தமிழகத்தில் அதிக தொகுதிகளை வென்ற தவெக, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைமால் தவித்து வருகிறது.

இந்நிலையில், டெக் உலகின் ஜாம்பவான் ஸ்ரீதர் வேம்பு, தவெகவுக்கு ஆதரவாக கருத்தை பதிவு செய்துள்ளார்.

தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு மாறாக எது நடந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், எல்லையில்லா குதிரை பேரங்கள் நடப்பதற்கு பதிலாக, புதிதாக மீண்டும் தேர்தலை நடத்துவதுதான் சரியானது என்றும், அப்படி நடத்தினால் தவெக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் நம்புவதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், மற்ற கட்சிகள் அனைத்தும், புதிதாக மீண்டும் தேர்தல் நடத்துவதை தவிர்ப்பதுதான் அவர்களுக்கு நல்லது என்றும், காரணம், அப்படி தேர்தல் நடந்தால், இப்போது வென்றுள்ள தொகுதிகளையே எதிர்க்கட்சிகள் இழக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

இதையெல்லாம், தவெகவின் ஆதரவாளராக கூறவில்லை என்றும், தமிழ்நாட்டையும், பாரத‍ நாட்டையும் நேசிக்கும் ஒருவன் என்ற முறையில் கூறுவதாக ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.

ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய ஆதரவை பெற்றிருப்பதுதான், நமது தேசத்தின் பலம் என்று, தேச பக்தனாக குறிப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.

இப்போது உள்ள சிக்கல்களை கலைந்து தவெக ஆட்சி அமைக்கும் என்று நம்புவதாகவும், அதுவே மக்களின் விருப்ப‍மாகவும் இருப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports