zee tamil idhayam serial february 24th episode update | Idhayam Serial :வாசுவாக ருத்ர தாண்டவம் ஆடும் ஆதி.. பாரதி கல்யாணத்தில் செம்ம ட்விஸ்ட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் துரை ஆதியையும் கடத்தி அடைத்து வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
அதாவது கல்யாணம் நடையில் பாரதிக்கும் துரைக்கும் கல்யாணம் ஏற்பாடுகள் நடக்க ‌‌ இங்கே கட்டிப் போட்டுக் கிடந்த ஆதியின் உடலுக்குள் வாசுவின் ஆன்மா இறங்குகிறது. 
இதனைத் தொடர்ந்து ரவுடிகளின் பிடியிலிருந்து தப்பிக்கும் ஆதி அங்கிருந்து ஓடி வந்து ஒரு பம்பு செட்டுக்குள் செல்ல ரவுடிகள் வசமா மாட்டிக்கிட்டான் என்று ரவுண்டு கட்ட கருப்பு உடையில் வாசுவாக வெளியே வருகிறான் ஆதி. 
ரவுடிகளை தூக்கிப்போட்டு ஆதி ஒரு உருவத்தில் ருத்ரதாண்டவம் ஆடும் வாசு தமிழ் பாப்பாவை கட்டிப்போட்டு இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து தமிழை காப்பாற்றி வெளியே வரும் போது அதே இடத்தில் அடைக்கப்பட்டிருக்கும் சுமதியையும் காப்பாற்றி வெளியே கூட்டி வருகிறான். 
இதைத்தொடர்ந்து இங்கே துரை பாரதியின் கழுத்தில் தாலி கட்டப் போகும் சமயத்தில் ஆதி தமிழ் பாப்பாவுடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
Mysskin: “புத்தகம் படிக்கிறது தான் வேலையே” .. நண்பர்களின் சக்ஸஸ் சீக்ரெட் பற்றி பேசிய மிஷ்கின்!
Raghava Lawrence: விபத்தில் ரசிகர் மரணம்.. வேதனையுடன் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு!

மேலும் காண

Source link