பிறகு ஆடிஷன் சமயத்துல அவர் நம்ரிதாவையும் ஒரு கேரக்டருக்கு ஆடிஷன் வரச் சொல்லிக் கேட்டார். அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஆடிஷனுக்குப் போனோம். இன்னொரு ஸ்பெஷலான விஷயம் என்னன்னா, என்னுடைய அப்பாதான் (நடிகர் பானு ப்ரகாஷ்) இந்த சீரிஸிலும் எனக்கு அப்பாவாக நடிக்கிறார்.
நாங்க மூணு பேரும் சேர்ந்து நடிக்கிறது ரொம்பவே ஸ்பெஷல்! அம்மாவும் எங்களை ஒன்றாகப் பார்க்கிறதுக்கு ஆசையோட காத்திருக்காங்க.” என்றவரிடம், “இந்த சீரிஸ் ‘உப்பு புளி காரம்’ சீரிஸின் 2-வது சீசனாக தொடங்கப்பட்டது என்றார்களே, அது உண்மையா? எதனால் தலைப்பு மாற்றப்பட்டது?” எனக் கேட்டோம்.
அவர், “ஆமா, தொடங்கப்பட்டதுமே பலர் இது ‘உப்பு புளி காரம் 2’-வான்னு கேட்டாங்க. ஆனா, இது ஒரு குடும்பத்திலிருக்கும் ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்-களின் கதை. உப்பு புளி காரம்’ங்கிற டைட்டில் மற்ற மொழிகள்ல அதற்கான ரீஜனல் ரீச் கிடைக்காது. ‘ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்’ங்கிற டைட்டில் பொதுவானதாக இருக்கும். எல்லோருக்கும் போய் சேரும்ங்கிறதுனாலதான் இந்த டைட்டில் மாற்றம்” என்றார்.






















