காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து காஞ்சிபுரம் நகர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நிர்வாகிகளும் பொதுமக்கள் வீட்டில் இருக்கும் நேரமான மாலை மற்றும் இரவு வேலைகளிலும் சென்று வாக்குகளை கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல்மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேரம் குறைவாக இருப்பதால் வேட்பாளர்களை அனைத்து இடத்திற்கும் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் , வீடு தோரும் சென்று வாக்குகளை கேட்டு வருகின்றனர்.
மாலை வேலைகளில் குறிப்பாக வீடு தரும் தங்களது ஆதரவாளர் படைகளுடன் செல்லும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அவரவர் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு வருகின்றனர் . அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையத்தின் ஒரு பகுதி , ஏகாம்பரநாதர் சன்னதி தெரு , எஸ் வி. என் பிள்ளைத்தெரு , ஓ பி குளம் , குண்டு குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பெண்கள் அதிமுகவின் கொடியை கையில் ஏந்தியவாறு இரட்டை இலை சின்னத்திற்கு வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தனர். வீடு தரும் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த கடைகளுக்கும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை கேட்டனர். மேலும் அங்கிருந்த சிக்கன் பக்கோடா கடைக்கு சென்ற அதிமுக நிர்வாகிகள் சிக்கன் பக்கோடாவை , சமைத்துக் கொடுத்து நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சாரத்தின் பொழுது ஏராளமான அதிமுக நிர்வாகிகள், அதிமுக கவுன்சிலர்கள், அதிமுக கட்சியை சேர்ந்த பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் யாருடைய கோட்டை ?
செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2019 தேர்தல் நிலவரம் எப்படி ?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
மேலும் காண