[ad_1]
சீரியலில் இப்போது நகைச்சுவை கேரக்டர் என்றால், இயக்குநர்கள் பார்வையில் சட்டெனப் படுபவராக இருக்கிறார் கம்பம் மீனா.எனவே ஹிட் சீரியல்கள் பலவற்றிலும் இவருக்கு ஒரு கேரக்டர் ரெடி ஆகி விடுகிறது.விஜய் டிவியில் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்து வந்த நிலையில், அந்தத் தொடர் முடிவடைந்ததும் இதோ இப்போது ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் ‘அய்யனார் துணை’யிலும் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார்.அதுவும் இந்தச் சீரியலில் நடிகர் ரோசரியின் முன்னாள் காதலியாக நடித்து வருகிறார்.ஷூட்டிங் இடைவேளையில் சந்தித்து, “காதல், அதில் தோல்வியடைந்தது போன்ற விஷயங்கள் நிஜவாழ்க்கையில் நடந்திருக்கிறதா’ என்று கேட்டோம். பழைய நினைவுகளைப் பகிரத் தொடங்கினார்.கம்பம் மீனா‘’அப்ப நான் பத்தாவது படிச்சிட்டிருந்தேன். பள்ளிக்கூடத்துல படிச்சிட்டிருக்கிறப்ப கூடப் படிக்கிற பசங்க பேனா பென்சில் வாங்கித் தர்றதையெல்லாம் கூட காதல்னு மத்தவங்க கேலியா பேசுவாங்க. பக்கத்து வீட்டுப் பையன் கூட சேர்ந்து நடந்தபடி பள்ளிக்கூடம் போறதைப் பார்த்தாலே ஒரு கூட்டம் கேலி செய்துகிட்டே பின்னாடி வரும். அதையெல்லாம் எப்படிங்க லவ்னு சொல்ல முடியும்? சொல்லப் போனா காதல்னா என்னன்னே சரியா தெரியாது. அப்படிப் பேசவே பயமாவும் இருக்கும்.
[ad_2]
Source link
A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…
























