வைபவ் சூர்யவன்ஷி

Last Updated:

நடப்பு ஐபிஎல் தொடரில் 237.31 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்துள்ள வைபவ், ஒட்டுமொத்தமாக 72 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை (Orange Cap) வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இத்தொடரில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 776 ரன்கள் குவித்து இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். நடப்பு சீசனில் 750 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் வைபவ் சூர்யவன்ஷி மட்டுமே ஆவார். இவருடைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிபையர் 2 சுற்றுடன் வெளியேறிய போதிலும், இவருடைய ரன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், இறுதிப்போட்டியில் சுப்மன் கில் 10 ரன்களிலும், சாய் சுதர்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் வைபவ் சூர்யவன்ஷியின் ஆரஞ்சு தொப்பி அதிகாரப்பூர்வமாக உறுதியானது.

இந்த சீசனில் சுப்மன் கில் 732 ரன்களுடன் இரண்டாவது இடத்தையும், சாய் சுதர்சன் 722 ரன்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் (15 வயது) ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர் என்ற உலக சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன்பு சாய் சுதர்சன் (23 வயது) மிக இளம் வயதில் இந்த விருதை வென்றதே சாதனையாக இருந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 237.31 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்துள்ள வைபவ், ஒட்டுமொத்தமாக 72 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் (59 சிக்சர்கள்) நீண்ட கால சாதனையையும் அவர் தகர்த்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற கிரிக்இன்போ விருதுகள் விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்த 15 வயது இளம் புயலை மனதாரப் பாராட்டியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமை, மணிக்கட்டு ஆட்டம் (Wrist work) மற்றும் பந்தின் லைன் & லென்த்தை முன்கூட்டியே கணித்து மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிதறடிக்கும் விதம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வைபவ் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாமல், அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல், எழும் சவால்களுக்கு தீர்வு காணும் மனப்பாங்குடன் விளையாட வேண்டும் என்றும் சச்சின் அறிவுரை வழங்கியுள்ளார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed