ஆட்சி அமைக்க இடையூறாக இருக்கும் பாஜகவை எதிர்க்கும் துணிவு விஜய்யிடம் உள்ளதாக என்று விசிக முன்னள் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக.

இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்?

சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும்.

அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்? என்று கேள்வி ழுப்பியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports