ஒன்றிய திமுக செயலாளர்

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் கடந்த பிப்ரவரி 29ம் தேதி காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சத்தியமங்கலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நீதிமன்றங்களில் ஒரு சிறுவன் உட்பட 9 பேர் சரணடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் ஓட்டேரி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கொலையாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர்.

வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் செல்வி

வழக்கை விசாரித்த நீதிபதி சரணடைந்த கனகராஜ், அருண்ராஜ், நவநீதகிருஷ்ணன், மணிகண்டன், முனீஸ்வரன், சத்தியசீலன், சம்பத்குமார், மணிகண்டன் ஆகிய 8 பேரை நான்கு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அவர்களை கடந்தவாரம் 4 நாட்கள் ஓட்டேரி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ததில் , வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் செல்வி உள்ளிட்ட மொத்தம் 17 பேர் கொலை வழக்கில் ஈடுபட்டது தெரியவந்து. அதில் சம்மந்தப்பட்ட சேதுராமன், அல்லா (எ) தமிழ் செல்வன், தீபக் ஸ்ரீராம், முகிலன் ஆகிய நான்குபேர் 16 ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கூலிப்படை

இந்த நிலையில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ்செல்வி மற்றும் அவரது கார் ஓட்டுனர் துரைராஜ் ஆகிய இருவரை இன்று போலீசார் கைது செய்து விசாரணை நேர்கொண்டனர். மேலும் முக்கிய குற்றவாளி A+ கேட்டகிரி ரவுடி கூலிப்படை தலைவன் செல்லா (எ) செல்வகுமார் ஏற்கனவே வேறு வழக்கில் சேலம் சிறையில் உள்ளார். திமுக பிரமுகர் ஆராமுதன் கொலை செய்வதற்காக 20 லட்சம் பேசப்பட்டு அட்வான்சாக 7 லட்சம் வழங்கப்பட்டதாக கூலி படையினர் தெரிவித்த நிலையில் 5 லட்சம் பணம், 6 செல்போன்கள், ஒருகார் மற்றும் கத்திகள் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் செல்வியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், முத்தமிழ்செல்வியின் கணவர் விஜயராஜ் சென்னை வண்டலூர் பிரபல தொழிலதிபராக இருந்து வந்தார் மேலும் திமுகவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் பதவி யோகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வண்டலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு தன்னுடைய மனைவி முத்தமிழ்செல்வி போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார்.

அச்சமயத்தில் மர்ம கும்பலால் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் அப்பொழுது, ஆராமுதன் பெயரும் இடம் பெற்று இருந்தது ஆனால் அந்த வழக்கு தொடர்பாக ஆராமுதன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

கடும் கோபம்

ஆனால் விஜயராஜ் தரப்பில், ஆராமுதன் மீது நீண்ட நாள் கோபத்திலும் அவரை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்திலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று கட்சியில் தொடர்ந்து ஆராமுதன் மட்டுமே முக்கியத்தும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. தனது கணவர் இறந்த பிறகும் கட்சிக்காக தீவிரமாக ஒழித்தும் எந்த பதவியும் தராததால் கோபத்தில் இருந்து வந்துள்ளார். ஏற்கனவே ஆராமுதன் மீது இருந்த கடும் கோபம் நாளடைவில் , கடும் பகையாக இருந்துள்ளது. இதனால் திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றி இருக்கிறார் திமுக ஊராட்சி மன்ற தலைவி. திமுகவில் நடந்த அதிகார போட்டியில் நடந்தேறி இந்த கொலைச் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.