முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளம் விரும்புகிறது.. செலவை பற்றி கவலை வேண்டாம்.. முதல்வர் சதீசன்!



Chennai oi-Yogeshwaran Moorthi
Updated: Thursday, August 20, 2026, 14:46 [IST]
சென்னை: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளம் விரும்புவதாக அம்மாநில முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார். புதிய அணையின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை தமிழ்நாடு முடிவு செய்து மேற்கொள்ளலாம் என்று பேசியுள்ள சதீசன், புதிய அணைக்கான முழு செலவையும் கேரளம் ஏற்கும் என்று கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று விஜய் பேசி இருந்த நிலையில், கேரளம் முதல்வரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கேரளம் முதல்வர் சதீசன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதில் விஜய் பேசுகையில், நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்கப்படும். நதிநீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்புகள் உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் கேரளம் முதல்வர் விடி சதீசன் பேசுகையில், வளர்ச்சி மற்றும் பேரிடரின் போது தென் மாநிலங்கள் ஒன்றாக நிற்கும். அதேபோல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளம் விரும்புகிறது. புதிய அணை கட்டுவதற்கான இடம், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை தமிழ்நாடே மேற்கொள்ளலாம். புதிய அணைக்கான முழு செலவையும் தமிழ்நாடு ஏற்கும். இதற்கு தமிழ்நாடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு – கர்நாடகா இடையில் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று கர்நாடகா தீவிரமாக இருந்து வரும் சூழலில், தற்போது கேரளாவும் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்று பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. English summary
Mullai Periyar: Kerala Wants to Construct New Dam Across Mulla periyar Says Keralam CM VD Satheesan in South CM Conference



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *