Chennai Building Collapse: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கூறை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் மூன்று பேர் சிக்கி இருப்பதாகவும் அவர்கள் மீட்க கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் அபிராம்புரம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தனியார் கிளப்பில் பணியாற்றிய ஊழியர்கள் இரண்டு பேர் பலியான தகவல் வெளியாகியுள்ளது.
மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கிளப்பின் மேற்கூரை இடிந்த விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மாநில பேரிடர் மீட்பு பணிகள் குழு சென்றுள்ளது. மீட்பு பணி மேற்கொள் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்றுள்ளனர். சம்ப இடத்தை பார்வையிட மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வேலு சென்றுள்ளார்.
மேலும் காண