அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பியும், ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடியவர் அம்பேத்கர். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அம்பேத்கரின் பெருமைகளையும், அவர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதிமொழி தொடர்பாகவும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
#Ambedkar#அம்பேத்கர் pic.twitter.com/T0Ux934OZQ
— TVK Vijay (@tvkvijayhq) April 14, 2024
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை எல்லாருக்கும் கிடைக்க உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல்வேறு விதமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண