பல்வேறு துறைகளைச் சார்ந்த மற்றும் பல்வேறு படிநிலைகளைச் சேர்ந்த மகளிருக்கு பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. அறிவித்துள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிர் நலன்:

1. சிறு, குறு தொழில்களில் பெண்களை ஊக்குவித்து அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், தற்போது உள்ள 30% மூலதன மானியம் பெண்களுக்கு 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

2. இந்திய அளவில் விவசாயத்தில் அதிகரித்து வரும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் பெண் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் பிற விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி, மண் ஆரோக்கியம் குறித்த பயிற்சி செயல் விளக்கம், விதை உற்பத்தி, விதை தொழில்நுட்பம் ஆகியவை குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

3. சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் இந்தியாவை முன்னேற்றிக் கொண்டு சென்றிட பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை கொடுப்பது அவசியமாகும். அதன் அடிப்படையில் இது சம்பந்தமான சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திட மத்திய அரசை தி. மு. க. வலியுறுத்தும்.

4. மாவட்ட அளவில், பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் கொள்முதல் மற்றும் விற்பனை சந்தைகளை அமைத்து, தனிப்பட்ட அட்டைகள் வழங்கப்படும்.

Also Read: Power Pages-1: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!

5. பல்வேறு உலக நாடுகள் பெண் தொழிலாளர்களுக்குத் தேசிய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மூலம் மகப்பேறு காலத்தில் பொருளாதார உதவிகளை வழங்கி வருவது போல், தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த 1989 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்திய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் இந்திய அளவில் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தால் பாகுபாட்டைத் தவிர்த்து பாலின உரிமைகள் பணியிடங்களில் உறுதி செய்யப்படும்.

5. வீட்டுப்பணியாளர் நலன்களைக் காத்திடும் வகையில் ஒருங்கிணைந்த தேசியச் சட்டம் ஒன்று உருவாக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிமைகள் நிலைநாட்டப்படும்.

7. வீட்டுப்பணியாளர்கள் நியமனங்களை முறைப்படுத்துதல், அவர்களுடைய சமூகப் பாதுகாப்பு, அவர்களின் குறைகளைக் களைதல் முதலியவற்றுக்காக முத்தரப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்.

8. இந்திய அளவில் சுய உதவிக் குழுவில் உள்ள மகளிர்களுக்கு வட்டி இல்லா வாகனக் கடன் ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளில் திமுக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 19 தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள திமுக, தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் மகளிருக்காக அறிவித்துள்ள வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்தி, திமுகவினர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: Power Pages 8: தோல்வியே காணாத கலைஞரின் அரசியல் பயணம்! எம்.ஜி.ஆர் ஆதரவு முதல் எதிர்ப்பு வரை!