Tamil Nadu latest headlines news April 6th 2024 flash news details know here | TN Headlines: எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு! கொளுத்தும் வெயில்


CM MK Stalin: தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இயற்கை அழகு கொஞ்சக்கூடிய புதுச்சேரிக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். மேலும் படிக்க
அம்மாடியோவ்.. தமிழ்நாட்டில் இதுவரை ரூ.192 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்- தேர்தல் ஆணையம்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், தமிழ்நாட்டில் இதுவரை 192 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம், நகைகள், போதைப் பொருட்கள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
Money Seizure: நெல்லை எக்ஸ்பிரஸில் சிக்கிய ரூ.4 கோடி.. சிக்கலில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்? என்ன நடந்தது?
சென்னையிலிருந்து நேற்று இரவு நெல்லை சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில்  பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி செந்தில் பாலமனி தலைமையில் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரம் போலீஸார் உதவியுடன் சோதனை நடத்தினர்.மேலும் படிக்க..
Coimbatore Cricket Stadium: தேர்தல் அறிக்கையில் இன்னொரு வாக்குறுதி.. கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் – முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் மக்களவைத் தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்க விரும்புகிறேன். விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த வாக்குறுதியை அளிக்கின்றேன். சென்னையில் உள்ள சின்னச்சாமி மைதானத்தினைப் போல் கோவையிலும் உலகத் தரத்தில் கிரிக்கெட் மைதானம் கட்டப்படும்” என தெரிவித்துள்ளார்.
TN Weather: தமிழ்நாட்டில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வெப்ப அலையும் உண்டு – வானிலை அப்டேட்
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று (ஏப்ரல் 7)தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 08.04.2024 மற்றும் 09.04.2024:    தென் தமிழக மாவட்டங்கள்,    வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் படிக்க..
Khushbu : மன்னிச்சுடுங்க.. குஷ்புவுக்கு என்ன ஆச்சு? நட்டாவுக்கு பறந்த குஷ்புவின் கடிதம்!
நடிகையும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான குஷ்பு நடப்பு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”எலும்பு முறிவு காரணமாக ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு இருந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பிரச்னையுடன் இருந்து வருகின்றேன்.மேலும் படிக்க..
Pugazhenthi MLA Demise LIVE: மறைந்த திமுக எம்.எல்.ஏ., புகழேந்திக்கு அஞ்சலி செலுத்த குவியும் தொண்டர்கள்!

மேலும் காண

Source link