திருக்கோவிலூர் இடைத்தேர்தல்; விழுப்புரத்தில் இருந்து அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

நாடாளுமன்ற தேர்தலுடன் திருக்கோவிலூருக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அந்தத் தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழுப்புரத்தில் இருந்து இன்று ஆட்சியர் பழனி பார்வையிட்டு அனுப்பி வைத்தார். விழுப்புரம் மாவட்ட தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் சட்டமன்ற உறுபினராக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பதவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு படி பறிக்கப்பட்டன. மேலும் படிக்க

ED Raid: சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை.. காலையிலேயே அதிரடி காட்டிய அமலாக்கத்துறை அதிகாரிகள்..

சென்னையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5க்கும் மேறபட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை தரப்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஆர்.ஏ புரம், வேப்பேரி, ஈ.சி.ஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் படிக்க

Latest Gold Silver Rate: ஷாக் மேல் ஷாக்! ரூ.50,000 த்தை நெருங்கும் தங்கம் விலை.. விழி பிதுங்கும் மக்கள்..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ. 49,200 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,150 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,960 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,620 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க

TN Weather Update: இயல்பைவிட அதிகரிக்கும் வெயில்: அல்லல்படும் மக்கள் : வானிலை நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதன்படி, இன்று முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

Lok Sabha Election 2024: காங்கிரசுக்கு மேலும் ஒரு இடி – முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சோரி பாஜகவில் ஐக்கியம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பச்சோரி இன்று போபாலில் பாஜகவில் இணைந்தார். அவரோட பல காங்கிரஸ் பிரமுகர்களும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைமைக்கு இந்த நடவடிக்கை பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும்படிக்க