IPL CSK vs KKR Highlights: பேட்டிங், பவுலிங்கில் டாப் கிளாஸ்! கொல்கத்தாவை ஊதித்தள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐ.பி.எல். தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தன் சொந்த மண்ணில் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. வரிசையாக அதிரடியாக ஆடி மற்ற அணிகளை மிரள வைத்துக் கொண்டிருந்த கொல்கத்தா அணி இந்த போட்டியிலும் பேட்டிங்கில் மிரட்டும் என எதிர்பார்த்த கொல்கத்தா ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஜடேஜாவின் சுழல், துஷார் தேஷ்பாண்டே வேகத்தில் சென்னை அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 138 ரன்கள் என்ற எளிய இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஆட்டத்தை தொடங்கிய ரச்சின் ரவீந்திரா பவுண்டரிகளாக விளாசினார். ஆனால், அவரது அதிரடி நீடிக்கும் முன்பே அவர் அவுட்டானார். அவர் 8 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டானார்.

அடுத்து வந்த டேரில் மிட்செல் 1 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்த நிலையில், 25 ரன்களுக்கு சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால், கேப்டன் ருதுராஜ் நிதானமாக ஆடி அரைசதம் விளாசினார். சென்னை அணி பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, கொல்கத்தா அணியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சென்னை அணி விக்கெட்டுகளை வீழ்த்த மிட்செல் ஸ்டார்க்க, வைபவ் அரோரா, அங்குல் ராய், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி , ரஸல் என யாரை பயன்படுத்தியும் எந்த பலனும் கிட்டவில்லை.

இலக்கு குறைவாக இருந்த காரணத்தால் சென்னை அணி நிதானமாகவே ஆடியது. மிட்செலுக்கு பிறகு களமிறங்கிய ஷிவம் துபே அதிரடியாக ஆடினார். இதனால், கடைசி 4 ஓவர்களில் சென்னை வெற்றிக்கு வெறும் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஷிவம் துபே சிக்ஸராக விளாசினார். ஆனால், வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர் போல்டானார். இதையடுத்து, முன்னாள் கேப்டன் தோனி களமிறங்கினார். 17.4 ஓவர்களில் சென்னை அணி இலக்கை எட்டி கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சென்னை கேப்டன் ருதுராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். தோனி 1 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். கொல்கத்தா வீரர்கள் ஓரளவு கட்டுக்கோப்பாக வீசினாலும் இலக்கு பெரியளவில் இல்லாத காரணத்தால் அவர்களால் சென்னையை வீழ்த்த இயலவில்லை. 6 புள்ளிகளுடன் சென்னை அணி 4வது இடத்திலே நீடிக்கிறது. கே.கே.ஆர். அணி 2வது இடத்திலே உள்ளது.

இந்த வெற்றி சென்னை ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Source link