கேரளம் கம்யூனிஸ்ட் பின்னடைவு: ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்! - Kumudam

கேரளம் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், மீண்டும் கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 42 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. பாஜக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. மிகவும் எதிர்பாராத திருப்பமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன், தான் போட்டியிட்ட தர்மடம் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

கேரளாவில் பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும் வழக்கத்தை முறியடித்து, கடந்த முறை இடதுசாரிகள் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தனர். ஆனால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெற்றுள்ள இந்த இமாலய முன்னிலை, இடதுசாரிகளின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed