இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை போட்டிகளுக்குத் தயார் செய்வது மட்டும் இல்லாமல் வீரர்களை ஊக்குவிக்கும் செயல்களிலும் ஈடுப்பட்டு வருகின்றது. இதில் ஆண்டு தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. கொரோனா காலகட்டத்தினால் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படாமல் வீரர்கள் உலகக் கோப்பை, ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தி வந்ததாலும் வீரர்களுக்கு விருது கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி வழங்கப்பட்டது.

பி.சி.சி.ஐ. விருதுகள்:

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 2019 – 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரர் விருது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது. 2020 – 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2021 – 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரர் விருது வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2022- 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது இளம் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது.