PM Modi Visit to Chennai: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தற்போது 7வது முறையாக நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னையில் நாளை ரோடு ஷோ மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. இதற்காக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோட்-ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு பணிகளுக்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க
3 ஆண்டுகளுக்கு முன்பு 13 வாக்குறுதிகள்; ஒன்றை கூட முதல்வர் நிறைவேற்றவில்லை – அன்புமணி
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி செய்யாறில் பிரச்சாரம் செய்தார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மிகச்சிறப்பாக பணியாற்றியவர், மண்ணுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பவர். மேலும் படிக்க
Lok Sabha Election 2024: காசே கொடுக்க மாட்டோம்ன்னு சொன்னவர் அண்ணாமலை; இதுக்கு பதில் சொல்லுங்க: சீமான்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சீமான் பேசுகையில்; போராடும் அரசு ஊழியர்கள், மக்களை இந்த அரசு ஒடுக்கத்தான் செய்கிறார்களே தவிர தீர்வை காணவில்லை.மேலும் படிக்க..
Kamal Haasan Campaign: பரப்புரையில் நாயகன் டயலாக்கை மேற்கோள் காட்டிய கமல்ஹாசன்: குதூகலத்தில் கத்திய பொதுமக்கள்!
மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ தேர்தலை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அப்படி எடுத்துக்கொண்டால் அடுத்த தேர்தலே இருக்காது என பலரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி நடக்காது என நான் சொல்கிறேன். தேர்தல் நடக்கும் ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரே ஒரு பட்டன் தான் இருக்கும், ஒரே ஒரு வேட்பாளர் தான் இருப்பார். அதுவும் அந்த பட்டன் மேல் ஹிந்தியில் எழுதியிருக்கும்.மேலும் படிக்க
மக்களவை தேர்தல்: தபால் வாக்குகள் அளித்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குகள் பெறும் பணியை, முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான ஆற்காடு நா.வீராசாமியிடம் தேர்தல் அதிகாரிகள் வாக்கை பெற்றனர்.
மேலும் காண