மீண்டும் போர் பதற்றம் : ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நோ சொன்ன டிரம்ப்  - Kumudam

அமெரிக்கா – ஈரான் இடையிலான 10 நாள் போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே பாகிஸ்தானில் மீண்டும் இருநாடுகள் இடையே 2-ஆவது கட்ட அமைதி பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி சென்று இருந்தார். ஆனால் அவர் பாகிஸ்தான் இருக்காமல் சனிக்கிழமை ஈரான் திரும்பினார். 

இதன் பின்னர் அமெரிக்காவுடன் நேரிடையாக அமைதி பேச்சுவார்த்தை ஈடுபட என்று ஈரான் அறிவித்ததுள்ளது.இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த செல்ல இருந்த அமெரிக்க அதிகாரிகள்  ஸ்டீவ் விட்காப், ஜாரெட் குஷ்னரை அங்கு செல்ல வேண்டாம் டிரம்ப் தடுத்துவிட்டார். 

மேலும், அமெரிக்கா கடற்படையின் முற்றுகை நீடிக்கும் வரை அமெரிக்காவுடன் தங்கள் நாடு பேச்சுவார்த்தை நடத்தாது என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் அறிவித்து இருக்கிறார். மேலும் அவர் பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, அமெரிக்காவுடன் அமைதி பேச்சு நடத்த வேண்டுமெனில் அந்த நாடு, தங்கள் கடற்படையின் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்கா – ஈரான் அமைதி பேச்சுக்கு வசதியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாதில் அமல்படுத்தபட்டு இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளபட்டு உள்ளன.இதனால் ஒரு வாரமாக பாதிக்கபட்டு இருந்த இயல்பு வாழ்க்கை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தடை போட்டு இருப்பதால், மீண்டும் போர்பதற்றம் தொற்றி கொண்டுள்ளது. 

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed