Category: இந்தியா
All national news including indian states
-

அரசு மருத்துவமனைகளின் அவலம்:சட்டசபையில் அமைச்சரை அலற விட்ட ஆளும்கட்சி பெண் எம்எல்ஏ – ACTPnews.com
பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரபல நாட்டுப்புறப் பாடகி மைத்லி தாக்கூர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்ஜேடி வேட்பாளரை 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்எல்ஏ ஆனார்.. 25 வயதே ஆன இவர், பீகார் சட்டப்பேரவையின் மிக இளவயது எம்எல்ஏ ஆவார். நாட்டுப்புறப் பாடகியான இவர், அரசியலில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனது தொகுதி மக்களின் நலனுக்காகவும், அடிப்படை வசதிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து…
-

அரசு நிகழ்ச்சி, பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் இனி கட்டாயம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு – ACTPnews.com
வந்தே மாதரம் பாடலில் உள்ள 6 பத்திகளையும் (3.10 நிமிடங்கள்) முழுமையாக பாட வேண்டும் என்றும், தேசியக் கொடி ஏற்றும்போதும், ஆளுநர் உரை மற்றும் ஜனாதிபதி உரை ஆகிய சமயங்களிலும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதமான ‘ஜன கண மண’ இசைக்கப்படுவதற்கு முன்பாகவே ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து…
-

திருமண விழாவில் துப்பாக்கியுடன் நடனமாடிய எம்எல்ஏ உதவியாளர்: போலீசார் தீவிர விசாரணை – ACTPnews.com
கர்நாடகா மாநில கல்புர்கி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எம்.ஒய்.பாட்டீல். இவரின் நெருங்கிய உதவியாளர் மதீன் படேல். இந்த மதீன் படேல் துப்பாக்கியை ஏந்தியபடி திருமணக் கொண்டாட்டம் ஒன்றில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக அவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அரசியல் ரீதியாக காங்கிரஸ் மீது பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதீன் படேல், ”என் சகோதரி மகளின்…
-

நீங்கள் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்,உங்களுக்கு வெட்கமாக இல்லையா?: மோடி மீது ராகுல்காந்தி அட்டாக் – ACTPnews.com
நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: “நாம் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள் நிறைந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு சீனா, ரஷியா மற்றும் பிற சக்திகள் சவால் விடுகின்றன. போர் சகாப்தம் முடிந்துவிட்டதாக பிரதமர் மோடியும், பாதுகாப்பு ஆலோசகரும் சில நாள்களுக்கு முன் தெரிவித்தார்கள். ஆனால், நாம் போர் சகாப்தத்துக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உக்ரைன், காஸா, மத்திய கிழக்குகளில் போர் நடைபெற்று வருகின்றன. ஈரானில் போர் அச்சுறுத்தல் இருக்கிறது. நாமும் ஆபரேஷன் சிந்தூரை சந்தித்தோம். …
-

பிரதமர் மோடி வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு தெரியுமா ? 2021-25 ஆண்டுகளில் ரூ.462 கோடி – ACTPnews.com
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவுகள் குறித்த அவ்வபோது செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதில், கடந்த 2021 முதல் 2025ம் என 5 ஆண்டுகளில் சுமார் ரூ.462 கோடி செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்துக்கு மட்டும் ரூ.74 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக சராசரியாக ஆண்டுக்கு ரூ.115 கோடி செலவிடப்படுகிறது என்றும் கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு…
-

“தேர்தலில் போட்டியிட ராகுல் காந்திக்கு வாழ்நாள் தடை” – நாடாளுமன்றத்தில் தீர்மானம் – ACTPnews.com
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்களில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக இந்தியாவின் வலிமையே மக்கள் தொகைதான். அமெரிக்காவிற்கு இந்தியர்களின் தரவுகள் முக்கியம். வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவை அமெரிக்காவிற்கு மோடி விற்றுவிட்டார். அமெரிக்காவிற்கு சமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தாமல், மோடி அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் ராகுல் காந்தியை, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அவர்…
-

இறந்த பாட்டிக்கு திதி கொடுக்க ஆமைக்கறி சமைத்த இளைஞர்கள்: அதிரடியாக கைது செய்த போலீஸ் – ACTPnews.com
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் சோமாவதி ஆறு உள்ளது. இந்தநிலையில், பெல்தங்கடி போலீசாருக்கு சோமா வதி ஆற்றில் சிலர் ஆமைகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆற்றின் கரையில் வாலிபர்கள் 4 பேர் ஆமைகளை கொன்று அவற்றை சமைத்து கொண்டிருப்பதை போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் அவர்கள்…
-

“ச்சீ கருமம் இப்படியா எல்லாமா பண்ணுவீங்க” மாமியாரை திருமணம் செய்த மருமகன் – ACTPnews.com
இருவரும் அங்குள்ள கோர்ட்டில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது திருமண சான்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் காணொலி சேஷசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கீழ் மோசமான கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநில கான்பூரில் சஞ்சய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருமகனும் மாமியாரும் சில வருடங்கள் காதலித்து வந்து இருக்கிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக மாமியாருடன் ரகசிய உறவில் இந்த மருமகன் இதற்கு மேல்…
-

டெல்லி ஏஐ மாநாட்டில் உணவு, குடிநீர் பற்றாக்குறை, பொருட்கள் திருட்டு: சீன ரோபோக்கள் என தொடரும் சர்ச்சை – ACTPnews.com
5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் குளறுபாடு ஏற்பட்டதால் கண்காட்சியாளர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் உணவு, குடிநீர் இன்றி தவித்தனர். பாதுகாப்பு காரணம் காட்டி சில நிறுவனங்கள் அவர்களின் ஏஐ தயாரிப்புகள் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெரும் செலவு செய்து வந்த அவர்கள் விரக்தியுடன் திரும்பினர். லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள்…
-

ஏலியன்கள் குறித்த ரகசிய கோப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன சீக்ரெட் – ACTPnews.com
ஏலியன்கள் (Aliens) அல்லது வேற்றுலகவாசிகள் என்பது பூமியைத் தவிர்த்து, பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள் முதல் மேம்பட்ட உயிரினங்கள் வரையிலான வேற்று கிரக வாழ்க்கையைக் குறிக்கிறது. இது குறித்து உறுதியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா போன்றோர் ஏலியன்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை உறுதி செய்துள்ளனர். NASA மற்றும் பிற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், குறிப்பாக K2-18b போன்ற வாழத்தகுந்த சூழல் கொண்ட கிரகங்களில் ஏலியன் உயிரினங்களுக்கான…
-

திருப்பதி கோயிலில் அன்னதானம் கூட தரமாக இல்லை?: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வேதனை – ACTPnews.com
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளை மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவச சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது. 1985-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், திருமலையில் மாதா புஷ்பாஞ்சலி மண்டபம், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் பல இடங்களில் காலை முதல் இரவு வரை தடங்கலின்றி, அன்னதானம் மற்றும் லட்டு பிரசாதத்தை வழங்கி வருகிறது. அன்னபிரசாதத்தில் ரசம், சாம்பார், கூட்டு, தயிர், இனிப்பு வகைகள் மற்றும் மசால் வடை பரிமாறப்படுகிறது.தினமும் சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான…
-

செல்ல நாயை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: அடிதடி,ரகளை,மண்டை உடைப்பு கலவரமான கல்யாண மண்டபம் – ACTPnews.com
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் காகா கோட்வாலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த புதன்கிழமை சுமித் கேஷர்வானி என்ற மணமகனுக்கும், அவரது காதலிக்கும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மணமகளின் குடும்பத்தினர் பிரயாக்ராஜிலிருந்து பதேபூருக்கு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வந்திருந்தனர். மணமகன் தரப்பு பாரம்பரிய திருமண ஊர்வலத்துடன் அந்த இடத்தை அடைந்தனர். மாலை மாற்றுதல் உள்ளிட்ட ஆரம்ப விழாக்கள் அமைதியாக நிறைவடைந்தன. அதிகாலை 4 மணியளவில், திருமண பீடத்தில் நகைகள் வழங்கும் சடங்குகள்…
-

“என்ன கருமம் டா இது” BSNL இயக்குநருக்கு உள்ளாடை, செருப்பு எடுத்து தர 50 அதிகாரிகள் நியமனம் – ACTPnews.com
பொதுதுறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லில் மூத்த இயக்குநராக பணியாற்றுபவர் விவேக் பன்சால். இவர் இன்றும், நாளை என இரு தினங்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அங்கு திரிவேணி சங்கத்தில் புனித நீராடுதல், கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் குடும்பத்துடன் பங்கேற்க இருந்தார். இதற்காக, பன்சாலின் பயண ஏற்பாடுகளை செய்து கவனிக்க 50 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 50 அதிகாரிகளுக்கு தலா 20 விதமான பொறுப்புகள் வழங்கப்பட்டு…
-

“மக்களே உஷாரா இருங்க” 215 மருந்துகளுக்கு தடை?: மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் வார்னிங் – ACTPnews.com
தரமற்ற மருந்துகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் அடிக்கடி மருந்தங்கள், மருந்து உற்பத்தி செய்யும் இடங்களில் சோதனை மேற்கொள்கின்றன. இந்த சோதனைகளின் போது தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால். அதனை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டுவாரியம் தடை விதித்து வருகிறது. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி,…
-

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுதலை: டெல்லி நீதிமன்றம் அதிரடி – ACTPnews.com
டெல்லியில் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தன. இந்த விவகாரத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் இன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுமார் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகச் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில்…
-

ஈரான்-இஸ்ரேல் போர் சென்னை விமான சேவை பாதிப்பு, இன்று 36 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி – ACTPnews.com
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மட்டுமில்லாது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகளை குறி வைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகள் தங்களது வான்வழி மற்றும் விமான நிலையங்களை மூடி உள்ளன. இதன் காரணமாக நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 2-வது நாளான நேற்று சென்னையில் இருந்து…
-

அரசு மருத்துவமனை அவலம்: பிணவறையில் வாலிபர் சடலத்தை சாப்பிட்ட நாய், தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம் – ACTPnews.com
தெலுங்கானா மாநிலம், மெகபூபா பாத் மாவட்டம், நாகசாலா பகுதியைச் சேர்ந்த பீமேஸ்வர் (32) என்ற லாரி ஓட்டுநர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். அவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றில் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசாரால் மீட்கப்பட்ட அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக ஜட்சர்லா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பீமேஸ்வரின் உடலை வைப்பதற்கு ஊழியர்கள் முறையான ஸ்ட்ரெச்சர் (Stretcher)…
-

“சோனமுத்தா மொத்தமா போச்சா” இந்தியாவில் இனி X தளத்தில் செக்ஸ் வீடியோக்கள், போட்டோ பார்க்க பதிவிட முடியாது – ACTPnews.com
அதிகளவு ‘எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 105.1 மில்லியன் அமெரிக்க மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.’எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் இந்தியா உள்ளது. சுமார் 23.1 மில்லியன் இந்திய மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரிமியம் மற்றும் பிரிமியம் பிளஸ் சந்தாதாரர்களுக்கு க்ரோக் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வசதி வழங்கப்படுகிறது. சிலர் எக்ஸ் தளத்தில்…
-

திருப்பதி கோவிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிக்பாஸ் நடிகைகளால் சர்ச்சை – ACTPnews.com
பிரபல நடிகைகள் தனுஜா, மாதுரி ஆகியோர் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்கள். இந்த இரு நடிகைகளும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானவர்கள். இரு நடிகைகளும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய இவர்கள் தனுஜாவின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேக பரவி பெரும் சர்ச்சையையும்…
-

மகளிர் தினத்தில் நள்ளிரவில் மத்திய அரசு கொடுத்த பரிசு: சமையல் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு – ACTPnews.com
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நள்ளிரவில் திடீரென ரூ.60 உயர்த்தி இல்லதரசிக்கு அதிர்ச்சியை…
-

“கிழவியை கூட விட்டு வைக்கலயாடா” 90 வயது மூதாட்டிக்கு நடந்த அவலம், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் – ACTPnews.com
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். தனியாக இருந்த மூதாட்டியை அவர்கள் நால்வரும் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் பின்னர் மூதாட்டியை கட்டிலுடன் கிணற்றில் வீச முயன்றனர். அப்போது, மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்…
-

கும்பமேளா புகழ் மோனலிசா முஸ்லிம் இளைஞருடன் திடீர் காதல் திருமணம் – ACTPnews.com
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்றது. 40 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளாவில் பாசிமணி விற்ற இளம்பெண் மோனலிசா ஒரே நாளில் வைரலானார். அவரது கண்களும், சிரிப்பும், முகத்தோற்றமும் பலரையும் கவர்ந்தது. ஒரு வீடியோவால் நாடுமுழுவதும் கவனிக்கப்பட்டார் மோனலிசா. ஆனால், அதேசமயம் அவரது அழகு ஆபத்தாகவும் மாறியது. பலரும் மோனலிசாவை தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர்.…
-

டெல்லி செங்கோட்டை மியூசியமில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொப்பி திருட்டு – ACTPnews.com
2019-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி ஜெயந்தி அன்று, சந்திரகுமார் போஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் நேதாஜியின் தொப்பி பிரதமர் மோடியிடம் நேரடியாக வழங்கப்பட்டது. பிரதமர் மோடி அந்தத் தொப்பியைப் பெற்றுக்கொண்டு, செங்கோட்டையில் உள்ள நேதாஜி மியூசியத்தின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்தார். சமீபத்தில் Open Platform for Netaji – OPN அமைப்பின் உறுப்பினர் வழக்கறிஞர் நவீன் பாமல் மியூசியத்திற்கு சென்றபோது, அந்தத் தொப்பி அங்கிருந்து காணாமல் போயிருப்பதைக்…
-

விமான சீட் இனி தனியாக கட்டணம் வசூலிக்கக்கூடாது: விமான போக்குவரத்து அமைச்சகம் – ACTPnews.com
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மூலம் அமைச்சகம் பின்வரும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது; நியாயமான அணுகலை உறுதி செய்வதற்காக, எந்தவொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும். ஒரே PNR-இல் பயணிக்கும் பயணிகள் ஒன்றாக, முன்னுரிமையாக அருகருகே உள்ள இருக்கைகளில் அமர வைக்கப்பட வேண்டும். விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகளை எடுத்துச் செல்வதற்கு, பொருந்தக்கூடிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, வெளிப்படையான மற்றும் பயணிகளுக்கு உகந்த முறையில் வசதி செய்து தரப்பட வேண்டும்.…
-

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு : 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலை இல்லை, ஆய்வில் அதிர்ச்சி தகவல் – ACTPnews.com
‘இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை’ குறித்து கா்நாடகத்தின் பெங்களூரைச் சோ்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வில் ஈடுபட்டது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 20 முதல் 29 வயதுக்குள்பட்ட 6.3 கோடி பட்டதாரிகளில், சுமாா் 1.1 கோடி போ் வேலையில்லாமல் இருப்பது தெரிய வந்தது.15 முதல் 25 வயது வரையிலான இளம் பட்டதாரிகள் இடையே வேலை வாய்ப்பின்மை 40 சதவீதமாகவும், 25 முதல் 29 வயது பிரிவினரிடையே 20 சதவீதமாகவும் உள்ளது. உயா்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு…
-

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு – ACTPnews.com
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சஞ்சய் குப்தா வெளியிட்டுள்ள விரிவான வழிகாட்டுதலின்படி, அனைத்து அரசு ஊழியர்களும் கண்ணியமான, சுத்தமான மற்றும் தொழில்முறை சார்ந்த ஃபார்மல் ஆடைகளை மென்மையான வண்ணங்களில் அணிய வேண்டும். அலுவலகத்தில் இருக்கும் போதோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகும் போதோ கேஷுவல் அல்லது பார்ட்டி உடைகளை அணியக் கூடாது. ஆண் ஊழியர்கள் காலர் வைத்த சட்டை மற்றும் பேன்ட் அணிய வேண்டும். ஷூ, செருப்பு போன்ற பொருத்தமான காலணிகளை அணிய வேண்டும். பெண் ஊழியர்கள் புடவை,…
-

ரூ.200 கோடி பங்களா கணக்கில் காட்டவில்லை: பாஜக தலைவர் வேட்புமனு நிராகரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல் – ACTPnews.com
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், பாஜக சார்பில் நேமம் தொகுதியில் போட்டியிட ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 93 கோடிக்கும் அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராஜீவ் சந்திரசேகருக்கு சுமார் ரூ. 107 கோடி அளவிலான கடன், அவரது மனைவிக்கு சுமார் ரூ. 1.62 கடனும்…
-

டெல்லி காங்கிரசு தலைமை அலுவலகத்தை காலி செய்ய மத்திய பாஜக அரசு நோட்டீஸ் – ACTPnews.com
1978 முதல் கடந்த 48 ஆண்டுகளாக டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் உள்ள பங்களா கட்டிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டு ஜனவரியில் ITO அருகே உள்ள ‘இந்திரா பவன்’ என்ற புதிய கட்டிடத்திற்கு காங்கிரஸ் தலைமையகம் மாற்றப்பட்டது. இருந்த போதிலும் அக்பர் சாலை அலுவலகத்தை காங்கிரசு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 1977 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து கட்சி உடைந்தபோது, இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்த ஜி.வெங்கடசாமி தனது இந்த…
-

மீண்டும் லாக்டவுன்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை – ACTPnews.com
ஈரான், அமெரிக்க போரின் காரணமாக உலகம் முழுவதும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது இந்நிலையில், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை…
-

“உஷாரா இருங்க யாரும் மிஸ் பண்ணிடாதீங்க” மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவக்கம் – ACTPnews.com
தமிழகத்தில் பொதுமக்கள் தங்களது சுய விபரங்களை, ஜூலை 17 முதல் 31ம் தேதி வரை பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்யலாம். வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பு, ஆக., 1 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில், சுய விபர பதிவு, மே 17 முதல் 31ம் தேதி வரையிலும், வீடு தேடி வரும் கணக்கெடுப்பு, ஜூன் 1 முதல் 30ம் தேதி வரையிலும் நடக்கிறது. இந்த கணக்கெடுப்பின் அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு மார்ச்…
-

ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் : கேரளா 33.30, புதுச்சேரி 37.06, அசாம் 38.98 சதவிகிதம் வாக்குபதிவு – ACTPnews.com
கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையாக நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். காலை முதலே பெண்கள், முதியோர், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகின்றனர். குறிப்பாக, முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் அதிக உற்சாகத்துடன் பங்கேற்று இந்த 3 மாநிலங்களிலும் பார்க்க முடிகிறது. …
-

போலி சான்றிதழ் சிக்கலில் கும்பமேளா பிரபலம்.. போக்சோ வழக்கில் சிக்கிய கணவர்! – ACTPnews.com
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே, கடந்த ஆண்டு கும்பமேளாவில் வைரலாகித் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார். இவர் முகமது ஃபர்மான் என்ற இளைஞரைக் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த மார்ச் 11-ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மோனலிசாவுக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவல்துறை அவர்களை ஒன்றாகச் செல்ல அனுமதித்தது. இந்நிலையில், தேசிய பழங்குடியினர் ஆணையம் நடத்திய அதிரடி விசாரணையில்…
-

“UPI transaction” இனி ரூ.10 ஆயிரம் மேல் பணம் அனுப்ப முடியாது? RBI முக்கிய முடிவு – ACTPnews.com
ரொக்க பணபரிவர்த்தனைக்கு பதிலாக ஆன்லைன் பண பரிவர்த்தனை நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு ஆப்கள் மூலம் UPI transaction என்பது தற்போது நடந்து வருகிறது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் பயன்பாடு என்பது படிபடியாக குறைந்து வருகிறது. என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும், அதற்கேற்ப முறைகேடுகளும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஆன்லைனில் பணமோசடி என்பதும் தினந்தோறும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஆன்லைன் பணமோசடியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும், அதனை தடுப்பது கடினமாக வருகிறது. இதன்…
-

2028 முதல் புதிய பெட்ரோல் டூ வீலர்களை பதிவு செய்ய தடை விதிப்பு – ACTPnews.com
டெல்லி அரசு மின் வாகன வரைவு கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2026-2030 -ஆம் ஆண்டுக்கான மின்சார வாகன (EV) கொள்கை வரைவானது பெட்ரோல் வாகனங்கள் மீதான காலவரையறை கட்டுப்பாடுகள், கடுமையான வாகனக் குழும விதிமுறைகள், மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான சலுகைகள் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன் உட்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் தலைநகர் மின்சாரப் போக்குவரத்திற்கு மாறுவதை விரைவுபடுத்துவதற்கான ஒரு விரிவான செயல் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. Draft EV Policy 2026-ன் கீழ், ஏப்ரல்…
-

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – ACTPnews.com
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனைப் பாம்பு கடித்த நிலையில், அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக ஒரு மாந்திரீகிடம் அழைத்துச் சென்றனர். அந்த மாந்திரீகர், சிறுவனை கங்கை நதியில் மிதக்க வைத்தால் விஷம் இறங்கிவிடும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய பெற்றோர், சிறுவனை நதியில் இறக்கி அமானூஷ்யமான செயலில் ஈடுபட்டனர். மாந்திரீகரின் அறிவுரைப்படி, மூங்கில் கழிகளால் செய்யப்பட்ட ஒரு மிதவையில் சிறுவனைக் கட்டி, சுமார் 12 மணி நேரம் கங்கை நதி…
-

கோடை விடுமுறை திருப்பதியில் குவியும் பக்தர்கள்: விஐபி, இலவச தரிசனம் ரத்து – ACTPnews.com
திருப்பதி தேவஸ்தானம் கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக கோடை காலத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் திருப்பதி சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் புள்ளி விவரத்தை சேகரித்து உள்ளனர். வி.ஐ.பி தரிசனத்திற்கு தினமும் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஒதுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் 3,800 பேர் மட்டுமே தரிசனம் செய்கின்றனர். அந்த 3 மணி…
-

பாஜக அமைச்சரை நடுரோட்டில் அக்ரோஷமாக கேள்வி கேட்டு அலற விட்ட வீரமங்கை – ACTPnews.com
மும்பையின் வொர்லி பகுதியில் ஆளும் மகாயுதி கூட்டணியைச் சேர்ந்த பாஜகவினர், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியைக் கண்டித்துப் பேரணி நடத்தினர். மத்திய அரசில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகளே காரணம் எனக் கூறி நடத்தப்பட்ட இந்தப் பேரணியால், வொர்லி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலை 5 மணிக்குத் தொடங்க வேண்டிய இந்தப் பேரணி தாமதமானதால், ஜம்போரி மைதானம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணிவகுத்து…
-

நாடு முழுவதும் 18,262 கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு – ACTPnews.com
கோடைக்கால விடுமுறை மற்றும் பயணிகளின் நெரிசலைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரையிலான உச்சக்கட்டப் பயணக் காலத்தில் மொத்தம் 18,262 சிறப்பு ரயில் பயணங்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தில், இதுவரை 11,878 பயணங்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரயில் சேவைகளும் பயணிகளின் தேவையைப் பொறுத்து தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. ரயில் பெட்டிகளின் இருப்பை அதிகரித்தல், பயண நேரத்தை மேம்படுத்துதல் மற்றும்…
-

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் – ACTPnews.com
மசூதிகளில் பெண்கள் நுழைய அனுமதி கோரி புனேவைச் சேர்ந்த யாஸ்மின் ஜுபெர் அகமது பீர்ஜாடே, அவரது கணவர் ஜுபெர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின் போது, ‘‘உண்மைத் தன்மையைத் தெளிவுபடுத்திக் கொள்ளக் கேட்கிறோம். மசூதிக்குள் இஸ்லாமிய பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்களா?’’ என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு…
-

அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு? – ACTPnews.com
நாக்பூரைச் சேர்ந்த ரோகித் லால் (29), புது டெல்லியில் உள்ள இந்தியத் தரக் கவுன்சிலில் பணியாற்றி வந்தார். குருகிராமில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வந்த இவர், நேற்று காலை தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் வழக்கமாக வேலைக்குச் செல்லும் சக ஊழியர், பலமுறை போன் செய்தும் ரோகித் எடுக்காததால் சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரோகித் தனது படுக்கையிலேயே உயிரிழந்து கிடப்பதைக்…
-

பானிபூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி: 18 பேர் கவலைக்கிடம் – ACTPnews.com
ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பஜ்டோ கிராமத்தில், சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் உட்பட 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இவர்களில் 18 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 6 வயது குழந்தை கிசிச்சை பலனின்றி உயிரிழ்துள்ளது. இந்த சம்பவம் குறித்து துணை ஆணையர் ராம்நிவாஸ் யாதவ் கூறுகையில், கெட்டுப்போன உணவு மற்றும் சாத்தியமான கலப்படம் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது தண்ணீர் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளன.…
-

இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு – ACTPnews.com
கேந்துஜார் மாவட்டத்தின் படனா வட்டாரத்தில் அமைந்துள்ள ‘ஒடிசா கிராமீன் வங்கி’யின் மாலிபோசி கிளையில் தியானாலி கிராமத்தை சேர்ந்த, பழங்குடியினத்தை சேர்ந்த ஜீத்து முண்டா என்பவரின் மூத்த சகோதரி கல்ரா முண்டா சுமார் 2 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது வங்கி கணக்கில் சுமார் 19,300 ரூபாய் இருந்துள்ளது.இந்த நிலையில் வேறு சட்டபூர்வ வாரிசுகள் எவரும் இல்லாத நிலையில், காலமான சகோதரி கல்ரா முண்டாவின் பெயரில் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கேட்டு குறிப்பிட்ட வங்கி கிளைக்கு…
-

மேற்கு வங்கம் 2-ம் கட்ட தேர்தல்: 11 மணி நிலவரப்படி 39.97% வாக்குப்பதிவு – ACTPnews.com
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர். மொத்தம் 41,001…
-

மே.வங்கம் வாக்குப்பதிவு நிறைவு : 2-ம் கட்ட தேர்தல் 90% மேல் வாக்குகள் பதிவு – ACTPnews.com
மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர். மொத்தம் 41,001 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரடி ஒளிபரப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இன்று வாக்குபதிவின் போது…
-

பெட்ரோல் ரூ.10, டீசல் ரூ.12.50 விலை உயர்வு? மத்திய அரசு அதிர்ச்சி தகவல் – ACTPnews.com
ஈரான் போருக்கு மத்தியில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துடன் இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய தினம் கூட கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், சில நாடுகளில் பெட்ரோல், டீசல் கடுமையாக விலை உயர்ந்தியுள்ளன. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின்…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
new usa online casinos no deposit bonuses, best payout Can I Self Exclude From All Online Gambling casino usa and…
Воспользуйтесь [url=https://alkogoldostavkamoskva.msk.ru/]доставкой алкоголя круглосуточно в Москве[/url], чтобы наслаждаться любимыми напитками прямо дома в любое время суток. При необходимости можно воспользоваться…
sites de apostas combinadas triplas (https://www.rethinkingweb.com) que pagam
casino near heiuk field, casino united kingdom chance and australian online no deposit biggest casino cities in the world (Harold),…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports













gambling in canada statistics, united statesn bingo rules and canadian poker, or canadian roulette winning numbers Feel free to visit…