கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷம் நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலைகளில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நந்தி பகவானுக்கு நாம வழிகள் கூறினார்.

அதை தொடர்ந்து சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கருர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் திருமண கோலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் திருவீதி உலா.

தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேத்துடன் நிகழ்ச்சி தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில், கல்யாண பசுபதீஸ்வரர் ஸ்வாமி, அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடன் திருக்கல்யாண கோலத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.

மேல தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா ஆலய முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. ஆலயம் குடிபுகுந்த அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் கும்ப ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார். அதைத் தொடர்ந்து திருவீதி உலா சிறப்பாக நிறுவு பெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.