நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் சஸ்பெண்ட்..! நடந்தது என்ன?

IRS Officer:  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய தமிழகத்தைச் சேர்ந்த, ஐ.ஆர். எஸ் அதிகாரி பாலமுருகனை பணியிடைநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. துணை ஆணையராக பதவி வகித்து வந்தார். சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் எனவும் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்டி இருந்தார். இந்நிலையில் தான், விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Source link