நீட் தேர்வை மாநிலங்கள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் என்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தேசிய அளவில் கல்வியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். வேலூரில் பாஜாக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ பேட்டி
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் பாஜாக செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று பென்ஸ் பார்க் தனியார் ஓட்டலில் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறுகையில்,
ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். இத்தனை வருடங்களாக காங்கிரஸ், திமுக பேசவில்லை என்றால் அப்படியே பேசாமல் விடுவதால் மூடி மறைக்க முடியாது. இவ்வளவு நாள் திமுகவும் காங்கிரசும் கச்சத்தீவு விவகாரத்தை மறைத்து வைத்திருந்ததனால் தான் இப்போது பேசுகிறோம். தற்போது காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட்டை மாநிலங்கள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு, நீட் கொண்டு வந்தது காங்கிரஸ், நீட்டை மாநிலத்தில் இருந்து எடுக்க முடியாது என நீதிமன்ற வாசலில் இருந்து கத்தி பேசியவர் நளினி சிதம்பரம். நீட்டுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அது என்ன விருப்பப்பட்டால் மாநில அரசு நடத்திக் கொள்ளலாம் என குறிப்பிடுகிறது நீட் இல்லை என சொல்ல முடியுமா?
65 ஆண்டாக காங்கிரஸ் மக்களை திசை திருப்பி வருகிறது
தேர்தலுக்காக நீட் விவகாரத்தை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது காங்கிரஸ். இது மக்களை ஏமாற்றும் செயல். கல்விக்கொள்கையில் தேசிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும். 65 ஆண்டாக காங்கிரஸ் மக்களை திசை திரும்பி வருகிறது நாம் நன்றாக இருந்தால் போதும் நாடு எப்படி வேண்டுமெனலாம் போகட்டும் என்று குடும்ப அரசியல் நாற்றாக இருந்தால் போதும் என்றுதான் நடத்தி வந்தனர். தற்போதுதான் மக்கள் தெளிவாக நாடு முன்னேறவேண்டும், வரும் 5 வருடங்கள் இந்தியா எப்படி இருக்க போகிறது என நாண்பர்கவில்லை 2047 ஆண்டு 100 வருடம் சுதந்திரம் அப்போது இந்தியா எந்த இடத்தில் இருக்க போகிறது வளர்ச்சியில் உள்ளது எனதான் உள்ளது. மத்திய ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிகளை பயமுறுத்துவதாக கமலஹாசன் பேசியுள்ளது குறித்து கேட்டதற்கு, நடிகர் கமலஹாசன் திமுகவில் சேர்ந்து விட்டாரா என குஷ்பூ கேள்வி? மேலும் அவர் திமுகவின் குரலாக மாறிவிட்டாரா?” என கூறினார். வேட்பாளர் ஏ.சி சண்முகம் கூறுகையில், 10 ம் தேதி பிரதமர் மோடி வேலூர் வருகிறார். கோட்டை மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் காலை 10:30 மணிக்கு பிரதமர் கலந்து கொள்கிறார் என கூறினார்.
மேலும் காண