Tag: National News

  • திருப்பத்தூர்: புதன் சந்தையை நாற்றமடிக்க வைக்கும் கோடியூர் ஏரி – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?| Tirupathur: Kodiyur Lake Stench Hits Wednesday Market – Will Municipality Act | ACTPnews.com

    திருப்பத்தூர்: புதன் சந்தையை நாற்றமடிக்க வைக்கும் கோடியூர் ஏரி – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?| Tirupathur: Kodiyur Lake Stench Hits Wednesday Market – Will Municipality Act | ACTPnews.com

    புதன்கிழமைகளில் சந்தைக்கு வரும் மக்கள், துர்நாற்றத்தால் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஏரியை ஒட்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட நேரம் அப்பகுதியில் இருப்பதால் துர்நாற்றத்தைத் தாங்க முடியாத சூழல் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். “ஏரியைச் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். ஏற்கெனவே தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி,…

    Continue Reading

  • இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் எழுதியிருக்க முடியாது! – மரபுகளை மாற்றச் சொல்கிறார் பழனிவேல் தியாகராஜன் | ACTPnews.com

    இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் எழுதியிருக்க முடியாது! – மரபுகளை மாற்றச் சொல்கிறார் பழனிவேல் தியாகராஜன் | ACTPnews.com

    இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தற்போதைய பட்ஜெட் உரையைப் பார்க்கும்போது, அதை தற்போதைய நிதி அமைச்சரே முழுமையாக எழுதியிருக்க முடியாது என்பது எனது கணிப்பு. அதிகாரிகள் தயாரித்துக் கொடுத்த நீண்ட ஆவணத்தை அமைச்சர் அவையில் வாசிப்பதால்தான், நீண்ட நேர உரையின்போது வாசிப்பதில் தடுமாற்றங்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன. நான் பட்ஜெட்டைத் தயாரித்தபோது, அந்த ஆவணத்தை நானேதான் எழுதினேன் என்று உறுதியாகச் சொல்ல முடியும். முதலில் ஆங்கிலத்தில் எழுதுவேன். பின்னர் அதை தமிழில் மொழிபெயர்க்கச் செய்து,…

    Continue Reading

  • சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! – காரணம் என்ன? | The Government of Nepal, which had refused international aid, has reversed that decision. | ACTPnews.com

    சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! – காரணம் என்ன? | The Government of Nepal, which had refused international aid, has reversed that decision. | ACTPnews.com

    வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏராளமான வெளிநாட்டுத் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் வந்தபோது எழுந்த ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மைச் சிக்கல்களை நேபாள அரசாங்கம் நினைவு கூர்ந்தது. பல குழுக்கள் இருந்தும், நாடுகளுக்கு இடையேயான போட்டியால், மீட்புப் பணிகளை நிர்வகிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தின. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகளின் தூதரக அழுத்தங்களைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில தொழில்நுட்ப உதவிகளைப் பெற நேபாளம் சம்மதித்துள்ளது. ஜெய்சங்கர் அதன் அடிப்படையில், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா…

    Continue Reading

  • H-1B: அமெரிக்காவில் வேலை இழந்தால் கிடைக்கும் 60 நாள்கள் அவகாசம்… அதை நீக்கப் புதிய திட்டம்! | H-1B Workers to Lose Grace Period in White House-Approved Plan | ACTPnews.com

    H-1B: அமெரிக்காவில் வேலை இழந்தால் கிடைக்கும் 60 நாள்கள் அவகாசம்… அதை நீக்கப் புதிய திட்டம்! | H-1B Workers to Lose Grace Period in White House-Approved Plan | ACTPnews.com

    அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்றமற்ற விசாக்களில் (Non-immigrant visas) பணிபுரிபவர்கள், வேலை இழந்த பிறகு சட்டப்பூர்வமாகத் தங்குவதற்காக வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச 60 நாள் அவகாசத்தை (Grace Period) முற்றிலுமாக நீக்குவதற்கான புதிய விதிமாற்றத்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS-Department of Homeland Security) தீவிரமாக முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டம் குறிப்பாக எச்-1பி (H-1B) விசாவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நடைமுறை என்ன? தற்போது H-1B, L-1,…

    Continue Reading

  • திருவாரூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு! – கண்டுகொள்வார்களா அதிகாரிகள்? | ACTPnews.com

    திருவாரூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு! – கண்டுகொள்வார்களா அதிகாரிகள்? | ACTPnews.com

    உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், நோயிலிருந்து குணமடையவும் மருத்துவமனையை நாடி வரும் மக்களுக்கு, அந்த மருத்துவமனை வளாகமே சுகாதாரமான சூழலை வழங்க வேண்டியது அவசியம். ஆனால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சில பகுதிகளில் காணப்படும் நிலை அதற்கு நேர்மாறாக இருப்பது கவலைக்குரியதாக உள்ளது. இம்மருத்துவமனைக்கு தினமும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சுமார் 200 முதல் 400 பேர் வரை நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்…

    Continue Reading

  • “மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது”- விஜய் குறித்து தமிழிசை | tamilisai soundararajan about vijay as a pm | ACTPnews.com

    “மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது”- விஜய் குறித்து தமிழிசை | tamilisai soundararajan about vijay as a pm | ACTPnews.com

    இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தவெகவினர் கூறி வருகின்றனர். இதனிடையே “இந்தியா டுடே – சி வோட்டர்’ இணைந்து நடத்திய சமீபத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (MOTN) கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள வாக்குகள் வெளியாகி இருந்தன. இதில் தவெக தலைவர் விஜய்க்கு 9.2% வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி (48.7%), காங்கிரஸ் தலைவர்…

    Continue Reading

  • Minister Sampathkumar clarifies that moral responsibility for the omission of Periyar and Ambedkar names – ’பெரியார், அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நானே தார்மீக பொறுப்பு’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்! | ACTPnews.com

    Minister Sampathkumar clarifies that moral responsibility for the omission of Periyar and Ambedkar names – ’பெரியார், அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நானே தார்மீக பொறுப்பு’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்! | ACTPnews.com

    கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத்குமார்,  பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சம்பத்குமார், “30, 40 வருடங்களாக வீட்டுமனை பட்டா பெறாமல் போராடி வந்த மக்களுக்கு அவர்களது பகுதிகளுக்கே சென்று பட்டா வழங்கும் பணிகள் தற்போது துவங்கி உள்ளது. முதல் கட்டமாக 500 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகத்தின் உட்புற பணிகள் நடைபெற்று…

    Continue Reading

  • Is Kiran Kumar Reddy the Governor of Tamil Nadu? ஆர்.எஸ்.எஸ்ஸின் நண்பர், விஷ்ணு ரெட்டியின் உறவினர்.. கிரண்குமார் ரெட்டி தமிழ்நாட்டின் ஆளுநரா? | ACTPnews.com

    Is Kiran Kumar Reddy the Governor of Tamil Nadu? ஆர்.எஸ்.எஸ்ஸின் நண்பர், விஷ்ணு ரெட்டியின் உறவினர்.. கிரண்குமார் ரெட்டி தமிழ்நாட்டின் ஆளுநரா? | ACTPnews.com

    தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டபோது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார். தொடர்ந்து, “‘ஜெய் சமக்யாந்திரா கட்சி” எனும் தனிக்கட்சியைத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளில் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். மீண்டும் 2023-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜாம்பேட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தற்போது அவர் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விஷ்ணு ரெட்டி கிரண்குமார் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக இருந்த காலத்தில்தான்,…

    Continue Reading

  • Trump Announces “Biggest Oil Deal In World History” With Venezuela 65 பில்லியன் பேரல் எண்ணெய்… டிரம்பின் “உலகின் மிகப்பெரிய ஒப்பந்தம்” பின்னணி என்ன? | ACTPnews.com

    Trump Announces “Biggest Oil Deal In World History” With Venezuela 65 பில்லியன் பேரல் எண்ணெய்… டிரம்பின் “உலகின் மிகப்பெரிய ஒப்பந்தம்” பின்னணி என்ன? | ACTPnews.com

    அமெரிக்கா, வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பில் பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைப் பெறும் புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை “உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்” என கூறியுள்ள நிலையில், அமெரிக்காவின் எரிசக்தித் தேவையையும் வெனிசுலாவின் எண்ணெய்த் துறையை மீட்டெடுப்பதையும் இலக்காகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, வெனிசுலாவின் 17 முக்கிய எண்ணெய் வயல்களை மேம்படுத்தத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்கா செயல்படவுள்ளது. 65 பில்லியன் பேரல்…

    Continue Reading

  • 'ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க அரசு முயல்கிறதா?'-தவெக எம்எல்ஏ பேச்சுக்கு டிடிவி கண்டனம் | ACTPnews.com

    'ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க அரசு முயல்கிறதா?'-தவெக எம்எல்ஏ பேச்சுக்கு டிடிவி கண்டனம் | ACTPnews.com

    தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்று சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். கருப்பையா இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.…

    Continue Reading

  • “I’m a Jallikattu Bull Tamer Myself!” – MLA Karuppaiah on His Jallikattu Speech in the Tamil Nadu Assembly |’நானே மாடுபிடி வீரர்தான்…!’ – சட்டமன்ற ஜல்லிக்கட்டு பேச்சு பற்றி எம்.எல்.ஏ கருப்பையா! | ACTPnews.com

    “I’m a Jallikattu Bull Tamer Myself!” – MLA Karuppaiah on His Jallikattu Speech in the Tamil Nadu Assembly |’நானே மாடுபிடி வீரர்தான்…!’ – சட்டமன்ற ஜல்லிக்கட்டு பேச்சு பற்றி எம்.எல்.ஏ கருப்பையா! | ACTPnews.com

    “இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு’ என தவெக எம்.எல்.ஏ கருப்பையா சட்டமன்றத்தில் பேசியிருந்தார். சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் அவரின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்நிலையில், அவரையே தொடர்புகொண்டு இந்த பேச்சு குறித்து கேட்டோம். கருப்பையா எம்.எல்.ஏ கருப்பையா கூறியதாவது, ‘ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் ஏன் பேச வேண்டும்? நான் ஜல்லிக்கட்டுக்கு கோடிகளை கொட்டி மைதானம் கட்டியதைத்தான் எதிர்த்து பேசினேன். ஜல்லிக்கட்டு என்பது அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு என அந்தந்த ஊர்களில் அதன் பாரம்பரியம்…

    Continue Reading

  • “ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர நினைக்கிறதா இந்த அரசு” – தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக விமர்சனம்!| The AIADMK has criticized the remarks made by a TVK MLA regarding Jallikattu. | ACTPnews.com

    “ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர நினைக்கிறதா இந்த அரசு” – தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக விமர்சனம்!| The AIADMK has criticized the remarks made by a TVK MLA regarding Jallikattu. | ACTPnews.com

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, த.வெ.க எம்.எல்.ஏ, “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் இளைஞர்களை சீரழிக்கும் இடம். ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு செலவிட்ட ரூ.50 கோடியை மூடப்பட்ட சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க பயன்படுத்தியிருக்கலாம்” எனப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அதிமுக-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ்…

    Continue Reading

  • பதவியேற்ற 25 நாளில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் ? – கர்நாடகாவில் பரபரப்பு/Karnataka minister resign corruption charges | ACTPnews.com

    பதவியேற்ற 25 நாளில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் ? – கர்நாடகாவில் பரபரப்பு/Karnataka minister resign corruption charges | ACTPnews.com

    பின்பு கைது செய்யப்பட்டு 3 மாத சிறைவாசத்துக்கு பின்பு ஜாமீனில் வந்தவரை, தற்போது விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில் திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக்கினார் முதல்வர் டி.கே.சிவகுமார். தலைமைக்கு பெரிய அளவில் கவனித்தவர்களூக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதிலும் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவியா? என்று கட்சிக்குள் கலகம் வெடித்தது. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் , சித்தராமையாவுடன் எதிர்க்கட்சியான பா.ஜ.க நாகேந்திராவை அமைச்சரவையிலிருந்து நீக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்தது.…

    Continue Reading

  • “தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரங்கேறும் மத அரசியல்” – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டு!| “Religious politics playing out in the Tamil Nadu Assembly” – BJP leader Nainar Nagendran alleges! | ACTPnews.com

    “தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரங்கேறும் மத அரசியல்” – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டு!| “Religious politics playing out in the Tamil Nadu Assembly” – BJP leader Nainar Nagendran alleges! | ACTPnews.com

    தமிழக சட்டமன்றத்தில் மத அரசியல் அரங்கேறுவதாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில்,“ தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டிய ஒரு மிக உன்னதமான அரசியல் சாசனப் பதவியாகும். ஆனால், தற்போதைய சபாநாயகர் திரு. ஜே.சி.டி பிராகர் அவர்கள், தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் கண்ணியத்தை மறந்து, தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக பகிரங்கமாக தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வதோடு, தான்…

    Continue Reading

  • “அடுத்தப் பிரதமர் யார்?" – கருத்து கணிப்பில் 3-வது இடம்; மம்தா-வை பின்னுக்கு தள்ளிய முதல்வர் விஜய்! | ACTPnews.com

    “அடுத்தப் பிரதமர் யார்?" – கருத்து கணிப்பில் 3-வது இடம்; மம்தா-வை பின்னுக்கு தள்ளிய முதல்வர் விஜய்! | ACTPnews.com

    நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், அண்மையில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சர்ப்ரைஸ் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே, இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான ரேஸில் விஜய் 3-வது இடத்தைப் பிடித்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். விஜய் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ இணைந்து நடத்திய சமீபத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (MOTN) கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத்…

    Continue Reading

  • சட்டமன்றம்: “முதல்வர் உங்களிடம் என்ன பேசினார்?" – அமைச்சர் செங்கோட்டையன் பதில்! | ACTPnews.com

    சட்டமன்றம்: “முதல்வர் உங்களிடம் என்ன பேசினார்?" – அமைச்சர் செங்கோட்டையன் பதில்! | ACTPnews.com

    அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ முதல்வர் விஜய் ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்வது, மெட்ரோ ரயில் பயணம், புழல் சிறைக்குச் சென்று அங்கே பார்வையிடுவது போன்ற பல்வேறு பணிகளை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சென்று நேரடியாக பார்த்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவருடைய உள்ளத்திலே இருப்பது ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறந்த ஆட்சியை தந்து தமிழகம் மேலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உருவாக வேண்டும் என்பதுதான். நேபாளத்தில் நடந்தவை உலகத்தையே உலுக்கியிருக்கிறது.…

    Continue Reading

  • இலவசப் பயணம்: “எங்க மச்சான்களுக்கு செலவைக் குறைக்கத்தான்…" – அமைச்சர் பார்த்திபன் பதில் | ACTPnews.com

    இலவசப் பயணம்: “எங்க மச்சான்களுக்கு செலவைக் குறைக்கத்தான்…" – அமைச்சர் பார்த்திபன் பதில் | ACTPnews.com

    நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன் செய்தியாளர்களை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, செய்தியாளர்கள் `பெண்களுக்கு மட்டும் இலவசப் பேருந்து பயணத் திட்டம் வழங்கப்படுகிறது. ஆண்களுக்கும் இந்தத் திட்டம் வழங்கப்படுமா?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், “எங்க மச்சான்களுக்கு செலவை குறைக்கணும்னுதான் எங்க தங்கச்சிகளுக்கு இலவசப் பேருந்து திட்டத்தை கொடுத்திருக்கிறோம். குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்கள் சகோதரர்களையோ அல்லது மற்ற உறவினர்களையோ பணத்திற்காக எதிர்பாராமல் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே…

    Continue Reading

  • 700 ஏக்கர் கண்மாயில் தொடரும் மணல் முறைகேடு – விவசாயிகள் புகார்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? | ACTPnews.com

    700 ஏக்கர் கண்மாயில் தொடரும் மணல் முறைகேடு – விவசாயிகள் புகார்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? | ACTPnews.com

    மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள வடகரை கண்மாய் சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாயைச் சுற்றியுள்ள 2,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இது முக்கியமான பாசன நீராதாரமாக விளங்கி வருகிறது. மழைக்காலங்களில் கண்மாயில் சேகரிக்கப்படும் தண்ணீரை நம்பி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், வறட்சி காலங்களிலும் கண்மாயின் மேற்பகுதிகளில் வெள்ளரி, பாகற்காய், கீரை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வடகரை கண்மாயில் தற்போது…

    Continue Reading

  • “மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!”- திமுக தலைவர் ஸ்டாலின் | dmk stalin about changes in party | ACTPnews.com

    “மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!”- திமுக தலைவர் ஸ்டாலின் | dmk stalin about changes in party | ACTPnews.com

    திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை? திமுக தலைவர் ஸ்டாலின் காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த…

    Continue Reading

  • “என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று.!”- வன்னி அரசுக்கு உதயநிதி பதில்| udhayanidhi stalin answer to vanni arasu in tn assembly | ACTPnews.com

    “என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று.!”- வன்னி அரசுக்கு உதயநிதி பதில்| udhayanidhi stalin answer to vanni arasu in tn assembly | ACTPnews.com

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் வன்னிஅரசு, “தேர்தல் களத்தில் திமுகவினர் எல்லோருக்கும் நான் நன்றி தெரிவித்திருக்கிறேன். தேர்தல் நேரத்தில் எனக்கு ஒரு நோய் வந்திருந்தது. என்னால் பேச முடியாமல் இருந்தது. அன்றைக்கு அமைச்சராக இருந்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் அண்ணன் அவர்கள் “நீ, பேசு’ என்றார். என்னால் பேச முடியவில்லை. அமைச்சர் வன்னி அரசு ஆனால் அந்த…

    Continue Reading

  • 'கொளத்தூர் தொகுதியை சேகர் பாபுவிடமிருந்து பறிக்கும் திமுக?' – கட்சி மறுசீரமைப்பை தொடஙகிய ஸ்டாலின்! | ACTPnews.com

    'கொளத்தூர் தொகுதியை சேகர் பாபுவிடமிருந்து பறிக்கும் திமுக?' – கட்சி மறுசீரமைப்பை தொடஙகிய ஸ்டாலின்! | ACTPnews.com

    கட்சி மாவட்ட எண்ணிக்கையை 110-ஆக உயர்த்தி பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலை அறிவித்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்நிலையில், கொளத்தூர் தொகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சேகர்பாபுவிடமிருந்து பறிக்க தி.மு.க தலைமை முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. திமுக செயற்குழு ஆகஸ்ட் 22-ம் தேதி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க-வின் செயற்குழுவில் 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்புரீதியாக மாவட்டங்கள் 110 எண்ணிக்கையாக உயர்த்தப்பட்டு, மாவட்டச் செயலாளர்களின் வயது உச்ச வரம்பு 70-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 110 மாவட்டங்களை வரையறுத்து புதிய…

    Continue Reading

  • நேபாள வெள்ளம்: தமிழர்களை மீட்கத் தீவிர நடவடிக்கை – வெங்கட் நாராயணா! | Nepal Floods: TN Special Rep Venkatnarayana Update on Rescue Ops | ACTPnews.com

    நேபாள வெள்ளம்: தமிழர்களை மீட்கத் தீவிர நடவடிக்கை – வெங்கட் நாராயணா! | Nepal Floods: TN Special Rep Venkatnarayana Update on Rescue Ops | ACTPnews.com

    அவர் பேசுகையில், “கைலாஷ் யாத்திரை மற்றும் சூப்பர் யாத்திரைக்காகத் தமிழகத்திலிருந்து சுமார் 380 முதல் 390 பயணிகள் வரை நேபாளத்திற்குச் சென்றுள்ளனர். இதில் முதற்கட்டமாக 148 பேர் கொண்ட ஒரு குழு பாதுகாப்பாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நாளைத் தமிழகம் திரும்புவார்கள். மேலும் 39 பேர் கொண்ட மற்றொரு குழுவினரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 57 பேர் கொண்ட குழுவில் 21 பேர் ஏற்கனவே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலரைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…

    Continue Reading

  • சொத்துவரி விவகாரம்: கேள்வி கேட்ட திமுக கவுன்சிலர்; சரண்டர் ஆன சென்னை மாநகராட்சி ஆணையர்! – | ACTPnews.com

    சொத்துவரி விவகாரம்: கேள்வி கேட்ட திமுக கவுன்சிலர்; சரண்டர் ஆன சென்னை மாநகராட்சி ஆணையர்! – | ACTPnews.com

    சென்னையில் சொத்துவரி மறுமதிப்பீடு செய்யப்பட்ட விவகாரத்தை இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேலு எழுப்பினார். அவரின் கேள்விக்கு ‘இனி எந்த முடிவையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன்’ என சரண்டர் ஆகியிருக்கிறார், சென்னை மாநகராட்சி ஆணையர். மாநகராட்சி மன்றம் திமுக கவுன்சிலர் வேலு பேசுகையில், ‘சென்னையில் திடீரென சொத்துவரியை உயர்த்தலாம் என எந்த அடிப்படையில் முடிவெடுத்தீர்கள்? யாரிடம் ஆலோசித்து அந்த முடிவை எடுத்தீர்கள். மேயரிடமும் துணை மேயரிடமும் நீங்கள் ஆலோசிக்கவில்லை. மாமன்றத்தில் அந்தத்…

    Continue Reading

  • "கார் ரேஸ் பற்றி இங்கு ஒரு விவாதம் வருகிறது, ஆனால்.!"-  உதயநிதி vs செங்கோட்டையன் | ACTPnews.com

    "கார் ரேஸ் பற்றி இங்கு ஒரு விவாதம் வருகிறது, ஆனால்.!"- உதயநிதி vs செங்கோட்டையன் | ACTPnews.com

    சட்டமன்ற விவாதத்தின்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை ஆற்றுவதற்கு அரசின் சார்பாக வாகனங்கள் வழங்குகின்ற போது அதற்கு ஒரு தனி மரியாதை இருக்கிறது. நீங்கள் எத்தனைக் கோடியில் கார் ஓட்டினாலும் அரசு கொடுக்கின்ற காரில் போகும்போது தனி மரியாதை இருக்கிறது. கார் ரேஸிற்கே நீங்கள் 24 கோடி ரூபாய் செலவு செய்தீர்கள். அதெல்லாம் யார் காசு. அதற்கெல்லாம் 24 கோடி செலவு செய்த நீங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் வாகனம் வாங்கி தருவதைப்…

    Continue Reading

  • கூடலூர்: ஆட்கொல்லி புலி விவகாரம்; 2-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! – பதற்றத்தில் காவல்துறை! | ACTPnews.com

    கூடலூர்: ஆட்கொல்லி புலி விவகாரம்; 2-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! – பதற்றத்தில் காவல்துறை! | ACTPnews.com

    நாட்டில் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் யானை, புலி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகளின் எதிர்கொள்ளல்களால் உயிரிழந்துள்ளனர். கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் ஆட்கொல்லி புலியால் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல் பாகங்களையும் தின்றுச் சென்றுள்ளது. மனிதர்களை கொன்றுத் தின்று பழகிய அந்த புலி, அடுத்து யாரை வேண்டுமானாலும் இரையாக்கலாம் என்கிற அச்சத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த புலியை…

    Continue Reading

  • புதுச்சேரி: `மாநில அந்தஸ்துக்காக ராஜினாமா செய்யத் தயார்!' – பேரவையில் சீறிய முதல்வர் ரங்கசாமி | ACTPnews.com

    புதுச்சேரி: `மாநில அந்தஸ்துக்காக ராஜினாமா செய்யத் தயார்!' – பேரவையில் சீறிய முதல்வர் ரங்கசாமி | ACTPnews.com

    புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார், “புதுச்சேரிக்கு வருவாய் குறைவாக இருப்பதால் சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், நேயம் மக்கள் கழக எம்.எல்.ஏ நேரு உள்ளிட்டவர்கள், “புதுவைக்கு மாநில அந்தஸ்துதான் வேண்டும். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அதில் மாறுபட்டிருந்தால் கோரிக்கை பலவீனமடையும்” என்றனர். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், “இந்த சபையின் எதிர்ப்பை பதிவு செய்ய, சபாநாயகர்…

    Continue Reading

  • Penguin drops Sonia Gandhi’s memoir after she rejected ‘changes | Belonging: A Journey of Love: சோனியா காந்தியின் புத்தகம்: வெளியீட்டுக்கு முன்பே மாறும் பதிப்பகம்! | ACTPnews.com

    Penguin drops Sonia Gandhi’s memoir after she rejected ‘changes | Belonging: A Journey of Love: சோனியா காந்தியின் புத்தகம்: வெளியீட்டுக்கு முன்பே மாறும் பதிப்பகம்! | ACTPnews.com

    சோனியா காந்தியின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணங்களைப் பதிவு செய்துள்ள ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) தன்வரலாற்றுப் புத்தகம், வரும் நவம்பர் 10-ம் தேதி உலகளவில் வெளியாகிறது. அமெரிக்காவில் உள்ள ஆல்பிரட் எ. நாஃப் (Alfred A. Knopf) இந்தப் புத்தகத்தை வெளியிட உள்ள நிலையில், இதன் இந்திய வெளியீட்டு உரிமையைக் கொண்டிருந்த ‘பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ (Penguin Random House India) நிறுவனம் திடீரென அதிலிருந்து…

    Continue Reading

  • `நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா?’ – அடிதடி வழக்கில் நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி! | ACTPnews.com

    `நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா?’ – அடிதடி வழக்கில் நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி! | ACTPnews.com

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வருகிறார். மரியவில்சனுக்கும், அவரது தம்பிக்கும் சொத்து மற்றும் தொழில் விவகாரத்தில் நீண்ட நாட்களாகப் பிரச்னை இருந்திருக்கிறது. அதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை நெஸ்தருடன் புதுச்சேரிக்கு வந்த மரியவில்சன், அண்ணன் வீட்டுக்குள் உருட்டுக்கட்டையுடன் நுழைந்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்.…

    Continue Reading

  • அமெரிக்காவில் 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகிறதா? என்ன பிரச்னை? அவர்களுடைய அடுத்தக்கட்டம்? | ACTPnews.com

    அமெரிக்காவில் 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகிறதா? என்ன பிரச்னை? அவர்களுடைய அடுத்தக்கட்டம்? | ACTPnews.com

    விரைவில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகின்றன என்கிற தகவல் பரவி வருகிறது. அமெரிக்காவில் சுற்றுலா மற்றும் வணிகங்களுக்காக B1 மற்றும் B2 விசாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த விசா மூலம் வெளிநாட்டிலிருந்து அமெரிக்கா சென்றவர்கள் அகதி உரிமை கோரி பலர் அங்கேயே செட்டில் ஆகிவிடுகின்றனர். இதனால், இந்த நடைமுறைக்குச் செக் வைக்க B1 மற்றும் B2 விசாக்களை ரத்து செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. ட்ரம்ப் ‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’!…

    Continue Reading

  • 'சென்னை முழுவதும் குடிநீரில் மலம் கலப்பு' – திமுக கவுன்சிலரின் பகீர் குற்றச்சாட்டு | ACTPnews.com

    'சென்னை முழுவதும் குடிநீரில் மலம் கலப்பு' – திமுக கவுன்சிலரின் பகீர் குற்றச்சாட்டு | ACTPnews.com

    சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் பேசுகையில், ”சென்னை முழுவதும் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்திருக்கிறது” எனக் கூறி அதிர்ச்சியூட்டினார். ராஜன் இதுசம்பந்தமாக அவர் பேசுகையில், ”சென்னையில் மக்களுக்கு குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குடிநீரில் மலம் கலந்திருக்கிறது. எங்களின் மண்டலம் 11 இல் தான் இதைக் கண்டடைந்தோம். எங்களுக்கும் மண்டலம் 10 இல் இருந்துதான் தண்ணீர் வருகிறது. எங்களின் மண்டல அலுவலர்கள் துரிதமாகச்…

    Continue Reading

  • “மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக அதிகரிப்பு”- திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு | Increase in the number of district units from 77 to 110 – DMK President M.K. Stalin announces | ACTPnews.com

    “மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக அதிகரிப்பு”- திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு | Increase in the number of district units from 77 to 110 – DMK President M.K. Stalin announces | ACTPnews.com

    திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம், கொள்கை – அமைப்புமுறை – செயல்பாடுகள் – உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம். இந்நான்கையும் காலங்கள் தோறும் நாம் புதுப்பித்தும், மேன்மைப்படுத்தியும், கூர்தீட்டியும், செழுமைப்படுத்தியும் வந்திருக்கிறோம். இவை அனைத்தும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் எண்ணங்கள் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் அந்த…

    Continue Reading

  • கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன? | DMK Councillors in Black Shirts; Mayor Priya Writes to CM Vijay – What’s the Reason? | ACTPnews.com

    கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன? | DMK Councillors in Black Shirts; Mayor Priya Writes to CM Vijay – What’s the Reason? | ACTPnews.com

    அம்மா உணவகம் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் பெருமிதமாகப் பேசுகின்றனர். சென்னையில் அம்மா உணவம் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் அம்மா உணவகத்துக்காகச் செலவளிக்கிறோம். காலை உணவுத்திட்டம் தனியார் நிதி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது. அந்தப் பள்ளிகளுக்கு உணவு எடுத்து செல்வதற்கான வாகன செலவைக் கூட மாநகராட்சிதான் ஏற்றிருக்கிறது. அதற்காகவாது நிதியை விடுவிக்க வேண்டும். நிதி விடுவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து…

    Continue Reading

  • "பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி | ACTPnews.com

    "பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி | ACTPnews.com

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் சம்பத்குமார், “என்னை வெற்றி பெறவைத்த என் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த வெற்றி என்பது மக்களின் வெற்றி. இந்த வாய்ப்பு என்பது மக்கள் தளபதி மீது கொண்டுள்ள மாபெரும் நம்பிக்கை. பேரவை தலைவர் அவர்களே, நீங்கள் புரட்சி தலைவரின் ரசிகர் என்று தெரியும். அமைச்சர் சம்பத்குமார் ஒரே ஒரு…

    Continue Reading

  • "மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" – கர்நாடக முதல்வர் | ACTPnews.com

    "மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" – கர்நாடக முதல்வர் | ACTPnews.com

    கர்நாடகாவின் முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற பின், தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் மேகதாது அணைப் பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது. இந்த அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிலிருந்து வரும் தண்ணீர் வராது என்று தமிழ்நாடு குரல் எழுப்புகிறது. ஆனால், மேகதாது அணை கட்டினால், அது தமிழ்நாட்டிற்குத்தான் உதவும் என்று ‘இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் நேற்று டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். “மேகதாது திட்டம் கர்நாடகாவிற்கானது அல்ல. அது தமிழ்நாடு மக்கள் நலனுக்கானது. அதில் சேமிக்கப்படும் 95% நீர் தமிழ்நாட்டிற்குத்தான் பயன்படும். காவிரி ஆறு “இமயமலை…

    Continue Reading

  • `புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்?’ – பேரவையில் முதல்வர் ரங்கசாமி கொடுத்த விளக்கம் \ Puducherry CM Rangasamy explains reason of not having the local body election | ACTPnews.com

    `புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்?’ – பேரவையில் முதல்வர் ரங்கசாமி கொடுத்த விளக்கம் \ Puducherry CM Rangasamy explains reason of not having the local body election | ACTPnews.com

    புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சட்டசபையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கடந்த காலத்தில் மாநில அந்தஸ்து பெறுவதில் மாற்று கருத்துகள் இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. நிர்வாக ரீதியில் பல தடைகள் இருப்பதை எம்.எல்.ஏக்களும், அரசு ஊழியர்களும், மக்களும் அறிந்துள்ளனர். மாநில அந்தஸ்து கேட்டு பல பிரதமர்களைச் சந்தித்து…

    Continue Reading

  • கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்… நிதி ஆயோக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்! | ACTPnews.com

    கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்… நிதி ஆயோக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்! | ACTPnews.com

    சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, நம் இளைய தலைமுறை பற்றி உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு கசப்பான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ‘Reimagining Skills for Viksit Bharat @2047’ என்ற அந்த அறிக்கை, இந்தியாவில் 15 – 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள், கல்வி, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கிறார்கள் என்கிறது. 2047-ல் ‘வளர்ந்த இந்தியா’ என்ற லட்சிய இலக்குடன் நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், கோடிக்கணக்கான இளைஞர்களின்…

    Continue Reading

  • நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" – ஜக்கி வாசுதேவ் | ACTPnews.com

    நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" – ஜக்கி வாசுதேவ் | ACTPnews.com

    நேற்று நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டு, அதில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 133 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். கோவை ஈஷா மையத்தைச் சேர்ந்த குழு ஒன்றும் நேபாளத்திற்குச் சென்றிருந்ததாக ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அவருடைய எக்ஸ் தளப் பதிவு… “திபெத் – சீனாவில் உள்ள கிராங் (Gyirong) பகுதியில் மிக மோசமான, சோகமான ஒரு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் எங்களது கைலாஷ் பயணக் குழுக்களில் ஒன்றும் சிக்கிக்…

    Continue Reading

  • "தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்; முதலமைச்சர் விளக்கம் வேண்டும்!" – பெ.சண்முகம் கடிதம் | ACTPnews.com

    "தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்; முதலமைச்சர் விளக்கம் வேண்டும்!" – பெ.சண்முகம் கடிதம் | ACTPnews.com

    இடதுசாரி அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அந்தச் சுற்றறிக்கைக்கு எதிர்ப்புகள் எழுந்ததும், அது திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், இந்த உத்தரவு பிறப்பிக்க காரணமாக இருந்த சாய்குமாரைத் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. விஜய் ரேஷன் அட்டையில் கைரேகை இன்னும் பதியவில்லையா? வருகிற சனிக்கிழமை சூப்பர் வாய்ப்பு! தலைமைச் செயலாளரின் முடிவு…

    Continue Reading

  • "மோடி, அமித் ஷா அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்க இதுதான் காரணம்.!" – சொல்கிறார் கே.எல்.சுதீஷ் | ACTPnews.com

    "மோடி, அமித் ஷா அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்க இதுதான் காரணம்.!" – சொல்கிறார் கே.எல்.சுதீஷ் | ACTPnews.com

    நாடாளுமன்ற மாநிலங்களவையில், தென் மாநிலங்களிலிருந்து புதிதாக பொறுப்பேற்ற எம்.பி-க்களின் வருகைப்பதிவு, கேள்விகள் மற்றும் விவாதப் பங்கேற்பு உள்ளிட்ட விஷயங்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறார் தே.மு.தி.க பொருளாளர் எல்.கே.சுதீஷ்! அவரிடம் நடப்பு விஷயங்கள் குறித்தான கேள்விகளுக்கு பதில் கேட்டுப் பேசியபோது… “முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் மாநிலங்களவை உறுப்பினராக சென்றிருக்கிறீர்கள். எப்படியிருக்கிறது இந்த அனுபவம்?” “நான் எம்.பி-யாக பதவியேற்று முதல் கூட்டத்தில், ஒருநாள் கூட விடுபடாமல் அனைத்து நாட்களிலும் பங்கேற்றுள்ளேன். மொத்தம் 75 கேள்விகள் கேட்டுள்ளேன். அதில் 26 கேள்விகளுக்கு இதுவரை…

    Continue Reading

  • “சட்டமன்றம், காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்து பழிவாங்கும் இடமல்ல" – சிபிஐ வீரபாண்டியன் | ACTPnews.com

    “சட்டமன்றம், காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்து பழிவாங்கும் இடமல்ல" – சிபிஐ வீரபாண்டியன் | ACTPnews.com

    அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், பதுக்கலைத் தடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், “நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக ராணுவ நடவடிக்கை மூலமாக மீட்டெடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு கட்சியின் சார்பில் இரங்கல் தெரிவித்துகொள்கிறோம். இந்தியாவில் சர்க்கரை மற்றும் அரிசி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளபோதிலும்,…

    Continue Reading

  • மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக புகார்! | ACTPnews.com

    மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக புகார்! | ACTPnews.com

    ஆனால், இன்று காலை மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டபோது, குடிநீர் தூசி படர்ந்த நிலையில் கறுப்பு நிறத்திலும், அதிகளவில் கலங்கலாகவும் இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இந்தக் குடிநீரை பயன்படுத்தினால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பெண்கள் கவலை தெரிவித்தனர். குடிநீரைப் பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள கழிவுகளை அகற்றும் வகையில் சிலர் வெள்ளைத் துணிகளைப் பயன்படுத்தி தண்ணீரை வடிகட்டி பிடித்துள்ளனர். இருப்பினும், தண்ணீரில் கலந்துள்ள கழிவுகள் மற்றும் கலங்கல்…

    Continue Reading

  • “மோடி அரசின் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா?" – மாணிக்கம் தாகூர் | ACTPnews.com

    “மோடி அரசின் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா?" – மாணிக்கம் தாகூர் | ACTPnews.com

    மத்திய அரசு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை நிறுத்திவைத்து பிளாக்மெயில் செய்வதாக காங்கிரஸ் தலைவரும், எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை நசுக்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது. தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ₹5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய…

    Continue Reading

  • ‘பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?’ – அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி! | ACTPnews.com

    ‘பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?’ – அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி! | ACTPnews.com

    அமைச்சர் வன்னி அரசுவின் சமூகநீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. விவாதத்தின் போது சில திமுக, அதிமுக உறுப்பினர்கள், “நாங்கள் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தியிருக்கிறோம்’ என பேசியதற்கு அமைச்சர் வன்னி அரசு கடுமையாக பதிலளித்திருந்தார். வன்னி அரசு அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது, ‘தலித்தை பொதுத்தொகுதியில் நிறுத்தினோம் என திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள். இதை கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா? இல்லை பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்களா? என்னைப் பொறுத்தவரை நீங்கள் பச்சாதாபத்தின்…

    Continue Reading

  • ‘மதவாதிகளுடன் கரம் கோர்த்து அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் முடக்கம்!’ – திமுகவை சாடிய ஆதவ் |“Joining hands with religious extremists, the All-Caste Priest Scheme has been stalled!” – Aadhav slams DMK  | ACTPnews.com

    ‘மதவாதிகளுடன் கரம் கோர்த்து அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் முடக்கம்!’ – திமுகவை சாடிய ஆதவ் |“Joining hands with religious extremists, the All-Caste Priest Scheme has been stalled!” – Aadhav slams DMK  | ACTPnews.com

    இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தை செயல்படுத்தியது திமுகதான். ஆதிதிராவிடனை கோவில் அறங்காவலராக நியமித்தது கலைஞர்தான்’ என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், ‘பெரியார், கலைஞரின் கனவான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தீர்கள். ஆனால், எத்தனை பேர் அந்தத் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் ஆகினார்கள்? ஐந்து வருடமும் அந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினீர்களா? அந்த டேட்டாவை நாங்கள் கொடுக்கிறோம்’ என்றார். அமைச்சர் ஆதவ்வின்…

    Continue Reading

  • `அரசுக்கு திமுக பஞ்சபாண்டவர்களாக துணை நிற்கும்!’ – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் | ACTPnews.com

    `அரசுக்கு திமுக பஞ்சபாண்டவர்களாக துணை நிற்கும்!’ – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் | ACTPnews.com

    புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், “மாநில அந்தஸ்துக்காக அரசு குரல் கொடுக்கும்போது, பஞ்சபாண்டவர்கள் போல தி.மு.க எப்போதும் துணை நிற்கும். தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு முதலமைச்சர்களை அழைப்பது வழக்கம். ஆனால் சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடந்த அந்த மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் அழைப்பு வந்தது. அதனால் இரண்டு உரைகள் தயாரிக்கும் நிலை ஏற்பட்டது. கவர்னரின் உரையில்தான் அதிக கருத்துக்கள் இடம்பெறும். முதலமைச்சருக்கு இருக்காது.…

    Continue Reading

  • ‘விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!’ – பின்னணி என்ன? |“Udhayanidhi Criticises Him; CM Vijay Suddenly Enters the Assembly in the Evening!” – What’s the Background? | ACTPnews.com

    ‘விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!’ – பின்னணி என்ன? |“Udhayanidhi Criticises Him; CM Vijay Suddenly Enters the Assembly in the Evening!” – What’s the Background? | ACTPnews.com

    இதனால் மதியம் வரைக்கும் முதல்வர் விஜய் அவைக்கு வரவில்லை. இந்நிலையில், திடீரென இன்று மாலை அவைக்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமராமல் இடம் மாறி, செங்கோட்டையன் அருகே அமர்ந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். முதல்வர் திடீரென மாலை நேரத்தில் அவைக்கு வந்ததன் பின்னணி என்னவென கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கையில், “முதல்வர் விஜய் தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அவைக்குள் இருந்து விவாதங்களை கவனிப்பார். பின்னர் அவரின் அலுவல் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்காகச் சென்றுவிடுவார். மாலை…

    Continue Reading

  • Annamalai urges immediate action to rescue Tamils ​​stranded in Nepal – நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை – அண்ணாமலை வலியுறுத்தல் | ACTPnews.com

    Annamalai urges immediate action to rescue Tamils ​​stranded in Nepal – நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை – அண்ணாமலை வலியுறுத்தல் | ACTPnews.com

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “சீன அரசின் அனுமதி பெற்று நேபாளம் வழியாக கைலாஷ் மான்சரோவர் யாத்திரைக்கு தமிழகத்திலிருந்து ஈரோடு, கரூர், ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சென்றிருந்தனர். கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் சென்ற 73 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட…

    Continue Reading

  • ‘தம்பி நீ எழுந்தா தான் சண்டை வருது, 8-ம் தேதி வரைக்கும் பேசாதீங்க.!’- ஆதவ் அர்ஜுனா குறித்து பிரேமலதா | premalatha vijaykanth slams aadha arjuna | ACTPnews.com

    ‘தம்பி நீ எழுந்தா தான் சண்டை வருது, 8-ம் தேதி வரைக்கும் பேசாதீங்க.!’- ஆதவ் அர்ஜுனா குறித்து பிரேமலதா | premalatha vijaykanth slams aadha arjuna | ACTPnews.com

    சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ ராஜாவுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே ஏற்பட்ட காரசார வாக்குவாதத்தைக் கண்டித்த பிரேமலதா விஜயகாந்த், “இது சட்டமன்றமா? சண்டை மன்றமா? மானியக் கோரிக்கையை தவிர எல்லா நிகழ்ச்சியும் நடக்கிறது. அவர் பேச ஆரம்பிக்கும் வரை நன்றாக செல்கிறது. அவர் பேச ஆரம்பித்தாலே சண்டைதான்” என்று ஆதவ் அர்ஜுனாவை நோக்கி பேசினார். அதற்கு ஆதவ் அர்ஜுனா, “அண்ணியாருக்கும் எங்களுக்கும் பிரச்னை கிடையாது. எங்களுக்கும் விஜயகாந்த் சாரை ரொம்ப பிடிக்கும். உண்மைக்கு மாறாக பேசும் போதுதான்…

    Continue Reading

  • ‘இது சட்டமன்றமா… இல்ல சண்டை மன்றமா?’ – திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த் |“Is This a Legislative Assembly or a Fight House?” – Premalatha Vijayakanth Erupts Suddenly | ACTPnews.com

    ‘இது சட்டமன்றமா… இல்ல சண்டை மன்றமா?’ – திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த் |“Is This a Legislative Assembly or a Fight House?” – Premalatha Vijayakanth Erupts Suddenly | ACTPnews.com

    இந்த சமயத்தில் திடீரென எழுந்த பிரேமலதா விஜயகாந்த், `மானியக் கோரிக்கையை தவிர எல்லா நிகழ்ச்சியும் நடக்கிறது. ஆள் ஆளாக்கு குறை சொல்வதால்தான் ஆறரை மணி வரைக்கும் சட்டமன்றம் நடக்கிறது. எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்வு எழுதப் போவதை போல இரவு பகலாக முன் தயாரிப்பு செய்து வருகிறோம். ஆனால், இங்கே பேசுவதற்கு வாய்ப்பே கிடைப்பது இல்லை. எப்ப பார் சண்டை… சண்டை என்றே செல்கிறது. இப்போதெல்லாம் சட்டமன்றம் பார்க்காமல் டிவியை அணைத்து விடுகிறோம் என மக்கள் கூறுகின்றனர்.…

    Continue Reading

  • இமயமலை உருகினால் 200 கோடி பேருக்கு ஆபத்து – நேபாள அமைச்சர்|‘What Melts in Himalayas Rises in Sea’: Nepal FM’s Big Warning | ACTPnews.com

    இமயமலை உருகினால் 200 கோடி பேருக்கு ஆபத்து – நேபாள அமைச்சர்|‘What Melts in Himalayas Rises in Sea’: Nepal FM’s Big Warning | ACTPnews.com

    இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அதில் 133 பேர் இந்தியர்கள். நேற்று நடந்த இந்தச் சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பூட்டான் இணைந்து செயல்பட வேண்டும் என்று நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் NDTV உச்சிமாநாட்டில் இன்று பேசியுள்ளார். அவர் பேசியதாவது… “இமயமலையில் உருகுவது கடலின் நீர்மட்டத்தை உயர்த்துகிறது. நேற்றைய தினம் நமது கண்ணெதிரே நேரலையாக…

    Continue Reading

Latest News

View All

  1. Тут ресурсе можно получить нужную информацию. https://sorrybabushka.ru/interesting/290-volgogradskaya-oblast-snyala-trevogu-o-vozmozhnom-padenii-bespilotnika.html

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed