள்… விவரம் உள்ளே…
தூத்துக்கூடியில் நேற்று சனிக்கிழமை காலையில் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், இரவு மேலும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அண்ணா நகர்4-வது தெருவை சேர்ந்த ஈனமுத்து மகன் செந்தில் ஆறுமுகம் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் விசாரணை ஏற்கனவே இன்று அதிகாலை குமஸ்த்தா ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரவு ஒருவர் மீண்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில்…
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…