சிறுவர், சிறுமியர் சோசியல் மீடியாக்களை பயன்படுத்த தடை? மத்திய அரசு ஆலோசனை  - Kumudam

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யு டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

பெரியவர்கள் மட்டுமன்றி, குழந்தைகளும் சிறுவர்களும் தற்போது சமூகவலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். சமூக வலைதளங்களால் சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.அதைத்தொடர்ந்து பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. டென்மார்க், நார்வே, மலேசியா போன்ற நாடுகளும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளன. 

இதுகுறித்து மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் நிருபர்​களிடம் கூறிய​தாவது: வயது அடிப்​படை​யில் கட்​டுப்​பாடு கொண்டு வரு​வது குறித்​து பல்​வேறு சமூக வலைதள நிறு​வனங்​களு​டன் அரசு ஆலோ​சனை​களை நடத்தி வரு​கிறது.

ஒவ்​வொரு நாட்​டின் கலா​சார சூழலை​யும் பன்​னாட்டு நிறு​வனங்​கள் புரிந்​து​கொள்ள வேண்​டும். டீப்ஃபேக் காணொலிகளைக் கண்​டறிந்த 3 மணி நேரத்​திற்​குள் நீக்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட புதிய விதி​கள் ஏற்​கெனவே அமலில் உள்​ளன. தற்​போது ‘டீப்ஃபேக்’ எனப்​படும் போலி காணொலிகள் மற்​றும் வயதுக் கட்​டுப்​பாடு​கள் குறித்து விரி​வான பேச்​சு​வார்த்தை நடந்து வரு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed